எபிரெயர் 9:27 ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, ...
//மனிதர் அனைவருக்கும் ஒரே தரம் தான் மரணம், அந்த மரணத்திலிருந்து அனைவரும் உயிர்த்தெழுந்து பின்னர் நியாயத்தீர்ப்பை அடைவதுதான் தேவநியமனம், மரித்து உயிர்த்தெழுந்து நியாயத்தீர்ப்பு அடைந்தபின்னர் யாரேனும் மரிப்பது தேவநியமனம் அல்ல, அதாவது இரண்டாம் மரணம் என்பது யாருக்கும் கிடையாது எனத் திட்டவட்டமாக கோவை பெரியன்ஸ் தள நிர்வாகி கூறுகிறார். அவரது கூற்றுக்கு ஆதாரமாக மேற்கூறிய வசனத்தைக் காண்பிக்கிறார்.//
வசனம் சொல்லுவதை சொல்லுகிறோம், அதை ஏற்கும் தன்மை தேவனின் ஆவியினால் மாத்திரமே ஏற்படும்!!
//ஆனால் வெளி. 20:14 மற்றும் 21:8 வசனங்கள், மனிதர்களின் இரண்டாம் மரணத்தைக் குறித்து தெளிவாகக் கூறுகின்றன. அப்படியிருக்க எபிரெயர் 9:27-ஐ வைத்து மனிதர்கள் ஒரு தரம் மட்டுமே மரிப்பார்கள் எனக் கூறமுடியுமா? சற்று சிந்தித்துப் பார்ப்போம்.//
ஆனால் வெளி. 21:4ல், வெளிப்படுத்தின விசேஷம் 21:4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
21:4ல் இனி மரணமுமில்லை என்று தெளிவாகத்தானே கூறுகின்றதே!! அப்படி என்றால் ஒரே தரம் மட்டுமே மரிப்பது என்பது தேவனின் நியமனம் இல்லாமல் பவுலுக்கு தோன்றியதை எழுதியிருக்கிறாரோ!!?? சிந்தித்துப் பாருங்கள்!! 21:4ல் இனி மரணமில்லை என்று எழுதப்பட்டு, 21:8ல் உள்ள மரணம் என்னவென்று ஆறாய வேண்டுமே!!
//வேதாகமத்தில் எபிரெயர் 9:27-க்கு முரணாக வெளி. 20:14 மற்றும் 21:8 வசனங்கள் மட்டுமின்றி வேறு பல வசனங்களும் உண்டும். அவை:
யோவான் 11:43 இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். 44 அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான்.
2 ராஜா. 4:32 எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, அந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான். 35 அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக் கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்.
எபிரெயர் 9:27-ன்படி ஒருதரம் மரித்து பின்னர் உயிர்த்தெழுந்தவர்களான லாசரு, சூனேமியாளின் மகனைப் போல வேறு பலரும் மரித்து உயிர்த்தெழுந்ததாக வேதாகமத்தில் பார்க்கிறோம். இவர்களெல்லாம் சில வருடங்களில் மீண்டும் மரித்திருப்பார்கள் என்பது நிச்சயம். அப்படியானால் இவர்களுக்கெல்லாம் 2 - தரம் மரணமா? இது எபிரெயர் 9:27-க்கு முரணானது இல்லையா?//
லாசருவோ, சூனேமியாளின் மகனோ அல்லது வேறு பலரோ உயிர்த்தெழுந்த பிறகு எபிரேயர் 9:27ல் சொல்லப்பட்ட நியாயத்தீர்ப்படைந்தார்களா என்றால் இல்லையே!! அப்படி என்றால் அவர்கள் உயிர்த்தெழந்ததே உயிர்த்தெழுதல் ஒன்று உண்டு என்பதை நிரூபிக்கவே!! அதாவது மரணம் இருந்தாலும் அதிலிருந்து கிறிஸ்து இயேசுவின் ஈடுபலியினால் அனைவருக்கும் உயிர்த்தெழுதல் உண்டு என்பதை ஒரு சாம்பிளாகவே இவர்கள் மூலம் வேதம் நிரூபித்திருக்கிறது!! மற்றபடி அவர்கள் உயிர்த்தெழுந்தது நியாயத்தீர்ப்படையவில்லை, அவர்கள் மீண்டும் மரித்தார்கள், நியாயத்தீர்ப்புக்கு எழும்படியாக!! யூதர்கள் நம்பியதை கூட கிறிஸ்தவர்கள் நம்பாமல் இருப்பது ஆச்சரியம் தான்!!
யோவான் 11:25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; 26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
தன்னால் இந்த உலகமே உயிர்த்தெழ போகிறது என்பதற்கு சாம்பிளாக சிலரை உயிர்த்தெழசெய்து அதை நிரூபித்திருக்கிறார் கிறிஸ்து!! அதன் பின் அவர்கள் அனைவருமே மரித்தார்கள், ஆனால் உண்மையான உயிர்த்தெழுதலே கிறிஸ்துவின் வருகையின் போது தான் என்பது பல வசனங்கள் சொன்னாலும் இரண்டாம் மரணம் என்கிற வெளிப்படுத்தின விசேஷத்தில் வந்த வார்த்தையின் மூலம், சிலர் (அல்லது அநேகர்) இந்த மரணத்திற்கும் போக வாய்ப்பு இருக்கிறது என்பதை நிரூபிக்க நண்பர் அன்பு அவர்கள் பார்ப்பதினால் எபிரேயர் 9:27ல் சொல்லப்பட்டிருக்கும் ஒரே தரம் மரிப்பது என்பதை ஆராய்ச்சி வசனமாக்கியிருக்கிறார்!!
26ம் வசனத்தில் விசுவாசிக்கிறவனெவனும் என்பதற்கு பதில் விசுவாசிக்கிற அனைவரும் என்று தான் சரியான வார்த்தையாக இருக்கும்!!
Original Word: πᾶς, πᾶσα, πᾶν Part of Speech: Adjective Transliteration: pas Phonetic Spelling: (pas) Short Definition: all, the whole, every kind of Definition: all, the whole, every kind of.
எல்லாரும் என்பதற்கும், விசுவாசிக்கிற எவனுக்கும் என்பதன் வித்தியாசத்தை தமிழ் தெரிந்தவர்கள் அறிவார்கள் என்று நம்புகிறேன்!!
//ஏனோக்கும் எலியாவும் ஒரு தரம் கூட மரிக்காமல் எடுத்துக்கொள்ளப்பட்டதாக இவ்வசனங்கள் கூறுகின்றன. மனிதர்கள் அனைவருக்கும் ஒரு தரம் மரணம் என்பது தேவ நியமனம் என எபிரெயர் 9:27 கூறுகிறது. அப்படியிருக்க ஏனோக்கும் எலியாவும் ஒரு தரம் கூட மரிக்காமல் எடுத்துக்கொள்ளப்பட்டது எப்படி?//
ஏனோக்குடைய நாளெல்லாம் என்றால் ஏனோக்கு வாழ்ந்த நாட்கள் 365 வருடங்கள்!! அவன் வாழ்ந்தது அத்துனை வருடங்கள் என்றால் அதன் பின் அவன் மரித்து போனான் என்று புரிந்துக்கொள்ள தனிப்பட்ட அறிவின் அவசியம் கிடையாது!! மேலும் தமிழில் "காணப்படாமற்போனான்" என்கிற வார்த்தை தமிழில் எங்கே இருந்து வந்தது என்று தெரியவில்லை, அன்பு அவர்கள் மூல பாஷையை பார்ப்பவராயிற்றே, இப்படி இல்லாத வார்த்தையுடன் வசனத்தை சுட்டி காண்பித்து எபிரேயர் 9:27ல் சொல்லப்பட்ட ஒரே தரம் மரணம் என்பது தவறு என்று சொல்ல விரும்பிகிறீர்களோ!!
//ஒரு தரம் மரித்தபின்தானே நியாயத்தீர்ப்பு என எபிரெயர் 9:27 கூறுகிறது? ஆனால் உயிரோடிருப்பவர்களுக்கும் நியாயத்தீர்ப்பு என பவுல் சொல்கிறாரே, அது எப்படி?//
நியாயத்தீர்ப்பு என்பதே உயிர்த்தெழுந்த பின் நடக்கும் காரியம் தான்!! அப்பொழுது எல்லாரும் உயிரோடு தான் இருப்பார்கள்!!
