kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதத்தை நம்ப மறுக்கும் கிறிஸ்தவர்கள்...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
வேதத்தை நம்ப மறுக்கும் கிறிஸ்தவர்கள்...


வேதத்தை நம்ப மறுக்கும் கிறிஸ்தவர்கள்...

தேவன் ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்த அறிவிப்பை வேதத்தில் தெரியப்படுத்துவாரானால் நாம் அதே வேதத்தில் அதற்கெதிரான வசனங்களை தேட முற்படக்கூடாது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படும்படியான தேவனுடைய சித்தத்தின்படியே (1தீமோ 2:4) அவர் எல்லாரையும் இரட்சிப்பார் (ஏசா 46:10,11). இதற்கெதிரான எல்லா வாதங்களும் தேவனுடைய அறிவிப்பைப் நம்ப மறுக்கும் மனிதனின் அற்ப புத்தியையே காண்பிக்கிறது.

தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் சொல்லும்போது தேவன் ஏதாவது ஒரு விதத்திலாவது மனிதனுக்கு எதிராக தீமை செய்து சில சமயங்களில் அன்பில்லாதவராக இருப்பார் என்று மற்ற வசனங்களை காண்பிப்பது அறிவீனம்.

தேவனுடைய மீட்பின் திட்டம் ஒருபோதும் தேவன் அன்பானவர் என்பதை மறுக்கவில்லை. எல்லாரையும் தேவன் இரட்சிப்பார் என்பதற்கு எதிரானதல்ல தேவனுடைய இரட்சிப்பின் திட்டம்.

பிரசங்கிமார்களும், போதகர்களும், தங்களை தியாலஜியன் என்று சொல்லிக்கொள்பவர்களும் மற்றவர்களும் தேவனை ஒரு குறைவுள்ளவராக சித்தரித்து தேவ திட்டத்தை அவமாக்குகிறார்கள். இந்த மனித வாதங்களெல்லாம் தேவனுடைய திட்டத்தை மாற்றுவதில்லை. ஒரு மனிதன் மரிக்கும் முன்னதாகவே அவன் இரட்சிக்கப்படவேண்டும் இல்லாவிட்டால் ஒருபோதும் அவன் இரட்சிக்கப்பட முடியாது என்னும் சாத்தானின் மோசமான போதனைதான் பாபிலோனிய மதத்தின் முதன்மையானது. வேதத்தில் அப்படிப்பட்ட உபதேசம் வேத வசனத்தில் எங்குள்ளது? இல்லவே இல்லை. இயேசு கிறிஸ்து பாவிகளை இரட்சிக்கவே வந்தார்.

இவர்கள் இயேசுகிறிஸ்து உலக இரட்சகர் என்பதை நம்புவதில்லை.

இவர்கள் எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்று இயேசு சொன்னதை நம்புவதில்லை.

முழங்கால் யாவும் முடங்கும், நாவு யாவும் இயேசுவே ஆண்டவரும் இரட்சகரும் என்று அறிக்கையிடும் என்பதையும் நம்புவதில்லை.

ஒருவரும் கெட்டுப்போவது தேவனுடைய சித்தமல்ல என்பதை இவர்கள் நம்புவதில்லை

மனிதர்கள் நம்புவதற்கும் நம்பாமல் போவதற்கும், விசுவாசிப்பதற்கும் விசுவாசியாமல் போவதற்கும் காரணர் தேவனே என்பதை இவர்கள் நம்புவதில்லை.

அவர்களுடைய தெரிந்துகொள்தலினால் ஒருவனும் இயேசுவிடத்தில் வரமுடியாது என்று இயேசு சொன்னதை இவர்கள் நம்புவதில்லை.

வேறு வார்த்தைகளில் சொன்னால் இவர்கள் தேவனுடைய வார்த்தையை நம்புவதில்லை.

பெருவாரியான மனுக்குலம் நியாயத்தீர்ப்பின்போது இரட்சிக்கப்படும். உயிர்த்தெழுதலைக் குறித்தும், தங்களுடைய பாவத்தில் மரித்த எல்லா பாவிகளையும் அதன்பின் தேவன் எவ்வாறு இரட்சிப்பார் என்பதைக் குறித்த அநேக தீர்க்கதரிசனங்களை வாசித்தறியுங்கள்.

நியாயத்தீர்ப்பு பழிவாங்குதலையும் தண்டனையையும் போலல்லாமல் அதைக் காட்டிலும் ஒரு உன்னதமான நோக்கத்தை நிறைவேற்றுகிறது. மனிதர்களின் இருதயத்தை தேவன் இந்த நியாயத்தீர்ப்புகள் மூலம் நேராக்குகிறார்.

உம்முடைய நியாததீர்ப்பின் போது முழு உலகமும் களிகூரும் என்று சங்கீதக்காரன் சொல்கிறான்.

சங்கீதம் 48:11 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.

ஏசாயா 26:9 என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.

அக்கினிக்கடலில் ஒருவரும் அழிவதில்லை. மனித உபதேசங்களே பட்சிக்கப்படும்.பாவிகள் இரட்சிக்கப்படுவார்கள்.

உலகம் குருடாக்கப்பட்டுள்ளது. தேவனே உலகத்தைக் குருடாக்குகிறார் (குருடாக்குவதற்கு அவர் தீமையின் தூதர்களை அவ்வப்போது உபயோகித்தாலும்). தேவனே ஜனங்கள் 'பார்வையடையும்படிக்கு' குருட்டுத்தனத்தை நீக்கிப்போடுவார். தேவனே அதைச் செய்வார். ஏசாயா 11:9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். என்ற வசனத்தை வாசித்ததில்லையா?  

நீதி கற்றுக்கொடுக்கப்படும் முறைகளில் 'தண்டனைகள்' இருக்கலாம். ஆனால் அக்கினி எரியும் நரகத்தில் காலாகாலத்துக்கு வேதனைப்படுத்தும் தண்டனை அல்ல‌.

 

இன்னும் வரும்....

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard