//நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது என்றால் அது எப்போது? இயேசு ஏற்கனவே பூமியிலிருந்து உயர்த்தப்பட்டுவிட்டாரா? அல்லது இனிமேல்தான் உயர்த்தப்படப்போகிறாரா? இக்கேள்விகளுக்கு பதில் சொல்லும்படி பெரியன்ஸை வேண்டுகிறேன்.//
யோவான் 12:32 நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
உயர்த்தப்பட்டிருக்கும் போது என்பது மட்டமான மொழிபெயர்ப்பு!!
John 12:32 And I, when I am lifted up[a] from the earth, will draw all people to myself.”
உயர்த்தப்படும்போது என்பதே சரியான வார்த்தையாகும்!!
உயர்த்தப்படுவது என்பதற்கு Exalted என்கிற அர்த்தமும் இருக்கு!!
உயர்த்தப்படுவது என்பது கிறிஸ்துவை சிலுவையில் அடித்து உயர்த்தியது கிடையாது!! மாறாக அவர் பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து பிதாவினால் உன்னதங்களுக்கு உயர்த்தப்படுவதை சொல்லுகிற வசனம்!! அவர் அப்படி உயர்த்தப்படும் போது பிதாவிடத்தில் மத்தியஸ்தமும் பரிந்து பேசுபவராகவும் இருப்பார்!! ஆகவே தான் கிறிஸ்து உன்னதங்களில் பிதாவின் வலது பக்கத்தில் அமர்ந்த பிறகு, அனைவரையும் இழுத்துக்கொள்வார் என்கிறார்!!
இயேசு கிறிஸ்து உயர்த்தப்பட்டிருக்கிறார், ஆகவே தான் எல்லா மனுஷர்களின் இரட்சிப்பையும் நாங்கள் எந்த விதமான அச்சமும் நடுக்கமும் இல்லாமல் போதிக்கிறோம்!! ஏனென்றால் உலகின் சிறந்த நற்செய்தியே இது!!
பிலிப்பியர் 2:9. ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், 11. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
Strong's Concordance:
hupsoó: to lift or raise up, to exalt, uplift
Original Word: ὑψόω Part of Speech: Verb Transliteration: hupsoó Phonetic Spelling: (hoop-so'-o) Short Definition: I lift up, exalt Definition: (a) I raise on high, lift up, (b) I exalt, set on high.
//எனவே சுமார் 2000 வருடங்களுக்கு முன்னதாகவே கிறிஸ்து உயர்த்தப்பட்டுவிட்டார் என அறிகிறோம். ஆகிலும், யோவான் 12:32-ல் இயேசு சொன்னபடி, எல்லாரையும் அவரிடத்தில் இன்னமும் இழுக்கவில்லையே! ஏராளமான பேர் அவரிடம் இழுக்கப்படாமல்தானே மரித்துள்ளனர், மரித்துக் கொண்டிருக்கின்றனர்? இதற்கு பெரியன்ஸ்-ன் விளக்கம் என்ன?//
அவர் உயர்த்தப்பட்டுவிட்டார், ஆனால் எல்லாம் நிறைவேறும் (அதாவது தேவனின் திட்டம் முழுவதும் நிறைவேறி தீரும் அளவு) மட்டும் அவர் (கிறிஸ்து) இயேசு பரலோகத்தில் இருக்க வேண்டும் என்பது நியமனம்!! அதன் பின் தான் அவர் எல்லாரையும் தன்னிடம் கூட்டி சேர்ப்பார்!!
கிறிஸ்து உயர்த்தப்பட்டுவிட்டப்படியே அனைவருக்கும் உயிர்த்தெழுதலின் நிச்சயத்தை தந்திருக்கிறார்!! தேவனின் திட்டத்தில் அந்த உயிர்த்தெழுதலின் காலம் வரும் மட்டும் நீங்களும் நானும் காத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும்!!
இப்படி எல்லாரும் மரித்து உயிர்த்தெழுந்த பிறகே பாவமற்றவர்களாக கற்றுக்கொள்ள கிறிஸ்துவின்டத்திற்கு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்!! இன்றே அந்த நம்பிக்கையில் இருப்போர் அவரின் சித்தத்தின்படி சபையாக கிறிஸ்துவோடு சேர்ந்து ஆளுகை செய்வர்!!
இதை தான் 1 தீமோத்தேயு 2ம் அதிகாரத்தில் பவுல் எழுதுகிறார்!!
1 தீமோத்டேயு 2:6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
இப்படி எல்லாரையும் (ஒரு சிலரை மட்டும் அல்ல; எல்லாரையும்) மீட்டெடுக்கும்படியாக் தன்னையே மீட்கும் பொருளாக ஒப்புக்கொடுத்திருக்கிறார் கிறிஸ்து இயேசு!! இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கும் (விளங்குகிவருகிறது என்பது தேவன் புரிந்துக்கொள்ளுதலை கொடுக்கும் சிலருக்கு மட்டுமே)!! விளங்கிவருகிற இந்த விஷயம் ஒரு நாளில் அனைவருக்கும் விளங்கும்!! அது வரை நீங்களும் நானும் காத்திருக்கவேண்டியது தேவனின் சித்தம்!! உங்கள் அவசரத்திற்கும் என் அவசரத்திற்கும் அவர் நியமித்த நேரங்களை தள்ளி போட மாட்டார்!! அவர் செய்யும் போது அதை புரிந்துக்கொள்ளுங்கள்!!