kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிருபையா கிரியையா!!??


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கிருபையா கிரியையா!!??


//கிரியை மற்றும் கற்பனைகளைக் கைக்கொள்தல் பற்றிய வசனங்களில் சில வசனங்கள் மட்டுமே இங்கு பதியப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான வசனங்கள் உண்டு. சமயம் கிடைக்கும்போது அவை இங்கு பதியப்படும்.//

நீங்கள் சுட்டி காட்டிய வசனங்களுக்கு ஒரே வசனம்,

கலாத்தியர் 2:21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

ஆனாலும் நீங்கள் கிரியை மைய்யப்படுத்தி காண்பித்த வசனங்களுக்கு கிருபையைக்கொண்ட வசனங்களினால் பதில் தருகிறேன்!!

யோவான் 1:17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.

நியாயப்பிரமானம் என்பது இதை செய், அதை செய்யாதே வரைக்கும் அடங்கும்!! நீங்களோ அது தான் வேண்டும் என்கிறீர்கள்!! ஆனால் கிறிஸ்துவிற்குள் சேர்க்கப்பட்டவர்களுக்கு கிருபையும் சத்தியமும் கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின‌!!

அப்போஸ்தலர் 4:33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.

அப்போஸ்தலர்களுக்கு சாட்சி கொடுக்க நீங்கள் சொல்லும் கிரியை தேவைப்படவில்லை, மாறாக பூரண கிருபையே தேவையாக இருந்தது!!

அப்போஸ்தலர் 15:11 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.

அப்போஸ்தலர் 18:28 அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.

நீங்களோ கிரியையினால் விசுவாசியானவரோ!!??

அப்போஸ்தலர் 20:24 ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.

இதோ அதே கிருபையை தான் நானும் சொல்லுகிறேன்!! தேவனுடைய கிருபை தான் சுவிசேஷம் என்று பிரசங்கித்தார்கள் அப்போஸ்தலர்கள்!!

ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

ரோமர் 5:15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

ரோமர் 5:16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.

கிறிஸ்துவிற்கு முன் ஆக்கினையாக தான் இருந்தது, ஆனால் கிறிஸ்துவிற்கு பின் கிருபையினால் குற்றங்களை நீக்க படுகிறது!!

ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.

ஆனால் கிரியைகள் தான் அவசியம் என்பது தானே உங்களின் வாதம்!!

I கொரிந்தியர் 15:10 ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.

கலாத்தியர் 1:15 அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,

பவுலின் கிரியைகளினால் அல்ல மாறாக தேவனின் கிருபையினாலே அழைக்கப்பட்டவர் அவர்!!

கலாத்தியர் 5:4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.

எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

இந்த வசனம் பிரத்தியேகமாய் உங்களுக்கு:

II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

தீத்து 3:6 தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரமாகத்தக்கதாக,

இன்னும் நிறைய இருக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//உங்கள் பதிவுகளையும் எனது பதிவுகளையும் நன்றாகப் படித்துப்பாருங்கள். தனிப்பட்ட விமர்சனங்களை நான் அதிகமாகச் சொல்லியுள்ளேனா, நீங்கள் அதிகமாகச் சொலியுள்ளீர்களா என்பதைப் பாருங்கள். நிச்சயமாக நான் மிகக் குறைந்த அளவில்தான் சொல்லியுள்ளேன். நீங்களோ வரிக்கு வரி “நான் சுயநீதிக்காரன், கிரியையை நம்புவன், கிறிஸ்துவின் இரத்தத்தை அவமாக்குபவன்” என உங்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்கிறீர்கள்.//

இப்படி தான் பாவம் என்று ஒன்றை சிறிய பாவம், பெரிய பாவம் என்று பிரிக்கிறீர்கள்!! தனிப்பட்ட விமர்சனம் செய்யாமல் கேள்வி கேட்டால் அதில் நியாயம்!! நான் கொஞ்சமாக விமர்சனம் செய்கிறேன், நீங்கள் அதிகமாக செய்கிறீர்கள் என்பதில் என்ன நியாயம்!! அப்படி பார்த்தாலும், நீங்கள் சுயநீதிக்காரர், உங்கள் கிரியை நம்புவர் என்கிற ஒரே அர்த்தத்தில் ஒரே விஷயத்தை பல முறை சொல்லியிருக்கிறேன்!! ஒத்துக்கொள்கிறேன், ஆனால் இதை தானே நீங்கள் போதிக்கிறீர்கள்!!

மாறாக உங்களின் தனிப்பட்ட விமர்சனம் எப்படி என்றால், நீங்கள் ஒரு கருத்தை வைத்துக்கொண்டு, "பிறர் சொல்லுகிறது போல், நீங்கள் வசனத்தை புரிந்துக்கொள்வதில்லை" என்றும், "பிறர் தான் உங்களை காமேடியர்கள் என்று சொன்னார்கள் ஆனால் அது உண்மையாக தான் இருக்கிறது" போன்ற போதனைக்கு அடுத்த விமர்சனங்களாக இல்லாமல், தனி மனித விமர்சனமாகிறது!! நீங்கள் கிரியைகளை போதிக்கிறீர்கள் என்று சொல்லுவது எந்த விதத்தில் தனிப்பட்ட விமர்சனமாகும்!! நீங்கள் அப்படி போதிப்பதில்லையா!!??

உங்களுக்கு தான் கிருபையின் வசனத்தை எடுத்து சொல்லி, இன்னும் நீங்கள் நியாயப்பிரமானத்தின் கிரியையினால் நீதிமானாக விரும்புகிறீர்கள் என்றால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே என்று அப்போஸ்தலர் பவுல் சொல்லியதை தானே சொல்லியிருக்கிறேன்!! மேலும் வசனத்தில் சொல்லப்படுகிற உங்களுடைய கிரியையினால் அல்ல கிருபையினாலே இரட்சிக்கப்படுகிறீர்கள் என்கிறதை தானே சொல்லுகிறேன்!! நேரடியாக கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வசனங்களுக்கு நீங்கள் பதிலும் தராமால், இன்னும் நியாயப்பிரமானத்தின் போதனையை தருவதினால் கிறிஸ்துவின் இரத்தத்தை நிச்சயமாக அவமாக்குதல் தானே!! நீங்கள் சொல்லுவதை சொல்லி தானே உங்களை விமர்சனம் செய்கிறேன்!! உங்களுக்கு புரியவில்லை என்கிற குற்றசாட்டு, நீங்கள் காமேடியர்கள் என்கிற குற்றசாட்டு தான் தனிப்பட்ட விமர்சனங்கள் ஆகும்!!

சங்கீதம் 40:1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். 2 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, 3 நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.

மேலே உள்ள வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகள் தான், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் இது தாவீதிற்கு பொருந்தும்!! பவுலையும் உளையான சேற்றிலிருந்து தூக்கி கிறிஸ்துவின் மேல் நிறுத்தினார், அவர் ஏதோ கிறிஸ்துவின் பக்த்தனாக இருந்ததினால் அல்ல!! ஆக உளையான சேற்றிலிருந்து அவர் தூக்கிவிடுவதற்கு தாவீதாகவோ, தாவீதை போலவே இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதால் தான் அந்த குறிப்பிட்ட 2ம் வசனத்தை மாத்திரம் என் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி எழுதினேன்!! இதில் என்ன தவறு!! என் வாழ்க்கையில் நடந்ததை தானே எழுதினேன்!! இதில் என்ன தவறான புரிந்துக்கொள்ளுதல் இருக்கிறது!!??

//சங்கீதக்காரன் “கர்த்தருக்காகப் பொறுமையோடு காத்திருந்தாராம்; கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டாராம்”. இப்படியாக முதல் வசனம் கூறுகிறது. அப்படி கர்த்தருக்காக காத்திருந்து, அவரை நோக்கிக் கூப்பிட்டவனைத்தான் உளையான சேற்றிலிருந்து கர்த்தர் தூக்கி எடுத்தார்.//

அதான், சங்கீதக்காரனுக்கு அது பொறுந்தியது!! ஆனால் அப்படி இருந்தால் தான் அவர் உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுக்கிறார் என்பது உங்கள் புரிந்துக்கொள்ளுதல்!! அதற்கு தான் பவுலை எடுத்துக்காட்டாக சொன்னேன்!! அவர் கிறிஸ்துவர்களை கொலை செய்யும் கொலைக்காரனாக தானே இருந்தார்!! தேர்ந்தெடுக்கப்பட்ட 12 அப்போஸ்தலர்களும் கர்த்தருக்காக காத்திருந்தவர்கள் என்று இருக்கிறதா!!?? நீங்கள் தேவனின் முன்குறித்ததலையும் ஏற்பவர் அல்ல, ஆகவே தான் நீங்கள் நீதியின் கிரியையாக தோன்றுவதை மாத்திரமே வசனக்களாக கொடுக்கிறீர்கள்!! நான் கேட்ட வசனங்களுக்கு நீங்கள் பதில் தந்தாகிவிட்டதா!! பிரதானமாக‌,

கலாத்தியர் 2:21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்!!??

//சங்கீதக்காரனைக் குறித்து மற்றுமொரு கேள்வி. எல்லாரையும் தேவன் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார் என்கிறீர்கள். அப்ப்டியானால் சங்கீதக்காரனும் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்டவர்தானே? அப்படிப்பட்ட அவர், (தேவன் அவரை உளையான சேற்றிலிருந்து எடுப்பதற்கு முன்பாகவே) எப்படி கர்த்தருக்காகப் பொறுமையோடு காத்திருப்பவரானார்? எப்படி கர்த்தரை நோக்கி கூப்பிடுபவரானார்? தேவனால் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்ட அவர், தேவனை மீறி வெளியே வந்துவிட்டாரா?  //

உங்கள் கேள்விகளுக்கு வசன பதில்:

ரோமர் 8:30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

இந்த வசனத்தை புரிந்துக்கொண்டீர்களென்றால் சங்கீதக்காரன் மாத்திரம் இல்லை, ஏன் பவுல், யோவான் போன்றோரும் அப்படி இருந்தார்கள் என்பது புரிந்துக்கொள்வீர்கள்!!

//நீங்கள் உங்களை “உளையான சேற்றிலிருந்து” எடுக்கப்பட்டவர் என்கிறீர்கள். அப்படியானால் உங்களைப் பார்க்கிற பலர், தேவனுக்குப் பயந்து அவரை நம்பியுள்ளார்களா? (உங்களைக் குறித்த தனிப்பட்ட இக்கேள்வி, என் வாதத்திற்கு நேரடியாக தொடர்புடையதாக இருப்பதால் இக்கேள்வியைக் கேட்கிறேன்.)//

சங்கீதக்காரன், நியாப்பிரமானத்தினால் நீதிமானாக இருப்போருக்கு அப்படிப்பட்ட ஒரு சிலாக்கியம் இருந்திருக்கலாம், ஆனால் கிறிஸ்துவிற்குள் அப்படி இல்லையே,

மத்தேயு 5:11 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

மத்தேயு 10:22 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்;

மத்தேயு 24:9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.

மாற்கு 13:13 என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

லூக்கா 21:17 என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.

யோவான் 15:18 உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.

யோவான் 15:19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

யோவான் 15:23 என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.

உங்கள் போதனை நியாப்பிரமான கிரியைகளின் போதனையாக இருப்பதினால் சங்கீதக்காரனை தான் கூப்பிடுகிறீர்கள்!! கிறிஸ்துவின் நிமித்தம் நிந்தையும், பாடுகளும் பரிகாசங்களும் தான் இருக்கும் என்கிறதற்கு போதுமான வசனங்கள் இருக்கிறது!!

இன்னும் இருக்கிறது...............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//தன் கண்ணில் உத்திரத்தை வைத்துக்கொண்டு பிறன் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப்போடுவனைத்தான் இயேசு கடிந்துகொண்டார் (மத்தேயு 7:3,4). தன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்தபின்னர் பிறன் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட இயேசு அனுமதி கொடுத்துள்ளார் (மத்தேயு 7:5). எனது கண்ணில் உத்திரம் இலையென நீங்களே ஒத்துக்கொண்டீர்கள். எனவே உங்கள் கண்ணிலுள்ள துரும்பை மட்டுமல்ல, உத்திரத்தையும் எடுத்துப்போட எனக்கு அனுமதி உண்டுதான்.//

நான் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்லி முந்திக்கொள்கிறீர்கள்!! நீங்கள் ஒப்புக்கொண்டதை தான் நான் எழுதியிருந்தேன்!!

