kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்து ஆவியில் உயிர்த்தெழுந்தார்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கிறிஸ்து ஆவியில் உயிர்த்தெழுந்தார்


இயேசு கிறிஸ்து ஆவியில் உயிர்த்தெழுந்தாரா அல்லது மாம்சத்திலா?

I கொரிந்தியர் 15:45 அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

1 Corinthians 15:45 So it is also written, The first human, Adam, became a living person,[a] and the last Adam became a spirit that gives life. [Common English Bible (CEB)]

பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்!! அதாவது எல்லாருக்கும் ஜீவனை கொடுக்கிற ஆவியானார் என்கிறது வேதம்!! ஆனால் வேத புரட்டர்கள் கிறிஸ்து இயேசு மாம்சக்த்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்கிற ஒரு பொய் உபதேசத்தை பிரசங்கித்து வருகிறார்கள்!!

அவர்கள் இதற்காக பயன்படுத்தக்கூடிய வசனம்:

லூக்கா 24:41. ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். 42. அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். 43. அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,

ஆவியாக இருந்து புசித்தார் என்பதற்கு பழை ஏற்பாட்டு காலத்தில் ஆபிரகாம் வீட்டிற்கு வந்த ஆவி ஜீவிகளும், லோத்தின் வீட்டுற்கு சென்ற ஆவி ஜீவிகளும் புசித்தார்கள் என்பதற்கு வசனங்கள் உண்டு!! கிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்று பயந்திருந்த தம் சீஷர்களுக்கு உறுதிப்படுத்தவே இந்த நிகழ்வு!! ஆகவே புசித்தார் என்பதால் அவர் மாமிசத்தில் தான் இருந்தார் என்று இருக்க வேண்டியதில்லை!!

அடுத்து,

லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

கிறிஸ்து இயேசு தன் சீஷர்களிடம் "தரிசனம்" ஆனது அவர்களின் பயத்தை போக்கி, உயிர்த்தெழுதலுக்கான விசுவாசத்தையும் சுவிசேஷத்தையும் அவர்கள் புரிந்துக்கொள்ளும்படியாகவே!! இப்படி தன் சீஷர்களையும் அப்போஸ்தலர்களையும் திடப்படுத்த அவர் மாமிசத்தில் தரிசனமானதில் ஒரு ஆச்சரியமும் இல்லை!! மாம்சத்தில் இருக்கும் நாட்களில் தான் மறுரூபமாகும் நிலையை அப்போஸ்தலர்களுக்கு தரிசனமாக காண்பித்த கிறிஸ்து இயேசு இப்பொழுது பயந்திருந்த தன் சீஷர்களை திடப்படுத்தவே இப்படி தரிசனமானார்!! அவர் மாம்சத்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்று வாதிடுவோர் வேதம் சொல்லும் மற்ற வசனங்களை பொய்யாக்குவதாகும்!!

யோவான் 20:19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

மாம்ச சரீரம் பூட்டிய அறைகளுக்கு கதவை திறவாமல் நுழைய முடியாது!!

I பேதுரு 3:18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

மாம்சத்தில் கொலையுண்டு (மரித்து) ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்!! கிறிஸ்து ஆவியில் தான் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு நேரடியான ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு அவர் மாம்சத்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்கிறார்கள் வேத புரட்டர்கள்!!

I கொரிந்தியர் 15:50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.

பரலோக ஜீவிகள் இரத்தத்தோடும் மாம்சத்தோடும் இருக்க முடியாது!! தேவனுடைய ராஜ்யத்தில் மாம்சமும் இரத்தமும் பிரவேசிக்க முடியாதாம்!! இத்துனை தெளிவான வசனங்களை வைத்துக்கொண்டு அவர் தந்த தரிசனத்தை வைத்துக்கொண்டு கிறிஸ்து மாம்சத்தில் உயிர்த்தெழுந்தார் என்கிற போதனை கள்ள போதனையாகும்!!

தொடரும்........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard