மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஒரு ஆளை பிடித்து தங்களது லிங்கில் சேர்க்கும்போது ரொம்ப மெனக்கெடுவார்கள். வேணாம் விடுங்க என சொன்னாலும் எப்படியாவது கன்வின்ஸ் பண்ண பார்ப்பார்கள். வேண்டாம் என ஒருவர் முடிவு செய்வது தேவசித்தம் என்றால் அதை மாற்ற ஏன் இவ்வளவு மெனக்கெடனும். என்னவோ போங்க இவங்க சொல்றத பாத்து தான் எது தேவசித்தம் என தெரியவேண்டியதா இருக்கு.//
மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஒரு நல்ல வியாபார வாய்ப்பு. வாழ்நாள் முழுவதும் சொற்ப சம்பளத்துக்காக உழைத்து அடுத்தவனைப் பணக்காரனாக்கும் தியாக எண்ணம் எனக்கில்லாததால் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். யாரையும் நிர்ப்பந்தித்து தொழில் கற்றுக்கொடுக்குமளவு எனக்கு நேரமில்லை. அப்படி அவசியமுமில்லை. இது அனைவருக்கும் புரியவேண்டிய அவசியமுமில்லை.
அப்படித்தான் இருக்கும் நண்பரே! சகலமும் தேவ சித்தம் என்பதற்கு ஆதரவாக ஏகப்பட்ட வசனங்கள் பதித்தாயிற்று பதிலுக்கு மனிதனின் சகலமும் மனிதனின் சித்தம் என்பதற்கு ஒரு வசனத்தைக்கூடக் காணோம்.
யோவான் 15:16 "நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;..."