யோவான்6:44. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
No man can come to me, except the Father which hath sent me draw him: and I will raise him up at the last day.
பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான் என்று கிறிஸ்து சொல்கிறார். பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களே அன்றி வேறு யாரும் கிறிஸ்துவை அறியமாட்டார்கள்.. ஆக பிதாவினால் தெரிந்துகொள்ளாதவர்கள் (கிறிஸ்துவிடத்தில் வராதவர்கள்) கிறிஸ்துவை அறிய வாய்ப்பில்லை. பாவத்தின் சம்பளம் மரணம். கிறிஸ்தவம் இன்று போதிப்பது போல கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு தண்டன நிச்சயம். பாவத்தின் சம்பளமாகிய மரணத்துக்குள்ளாக வேண்டிய கட்டாயத்தில் இந்த தெரிந்துகொள்ளாதவர்கள் இருக்கும்போது.... இவர்களை ஏன் கடைசி நாளில் கிறிஸ்து மரணத்திலிருந்து எழுப்பவேண்டும்?
மரணதண்டனையை அனுபவிக்கட்டும் என்று விட்டுவிடவேண்டியதுதானே?