//நிச்சயமாக நான் மிகக் குறைந்த அளவில்தான் சொல்லியுள்ளேன். //

சொல்லுவதில் என்ன மிகக் குறைந்த அளவில், அதிக அளவில் என்று தான் கேட்கிறேன்!! குறைந்த அளவிலாவது தனிப்பட்ட விமர்சனம் செய்ய தான் செய்கிறீர்கள்!! எனக்கு வசனம் புரியவில்லை என்று நீங்கள் உங்கள் பார்வையில் இருந்துக்கொண்டு சொல்லுகிறீர்கள்!! உங்களுக்கு புரியவில்லை என்று சொல்ல எனக்கு மாத்திரம் தடையா!!?? ஆக உங்கள் கண்ணில் மாத்திரம் என்ன இருக்கிறது என்னை குறை கூறுகிறீர்களே!!

ஒரு மனிதனுக்கு தேவன் தந்திருக்கும் இயல்பை நீங்கள் பெரிது படுத்துகிறீர்கள், அவ்வளவே!! இரக்கம் செய்வது என்பது தேவனின் தன்மை, அன்பு செய்வது தேவனின் தன்மை, அவரின் சாயலில் (தன்மையில்) இருக்கும் மனிதர்களுக்கு அவரே இதை கொடுத்திருக்கிறார்!! இதில் நீங்கள் ஏன் பெருமை பாராட்டுகிறீர்கள்!!?? நான் பெருமை பாராட்டுவது தேவனின் கிருபையை, இதற்கு உங்களிடத்தில் பதில் இல்லை!! நான் வசனத்தை காட்டினால், எங்கள் ஆஸ்தான அப்போஸ்தலர் (ஏன் உங்களுக்கு யார்??) பவுல் எழுதிய இந்த வசனத்தை அப்படியே ஓரம் கட்டி விட்டுவிடுகிறீர்களே!!

//நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே எனக் கலாத்தியர் நிருபத்தில் கூறிய அதே பவுல்தான் அதே கலாத்தியர் நிருபத்தில் இப்படியும் கூறியுள்ளார்.//

இந்த வசனம் என்ன சொல்லுகிறது என்றும் விவாதிக்க வேண்டும் அல்லவா, இது அப்படியே இருந்து விட்டு போகட்டும் என்று ஏன் விட்டுவிடுகிறீர்கள்!!??

//முதலாவது இக்கேள்விகளுக்கு பவுலிடமிருந்து பதிலைப் பெற்று எல்லோருக்கும் சொல்லுங்கள். அதன்பின்னர் உங்கள் மற்ற கேள்விகள் மற்றும் மேற்கூறிய விமர்சனங்களுக்கு நான் பதில் தருகிறேன்.//

நான் ஒன்றும் வானத்திலிருந்து குதித்து வந்து என் சொந்த சரக்கை உங்களிடத்தில் கொடுக்கவில்லை!! வேத வசனத்துடன் கேட்கப்பட்டதில், வெறும் கேள்விகளை மாத்திரம் உங்கள் தளத்தில் போட்டிருப்பது திசை திருப்புதலாகும்!! அந்த கேள்விகளுக்கான வசனங்கள் ஒன்றும் நான் சொந்தமாக தையாரித்து யோசித்து எழுதியது கிடையாது??

இப்படி ஏன் வசனங்களை எழுதி கிருபையை ஓங்க செய்திருக்கிறீர்கள்!! அப்படி என்றால் கிரியையின் உபதேசம் ஏன் என்று நீங்களும் பவுலிடம் கேட்களாமே!! அப்படியே எல்லாரையும் அடிமைத்தனத்திற்குள் அடைத்துப்போட்டு உங்களை போன்ற சிலரலை மாத்திரம் சுதந்திரமாக விட்டார் தேவன் என்றும் கேட்டு வாருங்கள்!!

பவுல் கிரியை குறித்து சொல்லியிருந்தாலும் தேவனின் கிருபையே மேலோங்கும் என்கிறது என் நம்பிக்கை!! அதை தான் முதலிலேயே எழுதினேன், நீங்கள் கிரியையில் நிலைத்திருங்கள், நான் கிருபையில் இருக்கிறேன் என்று!!

II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

கிரியை என்பது மத சம்பந்தமானது மாத்திரம் அல்ல, அது கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களும் செய்வது தான்!! தேவ சாயலில் மனிதன் இருப்பதால் கிரியை சாத்தியமே!! ஆனால் கிரியை செய்துக்கொண்டு தேவன் இல்லை என்று சொல்லுபவன் மேலும் தேவனின் கிருபையே கிறிஸ்துவின் மூலமாக வெளிப்படுகிறது!! மேலே உள்ள வசனம் அதற்கே சாட்சி!!

மத்தேயு 5:2. அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்: 3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 4. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். 5. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். 6. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். 7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். 8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். 9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். 10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 11. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். 12. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்;

இந்த வசனங்கள் எல்லாமே கிரியை தான் போதிக்கிறதா??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இதற்கு எதிர்வாதமாகத்தான் நான் சில கேள்விகளைக் கேட்டுள்ளேன். அவற்றிற்கு முதலாவது பதில் சொல்லுங்கள்.//

//கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏன் இந்த Lecture?//

//நான் கேட்ட கேள்விக்கு பதில் தராமல், புதிய கேள்வியைத் தொடங்கிவிட்டீர்கள்.//

கலாத்தியர் 2:21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

இந்த வசனத்திற்கு பதில் சொல்லுங்கள் என்று தானே நான் கேட்கிறேன்!! ஏன் நீங்கள் முதலில் பதில் கொடுக்க கூடாதா?? மேலும் நீங்கள் கொடுத்திருந்த வசனங்களான மத்தேயு 5ம் அதிகாரத்தின் வசனங்களை தான் நானும் எழுதி கேள்வி கேட்க்கிறேன்!! இது ஒன்றும் திசைதிருப்பும் முயற்சியல்ல‌!!

தெரியும் தெரியும் என்று ஏன் பதில் தராமல் இருக்கிறீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//தேவகிருபை வேண்டாம் என நான் ஒருபோதும் சொல்லவில்லை; தேவகிருபையும் வேண்டும், நம் கிரியையும் வேண்டும் என்றுதான் நான் சொல்லிவருகிறேன். தேவகிருபை என்பது ஏற்கனவே எல்லோருக்கும் பலித்துவிட்டது. இது ஒரு தகவல் மட்டுமே. அதையே மீண்டும் மீண்டும் சொல்வதால் யாருக்கும் பயனில்லை.//

அதாவது தேவ கிருபையும் வேண்டும் என்கிறீர்கள் ஆனால் அத்துடன் நம் கிரியையும் வேண்டும் என்கிறீர்கள்!! இப்படி எழுதுவது தான் தேவனின் கிருபையை அவமாக்குவதாகும் என்கிறேன்!! இதை தான் கிரியையில் மேன்மை பாராட்டுகிறீர்கள் என்கிறேன்!! அதாவது தேவ கிருபை தானே, அது தான் ஒரு முறை சொல்லிவிட்டாரே, அது எல்லாம் கொடுத்துவிடுவார் என்கிறதும், ஆனால் கிரியை என்பது நான் , என் முயற்சியில் செய்வது என்கிறீர்கள்!!

கிருபை என்பது ஒரு தகவல் மட்டுமே என்கிற அளவிற்கு தேவ கிருபை உங்களுக்கு வெளிப்பட்டிருக்கிறது!! அய்யா, கிருபையை தான் தேவனின் சுவிசேஷமாக அறிவித்திருக்கிறார்கள் அப்போஸ்தலர்கள்!! வேதத்தில் அடிக்கடி கிருபையை குறித்து இருப்பது உங்களுக்கு ஒரு தகவல் மட்டுமே என்கிற அலவிற்கு உங்கள் போதனை இருக்கிறது!! கிருபையை மீண்டும் மீண்டும் சொல்லுவதினால் ஒரு பயனும் இல்லை என்று நீங்கள் எந்த அதிகாரத்தில் சொல்ல முடியும்!!

கிரியை செய்தும் மரணத்திலிருந்து விடுப்படமுடியாத ஜனங்கள் அழிந்துக்கொண்டு இருந்தார்கள்!! கிறிஸ்துவின் ஈடுபலியினால் அந்த கிருபை வெளிப்பட்டது, அது ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது!! உங்களுக்கு இன்னும் விளங்கவில்லை, ஆகவே தான் கிருபையை இத்துனை மட்டமாக, அதுவும் இருந்துவிட்டு போகுது என்கிற அளவிற்கு எழுதுகிறீர்கள்!!

மாம்சத்தின் கிரியைகள் என்கிற ஒரு பெரிய லிஸ்டை தந்திருக்கிறீர்கள், அப்போஸ்தலர் எழுதியதை!! சரி, அதினால் என்ன இப்போ!! அந்த லிஸ்ட்டில் இருப்பது ஒன்றும் உங்களிடத்தில் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா!! என்னிடத்தில் இதில் ஒன்றும் இல்லை என்று சொல்லுபவன் பொய்யனும், சத்தியம் அவனிடத்தில் இருக்காது என்கிறார் அப்போஸ்தலரான யோவான்!! என்னிடத்தில் இதில் இருந்து நிச்சயமாக ஒரு சில கிரியைகள் இருக்கும், ஆனால் அந்த கிரியைகளுக்கு மேலாக தான் தேவ கிருபை இருப்பதினால் தான் தேவனின் ராஜியத்தின் நிச்சயம் எனக்கு இருக்கிறது!! ஆகவே தான் இந்த வசனம்:

II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

நீங்கள் சொல்லுகிறீர்கள், அதையே (கிருபையை) மீண்டும் மீண்டும் சொல்லுவதால் ஒரு பயனும் இல்லை என்று, ஆனால் வேதம் சொல்லுகிறது,

I கொரிந்தியர் 15:10 ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.

ரோமர் 5:15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

இந்த வசனத்தில் மீறுதல் என்பது கிரியை!! ஆனால் அந்த கிரியை தேவனின் கிருபைக்கு முன்னால் ஒன்றும் இல்லை என்கிறது வசனம்!! ஆனால் நீங்களோ, கிருபை இருக்கட்டும் என் கிரியை தான் பெரிது என்கிறீர்கள்!! கிருபையை மீண்டும் மீண்டும் சொல்லுவதால் யாருக்கு பயன் என்கிற அளவிற்கு உங்களின் போதனை இருக்கிறது!! ஆனால் அப்போஸ்தலருக்கு கிருபையை அறிவுப்பது தான் சுவிசேஷமாகவும், அதற்காகவே அவர் அப்போஸ்தலராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்:

அப்போஸ்தலர் 20:24 ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.

வாழ்க்கை முழுவதும் அவர் தேவனின் கிருபையை சொன்னது உங்களுக்கு அற்பமாக இருக்கலாம், ஏனென்றால் கிரியை அந்த அளவிற்கு உங்களுக்கு வலிமையாக இருக்கிறது!!

கிரியையினால் நித்திய ஜீவன் என்று வசனத்தை காட்டினீர்கள்!!

ஆனால் தேவனையும், அவர் அனுப்பிய கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் என்று மற்றோரு வசனமும் சொல்லுகிறதே!! அந்த கிறிஸ்து தானே தேவ கிருபை!! அப்படி என்றால் அந்த கிறிஸ்துவை தானே, ஏன் மீண்டும் மீண்டும் சொல்லுகிறீர்கள் என்கிறீர்கள்!!?? நல்லது!!

//அப்பாவங்களை நம்மைவிட்டு நீக்கி நம்மை நீதிமானாக்குவது தேவகிருபையேயொழிய நாம் செய்கிற நீதியின் கிரியையல்ல. தேவகிருபையால் நீதிமானாக்கப்பட்ட நாம், தொடர்ந்து நீதிமானாக நிலைத்திருக்க வேண்டுமெனில், நாம் நீதியின் கிரியைகளைச் செய்யவேண்டும். மற்றபடி நாம் நீதியின் கிரியைகளைச் செய்வதால்தான் நாம் நீதிமானாகிறோம் என எண்ணுவதையும் அதினிமித்தம் மேன்மைபாராட்டுவதையும் விட்டுவிடு//

அய்யா, இரட்சிக்கப்படுவதற்கே தேவ கிருபை தான் தேவையாக இருக்கிறது!! இந்த கிருபை வெளிப்பட்டது சுமார் 2000 வருடங்கள் முன் தான், இந்த கிருபை தான் உலகத்தில் வந்த முதல் மனிதன் தொடங்கி முடிவு பரியந்தம் உள்ள அனைவரையும் இரட்சிக்கும், நீதிமான்களாக்கும் (ஏற்கனவே ஆக்கிவிடவில்லை)!! நீதிமான் ஒருவனும் இல்லை என்கிற வசனத்திற்கு மாற்று போதனை நீங்கள் சொல்லுவது!! நீங்கள் கிருபையினால் நீதிமானாக மாற்றப்படுகிறீர்களே தவிர, ஏதோ உங்களின் கிரியை செய்தல் உங்களை இப்பவே, இந்த பாவ உலகத்திலேயே உங்களை நீதிமானாக்கிறது என்பது தவறான போதனையாக தோன்றுகிறது!! தேவ கிருபையால் நீதிமானக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அந்த கிருபையை வேண்டி இருப்பது சரி, ஆனால் தொடர்ந்து நீதியின் கிரியை நிலைத்திருக்க வேண்டும் என்று எந்த வசனம் சொல்லுகிறது!! இதற்கு வசனம் இருக்கிறதா??

நீங்கள் எழுதியது நிச்சயமாக குழப்பமாக உள்ளது!! நீதிமானாக நிலைத்திருக்க வேண்டுமெனில் நீதியின் கிரியை செய்யவேண்டும் என்கிரீர்கள், ஆனால் அதில் மேன்மை பாராட்டாமல் வேறு எதில் மேன்மை பாராட்ட வேண்டும் என்று உங்களால் சொல்ல முடியவில்லை!! ஏனென்றால் அது தான் தேவ கிருபை!! ஆனால் திரும்ப திரும்ப அதை சொல்லுவதால் என்ன பயன் என்றும் கேட்கிறீர்கள்!!

//Truth Seekers தளத்தின் நிர்வாகியான உங்களுக்குத்தானே உண்மையைக் கண்டறிந்து மற்றவர்களுக்குச் சொல்வதில் முதல் பொறுப்பு உள்ளது?//

என்றால் சத்தியத்தை தேடுவோர், ஆராய்வோர் என்று தான் அர்த்தமே தவிர, மற்றவர்களுக்கு சொல்வதில் முதல் பொறுப்பு உள்ளது என்று நீங்களாகவே ஒரு நியமனத்தை கொண்டு வர வேண்டாம்!!

//கிரியை தேவையில்லை என அடம்பிடிக்கும் நீங்கள்தானே கிரியைபற்றிய வசனங்களுக்கு விளக்கம் தரவேண்டும்?//

கிரியை தேவையில்லை என்று எங்கு எழுதியிருக்கிறேன்!! கிரியை எதற்கு உதவாது என்று தான் எழுதியிருக்கிறேன்!! கிருபையே மேலோங்கும் என்று எழுதியிருக்கிறேன்!! கிரியை என்பது நமக்குள் இருக்கும் சுவபாவம் என்று எழுதியிருக்கிறேன், ஆகையால் கிரியை செய்வதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று எழுதியிருக்கிறேன்!! கிரியை செய்வோரை (ஏனென்றால் கிறிஸ்தவர்கள் மாத்திரம் நீதியின் கிரியை செய்கிறவர்கள் கிடையாது) நிச்சயமாக மெச்சிக்கொள்வோம், ஆனால் கிருபையே நம்மை இரட்சிக்கும், நம்மை மாத்திரம் அல்ல, கிரியை மாத்திரம் போதும் என்று இருப்போரையும் தான்!! கிரியை தெரியாத மதமே கிடையாது, ஆனால் கிருபையை யார் அறிவார்கள், யார் அறிவிப்பார்கள்!!??

//இதை நீங்கள் ஒத்துக்கொண்டால், எல்லா விஷயங்களுக்கும் நான் விளக்கம் தருகிறேன். ஒத்துக் கொள்ள முடியாதெனில், “நீங்கள் தான் முதலில் விளக்கம் தரவேண்டும்”.//

என் விளக்கம் தந்தாகிவிட்டது!! கிரியை என்பது மனிதக்குலம் முழுவதும் இருக்கிறது, ஏனென்றால் எல்லா மனிதர்களும் தேவனின் சாயலில் உண்டானவர்களே!! கிரியை இயல்பு!! எதை குறித்து மீண்டும் மீண்டும் பேசக்கூடாதோ அதை நீங்கள் பேசுகிறீர்கள்!! எதை குறித்து அனைவரிடம் எடுத்து சொல்ல வேண்டுமோ, அதாவது கிருபை, அதை உங்கள் மட்டில் மீண்டும் மீண்டும் சொன்னால் பிரயோஜனமற்றது என்கிறீர்கள்!! மேலும் முட்டாள் லூசு என்று நானாகவே யாரையும் சொல்லி எழுதியதில்லை, ஆனால் காரணம் இல்லாமல் சொல்லும் போது கிறிஸ்துவுக்கு வந்த அதே கோபம் எனக்கும் வரும்!! என் கோபத்தின் மத்தியிலும் தேவனின் கிருபையே என்னை சரிச்செய்யும் என்கிற விசுவாசத்தை வேதத்தை தந்த தேவன் தந்திருக்கிறார்!! ஆகவே கிருபை குறித்தே மேன்மைப்பாராட்டுவேன், கிரியை குறித்து அல்ல!! கிரியையை அறியாத ஜனம் இல்லை, ஆனால் கிருபையை கிறிஸ்தவர்களே அறிவதில்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//கிருபை வெளிப்பட்ட பின் எல்லோரும் அழியாமலா இருக்கிறார்கள்? இப்போதும் ஜனங்கள் அழிந்துகொண்டுதானே இருக்கிறார்கள்?//

ஜனங்கள் அழிவிற்கு மரிப்பதில்லை, கிறிஸ்து எனும் அந்த கிருபையின் ஈடுபலி அனைவரையும் உயிர்ப்பிக்கும்!! நீதியின் கிரியை ஒருவனை உயிர்ப்பிக்க முடியாததால் தான் கிருபை தேவைப்பட்டது!! அந்த கிருபையை தான் நற்செய்தியாக "மீண்டும் மீண்டும்" அப்போஸ்தலர்கள், சொன்னார்கள், அனுபவித்தார்கள், பிரசங்கித்தார்கள், போதித்தார்கள்!!

//மீண்டும் மீண்டும் என்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத்தான் முன்வருகிறீர்களேயொழிய, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லமாட்டேன் என்கிறீர்களே! எனது போதனை எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும். அது சரியா தவறா என விவாதத்தின் இறுதியில் தீர்மானித்துக்கொள்வோம். இப்போது எனது கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.//

என்ன சகோதரரே நீங்கள்!! "மீண்டும் மீண்டும்" கிருபையை போதிப்பதால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் நான்கேட்டால் மாத்திரம் உங்களுக்கு அது தனிப்பட்டதாகி விடுகிறது!! நீங்கள் கிரியை கிரியை என்று கிரியையின் வசனத்தை எடுத்து சொல்லுகிறீர்கள், அதை நான் எழுதினால் எப்படி அது தனிப்பட்ட விமர்சனம் ஆகிறது!!

//அய்யா, பவுல் சொல்கிற வசனம் எதையும் நான் மறுக்கவுமில்லை, புறக்கணிக்கவுமில்லை. ஆனால் இப்படியெல்லாம் சொன்ன அவர், கலாத்தியர் 5:19-21-ல் இன்னின்ன அநீதிகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என ஏன் சொன்னார்? அநீதிகளைச் செய்தவர்களுக்குக் கிருபை கிடையாதா? அவர்களுக்கு கிறிஸ்துவின் இரத்தம் வீணாகிப் போனதா? இதுதான் என் கேள்வி.//

அப்படியே தான் நானும் கிரியை ஒன்றும் மறுக்கவில்லை, கிரியை செய்யக்கூடாது என்று எங்காவது போதித்திருக்கிறேனா!! நீங்களே இந்த குற்றசாட்டை சுமத்துகிறீகள்!! கிருபை இல்லாமல் இரட்சிக்கப்படவே முடியாது என்று வசனம் காண்பித்தாலும் நீங்கள் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்!! எந்த அநீதிக்காரனுக்கும் கிறிஸ்துவின் இரத்தம் வீணாகி போவதில்லை, அனைவரும் அவரின் ஈடுபலியின் பலனை பெறுவார்கள், அவர்கள் நீதியின் கிரியை செய்திருந்தாலும் சரி, செய்யாமல் போனாலும் சரி!! நீங்கள் உங்கள் கருத்துக்களை என் மீது தினிக்கப்பார்க்கிறீகள், விவாதிக்கவில்லை!!

//பாவம் செய்கிறவன் கிறிஸ்துவை அறியவில்லையாம். சும்மா கிறிஸ்துவை அறிந்துவிட்டேன் எனச் சொல்லிவிட்டு கிரியை இல்லாமல் வஞ்சிக்கப்பட்டு போகவேண்டாம். பாவம் செய்யாமலிருந்தால்தான் (அதாவது கிரியை இருந்தால்தான்) கிறிஸ்துவை அறிதல் என்பது முழுமை பெறும். //

அப்படி என்றால் இந்த வசனம் மட்டும் என்ன சொல்லுகிறது:

1 யோவான் 1:8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
1 யோவான் 1:10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

கிறிஸ்துவை அறிவிப்பது கிரியையாக இல்லாமல் கிருபையாகவே இருக்கிறது என்று தானே அப்போஸ்தலர் சொல்லுகிறார்!! கிறிஸ்துவை அறிந்ததினால் தான் கிருபையை பேசுகிறேன்!! கிருபையை அறிவிப்பதே கிறிஸ்துவை அறிவிப்பதாகும்!! கிரியைகளை யார் தான் செய்வதில்லை என்று எத்துனை முறை கேட்டாகிவிட்டது!! ஆனால் கிறிஸ்துவை அறிந்தவனே கிருபையை அறிய முடியும், அறிவிக்க முடியும்!!

பாவம் செய்கிறோமென்றால் தேவனிடத்தில் மன்னிப்பு பெறுவதும் கிருபையே!!

//ஆமாமய்யா, தேவனையும் கிறிஸ்துவையும் அறிவதுதான் நித்திய ஜீவன் என வசனம் சொல்வதை மறுக்க முடியுமா? ஆனால் வசனம் இப்படியும் சொல்கிறதே!//

எந்த வசனம் கொடுத்தாலும் அந்த வசனத்திற்கு பதில் கொடுக்காமல், இப்படியும் சொல்லுகிறதே என்று தான் விவாதம் செய்கிறீர்கள்!!

//கிருபையை மீண்டும் மீண்டும் சொல்வதினால் என்ன பயன் என்பதை நீங்கள் சொல்லுங்கள். அதை உங்களால் சொல்லமுடியவில்லையெனில், “பயன் இல்லை” என்றுதானே அர்த்தம்?//

யோவான் 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

அப்போஸ்தலர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை!! கிருபையாக தன் ஆவியை அருளிய பிறகே அவர்கள் பெலன் பெற்று செல்கிறார்கள், அந்த கிருபையை போதிக்கவே!!

மீண்டும் மீண்டும் கிரியையை சொல்லுவது மனிதர்களின் "தான்" என்பதை சொல்லுகிறது!!  கிருபையின் போதனை "தான்" அல்ல தேவனையே மகிமைப்படுத்தும்!!

கிருபை மன்னிப்பை பெற்று தருகிறது எந்த விதமான கிரியையும் தேவையில்லாமல்:
லூக்கா 18:13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

ஆனால் கிரியை செய்கிறவர் சொல்லுவது:
லூக்கா 18:11. பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

இப்பொழுது இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்:
லூக்கா 18:14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

எப்படி உயர்த்தினான்!! நான் அதை செய்கிரேன், இதை செய்வதில்லை, அவனை போன்று இருப்பதில்லை!! நீங்கள் விவாதம் செய்வது போல், நானும் எழுதலாம், இப்படி கிரியை கிரியை என்று சொல்லுபவர்கள் தாழ்த்தப்படுவார்கள் என்று நான் அல்ல கிறிஸ்து இயேசுவே சொல்லுகிறார் என்று!!

முறனாக தோன்றும் வசனங்கள் இருந்தாலும், எது தேவனை மகிமைப்படுத்துகிறதோ அதை பின்பற்றலாமே!!

கிறிஸ்துவின் மூலம் கிருபை; மாம்சத்தின்படி மோசேயின் மூலம் நியாயப்பிரமானம் (கிரியை):
யோவான் 1:17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.

நான் இந்த கிருபையை போதிக்க பிரயாசப்படுகிறேன், ஏனென்றால் அந்த கிருபை எனக்குள் வாசம் செய்வதால்!! நான் மோசேயின் நியாயப்பிரமானத்தை போதிக்க விரும்பவில்லை, ஏனென்றால் எனக்கு கிரியைக்காட்டிலும் கிறிஸ்து எனும் கிருபையே மேலாக இருக்கிறது!!

அப்போஸ்தலர் 4:33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை போதிக்க அப்போஸ்தலர்களுக்கு கிருபை உண்டாயிருந்தது!!

கிருபையை போதிப்பது சந்தோஷப்படுவதற்கும், மனநிர்ணயமாய் இருப்பதற்கும்!!
அப்போஸ்தலர் 11:23 அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.

இந்த கிருபையை போதிப்பது கிறிஸ்துவை போதிப்பதாகும்!! கிறிஸ்துவினால் வரும் இரட்சிப்பை போதிப்பதாகும்!! கிறிஸ்துவின் தேவனை அற்கிற அறிவு வரும்!!

I கொரிந்தியர் 15:10 ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.

ரோமர் 5:15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

இந்த வசனத்தில் மீறுதல் என்பது கிரியை!! ஆனால் அந்த கிரியை தேவனின் கிருபைக்கு முன்னால் ஒன்றும் இல்லை என்கிறது வசனம்!! 

கிறிஸ்து போதித்தது நியாயப்பிரமானத்தின் கீழான யூதர்களுக்கு!! ஆனால் புறஜாதியாரிடம் போய் கிருபையையே சுவிசேஷமாக பிரசங்கிக்க வைத்தது அந்த கிருபையே!! ஏதோ பவுல் விருதாவாக கிருபையின் சுவிசேஷத்தை பிரசங்கிக்க பிரயாசப்படவில்லை, அவனை பிரயாசப்பட வைத்ததே கிருபை தான் என்கிறது வசனம்!!

கிருபையை போதிப்பது தேவனை மேன்மைபாராட்டுதலாகும்:
ரோமர் 5:2 அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

கிருபையினாலே தேவனையும் அவரின் கிறிஸ்துவை அறியும் விசுவாசத்தில் நடத்தப்படுகிறேன், ஆகவே மேன்மைபாராட்டுகிறேன்!!

நியாயப்பிரமான கிரியைகள் பாவத்தை பெருக்கின!! ஏனென்றால் எப்படியும் அடுத்த வருடம் பலி செலுத்தி பாவ நிவாரனம் பெற முடியும் என்கிற கிரியையின் மேல் விசுவாசம் இருந்தது நியாயப்பிரமனத்தார்க்கு!! ஆனால் பாவம் பெருகின போது கிருபையானது அதிகமாய் பெருகிற்று, பாவ மன்னிப்பு கிரியையினால் அல்ல, விசுவாசத்தினால் வந்தது!! ஆகவே கிருபையை போதிக்கிரேன்

ரோமர் 5:20 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.

//இயேசு சொன்னது: இந்தக் கற்பனைகளைக்கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

இயேசு சொன்னதைச் செய்து, பரலோக ராஜ்யத்தில் பெரியவன் எனப்பட வேண்டும் என்பது எனது ஆசை. அப்படி நான் பெரியவன் எனப்படுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? //

இந்தக் கற்பனைகள் என்பது முழு நியாயப்பிரமானத்தை குறிப்பதாகும்!! இது இயேசு கிறிஸ்து எனும் கிருபையை பற்றிக்கொள்வோருக்கு சொல்லப்படவில்லை, நியாப்பிரமானத்தினால் நீதிமான் ஆகலாம் என்கிற யூதர்களுக்கு சொல்லப்படது!!

//சரி, பவுல் சொன்னது எனக்கு அற்பமாக உள்ளது; அப்படியே வைத்துக்கொள்வோம். ஆனால் இயேசு சொன்னதை நான் அற்பமாக எண்ணுவதா, வேண்டாமா? அதைச் சொல்லுங்கள்.//

பவுல் அப்புறமாக சொன்னது ஒன்றும் தன் சுயமாக போதிக்கவில்லை!! அதை கிறிஸ்துவே அவனுக்கு போதித்திருக்கிறார்!! இயேசு கிறிஸ்து நியாயப்பிரமானத்தின் கிரியையை யூதர்களிடம் போதித்தது உங்களுக்கு என்று எண்ணுவதை என்னால் ஒன்றும் மாற்ற முடியாது!! நீங்கள் என்று ஏதாவது எழுத போய் கடைசியில், என்னை ஏன் விமர்சனம் செய்கிறீகள் என்று கேட்ப்பீர்கள்!!

அப்போஸ்தலர் 20:26. தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,

பவுல் தானே சொன்னான், அது இருக்கட்டும் என்று சொல்லுவது உங்கள் உரிமை, நான் அதில் தலையிட விரும்பவில்லை, ஏனென்றால் பவுல் சொன்னது அனைத்துமே தேவனின் ஆலோசனையின்படியே அன்றி, அவனின் சொந்த முயற்சியால் அல்ல‌!!

//கிறிஸ்துவை அறிந்துள்ளேன் எனச் சொல்லிவிட்டு அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளாமலிருக்கிறீர்களா?//

நீங்கள் சொல்லும் அந்த கற்பனைகள் யூதர்கள் பின்பற்றிய நியாயப்பிரமானங்களே!! கேள்வி கேட்க ஏதை வேண்டுமென்றாலும் எழுத வேண்டாம்!! இங்கே கற்பனை என்று சொல்லப்படுவதில் என்ன கிரியை கண்டீர்கள்!!??

//சும்மா கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் எனச் சொல்லிவிட்டு, நிசான் மாதம் இந்த நாளில் இந்த நேரத்தில்தான் ராப்போஜனம் எடுக்கவேண்டும் எனச் சொல்லி இராப்போஜனம் எடுப்பதாலோ (முங்கி, தெளித்து, ஓடுற நீரில், தொட்டி நீரில்) ஞானஸ்நானம் எடுப்பதாலோ பயனில்லை. கிறிஸ்து நடந்தபடியே நாமும் நடக்கவேண்டும், ஆம், கிரியை வேண்டும்.//

கிறிஸ்து சொன்னதையும் அவரின் அப்போஸ்தலர்கள் சொன்னதையும் தான் செய்கிறோம்!! ஆனால் நியாயப்பிரமானம் தான் முக்கியம் என்று நீங்கள் இருந்தால் இருந்துக்கொள்ளுங்கள்!! ஏது எங்களுக்கு பயனுள்ளது, எது பயனில்லாதது என்பதை நாங்கள் முடிவு செய்த்துக்கொள்கிறோம்!! என்னமோ நீங்கள் விமர்சனமே செய்யாதது போல் என்னை கேள்வி கேட்டு அசிங்கப்படுத்துகிறீகள்!!

இவை எல்லாம் கிறிஸ்துவும் அவரின் அப்போஸ்தலரும் சொன்னதே:

லூக்கா 22:19 பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

I கொரிந்தியர் 11:24 ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

I கொரிந்தியர் 11:25 போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

நாங்கள் வேதம் சொல்லுவது போல் இதை எப்ப வேண்டுமென்றால் வைத்துக்கொள்வோம், அதில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை!! நீங்கள் என்னை கேள்வி கேட்டு என்னையே இன்னும் கொச்சையாக விமர்சிப்பது மிகவும் கேவலமாக இருக்கிறது!! இப்ப தான் உன்மையான நீங்கள் யார் என்று தெரிய வருகிறது!!

நான் ஓடுகிற தண்ணீரில், நிர்க்கிற தண்ணீரில் எதில் வேண்டுமென்றாலும் முங்கி எழுந்து என் விசுவாசத்தை அறிக்கை செய்வேன், உங்களுக்கு அதை கேட்க எந்த உரிமையும் கிடையாது, புரிகிறதா!! கிறிஸ்து சிலுவையில் நிறைவேறி தீர்த்த நியாயப்பிரமானத்திற்கு எந்த அளவிற்கு வக்காலத்து வாங்குகிறீர்களோ, அதைவிட ஒரு படி மேல் நான் கிறிஸ்து சொன்ன அனைத்தையும் (யூதர்களுக்கு சொன்ன நியாயப்பிரமானத்தின் கற்பனைகளை அல்ல, மாறாக கிறிஸ்துவின் சபைக்கு சொல்லப்பட்ட அனைத்தையும்) கடைப்பிடிக்கிறேன்!! உங்களுக்கு அதை சம்பந்தப்படுத்தி கேள்வி கேட்க ஒரு அதிகாரமும் இல்லை!!

//அய்யா, தேவனை நீங்கள் அறிந்துள்ளீர்கள் என அறிக்கை பண்ணுகிறீர்களா? அப்படி அறிக்கை செய்தால் அதை கிரியையில் நீங்கள் நிரூபிக்கவேண்டும். அப்படி நிரூபிக்காவிட்டால் தேவனை நீங்கள் மறுதலிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

1 யோவான் 4:6  நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.  7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். 8 அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.//

பரிசேயர்களையும் சதுசேயர்களையும் ஆலய வியாபரிகளிடமும் கோபம் கொண்டதால் கிறிஸ்துவிடத்தில் அன்பு இல்லை என்றாகிவிட்டதா!! ஓநாய்கள், நாய்கள் என்று சொன்னதால் பவுலிடம் அன்பில்லாமல் போய் விட்டதா!! அப்படியே எங்களிடத்தில் அன்பு இருக்கிறது, எங்களிடத்தில் அன்பு இருக்கிறது என்று தெரு தெருவாக போய் சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை, உங்களிடத்தில் அதை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை!! நாங்கள் கிரியை குறித்து மேன்மைபாராட்ட எங்கள் தேவனின் கிருபை எங்களை அனுமதிப்பதில்லை!!

//அய்யா, அன்பு எனும் கிரியை இல்லாவிட்டால் நீங்கள் தேவனை அறியவில்லை என அர்த்தமாம். இப்படி நான் சொல்லவில்லை, அப்போஸ்தலன் யோவான் சொல்கிறார்.//

நாங்கள் செலுத்தும் அன்பை நீங்கள் அறிய வேண்டிய அவசியம் இல்லை!! எங்களுக்கு கிருபை அருளிய தேவன் அறிவார்!! அவருக்கு தெரியும்!!

//நன்றாக எழுத்துக்கூட்டி படித்துப் பாருங்கள்... நீ ... தி ... மா ...ன் ... க ...ள்..//

கொட்டை எழுத்தில் எழுதினாலும் மாம்சத்தில் இருக்கும் மனிதனை குறித்து அல்ல, உயிர்த்தெழுந்தவர்களை குறித்தே வசனங்கள் சொல்லுகிறது என்பதை நீங்கள் எழுத்துக்கூட்டி படித்து பாருங்கள்!!

மத்தேயு 13:43  அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்
அப்போது, பிதாவின் ரஜியத்தில் எல்லாம் இப்போது இல்லை, இந்த மாசத்தில் இல்லை!! சும்மா கொட்டை எழுத்தில் எழுதிவிட்டு எதையோ ஆழமாக சொல்லுகிறீர்கள் என்கிற எண்ணமும் வேண்டம்!!!

நீதிமான் ஒருவனும் இல்லை என்பது இந்த மாம்சத்தில் இருப்பதை குறித்து சொல்லப்பட்ட வசனம்!!

மத்தேயு 25:37 அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக:

அப்பொழுது தான், இப்பொழுது இல்லை!!

//இத்தனை நீண்ட பதிவைத் தந்துவிட்டு, “கலாத்தியர் 5:19-21 வசனங்களில் இன்னின்ன அநீதிகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என பவுல் சொல்கிறார். அப்படியானால் அநீதிகளைச் செய்த அவர்களுக்கு கிறீஸ்துவின் இரத்தம் வீணாகிப் போனதா” எனும் எனது கேள்விக்கு நேரடியான பதிலை இன்னமும் தரவில்லையே!//

இந்த எல்லா கிரியைகளுக்கும் மரணமே தண்டனை!! ஆனால் கிறிஸ்துவின் ஈடுபலியால் உயிர்ப்பிக்கப்படுவதே கிருபை!! கிறிஸ்துவின் இரத்தம் வீணாகி போனது என்று நியாயப்பிரமான போதகர்கள் வேண்டுமென்றால் சொல்லுவார்கள், ஆனால் பவுல் நியாயப்பிரமாண போதகர் கிடையாது!!

ரோமர் 6:23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

கிருபையினால் நித்தியஜீவன், இருக்கிறது!!

////கிரியையை அறியாத ஜனம் இல்லை, ஆனால் கிருபையை கிறிஸ்தவர்களே அறிவதில்லை!!//

அன்பே கடவுள், இறைவன் அன்பாகவே இருக்கிறார் என புறமதத்தினர் சொல்ல நீங்கள் கேட்டதில்லையோ?//

நான் என்ன எழுதியிருக்கிறேன்!! கிரியை அறியாத ஜனங்கள் இல்லை என்று தானே!! ஆனால் கிருபையை அவர்கள் அறிவதில்லை, ஏன் கிறிஸ்தவர்களே அதை அறிவதில்லை என்று தானே எழுதியிருக்கிறேன்!!

//உங்களைப் போன்ற பொய்யன் வேறு யாரும் கிடையாது.//

இப்படி நீங்கள் எழுதிவிட்டு ஏன் தேவையில்லாமல் என்னமோ நான் தான் உங்களை தனிப்பட்ட விமர்சனம் செய்கிறேன் என்கிறீகள்!! நானோ நீங்கள் போதிக்கும் கிரியை, நீங்கள் பின்பற்றும் கிரியை என்று உங்கள் போதனைகளை வைத்தே உங்களை விமர்சிக்கிறேன்!! என்னை பொய்யன் என்று சொல்ல உங்களுக்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை!! தேவன் என்னை நியாயம் தீர்ப்பார்!! நீங்கள் என்னை பொய்யன் என்று சொல்லி கேவலப்படுத்துகிறீகள் என்று உங்கள் பதிவை வைத்து உங்களை குற்றம் சாற்றுகிறேன்!! இப்படி எழுதிவிட்டு உங்களை விமர்சிக்கிறேன் என்று கேட்டு எழுதுவதில் சற்றும் உங்களுக்கு மனதில் குற்ற உணர்வு ஏற்படுவது இல்லை போல்!! இதுவும் நீங்கள் வசனங்களில் காண்பிக்கும் "அன்போ"!

 

கிரியைகளை போதிக்கும் இன்னும் பல வசனங்கள் (பின்பற்ற முடியாதவைகளால் இவைகளை சேர்த்துக்கொள்வதில்லை)

மத்தேயு 19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

மாற்கு 10:21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.

லூக்கா 12:33 உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.

லூக்கா 18:22 இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

மத்தேயு 19:29. என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

இவை எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்துவே சொன்னது தான்!! ஆனால் ஏனோ இவைகளை பின்பற்ற ரிசர்வேஷன்ஸ் இருக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//தேவகிருபையால் மன்னிப்பைப் பெற்ற பாவி, மீண்டும் பாவம் செய்துகொள்ளலாம் என இயேசு எப்போதாவது கூறினாரா? நிச்சயமாக அல்ல. மன்னிப்பு பெற்ற பாவியிடம் இயேசு சொன்னதை சற்று படியுங்கள்.//

பாவம் செய்யலாம் என்று யார் சொல்லுகிறார்கள்!! நீங்கள் பாவம் செய்யுங்கள் என்று நான் எழுதிய ஒரு பதிவாவது காண்பித்து பிறகு அறிவுறை தரலாம்!!

//நான் எனது கிரியையையா இங்கு பதித்துக் கொண்டிருக்கிறேன்? சற்றும் நிதானமின்றி கூறுகிறீர்களே! நித்தியஜீவனை சுதந்தரிக்க வேண்டுமெனில் “கிரியை” வேண்டும் என வேதாகமம் சொல்வதை எடுத்துரைக்கிறேன், அவ்வளவே.//

அப்படியே வேதம் சொல்லும் வசனங்களை தான் நானும் எழுதுகிறேன்:

ரோமர் 7:23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

உங்களுக்கு கிரியை எவ்வுளவு பிரியமோ, தேவ கிருபை அதற்கும் மேலானது என்பது தான் என் வாதம்!! ஏனென்றால் கிரியை மனிதனை சார்ந்தது, ஆனால் கிருபையோ தேவனிடத்திலிருந்து வருகிறது!!

//ஆக, இயேசுவுங்கூட நியாயப்பிரமாண போதகர் என்றும், இயேசுவின் போதனை யூதர்களுக்கு மட்டுமே என்றும் சொல்கிறீர்கள்.//

ஆமாம் அதில் என்ன சந்தேகம்!! இந்த இடத்தில் கற்பனைகள் என்று எழுதப்பட்டிருக்கிறது நியாயப்பிரமானமே!! மீண்டும் வசனங்களை எடுத்து வாசியுங்கள்!! நீங்கள் தாராளமாக நியாயப்பிரமானத்தை பின்பற்றலாம்!! நான் ஒன்றும் வேண்டாமென்று சொல்லவில்லை!! சதுசேயர்களும் பரிசேயர்களும் அதை தானே பின்பற்றிக்கொண்டிருந்தார்கள்!!

//ஒருகாலத்தில் பழைய ஏற்பாட்டுப் போதனை “இஸ்ரவேலருக்கானது” என்றும், புதிய ஏற்பாட்டுப் போதனை “உலகத்தாரல்லாதவர்களுக்கானது” என்றும் கூறியதாக ஞாபகம்.

தற்போது, இயேசுவின் போதனை யூதர்களுக்கானது என்கிறீர்கள். எப்படியோ போகட்டும்.

ஆனால் நமக்கான போதனை எது எது என்பதை சற்று தெளிவாகச் சொல்லிவிட்டால் மிக நன்றாயிருக்கும். //

ஒரு காலத்தில் இல்லை, இப்பவும் அதையே தான் சொல்லுகிறேன்!! பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமான கட்டளைகள் யூதர்களுக்கே கொடுக்கப்பட்டிருந்தது, புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து பிறப்பதற்கும் முன்னிருந்து எழுதப்பட்டிருக்கிறது, கிறிஸ்துவே ஒரு யூதனாக தான் பிறக்கிறார், அவரும் நியாயப்பிரமானத்தை பின்பற்றி தான் வளர்ந்தார்!! ஆனால் கிறிஸ்து என்கிற ஒரு வழி, சபை என்கிற ஒரு அந்தஸ்து வந்த பிறகு உள்ள காரியங்கள் தான் "புதிய ஏற்பாடு"!! இதற்கும் கிரியைகளினால் இரட்சிப்புக்கும் சம்பந்தமே கிடையாது!! கிறிஸ்துவே சொல்லுகிறார், அவர் எதற்காக வந்தார் என்று, என்னமோ நான் தான் இவகளை சொன்னது போல் நீங்கள் பதிவுகள் வெளியிடுகிறீர்களே:

மத்தேயு 15:24 அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

 

//ஒருகாலத்தில் பழைய ஏற்பாட்டுப் போதனை “இஸ்ரவேலருக்கானது” என்றும், புதிய ஏற்பாட்டுப் போதனை “உலகத்தாரல்லாதவர்களுக்கானது” என்றும் கூறியதாக ஞாபகம்.

தற்போது, இயேசுவின் போதனை யூதர்களுக்கானது என்கிறீர்கள். எப்படியோ போகட்டும்.

ஆனால் நமக்கான போதனை எது எது என்பதை சற்று தெளிவாகச் சொல்லிவிட்டால் மிக நன்றாயிருக்கும். //

 

ஒருகாலத்தில் அல்ல எக்காலத்திலும் அதுவே சத்தியம்; 

ரோமர் 3:2 அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.

உங்களுக்கு என்று நினைத்தால் முதலில் விருத்தசேதனத்தில் ஆரம்பியுங்கள்.

 

புதிய ஏற்பாட்டுப் போதனை உலகத்தாருக்கு அல்ல என்று நாம் கூறவில்லை, புதிய ஏற்பாடுதான் அப்படிக் கூறுகிறது. கிறிஸ்து மிகத்தெளிவாக நான், நீங்கள்(சபை) அவர்கள்(உலகம்) என்று மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். "எக்ளீஷியா"(சபை) என்பதற்கே உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்று அர்த்தம் என்று கேள்விபட்டிருக்கிறேன்.

மத்தேயு 13:11 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.

யோவான் 3:27 யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.

யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

26. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

சத்திய ஆவி சபைக்கு மாத்திரம் வாக்களிக்கப்பட்டது. உலகத்துக்கு அல்ல‌...

15:16. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; 

19. நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

17:6. நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

தெரிந்து கொண்டவர்கள் மாத்திரம் அடங்கியது சபை.

9. நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.

25. நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.

உலகம் நிச்சயம் இந்த யுகத்தில் சத்தியத்தை அறியாது. சத்தியத்தை அறியவும் அவரது கிருபை நிச்சயம் வேண்டும். 

உங்களுக்கான போதனை எது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் ஆயிரம் வசனங்களைச் சொல்லி வாதிட்டாலும் தேவன் உங்களை பொய்யை (கிரியை) விசுவாசிக்கத் தக்கதான வஞ்சக ஆவிக்கு ஒப்புக்கொடுத்திருந்தால் உங்கள் கிரியையை மேன்மைப்படுத்திக்கொண்டு, ஒன்றுக்கும் பிரயோஜனப்படாத கிரியைகளினால் கிருபையை அவமாக்குவீர்கள். இதுவரை அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

//தேவகிருபையால் மன்னிப்பைப் பெற்ற பாவி, மீண்டும் பாவம் செய்துகொள்ளலாம் என இயேசு எப்போதாவது கூறினாரா? நிச்சயமாக அல்ல. மன்னிப்பு பெற்ற பாவியிடம் இயேசு சொன்னதை சற்று படியுங்கள்.//

 இனி பாவஞ்செய்யாதே என்று சொன்னாரே தவிர இனி பாவமே நீ செய்யமாட்டாய் என்று சொல்லவில்லை. அய்யா நாங்கள் யாரையும் போய் பாவம் செய் என்று சொல்லவில்லை. "பணிவிடை" விஷயம்போல இதிலும் எதையோ மனதில் வைத்துக்கொண்டு நீங்களாக உங்கள் கோணத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவே. மனிதன் செய்யும் கிரியை ஒருபோதும் அவனை பரிசுத்தப்படுத்தாது என்பதே எங்கள் வாதம். கிரியை எல்லாரும்தானே செய்கிறார்கள், நம்மைவிட அதிகம் கிரியை செய்பவர்கள் ஏராளமுண்டு. பில்கேட்ஸ், வாரன் பஃபட்டைவிட யாரும் "கொடுக்க" முடியாது. அன்னை தெரசா போல யாரும் பணிவிடை செய்ய முடியாது, உலகில் ஏராளமானோர் அன்பின் நிமித்தமாக காப்பகங்களும், கல்வி நிலையங்களும் சுயநலம் பாராமல் நடத்திவருகிறார்கள். உலகிலுள்ள அனைத்து சமயங்களும் அடிப்படையில் அன்பையும், கிரியையும்தான் போதிக்கின்றன. நீங்கள் அவற்றில் ஒன்றே. எந்தக் கிரியையும் தேவனுடைய கிருபைக்கு நிகராகாது. லட்சம் கிரியை செய்தாலும் துளி கிருபையில்லாவிட்டால் ஜீவன் கிடையாது...

உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும் என்று சொன்னாரே, ஜீவிய காலத்தில் ஏதாவது ஒரு கணத்திலாவது கல்லெறிய நம் யாருக்காவது "தகுதி" வருமா? கிரியை எவ்வளவு குறைவுள்ளது தெரிகிறதா?

 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//1 யோவான் நிருபத்தில் காணப்படும் சில வசன பகுதிகள்:
பகுதி 1

1 யோவான் 1:8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
1 யோவான் 1:10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

பகுதி 2

1 யோவான் 3:6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. 7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

இவ்விரு பகுதிகளும் ஒன்றுக்கொன்று முரணானவை போல் தோன்றுகின்றன. ஆனால் அவை முரணானவையல்ல. எப்படியெனில்:

முதல் பகுதி, நாம் அனைவரும் பாவிகள், பாவஞ்செய்தவர்கள் எனக் கூறுகிறது. இது 100-க்கு 100 உண்மையே! நம் கடந்தகால வாழ்வைப் பார்த்தால், நாம் எப்போதாவது கண்டிப்பாக பாவம் செய்திருப்போம். இதை ஒத்துக் கொள்ளாமல், “நான் பாவமே செய்யவில்லை” என நம்மில் யாராவது சொன்னால், நாம் பொய்யராகிவிடுவோம். இதைத்தான் முதல் பகுதியில் 10-ம் வசனத்தில் யோவான் கூறுகிறார்.//

முதல் பகுதி "பாவஞ்செய்தவர்கள்" என்று கூறவில்லை!! நமக்குள் பாவம் இருந்ததில்லை என்றும் வசனம் சொல்லவில்லை, மாறாக நமக்குள் பாவம் இல்லை என்போமானால், அதாவது இப்பவும் நமக்குள் பாவம் இல்லை என்போமானால் வஞ்சகத்தில் இருக்கிறவர்களாக இருப்போம், சத்தியம் இராது!! யார் பொய்யன் தெரிகிறதா!! எனக்குள் பாவம் இல்லை என்று சொல்லுபவனே பொய்யன்!!

இது தான் வேதத்தை புரட்டுவது!! இங்கே கடந்தகாலத்தின் பாவத்தையோ, அப்போ நான் பாவம் செய்ததில்லை என்று சொல்லுவதோ என்றெல்லாம் கிடையாது!! நமக்கு பாவமில்லையென்போமானால் என்றால் இப்ப நமக்கு பாவமில்லை என்று தானே அர்த்தமே தவிர, அப்போ, முன்னே, பாவமிருந்ததில்லை என்று அர்த்தம் இல்லை!! தயவு செய்து இந்த வார்த்தையை புரட்டி உங்கள் கருத்துக்குள் தினிக்காதீர்கள்!!

ஆனால் இந்த பாவத்திலிருந்து எந்த ஒரு கிரியையும் நம்மை விடுவிக்காது, மாறாக கிருபையாலே பாவம் மன்னிக்கப்படும்!! அந்த கிருபை கிறிஸ்துவின் ஈடுபலியே!! ஏனென்றால்,

1 யோவான் 2:1. என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

//பாவஞ்செய்யவேண்டாம் என்றும் சொல்லுகிறார், ஆனாலும் அவருக்கு தெரியும் மாமசமும் அதன் சோதனையும்!! ஆக நாம் பாவஞ்செய்தோமென்றால், அதற்கு எந்த கிரியையும் இல்லை, மாறாக நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்துவே நமக்காகப் பரிந்து பேசுகிறாராம்!! இது கிருபையினால் வரும் நிச்சயம், கிரியைக்கும் இதற்கும் இந்த சம்பந்தமும் கிடையாதாம்!!//

என்னமோ கடந்த காலத்தில் பாவம் செய்தவர்களாகவும் இப்ப கிரியைகளினால் பாவமே செய்யாதவர் போல் இருக்கிறது உங்கள் விளக்கம்!! ஏனென்றால் ஒருவனிடத்தில் பாவமில்லை (பாவம் இருந்ததில்லை என்று அல்ல) என்று சொல்லுவது அவனுக்குள் சத்தியம் இல்லை என்று அப்போஸ்தலர் சொல்லுகிறார்!!

கடந்த காலத்தில் பாவஞ்செய்த நாம், கிறிஸ்துவை அறிந்தபின்னரும் அதேவிதமாகப் பாவஞ்செய்யக்கூடாது. கிறிஸ்துவை அறிந்த நாம் அவரோடுகூட நிலைத்திருக்க வேண்டும். அவரில் நிலைத்திருப்பவன் பாவம் செய்வதில்லை என பகுதி 2 கூறுகிறது. அதாவது நாம் பாவம்செய்யாதிருப்பதுதான் நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறோம் என்பதற்கு அடையாளம். மாறாக, கிறிஸ்துவை அறிந்த பின்னும் நாம் பாவஞ்செய்தால், நாம் கிறிஸ்துவை காணவுமில்லை, அறியவுமில்லை என யோவான் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

பாவம் செய்கிறவர்கள் அல்ல மாறாக பாவத்தில் நிலைத்திருக்கிறவன் தான் கிறிஸ்துவில் நிலைத்திருக்க முடியாது!! ஏனென்றால் பாவம் செய்கிறவனுக்கு  தான் பரிந்து பேச கிறிஸ்து இயேசு நீதிபரராக இருக்கிறார்!! ஆகவே பாவம் செய்வதில்லை என்று சொல்லுபவன் பொய்யன், ஏனென்றால் சத்தியம் அவனுக்குள் நிலைத்திருக்காது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//ஆனால் பவுலோ இவ்வாறு சொல்கிறார்:

கலாத்தியர் 5:19-21 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நாம் பெரியன்ஸ் சொல்வதை நம்புவதா? பவுல் சொல்வதை நம்புவதா?//

நீங்கள் கிரியை உள்ள வசனங்களாக தேடிக்கொண்டிருக்கிறீர்கள்!! பவுல் சொன்னது மற்றொரு வசனமும் உண்டு, அதையும் சேர்த்து வாசிக்கலாமே!! ஏனென்றால் மேலே சொல்லப்பட்ட மாம்சத்தின் கிரியைகள் பாவம் என்று அறிந்திருக்கிறேன்!! இந்த பாவங்களை செய்பவர்கள் தேவனுடைய ராஜியத்தை சுதந்தரிப்பதில்லையென்றும் அறிந்திருக்கிறேன்!! அதாங்க பரலோகம் போவதில்லை என்று!!

அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்று தான் பவுல் சொல்லுகிறாரே தவிர, அவர்களுக்கு நித்தியஜீவன் கிடையாது என்று சொல்லவில்லையே!! நீங்களாக ஏன் கற்பனை செய்து எதையோ கண்டுபிடித்து விட்டது போல் திரும்ப திரும்ப இந்த வசனத்தை காண்பிக்கிறீர்கள்!! பவுலுக்கு தெரியாதா,

ரோமர் 6:23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

அய்யா, பவுலுக்கு தெரியும் இந்த மாம்சத்தின் கிரியைகள் மரணத்தை கொண்டு வரும், இப்படி பட்ட பாவங்களில் இருப்பவர்களுக்கு கிரீடம் கிடைக்காது, தேவனை அவருடைய ராஜியத்தில் முக முகமாய் தரிசிக்க முடியாது என்று!! ஆனால் அதே பவுலுக்கு தெரியும், இந்த மாம்சத்தின் கிரியைகளுக்காகவும் தான் கிறிஸ்து மரித்தார் என்று!! தேவனுடைய கிருபை இவர்களுக்கும் நித்திய ஜீவன் கொண்டு வரும்!! நீங்கள் பவுல் சொல்லுவதையே நம்புங்கள்,  ஆனால் அதை முழுமையாக நம்புங்கள்!!

//அதாவது பெரியன்ஸ் இவ்வாறு கூறுகிறார்:

மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இக்கிரியைகளில் சில நிச்சயமாக என்னிடத்தில் இருக்கும்; ஆனாலும், அந்த கிரியைகளுக்கு மேலாக தேவகிருபை இருப்பதால், தேவனின் ராஜியத்தின் நிச்சயம் எனக்கு இருக்கிறது.//

இதை நான் எழுதவில்லை!! நீங்கள் தான் எழுதுகிறீர்கள்!! இதற்கு மேலே தான் எழுதியது!! உங்களின் கருத்தை அடுத்தவர் மேல் தினிக்க நினைக்காதீர்கள்!!

ஆனால் இறுதியாக பவுல் சொல்லுகிற ஒன்றை சொல்ல விரும்புகிறேன்,

கலாத்தியர் 5:4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//கலாத்தியர் 4-ம் அதிகாரத்திலும் நியாயப்பிரமாணம் எனப் பவுல் சொல்வதெல்லாம் “விருத்தசேதனம்” போன்ற சடங்குகளே. எனவேதான் ஒருபுறம் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளால் நாம் நீதிமான்களாக்கப்படுவதில்லை எனக் கூறிய அவர், கலாத்தியர் 5:19-21 வசனங்களில் நியாயப்பிரமாணம் கூறுகிற சில அநீகளைச் சொல்லி, அவற்றைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்றும் கூறுகிறார்.//

விருத்தசேதனம் என்றும் அந்த ஒரு சில சடங்குகளை "நியாயப்பிரமாணம்" என்று பவுல் கூறியதாக நீங்கள் சொல்லுகிறீர்கள், அதை அப்படி தான் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லுகிறீர்கள்!! அப்படி என்றால் புதிய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணம் என்று இருப்பது எல்லாம், இந்த விருத்தசேதனமும், ஒரு சில சடங்குகள் மாத்திரமே என்கிறீர்கள்!! நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் என்றால் நீங்கள் "புரிந்திருக்கும்" இந்த ஒரு சில விஷயங்கள் மாத்திரமே என்று விளக்கம் தருகிறீர்கள்!! நியாயப்பிரமாணத்தின் மற்ற கட்டளைகள் அனைத்தையும் தூக்கி கிடப்பில் போட்டு விட்டு, நீங்கள் சொல்லும் இந்த விருத்தசேதனம், அப்புறம் ஒரு சில சடங்குகள் நியாயப்பிரமாணம் என்கிறீர்கள்!!

அதற்கு பவுல் விருத்தசேதனம் செய்தால் நீதி வராது என்று சொல்லியிருக்கலாமே!! நியாயப்பிரமாணத்தின் கிரியை என்பதில் விருத்தசேதனமும் அடங்கும் என்பதற்காகவே அவர் ஒட்டு மொத்த நியாயப்பிரமாணத்தை சொல்லுகிறரே தவிர, நீங்கள் புரிந்திருக்கும்படியான பவுல் சொல்லுவது விருத்தசேதனமும், ஒரு சில சடங்குகள் மாத்திரமே நியாயப்பிரமாணம் என்பது அல்ல!! அப்படி என்றால் பவுல் சொல்லிய இந்த ஒரு சில கிரியைகளை விட்டு விட்டு, கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் போன்றவற்றை தொடர்ந்து செய்யலாமா அல்லது அதுக்கும் பவுல் ஏதாவது Restriction கொடுத்திருக்கிறாரா உங்கள் புரிந்துக்கொள்ளுதலின்படி!! நியாயப்பிரமாணம் மோசே மூலமாக கொடுக்கப்பட்ட ஒன்று, அதில் உள்ள அனைத்தும் தான் நியாயப்பிரமாணமே தவிர, இந்த அதிகாரத்தில் விருத்தசேதனமும் ஒரு சில சடங்குகள் மாத்திரமே சொல்லப்பட்டிருப்பதால் நியாயப்பிரமாணம் அதில் Restrict ஆகிவிடவில்லை!!

கலாத்தியர் 3ம் அதிகாரத்தையும் சற்று நிதானித்து வாசியுங்கள்!!

மேலும் கலாத்தியர் கலாத்தியர் 5:19-21மாம்சத்தின் கிரியைகள் என்று தான் சொல்லியிருக்கிறதே தவிர நீங்கள் சொல்லுவது போல் "நியாயப்பிரமாணம் சொல்லும் அநீதி கிரியைகள்" என்று சொல்லுவதில்லை!! இவைகளை நீங்களே உங்கள் வார்த்தை ஜாலத்தினால் அர்த்தங்கள் சிதற செய்கிறீர்கள்!! உங்கள் புரிந்துக்கொள்ளுதலை வசனங்களிலும் தினித்து இருக்கிறீர்கள்!!

அப்படி என்றால் கலாத்தியர் 5:22,23ஐ நியாயப்பிரமாணம் சொல்லும் நீதியின் கிரியைகள் என்று நீங்கள் சொன்னாலும் ஆச்சரியமில்லை!!

பவுல் நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருந்த ஒரு மனிதன் தான்!! அவர் சொல்லும் நியாயப்பிரமாணம் என்பது நீங்கள் புரிந்துவைத்திருக்கும் ஒரு சில கிரியைகள் கிடையாது, ஒட்டு மொத்த நியாயப்பிரமாணம் தான் !! ஆனால் கிறிஸ்து அவனை தன் பக்கம் சேர்த்துக்கொண்ட பிறகு அவன் இப்படியாக சொல்லுகிறான்,

கலாத்தியர் 3:11. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

இங்கே அவர் நியாயப்பிரமாணம் முழுவதையும் தான் சொல்லியிருக்கிறார்!! கலாத்தியர் 2:21ல் சொல்லப்படுவதும் முழு நியாயப்பிரமாணமே தவிர நீங்களாகவே "சுருக்கி" வெளியிட்ட நியாயப்பிரமணம் இல்லை!!

கலாத்தியர் 3:24. இவ்விதமாக, நாம் விசுவாசத்திலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. 25. விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.

ஒரு காலத்தில் நியாயப்பிரமாணம் தேவையாக இருந்தது, கிறிஸ்துவிற்கு நிழலாக!! ஆனால் அந்த நிஜம் வந்த பிறகு இன்னும் நியாயப்பிரமாணத்தில் உங்களுக்கு தேவையானதை மாத்திரம் வைத்துக்கொண்டு அதில் இன்னும் நிலைத்திருந்து அதை போதிப்பது கலாத்தியரில் சொல்லப்பட்டபடி "வேறு ஒரு சுவிசேஷம் தான்"

//அவற்றைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்றும் கூறுகிறார்.//

இந்த மாம்சத்தின் கிரியைகளை செய்வோருக்கு கிறிஸ்துவின் கிருபையினால் வரும் நித்திய ஜீவன் இல்லை என்று பவுல் சொல்லியிருக்கிறாரா!! இல்லையே!! தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்பதற்கு நீங்கள் ஒரு புரிந்துக்கொள்ளுதல் வைத்திருப்பீர்கள்!! இவர்களுக்கு நித்திய ஜீவன் கிடையாது என்று பவுல் சொல்லவும் இல்லை!! அப்படியே தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்பதை "நித்தியஜீவன்" பெறுவதில்லை என்று நீங்கள் புரிந்துக்கொண்டிருந்தால் பவுல் உங்களிடம் அத்துனை பெரிய பொய்யை சொல்ல வேண்டியது இல்லை, அதாவது,

ரோமர் 6:23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

கலாத்தியரில் சொல்லப்பட்டவைகள் எல்லாம் பாவம் தான், அதின் சம்பளமாகிய மரணத்தை பெற்றுக்கொள்வார்கள் ஆனால் தேவனுடைய கிருபையினாலோ நித்தியஜீவனை பெறுவார்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

I யோவான் 3:4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.

யாக்கோபு 2:10 எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.

தனக்கு ஏற்றாற்போல வேதத்தைப் புரட்டுபவர்களுக்கு விளக்கமளிப்பது கூடாதகாரியம். இவர்தான் நியாயப்பிரமாணத்தை மீறுவது பாவம் என்றார். நியாயப்பிரமாணம் என்றால் மோசேக்கு கொடுக்கப்பட்ட அத்துனை கட்டளைகளும்தான் என்ற செய்திகூட தெரியாமல் நியாயப்பிரமாண போதகர்களாக இருக்கிறார்கள்.

ஒன்றிலே தவறினாலும் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான் என்ற வசனம் இவர்கள் வேதத்தில் இல்லைபோலும்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கும் நிச்சயம் உங்களுக்கு இருப்பதாக இப்பதிவில் கூறியுள்ளீர்கள். ஆனால் சமீபத்தில் இவ்விதமாகவும் பதிவைத் தந்துள்ளீர்கள்.//

தேவனின் ராஜியம் இரண்டு விதமாக இருப்பதை பார்க்கலாம்:
1. சபைக்கு வாக்கு பண்ணப்பட்டிருக்கிறது. இவர்கள் கிறிஸ்துவின் சாயலை தரித்துக்கொண்டு உயிர்த்தெழுவார்கள், ஆவிக்குரிய சரீரங்களுடன்!! இவர்கள் தேவனை தரிசிப்பார்கள்!! இவர்கள் கிரீடம் பெறுவார்கள்!! இவர்கள் கிறிஸ்துவுடன் சிங்காசனத்தில் உட்காருவார்கள்!! இவர்கள் அரசாளுவார்கள்!! அழியாமை, சாவாமையை பெற்றுக்கொள்வார்கள்!!

கலாத்தியர் 5:19 முதல் சொல்லப்பட்டிருக்கும் மாம்சத்தின் கிரியை உடையவர்கள் இந்த ராஜியத்தில் பிரவேசிக்க முடியாது என்கிறார் அப்போஸ்தலர்!! ஆகிலும் தேவனின் கிருபை இருக்கிறது!! அதற்கு தான் சொன்னேன், யார் இந்த கிரியைகளில் ஒன்று கூட செய்யாதவன் என்று!! இதில் நிலைத்திருப்பவனே தேவனின் ராஜியத்தில் பிரவேசிக்க இயலாது என்பது என் புரிந்துக்கொள்ளுதல்!! ஏனென்றால் அனைவரும் இந்த மாம்சத்தின் கிரியைகளில் இருந்தவர்களும் இருப்பவர்களுமே!!  நீங்கள் இந்த கிரியைகள் அனைத்திலிருந்தும் விடுப்பட்டவர் என்பதற்கு என்ன நிச்சயம்!! இல்லை, நாளை இந்த கிரியைகளில் விழாமல் இருப்பீர்கள் என்பதற்கு என்ன நிச்சயம்!! பவுல் சொல்லுகிறாரே, அவர் எதை செய்யகூடாதோ அதை செய்கிறார் என்று!! அவர் கோபம் கொள்ளுகிறார், சபிக்கிறார், மனிதர்களை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறார், ஆனால் அவருக்கு நிச்சயம் இருந்ததே, அது தான் தேவனின் கிருபை!! இதுவே தேவனின் ராஜியம்!!

2. சபையில் இல்லாத மற்ற அனைவரும் இந்த பூமியில் உயிர்த்தெழுவார்கள், இதுவும் கிறிஸ்துவினால் உண்டான தேவனின் கிருபை!! இந்த தேவனுடைய ராஜியத்தை குறித்தே கிறிஸ்து கற்பித்த ஜெபம் இருக்கிறது, "உம்முடைய ராஜியம் வருவதாக" என்று!! இந்த ராஜியத்தில் அனைவரும் குனப்பட்டவர்களாக எழும்புவார்கள், ஏசாயா 35ல் சொல்லப்பட்டிருக்கிறபடியே!! இந்த பூமியில் நியாயத்தீர்ப்பிற்கு எழும்புவார்கள், கற்றுக்கொள்ள எழும்புவார்கள், சத்தியத்தை அறிந்துக்கொள்ள எழும்புவார்கள், தேவனை அறிந்துக்கொள்ள எழும்புவார்கள்!! இது தேவனுடைய ராஜியம்!!

இந்த இரண்டு ராஜியங்களிலும் பிரவேசிக்க கிரியைகள் அல்ல கிறிஸ்துவின் மூலமாக உண்டான தேவ கிருபையே காரணம்!!

//இது ஒருபுறமிருக்க, பாவம் செய்பவர்கள் பரலோகம் போவதில்லை என பதிவு 2-ல் கூறியுள்ளீர்கள். அப்படியானால் (பதிவு 1-ன்படி) பாவம் செய்பவரான நீங்கள் எப்படி “தேவனுடைய ராஜ்யத்தின் நிச்சயம் (அதாவது பரலோகம் போகிற நிச்சயம்) உங்களுக்கு உண்டு” எனக் கூறமுடியும்?//

இதுவே தேவனின் கிருபை தரும் நிச்சயம்!! பவுலுக்கு அந்த நிச்சயம் இருந்ததா, இல்லையா!! அவர் சொல்லுவதையும் கேளுங்கள்:

ரோமர் 7:19 ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.

தீமை செய்தாலும் அவருக்கு கிரீடத்தின் நிச்சயம் இருந்ததா இல்லையா? இருந்தது,

II தீமோத்தேயு 4:8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

ஆக, எனக்கும் இருக்கிறது!! மேலும்,

ரோமர் 8:3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

நியாயப்பிரமாணம் என்பது முழு நியாயப்பிரமாணம் தான்!! இந்த நியாயப்பிரமாணம் செய்ய முடியாததை தேவனே தன் குமாரன் மூலமாக செய்து முடித்தார்!! இதுவே எனக்கு இருக்கும் நிச்சயம்!! தேவனை அறிகிற அறிவில் இருக்க நியாயப்பிரமாணம் அவசியம் இல்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//தேவனையும் கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் என்ற வசனத்தைச் சொல்லி, கிரியை இல்லாவிட்டாலும் நித்திய ஜீவன் உண்டு எனக் கூறினீர்கள். உங்களது அப்பதிவுக்குப் பதிலாகத்தான், “தேவனை அறிதல் என்றால் என்ன, கிறிஸ்துவை அறிதல் என்றால் என்ன?” என்பதை பல வசனபகுதிகள் மூலம் எடுத்துக் காட்டினேன். அவற்றில் ஒன்றுதான் 1 யோவான் 2:3-6 வசனபகுதி. அப்பகுதி கூறுகிற உண்மைகள்://

தேவனையும் கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் என்று வசனம் தானே சொல்லுகிறது!! இதில் என்ன கிரியை இருக்கிறது!!

மேலும் நாங்கள் ஒரு போதும் கிரியை செய்யாதீர்கள் என்று சொன்னதும் இல்லை, ஏனென்றால் கிரியை என்பதே தேவனின் சிந்தை உள்ளவர்களின் சுவபாவத்தில் இருக்கிறது!! ஏனென்றால் கிரியை செய்துக்கொண்டு இருக்க கிருபையே தேவையாக இருக்கிறது!! நாம் நிர்மூலமாகாமல் இருப்பது அவரது கிருபையே தவிர நம் கிரியை அல்ல!! யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தை பின்பற்றி (செலெக்ட்டிவான கிரியைகள்) அதினால் நீதிமானாக முடியாது என்று பல வசனங்கள் சொன்னாலும் நீங்கள் சுத்தி சுத்தி அதையே தான் காண்பிக்கிறீர்கள்!! நீங்கள் உங்களுக்கு எது பிரியமாக இருக்கிறதோ அதை செய்துக்கொண்டும் போதித்துக்கொண்டும் இருங்கள், எனக்கு தேவ கிருபை போதும்!! கிரியை தானாக நடக்கும் ஏனென்றால் அது சுவபாவமே, அதில் மேன்மை பாராட்ட ஒன்றுமே இல்லை!! மேன்மை பாராட்ட வேண்டுமென்றால் தேவனின் கிருபையயே மேன்மை பாராட்டுவேன்!! என்னால் அல்ல, தேவனால் எல்லாம் ஆகும் என்பதில் மேன்மை பாராட்டுவேன், என் கிரியை அல்ல, தேவனின் கிருபையே என்று மேன்மை பாராட்டுவேன்!!

//கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொண்டால்தான் “கிறிஸ்துவை அறிந்துள்ளோம்” என்பது மெய்யாகும். அதாவது “கிறிஸ்துவை அறிந்துள்ளேன்” எனக் கூறுபவன் அவரது கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும். இல்லாவிடில், அவனது கூற்று பொய்யாகிவிடும்.//

கிறிஸ்துவின் கற்பனை என்று நீங்களோ நியாயப்பிரமாணத்தை தான் சொல்லுகிறீர்கள்!! அது கிருபைக்கு விரோதமான சட்டங்கள்!! அதுவும் மாம்சத்தில் நிறைவேற்றப்படும் கிரியைகளே!! எழுத்தோக்கொல்லும் (நியாயப்பிரமாணம்), ஆவியோ (கிருபை) உயிர்ப்பிக்கும்!! அந்த எழுத்து பாவம் என்னவென்று காண்பித்து விட்டது, ஆனால் அதில் நிலைத்திருக்காமல் செய்வது கிருபையே தவிர என் செயல்கள் அல்ல!! விபச்சாரம் செய்யாதே, பொய் பேசாதே, திருடாதே, உதவி செய், நன்மை செய், தீமை செய்யாதே, அன்பாக இரு, போன்ற கிரியைகளை நீங்கள் சொல்லுகிறீர்கள் என்றால் இவைகளை கிறிஸ்துவை தெரிந்தவர்கள் மாத்திரம் அல்ல, கிறிஸ்துவை அறியாதவர்களும் செய்கிறார்கள், ஏனென்றால் இவை தேவன் மனிதர்களுக்கு வைத்திருக்கும் சுவபாவங்களே!! கிறிஸ்துவை அறியாதவர்கள் இதை விளம்பரப்படுத்துகிறார்கள், கிறிஸ்தவர்களும் தான்!! அடிப்பட்டையான விஷயத்தை பேரிதுப்படுத்தி, நம் முயற்சியே இல்லாமல் தேவனின் கிருபையை எந்த நிலையில் வைத்திருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை!!

யோவான் 5:24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு;
பிதாவை பிதா என்று விசுவாசிக்கிறவர்களுக்கும் நித்திய ஜீவன் உண்டு!!

யோவான் 5:39 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து, அதிலிருந்து கிறிஸ்து யார் என்று அறிந்துக்கொள்பவர்களுக்கும் நித்தியஜீவன்!!

யோவான் 6:47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மெய்யாகவே மெய்யாகவே என்று உறுதியாக சொல்லுகிறார் கிறிஸ்து!! அதாவது கிறிஸ்துவிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கும் நித்தியஜீவன்!!

யோவான் 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லாததினால், மாம்சத்தையும் இரத்தத்தையும் வேறு அர்த்தம் கொண்டு எழுதுகிறீர்கள்!! நாங்கள் பின்பற்றுகிறோம்!! இதை என் நினைவாக செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, அவர் மாத்திரம் அல்ல, தன் அப்போஸ்தலர்கள் மூலமாகவும் அவர் இதை சொல்லியிருக்கிறார்!! ஆனால் நித்திய ஜீவன் உண்டு!!

யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
ஒன்றான மெய்தேவனை மற்றும் அவரின் குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை அறிவதே நித்தியஜீவன்!!

ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
கிருபையினால் நித்தியஜீவன்!!

I யோவான் 5:13 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.
விசுவாசத்தினால் நித்தியஜீவன்!!

இந்த விசுவாசம் நம் கிரியை அல்ல, இது தேவன் நடப்பிக்கும் தேவனின் கிரியை என்கிறது வசனம்!!

யோவான் 6:29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.

பலர் ஏதோ விசுவாசம் கொள்வது தேவனுக்கு பிடித்த, தேவன் விரும்புகிற (தேவனுக்கேற்ற) கிரியை என்று இதை விளக்குவார்கள்!! ஆனால் வசனம் அப்படி இல்லை!!

ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிப்பது தேவனின் கிரியையாயிருக்கிறது என்பதை தான் வசனம் சொல்லுகிறது!!

John 6:29 Jesus answered, “The work of God is this: to believe in the one he has sent.”

John 6:29 Jesus answered and said to them, This is the work of God, that ye believe on him whom *he* has sent.

இந்த வசனம்:

இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனின் செயலாக (கிரியையாக) இருக்கிறது என்றார்!!

இது தான் சரியான மொழிப்பெயர்ப்பாகும்!!

//“ஞானஸ்நானம் ராப்போஜனம்” மட்டும் எடுத்துகொண்டு, கிறிஸ்துவின் கற்பனைகளை நீங்கள் கைக்கொள்ளாதிருந்தால், கிறிஸ்துவை அறிந்துள்ளதாக நீங்கள் கூறுவது பொய்யாகிவிடும். இப்படி நீங்கள் பொய்யராவது நிச்சயம் உங்களுக்கு அசிங்கம்தான். ஆனால் அதற்கு நான் பொறுப்பல்ல.//

உங்களுக்கு தான் "ஞானஸ்நானம், இராப்போஜனம்" என்கிற கிரியையின் மேல் நம்பிக்கை இல்லையே!! இதை விட்டு விட்டு நீங்கள் கிறிஸ்துவின் கற்பனைகளை செய்துவருகிறீர்கள் என்று சொல்லுவதும் பொய்யாகிவிடும்!! இப்படி நீங்கள் பொய்யராவது நிச்சயம் உங்களுக்கும் அசிங்கமாக இருக்கலாம், ஆனால் அதற்கு நானும் பொறுப்பல்ல!!

//கிறிஸ்து நடந்தபடியே நடவாமல், கிறிஸ்துவின் நிலைத்திருக்கிறேன் என நீங்கள் சொன்னால், அப்போதும் நீங்கள் பொய்யராவீர்கள். இதுவும் உங்களுக்கு அசிங்கம்தான். ஆனால் இதற்கும் நான் பொறுப்பல்ல.//

கிறிஸ்து எடுத்து சென்ற ஞானஸ்நானம் (முங்கியதும், சிலுவை ஏறினதும்), கிறிஸ்து தன் நினைவாக எடுக்க சொன்ன இராப்போஜனத்தை விட்டு விட்டு கிறிஸ்துவின் கற்பனைகளில் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லி போதிப்பதாலும் பொய்யாராவீர்கள், இதுவும் உங்களுக்கு அசிங்கம் தான், ஆனால் இதற்கும் நான் பொறுப்பல்ல‌!!

கிரியைகளை போதிக்கும் இன்னும் பல வசனங்கள் (பின்பற்ற முடியாதவைகளால் இவைகளை சேர்த்துக்கொள்வதில்லை)!! இவை எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்துவே சொன்னது தான்!! ஆனால் ஏனோ இவைகளை பின்பற்ற முடியவில்லை போல், அப்படியும் நீங்கள் கற்பனை அனைத்தையும் பின்பற்றுகிறேன் என்று சொல்லுவது பொய்யாகிறதே!!

மத்தேயு 19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

மாற்கு 10:21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.

லூக்கா 12:33 உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.

லூக்கா 18:22 இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

மத்தேயு 19:29. என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அநேகமாக நியாயத்தீர்ப்பு நாளில் பெரியன்ஸ் இயேசுவிடம் பெரும் வாக்குவாதம் செய்து சண்டை போடுவார் என நினைக்கிறேன். “என்ன ஆண்டவரே! நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உங்கள் கிருபைதான் பெரிது, மனுஷரின் கிரியை எதற்கும் உதவாது எனும் உண்மையைக் கண்டுபிடித்து அன்பு57-உடன் பெரும்போராட்டம் போராடி எழுதி வந்தேன், இப்பொழுது கிரியையை பெரிதுபடுத்தி கிரியைக்குத்தக்க பலனைக் கொடுக்கிறீர்களே! உங்கள் கிருபைக்காக வக்கலாத்து வாங்கி போராடின என்னை நீங்கள் இப்படி Insult செய்யலாமா? இது உமக்கு நியாயமா?” என்றெல்லாம் கேட்பார் என நினைக்கிறேன்.//

ஆனால் அதற்கு கிறிஸ்து இயேசு சொல்லுவார், அன்பு57 அவர்களே, நீங்கள் உங்களை (அதாவது உங்கள் கிரியையை) நம்பியிருந்தீர்கள், உங்களுக்கு உண்டான பெலனை உங்களுக்கு கண்டிப்பாக தருகிறேன், ஆனால் பெரேயன்ஸ் தன் கிரியைகளை அல்ல, மாறாக அந்த கிரியைகளை செய்யவும், தன்னை மாத்திரம் அல்ல, இந்த உலகத்தையே இரட்சிக்க தேவனின் கிருபையாக கிறிஸ்து இயேசு வந்தார் என்று பல வசனங்களை காண்பித்து தன்னை இல்லை, மாறாக என்னையே மகிமைப்படுத்தினான், என் கிருபையினால் அவனுக்கு கிரீடம் தருகிறேன் என்று தான் சொல்லுவார்!! மேலும் பெரேயன்ஸ் கிரியை செய்ததில்லை என்று அன்பு57 அவர்கள் குதிப்பதும் எந்த விதத்தில் நியாயம்!! அவர் செய்த கிரியை மனிதர்கள் பார்க்கும்படியானது அல்ல, அந்தரங்கத்தில் இருக்கும் என் பிதா அதில் மகிழ்ந்தார், என்பார்!! என் பிதாவின் கிருபையே சிபி, கர்ணன், ஹரிஷ்சந்திரர், ஃப்லாரன்ஸ் நைட்டெங்கில், அன்னை தெரெஸா இன்னும் என்னை அறியாத பலர் நீங்கள் செய்த கிரியைகளை விட அதிகமாக செய்ய வைத்தது, ஆனாலும், நாங்கள் கிரியை செய்கிறோம், நாங்கள் கிரியை செய்கிறோம் என்றெல்லாம் அவர்கள் யாரிடமும் போராடவில்லை!! நீங்கள் உங்கள் (மனித) கிரியையை கொண்டு தேவனின் கிருபையோடு ஒப்பீட்டிருக்கிறீர்கள், என்பார்!! மனிதர்கள் காணும்படியாக தன் கிரியைகளை செய்பவன் மேல் என் பிதா ஒருபோதும் பிரியப்படுவதில்லை என்பார்!! உங்கள் கிரியைக்கு தக்கதாக உங்களுக்கு நிச்சயமாக கொடுப்பேன், ஆனால் தன் கிரியையை நம்பாமல் விசுவாசம் என்கிற மாபெரும் கிரியையை பெரேயன்ஸ் கொண்டிருந்தான், தன் கிரியைக்காட்டிலும் தேவனின் கிருபையை நம்பினான், அதற்கு உண்டான பெலனை பெரேயன்ஸ் பெறுவான் என்பார்!!

இப்பவும் உங்கள் கிரியை உள்ள மனதில் கிறிஸ்து என்னை அவமானப்படுத்துவார் என்று தான் தோன்றுகிறது, அதை தான் உங்கள் பதிவு வெளிப்படுத்தியிருக்கிறது!! இது தான் நீங்கள் கிரியையை போதிக்கும் ஞானம்!!

கிரியைகளில் இத்துனை விஷயங்களை விட்டு விட்டீர்கள் என்று வச்னங்களை எடுத்து காண்பித்து இதுவும் கிறிஸ்து இயேசு சொன்ன கிரியைகள் தான் என்று கேட்டிருந்தேன், இது வரையில் அதற்கு பதில் இல்லை, ஏனென்றால் இவைகளை செய்ய முடியாது, இவைகளை செய்ய கிருபை தேவை, அதிகமான கிருபை தேவை, அதை யார் செய்ய வேண்டும் என்று தேவன் நினைக்கிறாரோ, அவர்கள் நிச்சயமாக செய்வார்கள்!! கிரியை கிரியை என்று இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று தங்களால் செய்ய முடிகிற கிரியை மெச்சிக்கிற நியாயப்பிரமாண போதகராகவே நீங்கள் இருங்கள்!! கிறிஸ்து சொன்ன எல்லாவற்றையுமே செய்ய உங்களுக்கே திரானி இல்லாத போது அதை அடுத்தவருக்கு எப்படி தான் போதனையாக சொல்லுகிறீர்களோ!! முதலில் நீங்கள் கடைப்பிடியுங்கள், பிறகு போதிக்கலாம்!!

நாங்கள் செய்யும் கிரியை என்னவென்றும் சத்தியத்திற்காக நாங்கள் செய்வது என்னவென்றும் தேவனுக்கு தெரியும்!! தேவனின் கிருபை செய்ய முடியாததை அன்பு57ன் கிரியை செய்து முடிக்கும் என்கிற மமதையில் இருக்கும் உங்களுடன் இனியும் இந்த விஷயங்களை குறித்து விவாதிக்க நான் தையாராக இல்லை!! தேவன் தாமே அந்த கிருபையின் மேன்மையை நீங்கள் புரிந்துக்கொள்ளும்படி செய்யட்டும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இவ்வளவாய் எழுதியுங்கூட அவர் அதைப் புரிந்துகொள்ளாமல், தேவனை/இயேசுவை அறிவதற்கும் அவர்களின் கற்பனைகளைக் கைக்கொள்வதற்கும் சம்பந்தமில்லை என்பது போலத்தான் எழுதியுள்ளார்.//

அவர்களின் கற்பனைகளை கைக்கொள்கிறேன் என்று சொல்லி பின் பற்ற முடியாததற்கு வேறு அர்த்தம் கொடுக்க உங்களை போல் பழகவில்லை!! நான் மூன்று முறை உங்களிடம் சில வசனங்களை கொடுத்து இதுவும் கிறிஸ்து இயேசு செய்ய சொன்ன கிரியைகள் தான் என்று கேட்டும், அதற்கு மாத்திரம் ஏனோ பதில் இல்லை!! அது "கிரியை"கள் இல்லையா??!! அதை செய்யாமல் நீங்கள் மாத்திரம் தேவனையோ கிறிஸ்துவையோ "அறிந்து"க்கொண்டேன் என்று எப்படி துனிச்சலாக பொய் சொல்லுகிறீர்கள்!!

மத்தேயு 19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

மாற்கு 10:21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.

லூக்கா 12:33 உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.

லூக்கா 18:22 இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

மத்தேயு 19:29. என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

 

//எனவே அவரிடம் நேரடியாக நான் விவாதம் செய்யப்போவதில்லை. ஆகிலும் வேதவசனங்களுக்கு எதிரான அவரது கருத்துக்களை தொடர்ந்து எடுத்துரைக்கவே செய்வேன், அவருக்காக அல்ல, இணைய தளங்களைப் பார்வையிடுகிறவர்களுக்காக.//

முதலில் யோவான் 6:28,29ஐ உங்கள் போதனைக்கு ஏற்ப கிரேக்கத்தில் இல்லாத வார்த்தையை வைத்து புதிய அர்த்தம் கொடுத்ததை சரி செய்யுங்கள்!!

இந்த‌ தளத்தின் மூலம் யார் கற்றுக்கொள்ள தேவன் சித்தம் கொண்டு இருக்கிறாரோ, அவசியம் தெரிந்துக்கொள்வார்கள்!! நாங்கள் யாருக்கும் இதை செய், இதை பின்பற்று என்கிறதான போதனைகளோ, கட்டளைகளோ கொடுப்பதில்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard