இந்த தளம் அனுதினமும் சுமார் 150 முதல் 250 வரை பார்வையிடப்படுகிறது!! இதில் பலர் இந்த தளத்தில் உறுப்பினர்களாக இருக்கிறீர்கள், பலர் பார்வையாளர்களாக இருக்கிறீர்கள்!! சுமார் 130 உறுப்பினர்கள் இருந்தாலும் அதில் ஒரு சிலரை தவிர பங்கேற்பவர்கள் யாரும் இல்லை!! இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் எனக்கு உதவும் படியாக கேட்டுக்கொள்கிறேன், என்னவென்றால், இந்த தளத்தை பார்வையிடவோ, அல்லது பதிவுகளை தரவோ விருப்பம் இல்லை என்றால், தயவு செய்து ஒரே ஒரு பதிவின் மூலம் தங்களின் நிலைகளை தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்!!
பாத்திரம் பார்ப்பதற்கு அழகாக இருப்பதில் பெறுமை கிடையாது, பயன்படுத்துவதற்கு உபயோகமாக இருக்க வேண்டும்!! அப்படியே இந்த தளத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அல்ல, பங்களிப்பே அழகை சேர்க்கும்!! விரும்பாதவர்கள் தயவு செய்து ஒரே ஒரு பதிவின் மூலம் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தலாம்!!
உறுப்பினராக நீடிக்கிறேன்
அல்லது
நீக்கிவிடுங்கள்
உறுப்பினர்கள் இதற்கு பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்!! இந்த திரி 2 வாரங்கள் வரையில் திறந்திருக்கும், அதன் பின் மூடப்படும்!! விருப்பத்தை பதிவு செய்யாதவர்கள் நீக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்!!
தங்களின் ஒத்துழைப்பிற்கு காத்திருக்கும்,
பெரேயன்ஸ் மாடரேட்டர் கோவைபெரேயன்ஸ் குழு!!
Nb:அக்டோபர் 25 வரை இந்த திரியில் பதிவிட கேட்டுக்கொள்கிறேன், அதன் பிறகு பங்களிப்பு தரும் உறுப்பினர்கள் மாத்திரமே இதில் நீடித்திருப்பார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்!!
தரக்குறைவான வார்த்தைகளால் தூஷித்து புண்படுத்தாதிருந்தால் அனைவருமே ஏதாவது ஒருவகையில் இந்த தளத்தில் பங்களிப்பார்கள்; உன்னை யாரும் இங்கே அழைக்கவில்லை,என்று உதாசீனப்படுத்தி எழுதினால் தன்மானம் உடைய யாருமே- எங்குமே இருக்கமாட்டார்கள்.நான் இந்த தளத்தில் தொடர்ந்து உறுப்பினராக நீடிக்கவே விரும்புகிறேன்;மாடரேட்டர் நடுநிலையுடன் செயல்படுவாரானால் மட்டுமே படைப்புகளைத் தரமுடியும்.