kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சோல் மனந்திரும்ப வேண்டும் என்ற ஆவல்...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
சோல் மனந்திரும்ப வேண்டும் என்ற ஆவல்...


ஜோஸ்போஸ்//சோல் மனந்திரும்ப வேண்டும் என்ற ஆவல் உங்களிடமும் மற்றும் இவ்வினைய பக்கத்தில் பதிவிடுவோருக்கும் இருப்பின் நீங்கள் ஒருநாளை உபவாசித்து செபிக்க குறித்து அதை செயல்படுத்தலாமே! அவரவர் வீட்டிலிருந்தே அதை செயல் படுத்தலாமே, இது போன்ற செயல்பாடுகளை உபவாசத்துடன் இனைந்த செபம் மட்டுமே செய்யும். கெட்ட வார்த்தைகள் பிரயோகிப்பது, நாயையும் பன்றியையும் வம்புக்கு வலிப்பது தேவன் தான் படைத்த தம் சிருஷ்டிப்பாகிய மனிதனை கேவலப்படுத்துவதோடு, தேவனுக்கே உரிய தீர்ப்பிடுதலின் உரிமையில் பங்கேற்பதாகவே மாறிவிடும். விவாதம் ஆரேக்கியமாக அமையும் வரை அது ஆத்துமத்துக்கு நன்மையை பயக்கும். ஆனால் இங்கோ ஆத்ம இரட்சிப்புக்கு இடங்கொடாமல் ஒருவரையொருவர் தூற்றுவது எந்தவகையில் வேதத்துக்கு ஏற்றதாக உள்ளது? இதை நான் எழுதும் போது யார் மனமும் புன் பட்டுவிடக்கூடாது என்று நினைத்தே எழுதுகிறேன்//

சிந்துபாத் கதைபோல நான் திருந்தமாட்டேன் என்றவர் தற்போது இந்தப் பரிசுத்தவான்களை உபவாச ஜெபத்திற்கு அழைக்கிறார்.

தம்பி டீ இன்னும் வர்ல‌...

நாய் பன்றி என்று வம்புக்கு வலிப்பது(?) நான் மட்டுமல்ல‌... கிறிஸ்துவே வலித்திருக்கிறார். பிசாசின் மகனே என்பதை விட இது தேவலாம்தான்.

முதலில் பிரசங்கியின் புத்தகம் வேதமே அல்ல அது மனிதன் எழுதியது என்று வேதவார்த்தையைக் கொச்சைப்படுத்தும் கோல்டாவுக்காக செபியுங்கள்.

தனக்கு வேதவசனங்களே தெரியாது என்று சொல்லிவிட்டு மற்றவர்களூக்குப் போதிக்கும் முட்டாள் சில்சாமுக்காக செபியுங்கள்.

நீங்கள் என்னதான் உபவாசித்து "செபித்தாலும்" தேவ சித்தம் மட்டும்தான் நடக்கும் என்று உணருங்கள்.

உண்ணாவிரதமிருந்து ப்ளாக் மெயில் செய்ய நீங்கள் அன்னாவுமில்லை, தேவன் மன்மோகனுமில்லை.

கீழ்க்கண்ட வசனங்களில் யார் யாரைத் "தூற்றியது"? அவர்களுக்காகவும் செபிப்பீர்கள் போல. உங்கள் உபவாச செபக்காமெடிகளை வேறு யாருக்காகவாவது செய்யுங்கள்.

"சோல்" என்னவாகும் என்று என்னைப் படைத்த தேவனும் என்னக்காக மரித்த ஆண்டவரும் அறிவார்கள். உங்கள் கரிசனத்துக்கு நன்றி!

மத்தேயு 3:7 பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?

அப்போஸ்தலர் 13:10 எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?

யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்;

மத்தேயு 7:6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.

மத்தேயு 23:14 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ,

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard