//எல்லாம் தேவ சித்தம் என்றால், நம்முடைய பங்கு என்ன? ஒன்றும் கிடையாதா? அப்ப எதற்காக வேதம் நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது?//
வேதம் உங்க கையில இருந்து என்ன பிரயோஜனம்? பிதா இழுக்காதவனை நீங்கள் கிறிஸ்துவிடம் சேர்த்துவிடுவீர்களா? அப்படி எத்தனை பேரை இதுவரை சேர்த்திருக்கிறீர்கள். வேதத்தை ஆண்டாண்டுகாலமாக 'கையில்' வைத்துக்கொண்டு ஏன் இன்னும் இத்தனை குழப்பம்? வேதத்தை வைத்துக்கொண்டு 'சாது' ஓநாய் நல்லவனா கெட்டவனா என்ற முடிவுக்கே இன்னும் வர இயலவில்லையே?
//அப்போஸ்தலப் பணிக்கு ஆளெடுத்தார். அதாவது தெரிந்து கொண்டார். அவவளவுதான். அதே போல் எல்லோருக்கும் ஏதோ ஒரு பணி ஆண்டவ்ர் தெரிந்து வைத்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். அதை நிறைவேற்றுவதும் நிறைவேற்றாததும் நம் கையில் தான் இருக்கிறது.//
ரோமர் 11:13 புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று,
I கொரிந்தியர் 9:1 நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?
I கொரிந்தியர் 9:2 நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயிராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாயிருக்கிறேன், கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாயிருக்கிறீர்களே.
II கொரிந்தியர் 1:1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்து பட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:
II கொரிந்தியர் 11:5 மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.
I தெசலோனிக்கேயர் 2:6 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.
//ஆண்டவர் சாதுவை ஏஞ்சல் டிவி ஊழியம் செய்ய அழைத்தபோது, இவருக்கு நேபாள், திபெத்து ஊழியத்தை விட மனமில்லாமல் தயங்கிக் கொண்டே இருந்தாராம். அப்படி இருக்கையில் , நீ இதை செய்யவில்லையென்றால், இந்த ஊழியம் வேறு யார் கையிலாவது கொடுக்கப்படும் என்று ஒருமுறை கடிந்து கொள்ளப்பட்ட பின் தான், முழுமையாக இந்த ஊழியத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்தாராம்.//
////ஆண்டவர் சாதுவை ஏஞ்சல் டிவி ஊழியம் செய்ய அழைத்தபோது, இவருக்கு நேபாள், திபெத்து ஊழியத்தை விட மனமில்லாமல் தயங்கிக் கொண்டே இருந்தாராம். அப்படி இருக்கையில், நீ இதை செய்யவில்லையென்றால், இந்த ஊழியம் வேறு யார் கையிலாவது கொடுக்கப்படும் என்று ஒருமுறை கடிந்து கொள்ளப்பட்ட பின் தான், முழுமையாக இந்த ஊழியத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்தாராம்.////
ச்சே, உங்கள் சாது பவுலை விட ஒரு படி மேலானவர் போல்!! பவுலாவது பாவம் அப்போஸ்தலனாகும்படிக்கு ஒரே முறை அழைத்ததில் வந்து விட்டான், ஆனால் சாதுவிற்கு பல முறை தூது விடப்பட்டிருக்கிறது போல்!!
ஆமா, சாது பேசும் போது பக்கத்தில் பய பக்தியுடன், நடுக்கத்துடனும் ஒருவர் "ஆமாஞ்சாமி" மட்டுமே போடுவாரே, அது என்ன நீங்களோ!!
//இது என்னங்க லாஜிக்? ஏன் பவுலோட அழைப்பதை நிப்பாட்டணும்?//
12 பேர் தான் அப்போஸ்தலர்களாக நியமிக்கப்படவேண்டும் என்பது தேவ நியமனம்!! 12 கோத்திரம் போல் 12 அப்போஸ்தலர்கள்!! இதில் என்ன லாஜிக் வேண்டி கிடக்குது!! யூதாஸ் கிறிஸ்துவை காட்டிக்கொடுத்தவுடன் அவன் வேலை முடிந்ததுல் அதன் பின் பவுலின் அழைப்போடு 12ம் அப்போஸ்தலனின் எண்ணிக்கை முடிந்தது!! இவர்கள் மூலமாகவே தேவன் தன் வார்த்தைகளை வெளிப்படுத்தி முடித்துவிட்டார்!!
உங்கள் சோஃபா ஆட்கள் வந்து புதிதாக இப்பவும் இவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறார் தேவன் என்று ரீல் மன்னர்களாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள்!!
//யுதாஸுக்குப் பதில் பவுல் கிடையாது. மத்தியா. மொழிபெயர்ப்பில் இதெல்லாமா மாறும்?//
லூசுத்தனமாக எவனோ சொல்லியதை பின்மொழியவேண்டாம்!!
மத்தியா சீட்டு போட்டு தேர்ந்தெடுத்தார்கள், அவன் அப்போஸ்தலன் கிடையாது!! பவுலை கர்த்தராகிய கிறிஸ்து மற்ற அப்போஸ்தலர்களை அழைத்து அனுப்பியது போலவே அனுப்பினார்!! அப்போஸ்தலர் என்கிற வார்த்தைக்கு "சீட்டு போட்டு தேர்வு செய்யப்படுபவர்" கிடையாது!!
அப்போஸ்தலர் 1:26. பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
கர்த்தரால் அனுப்பப்படாமல் சீட்டு போட்டு குலுக்கல் முறையில் "சேர்த்துக்கொள்ளப்பட்ட" அப்போஸ்தலன் என்று இருப்பதால் தான் நீங்களும் மத்தியாவை 12ம் அப்போஸ்தலர் என்று "சேர்த்துக்கொண்டீர்களோ"!! கர்த்தர் அனுப்பிய 12ம் அப்போஸ்தலரான பவுலையே வேதத்தில் எல்லா மொழிப்பெயர்ப்புகளும் சொல்லுவது போல் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்!! உங்கள் கூட்டத்திற்கு இல்லாததை "சேர்த்து"க்கொள்வது கைவந்த கலையாயிற்றே!!
//படிப்பு, குலம், கோத்திரம், அந்தஸ்து, பெருமை, வேலை, பணம், சொத்து, உறவினர் எல்லாம் விட்டு வந்தவர்கள் அநேகர் இருக்கத்தான் செய்கிறார்கள். //
காட்டுங்களேன்!!
//நிஜமாகவே எனக்குப் புரியவில்லை. உங்க கையில் இருக்கும் வேதத்தை வைத்து நீங்க என்னதான் செய்கிறீர்கள்? அது எந்த வகையில் உங்களுக்கு, உங்கள் வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கிறது?//
வேதத்திலிருந்து வேதத்தின் தேவனை தெரிந்துக்கொள்வது என் வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கிறது!! சோஃபா ஊழியர்களை போன்று வேதத்தை வைத்து "தொழில்" செய்ய எனக்கு தெரியாது!!
//தேவனுக்கு உணர்ச்சிகள் உண்டு. ஆனால் நம்மைப் போல அசட்டு sentiment எல்லாம் அவருக்கு கிடையாது என்பதால் அவர் நகத்தை எல்லாம் கடிக்க மாட்டார். நாம் நிறைவேற்றாவிட்டால், அது நிறைவேறாத லிஸ்ட்டில் சேர்ந்து கொள்ளும். அவ்வளவுதான்!//
ஹைய்யோ......ஹைய்யோ!!!!!!!!!
அதாவது தேவனால் ஒரு விஷயத்தை நிறைவேற்ற முடியவில்லை என்கிறதை சொல்ல வருகிறீர்களா!! தேவதூஷனம்!!
சாதுவை கடிந்துக்கொண்டு அழைத்தாராம், ஏன் ஒரு முறை "அழைத்து" அது நிறைவேறாத லிஸ்ட்டில் சேர்த்துவிட்டிருக்க வேண்டியது தானே!! நீங்களும் உங்கள் கோமாளித்தனமான வாதங்களும்!!
சீட்டு போட்டவர் கர்த்தர் அல்ல!! கர்த்தரால் தேர்ந்தெடுத்து அனுப்பட்டவரே அன்றி வேறு ஒருவனும் அப்போஸ்தலனாக இருக்க முடியாது!! என்னையும் அனுப்பினார், நானும் அப்போஸ்தலர் தான் என்று சொல்லுகிற கள்ள அப்போஸ்தலர்கள் அப்படி தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்!!
ஏதோ ஒரு படத்தில் "நானும் ரவுடி, நானும் ரவுடி" என்று வடிவேலு சொல்லுவது போல் யார் வேண்டுமென்றாலும் சொல்லுவது மாத்திரத்தினால் எதுவும் ஆகிவிட முடியாது!!
சீட்டு போட்டு குலுக்கி எடுத்தவர்கள் அப்போஸ்தலர்களே தவிர கர்த்தர் கிடையாது!! உங்கள் வேத அறிவை தீட்டிக்கொள்ளுங்கள்!!
என்றால் நல்ல அப்போஸ்தலர்கள் என்று சிலர் இருக்கிறார்கள் என்று தெரிகிறதல்லவா?//
தாந்தோன்றித்தனமாக எதையும் எழுதக்கூடாது!! அப்போஸ்தலர்கள் 12 பேர் தான் என்று வேதம் தெளிவாக கூறுகிறது!! நீங்கள் எத்துனை பேரை வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்:
வெளி. 21:14. நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.
மேலும் சபையில் இந்த ஊழியங்கள் இருந்துக்கொண்டே இருக்கும் என்று எங்கே இருக்கிறது!!
எபேசியர் 4:13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். Ephesians 4:11 And he gave some apostles and some prophets and some evangelists and some pastors and teachers
அவர் சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை தீர்க்கதரிசிகளாகவும் என்று இல்லை மாறாக சபை சீர்பொறுந்தும்மட்டும் சில அப்போஸ்தலர்களை, சில தீர்க்கதரிசிகளையும், சில சுவிசேஷகரையும் சில மேய்ப்பரையும் சில போதகரையும் ஏற்படித்தினார்!! சபை சீர்பொறுந்த என்ன தேவைப்பட்டது, வார்த்தைகள்!! அந்த வார்த்தைகள் முதல் நூற்றாண்டிற்குள் எழுதியாகிவிட்டது!! அந்த காலம் வரை தான் இவர்கள் அனைவரும் தேவைப்பட்டார்கள்!! அதன் பின் வந்த அனைவரும் இந்த ஊழியங்களை சொல்லிக்கொண்டு ஒன்று பெயர் சம்பாதித்தார்கள் அல்லது காசு சம்பாதித்தார்கள்!! அப்போஸ்தலர்கள் மூலமாக ஏற்படுத்தப்பட்டவர்கள் மூப்பர்கள்!! இன்று சபைக்கு தேவை மூப்பர்களே தவிர இந்த 5 ஊழியர்கள் கிடையாது!!
அப்போஸ்தலர்கள் இருந்ததினால் தான் இன்று வரை கள்ள அப்போஸ்தலர்கள் இருக்கிறார்கள்!! இன்று வரை அப்போஸ்தலர்கள் இருப்பார்கள் என்பதற்கு வேதத்தில் எந்த வசனமும் கிடையாது!! ஆட்டுக்குட்டியானவருக்கு 12 அப்போஸ்தலர்கள் என்று வேதம் சொல்லியிருக்கிறது என்றால் 12 தான்!! அதற்கு மேல் நீங்கள் எத்துனை பேரை பவுல் என்று, பேதுரு என்று கூப்பீட்டு வைத்துக்கொண்டாலும் அவர்கள் கள்ள அப்போஸ்தலர்களே தவிர வேறு யாரும் இல்லை!!
//And these are all the apostles named in the Holy Bible.//
You follow blindly!! You are not aware of who is an Apostle!! All the names found in the Bible are quoted as Apostle by some stupid author and you are presenting it as such!! Where is it written that Timothy was an Apostle!! You blind lot,
Revelation 21:14 The wall of the city had twelve foundations, and on them were the names of the twelve apostles of the Lamb. (New International Version (NIV))
There are no more than 12 apostles of the Lamb!! And if you name out of context you are responsible for that hypocritical teaching!! You rely on human teachings and don't perceive anything from the Scriptures!!
Mathias who was selected out of a lot does not stand as an Apostle!! After Judas, it was Paul who took that place and he is called Apostle in so many verses, where as Mathias is nowhere counted!! To Hell (bury) with your unscriptural teachings!!
//ஒரு உதாரணம் வின்செண்ட் செல்வகுமார். அவர் artist ஆ இருந்து நல்லா சம்பாதித்துக் கொண்டிருந்தாராம். அப்பவே, மாதம் 20,000 வரையிலும் சம்பாதிப்பாராம். ஆண்டவர் அழைத்தவுடன் விட்டுவிட்டு வந்தார் அல்லவா?//
லட்சங்களுக்காக சில ஆயிரங்களை இழப்பதில் தவறேதுமில்லை.
//சீட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பது என்பது பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யூதர்கள் பின்பற்றிய ஒரு நடைமுறைதான். ஜெபித்து செய்கையில் அதில் தேவ சித்தம் வெளிப்படும்.//
அப்போஸ்தலர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள், யூத பாரம்பரியத்தை விட்டு வந்தவர்கள்!! தசமபாகம் கொடுத்து வாங்குபவர்கள் இதற்கெல்லாம் யூதர்களை தான் நினைவுக்கூருவார்கள்!! சீட்டு போட்டு அல்ல கிறிஸ்துவினால் அனுப்பப்படுபவனே அப்போஸ்தலன்!!
//இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருப்பவர்கள் எல்லாம் அப்போஸ்தலர் இல்லையென்றால் யார்?//
ரோமர் 16:7. அப்போஸ்தலருக்குள் பெயர் பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்.
Salute Andronicus and Junia my kinsmen and my fellowprisoners who are of note among the apostles who also were in Christ before me
அப்போஸ்தலருக்குள் என்றால் அப்போஸ்தலர் கிடையாது, அப்போஸ்தலர்கள் மத்தியில்!!
அப்போஸ்தலர் 14:14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்
அப்போஸ்தலராகிய பவுல் மற்றும் பர்னபா என்பதை இப்படி மொழிப்பெயர்த்திருக்கிறார்கள்!!
//சபையும் இருந்து கொண்டே இருக்கும் என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?//
இது மாதிரி கேவலத்தை உங்களிடத்தில் தான் தெரிந்துக்கொள்ள வேண்டும்!!
//13 ம் வசனம் இஸ்ரவேல் ஜனங்களையும், 14 ம் வ்சனம் அவர்களோடு இயேசு கிறிஸ்து மூலமாக ஒட்ட வைக்கப்பட்ட புற ஜாதிகளையும் குறிக்கிறது. //
அதாவது ஆட்டுக்குட்டியானவரின் (இயேசு கிறிஸ்துவின்) 12 அப்போஸ்தலர்கள் உங்களுக்கு ஒட்ட வைக்கப்பட்ட புற ஜாதிகளா?? இப்படியே போதியிங்கள், நிறைய கூட்டம் சேரும்!!
//வெளி 12: 2. உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;
12 அல்ல, நிறைய அப்போஸ்தலர்கள் இருந்திருக்கிறார்கள், சில கள்ள அப்போஸ்தலர்களளும் இருந்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.//
12 அல்ல நிறைய அப்போஸ்தலர்கள் என்றா இருக்கிறது!! அப்போஸ்தலர்கள் அல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறார்கள் என்று தான் எழுதியிருக்கிறது!! ஆட்டுக்குட்டியானவரின் 12 அப்போஸ்தலர்கள் என்று வசனம் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளாமல் அது ஒட்ட வைக்கப்பட்ட புற ஜாதிகளாம்!!
//எழுதத்தான் அப்போஸ்தலர்கள் என்றால், 12 பேரும் எழுதிய மாதிரி தெரியவில்லையே? 13 ம் (or some no > 12) அப்போஸ்தலனாகிய பவுல் தான் நிறைய எழுதியிருக்கிறார்.
சபையில் ஏற்படுத்தினார் என்று தான் இருக்கிறதே தவிர சில காலத்திற்கு மட்டும், முதலாம் நூற்றாண்டுக்கு மட்டும் என்று நீங்க உளறுகிறபடி எதுவும் இல்லை. //
பிதற்றல் மேல் பிதற்றல்!!
//ஓகோ ... மூப்பர்கள் மட்டும் இப்ப தேவையாக்கும்? எதற்காக? இந்த மூப்பர்களை எந்த அப்போஸ்தலர் ஏற்படுத்துவாரோ?//
மூப்பர் என்று ஒருவர் இருந்தால் ஒரு சில கட்டுக்கோப்புடன் சபையின் காரியங்கள் நடக்க தான்!!
//இப்படி யார் இருக்கிறார்கள்??//
ஏன், பெயரை இங்கே எழுதினால் உங்களால் என்ன தான் செய்ய முடியும்!!
//ஒரு உதாரணம் வின்செண்ட் செல்வகுமார். அவர் artist ஆ இருந்து நல்லா சம்பாதித்துக் கொண்டிருந்தாராம். அப்பவே, மாதம் 20,000 வரையிலும் சம்பாதிப்பாராம். ஆண்டவர் அழைத்தவுடன் விட்டுவிட்டு வந்தார் அல்லவா?//
விட்டு வந்தவர் இப்ப எப்படி இருக்கிறாராம்!! விட்டவராக இருக்கிறாரா!!?? இப்ப இருக்கும் நிலைக்கு 20000 ஆயிரம் எல்லாம் ஒரு சம்பாதிப்பா!!
ஆலன் பால் கூட தான் ஏதோ ஒரு வீடியோ எடிட்டராக இருந்தாராம், இப்ப!!??
சாது கூட தான் காடு மேடு எல்லாம் சுற்றிக்கொண்டிருந்தாராம், இப்ப!!??
உங்களால் ஒரு ஆளையும் காட்ட முடியாது!!
//அந்த காலத்தில் அவர் சம்பாதித்தது இலட்சங்களுக்கு சமம். அதையெல்லாம் விட்டு விட்டு, இப்ப ஒன்றும் இல்லாமல்தான் இருக்கிறார். அவர் பேங்க பாஸ்புக் வேண்டுமானால் உங்களிடம் காட்டச் சொல்லுவோம்!//
உங்கள் கனிகளால் அறியப்படுவீர்கள்!!
அதான் உங்க தோஸ்த் இவர்களை குறித்து எழுதியிருக்காரே, இதற்கு மேல் நாங்கள் என்ன எழுத!!
அந்த காலத்தில் அவர் சம்பாதித்தது இலட்சங்களுக்கு சமம். அதையெல்லாம் விட்டு விட்டு, இப்ப ஒன்றும் இல்லாமல்தான் இருக்கிறார். அவர் பேங்க பாஸ்புக் வேண்டுமானால் உங்களிடம் காட்டச் சொல்லுவோம்!
