மத்தேயு 13:31. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
32. அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகுமென்றார்.
இரண்டே வரிகளில் இன்றைய கள்ள போதகர்கள், கள்ள அப்போஸ்தலர்கள், கள்ள தீர்க்கதரிசிகளை குறித்து கிறிஸ்து இயேசு சொன்ன உவமை இது!!
பரலோக ராஜ்யம் என்பது கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறதாம்!! அதாவது அநேகர் நடக்கும் விசாலாமான பாதை (2000 சொச்ச சபைகள்) இல்லை, மாறாக சிலரே தெரிந்துக்கொள்ளும் இடுக்கமான வாசல் (சிறு மந்தை)!! கடுகு விதைக்கு ஒப்பான பரலோக ராஜ்யத்தின் போதனைகளை தந்தார் அந்த மனுஷன் (மனுஷக்குமாரனான கிறிஸ்து இயேசு)!! இடுக்கமான வாசல், கிறிஸ்துவிற்கு பின் செல்லுதல், சிலுவை சுமப்பது, பாடுகள் போன்ற உபதேசங்கள் நிறைந்திருந்து அந்த கடுகு விதை!!
இந்த கடுகு விதை விதைக்கப்பட்டதும் சிறிய செடியாக வரும் என்று நினைக்கும் போது அது சகல பூண்டுகள் ஜாதிகளிலும் பெரிதாகி, விசாலமான மரமானது!! உண்மையில் கடுகு செடி (Shrub) சிறியதாக தான் இருக்கும், ஆனால் உவமையின் படி அது சகல பூண்டுகளிலும் பெரிதாகி ஒரு பெரிய மரமானதாம்!! இந்த மரத்தின் கிளைகளில் ஆகாயத்துப்பறவைகள் (பிசாசின் போதனைகள், அதை கொண்டு வருகிற கள்ள அப்போஸ்தலர்கள், கள்ள தீர்க்கதரிசிகள் போன்றவர்கள்) வந்து அடைந்துக்கொண்டதாம்!!
ஆகாயத்துப்பறவைகள்: வான் மண்டலத்தில் பொல்லாத ஆவிகளின் கூட்டம்!!
சின்னதாக இருக்க வேண்டிய ஒரு சபை இன்று எப்படி இருக்கிறது என்று நாம் அறிவோம்!! அப்படி என்றால் ஆகாயத்துப்பறவைகள் வந்து அடையத்தகதான மரம் (2000 சொச்ச சபைகள்) போல் வளர்ந்திருக்கும் சபை தான் உண்மையான சபையா!!
சிறிய கடுகு விதை: பரலோக ராஜ்ஜயம் மனுஷன்: கிறிஸ்துவும், அவர் அபிஷேகித்து அனுப்பிய அவரின் அப்போஸ்தலர்களும் பெரிய மரம்: பல கிளைகள் கொண்ட இன்றைய போலி சபைகள் ஆகாயத்துப்பறவைகள்: பிசாசின் போதனைகள்