//சோலும் பெரேயன்ஸும் வேத வசனங்களை வியாக்கியானம் செய்வதைப் பார்க்கும் போது இது “நார்மலா” இல்லையே என்று எனக்கு சில சமயம் தோன்றும்!//
நாங்களும் உங்களைப்போல நார்மலாக, ஒரு சாதாரண 'விசுவாசியாக' திரித்துவைதையும், நரகத்தையும், ஆத்துமா அழியாது என்பதையும், ஊழியக்காரன் என்றால் பெரிய பிஸ்தா என்றும், நம்பிக்கொண்டு வஞ்சிக்கப்பட்டுக்கொண்டுதான் இருந்தோம்.
உளையான சேறு பன்றிகளுக்கு நார்மல்தான், ஆனால் எங்களுக்கு நாற்றம் சகிக்காததால் நார்மல் நரக(ல்) நாற்றத்திலிருந்து அப்நார்மலான சுகந்த வாசனையான எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதில்தான் தேவ அன்பு வெளிப்படும் இடத்துக்கு தேவகிருபையினால் கொண்டுவரப்பட்டோம்.
17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
இதுவரை எந்த நாயாவது ஒரு செத்த நாயையாவது எழுப்பியிருக்கிறதா?
இலவசமாய் காணிக்கையே வாங்காமல் எந்த ஊழியம் நடக்கிறது?
எங்கே வியாதியுள்ளவர்களை முழுமையாக சொஸ்தமாக்கும் எவனையாவது காண்பியுங்கள். கோவை ஜி ஹெச்சுக்கு அனுப்புங்கள்.
உங்களுக்குச் சொல்லப்பட்டதென்றால் செய்யுங்களேன் ஏன் முடியவில்லை?
//பிரசங்கிதான் நாத்திகனாயிற்றே உங்களைப் பொறுத்தவரை... அவன் எப்படி 'நீதி' மொழிகளை எழுத முடியும்.//
சாலமோனின் ஞானம் தேவனிடமிருந்து வந்ததல்லவா?//
மரணம் பற்றி எழுதினால் அந்த ஞானம் பிசாசிடமிருந்து வந்தது, மற்றவை தேவனிடமிருந்து வந்ததாக்கும். மறை கழண்ட கேஸ்.
என்னிடம் போதனைகள் செய்ய சோஃபாவும் இல்லை, தேவன் என்னை டிவி நடத்தவும் சொல்லவில்லை!! எனக்கு அது போன்ற ஒரு சிந்தையை தேவன் பதியவும் இல்லை!! ஆகவே உங்கள் இந்த கருத்தே உங்கள் சோஃபா ஊழியர்களுடன் என்னை ஒப்பீட்டு பேசி அவமதித்து விட்டீர்கள்!! உங்கள் சோஃபா ஊழியர்களின் கபடத்தனத்தையும், பிறரிடம் காசு பரிக்கும் (தேவன் தான் கேட்க்கிறார் என்று சொல்லி) தந்திரமும் நாங்கள் வெளிப்படுத்திக்கொண்டு தான் இருப்போம்!! நாங்கள் ஒரு போதும் அவர்களை நெருங்க முடியாது (கபடத்தனத்தையும் தந்திரத்தையும் தான் சொன்னேன்)!! புரீதுங்களா!!!!!!!
அது என்ன 30 வயது கணக்கு என்கிறீர்களா!! 30 என்பது ஏனோ எனக்கு பிடித்திருக்கிறது!! கிறிஸ்து இயேசு ஊழியத்திற்கு வந்த வயது 30!!
லூக்கா 3:22. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. 23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார்.
I நாளாகமம் 23:3 அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பேர்பேராக எண்ணப்பட்டார்கள்,
II சாமுவேல் 5:4 தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்.
எண்ணாகமம் 4:3 ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகையிடுவாயாக.
இப்படி தான் 30க்கு முக்கியத்துவம் தந்திருக்கிறேன், ஒரு வேளை 50க்கூட இருக்கலாம்!! மொத்தத்தில் பூரண மனிதனாக இருக்கும் இந்த வயதை தான் தேவன் தரவிருக்கிறார்!! ஆதாம் அப்படி தான் படைக்கப்பட்டான்!! தாவீது ராஜாவாக ஆனான்!! கிறிஸ்து ஊழியத்திற்கு வந்தார்!!