//மனுஷர் அனைவரும் ஒரு தரம் மரிக்கவேண்டும் என எபிரெயர் 9:27 கூறியிருக்க, இங்கு நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை, அதாவது மரிப்பதில்லை; மரிக்காமலேயே மறுரூபமடைவோம் என பவுல் சொல்வது எப்படி?//
ஒன்று எபிரேயர் 9:27 தப்பு என்று சொல்லிவட வேண்டியது தானே, அல்லது அந்த வசனம் என்ன சொல்லுகிறது என்றாவது சொல்லவேண்டியது தானே!! நாம் அனைவரும் நித்திரயடைந்து நீண்ட நாட்கள் இருக்காமல், நொடிப்பொழுதிலோ, ஒரு நிமிஷத்தில் மறுரூபமாவோம் என்கிறார்!! ஒரே தரம் மரிப்பது என்பது தேவ நியமனம்!! உங்கள் சந்தேகம் தான் என்ன!! ஒரே தரம் மரணம் என்று சொல்லியிருப்பது வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள "இரண்டாம் மரணம்" கான்செப்ட் ஃபிட் ஆக மாட்டேன் என்பதால் அதை (எபி 9:27) எப்படியாவது தவறு என்று நிரூபிக்க பார்க்கிறீர்கள், அதானே!!
எபிரெயர் 9:27 ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, ...
என்கிற இந்த வசனம் தவறு என்று தைரியமாக எழுத வேண்டியது தானே, அன்பு அவர்களே!!
வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை;
முதலாம் உயிர்த்தெழுதல் என்பது இங்கே எண்ணிக்கையை குறிப்பிடும் முதல் அல்ல!! முதலாம் என்றால் பிரதான அல்லது முதல் தரம்!!
Original Word: πρῶτος, η, ον Part of Speech: Adjective Transliteration: prótos Phonetic Spelling: (pro'-tos) Short Definition: first, before Definition: first, before, principal, most important.
NASB Word Usage before (3), best (1), first (128), first of all (2), first importance (1), first man (1), first one (1), first things (1), first time (1), foremost (5), leading (2), leading man (1), leading men (5), outer (3), previous (1).
ஏனென்றால் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெறுபவர்கள் சாகாமையை பெற்றுக்கொள்வார்கள், கிறிஸ்துவின் சாயலில் இருப்பார்கள்!! எப்படி கிறிஸ்து சாகாமையை அடைந்திருக்கிறாரோ, அப்படியே இந்த முதலாம் தரம் உயிர்த்தெழுதல் பெறுவோர் அதே சாகாமையை பெற்றுக்கொள்வார்கள்!! இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் இல்லை என்று தானே இருக்கிறது, நீங்களாகவே உங்கள் "அறிவை" கொண்டு அப்படி என்றால் மற்றவர்களுக்கு இரண்டாம் மரணம் தான் என்கிற முடிவில் இருப்பதற்கு நான் என்ன செய்ய முடியும்!!
முதலில் இரண்டாம் மரணம் என்றால் மனிதர்களுக்கு ஏற்படும் மரணமா என்பதை முடிவு செய்யுங்கள்!! ஏனென்றால் வேதத்தில் அக்கினியும் கந்தகமும் எரிகிறதை தான் இரண்டாம் மரணம் என்று உள்ளது!!
வெளி. 20:14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
இங்கே மனிதர்கள் இரண்டாம் மரணத்திற்கு செல்கிறார்கள் என்று இல்லையே அல்லது மனிதர்களுக்கு இரண்டாம் மரணம் நேரிடுகிறது என்றும் சொல்லவில்லையே!! மரணமும் (Death), பாதாளமும் (Hades), அக்கினிக்கடலிலே (Lake of Fire) தள்ளப்பட்டதை தான் இரண்டாம் மரணம் என்று வேதம் சொல்லியிருக்கிறது!!
அதாவது இனி மரணமோ, ஹேடஸோ இல்லை என்பதை தானே வேதம் சொல்லுகிறது!! அதையே தான்,
வெளி. 21:4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
இனி மரணமுமில்லை என்கிறதே!! இந்த வசனத்தை மாத்திரம் வாசிப்பது கிடையாதா!!?? ஆக மரணம் என்கிற ஒன்றை அக்கினிக்கடலில் (இரண்டாம் மரணம்) தள்ளிவிடுகிறார் தேவன் என்று தான் வசனம் தெளிவாக சொல்லுகிறதே!! இதையும் ஏற்க மனமில்லாமல் இருக்கிறீர்கள்!!
வெளி. 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.
என் புரிந்துக்கொள்ளுதலின்படி, இந்த வசனத்தில் சொல்லப்பட்டவை எல்லாம் சாத்தானின் கிரியைகளே!! இந்த கிரியைகள் இனிமேல் இந்த பூமியில் காணாதப்படிக்கு அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே (இரண்டாம் மரணம் தான்) தள்ளப்படும்!!
அதை தான் 21:4ல் இது போன்ற கிரியைகளினால் வரும் பெலன் இனிமேல் கிடையாது என்று வாக்கு செய்கிறாரே!! ஏனென்றால் முந்தினவைகள் (இந்த சாத்தானின் கிரியைகள்) எல்லாம் ஒழிந்துபோயின!!
மொத்தத்தில் ஒரு இடத்தில் கூட மனிதர்கள் மீண்டும் மரிப்பது தான் இரண்டாம் மரணம் என்று இல்லை!! உங்கள் "அறிவுமே" அபாரமானது தான்!! ஏனென்றால் உங்கள் அறிவில் மனிதர்கள் அழிவையே சிந்தித்து வருகிறீர்கள் என்பதே உங்கள் பதிவு மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது!!
21:4ல் இனி மரணமே இல்லை என்று தேவன் வாக்கு கொடுத்துவிட்டு, 21:8ல் இந்த இத்துனையையும் செய்கிறவர்கள் மரிப்பார்கள் என்கிற "அறிவு" அபாரமாக தான் இருக்க முடியும்!! மேலும் முந்தினவைகள் எல்லாம் ஒழிந்துபோயின என்று தேவன் சொன்ன பிறகும் இத்துனையும் செய்கிறவர்கள் இருக்கிறார்கள் என்கிற புரிந்துக்கொள்ளுதலும் அபாரமானது தான்!!
//அதை விடுத்து “அவர் இப்படி எழுதினாரா”, “இவர் அப்படி எழுதினாரா” என்பது போன்ற சாரமற்ற கேள்விகள் தேவையில்லை.//
அப்படி ஒன்றும் சாரமற்றதாக நான் எழுதவில்லை!!
//ஒரேதரம் மரிப்பது என்றால் “ஒரே தரம் தான்” என பெரியன்ஸ் சாதிக்கிறார்.//
நானா எபிரேயர் 9:27ஐ எழுதினேன்!!
//அது “உயிர்த்தெழுதலை நிரூபிப்பதற்காக” என வியாக்கியானம் செய்கிறார். //
நிச்சயமாக!! இதில் நான் வியாக்கியானம் செய்வதற்கு ஒன்றும் இல்லை, கிறிஸ்து இயேசுவே இதை சொல்லுகிறார்,
யோவான் 11:15. நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
யோவான் 11:21. மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்.
இந்த இரண்டு வசனங்களையும் தியானியுங்கள், என் வியாக்கியானம் புரியும்!! அப்படியும் புரியவில்லை என்றால் எழுதுங்கள், என் வியாக்கியானத்தை அப்போ பதிவு செய்கிறேன்!!
மேலும் கிறிஸ்து உயிரோடு எழுப்பிய சம்பவங்கள்:
மரித்த கொஞ்ச நேரத்தில் சிறு பெண்ணை எழுப்பினார் (மத்தேயு 9:18-19, 23-25)
பாடையில் அடக்கம் செய்ய கொண்டு போகும் வழியில் (அவன் எப்பொழுது இறந்தான் என்று தெரியாது) இருந்த இளைஞனை எழுப்பினார் (லூக் 14:7)
நான்கு நாட்கள் சென்ற பின் லாசருவின் உயிர்த்தெழுதல் (யோவான் 11)
அதாவது மரித்து நொடிப்பொழுதானாலும், அல்லது எத்துனை காலம் ஆனாலும் சரி, கிறிஸ்துவினால் அனைவரும் உயிர்த்தெழுவார்கள் என்பதே இந்த வசனங்கள் எனக்கு தரும் செய்தி!! உங்களுக்கு எப்படி என்று எனக்கு தெரியவில்லை!!
