//பணம் பாவம் இல்லை. இந்த உலகத்தில் வாழ நமக்கு பணம் தேவைப்படத்தான் செய்கிறது. ஆனால் ஆடம்பரம், தேவைக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது, பெருமைக்காக கார் வாங்குவது, லேட்டஸ்ட் மாடல் செல்ஃபோன் வாங்குவது எல்லாம் சரியா? பணம் பற்றி உங்க கருத்தென்ன?//
பணம் பாவம் என்று வேதம் சொல்லவில்லை. பணத்துக்கு அடிமையாவதே பாவம். கொடுமை என்னவென்றால் பணம் தேவையில்லை என்று சொல்பவர்கள்தான் அதே பணத்தை சம்பாதிப்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதி நேரத்தை செலவிடுகிறார்கள் அதுவும் கணவன், மனைவி சகிதமாக...
ஒரு தொழிலை விருப்பத்தின் பேரில் செய்வது வேறு பணத்துக்காக செய்வது வேறு. டெண்டுல்கருக்கு விருப்பம், கமல் ரஜினிக்கு விருப்பம் சம்பாதிக்கிறார்கள்...
ஆனால் சாமானியர்கள், உலகத்தின் பெருவாரி ஜனங்கள் தங்கள் நிறுவனங்களை மேம்படுத்த, உழையாய் உழைக்கிறார்கள் சொற்ப வருமானத்துக்காக... மனிதனுக்கு அடிமையாக மனிதன் இருப்பது ராஜ்ஜியத்தில் நடைபெறாது...