ரோமர்9:10. இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,
11. பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம்கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,
12. மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.
13. அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
14. ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
15. அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.
16. ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.
17. மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.
19. இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.
20. அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
21. மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
22. தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
23. தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?
எத்தனை தெளிவான வசனங்கள்! சகலமும் தேவ சித்தம் என்பதற்கு இந்த ஒரு அதிகாரமே போதும்.
" பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,. மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது. அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது."
முத்தவன் சுயாதீனமாக "தற்செயலாக" ஊழியம் செய்தானா? அவருடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கே நடக்கிறது. பிள்ளைகள் பிறக்கும் முன்னேயே சொல்லியிருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? ஏசா ஏதோ எதேச்சையாக சேஷ்டபுத்திர அருகதையை விட்டுக்கொடுக்கவில்லை. அது தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விஷயம்.
"எவன்வேல் இரக்கமாயிருக்க அவர் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் மட்டுமே இரக்கமாயிருப்பதாக அவர்தான் சொல்லியிருக்கிறார், இது சோல் அல்லது பெரெயன் சொன்னது அல்ல. ரோமர் 9 எப்போதாவது வாசித்ததுண்டா, இல்லை "கிரிட்டிக்கல்" என்று ஒதுக்கிவிட்டீர்களா?
பார்வோனை நிலைநிறுத்தியது தேவன், அவன் அவரது மகிமையை ஜனங்கள் உணரும்படிக்கு உருவாக்கப்பட்ட பாத்திரம். பார்வோன் சாத்தானுக்கு ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறான். சாத்தானை தேவன் ஏற்படுத்தி இப்பிரபஞ்சத்தின் தேவனாக அவனை நிலைநிறுத்தியது அவருடைய மகிமையை உலகம் அறிந்து கொள்ளும்படிக்குத்தான்.
உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
குயவன் கையில் ஒன்றுமில்லை, எல்லா பாத்திரங்களும் சுயமாக உருவாகின்றன. ஒருவன் நல்லவனாகவும், தீயவனாகவும் மாறுவது அவனவனைப் பொறுத்தது என்று வாதிடுவோருக்கு இந்த அதிகாரம் பேரிடியாக இருக்கும். சமாளித்து ஓடி ஒளியத்தான் பார்ப்பார்கள்.
தீமைக்குக் காரணம் தேவன் என்றால் இவர்கள் இல்லை என்கிறார்கள். உலகிலுள்ள ஒவ்வொரு சம்பவமமும் அவரால் நடப்பிக்கப்படுகிறது, நடக்கும் சகலமும் தேவனுடைய சித்தம் என்பதில்தான் தாற்பரியமே இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ மனிதன் தன் சுய முயற்சியால் தேவனுடைய இரக்கத்தையும் உருக்கத்தையும் பெறுவதுபோலவும், இந்த முயற்சி இல்லாதவர்கள் அவரது இரக்கத்தைப் பெற மாட்டார்கள் என்று மனித கிரியையை மேன்மைப்படுத்துவது சரியல்ல. அவர் எவன் மேல் இரக்கமாயிருக்கச் சித்தம் கொண்டுள்ளாரோ அவன் மேல் (அவன் எப்படியிருந்தாலும்) இரக்கமாயிருப்பார். "இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" என்பதற்கு எவ்வித கண்டிஷனும் கிடையாது.
உங்கள் கிரியையைத் தூக்கி குப்பையில் போடுங்கள்....
ஏசாக்களை எந்த கிரியையைக்கொண்டும் யாக்கோபுகளாக மாற்ற முடியாது.
ஆனால் ஒருசில கீறல் விழுந்த மட்பாண்டங்கள் தங்களை பெரிய உபதேச போதகர்களாக நினைத்துக்கொண்டு, கீறல் விழுந்த கிராமபோன் ரெக்காடு போல ஒரு சில கிரியை வசனங்களைப் பிடித்துக்கொண்டு கிரியை, கிரியை என்று கத்திகொண்டு இருக்கிறார்கள்.
ரோமர் 9 க்கு பதில் சொல்லட்டுமே.
குயவனை எதிர்க்கும் மட்பாண்டங்கள்...
-- Edited by soulsolution on Wednesday 17th of August 2011 09:29:45 AM
சங்கீதம் 115:3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
பரலோகத்தில் இருக்கிற தேவன் தமக்கு சித்தமான எல்லாவற்றையும் செய்கிறாராம்!!
யாத்திராகமம் 7:3 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.
யாத்திராகமம் 8:19 அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.
பார்வோனிடம் அனுமதி கேள் அவன் அனுமதிப்பான் என்று மோசேயிடம் சொல்லிவிட்டு, பார்வோனும் அதற்கு சம்மதித்து விட்டான், ஆனால் தேவனின் சித்தம் நிறைவேறும் படி தேவனே பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தினார் என்று இத்துனை தெளிவாக சொல்லியும் கிறிஸ்தவ மண்டலத்தில் இதை ஏற்றுக்கொள்ள தையாராக இல்லை!! அதாவது மனிதன் தன் சித்தத்தை செய்ய பூர்ண சுதந்திரம் படைத்தவன் என்கிறதான ஒரு வசனம் இல்லை, தேவன் தன் சித்தத்தின்படியே எல்லாவற்றையும் செய்கிறார், பார்வோனின் இருதயத்தை கடின படுத்திய தேவன் மற்ற மனுஷர்களை மாத்திரம் அவர்களின் சித்தத்தையே செய்ய அனுமதிக்கிறார் என்பது விகர்ப்பமான விவாதம்!!
II தெசலோனிக்கேயர் 1:12 நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
யார் அழைக்கிறார்?? ஊழியர்களா?? இல்லையே தேவன் தானே அழைக்கிறார்!! அந்த அழைப்புக்கு பாத்திரராக அவரே ஆக்குகிறாராம்!! என்னமோ நான் கிரியை செய்து என் கிரியைகளின் மூலம் நான் தேவனை தெரிந்துக்கொண்டேன் என்றால், கிரியை செய்கிறதில் வல்லவராக இருக்கும் பல நாத்தீகர்கள், பல வேற்று சமயத்து நியாயஸ்தர்கள் இன்னும் தேவனை அறிந்துக்கொள்ள முடியவில்லையே??!! மேலும் விசுவாசத்தின் கிரியை நம்மில் நிறைவேற்றுபவரும் தேவனே, நம் சொந்த புத்தியின் கிரியைகள் அல்ல!!
மத்தேயு 8:9 நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான்.
ஒரு மனிதனுக்கே இந்த அதிகாரத்தை கொடுத்திருக்கும் கர்த்தர் தான் படைத்த மனிதர்களை தன் சித்தத்தின்படி செய்ய வைப்பது முடியாத காரியம் என்பது போல் பேசுகிறார்கள் சிலர்!!
பிலாத்துவிடம் கிறிஸ்து சொன்னது,
யோவான் 19:11 இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது;