மரணம், ஆத்துமா டாபிக்கை எடுத்தாலே காததூரம் ஓடும் கூட்டம் உன் இந்தப் பதிவுக்குமட்டும் பதில் சொல்லப்போகிறதாக்கும்.
மரித்த என்றாலே செத்துப்போவதுதானே. இத்தனை காலம் ஆத்துமா மரிக்காது என்று பதித்துவிட்டு இதென்ன மரித்த ஆத்துமா? உங்களுக்கெல்லாம் எப்படி மூளை கலங்கிப்போய் இருக்கிறதென்று புரிகிறதா?
முதலில் ஆத்துமா என்றால் என்ன? அதற்கு வடிவம் உண்டா? உணர்வு உண்டா? அங்கங்கள் உண்டா? ஐம்புலன்கள் உண்டா? அது உயிர்வாழவேண்டுமானால் சாப்பிட வேண்டுமா?
லூக்கா 12:19 பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.