"துக்கத்தைப் போக்குவதற்காகத்தான்" உயிர்த்தெழசெய்தார் என்றால் அவர்கள் மீண்டும் மரிக்கவில்லையா!! அவர்களுக்கு மீண்டும் துக்கம் வந்திருக்காதா!!??
//ஆதியாகமம் 5-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள வம்ச வரலாற்றைக் கவனமாகப் படித்தால், ஏனோக்கிற்கு முன்/பின் வம்சத்தார் யாவரையும் “அவன் மரித்தான்” என specific-ஆக வேதாகமம் கூறுவதைக் கவனிக்கலாம். ஆனால் ஏனோக்கின் விஷயத்தில் மட்டும் “அவர் மரித்ததாகக்” கூறாமல், “அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்” எனக் கூறுகிறது. இது நிச்சயமாக ஒரு வித்தியாசமான குறிப்புதான். மேலும் “ஒரேதரம் மரிப்பது” எனும் தேவநியமனத்தை எழுதின அதே “எபிரெய நிருப ஆக்கியோன்”, “ஏனோக்கு மரணத்தைக் காணவில்லை” என்றும் எழுதியுள்ளார்.//
அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று தானே இருக்கிறது!! specific-ஆகஎங்கே என்று சொல்லப்படவில்லையே!! நீங்களாகவே ஏன் கற்பனைசெய்துக்கொள்கிறீர்கள்? அவன் மரிக்காமல் எடுத்துக்கொள்ளப்பட்டான் என்று!! இங்கே மட்டும் உங்களுக்கு specific-ஆக எதுவும் தேவையில்லையோ!! எடுத்துக்கொள்ளப்பட்டான் என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கிறதே!!
NASB Word Usage accept (8), accepted (3), accepts (2), bring (18), brought (13), buy (1), buys (1), capture (2), captured (2), carry (3), caught (2), exact (1), find (1), flashing (1), flashing forth (1), get (25), gets (1), got (2), has (1), keep (1), married (9), married* (6), marries (1), marry (5), obtain (1), placed (2), procured (2), put (1), raise (3), receive (20), received (12), receives (3), receiving (1), seize (3), seized (2), select (1), selected (1), sent (1), supply (1), take (355), taken (74), takes (15), taking (2), took (352), took away (1), use (1), used (1), wins (1).
இத்துனை வார்த்தைகளில் ஒன்றுமே அவன் மரிக்காமல் பரலோகத்திற்கு சென்றதாக specific-ஆன அர்த்தம் இல்லையே!!
இதே போன்று தான் எலியாவும் "எடுத்துக்கொள்ளப்பட்டதாக" வசனம் இருக்கிறது, ஆனால் அந்த சமபவத்திற்கு பிறகு அவன் எழுதி அனுப்பிய கடிதம் ஒன்று வருகிறது!! எப்படி? பரலோகத்திலிருந்தா?
எடுத்துக்கொள்ளப்படுவது என்பது அந்த இடத்தில் இல்லாமல் போவது ஒன்றே அர்த்தம் கொள்ள முடியுமே தவிர அவன் மரிக்காமல் இருந்தான் அல்லது மரிக்காமல் எடுத்துக்கொள்ளப்பட்டான் என்று எந்த விதத்திலும் அர்த்தம் வராது (கிறிஸ்தவத்தின் எடுத்துக்கொள்ளுதலின் கோட்ப்பாட்டை விசுவாசிப்பவர்களுக்கு இப்படி அர்த்தம் கொள்வது சாத்தியமே)!! இந்த இடத்தில் "மரிக்காமல்" என்று specific-ஆகஇல்லையே!!?? அது எப்படி, உங்களுக்கு மாத்திரம் இல்லாத வார்த்தையை சேர்த்து கொள்வது நியாயமானது, அதுவே எனக்கு "விநோதமானதாக" இருக்கிறது என்பதை விளக்க முடியுமா??
எபிரெயர் 11:5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்;
ஒருவன் தன் மரணத்தை ஒரு போதும் காண முடியாது என்பதை கூட புரியாமல் இருக்கிறீர்களே!! இந்த வசனத்திலும் ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான் என்று தான் உள்ளதே தவிர specific-ஆக"அவன் மரிக்கவில்லை" என்று இல்லையே!!?? அவன் காணப்படாமற் போனான் என்றால் என்ன? அவன் மரிக்காமலே பரலோகத்திற்கு சென்று விட்டான் என்றா??
அப்படி என்றால் பவுல் எழுதிய இந்த வசனமும் தவறு தானே, அதாவது,
அதாவது இன்றைய கிறிஸ்தவ மண்டலத்தின் கூற்றின்படி, ஏனோக்கும் எலியாவும் மாத்திரம் மேலே உள்ள வசனத்திற்கு விளக்கு பெற்றவர்கள் போல்!!
//இதற்குப் பின்னரும் “ஏனோக்கு மரித்தார்” என்றுதான் பெரியன்ஸ் சொல்லப்போகிறாரா?//
நீங்கள் எவ்வுளவு தான் நக்கலாக சொன்னாலும் ஏனோக்கு மரிக்கவில்லை என்கிற பிசாசின் போதனையை நான் நம்புவதற்கில்லை!! தேவனின் கட்டளையான "நீ சாகவே சாவாய்" என்பதில் எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை!! ஏனோக்கு "மரிக்கவில்லை" என்று எங்கேயும் எழுதப்படவில்லை!! அவன் காணப்படாமற் போனான் என்று தான் இருக்கிறது!! தேவன் சொன்ன "நீ சாகவே சாவாய்" என்பது உண்மை என்றால் ஏனோக் மரித்தே ஆக வேண்டும்!! இயேசு கிறிஸ்துவும் மரித்தார்!! அவன் மரிக்கவில்லை என்று நம்புவோர் பிசாசின் போதனையான "நீங்கள் சாகவே சாவதில்லை" என்பதை விசுவாசிக்கும் கூட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை!!
//பெரியன்ஸ்-ன் அறிவு புரிந்துகொண்டதை, எபிரெய ஆக்கியோனின் அறிவு புரிந்துகொள்ளவில்லையே! அவர் “ஏனோக்கு மரணத்தைக் காணவில்லை” என்றல்லவா சொல்கிறார்? உண்மையில் பெரியன்ஸ்-ன் “புரிந்து கொள்ளும் அறிவு” அபாரம் தான்.//
மரிக்காமல். மாம்சத்துடனும், இரத்ததுடனும் பரலோகம் போகலாம் என்று அன்புக்கு தெரிந்தது, பவுல் கொரிந்தியர்களுக்கு மடல் எழுதும் போது தெரியாமல் போய்விட்டது!! ஏன் பவுலை காட்டிலும் உங்களுடைய "புரிந்து கொள்ளும் அறிவு" அபாரம் தானே!!
//எபிரெயர் 9:27 தப்பு எனச் சொல்வது எனது நோக்கமல்ல. இதைக்கூட ஏனோ பெரியன்ஸ்-ஆல் புரிந்துகொள்ள இயலவில்லை.//
அப்படி என்றால் அது உண்மை இல்லை என்று சொல்லுகிறீர்களா?? நீங்கள் இத்துனை எழுதிய பிறகும் உங்களை புரிந்துகொள்ள முடியவில்லை தான்!!
//மறுரூபமடைபவர்களைக் குறித்து வினோதமான விளக்கத்தைத் தருகிற பெரியன்ஸ், மறுரூபமாகாத மற்றவர்களைக் குறித்து என்ன சொல்லப்போகிறார்? இவர்கள் அத்தனை பேரும் ஒரு நொடிப்பொழுதில் மரித்து, நீண்ட நாட்கள் இருக்காமல், உடனடியாக உயிர்த்தெழுந்துவிடுவார்கள் என்பாரோ?//
நிச்சயமாக!! மரணம் எல்லாருக்கும் சம்பவித்தே ஆக வேண்டும்!! இல்லாவிட்டால், "நீ சாகவே சாவாய்" என்பது பொய்யாகிவிடும்!!
