"அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்."(வெளிப்படுத்தல்.20:4)
சிரசேதம் என்றால் என்ன? சிரசேதம் என்றவுடன் ஏதோ தலை சீவப்பட்டு மரித்தவர்கள் என்று நினைத்தால் அது தவறாகும்!!
தலையான கிறிஸ்துவின் நிமித்தம் தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள்!! கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக (வேறு ஒரு சுவிசேஷம் இல்லை) தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள்!! Total Consecration!!
எபேசியர் 1:23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.
அந்திகிறிஸ்து என்று ஒருவன் (!!) இனி வந்து ஆளுகை செய்து, இஸ்ராயேல் மக்களை ஏமாற்றி ஒரு 3 1/2 வருடங்களில் ஒரு ஆலயம் கட்டி, அதன் பின் ஒரு 3 1/2 வருடங்கள் ஆட்சி செய்கிறதை தான் கிறிஸ்தவ மண்டலம் போதிக்கிறது!!
அந்திகிறிஸ்து (கிறிஸ்து விரோதி) என்பது இன்று அல்ல, கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மாற்ற நினைத்து செயல்ப்பட்ட அனைவருமே அந்த கூட்டத்தார் தான்!! எப்படி கிறிஸ்து என்றால் தலையான கிறிஸ்து உடலான சபையாக இருக்கிறதோ, அப்படியே தலையான சாத்தானும் அவனின் ஊழியர்களானவர்களே அந்திகிறிஸ்து (கிறிஸ்து விரோதி)!!
இந்த வசனத்தில் சொல்லப்பட்டவர்கள் முதலாம் உயிர்த்தெழுதல் அடைவார்களாம், அதாவது முதல் தரம் உயிர்த்தெழுதல்!! கிறிஸ்துவுடன் சிங்காசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்து நியாயத்தீர்ப்பு கொடுக்கும் அதிகாரத்தை உடையவர்களாவார்காள்!! முதலாம் உயிர்த்தெழுதல் என்றவுடன் இரண்டாம் உயிர்த்தெழுதல், மூன்றாம் உயிர்த்தெழுதல் என்று தப்பு கணக்கில் நிறைய போதனைகள் இருக்கிறது!!
வெளி 3:21 நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
உயிர்த்தெழுதல் என்பது ஒன்று தான்!! அதில் முதல் வரிசை உயிர்த்தெழுதல் அடைபவர்கள் கிறிஸ்துவுடன் சிங்காசனத்தில் இருப்பார்கள், மற்றவர்கள் இந்த பூமியில் இருப்பார்கள்!!