“ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.” அப். 20:33-35
அன்புள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, மேலே உள்ள வசனம் நம் அப்போஸ்தலனாகிய பவுல் நாம் சில காரியங்களை புரிந்துக்கொள்ளும்படி எழுதியிருக்கிறார். அவர் தன் ஊழிய காலத்தில் எந்த ஒரு மனிதனின் பனத்தையோ, பொக்கிஷங்களையோ நம்பி ஊழியம் செய்யவில்லை. அவரின் கைகளே அவருக்காகவும் அவருடனிருந்தவர்களுக்காகவும் உழைத்தது என்று எவ்வுளவு ஆழமாக எழுதியிருக்கிறார். இன்றைய பிரசங்கிமார்கள் இந்த வசனங்களை எத்துனை முறை வாசித்திருந்தாலும், இது ஏனோ அவர்களுக்கு சொந்தம் கொண்டாடும் வசனம் இல்லை என்று இருந்து வருகிறார்கள். இன்று தங்களையே முழு நேர ஊழியர்கள் என்று பிரகடனப்படுத்தி கொண்டு, வேலை செய்ய மனம் இல்லாமல் பெற்றும், கேட்டும் கொண்டு தான் தங்களின் ஊழியத்தை நிறைவேற்றி வருகிறார்கள். பரிசுத்த ஆவியில் நிறைந்து எழுதிய அப்போஸ்தலரின் வார்த்தைகளை இன்று வரை புரிந்துக்கொள்ளாமல் இருக்கறார்கள் என்று தான் விந்தையாக இருக்கிறது.கேட்பதை காட்டிலும் கொடுப்பதையே மேன்மையாக என்னினர் அப்போஸ்தலர்கள். ஆனால் இன்றோ கேட்கும் காரியங்களை தான் நாம் அன்றாடம் பார்க்க முடிகிறது. ஏன் இப்படி ஒரு நிலை? நீங்கள் கொடுப்பதில் வல்லர்களாக இருக்கலாம் ஆனால் அதை யாரிடம் கொடுப்பது என்று நிச்சயித்து கொடுங்கள். வேலை செய்து ஊழியம் செய்த அப்போஸ்தலர்களை பாருங்கள். இன்று தங்களையே அப்போஸ்தலர்கள் என்று சொல்லி கொண்டு வேலை செய்ய மனம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
கிறிஸ்தவர்கள் விழித்தெழும் வசனம் இது. இந்த வசனத்தை படித்து பரிசுத்த ஆவியின் விளக்கத்தை பெற்றுக்கொண்டு கிறிஸ்துவ ஜீவியத்தில் வளருங்களேன்!!
இன்று அனேக உழியர்கள் எதற்கெடுத்தாலும் "பவுல் இப்படி எழுதியிருக்கிறார்" என்று அவருடைய வார்த்தைகளாலே சாட்சிக்கு எடுக்கின்றனர். அனால் அவரைபோல ஒரு எல்லாம் துறந்து, உழைத்து சம்பாதித்து வாழ்க்கை வாழ்கிறார்களா என்றால் இல்லை!
பவுல் அவர்களின் வார்த்தைகளை பிரசங்கிப்பவர்கள் "நான் கிறிஸ்த்துவை பின்பற்றுவதுபோல் நீங்கள் என்னை பின்பற்றுங்கள்" என்று சொன்ன அவரைபோல ஒரு வாழ்க்கை நிலையில் வாழ வேண்டும் என்பதே எனது கருத்து.
இது ஒரு நூதன மோசடியாகும். "எனக்கு நீங்கள் கொடுங்கள் உங்களூக்கு தேவன் கொடுப்பார்" என்று வேதத்தில் இல்லாத வார்த்தைகளைச் சொல்லி அப்பாவி ஜனங்களை கொள்ளையிடும் இந்தப் பெருங்கூட்டத்துக்கு விலகியிருப்பதே உத்தமம்.
"ராயனுடையதை ராயனுக்கும், தேவனுடையதை எனக்கும் கொடுங்கள்" என்றுதானே இவர்கள் கேட்கிறார்கள்?
அதிலும் ஒரு கொடுமை பாஸ்டர்களும் அவர் பிள்ளைகளும் கூட காணிக்கை போடுவது! "போட்டு வாங்குவது" என்பது இதுதானோ? என்ன கொடும சார்?
"தேவனுகுறியதை எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் தாருங்கள்" என்றும்
"ராயனுக்குறியதை நாங்கள் 80G வைத்து சமாளித்துவிடுவோம் என்றல்லவா ராயனுக்கும் செலுத்தாமல் இருக்கிறார்கள்.
தேவனுக்குறியது இவர்கள் பையில் தான், ராயனுக்கும் போய் செர்வதில்லை. இதில் இவர்கள் தங்களையே பரிசுத்தவன்கள் என்றும், நீதிமான்களும் என்று ஒருவரை ஒருவர் அழைத்தும் கொள்வார்கள்.