ரோமர் 5:12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
மரணம் எல்லாருக்கும்!! அது நீண்ட நித்திரையாக இருக்கலாம் (ஆதாம் தொடங்கி), அது நொடிப்பொழுதாகவும் இருக்கலாம் (கிறிஸ்துவின் வருகையில்)!!
ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்;
மரணம் என்றால் மரணம் தான், அதற்கு ஏனோக்கோ, எலியாவோ அல்லது வேறு யாருமே விதிவிளக்கு கிடையாது!! மரணம் இல்லை என்று "தோன்றுவது" போல் உள்ள வசனத்தை காட்டி தயவு செய்து வஞ்சிக்க முயற்சிக்காதீர்கள்!! மரணம் இல்லை என்று சொல்லுவது பிசாசின் போதனையான "நீங்கள் சாகவே சாவதில்லை" தான்!! மாற்று கருத்தே இல்லை!!
1. மரித்தவர்கள், 2. உயிரோடிருக்கிறவர்கள் என்றால் அனைவரும் என்று தான் பொருளே தவிர, மரித்தவர்களை ஒருவராலும் நியாயந்தீர்க்க முடியாது!! மரித்தவர்கள் உயிரடைந்தால் தான் நியாந்தீர்க்கப்படுவார்கள் என்கிற அடிப்படை "அறிவாவது" இருக்கும் என்று நினைக்கிறேன்!!
//மொத்தத்தில் எனது எந்தக் கேள்விக்குமே திருப்தியான/சரியான பதிலை/விளக்கத்தை பெரியன்ஸ் தரவில்லை.//
மொத்தத்தில் அன்பு அவர்களை திருப்திப்படுத்துவது என் நோக்கம் கிடையாது!! அவருக்கு புரியவில்லை என்றால் புரியவைப்பது என் வேலையும் இல்லை!! என் புரிந்துக்கொள்ளுதளை நான் எழுதியிருக்கிறேன்!! ஆனால் மரணம் இல்லாமலும் ஜனங்கள் இருக்க முடியும் என்கிற உங்கள் அறிவிற்கு நான் ஈடுகொடுக்க முடியாது!! எதற்கு வேண்டுமென்றாலும் குதர்த்தம் எடுத்துக்கொள்ளலாம், ஆனால் "நீ சாகவே சாவாய்" என்பதில் தேவ நியமனத்தில் எந்த மாற்றமும் கிடையாது!! உங்களுக்கு திருப்தியாக இருப்பதற்காக தேவன் மரணத்தை வைக்கவில்லை, மாறாக
எபிரெயர் 9:27 ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, ...
இப்படி அழகானன் ஒரு நியமத்தை உங்களின் அறிவு ஏற்க மறுக்கலாம்! நியமிக்கப்பட்டதை மாற்ற உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதோ!!??
//எனவே நாம் ஆதாமைப் போலிராமல், “இரண்டாம் மரணம்” என வேதாகமம் சொல்வதைக் குறித்து அச்சம் கொள்ளத்தான் வேண்டும். ஒருவேளை பெரியன்ஸ் போன்ற சிலரது அதிமேலான புத்திக்கு “இரண்டாம் மரணம்” என்பது “மரணமல்ல”, அது “மரணத்தின் மரணம், systems-ன் மரணம்” எனத் தோன்றலாம். அவர்கள் சொல்வது சரியாகவே இருந்தால் மிகவும் சந்தோஷம்தான். ஆனால் ஒருவேளை தவறாகிப் போனால்?//
II தீமோத்தேயு 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
வேத வசனங்களை சரியாக கையாளத்தெரிந்ததே "பகுத்துப்" போதிக்கிறதாகும்!! வெளிப்படுத்தின விசேஷத்தில் மாத்திரமே எழுதப்பட்டிருக்கும் "இரண்டாம் மரணம்" என்கிற சொற்றொடர் மனிதன் இரண்டாம் முறை மரிப்பான் என்று அர்த்தம் கொள்ளும்படியாக இல்லையே!!
வெளி 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
இரண்டாம் மரணம் என்றால் அக்கினியும் கந்தகமும் ஏரிகிற கடல்!!
இரண்டாம் மரணம் என்கிற சொற்றொடருக்கே இத்துனை அர்த்தங்கள் இருக்கிறது!! தமிழில் கடல் என்று எழுதப்பட்டிருக்கும் வார்த்தை ஆங்கிளத்தில் பார்த்தோமென்றால் ஏரியாக இருக்கிறது!!
வெளிப்படுத்தின விசேஷத்தில் மாத்திரமே வருகிற வார்த்தையான "இரண்டாம் மரணம்" ஒரு போதும் மனிதர்கள் இரண்டாவது முறை மரிக்கிறார்கள் என்று சொல்லுவதில்லை!!
//சாத்தான் சொன்னது சரியாக இருக்கும் என நம்பித்தான் ஆதாம் ஏமாந்து போனார். அதுபோலவே பெரியன்ஸ் சொல்வது சரியாக இருக்கும் என நம்பி நாம் ஏமாந்து போகக்கூடாதல்லவா? எனவேதான் “இரண்டாம் மரணம்” என்பது இப்படியாகவும் இருக்க வாய்ப்புள்ளது, அன்று சாத்தான் சொன்னதை நம்பி ஆதாம் ஏமாந்ததைப்போல் இன்று பெரியன்ஸ் சொல்வதை நம்பி நம்மில் யாரும் ஏமாந்து போகவேண்டாம் என நான் எச்சரிக்கிறேன்.//
மீண்டும் தவறு!! சாத்தான் ஆதாமிடம் சொன்னதில்லை, ஆதாமும் சாத்தானிடம் வஞ்சிக்கப்படவில்லை!! அடிப்படை விஷயத்தை கூட தெரியாமல் என்னால் வஞ்சிக்கப்படாமல் அன்பு அவர்கள் என்னை சாத்தானென்று சொல்லி அவர் வாசகர்களை அவர் வஞ்சகத்திலிருந்து காப்பாற்றுகிறாராம்!! அவரின் வாசகர்களுக்கு இவர் இப்படி தான் சொல்லி கொடுத்திருப்பார் போல், அதாவது ஆதாம் தான் சாத்தானிடம் வஞ்சிக்கப்பட்டான், சாத்தான் சொன்னது சரியாக இருக்கும் என்று ஆதாம் தான் நம்பினான் என்று!! சாத்தான் யாரிடம் என்ன சொன்னான் என்கிறது கூட தெரியாமால் இவர் சாத்தானின் போதனையான "நீங்கள் சாகவே சாவதில்லை" என்கிற போதனையின் அடிப்படையில், மனிதனுக்கு மரணம் இல்லை என்று போதித்து எத்துனை பேரை தான் வஞ்சித்திருக்கிறாரோ!! இப்படி தான் புரிந்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று தனது புரிந்துக்கொள்ளுதலை தினிக்கிறார்!!
பெரேயன்ஸ் ஒரு போதும் ஒன்றையும் போதனையாக நீங்கள் இதை பின்பற்றுங்கள் என்று சொல்லுவதில்லை!! அதை நீங்கள் தான் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்!! வேதம் இப்படி சொல்லுகிறது என்று சொல்லுகிறேன், அதை புரிந்துக்கொள்ளவோ, விட்டு விடவோ தேவன் தேவையான ஞானத்தை அனைவருக்கும் தந்திருக்கிறார் என்று நம்புகிறேன்!! வழக்கமான கிறிஸ்தவ மண்டலத்தின் போதகராக நீங்கள் உங்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!!
I தீமோத்தேயு 2:14 மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
ஆதியாகமம் 3:4. அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; 5. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. 6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
அன்பு அவர்கள் ஆதாம் சாத்தானின் போதனையால் வஞ்சிக்கப்பட்டான் என்கிற அளவிற்கு வேதத்தில் தேற்சி பெற்றவராக இருக்கிறார்!! என்னை சாத்தான் என்று சொல்ல அவருக்கு அத்துனை பிரியம்!! இதுவும் ஒரு கிரியை தானோ!!??