கோல்டா அவர்களே,
அளவுக்கு மீறி மோசடியாளர்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்; அவர்கள் (சாது மற்றும் விசெ..) மீது பாலியல் தொடர்பான வழக்குகள் முதலாக பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுகிறது; இவர்கள் இருவரும் திருமணமாகாதவர்கள் என்பதால் அவர்கள் "அறியாதவர்கள்" என்று அர்த்தமல்ல; நாகரீகம் கருதி சிலர் கண்டுங்காணாமல் இருப்பதனால் அவர்கள் யோக்கியராகிவிடமுடியாது; இன்றைக்கு ஒரு டிவி சானலை நடத்துவோர் ஓட்டாண்டிகளாக இருக்கிறார்கள் என்பது கொஞ்சமும் நம்பத்தகுந்தது அல்ல; மேலும் இவர்களுடைய நிகழ்ச்சிகளில் தவறாது இவர்களுடைய வங்கி கணக்கு எண் விளம்பரப்படுத்தப்படுகிறது; இன்னும் சர்வதேச வங்கிகளிலும் கணக்கு இருக்கிறது; இந்நிலையில் சத்தியத்துக்காக நிற்கவேண்டிய நீங்கள் மோசடியாளர்களுக்கும் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும் ஆதரவாக நிற்பது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது.ஒன்று நீங்கள் ரொம்ப ரொம்ப அப்பாவியாக இருக்கவேண்டும் அல்லது நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்கவேண்டும்..!
//அவர்கள் யூத கிறிஸ்தவர்களாகத்தான் இருந்தார்கள்.எல்லா யூத பாரம்பர்யத்தையும் அவர்கள் விட்டது போல் வேதத்தில் இல்லை.இப்பக் கூட சிலர் சீட்டுப் போட்டுப் பார்க்கிறார்கள்!//
II கொரிந்தியர் 5:17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
ஆமா, மரத்தடியில் கிளி ஜோஷியரும் சீட்டு போட்டு பார்க்க தான் செய்கிறார்!!
அப்போஸ்தலர்கள் சீட்டு போட்டு குலுக்கி எடுத்தார்களோ, குலுக்காமல் எடுத்தார்களோ, மத்தியா கிறிஸ்துவினால் அனுப்பட்டவர் கிடையாது!! அப்போஸ்தலர் என்பவர் கிறிஸ்துவினால் நேரடியாக அனுப்பப்பட்டவரே தவிர வேறு யாரும் கிடையாது!!
//கிறிஸ்துதான் மத்தியாவை அனுப்பினார்.//
திரித்துவத்தை சொல்லுவது போல் வசனம் இல்லாத வாக்கியம்!!
//இதையெல்லாம் உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறேன்.
12 அப்போதலர் தவிர வேறு அப்போஸ்தலர் வேதத்தில் இல்லை என்று சொல்வதை விட அபத்தம் உலகில் உண்டோ!//
லூக்கா 6:13 பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.
வெளி 21:14 நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.
ஆரம்பத்தில் கிறிஸ்து தெரிந்துக்கொண்டது முதல், வெளிப்படுத்தின விசேஷத்தில் வரயிருக்கும் காரியங்கள் வரை கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் 12 பேர் தான் என்பது தெளிவாக இருக்கிறது!! திரித்துவத்தையே ஏற்றுக்கொண்டவர்களுக்கு 12 பேர் என்ன 12 இலட்ச்சம் பேரை கூட அப்போஸ்தலர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்!!
//சரி சபையைக் குறிக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர்கள். இன்னொன்று புதிய ஏற்பாட்டு சபை.//
ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்கள் என்று எழுதியது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா!! உங்களுக்கு இதை விட தெளிவாக ஒரு வசனத்தை வைத்து சொல்ல முடியாது!!
//எல்லாம் எழுதியாச்சு...இக் காலத்தில் சபை சீர் பொருந்த யாரும் தேவையில்லை என்று சொல்லிவிட்டு ஏன் மூப்பர்கள் தேவை என்று பல்டி அடிக்கிறீங்க? எதையுமே honest ஆ வியாக்கியானம் செய்ய மாட்டீங்களா?//
சபை சீர் பொருந்த தேவையான வார்த்தைகள் வேதமாக நமக்கு கிடைத்திருக்கிறது!! மூப்பர்கள் கூடுகிற ஜனங்கள் கட்டுப்பாட்டாகவும், அங்கே உள்ள தேவைகளை சரி செய்யவுமே தவிர, நீங்கள் போதிப்பது போல் அப்போஸ்தலராக நடிப்பதற்கு கிடையாது!! சபை சீர் பொருந்த வார்த்தைகள் தான் தேவையே தவிர கள்ள அப்போஸ்தலர்களோ, சோஃபா ஊழியர்களோ தேவையில்லை!!
//அப்படித்தான் இருக்கிறார்.//
தகவல் பெறும் சட்டத்தின் கீழ் அவரின் சொத்து மதிப்புகளை வெளியிட முயற்சிக்கிறேன்!!
//ஆண்டவர் வேலையை விட்டு விட்டு முழு நேர ஊழியப்பணிக்கு வ்ரும்படி அழைக்க, இவர் வேலை பார்த்துக் கொண்டே செய்வோம் என்று நினைத்துக் கொண்டு வண்டியில் போகையில் விபத்து நேரிட்டு, இரண்டு மணிக்கட்டும் நொறுங்கிய பின்புதான், மனந்திரும்பி வேலையை விட்டிருக்கிறார்.//
அப்ப தானே ஸ்கூட்டரை விட்டு விட்டு ஹோண்டா அக்கார்ட் வாங்க முடியும்!!
ஆனாலும் உங்கள் அன்பான தோஸ்த் எங்க பதிவுகளை எல்லாம் பத்திரப்படுத்துகிறார் போல்!! கண்டிப்பாக தேவையான ஒன்றை தான் செய்கிறார்!! இங்கே வந்து வாசிக்க முடியாதோர் உங்கள் தளத்தின் மூலம் சில உண்மைகளை தெரிந்துக்கொள்ள உதவுகிறார்!!
//Fool means Fool. You are a fool. You alone are a fool!//
You should know what a Fool means!! A fool is really one who answers for a question not posed to him/ her!! And I call them Stupid!! You are showing your actual colour now!!
So better be in your senses!! There is a limit for everything!!
//Really?? That is what you do all the time! A fool is a fool is a fool !!//
Yes, I feel foolish today for answering few fools and stupids!!
//மீன் பிடிக்க நேரமில்லை, மீன் சாப்பிட நேரமில்லை என்றெல்லாம் சொன்னீர்கள். இதுக்கு மட்டும் நேரம் இருக்குதாக்கும்? ஏன் இப்படி உங்க நேரத்தையும் பெலனையும் பிசாசுக்காக செலவழிக்கிறீர்கள்??//
ஆமா அப்படியே மீன் பிடித்து பிடித்து இவுக ஊரையே மீந்தொட்டியாக்கி இருக்கிறார்கள் போல்!! நீங்கள் மீன் பிடிப்பதை தொழிலாக வைத்திருக்கிறீர்கள், அதில் பிழைப்பு நடத்துகிறீர்கள்!! ஒரு மணி நேரத்திற்கு என்று காசு வாங்கும் உங்கள் கூட்டம் தேவனின் நாமத்தில் பிச்சை எடுத்து பிழைப்பதை மீன் பிடிப்பதாக சொல்லுகிறீர்கள்!! கேவலம்!! கேவலத்திலும் கேவலம்!!
எங்கள் நேரத்தையும் பெலனையும் தேவனுக்கு ஒப்புகொடுத்து அவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம்!! உங்களை போல் எப்படி பங்களார் திட்டம் ஆரம்பித்து அதில் பணம் பார்க்கலாம் என்கிற கேவலமான வக்கிரமான புத்தி எல்லாம் எங்களுக்கு தேவன் தரவில்லை!! காசுக்கு ஊழியன் பன்னுகிறவன் தான் பிசாசுக்கு ஊழியம் செய்கிறவன்!! எக்கேடோ கெட்டு போங்கள்!! எவனுக்கு வேண்டுமென்றாலும் ஊழியம் செய்துக்கொள்ளுங்கள்!!
//ஞாபகத்திற்கு வரும் சில பழமொழிகள்//
அதானே, வேதத்தில் இருக்கும் பிரசங்கி நாத்தீகனாம், எவனோ எழுதியதும் சொல்லியதும் உங்களுக்கு வேதவாக்கு!! அப்படி தானே!! அம்மனி எங்களுக்கு வேத வசனம் போதும் பழமொழிக்குள் நீங்கள் குடியிருங்கள்!!
எங்களுக்கு நேர்வதும், நடப்பதும் எல்லாம் தேவன் செய்கிறார் என்கிறது எங்கள் நம்பிக்கை, ஆகவே எங்களுக்கு அதில் எந்த பாதிப்பு கிடையாது!! உங்களை போல் பெயர் புகழ் வேண்டும் என்று நினைத்து எதையும் செய்வது கிடையாது!! சாப்பிட காசில்லாதவனிடமே பிச்சை எடுத்து தொலைக்காட்சி ஊழியம் செய்கிறோம் என்று ஏமாற்று பேர்வழிகளை காட்டிலும் தேவன் எங்களை மிகவும் நல்ல நிலையிலேயே வைத்திருக்கிறார்!!
5000 பேர் கூடிய இடத்தில் இரத்தம் இருந்ததாக ஏமாற்று பித்தலாட்டம் மோசடி செய்யும் தலைவர்களை ஆராதிக்கும் உங்கள் சபைள்!! ஒருவனுக்கும் அதின் ஒரு புகைப்படத்தையாவது காட்ட துப்பில்லை!! ஏமாற்று வேலை, மோசடி வேலை, பித்தலாட்டம் செய்யும் நபர்கள் கேவலமாக மேடைக்கு மேடை பேச காசு வாங்கி வேலை செய்ய சோம்பேறிகளா சுற்றி திரிகிற கேவல ஜந்துக்கள் தானே உங்களின் ஊழியர்கள்!! மிக விரைவில் இவனுங்க முக திறை கிழியும் அப்போ தெளிவாக நீங்கள் யார் என்றும் இவர்கள் யார் என்றும் வெளிச்சத்திற்கு வரும்!!
கோபாக்கினை என்பதை அப்படியே அக்கினி எரிய வைத்து, வால் வைத்த பிசாசுகளின் கூட்டம் ஈட்டிகளை எடுத்து துரத்தி துரத்தி புரட்டி போடும் ஒரு இடம் என்று கிரேக்க புரான கதைகள் உங்களை ரொம்பவும் பாதித்திருக்கிறது போல்!!
நாங்கள் மனந்திருந்தி தேவனின் அன்பை புரிந்துக்கொண்டிருக்கிறோம்!! இப்படியொரு மனந்திரும்புதலை ஏற்படித்தியது தேவனே!!
கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிரு என்பது மனிதர்களுக்கு சொன்னது தேவனின் ஆவி தான்!! தேவனின் கோபம் மனிதர்களுக்கு சிட்சையை தான் கொடுக்குமே தவிர உங்கள் கூட்டத்தார் தேவனை தூஷிக்கிறது போல் நடக்காது!!
கோபாக்கினை என்று தேடி பிடித்து வசனத்தை போடுவது பெரிய காரியம் கிடையாது!! அந்த கோபாக்கினையின் அர்த்தம் என்னவென்று போதகர்கள், சோஃபா ஊழியர்கள், காவி உடுத்திய கிறிஸ்தவ ஊழியர்கள் சொல்லுவதை கேட்டால் போக வேண்டியது தான்!! கோபாக்கினை எந்த விதத்திலும் தீ எரிகிற இடத்தை குறிக்கும் கடும் சொல் கிடையாது!! நீங்களோ உங்கள் கூட்டமோ சுவிசேஷம் சொல்லுவது கிடையாது, அழிவை போதிக்கிறீர்கள்!!
orgé: impulse, wrath Original Word: ὀργή, ῆς, ἡ Part of Speech: Noun, Feminine Transliteration: orgé Phonetic Spelling: (or-gay') Short Definition: anger, wrath, passion Definition: anger, wrath, passion; punishment, vengeance.
Does this word sound Fiery Hell!!?? This anger, wrath is not to destroy His creation but rather to teach!!
இதோ, இது தான் தேவனின் கோபாக்கினை:
யூதா 1:15. தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
அவர் கண்டிக்கிறதற்கு தான் வருகிறார்!! உங்கள் ஊழியர்கள் சோஃபாவில் சொகுசாக தெனாவட்டா சாஞ்சுக்கிட்டு, தேவனின் கோபாக்கினை என்பது நரகம் தான் என்கிறது குறுட்டு போதனை!! இந்த நரகத்திலிருந்து காப்பாற்ற இவர்கள் தங்களை ஏஜண்டுகள் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்!!
"கோபமோ ஒரு நிமிடம் அவர் கிருபையோ நித்தம் நித்தம்" என்று பாடுகிறீர்களே அதன் அர்த்தம் என்ன?
ஏசாயா 54:8 அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.
இத்தனை வசனங்களிருந்தும் உங்கள் குழுவுக்கு கண் தெரியவில்லையா?
முழு நேர ஊழியம் என்று ஒன்று புதிய ஏற்பாட்டில் இல்லை.
அப்20:33. ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.
34. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.
35. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
I தெசலோனிக்கேயர் 4:12 நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
II தெசலோனிக்கேயர் 3:10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
II தெசலோனிக்கேயர் 3:11 உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
தன் கிரியை எல்லாம் சாதிக்கும் என்கிற குழுவிற்கு தேவனின் கிருபை தெரிய நியாயம் இல்லை தான் சகோதரரே!! கோபாக்கினை என்றால் என்ன அர்த்தம் என்று கூட தெரியவில்லை!! இந்த வசனங்களை கொண்டே தேவனின் அன்பு என்னவென்று புரியாத அளவிற்கு இவர்கள் இடறலடைய செய்திருக்கிறார்!! தன் கிரியைகளினால் இரட்சிப்பை சம்பாதிக்கலாமாம், ஆனால் தேவனால் இரட்சிக்க முடியாதாம்!! கோமாளித்தனத்தின் உச்சம்!!
இவர்களாவது பரவாயில்லை, தேவன் மீது ஏதோ கொஞ்சம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்!! ஒருவர் தேவனாலும் கிறிஸ்துவினாலும் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்து அதை அறிக்கையும் செய்திருக்கிறார்!! இவர்கள் செய்யும் அற்ப கிரியைகளினால் தான் இவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள் என்றால், அன்னை தெரேசா, காந்திஜி போன்றோர் பரலோகம் செல்ல என்ன தடை!! இவர்களாவது சுயத்தை நினைத்து கிரியை செய்கிறார்கள், ஆனால் அவர்களோ சுயநலமற்ற சேவை செய்தவர்களாயிற்றே!! காந்தி கிறிஸ்துவத்தை ஏற்காததே பாஸ்டர்மார்களின் நடத்தை தான் காரணமாம்!! ஏனென்றால் அவர்கள் போதிப்பது ஒன்றாம், நடப்பதும் வேறாம், என்றார் காந்திஜி!!
1 Tim 2: 4 who will have all men to be saved and to come unto the knowledge of the truth.
//ஆனால் ஐயாமாரே ஆண்டவரின் கோபாக்கினை உங்க கோபத்தைப் போலவெல்லாம் இருக்காது. அது பயங்கரமாகத்தான் இருக்கும். நித்தியமான விளைவுகள் கொண்டிருக்கும். நாம் பயந்து தான் ஆக வேண்டும்.//
ஆண்டவரின் அன்பு தான் சுவிசேஷம்!! அதை சொல்ல வக்கில்லாதவர்கள் தேவனின் கோபத்தை புரிய வாய்ப்பே இல்லை!! ஆகவே தான் சுவிசேஷம் அறிவிக்க தேவையில்லை என்கிறோம்!! ஏனென்றால் நீங்கள் சுவிசேஷம் அறிவிக்கிறோம் என்று சொல்லி தேவனை தூஷிக்கிறீர்கள்!! நீங்கள் பயந்து தான் ஆக வேண்டும் என்றால் தேவனை அறிகிற அறிவு உங்களுக்கு இல்லை!!
I யோவான் 4:18 அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.
நீங்கள் தேவனின் அன்பு இல்லாமல் இருப்பதால் தான் கோபாக்கினைக்கு அர்த்தம் தெரியாமல் பயந்தே ஆக வேண்டும் போன்ற துருபதேசத்தை பறப்பிக்கொண்டு இருக்கிறீர்கள்!!
சோல்: //மேலும் நீங்கள் பதித்த ஒரு வசனத்தில் கூட 'நித்திய வாதை', 'வேதனை' என்ற பதம் இல்லவே இல்லை.//
மத்தேயு 5:30 உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
மத்தேயு 18:9 உன் கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுள்ளவனாய், எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
வேதனையற்ற இடம் என்றால், அதைக் குறித்து எதற்காக இப்படியெல்லாம் எச்சரிக்கை செய்ய வேண்டும்? ஆபத்தை, அழிவைத் தவிர்க்கும்படியாகத்தான் எச்சரிக்கை என்று ஒன்று செய்யப்படுகிறது.
உங்க உபதேசம் பாவிகளுக்கு இனிக்கும் ஒரு உபதேசமாக இருக்கிறது. இந்த உலகில் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். மரணம் தான் தண்டனை. என்ன நிம்மதி! உயிர்த்தெழுந்தவுடன் தண்டனை கேன்சல். திரும்பவும் என்ன ஒரு நிம்மதி!. 30 வயது வாலிபனா ஆயிரம் வருட அரசாட்சியில் ஜாலியா வாழ வேண்டியது. அங்கயும் சேட்டை பண்ணிக் கொண்டு இருந்தால், திரும்பவும் ஒரு மரணம். இதற்கப்புறம் உயிர்த்தெழுதல் கிடையாது. திரும்பவும் நிம்மதி!
நீங்க சொல்வதுதான் பாவிக்கு மகிழ்ச்சி தரும் நிம்மதியின் சுவிசேஷம்!//
ரொம்ப குழம்பியிருக்கிறீர்கள் போலுள்ளது. அழிவைத்தவிர்க்கும்படியாகத்தான் என்று நாங்களும் சொல்கிறோம். "சரீரத்தையும் ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே". முதலில் அழிவு என்றால் என்னவென்று புரிந்துகொள்ளுங்கள். மேற்கண்ட வசனத்தில் எங்கே வேதனை, நித்திய வாதை? எல்லாம் கற்பனை. மரணத்தையும், ஜீவனையும் உணர்த்த இயேசு உபயோகித்த பதங்களே இவைகள்.
//நீங்க சொல்வதுதான் பாவிக்கு மகிழ்ச்சி தரும் நிம்மதியின் சுவிசேஷம்!//
நான் சொல்லவில்லை தேவதூதன் சொன்னான்..."நற்செய்தி" அதுவும் தேவனின் உன்னதமான திட்டங்களின், வரப்போகும் முடிவில்லா ராஜ்ஜியத்தின் நற்செய்தி இதுவே. நீங்களும் உங்கள் கூட்டத்தாரும்தான் பெருவாரி மானிடர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள், தேவனால் அவர்களை இரட்சிக்க முடியவே முடியாது என்ற மாபெரும் துர்ச்செய்தியை நற்செய்தி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்...
லூக்கா 2:10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
மன்னிக்கவும் 1000வருட அரசாட்சியில் 'சேட்டை' கிடையாது ஏனென்றால் சேட்டை செய்ய வைக்க சாத்தானும் கிடையாது. இரண்டாம் மரணம் என்று ஒன்று இல்லவே இல்லை. ஏன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தால் அது மரணமே இல்லையே... என்னைக் கேட்டால் முதல் மரணம் கூட இல்லை. அது வெறும் நித்திரையே...