//இயேசுவே நீர் தொழத்தக்கவர் அல்ல என்றும் நீர் பிரதான தூதனாகிய மிகாவேல் மாத்திரமே என்றும் கூறி அன்றைக்கு உம்மை எதிர்த்து நின்ற அதே எதிரிகள் இன்றைக்கு எங்கும் பரவி அப்பாவிகளை வஞ்சிக்கிறார்கள், ஐயா...நீர் ஏதும் செய்யமாட்டீரா..?
ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று உம்மைப் பார்த்து கேட்ட பவுலுடன் பேசினீரே இவர்களுடன் பேசமாட்டீரா..?
உம்மை நோக்கி கூப்பிட்டால் பிதா கேட்கமாட்டாரா,நீரும் பிதாவும் வெவ்வேறானவர்களா, நீர் அனுப்பிய தேற்றரவாளனாகிய பரிசுத்தாவியானவர் வெறும் காற்று போன்றவரா..?
சொல்லும் ஐயா, சொல்லும், உம்முடைய பிள்ளைகளுடன் பேசும், எமது குற்றங்குறைகளை தயவாக மன்னித்து எங்களுக்கு நியாயஞ்செய்ய இரங்கும்..!//
ஆரம்பமே தவறு. பிதாவை நோக்கியே விண்ணப்பிக்க வேண்டும் என்று மேசியா போதித்தால் இவன் பிரதான ஆசாரியராகிய மேசியாவிடம் வேண்டுகிறான்.
இவரே 'பிதா' என்று திருஷ்டாந்தப்படுத்தவில்லை. தேவனுடைய குமாரன் என்று பிரசங்கித்தான், பிதாவாகிய தேவன் என்றல்லவே அல்ல...
//உம்மை நோக்கி கூப்பிட்டால் பிதா கேட்கமாட்டாரா...//
மூடர்களே,
மத்தேயு 6:9 நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது;பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;.....
ஏனென்றால்,
மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
லூக்கா 4:8 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
அப்2:2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
3. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
4. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். And they were all filled with the Holy Ghost, and began to speak with other tongues, as the Spirit gave them utterance.