"இதோ மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரை குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்." வெளி. 1:7
பொதுவாக கிறிஸ்துவ மண்டலத்தில் இந்த வசனத்தை வைத்துக்கொண்டு தான், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்களும் "காண்பார்கள்" என்று போதிக்கிறார்கள். வெளிப்படுத்தின விசேஷம் என்கிற இந்த புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒரு காரியத்தை நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும், அது என்னவென்றால், வெளிப்படுத்தின விசேஷம் ஒரு வெளிப்பாட்டில் புத்தகம். ஒரு சிறிய உதாரனம், நாம் "+" என்கிற இந்த குறியை பார்த்தவுடன் இது கூட்டலுக்கு உண்டான அடையாளம் என்பதை தெரிந்துக்கொள்கிறோம், அப்படியே வெளிப்பாட்டின் புத்தகத்தில் அனைத்துமே அடையாளங்களாகவும், உவமைகளாகவும் வெளிப்படுத்தப்பட்டு எழுதப்பட்ட ஒரு புத்தகம். இங்கு தேவனை "சிங்காசனம்" என்றும், இயேசு கிறிஸ்துவை "ஆட்டுக்குட்டி" என்றும் எழுதப்பட்டிருக்கிறதை நாம் படிக்க நேரிடும். மிருகம் பேசுவதை போல் இருக்கிறது, பெண் சூரியனை ஆடையாக அனிந்திருப்பது போல் எழுதப்பட்டிருப்பதை வாசிக்க முடியும். இதை எல்லாம் அப்படியே வார்த்தையின் படி எடுத்துக்கொண்டால் நாம் வேறு எதையோ தான் புரிந்துக்கொள்ள முடியும். ஆகவே தான் வேதத்தை ஆறாயந்து அறிவது சிறந்தது என்று நம் கர்த்தரே நமக்கு போதித்திருக்கிறார்.
சரி இப்பொழுது வசனத்தை பார்ப்போம். இங்கு இயேசு கிறிஸ்து "மேகங்களுடனே" வருவதாக எழுதப்பட்டிருக்கிறாது. அதாவது வார்த்தையின் படியே எடுத்துக்கொண்டோமென்றால், மேகங்களுக்கு நடுவே புகுந்து வருவது போல் தான் எடுக்க முடியும். சரி, இயேசு கிறிஸ்து இப்பொழுது எப்படி இருக்கிறார் என்றால், அவர் ஆவியாக இருக்கிறார். மறுரூபமான சரீரம் எப்படி என்று அவரே நமக்கு சொல்லி தந்திருக்கிறார் (யோவான் 3:8). அவர் ஆவியாக இருந்ததினால் தான் பூட்டிய அறைகளுக்குள் போக முடிந்தது. அவர் மாம்சத்தில் கொலையுண்டு, ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார் (1 பேது. 3:18), பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார் (1 கொரி. 15:45) என்று வேதம் தெளிவாக நமக்கு போதிக்கிறது. அவர் ஆவியாக இருக்கிறார். சற்றே நிதானித்து பாருங்கள், ஆவியான இயேசு கிறிஸ்து மேகங்களுடன் வருவதையும், அவரை அனைவரும் காண்பதையும். இல்லை பிரியமானவர்களே, இங்கு மேகங்கள் என்பது, நிஜமான மேகம் அல்லாமல், மேகம் என்பது, குழப்பமும், உபத்திரவமும் உச்சத்தில் இருக்கும் ஒரு நேரம். "அந்த நாள் இருளும் அந்தகாரமுமான நாள், மப்பும் மந்தாரமும் உள்ள நாள்" (யோவேல் 2:2), "மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்" (மத். 24:21) என்கிறது வேதம். சரி என்ன குழப்பம்? என்ன உபத்திரவம்? குழப்பம் என்பது இன்று உலகில் எந்த அளவில் இருக்கிறது என்பதை நாம் இப்பொழுது உணர முடியும். எந்த இடத்தில் குழப்பம் இல்லை? இந்த குழப்பம் இன்னும் பெறுகும். என்ன செய்வது, யாரிடம் செல்வது, இன்னும் சபைகளின் குழப்பம், எப்படி வழிப்படுவது, இன்னும் உலக அரசியலில் குழப்பம், பொருளாதாரத்தில் குழப்பம், இப்படி குழப்பம் முழுவதுமாக சூழ்ந்திருக்கும் நேரம் (குழப்பத்தின் மேகம் சூழ்ந்திருப்பது என்பது ஒரு phrase). மேலும் யுத்தங்களும், பகைகளின் உச்சியும் இந்த பூமியில் இருக்கும். இப்படி பட்ட குழப்பமும், உபத்திரவமும் மேகங்களாக சூழ்ந்திருக்கும் போது தான் நம் கர்த்தர், நம் எஜமானன், நம் ராஜா வருவார். இதுவே "அவர் மேகங்களுடன் வருவார்" என்பதாகும்.
அடுத்து, கண்கள் யாவும் அவரை காணும். எப்படி ஆவியான கிறிஸ்துவை கண்கள் காணும்? காண்பவர்கள், அவரை சார்ந்தவர்கள் மாத்திரமே, "கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீகள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள்" (யோவான் 16:16). எப்படி அவரை சார்ந்தவர்கள் மாத்திரம் அவரை காண முடியும் என்பதை 1 யோவான் 3:2ஐ வாசித்து பாருங்கள். மேலும் அவர் தான் திருடனை போல் வருவார் என்றும் சொல்லியிருக்கிறாரே (1 தெச. 5:2). யாரெல்லாம் திருடன் திருட வரும் போது பார்த்திருக்கிறார்கள். அப்படியே அவர் ஆவியாக வரும் போது கண்களால் அவரை யாரும் பார்க்க முடியாது, ஆனால் ஒரு குருடன் எப்படி பார்க்க முடியுதோ, அப்படியே அவரை பார்க்க முடியும். அதாவது அவரின் பிரசன்னத்தை உணர முடியும். இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தால் உலகத்தில் நடக்கும் மாற்றங்களை வைத்து அவர் வந்து விட்டார் என்பதை புரிந்துக்கொள்ள முடியும். தொலைபேசியில் நாம் பேசிக்கொண்டிருக்கும் போது எதிரில் பேசுபவர் நம்மிடம் எதையாகிலும் விளக்கும் போது நாமும் அதை பார்க்காமலே,I see, I see என்று சொல்லுவது போல் தான் இந்த காண்பதும்.
சரி யார் இந்த குத்தினவர்களும், யார் இந்த குத்தப்பட்டவரும்? பவுல் சவுலாக இருந்து கிறிஸ்துவர்களை துன்புறுத்தும் போது, இயேசு கிறிஸ்து கேட்ட கேள்வி, ஏன் "என்னை" துன்புறுத்துகிறார்? என்று. இப்பொழுதும் தலையான கிறிஸ்துவும், அவரின் சரீரமான சபையும் தான் முழுமை என்பது வேதத்தின் உண்மை. இன்றும் கூட அவரின் சபை இந்த உலகத்தில் குத்தப்படுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் வருகை அவரின் புனிதர்களுடன் தான் (யூதா: 15) என்பதும் வேதத்தில் இருக்கிறது. அதாவது, இந்த வருகை யூதர்கள் குத்திய இயேசு கிறிஸ்து மற்றும் அவரின் வருகை மட்டும் குத்தப்படும் சபையும் தான் என்பதை இந்த உலகத்தின் மக்கள் புரிந்துக்கொள்வார்கள். இது தான் குத்தினவர்களும் அவரை காண்பார்கள்.
சரி, உலகமே சபையாக வேண்டும் என்கிற ஒரு விடாமுயற்சியில் இருக்கும் நம் ஊழியர்கள், "பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்" என்பதை எப்படி தான் எடுத்துக்கொண்டிருக்கிறார்களோ. இதை இன்னோரு பதிவில் பார்க்கலாம்.