"உம்முடைய இராஜ்ஜியம் (பூமிக்கு) வருவதாக" என்று கிறிஸ்து வேண்டிக்கொள்ளச் சொன்ன விதம் இவர்களுக்கு கேலிக்கூத்து.
இவர்களுக்கு செவி கொடுங்கள்!
செத்தவுடனேயே நரகத்துக்கோ, பரலோகத்துக்கோதான் போக முடியும். அவிசுவாசியாக மரித்தவர்கள் பாதாளத்தில் வேதனைப்பட வேண்டும்.இவர்கள் நியாயத்தீர்ப்பில் உயிர்த்தெழுந்து(?) மீண்டும் நரகத்துக்கு அனுப்பப்படுவார்கள். (சூப்பர்). அதேபோல ஏற்கனவே பரலோகத்தில் ஏசப்பாகூட இருப்பவர்களும் உயிர்த்தெழுந்து மீண்டும் பரலோகத்துக்கே போவார்கள்.
இவர்களுக்கு செவி கொடுங்கள்.
இவர்கள் கணக்குப்படி கோடானுகோடி ஜனம் நரகத்துக்கும் சொற்ப பரிசுத்தவான்கள் (இவர்களூம் இவர்கள் குடும்பத்தாரும்) பரலோகத்துக்கும் செல்வார்கள். (நன்றி ஏசப்பா! கோடா கோடி நன்றி!!)
இராஜ்ஜியம் என்றால் என்னவென்றே தெரியாது; இராஜ்ஜியத்தின் இந்த நற்செய்தி??? சுத்தம்!!!
இவர்களுக்கு செவி கொடுங்கள்!
ஏதோ ஒரே ஒரு மொழிபெயர்ப்பை மட்டும் ஆண்டாண்டுகாலமாக வைத்துக்கொண்டு இதில் தவறே கிடையாது, வேதத்தை ஆராயவெல்லாம் தேவையே இல்லை என்று வாதிடுவார்கள். (ஆராய்ந்தால் இவர்கள் குட்டு வெளிப்பட்டு செருப்படி வாங்க வேண்டிவருமே!)மூல மொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று ஒரு மாபெரும் பொய்யை நம்புவார்கள்.
இவர்களுக்கு செவி கொடுங்கள்!
இயேசு கிறிஸ்து உலகத்தை இரட்சிக்க வந்தாலும், உலகம் அவரால் இரட்சிக்கப்படவே படாது என்பதே இவர்கள் பிரதான போதனை.
இவர்களுக்கு செவி கொடுங்கள்!
மனிதன் மரிக்கும்போது எல்லாம் முடிவடைவதில்லை; ஏன் அவன் சாகவே சாவதில்லை என்று சாத்தான் சொன்ன ஆதியாகமப் பொய்யை நம்பச்சொல்வார்கள்.
ஜெபித்து ஜெபித்து என்னத்த கிழிச்சீங்கன்னு உலகமறியும். அவர் வரும்போது விசுவாசத்தைக் காண்பாரோ என்று வசனம் சொல்கிறது. அவர் வரும்போது மாபெரும் இரட்சிப்பை இந்த உலகம் அடையும் என்று மூடத்தனமாக ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்கள். பிதா வேறு குமாரன் வேறு என்ற 'விசுவாசம்' எந்த கிறிஸ்தவனுக்கும் இல்லை, அவர் வருகையின் வசனம் நிறைவேறுகிறது....