//கனியைப் புசித்தால் சாகவே சாவாய் என தேவன் ஆதாமிடம் கூறினார். பெரியன்ஸ்-ன் கூற்றுப்படி தேவன் ஆதாமின் அழிவை விரும்பியதால்தான் அப்படிச் சொல்லியிருப்பார் போலும். கனியைப் புசித்தால் சாகவே சாவதில்லை என சாத்தான் ஏவாள் மூலம் ஆதாமிடம் சொன்னான். பெரியன்ஸ்-ன் கூற்றுப்படி சாத்தான் தான் மனிதனிடம் மிகவும் அன்புள்ளவன். ஏனெனில் அவன்தான் அழிவைக்குறித்து சொல்லாமல், அழிவின்மையைக் குறித்து சொன்னான். சாத்தானைப் பின்பற்றி இன்று பெரியன்ஸ்-ம் அழிவின்மையைக் கூறுகிறார், எல்லோருக்கும் நித்திய ஜீவன் என்கிறார்.//
அன்பு அவர்களே, என்னை முட்டளாக சித்தரிக்க நினைத்து அந்த பட்டத்துக்கு நீங்கள் பாத்திரராகிவிடாதீர்கள்!! உங்கள் போதனைகளை மாத்திரம் எழுதுங்கள், என்னை சாத்தான் என்று நிரூபிக்கவோ அதினால் மகிழ்ச்சிக்கொள்ளவோ விரும்ப வேண்டாம்!!
உங்களுக்கு அபாரமான "அறிவு" இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள்!! நீங்கள் தான் Specific-ஆன வசனங்களை நம்புவராயிற்றே!! சாகவே சாவீர்கள் என்பதை அழிவு (இரண்டாம் மரணம்) என்று நீங்கள் போதிப்பதற்கு என்னை ஏன் பொறுப்பாளியாக்குகிறீர்கள்!! ஆதாமின் அழிவை (இரண்டாம் மரணம்) விரும்பியிருந்தால் கிறிஸ்து எனும் ஆட்டுக்குட்டியை உலக தோற்ற முதல் அவர் நியமித்திருக்க மாட்டார்!!
இதோ அழிவை விரும்பாத தேவன் உடனடியாக அவர்களுக்கு மீட்பரை குறித்த வாக்கு கொடுக்கிறார்!! அழிவை விரும்பும் தேவன் ஏன் அவர்கள் மீட்கப்படவேண்டும் என்று நினைக்க வேண்டும்!! நீங்கள் தான் சாத்தானின் போதனையான மரணமே இல்லாமல் நியாயத்தீர்ப்பு வரும் என்று போதிக்கிறீகள்!! மரித்தாலும், அனைவரையும் மரணத்திலிருந்து இரட்சிக்க வல்லவரான கிறிஸ்துவை நாங்கள் காட்டுகிறோம்!! இன்னும் மரணம் என்றால் என்ன என்கிற கிறிஸ்தவ மண்டலத்தின் போதனையை தான் நீங்களும் போதிக்கிறீர்கள்!! கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது, ஆனால் மனிதர்களின் கிரியை அவர்களை இரட்சிக்கும் என்று போதித்து தேவனின் வல்லமையை குறைத்து மனுஷர்களை உயர்த்துகிறீர்கள்!! இது தான் வஞ்சிக்கும் போதனை!! தேவன் சொன்ன "சாகவே சாவாய்" என்று தான் நாங்கள் போதிக்கிறோம், ஆனால் அந்த மரணத்திலிருந்து அனைவரையும் இரட்சிக்கவே கிறிஸ்துவை தேவன் நியமித்தார் என்றும் போதிக்கிறோம்!! நீங்கள் சாகவே சாவதில்லை என்கிற சாத்தானின் போதனையை நீங்கள் தான் போதித்து வஞ்சித்து வருகிறீர்கள்!! ஒரே தரம் மரணம் என்பதில் கூட உங்களுக்கு சந்தேகம் என்றால் எந்த அளவிற்கு தேவன் "நீ சாகவே சாவாய்" என்பதை நம்புகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!!
//இவர் சொல்வதை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். ஆனால் இவர் சொல்வதை நம்பி, ஒருவேளை சாத்தான் சொன்னதைப் போல இவர் சொல்வதும் பொய்யாகிப்போனால் நம் நிலை என்னாகும் என்பதை சிந்தித்துப்பார்க்கும்படி அனைவரையும் வேண்டுகிறேன்.//
உங்கள் நோக்கம் சுத்தமானதாக இல்லை!! உங்கள் நோக்கம் என்னை மட்டம் தட்டுவதாக மாத்திரமே இருக்கிறது!!
நீ சாகவே சாவாய் என்று தேவன் சொல்லுகிறார் (ஆதி 2:17)!! ஒரே தரம் மரணம் என்பது வேதம் சொல்லுகிறது (எபி 9:27)!! எல்லாரையும் மீட்கும் பொருளாக கிறிஸ்து தன்னை கொடுத்தார் என்றும், அது ஏற்ற காலங்களில் விளங்கி வருகிறது என்று வேதம் சொல்லுகிறது (1 தீமோத்தேயு 2:5,6)!! இரண்டாம் மரணம் என்றால் மனிதர்களின் மரணம் இல்லை அது அக்கினியும் கந்தகமும் உள்ள கடல் என்று வெளிப்படுத்தின விசேஷம் மாத்திரமே சொல்லுகிறது!! அன்பை பொறுத்தவரை வேதத்தில் இருந்து சொல்லப்பட்ட இந்த காரியங்கள், இந்த புரிந்துக்கொள்ளுதல் சாத்தானின் போதனையாம்!! நீ சாகவே சாவாய் என்று சொன்னால் இவரின் வாசகர்கள் வஞ்சிக்கப்பட்டுவிடுவார்களாம்!!
அன்பு அவர்களின் போதனையான "ஒரே தரம் மட்டும் மரணம் இல்லை", மீண்டும் "மனிதர்கள்" வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்ட "இரண்டாம் மரணத்திற்கு" அடைவார்கள், சிலர் முதல் மரணமே இல்லாமலும் இருப்பார்கள் (நீங்கள் சாகவே சாவதில்லை என்கிற சாத்தானின் போதனை), கிறிஸ்து எல்லாருக்காகவும் தன்னை மீட்கும் பொருளாக குடுத்திருந்தாலும், அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது போன்ற போதனைகள் "பரலோகத்து போதனைகள்"ஆக இருக்கிறதாம்!! இவைகளை கேட்டு இதன் படி நடக்கிறவர்கள் இரட்சிக்கப்படுவார்களாம்!!
இவர் சொல்லுவது பொய் என்று அடித்து சொல்ல முடியாமல் இவர் சொல்லுவது "பொய்யாகிப்போனால்" என்கிற அளவிற்கு தான் இவரின் புரிந்துக்கொள்ளுதல் இருக்கிறது!! ஒருவன் இரட்சிக்கப்படுவது தேவனின் கிரியையாக இருக்கிறது என்பது கூடவா வேதத்தை வாசிப்பவர்களுக்கு தெரியாது!!
I கொரிந்தியர் 15:55 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
முதல் மரணமே உன் கூர் எங்கே? -அன்பு
I கொரிந்தியர் 15:54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
வெளி 21:4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
இனி முதல் மரணமில்லை, முதல் துக்கமில்லை, முதல் அலறுதலுமில்லை
முதல் வருத்தமுமில்லை..... இரண்டாம் மரணமுண்டு.... -அன்பு எழுதின சுவிசேஷம்.
கிறிஸ்துவின் மஹா பெரிய ஈடுபலியையும், தேவனுடைய அன்பையும் ஞானத்தையும், குறைவற்ற அவரது திட்டங்களையும் சித்தத்தையும் கொச்சைபடுத்தி, தேவனை தான் படைத்த சிருஷ்டிகளை 'காப்பாற்றவே' முடியாத ஒரு அரைகுறை தேவனாகவும், சாத்தானை அவரைவிட ஒரு மாபெரும் வெற்றியாளனாகவும் காண்பிக்கும் முட்டாள் கிறிஸ்தவத்தின் ஒரு மோசமான எக்ஸ்டன்ஷன் தான் இந்த அன்பு.
பெரேயன்ஸ் ஒரு போதும் ஒன்றையும் போதனையாக நீங்கள் இதை பின்பற்றுங்கள் என்று சொல்லுவதில்லை!! அதை நீங்கள் தான் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்!! வேதம் இப்படி சொல்லுகிறது என்று சொல்லுகிறேன், அதை புரிந்துக்கொள்ளவோ, விட்டு விடவோ தேவன் தேவையான ஞானத்தை அனைவருக்கும் தந்திருக்கிறார் என்று நம்புகிறேன்!! வழக்கமான கிறிஸ்தவ மண்டலத்தின் போதகராக நீங்கள் உங்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!! என்ற பதிவு ஒரு அருமையான விளக்கம்.
//ஆனால் மரணம் என்பது நம்மை மிரட்டுகிற ஒரு வார்த்தையாக உள்ளது. அந்த வார்த்தையைக் குறித்து ஆதாம் அச்சம் கொள்ளாததால்தான்,//
மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் அறியாதவர்கள் தான் மரணத்தை குறித்து பயந்திருக்கவேண்டும்!! நமக்கோ கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மரணத்திற்கு பிறகு உண்டாகும் உயிர்த்தெழுதலின் விசுவாசம் தருகிறது!!
எபிரேயர் 2:14. ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், 15. ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
ஆதாமிற்கு மரணம் என்கிற அனுபவம் இல்லாததினால் அவன் அதை குறித்து அச்சமோ, சந்தோஷமோ, அல்லது வேறு எந்த பாவனையோ வெளிப்படுத்தியிருக்க முடியாது!! உங்களின் தவறான போதனையே இதுவும்!! ஆபேல் மரித்த பிறகே ஆதாமுக்கு மரணம் என்றால் என்னவென்று தெரியவந்திருக்கும்!! ஆகவே அவன் மரணத்தை குறித்து அச்சம் கொள்ளவில்லை என்பது தவறான வார்த்தைகளே!!
//எனவே நாம் ஆதாமைப் போலிராமல், “இரண்டாம் மரணம்” என வேதாகமம் சொல்வதைக் குறித்து அச்சம் கொள்ளத்தான் வேண்டும். ஒருவேளை பெரியன்ஸ் போன்ற சிலரது அதிமேலான புத்திக்கு “இரண்டாம் மரணம்” என்பது “மரணமல்ல”, அது “மரணத்தின் மரணம், systems-ன் மரணம்” எனத் தோன்றலாம். அவர்கள் சொல்வது சரியாகவே இருந்தால் மிகவும் சந்தோஷம்தான். ஆனால் ஒருவேளை தவறாகிப் போனால்?//
இரண்டாம் மரணம் என்பது என்னவென்று வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ளது!! மனிதன் இரண்டாம் முறை மரிப்பது தான் இரண்டாம் மரணம் என்பது தவறான போதனையாகும்!! ஒரு இடத்தில் அக்கினி கடல் (ஏரி) என்றும், இன்னோரு இடத்தில் அக்கினியும் கந்தகமும் இருக்கிற இடத்தை தான் "இரண்டாம் மரணம்" என்று சொல்லப்பட்டிருக்கிறது!!
வெளி 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
மனிதர்களின் பாவத்திற்கு சம்பளமாக வந்த மரணம் மற்றும் மரித்தோர் அடக்கம் செய்யப்படும் இடமான பாதாளம் (ஹேடஸ்) முற்றிலுமாக அழிக்கப்படுமாம்!! அது முற்றிலுமாக அழிக்கப்படும் என்பதற்கு அடையாளம் தான் அக்கினிக்கடல்!! அதாவது அக்கினியில் எதை போட்டாலும் அது நிலைத்திருக்காது, அது முற்றிலும் அழிந்து போகும்!!
அதாவது மரணம் என்கிற ஒரு தண்டனை முற்றிலுமாக அழிக்கப்படும்!! அதை அழிக்க உண்மையாகவே ஒரு அக்கினி கடல் தேவையில்லை என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும்!! மரணம் என்பது ஒரு நிலையே, அந்த நிலையை தூக்கி அக்கினி கடலில் தள்ளப்பட முடியுமா?? முடியாதே!! மரணம் முற்றிலும் அழிக்கப்படுவதை தான் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது!!
அடுத்து,
வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
முந்தய வசனத்தில் வெறும் அக்கினிகடலாக இருந்தது இங்கே அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல் என்று ஆகிவிட்டது!! சற்றே மேலே வெளி. 21:4ல் சகலத்தையும் புதிதாக மாற்றிய தேவன் ஏனோ 21:8ல் பாவம் நிறைந்த இத்துனை பேரை வைத்துவிட்டார் என்று கேள்வி எழும்புவதில்லையா??
எப்படி மரணம் என்கிற ஒரு சிஸ்ட்டத்தை அழிக்கிறாரோ, அப்படியே சாத்தானின் கிரியைகளான இவைகளையும் தேவன் முற்றிலுமாக அழிக்கிறார்!! அவ்வளவே!!
இரண்டாம் மரணம் என்பது மனிதர்களுக்கு என்று நேரடியாக ஒரு வசனமும் கிடையாது!! வெளிப்படுத்தின விசேஷத்தின்படி, முற்றிலும் அழிக்கப்படுவதையே இரண்டாம் மரணம் என்று எடுத்துக்கொள்ள முடியும்!! அது மனிதர்களுக்கு அல்ல, Systemக்கு தான்!!
//சாத்தான் சொன்னது சரியாக இருக்கும் என நம்பித்தான் ஆதாம் ஏமாந்து போனார். அதுபோலவே பெரியன்ஸ் சொல்வது சரியாக இருக்கும் என நம்பி நாம் ஏமாந்து போகக்கூடாதல்லவா? எனவேதான் “இரண்டாம் மரணம்” என்பது இப்படியாகவும் இருக்க வாய்ப்புள்ளது, அன்று சாத்தான் சொன்னதை நம்பி ஆதாம் ஏமாந்ததைப்போல் இன்று பெரியன்ஸ் சொல்வதை நம்பி நம்மில் யாரும் ஏமாந்து போகவேண்டாம் என நான் எச்சரிக்கிறேன்.//
சாத்தான் சொன்னதை நம்பி ஆதாம் ஏமாந்து போனார் என்பதற்கு ஒரு வசனமும் இல்லை!! இரண்டாம் மரணம் என்றால் மனிதர்கள் இரண்டாம் முறை மரிக்கிறார்கள் என்கிற நூதன போதனை கிளப்பிய உங்களிடம் தான் வாசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!! தேவனால் முடியாது என்று இன்னோரு கோனத்தில் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்!! பெரேயன்ஸ் சொல்லுவதை நம்பி தான் இரட்சிப்பு அல்லது மரணம் என்று நீங்கள் சொல்லுவது அபத்தத்திலும் அபத்தம்!! வேதம் எதற்கு இருக்கு, வசனங்கள் எதற்கு இருக்கு, ஏன் தேவனின் அன்பு எதற்கு இருக்கிறது!!
தேவனால் எல்லாரையும் காப்பாற்ற முடியவே முடியாது என்று எப்படியாவது சாதிக்க வேண்டும் என்பது தான் சாத்தானின் முயற்சி!! இப்படி பட்ட போதனைகள், அதாவது "எல்லாருக்கும் இரட்சிப்பாஆஆஆ" என்கிற ஒரு கேள்வியும், முதல் மரணம் அதில் தப்பித்தால் என்ன, அதான் இரண்டாம் மரணம் இருக்கிறதே!! இப்படி பட்ட போதனைகள் தேவனின் அன்பை கொச்சைப்படுத்துகிறதே தவிர வேரு ஒன்றும் இல்லை!! எதையாவது ஒன்று சொல்லி, தேவனால் அனைவரையும் இரட்சிக்க வாய்ப்பே இல்லை என்பது தான் கேள்விகளாக வரும்,
ஒரே தரம் தான் மரணமா? (அது எப்படி, அதான் இரண்டாம் மரணம் இருக்குதே)
ஆனால் வேதம் நிச்சயமாக சொல்லுவது,
ஒரே தரம் மரணம், அதன் பின் உயிர்த்தெழுதல்!! பாவத்தின் சமபளம் மரணம், தேவனின் கிருபைவரமோ கிறிஸ்துவினால் எல்லாருக்கும் நித்திய ஜீவன்!!
இவைகளுக்கு விரோதமாக பேசுவோர் பேசட்டும்!!
//மனிதர்களின் அழிவை நான் விரும்புவதால்தான் நான் அழிவைக் குறித்து சொல்கிறேனாம், மனிதர்கள் மேல் அன்புகொண்டு அவர்களின் ஜீவனையே பெரியன்ஸ் விரும்புவதால் ஜீவனைக்குறித்து பெரியன்ஸ் பேசுகிறாராம்.//
அவர்களின் ஜீவனை அல்ல, அவர்கள் ஜீவனோடு இருக்கவே பெரேயன்ஸ் விரும்புவதால் ஜீவனைக்குரித்து பேசுகிறேன்!! உங்கள் இருதயத்தில் இருப்பது தான் வாயிலும் வரும், எழுத்திலும் வரும்!! தேவன் சொன்ன எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதில் எனக்கு அத்துனை நம்பிக்கை, அதை கொடுத்தவர் தேவனே!! தேவன் எல்லாருக்கும் நித்தியஜீவனை தருகிறார் என்றால் அதிலும் பலருக்கு வருத்தமாக இருக்கிறது போல்!!
//இவர் சொல்வதை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். ஆனால் இவர் சொல்வதை நம்பி, ஒருவேளை சாத்தான் சொன்னதைப் போல இவர் சொல்வதும் பொய்யாகிப்போனால் நம் நிலை என்னாகும் என்பதை சிந்தித்துப்பார்க்கும்படி அனைவரையும் வேண்டுகிறேன்.//
சிலர் தேவனின் அன்பை பேசத்தான் செய்வார்கள், நான் அனுபவிக்கிறேன்!! சிலருக்கு மனிதர்களின் கிரியையில் தான் மேன்மை பாராட்ட முடியும், நான் தேவனின் கிருபையில் மேன்மைப்பாராட்டுகிறேன்!! தேவனுக்கு மேல் தன்னை வைத்துக்கொள்வோர் தேவனின் அன்பை புரிந்துக்கொள்ள மாட்டார்கள், ஆனாலும் தேவன் அவர்கள் எல்லாருக்கும் புரிய வைப்பார், அப்பொழுது நிச்சயமாக புரிந்துக்கொள்வீர்கள்!!
எபிரெயர் 9:27 ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, ...
//இவ்வசனத்தின்படி வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நடக்கவேண்டுமெனில், பின்வரும் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக்கூடாது. 1. லாசரு மற்றும் சூனேமியாளின் மகன் ஆகியோர் 2 தரம் மரித்தது. 2. ஏனோக்கு மரணத்தைக் காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்டது.//
இந்த வசனத்தை வார்த்தைக்கு வார்த்தை சொல்லிவிட்டதாக அன்பு அவர்கள் நினைக்கிறார்கள்!! லாசருவும் சுனேமியாளின் மகன் ஆகியோர் உயிர்த்தெழுந்தார்கள் ஆனால் நியாயத்தீர்ப்படைந்ததாக எழுதப்படவில்லை!! அவர்கள் ஏன் உயிர்ப்பிக்கப்பட்டார்கள் என்பதையும் மேலே பதிவுகளில் தெளிவுப்படுத்திய்ருக்கிறேன்!! நியாயத்தீர்ப்படைய தேவன் ஒரு நாள் (தேவனின் நாள்) குறித்தி வைத்திருக்கிறார்!! அந்த நாளில் அவர் தாம் (தேவன்) நியமித்த மனுஷனை (கிறிஸ்து இயேசு) கொண்டு நீதியாக நியாயம்த்தீர்ப்பார்!! லாசரு மற்றும் சூனேமியாளின் மகன் ஆகியோர் மரித்தத்திலிருந்து தான் எழுந்தார்களே தவிர நியாயத்தீர்ப்படைய அல்ல!! அவர்கள் நியாயத்தீர்ப்படைய எழும்புவார்கள்!! வேதத்தில் சொல்லப்பட்ட உயிர்த்தெழுதல் கிறிஸ்து இயேசுவினால் அனைவரையும் எத்துனை நாட்கள் ஆகியிருந்தாலும் உயிர்ப்பிக்க முடியும் என்பதை நாம் புரிந்துக்கொள்ளவே நடந்தேறியிருக்கிறது!!
அன்பு அவர்களின் 2ம் மரண கோட்பாட்டின் படி பார்த்தோமென்றால் லாசரு மற்றும் சுநேமியாளின் மகன் இனி மீண்டு வர முடியாமல் அழிந்து அல்லவா போகியிருக்க வேண்டும்!! அது தானே 2ம் மரணம் என்று வேதத்தில் இருப்பதாக அன்பு சொல்லுகிறார்!!
இது மாத்திரம் இல்லை, பவுல் எழுதியதும் தப்பாகிவிடும், அதாவது,
ஏனென்றால் கிறிஸ்துவிற்கு முன்பே லாசரு இன்னும் அநேகர் எழுந்து விட்டார்களே!! ஆகவே லாசருவோ சூனேமியாளின் மகன் எழுந்தது நியாயத்தீர்ப்பிற்கான உயிர்த்தெழுதலாக இல்லாமல் கிறிஸ்துவின் இந்த வசனத்தை நிரூபிக்க நடந்த ஒரு செயலே, எந்த வசனம்?
யோவான் 5:28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
இப்படி சொல்லியதை எல்லாம் அப்போஸ்தலர்களுக்கு முன் செய்து அவர்களை திடப்படுத்தி விசுவாசமடையசெய்யும் நோக்கமே லாசரு போன்றோரின் தற்காலீகமான உயிர்த்தெழுதல்!!
யோவான் 11:11. இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். 12. அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். 13. இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக் குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரை செய்து இளைப்பாறுகிறதைக் குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள். 14. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி;
லாசருவின் உயிர்த்தெழுதல் நிரூபித்த ஒரு விஷயம் யோவான் 5:28!!
அடுத்து இயேசு கிறிஸ்து லாசருவுடன் இருந்திருந்தால் அவன் மரித்திருக்க மாட்டான் என்று இந்த பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது!! அப்படி அவன் மரிக்காமல் போயிருந்தால் கிறிஸ்துவின் மகிமையையும், அவர் நிகழ்த்த போகும் யோவான் 5:28ஐ அப்போஸ்தலர்கள் கண்டிருக்க முடியாது, அதை தான் கிறிஸ்துவும் சொல்லுகிறார்,
யோவான் 11:15. நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
இப்படி தான் உயிர்த்தெழுதல் என்று சிலரை அவர் எழுப்பினார்!! இன்றைய நவீன ஊழியர்களுக்கும் இந்த வல்லமை இருப்பதாக பலர் தாங்களாகவே சொல்லிக்கொள்கிறார்கள்!!
அடுத்து, ஏனோக்கு மரணத்தை காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்டது!! ஏனோக்கு யாருடைய மரணத்தை காணாமல் போனான்!! தன் மரணத்தையா? தன் மரணத்தை காணும் யாராகிலும் இருந்தால் சொல்லுங்கள்!! எடுத்துக்கொள்ளப்பட்டது என்கிற வார்த்தை எதை சொல்லுகிறது? ஒரு வேளை ஏனோக்கு சாகாமலே பரலோகத்திற்கு சென்று விட்டார் என்று எழுதப்பட்டிருந்தால் நிச்சயமாக இயேசு கிறிஸ்து வேதத்தில் இப்படி சொல்லியிருக்க மாட்டார்!!
பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை என்று இயேசு கிறிஸ்து பொய் சில்லியிருக்கிறார் என்று சொல்லுகிறது அன்பு அவர்களின் ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சம்பவம்!!
இவ்வசனத்தில் “மரித்தவர்களை” நியாயந்தீர்க்கப்போகிற இயேசு எனச் சொல்வது எபிரெயர் 9:27-க்கு பொருத்தமாயுள்ளது; ஆனால் “உயிரோடிருக்கிறவர்களை” அதாவது “ஒருதரம்கூட மரிக்காமல் இருப்பவர்களை” நியாயந்தீர்க்கப்போகிற இயேசு எனச் சொல்வது எபிரெயர் 9:27-க்கு முரணாகத்தான் உள்ளது.
2. 1 கொரி. 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.//
உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் என்பதில் "மரித்திருப்பவர்களை" நியாயம் தீர்க்க முடியாது!! இது போன்ற இன்னோரு வசனத்தை பார்ப்போம்,
பிலிப்பியர் 2:10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
ஆஹா.... பூமியின் கிழானோரின் (மரித்தோரின்) முழங்காலும் முடங்குமாம்!! அது எப்படி!! உயிர்த்தெழாத வரை அப்படி சாத்தியமே இல்லை!! ஆக 2 தீமோத்தேயு 4:1ல் "உயிரோடிருக்கிறவர்கள், மரித்தவர்கள்" எல்லாருமே உயிரடைந்த பிறகே நியாயம் தீர்க்கப்பட முடியும்!!
அது தான் அந்த இரகசியம் 1 கொரிந்தியர் 15:51ல் சொல்லப்பட்ட இரகசியம்!! ஒரே தரம் மரிக்க வேண்டும் என்று பவுல் சொல்லி விட்டு இங்கே அதே ஆவியில் மரிக்காமலும் இருக்க முடியும் என்று பவுல் ஒன்றும் தன் சொந்த சரக்கை விடவில்லை!! உயிரோடு இருப்போர் அவரின் குறித்த நாளில் மறுரூபமாக்கப்படும் கிரியையே மரித்து உயிர்த்தெழுவது தான்!! இந்த சரீரத்தில் இல்லாமல் வேறு ஒரு சரீரத்திற்கு வருவதே "மரிக்காமல்" நடக்காது!! இந்த கிரியை நொடிப்பொழுதிலோ, ஒரு நிமிடத்திலோ நடக்கும் ஒரு கிரியையாக இருக்கலாம்!! மரணம் என்றாலே "நாம்" இல்லாமல் போவது தானே!! அப்படி என்றால் மறுரூபத்தில் இந்த "நாம்" இல்லை தானே!! மற்றவர்கள் போல் நித்திரை (மரணம்) அடைந்து நரகத்தில் (ஹேடஸில்) வைக்கப்படாமல் நொடிப்பொழுதிலேயே மறுரூபமாக்கப்படுவோம் என்கிறார் பவுல்!! இதில் ஒரு தவறும் இல்லை!! மறுரூபம் ஆவதே இந்த "நாம்" இல்லாமல் போவது தானே!!
எந்த வசனமும் ஒரே தரம் மரித்து..... என்பதை எதிர்ப்பதாக இல்லை, அன்பு அவர்களின் புரிந்துக்கொள்ளுடதலை தவிர!!
மேலும் 2 தீமோத்தேயு 4:1ல் "ஒரு தரம் கூட மரிக்காமல்" உயிரோடிருக்கிறவர்கள் என்று அன்பு எழுதினால் வசனம் அப்படி மாறி விடாது!! உயிரோடிருக்கிறவர்கள் உயிர்த்தெழுந்தவர்களாகவும், மரித்தவர்கள் மறுரூபமடைந்தும் நியாயத்தீர்க்கப்படுவார்கள்!! வசனத்தின்படி மரித்தவர்களை நியாயம் தீர்ப்பதாக போட்டிருப்பதையும் அன்பு அவர்கள் அப்படியே எடுத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை!!
//“இரண்டாம் மரணம்: ஒரு தெளிவு” திரியைத் துவக்கி ஒரு பதிவு பதித்து, “அடுத்த பதிவு தொடரும்” என பெரியன்ஸ் அறிவித்துள்ளார். இதன்பின் சுமார் 2 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் அடுத்த பதிவு வரவில்லை. ஒருவேளை தற்போது பெற்ற “தெளிவு” மீண்டும் கலங்கிவிட்டதா, அல்லது இன்னும் அதிகமான “தெளிவான தெளிவை” தேடிக்கொண்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை.//
உங்களுக்கு சில விஷயங்கள் தெளிவு பெற ஆண்டுகள் ஆயிற்று என்பதை மறந்து விட்டு எதையும் பதிவு செய்யாதீர்கள்!! இரண்டாம் மரணத்தை முதலில் நீங்கள் சொல்லுவது போலவே நானும் நம்பிக்கொண்டு இருந்தவன் தான்!! வேதத்தின் வெளிச்சத்தில் அது தவறு என்று இப்பொழுது உணர்ந்துக்கொண்டேன்!! முந்தய பதிவை மாற்ற எனக்கு மனமில்லாமல் விட்டு விட்டேன்!! பழைய பதிவுகளை தோண்டி எடுக்கும் அவசியம் இல்லை!! கத்தோலிக்கனாக தானே பிறந்தீர்கள் என்று அப்போது உள்ளதை கூட கேட்டாலும் கேட்பீர்கள் போல்!!
என் தினசரி வங்கி வேளையை முடித்து விட்டு கிடைக்கும் நேரத்தில் பதிவுகளை தருகிறேன்!! நான் முழு நேர ஊழியக்காரன் கிடையாது!! ஒரு வேளை அப்படி ஒரு சூழல் தேவன் எனக்கு தந்தால் பார்க்கலாம்!! அது வரையில் எனக்கு நேரம் கிடைக்கும் போது எந்த விஷயம் எனக்கு தோன்றுகிறதோ அதை பதிவு செய்கிறேன்!! நான் எழுதுவதும் எழுதாமல் இருப்பதை எல்லாம் ஒரு பெரிய குற்றம் போல் எழுத தேவையில்லை என்று நினைக்கிறேன் அன்பு அவர்களே!!
கிறிஸ்துவின் வருகையின் வெளிச்சம் இன்னும் அதிகமான புரிந்துக்கொள்ளுதலை கொண்டு வரும் என்று நம்புகிறவன் நான்!! இன்னும் கல்லறைகளுக்காகவே சபைகளில் ஒட்டிக்கிடக்கும் பலரின் "தெளிவை" விட என் தெளிவு போதுமானது என்று நினைக்கிறேன்!! எனக்கு இப்படி பழசையெல்லாம் தோண்டி அடுத்தவனை எப்படி வீழ்த்தலாம் என்கிற எண்ணமெல்லாம் கிடையாது!! நீங்களும் அப்படி செய்யாமல் இருந்தால் சரியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்!!
ஐய்யா அன்பு அவர்களே, நான் சென்ற பதிவில் எழுதியது போல் எனக்கு நேரம் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கும் போது, பழைய பதிவுகளை தேடி நீக்க எனக்கு நேரம் இல்லை!! மேலும் வந்து வாசிப்போர் புதிய பதிவுகளில் தான் நாட்டம் செலுத்துவார்களே தவிர, நீங்கள் செய்வது போல், அப்போ இப்படி எழுதுனீங்கள் இப்போ இப்படி எழுதுறீங்களே என்கிற அளவிற்கு பழைய பதிவுகளை வாசிப்பது இல்லை!! மேலும் இது தளம் என்பதால் பதிவுகளை நீக்க முடியும்!! இதே புத்தக வடிவில் அச்சேறி அநேகர் வீட்டில் இது போன்றவை புத்தகமாக இருந்தால் என்ன செய்ய முடியும்?? ஒவ்வொரு வீடாக சென்று நான் இப்பொழுது கருத்தை மாற்றிக்கொண்டேன், ஆகவே நீங்கள் என் புத்தகம் வைத்திருந்தால் அதை குப்பை தொட்டியில் கொண்டு போய் போடுங்கள் என்று சொல்ல முடியுமா!! புத்திசாலியான வாசகர்கள் கருத்து மாற்றத்தை புரிந்துக்கொள்ளும் நிலையில் தான் இருப்பார்கள், என்னை குற்றம் சுமத்த நினைப்பவர்களை தவிர!! இருக்கிறதை விட்டு பறந்து போனதை குறித்து பேசி என்ன பிரயோஜனம்!! இப்பொழுது நடக்கும் விவாதங்களை எங்கள் கருத்தாக எடுத்துக்கொண்டு நீங்கள் விவாதித்தால் போதுமானதாக இருக்குமே!!
சில சமயம் பழைய பதிவுகளை நீக்கினோமென்றால் தொடர்புடைய மற்ற பதிவுகள் பதிக்கப்படும் என்கிற நோக்கத்தில் அவைகளை நீக்க மனமில்லாமல் இருக்கிறேன்!!