//பெரேயன்ஸ்: நான் ஒரு ஏமாளி. சாத்தானால் வஞ்சிக்கப்படுவது என் உரிமை. முட்டாள்தனமாகப் பேசுவது என் கடமை.
சோல்:நானும்தான். என்னிடம் இன்னும் கூடுதலாக சில பல சிறப்புத் தகுதிகளும் இருக்கிறது!//
பிரசங்கியின் புத்தகம் எழுதியது ஒரு நாத்திகன் என்ற ஒரே பதிவே போதும் சாத்தானால் யார் வஞ்சிக்கப்பட்டுகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு.
எங்களுக்குத் தெளிந்த புத்தியைக் கொடுப்பதற்கு எந்தத் லூசுக்க்க் கூஊஊஊட்ங்களுடைய Recommandation தேவையில்லை. வேசித்தன மார்க்கத்தின் மயக்கத்தில் இருந்துகொண்டு தெளிவைப் பற்றி பேசுவது நல்ல ஹாஸ்யம்...
சோல் லிடம் 'கூடுதலாக' சில பல சிறப்புத்தகுதிகள் இருப்பதைக் கண்டுபிடித்தது கில்லாடித்தனம்தான்.
கேப்பையில் நெய் வடியுது என்றால் கே. கூ* கூட்டத்துக்கு கொண்டாட்டம்தான்.
எல்லாருக்கும் இரட்சிப்பாஆஆஆஅ? என்கிற அளவிற்கு பிசாசின் வஞ்சகத்தில் சிக்கி இருக்கிறீர்கள் கோல்டா!! வசனத்தை பேசினால் அது நாத்திகன் எழுதினது, இது விபச்சாரக்காரன் எழுதியது என்று ஒதுக்குவாராம், ஆனால் சோஃபாவில் அங்கி போட்டு உட்கார்ந்து போதிப்பவர் தான் பரலோகம் சென்றதும், இயேசு சுவாமி தரிசனம் ஆனதை குறித்தும் சொல்லுவாராம், அது எல்லாம் நம்பும் அதி புத்திசாலியாகவே இருந்து விட்டு போங்கள்!! நாங்கள் கிறிஸ்துவின் பலியையும், தேவனின் கிருபையையும் அவரின் வார்த்தைகளை நம்பி உங்கள் கேடு கெட்ட கூட்டத்தின் பார்வையில் ஏமாளியாக, வஞ்சிக்கப்பட்டவனாக இருந்துவிட்டு போகிறேன்!! எனக்கு உங்கள் பார்வை தேவையில்லை, என் தேவனின் பார்வை போதும், அவரின் கிருபை போதும்!!
தேவனே கோல்டாவிற்கு இன்னும் அதிகமான ஊழியர்களை தாருங்கள், ஏனென்றால் வசனங்களை இவர் நம்புவதில்லை, ஆனால் சோஃபாக்காரர்கள் எதை சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்!!
எடுத்துக்காட்டாக, தேவன் தீமையை அனுமதிக்கிறார் என்றால் அதன் பின்னும் அவரில் இருக்கும் அன்பை தான் அவர் எங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்!!//
இப்ப டெல்லியில் குண்டு வெடித்தது. இதில் என்ன நன்மையை, தேவ அன்பைப் பார்க்கிறீர்கள்?
பிசாசு இன்னும் பூமியில் கிரியை செய்யும்படி அனுமதித்திருக்கிறார். அதற்காக பிசாசு செய்யும் தீமைகளையெல்லாம் ஏன் ஆண்டவரே செய்கிறார் என்பது போல் சொல்கிறீர்கள்?//
ஏன் டெல்லியில் குண்டு வெடித்தது. சா சு செ. மற்றும் வி.செ போன்ற தே க ஊழியர்கள் ஏன் இது பற்றி எச்சரித்து, ஜெபித்து சாத்தானைக் கட்டியிருக்கலாமே. வி. செ யின் ஊரிலேயே துப்பாக்கிச் சூடு. ஏன் அந்த தீர்க்க தரிசன நாய் இது பற்றி எச்சரிக்கவில்லை. ஓஹோ சுனாமி, பூகம்பம் போன்ற பெரிய விஷயங்களைத்தான் அறிவிப்பானோ.
பூமியில் நாம் இருக்கப்போகும் சில வருடங்களில் என்ன நன்மை? தேவ அன்பு உயிர்த்தெழுந்து காலா காலமாக வாழப்போகும் ராஜ்ஜியத்தில் உணரப்படும்.
வழக்கமாக வந்து போகிற பூகம்பம், சுனாமியை தான் நான் சொல்ல முடியும், திடீர் என்று குண்டு வெடிப்பதும், கலவரம் வருவது எல்லாமா எனக்கு தெரிய போகிறது என்கிறார் சோஃபா ஊழியர்!!
இவர்கள் சோஃபா தெய்க்கிறதற்கு தான் லாயக்கு!! ஜப்பான் என்றால் சுனாமி வரும் என்பது காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்!! மேகம் கூடினால் மழை வரும் என்று கூட சொல்லி தன்னை தீர்க்கதரிசிகள் என்று சொல்லுவார்கள், அதிலும் கிறிஸ்துவே இவர்களை மேல் வீட்டு அறையில் சந்தித்ததாக சொல்லி இதை சொல்லுவார்கள்!! அப்ப தானே கோல்டா போன்றோர் அதை நம்புவார்கள்!!
//அப்படியா? வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களுமா? கல், மண் எரியுமா?//
அக்கினி கடலில் கொண்டு போய் போட்டு பாருங்கள், இந்த கேள்வி வராது!! அக்கினி கூட இல்லை, வெப்பமே போதும்!! அமெரிக்க இரட்டை கோபுரத்தை பற்றி வாசித்ததே கிடையாதா??
//அத்துடன், மோசே பார்த்த முட்செடி எரிந்தும் அழிந்து போக வில்லையே?//
அடிக்கடி உங்கள் தகுதியை சுட்டி காண்பிக்கிறீகள்!! அதான் வசனம் சொல்லுகிறதே!! அடடா, வழக்கம் போல், ஓடிப்போனவன் எழுதியது தானே என்று இதையும் ஒதுக்கி விடாதீர்கள், என்ன!!
யாத்திராகமம் 3:3 அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான்.
அதான் அற்புதகாட்சி என்று வேதத்திலேயே சொல்லியிருக்குதே!! கேன்சர் கட்டியை பிடிங்கி எரிகிறார், சர்க்கரை நோயை தூக்கி எரிகிறார் போன்ற "அற்புதங்களை" நம்புவீர்களே, இதை நம்ப மாட்டீர்களா??!!
புரியாது, இப்போ என்ன தான் முக்கினாலும் புரியாது!! ஏனென்றால், உங்களுக்கு காதிருந்தும் கேக்காது, கண் இருந்தும் பார்க்காது!! நீங்கள் நிக்கொதேமு கூட்டத்தார்!!
பார்த்தா கைய்யில் வேதத்தை வைத்துக்கொண்டு வாரம் தோறும் சபைக்கு (ஏதோ ஒரு கட்டிடத்திற்கு தான்) போவீர்கள்!! அங்கே போனால் நேத்து இயேசு வீட்டுக்கு வந்தார் என்று ஒருவர் சொல்லுவார், இன்னோருவர், நான் பரலோகத்துக்கு போய்ட்டு வந்தேன் என்பார், அதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தால் "இவிங்க சொல்றாய்ங்களே" அது புரியாது!!
//மனிதன் பூமியில் இருக்கும் வண்ணமாகவே படைக்கப்பட்டான் பரலோகத்துக்கு அல்ல என்றால் கொஞ்சம் பேர் உயிர்த்தெழுந்து பரலோகம் செல்வார்கள் என்று நீங்கதான் சொன்னீங்க? போவாங்களா, போக மாட்டாங்களா? //
பரலோகத்திற்கு ஒரு சிறு மந்தை மாத்திரமே!! யார் என்பதெல்லாம் நீங்கள் சபைகளில் பிரசங்கிப்பது போல் அல்ல!! இந்த சபை தான் உங்களை பரலோகத்திற்கு கூட்டி செல்லும் என்று!! அந்த சிறு மந்தையின் தேர்வு தான் இப்பொழுது நடந்க்கொண்டிருக்கிறது!! மனிதன் நிச்சயமாகவே பூமியில் இருக்கும் வண்ணமாகவே படைக்கப்பட்டான்!! ஆகவே தான் அவனை பலுகி பெருகி பூமியை நிறப்புங்கள் என்று தேவன் சொல்லுகிறார்!! அந்த மனிதகுலத்திலிருந்து ஒரு சிறு மந்தை மாத்திரமே பரலோகம் போகும்!! உங்கள் சோஃபா ஊழியர்கள் சொல்லுவது போல் தசமபாகம் கொடுத்தாலோ, காணிக்கை கொடுத்தாலோ, அல்லது சபைக்கு வாரம் தவராமல் வருவோர் எல்லாம் பரலோகத்திற்கு போக முடியாது!! போவாங்கே ஆனா போக மாட்டாங்கே!!
//ராஜ்யத்தில் எல்லோரும் தேவ தூதர்கள் போல் இருப்பார்கள். கல்யாணம், காட்சி எல்லாம் கிடையாது என்றும் சொல்றீங்க. அவன் பலுகிப் பெருகி வாழும்படிதான் படைக்கப்பட்டான் என்றும் சொல்றீங்க. எதுதான் சரி? //
உங்கள் சோஃபா ஊழியர்களுக்கு இது எல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை!! இந்த பூமியில் எத்துனை மனிதர்கள் இருக்க வேண்டும் என்பதெல்லாம் தேவன் அறிந்திருக்கிறார், அந்த எண்ணிக்கை வரைக்கும் மட்டுமே தான் பலுகி பெருக முடியும்!! உயிர்த்தெழுதலுக்கு பிறகு பலுகி பெருக யாரையும் சொல்லவில்லை!! அப்ப இருக்கும் ஆசீர்வாதங்கள் வேதத்தில் நிறம்ப இருக்கிறது!!
//மிருகங்கள் உயிர்த்தெழாது என்றும் சொல்றீங்க.அப்ப ராஜ்யத்தில் மனிதன் ஆண்டு கொள்ளும்படியாக,சமுத்திரத்தின் மச்சங்கள் ஆகாயத்துப் பறவைகள், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்கள் எல்லாம் எங்கிருந்து வரும்?//
மிருகங்கள் உயிர்த்தெழும் என்று வேதம் சொல்லவில்லை!! அவ்வளவே!!
//பி.கு: இப்ப சில மாதங்களாக அங்கு உபவாச ஜெபக் கூட்டம் நடக்கவில்லை. ஒரு தீர்க்கதரிசன மையம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் Oct 7-10 ஒரு தீர்க்கதரிசன மாநாடு அங்கு நடக்கப்போகிறது. அதன் பின் ரெகுலராக உபவாச ஜெபக் கூட்டம் நடக்கும் என்று நினைக்கிறேன். //
கோமாளித்தனத்தின் உச்சக்கட்டம்!! தீர்க்கதரிசனம் (தேவன் தந்த வார்த்தைகள்) முடிந்து போய் விட்டது!! இனியும் சுனாமி வருது, பூகம்பம் வருது என்று சொல்லுவதை தீர்க்கதரிசனம் என்று சொல்லி வியாபாரமாக்கிறார்கள்!! அரசியல் மாநாடு போல் இப்ப தீர்க்கதரிசன மாநாடு எல்லாம் நடக்குது!! உபவாசமே உன் வீட்டின் உள்ளே இருந்து வழக்கம் போல் முக வாடல் கூட இல்லாமல் இருப்பதாக தான் வேதம் சொல்லுகிறது!! அதாவது தான் உபவாசம் இருக்கிறேன் என்பதே வெளியில் தெரியாமல் இருப்பதும், அதே வேளையில் அந்தரங்கத்தில் இருக்கும் பிதா அதை அறிந்துக்கொள்ளும்படியாக இருப்பதே உபவாசம்!! அதை விட்டு விட்டு போஸ்டர் அடித்டு, டிவியில் விளம்பரப்படுத்தி, பத்திரிக்கைகளில் போட்டு, நாங்க உபவாசம் இருக்கிறோம் என்பது அரசியல்வாதிகல் உண்ணாவிரதம் இருப்பது போல்!!
மத்தேயு 6:17. நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. 18. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
தீர்கதரிசிகளுக்கு வசனம் தெரியாது ஆனால் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள நிச்சயமாகவே தெரியும்!! மனுஷர்களுக்கு காணப்படாமல் உபவாசம் செய் என்கிறார் இயேசு கிறிஸ்து, ஆனால் இந்த கூட்டம், உபவாசத்தை தம்பட்டம் அடித்து செய்கிறதாம்!! ஆவி களிக்கூராமல் வேறு என்ன செய்யும்!! டிச்கோத்தேயில் அடிக்கப்படுகிற ட்ரம்ஸ்க்கு ஆட்டம் போடுவது போல் தான் இப்படி பட்ட கூட்டங்களில் ஆட்டம் போடுகிறீர்கள்!!
தீர்க்கதரிசன மையம் கட்டி அதில் என்ன தீர்க்கதரிசிகளை (குறி சொல்லுவது தான்) வளர்க்க போகிறார்களோ!!??
soul: 12. கிறிஸ்து சபைக்காக மட்டும் வேண்டுதல் செய்தார், இப்போதும் பரிந்து பேசுகிறார். உலகத்துக்காக அல்ல.... எனவே உலகத்துக்காக ஜெபிப்பது தேவ சித்தமல்ல.
---
என்ன கொடுமை இது? இதுவும் ரே ஸ்மித் சொன்னதுதானா?
//
ஒரு வேளை சாது அல்லது விசெ எழுதிய தீர்க்கதரிசன புத்தகங்களில் இது இல்லாமல் இருக்கலாம், ஆனால் வேதத்தில் இந்த வசனத்தை கிறிஸ்துவே சொல்லியிருக்கிறார்!! ரே ஸ்மித் தன்னை ஒரு போதும் கிறிஸ்து என்று சொன்னதில்லை!! வசனம் எல்லாம் உங்களுக்கு கொடுமையாக தான் இருக்க முடியும்!! உங்கள் கூட்டத்தின் சாயம் வெளுத்துவிடும் நாள் சமீபித்துக்கொண்டிருக்கிறது!!
யோவான் 17:9 நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.
உங்களை போன்ற உலகத்தாருக்காக அவர் வேண்டுதல் செய்யவில்லை!! அதான் உங்களுக்கு விஷயங்கள் புரிவதில்லை!! அந்த ஊழியன், இவன் தீர்க்கதரிசி, இவன் எக்காலச்சத்தம் கேட்டவன், அவன் அற்புதம் செய்கிறவன் என்பதையே பார்த்து விசுவாசத்தை வளர்க்கிறீர்கள்!! சர்ப்பத்தின் தோழியானவுடன் நீங்களும் வசனம் தெரியாத குருடராகி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்!! சர்ப்பத்துக்கு கண்ணு தெரியாது தானே!! சோல் அவர்கள் வசனம் எழுதியதை விட்டு விட்டு விளக்கத்தை மட்டும் வாசித்து வெளிவந்த பிதற்றல்!!
//
bereans: //அல்லது இது ரஸ்ஸல் எழுதியது இதை அப்படியே மொழிபெயர்த்து தருகிறேன் என்று சொன்னதே இல்லை!!//
ஏன் பொய் சொல்றீங்க? ரே ஸ்மித் எழுதியதை மொழி பெயர்த்து எழுதவில்லையா?
//
நீங்கள் குருடாகிவிட்டீர்கள் என்று நான் சொன்னது உண்மையாகிவிட்டது!! ரஸ்ஸலை குறித்து எழுதினால் ரே ஸ்மித்தை குறித்து எழுதுகிறீர்களே!! ரே ஸ்மித்தை மொழிபெயர்த்து எழுதுகிறேன் என்று சொல்லி தானே எழுதினேன்!! நாங்கள் செய்வதை சொல்லிவிட்டே செய்வோம்!! ரஸ்ஸலை எழுத வேண்டுமென்றால், இது ரஸ்ஸல் எழுதியது என்றே எழுதுவோம்!! பொய்யும் பித்தலாட்டமும் உங்கள் கூட்டத்திற்கு கைவந்த கலை!! அதான் இயேசுவை பார்த்தேன் ஆட்டுக்குட்டியை பார்த்தேன் என்று சொல்லுவோரிடம் தானே குறி கேட்க செல்கிறீர்கள்!!
//இது என்ன புதுக்கரடி? முதலில் இயேசு கிறிஸ்து தேவன் என்று ஏற்றுக் கொள்ளுங்கள். அப்புறம் அவர் தேவனுக்கு மேலானவரா, கீழானவரா, சமமானவரா என்று பார்ப்போம்.//
கரடியும் கோழியின் விட உங்களுக்கு தான் தெரியும்!! இயேசு கிறிஸ்து தேவன் இல்லை என்று யார் சொன்னார்!! இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவன் கிடையாது என்று தான் சொல்லுகிறோம்!! இயேசு கிறிஸ்து யார் என்றே தெரியாத நீங்கள் இப்படி எல்லாம் பேசப்படாது!! புரியுதா!!
I கொரிந்தியர் 8:5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,
6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.
முக்கியமாக கோல்டாவுக்கு இல்லவே இல்லை.
இந்த தேவர்களைப் படைத்தது யாரு? கரடி இல்லை. "தேவன்", "கர்த்தர்" என்ற சொற்களெல்லாம் ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கே தெரியும். தேவனால் படைக்கப்பட்ட தேவ குமாரனும் ஒரு தேவனாகத்தான் இருக்க முடியும்.
இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவன் கிடையாதென்று உரக்க சொல்லிவிடாதீர்கள். உங்களையும் யெகோவா சாட்சி, ரஸ்ஸலின் ....ஐ குடிப்பவர் என்று சொல்லிவிடப்போகிறான் உங்கள் தோழன்.
//கோவை பெரேயன்ஸ், இரண்டாம் மரணம் பற்றிய கருத்துக்களை மாற்றி ஒரு வருடம் தான் ஆகிறதா?? கெட்ட குமாரன் போல் அப்பாவிடம் கோபித்துக் கொண்டு வேறு பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள் போல. சீக்கிரம் திரும்பி வாங்க தம்பிகளா!! உண்மையான இயேசுவிடம்தான் உண்மையான சந்தோஷம், சமாதானம், நிம்மதி உண்டு.சத்தியத்தில் தான், சத்தியத்தை அறிவதுதான் சந்தோஷம்!//
கோல்டா அவர்கள் வாசிக்க தேரியும் முன்னமே கிறிஸ்தவத்தை கறைத்து குடித்தவர் போல்!! அவர் துவக்க முதல் இது நாள் வரை ஒரே விசுவாசத்தையே பேசி வருகிறவராம்!!
அக்கா, நீங்க சொல்லும் இயேசு நரகத்தில் தள்ளுபவராக தான் சித்தரிக்கிறீர்களே!! ஆனால் நாங்கள் சொல்லும் வேதத்தில் உள்ள இயேசு கிறிஸ்து தேவனின் குமாரன், அவர் எல்லா மனுஷர்களையும் இரட்சிக்கவே தன்னை பலியாக கொடுத்தார்!! நீங்கள் வேறு ஒரு இயேசுவை வைத்துக்கொண்டு வேறு ஒரு சுவிசேஷத்தை போதிக்கிற கூட்டம்!! போங்க அக்கா, வேறு வேலை ஏதாவது இருந்தா போய் பாருங்கோ!!
நீங்களாகவே ஒருவனை கெட்டவன் என்று பிதற்றுவீர்கள், ஆனால் உண்மையில் வீட்டிலே நல்ல பிள்ளையாக ஒருத்தன் இருந்தானே, அதான் உங்கள் கூட்டத்தார் போல், அவன் தான் உண்மையிலேயே போறாமையும் மன்னிக்கும் தன்மையற்றவனுமாக இருக்கிறவன்!! நீங்கள் சொல்லும் கெட்ட குமாரன் தான் பிதாவுடன் இருக்கிறான் பார்த்தீர்களா!! நீங்கள் சொல்லும் நல்ல குமாரன் பிதாவை விட்டு உங்களை போலவே தூர்மாக தான் இருக்கிறான்!! ஒரு காலத்தில் நீங்கள் சொல்லும் "கெட்ட குமாரனாக" தான் இருந்தோம், ஆனால் இப்பொழுது எங்கள் பிதாவின் ஆதரவில் இருக்கிறோம்!! உண்மையில் திரும்ப வேண்டியவர்கள் நீங்கள் தான், மூத்த குமாரனை போல்!!
யோசிங்க.......யோசிங்க!!!!!!
இரண்டாம் மரணத்தை குறித்து நிச்சயமாக என் கருத்தை மாற்றிக்கொண்டிருக்கிறேன்!! இதில் தவறு ஒன்றும் இல்லை!! தவறு என்று தெரிந்தும் சில ஆதாயங்களுக்காக ஒரு இடத்தில் ஒட்டிக்கிட்டு இருப்பது தான் தவறு!! உங்களுக்க்கு சத்தியம் தெரியாது, சோஃபா ஊழியர்களின் கட்டு கதைகளும், சில பெரிய (!!) தீர்க்கதரிசிகளின் குறிச்சொல்லுதலையும் கேட்டு வளர்வதினால் உங்களுக்கு சத்தியம் தெரியாது!! வேதத்தில் இருக்கும் ஒரு புத்தகமான பிரசங்கியின் புத்தகம் உங்களுக்கு நாத்தீகத்தை போதிக்கும் புத்தகம், அடுத்து எதை தூக்கி எறிய போகிறீர்களோ!!
//மத்ததுக்கெல்லாம் நீட்டி, முழக்கி வேதம் சொல்லாததையும், இல்லாததையும் பொல்லாததையும் சேர்த்து விளக்கம் சொல்றீங்களே. இதுக்கு மட்டும் என்ன? உங்க நம்பிக்கை ஆட்டம் கண்டு விடும் என்று பயமா இருக்கா?//
கேள்விக்கு எதிர்கேள்வி கேட்பதில் என்ன நியாயம்!! மிருகங்களுக்கு உயிர்த்தெழுதல் இருப்பதாக வேதத்தில் எங்குமே இல்லை என்று தெளிவாக தானே எழுதியிருக்கிறேன்!! நீங்களோ அதை பரிகாசம் செய்தீர்கள்!! சரி பரிகாசம் செய்தவர் பரிகாரம் வைத்திருக்கவேண்டுமே என்று வசனத்தை கேட்டால் பதில் எழுத துப்பில்லாமல் இருக்கிறீர்களே!!
என் நம்பிக்கை உங்களை போன்ற பிஸ்கோத்து கூட்டத்தாரால் எல்லாம் ஆட்டம் கண்டு விடாது!! உங்களை விட உங்கள் விசுவாசத்தை இன்னும் தீவிரமாக போதித்துக்கொண்டு இருந்தவர்கள் தான் நாங்களும்!! ஆனால் அங்கும் தேவன் எங்களை உண்மையுள்ளவராகவே வைத்திருந்தார்!! பணம் கொடுத்தோமே தவிர, ஊழியர்கள் என்று பணம் வாங்கியது கிடையாது!! வயிற்று பிழைப்பிற்கு வேலை பார்த்துக்கொண்டு தான் ஊழியம் செய்தோம்!! அது எல்லாம் இப்போ எங்களுக்கு உங்களை போன்ற பூச்சி கூட்டத்திற்கு பதில் சொல்ல போதுமானதாக இருக்கிறது!!
நீட்டி, முழக்கி வேதம் சொல்லாததையும், இல்லாததையும் பொல்லாததையும் சேர்த்து விளக்கம் சொல்லுகிறோம் என்கிறீர்களே,
எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பதில் என்ன பொல்லாதது இருக்கிறது?? எல்லாரும் அக்கினி நரகத்திற்குள் போவார்கள் என்கிற உங்கள் போதனை தான் கட்டு கதை, வேதத்தில் இல்லாதது!! விரக்த்தியின் உச்சத்திற்கு வந்து விட்டீர்கள் போல்!! அதான் உங்கள் அன்பு சகோதரன் கூவம் வாயன் இருக்கிறானே, உங்களுக்கு ஆதரவாக, உங்களை ஊக்கப்படுத்த!!
//பெரேயன்ஸ்: //மிருகங்கள் உயிர்த்தெழும் என்று வேதம் சொல்லவில்லை!! அவ்வளவே!! //
அவ்வளவே???
மத்ததுக்கெல்லாம் நீட்டி, முழக்கி வேதம் சொல்லாததையும், இல்லாததையும் பொல்லாததையும் சேர்த்து விளக்கம் சொல்றீங்களே. இதுக்கு மட்டும் என்ன? உங்க நம்பிக்கை ஆட்டம் கண்டு விடும் என்று பயமா இருக்கா?//
இல்லாததையும், பொல்லாததையும் வேதமே நாத்திகம் எனுமளவு புரட்டிவிட்டு அப்பாவிபோல நடிக்கக் கூடாது.
ராஜ்ஜியத்தில் நிச்சயம் மிருகங்கள் இருக்கும் அதற்கு வசனங்கள் உண்டு. மிருகங்கள் உயிர்தெழுவது குறித்து வேதத்தில் இல்லை.
இல்லாததையும் (நரகம்), பொல்லாததையும்(மூன்று தேவர்கள்) நம்புவதும், பிரசங்கிப்பதும் வேசி சபையின் வேலை. அந்த உக்கிரமான மதுவின் மயக்கம் எங்களூக்கில்லை. அந்த மதுவின் போதையில்தான் பிரசங்கி வேதமே இல்லை என்று உளறுகிறீர்கள் போலுள்ளது அக்கா.
சீக்கிரம் தெளிவீர்கள்...
//மிருகங்கள் உயிர்த்தெழாது என்றும் சொல்றீங்க.அப்ப ராஜ்யத்தில் மனிதன் ஆண்டு கொள்ளும்படியாக,சமுத்திரத்தின் மச்சங்கள் ஆகாயத்துப் பறவைகள், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்கள் எல்லாம் எங்கிருந்து வரும்?//
இவையெல்லாம் ஒட்டு மொத்தமாக அழிந்துவிடும் என்று யார் சொன்னது? சாது நாயா அல்லது வி.செ பேயா? உலகத்தின் மனிதன் கொண்டுவந்த கம்யூனிசம், ஜனநாயகம், போன்ற சிஸ்டம்கள் அழியுமேதவிர உலகம் அழியவே அழியாது அம்மணி. பழைய அமைப்புகள் மாறி புதிய உலகம் உருவாகும்....
ஏசாயா 45:18 வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ராஜ்ஜியத்தில்
ஏசாயா 11:6 அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.
-- Edited by soulsolution on Friday 16th of September 2011 10:45:05 PM
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டியிருக்குமாம்.//
என்னத்தை எழுதுகிறோம் என்று புரியாத அளவிற்கு முத்தி போய் விட்டது என்று நினைக்கிறேன்!! தேவன் என்று சொன்னவுடன் பிதாவுக்கு ஈடு இனை என்று கோமாளி கூட்டத்தார் தான் நினைப்பீர்கள்!! தேவன் என்கிற வார்த்தை ஆபிரஹாம் முதல் பிசாசு வரைக்கும் இருக்கிறது!! தேவன் என்ற ஒரு சொல் மாத்திரம் பிதாவை குறிக்காது!! இதை எல்லாம் தெளிவாக சொன்னால் தேவையில்லாமல் தேவ தூஷனம் செய்வீர்கள்!! உங்கள் ஊரில் ஆடு மாடுகள் பறவைகள் மற்ற விலங்குகளை தேவன் என்று தான் சொல்லுவீர்களா அல்லது உங்கள் சோஃபா ஊழியர்கள் அப்படி சொல்லுவார்களோ!!பிதா தான் இயேசுவாக வந்தார் என்றும், இயேசு தான் பிதாவாகவும் இருக்கிறார் என்றெல்லாம் பிதற்றிவிட்டு இது என்ன புது தெளிவு!! நாங்கள் அப்படி ஒரு போதும் சொல்லவேயில்லை என்று அரசியல்வாதிகளை போல் மறுப்பு தெரிவிக்க தவிர வேறு என்னத்தை தெரியும்!!
!
வேதம் புரியாம எழுதப்பட்டதற்கும் மிஞ்சி பேசுகிறீர்கள்!! இப்போ சகோ சோல் எழுதியது கூட புரியாத அளவிற்கு சோஃபா ஊழியர்களின் பாதிப்பு பெறுகியிருக்கிறது போல்!! ஓசியில் தின்னு கொழுத்து போய் ஏப்பம் விட்டுகிட்டு மக்கள் பணத்தில் டிவி ஊழியம் என்கிற பெயரில் கள்ள தீர்க்கதரிசனம் சொல்லி பொழுதை போக்கிகிட்டு இருப்போரிடமே நீங்கள் தெளிவை பெற்றுக்கொள்ளுங்கள்!! அவர்கள் எக்காள சத்தம் கேட்பவர்களாயிற்றே!! ஜப்பானில் சுனாமி வரும் என்றும், ஆஃப்கானிஸ்தானில் பூகம்பம் வரும் என்று சபையின் பக்தி விருத்திக்கான தீர்க்கதரிசனம் சொல்லுவோருக்கு கோவில் கட்டி கும்பிடுங்கள்!! யார் வேண்டாம் என்கிறார்கள்!! விக்கிரக ஆராதனையின் பேரில் சோஃபா ஊழியர்கள் தான் உங்களின் விக்கிரகங்கள்!!
பொய்யை மறைக்க வேதமே பொய் என்கிற அளவிற்கு எழுதிவிட்டு ஒன்பது பொய் சொல்ல வேண்டியிருக்குமாம் என்று சொல்லுவதில் நியாயமே கிடையாது!!
1 கொரிந்தியர் 8:5. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், 6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.
உங்களிடம் கண்டிப்பாக இல்லை என்பது உங்கள் கேள்விகள் சொல்லுகிறது!!
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டியிருக்குமாம்.//
லூசு கோல்டாவே, புரியாமல் உளறுவதில் சில்சாமைக்கூட மிஞ்சிவிடுவீர்கள் போலுள்ளது. அவர்கள் தேவர்களாக இருந்தாலும் பிதாவாகிய தேவனுக்கு ஈடாக முடியாது. அப்படி நாங்கள் சொல்லவும் இல்லை. பிதாவாகிய ஒரே தேவன் அவ்வளவே. மற்றவர்களெல்லாம் அவருக்குக் கீழ்ப்பட்டே ஆக வேண்டும், கிறிஸ்து உட்பட....
இயேசு கிறிஸ்துவை பிதாவாகிய தேவன் கிடையாது என்கிறோமே தவிர அவரை பிதாவுக்குக் கீழ்ப்பட்ட ஒரு தேவனாகத்தான் கூறுகிறோம். மற்ற அனைத்தும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டிருக்கும்.
I கொரிந்தியர் 11:3 ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
இது போன்ற வசனங்களும் சர்ப்பத்திற்கு தெரியாது போல்!! பிதாவே கிறிஸ்துவாக வெளிப்பட்டு விட்டு அதன் பிறகு மீண்டும் கிறிஸ்துவிற்கு தலையாக மாறிவிட்டாராம்!! இவர்களின் கோமாளித்தனமான லாஜிக்கை வைத்துக்கொண்டு இவர்கள் கணவனும் மனைவியும் ஒரே நபர் தான் என்றாலும் ஆச்சரியம் கிடையாது!!
தேவன் கிறிஸ்துவிற்கு தலையாக இருக்கிறார், கிறிஸ்து நமக்கு (சபைக்கு) தலையாக இருக்கிறார்!! பிதாவாகிய தேவன் வேறு, கிறிஸ்து வேறு என்கிறதற்கு நேரடியான ஆயிரம் வசனங்கள் இருந்தும், எவனோ பொழுது போகாமல் எதையோ எழுதி வைத்தத்தை வைத்து பிதா தான் கிறிஸ்துவாக வெளிப்பட்டார், அவர் சிலுவையில் அறைய பட்டு மரித்தார் என்கிற தூஷனம் செய்கிறார்கள் சர்ப்பத்தின் தலைமையில் உள்ள கூட்டம்!! பின்னே பழைய பாம்பாகிய சாத்தானை தலையாக கொண்டு இவர்கள் இயங்கினால் இப்படி தான்!!
//வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதால், இலஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ளலாம், இலஞ்சம் வாங்கலாம் என்றும் சோல் நினைத்துக் கொண்டிருக்கிறார்.//
நீங்க எப்பவுமே இப்படி தான் பேசுவீற்களா, இல்ல எங்களுக்கு எழுதும் போது மாத்திரம் இப்படி அதிமேதாவித்தனமாக எழுதுவீர்களோ!! மேலே சொல்லப்பட்ட வசனங்கள் உங்களை பின்பற்ற சொல்லியிருக்கிறதோ!! மூடர்களுக்கு பதில் சொல்லவும் சொல்லுகிறது, சொல்லவேண்டாம் என்றும் சொல்லுகிறது, வேத வாக்கியங்கள் நாம் கற்று சீர்திருந்தியவர்களாவதற்கு தானே அன்றி இதை வைத்துக்கொண்டு இது நாத்தீகன் எழுதியது, எனக்கு வேண்டாம், இது விபச்சாரக்காரன் எழுதியது, இதுவும் வேண்டாம், என்று போதிக்க இல்லை!!
ஏன், தாவீது விபச்சாரம் செய்தான், மோசே கொலை செய்தான், பேதுரு மறுதலித்தான், யூதாஸ் காட்டி கொடுத்தான் என்றும் தான் போட்டிருக்கிறது, நீங்களும் இவைகளை செய்வீர்களோ!! அல்லது இது எல்லாம் தேவ ஆவியினால் இல்லாத வசனங்கள் என்று கிழிது வீசி விடுவீர்களோ!!
II தீமோத்தேயு 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, 17. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
//அத்துடன், பிரசங்கி எழுதிய சாலமோனே பலரைத் திருமணம் செய்து வாழ்ந்ததால், அது தவறல்ல என்று சோல் கருதுகிறார்!//
தாவீது?? விசுவாசத்தின் தந்தையான ஆபிரகாம்?? மோசே?? இவர்களின் புத்தகங்களையும் உங்கள் வேதத்திலிருந்து எடுத்து விட வேண்டியது தானே!! சலமோனாவது திருமணம் தான் செய்தான், தாவீது விபச்சாரம் செய்தானே!! எதை வேண்டுமென்றாலும் எழுதி ஏதோ மடக்குகிறோம் என்று நினைக்க வேண்டாம்!! சாலமோன் எழுதிய பிரசங்கி புத்தகத்தில் அத்துனை உண்மை இருக்கிறதால் அது உங்கள் கூட்டத்துக்கு தாங்க முடியவில்லை!!
//வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதால் சோல் மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் எடுக்கலாம் என்று சொல்கிறார். //
புத்திகெட்ட கலாத்தியர்களே என்று பவுல் சொல்லுவது போல் புத்திகெட்ட சர்ப்ப கூட்டத்தாரே என்று இனி சோல் சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது போல்!!
//பெரேயன்ஸ் அவர்களே, நாங்க நல்ல மூத்த குமாரர்கள்தான்.நீங்க திரும்ப அப்பாவிடம் வந்தால் உங்களுக்கு கொழுத்த கன்று அடித்து விருந்து உண்டு! குறைந்தபட்சம் அஞ்சப்பரில் ட்ரீட் உண்டு! ஓகே வா?//
நாங்கள் வந்துவிட்டோம், நீங்கள் தான் விஷயம் தெரியாமல் வெளியே இருக்கிறீர்கள்!! ஆனால் நீங்களும் வருவீர்கள் என்பது மாத்திரம் எங்களுக்கு தெரியும்!! தன்னை நல்லவர்கள் என்று சொல்லுகிறீர்களே, அப்படியா?? பிதா ஒருவரை தவிர நல்லவர் யாரும் இல்லை என்று எங்கள் இயேசு கிறிஸ்து எங்களுக்கு போதித்திருக்கிறார்!! உங்கள் இயேசு நீங்கள் நல்லவர்கள் என்று சொல்லிக்கொடுத்திருக்கிறாரோ!!
நல்ல மூத்த குமாரர்கள் என்று சொன்னாலும் பிதாக்கிட்டே வர மாட்டேன் என்று தானே வெளியில் நிற்கிறீகள்!! இந்த பிரபஞ்சத்தின் சொத்து சுகம் தானே நல்ல குமாரர்களுக்கு பிரதானமாக இருக்கிறது!!
// தேவனால் படைக்கப்பட்ட தூதர்கள், மனிதர்கள் ஆகியோரும் தேவன் தானா? இல்லை என்றால் ஏன் இல்லை? //
ஆம் என்கிறது வேதம்,
யோவான் 10:34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? 35. தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, 36. பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
மனிதர்களை தேவன் என்று எழுதப்பட்டிருக்கிறது, ஆபிரகாமை தேவன் என்று சாராள் கூப்பிடுகிறார்ள்!! தேவன் என்கிற வார்த்தை பிசாசுக்கும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது!! ஆகிலும் பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு, ஆனால் இந்த அறிவு உங்களுக்கு இல்லையே!!
//பிதாவாகிய தேவன், படைக்கப்பட்ட கிறிஸ்துவாகிய தேவன் வரிசையில், படைக்கப்பட்ட சோல் என்னும் தேவனையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமோ? New Age ஆட்கள் தான் எங்கும் தேவன் எதிலும் தேவன் என்று சொல்வார்கள். //
எல்லா சபைகளிலும் ஏதாவது ஒரு சில சத்திய வசனங்களை சரிவர சொல்லுவார்கள்!! நியூ ஏஜ் ஆட்கள் போல் தேவன் தூனிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று நாங்கள் சொல்லுவதில்லையே!! தேவன் மகிமையாக பரலோகத்தில் இருக்கிறார் என்று வேதம் சொல்லுவதை தான் நாங்கள் சொல்லுகிறோம்!! எதை தொடர்பு படுத்தி எழுதவேண்டும் என்று கூட பார்க்க மாட்டீர்களோ!!
// இயேசு கிறிஸ்து ஆட்சி செய்கிறார் என்றால் அது மன்னராட்சிதானே?
பெரேயன்ஸ் 100 வயது வரை வாழ்வார் என்றால், ராஜ்ஜியத்தில் உயிர்த்தெழுந்து 100 வயது கிழவனாகவே 1000 வருடம் இருப்பார். கஷ்டம்!//
யார் ஆளுகிறார், எப்படி ஆளுகிறார் என்பதை தான் பார்க்க வேண்டும்!! 100 வயதுள்ளவனும் உயிர்த்தெழுதலில் ஆதாமின் வயதிற்கு வந்து விடுவான்!! 930 அல்ல, வெறும் 30!! எல்லாம் முந்தய நிலைக்கு திரும்பும்!! ஒரு கஷ்டமும் கிடையாது!! உங்களுக்கு புரிந்துக்கொள்வதில் தான் கஷ்டம்!!
அப்படி என்றால் எதை பின்பற்றவேண்டும், எதை பின்பற்றகூடாது என்பதை உங்களுக்குள் இருக்கும் முன்றாம் தேவன் சொல்லி தருவதில்லையா!!?? இல்லை நீதிமொழிகள் புத்தகமும் வேண்டாம் என்று சொல்ல வருகிறீர்களா!!??
//சகோ பீட்டர், என்ன ஒரு சாட்சியான வாழ்க்கை. Great !
சோலும், பெரேயன்ஸும் மயக்கம் போட்டிருப்பாங்களே!//
இவரை விட பெரிய ரீல் மன்னர்களை பார்த்து வளர்ந்திர்க்கிறோம்!! அற்புதங்கள் இல்லை என்று சொல்லவில்லை!! ஆனால் கிரிஸ்தவர்களுக்கு அதுவும் பெந்தகோஸ்தேயினருக்கு மாத்திரம் அவர்கள் கட்டளைகளை (அதான் அவர்கள் ஏறெடுக்கும் ஜெபங்கள்) கேட்டு அவர்களுக்கு அற்புதம் செய்கிறார் என்று எண்ணிவிட வேண்டாம்!! தேவன் பூச்சக்கரத்து குடிகள் யாவர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறர் என்கிறது வேதம்!!
12 வருடங்களாக ஒரு நாளுக்கு 10 மாத்திரைகளை நம்பியிருந்த எனக்கும் அவர் சுகத்தை கொடுத்து இன்று மாத்திரைகள் போடுவதே இல்லை!! கை மோதிரவிரலில் சுமார் 6 வருடங்களாக ஆறாத ஒரு நகசுத்த, 3 நாட்களில் இடம் தெரியாமல் போக செய்தவரும் தேவனே!! அற்புதம் நடக்கிறது எல்லார் வாழ்க்கையிலும் தான்!! நாம் அனுதினமும் ஜீவனோடு சுக பத்திரமாக இருப்பதும் அற்புதமே!!
இந்த அற்புதங்களை காட்டி ஒருவனை கிறிஸ்தவனாக அல்லது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவனாகவோ மாறவோ மாற்ற சொல்லியோ கட்டளையில்லை!! அப்படி ஒருவன் இப்படி பட்ட அற்புதங்களுக்காக தான் மனந்திரும்புகிறான் என்றால் அது மனந்திரும்புவதே கிடையாது!! கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்களுக்கு பாடுகள் இருக்கிறது என்று வசனங்கள் சொன்னால், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் ஆஸ்பத்திரிக்கும் டாக்டரிடமும் போக வேண்டாம் என்று போதிப்பவர்கள் கிறிஸ்தவர்களா!!??
எல்லாவற்றிலும் வசனத்தை எதிர்த்தே பழகிய பீட்டர் சாமுவேல் போன்றோர் நோயாளிகலுக்கு மருத்துவர் தேவை என்று கிறிஸ்து சொன்னதை எதிர்ப்பதில் எந்த விதிவிலக்கும் கிடையாதே!! மாத்திரை எடுப்பதற்கு மாத்திரம் அல்ல, ப்ரஷர் பார்க்க, சுகர் பார்க்க, குழந்தைகளுக்கு தடுப்பூசி போட, மனைவி பிரசவத்திற்கு, இப்படி எல்லாவற்றுக்கும் டாக்டரிடம் போய் தான் ஆக வேண்டும்!! என்னமோ டாக்டர்கள் மட்டும் தேவனுக்கு தெரியமலே வந்து மருத்துவ ஞானம் பெற்றவர்கள் என்று நினைக்கிறாரோ, பீட்டர் சாமுவேல்!!
//எனக்கு என்னை அறியாமல் விஷம் தந்துபாருங்கள், நிச்சயம் அது என்னை சேதப்படுத்தாது. பாம்புகளும் மிருகங்களும் நிறைந்த காட்டில் இரவில் எந்த விளக்கு வெளிச்சமும் இல்லாமல் தனியாக நடந்து பழகியவன் நான். எதுவும் என்னை சேதப்படுத்துவதில்லை. மறுநாள் பாடல் பாடவேண்டுமெனில் முந்தின நாள் நள்ளிரவில் fridge தண்ணீர் குடிப்பவன் நான். காலை எழுந்து கூட...! சாவுக்கேதுவானதே என்னை சேதப்படுத்தாதபோது பச்சைத்தண்ணீர் எம்மாத்திரம். கிறிஸ்தவ வாழ்வு என்பது சும்மா விளையாட்டல்ல நண்பர்களே...! அது அனுபவம்....! //
இது எல்லாம் ரொம்ப ஒவராக இருக்குது!! இவருக்கு விஷம் கொடுத்தால் இவரை சேதப்படுத்தாதாம்!! கிறிஸ்தவ வாழ்வு என்பதை விளையாட்டு இல்லை என்று விளையாட்டுத்தனமாக சொல்லியிருக்கிறார்!! அற்புதங்களை காட்டி ஜனங்களை மயக்குகிற கூட்டம் இருக்கிறது, அது எல்லா மதங்களிலும் உண்டு!!
சிலருக்கு இது போன்று சுவையாக எழுதி தன்னை மேன்மைப்படுத்தும் பழக்கம் இருக்கிறது!! பீட்டர் சாமுவேல் என்கிறவர் அது போன்ற ஒரு மனுஷனே!! மருந்து எடுப்பதே கிடையாது என்கிற போதனை அபத்தத்திலும் அபத்தம்!! அப்போஸ்தலனான பவுல் தீமோத்தேயுடம் வயிற்று வலிக்கு திராட்ச்சை ரசம் எடுத்துக்க சொல்லிய வேதத்தை இவர்கள் போதிக்கிறார்களாம்!! கண்ணாடி மாட்ட வேண்டுமென்றாலும் மருத்துவரிடம் சென்று தான் ஆக வேண்டும், அது போன்ற எத்துனையோ பெந்தகோஸ்தேயினரை பார்த்தாச்சு!!
ஆகவே கோல்டா அவர்களே, உங்களை போன்ற நம்பிக்கையில் இருப்பவர்கள் தான் இது போன்ற கதைகளை கேட்டு மயங்கிவிழுவார்கள்!! நாங்கள் தினம் காலை கன் விழிப்பதே தேவன் எங்களுக்கு செய்கிற அற்புதம் என்று சொல்லி அவருக்கு சைலெண்டாக நன்றி சொல்லும் கூட்டத்தார் நாங்கள்!! உங்களை போல் ட்ரம்ஸ் எடுத்து ராகம் போட்டு வாசித்து கூட்டம் சேர்ப்பவர்கள் அல்ல நாங்கள்!!
//உளராதீங்க பெரேயன்ஸ்! என்ன அக்கிரமம் அவர்கள் செய்தார்கள்??//
வழக்கம் போலவே வசனம் என்றால் அதை உளரல் என்று சொல்லியிருக்கிறீர்கள்!! அவர்கள் செய்த அக்கிரமத்தை கிறிஸ்து இயேசுவே சொல்லுகிறாரே,
மத்தேயு 7:22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
இவர்கள் செய்யும் அக்கிரமங்கள்:
தீர்க்கதரிசனம் (!!) உரைத்தவர்கள்!! பிசாசுகளை துரத்தினார்களாம்!! அநேக அற்புதங்களை செய்தார்களாம்!!
இதை எல்லாம் உமது (இயேசு கிறிஸ்துவின்) நாமத்தில் செய்தோம் என்று சொல்லியும் இவர்களை அக்கிரம செய்கைக்காரர்களே என்கிறார், தன்னை விட்டு அகன்று போகும்படி சொல்லுகிறார்!!
யார் உளருகிறார்கள் என்பதை வசனம் சொல்லுகிறது!! ஆனால் வழக்கம் போல் அது உங்களுக்கு புரியாது!!
//சரி 365 நாளும் ஆண்டவரைத் தீவிரமா தேடுங்க. யாரு வேண்டாங்கிறா???//
வேறு யார்?? வழக்கம் போல் உங்கள் சாது தான்!! செப் 28 முதல் அக் 8 வரை அவர் தானே தேட சொல்லுகிறார்!! என்னய்யா கூத்து இதெல்லாம்!!
//உங்களை மாதிரி லூசுத்தனமா வியாக்கியானம் பண்ணும் ஆட்கள் உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது.//
வந்துடீங்க!! இப்ப தான் உங்கள் தளத்தின் உறுப்பினர் என்பதை நிரூபிக்க தொடங்குகிறீர்கள்!! நான் எழுதியதில் தவறை சுற்றி காண்பித்து எது லூசுத்தனமான வியாக்கியானம் என்று சொல்லவேண்டும்!! வசனம் உண்மை என்பதை தெரிந்தவுடன் உங்களின் உண்மை சொரூபம் இப்ப வெளிப்படுகிறது!! தீர்க்கதரிசி என்று தன்னை சொல்லிக்கொள்கிற சாது போன்றோருக்கு உண்டான வசனத்தை போட்டால் உங்களுக்கு ஏன் பத்திக்கிட்டு வருது!!
//இப்படி ஆண்டவர் சுகம் கொடுத்திருக்கிறார். நீங்களோ நன்றியில்லாமல் வேறு சுவிசேஷத்தை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
உண்மையை சொல்லுங்க... சுகம் கிடைத்தது K Link healthcare products ஆல் தானே?? அதனால் தானே சோல் சாமியை தொழுது கொண்டு இருக்கிறீர்கள்??//
எங்களுக்கு தேவன் தருகிற சுகத்திற்கு நாங்கள் தேவனுக்கு நன்றி சொல்லுக்கொள்கிறோம்!! உங்களை போன்று சாதுவே, விசெயே, உம்முடய ஜெபத்தினால் நான் சுகம் பெற்றுக்கொண்டேன் என்றெல்லாம் சொல்லுவதில்லை!! கே லிங் மூலம் ஒருவர் சுகமாகிறான் என்றால் உமக்கு என்ன!! அத்தி இலையை தேய்த்து கேன்சர் சுகமானது என்று வேதம் சொல்லுகிறதே!! இலைகள் எல்லாம் மருந்தாகும் என்று வேதம் சொல்லுகிறதே!! தேவனின் படைப்பான மரச்செடிகளிலிருந்து மருந்து வந்துக்கொண்டு இருக்கிறது, இதிலும் உங்களுக்கு வயிற்றெரிச்சலோ!!
எனக்கு சுகம் கிடைத்த போது சகோ சோல் யார் என்றே எனக்கு தெரியாது!! மனுஷர்களை தொழுதுக்கொள்ளும் பழக்கம் உங்களுடன் இருக்கட்டும், தேவன் ஒருவரை தவிர நாங்கள் யாரையும் தொழுதுக்கொள்ள மாட்டோம்!! சோஃபா ஊழியர்களின் மதுவில் (உபதேசங்களில்) மதி மயங்கி இருக்கிறீர்கள்!! உங்கள் சபை ஒரு நாள் விழும், பாபிலோன் விழுந்தது என்று சொல்லும் நாள் வருகிறது!!
சுவிசேஷம் என்றால் நரகத்திற்கு அனுப்புவது என்பதை போதிப்போர் தான் வேறு ஒரு இயேசப்பாவைக்கொண்டு வேறு ஒரு சுவிசேஷம் சொல்லுகிறீர்கள்!! இல்லாத திரித்துவம் என்கிற வார்த்தையை கொண்டு வசனத்தை தேடுகிறீர்கள்!! உண்மையும் சத்தியமும் உங்களுக்கு சகிக்காது!! உங்கள் செவிகள் சாதுவின் எக்காலச்சத்தத்தினால் நிறைந்திருக்கிறது!! விசெயின் கள்ள தீர்க்கதரிசனத்தினால் செவிகள் வேதத்தை கேட்க மறுக்கிறது!!
//இப்படி மூளைச் சலவை செய்யப்படுவது என்ன ஒரு துக்கம்!
சோலும் பெரேயன்ஸும் வேத வசனங்களை வியாக்கியானம் செய்வதைப் பார்க்கும் போது இது “நார்மலா” இல்லையே என்று எனக்கு சில சமயம் தோன்றும்!//
சாது, விசெ, சோஃபா ஊழியர்கள், கோட் சூட் டை ஊழியர்கள், இருக்கும் வரை எங்கள் போதனை உங்களுக்கு நார்மலா தெரிய வாய்ப்பே இல்லை!!