சோல் சொல்யூஷன்: ////உனக்கும் சத்தியத்துக்கும் வெகுதூரம், போ போய் உன் சாதுவுக்கு "பணிவிடை" செய், எல்லாரும் மெச்சிக்கொள்வார்கள்.//
சகோ அன்பு: //யௌவன ஜனம் தளத்தில் சோல்சொல்யூஷனுக்கு எதிராக விவாதித்துக்கொண்டிருக்கும் கோல்டா எனும் சகோதரிக்கு எதிராக இப்பதிவை சோல்சொல்யூஷன் தந்துள்ளார். இப்பதிவின் முதல் வரி விவாதத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாததும் தேவையற்றதும் மிக மட்டரகமானதும் ஒரு பெண்ணை மனோதத்துவ ரீதியில் கடுமையாகத் தாக்குவதுமாகும். அவரது இச்செயலை இத்தளத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.//
கோல்டா: //மிக்க நன்றி சகோ அன்பு அவர்களே! அந்த வரியை நீக்கச் சொல்லி கேட்டாச்சு. என்ன பெரேயன்ஸ் அவர்களே??
அத்துடன் சகோ சில்சாமுக்கும் மிக்க நன்றி.//
சகோ சொல் சொல்யூஷன் "பணிவிடை" என்று எழுதியதை குறித்தான விமர்சனங்களே இங்கே இருக்கிறது!! இதை ஒரு பெரிய சர்ச்சையாக்கியது கோல்டா என்பவர் ஒரு ஸ்திரி என்பதினால்!! பணிவிடைக்கு கொச்சையாக அர்த்தம் எடுத்துக்கொண்டோரின் மனநிலையை தான் அது காண்பிக்கிறது!! போய் பணிவிடை செய் என்பதை ஒரு எதிராளியிடம் சொல்லுவதால் அர்த்தம் மாறிவிடுகிறதோ!!
தயவு செய்து கோல்டாவானாலும் சரி, அன்பு என்றாலும் சரி இந்த வரிகளுக்கு நேரடியான அர்த்தம் எடுத்துக்கொள்ளவே முடியாத அளவிற்கு ஏன் பார்க்கிறீர்கள்!! உங்கள் மனதில் ஏன் தப்பான அர்த்தங்களை உருவாக்கி அதை சோல் சொல்யூஷன் மீது சுமத்துகிறீர்கள்!! இதை வாசித்து இதற்கு தப்பான அர்த்தம் கண்டுபிடிப்பவர்களிடம் அழுக்கு இருக்கிறதா அல்லது இதை எந்த விதமான உள்நோக்கமும் இல்லாமல் எழுதியவரிடம் இருக்கிறதா!!
அல்லது யெளவன ஜனம் என்கிற துருபதேச தளத்தின் தலைவர் நாகரீகத்தின் அஸ்திபாரமா!! ஒரு வார்த்தைக்கு இரட்டை அர்த்தம் கொண்டு அதில் குளிர் காய விரும்புகிறவர்களிடத்தில் தான் அழுக்கு இருக்கிறது!! கேவலமான எண்ணங்களை உள்ளே வைத்துக்கொண்டு அதினால் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் கொண்டு அதை வண்மையாக கண்டிப்பவர்கள் கொஞ்ச நாட்கள் முன்பு அதே யெள்வன ஜனம் என்கிற துருபதேவ தளத்தில் தலைவர் நாகரீகத்தின் உச்சத்தில் என்னை வேசியின் மகன் என்று சொல்லிய போது எந்த பொந்தில் அடங்கியிருந்தார்களோ!! சில்சாமிற்கு இதை குறித்து பேசவே அருகதை கிடையாது, அவன் சாத்தானின் தூதன்!!
நேரடியா சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை லேசில் விட்டவர்கள் (கோல்டா உட்பட), இன்று "ஸ்திரி"யிடம் சொல்லப்பட்ட யதார்த்தமான ஒரு வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடித்து எதிர்ப்பு தெரிவிப்பது அவர் அவர் இருதயத்தில் ஒரு வார்த்தைக்கு என்ன அர்த்தம் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை தான் விளக்குகிறது!! பணிவிடை என்பது ஒரு கொச்சையான வார்த்தை என்று இந்த அதிமேதாவிகள் சொல்லி தான் நாங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது!!
ஆகினும் சகோ சோல் சொல்யூஷன் அவர்களும் இந்த தளத்தின் மாடரேட்டராக இருப்பதால், அவர் எழுதியதை அவர் நீக்கவோ நீட்டிக்கவோ அவருக்கு முழு சுதந்திரம் உண்டு!! ஆனால் அவர் எழுதியதில் "வன்மையாக" கண்டிக்கிற அளவிற்கு இருப்பதாக ஒன்றும் இல்லை!! ஸ்திரி என்கிற காரணத்தினால் அதற்கு அழுக்கான அர்த்தங்களை கொண்டு விமர்சிப்பதில் என்ன நியாயம்!!
வேதப்புத்தகத்தில் ஒரு பகுதியை எழுதியது கடவுள் நம்பிக்கையில்லாதவன் என்று மூடத்தனமாக எழுதியதற்கு ஒருத்தனும் வாயே தெறக்கல, நம்ம மேட்டர வன்மையாக கண்டிக்க வந்துட்டாக... முதலில் "பணிவிடை" என்பதற்கு என்ன அர்த்தம் என்று அவரவர் தளங்களில் பதியுங்கள், நீக்குவதா வேண்டாமா என்று பின்னர் முடிவு செய்யலாம்.
அதற்கு முன் பிரசங்கியின் புத்தகத்தை வேதத்தில் வைக்கலாமா? வேண்டாமா? என்று ஒரு விவாதம் தொடங்கி ஒரு முடிவுக்கு வாருங்கள். எது சர்ச்சைக்குரிய வார்த்தை என்பதையே மறந்து பணிவிடைக்கு அர்த்தம் தேடிக்கொண்டிருக்கிறீர்களே? மரியாள், மார்த்தாள் இயேசுவுக்கு பணிவிடை செய்திருப்பார்கள்தானே, இந்த அம்மணிக்கு சாது சொல்வதுதானே வேதவாக்கு,,, ஏன் பணிவிடை செய்யமட்டும் தயக்கமா? புருஷனைவிட சாதுவை நேசிக்கிறாய் என்ற சில்சாமின் பதிவையே நான் தலையிட்டதும்தானே மன்னித்து நீக்குவதாக டிராமா போட்டீர்கள்.
அன்பு அவர்களுக்கு, அநியாயத்தக் கண்டா பொங்கி எழு என்ற எண்ணம் இப்போதுதான் வந்ததா? அல்லது இதுவும் உங்கள் நீதியின் கிரியையா?
வேதத்தை யாரோ போக்கத்தவன் எழுதினான் என்று அந்த அம்மணி பதிந்திருப்பது உங்கள் கண்களுக்குப் படவில்லையோ?
ஆமாம்... "பணிவிடை" என்பதற்கு நித்தியஜீவன் தளத்தில் என்ன அர்த்தம் வைத்திருக்கிறீர்கள்? அந்தம்மா கூட அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையே, உங்களுக்கென்ன ஆதங்கம்? முட்டாள்தனமாக நீங்கள் கண்டித்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
"கிறிஸ்து தற்காலிகமாக உலகத்தை இரட்சிக்க வந்தார்; நிரந்தர இரட்சிப்பு என்பது தேவனால் அல்ல மனுஷனால் மட்டுமே கூடும்" என்ற நூதன சுவிசேஷத்தின் தந்தையே. உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். கிறிஸ்துவைத் தொழ மறுக்கும் மேசியாவின் எதிரிகள் லிஸ்டில்தான் நீங்களும் இருக்கிறீர்கள். உங்கள் சுவிசேஷத்தைப் பரப்பி அதிகம் பேரை இரண்டாம் மரணத்திற்கு தப்புவிக்கும் மாபெரும் பணியை மாத்திரம் செய்யுங்கள்...
மத்தேயு 4:11 அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
மத்தேயு 8:15 அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.
மத்தேயு 20:26 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.
I கொரிந்தியர் 9:13 ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?
II கொரிந்தியர் 9:12 இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும்.
தவறாக தோன்றியதை சகோ சோல் சொல்யூஷன் அவர்களே நீக்கிவிட்டார் என்கிறீர்கள், அப்படி என்றால் பணிவிடை என்கிற வார்த்தையில் என்ன தவற்றை கண்டுபிடித்தீர்கள் என்று தான் கேட்க்கிறேன்!! பேதுருவின் மாமியார் என்பவள் ஸ்திரி தானே, அவர் தானே பணிவிடை செய்ததாக வேதத்தில் எழுதியிருக்கிறது!! உங்கள் அழுக்கான கண்களோடு தான் அந்த வசனத்திற்கும் அர்த்தம் கொள்வீர்களோ!!
உங்கள் பாசமிகு அண்ணன் மன்னிபு என்கிற போர்வையில் இது என் கருத்து அல்ல, இது இன்னாரின் கருத்து என்று சொல்லியிருக்கிறாரே, அந்த இன்னாரை கண்டனம் செய்யவோ, வன்மையாக கண்டிக்கவோ உங்கள் கூட்டத்திற்கு முடியவில்லை, ஏனென்றால் அந்த இன்னாரும் உங்கள் கோட்பாட்டின் போதகனாக இருக்க கூடும்!! உங்களுக்கு எதிராக எழுதுபவர்கள் என்பதாலே "பணிவிடை" என்கிற ஒரு சாதாரன வார்த்தையும் உங்கள் அகராதிகளில் அர்த்தம் மாறி விட்டது போல்!!
இன்னோரு அண்ணன்: //கோவை பெராயன்ஸ் வேதத்தை எப்படி 'ஆராச்சி" செய்கிறார்கள் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம்//
உங்கள் அளவிற்கு, வேதத்தை எழுதியது நாத்தீகன் என்கிற அளவிற்கு நிச்சயமாக இல்லை!! வேதத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் தேவ ஆவியினால் அருளப்பட்டது என்பதை நம்பி தான் வேத வசனங்களை தியானிக்கிறோம்!! ஆனால் வேதத்தில் ஒரு பெரிய மிகவும் முக்கியமான, பல தெளிவுகள் அடங்கிய புத்தகத்தை இந்த அம்மையார், அதான் உங்கள் பசமிகு தங்கை (சாது போதனைகளை தவிர) ஒரு நாத்தீகனின் படைப்பு என்கிறார்!! அந்த அளவிற்கு வேத புலமை உங்கள் கூட்டத்தாரிடம் இருக்கிறது!! இன்னோரு துனை போதகனுக்கு ஆக்கினை தீர்ப்பு என்பது தான் வேதம் கூறும் "சுவிசேஷம்" என்று சொல்லுகிறார்!! அய்யா, உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும், அநேகரை வஞ்சிக்கும் பணி இருக்கும், தேவையில்லாமல் எங்களுடன் உங்கள் நேரத்தை வீண் அடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்!! ஆனால் நாகரீகத்தை குறித்து எங்களுக்கு அறிவுறை சொல்லும் உங்கள் தன்மை சற்று உங்கள் தலை பக்கம் திரும்பினால் நன்றாக இருக்கும்:
//சமாரிய பெண்ணின் அதே தந்திரம்! புருஷனை அழைத்து கொண்டு வா என்று இயேசு கிறிஸ்து சொன்னதற்கு அவள் சொன்ன பதில் Logical ஆக சரியாய் இருந்தாலும் அதை சொன்ன நோக்கம் அல்லது சொல்லும் போது மனதில் இருந்த Convinction தவறு. இப்போது இவரும் தவறான நோக்கத்தோடு சொல்லிவிட்டு இப்போது எப்படி பசப்புகிறார் பாருங்கள். இவரும் எழுத்தும் , கோபமும் , நடைக்கையும் இவர் கிருஸ்துவை விட்டு எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதை வெளிபடுத்துகிறது. //
அய்யா உங்கள் கூட்டத்தை போல் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் கொண்டு பேசும் அளவிற்கு தந்திரசாலிகள் இல்லை நாங்கள்!! எதையும் பசுப்பி மறைக்க வேண்டிய வெங்காயமும் எங்களுக்கு தேவையில்லை!! வாசிப்பவன் எந்த அளவிற்கு நாகரீகமானவனாக இருக்கிறானோ அது தான் அவன் வாசிப்பதில் அர்த்தம் கொள்ள முடியும்!! வக்கிர புத்தியுடன் யோசித்து பணிவிடை என்று வேதம் நேரடியாக சொல்லும் வசனங்களை விட்டு விட்டு "பணிவிடை" என்கிற வார்த்தையோ அர்த்தமோ இல்லாத வேறு ஒரு வசனத்தை கொண்டு நீர் விளக்கம் எழுதியதிலிருந்தே தெரிகிறது உமது வக்கிரமான புத்தி எப்படி பட்டது என்று!! கடுகை வைத்து அணுகுண்டு வெடிக்கச்செய்யும் உமது புத்தி எப்படி பட்டது என்பதை உம் பதிவே காண்பித்து விட்டது!!
கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்கிற மதியீனத்தனமான எண்ணங்களை வைத்துக்கொண்டு எந்த கிறிஸ்துவிற்கு அருகில் இருப்பதாக நினைப்பு!! உம் கூட்டத்தார் அன்பு என்கிற வார்த்தையையும் கொச்சையாக தான் பார்ப்பீர்கள்!! அதற்கும் வேறு அர்த்தம் வைத்திருப்பீர்கள் போல்!!
இயேசு கிறிஸ்துவை தெய்வமாக தொழுகிறோம் என்கிற ஒரு புதிய மார்க்கத்தின் தலையாக தன்னை ஸ்தாபிக்க துடிக்கும் ஒரு வெட்டி பயல் (சாத்தானை உட்கார வைத்து பேசும் அளவிற்கு எனக்கு நாகரீகம் இல்லை தான்) தனக்கு கூட்டம் சேர்க்கும் பிரயாசத்தில், வஞ்சகத்தில் இறங்கியிருப்பது உங்களுக்கு புரிய நியாயம் இல்லை தான்!! அவனின் வஞ்சக வலையின் ஒரு பகுதி தான் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற பாணியில், ஏதோ எங்கள் மூக்கை உடைத்து வெற்றி வாகை சூடி கிரீடம் பெற்றுவிட்டதாக அன்பு அவர்களை பாராட்டி தன் தளத்தில் வெளியிட்ட அறிக்கை!! அட ஒநாயே, உன்னை போல், ஒரு விஷயத்திலாவது எங்களுக்கு துனையாக இருக்கிறான் என்று கூட்டம் சேர்க்கும் ஆட்கள் இல்லையடா நாங்கள்!! ராணுவத்தில் எப்படி எல்லாம் ஒரே எண்ணம் ஒரே கருத்து என்று இருந்ததோ, அதே போல் தான் இப்பவும்!! நீ ஓநாய் பரம்பரையை சேர்ந்தவன், உனக்கு வேதத்தை எவன் எழுதியிருந்தால் என்ன, நாத்தீகனோ, கிறுக்கனோ, ஆனால் உனக்கு ஜால்ரா போட்டால் போதுமே, அவனை உன் கட்சியில் சேர்த்துக்கொள்ளுவாய், ஏனென்றால் உனக்கு வேதத்தின் சத்தியம் தேவையில்லை, மாறாக உன் தலைமையில் ஒரு பெரிய கூட்டம் தேவை!! அட கோமாளியே உன் எங்கள் எழுத்தை கவணித்து பார்த்ததைவிட, நீ எழுதிய குப்பைகளை அசைபோட்டிருந்தாலும் நீ திருந்தி வந்திருப்பாய்!! ஆனால் நீயோ திரும்பி தான் வந்திருக்கிறாய்!! சாத்தான் ஓய்வு எடுத்து இன்னும் பல தந்திரங்களினால் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டு திரும்பியிருக்கிறது!! அது உன்னுடைய பதிவுகள் வெளிப்படுத்துகிறது!! உனக்கு ஜால்ராக்கள் இருக்கலாம், ஆனால் நாங்கள் நம்புவது எங்கள் தேவனை!! உன் கூட்டத்தில் இருப்பவர்கள் வேதம் எழுதியது கிறுக்கன், நாத்தீகன் என்று சொல்லுபவர்களாக தான் இருக்க கூடும், ஆனால் உனக்கு அதிலெல்லாம் அக்கறையே கிடையாதே!!
ஒரு பெண்ணை மனோரீதியாக துன்பப்படுத்திவிட்டார் சோல் சொல்யூஷன் என்கிற சகோ அன்பு அவர்களின் வாதமும் ஏற்புடையதாக அல்ல!! விவாதம் என்று வந்து விட்டு சரிசமமாக விவாதிப்பவரை ஆண் என்றும் பெண் என்றும் பிரித்து ஏன் எழுதுகிறீர்கள்!! அந்த தளத்தில் அதே அம்மையார் அவர்களின் தலைவர் எழுதுவதையும் வாசிப்பவர் தானே!! ரஸ்ஸலின் மூத்திரத்தை குடிப்பவர்கள் என்று எழுதுவதெல்லாம் அந்த அம்மையார் படித்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்!! வேசியின் மகன் என்று ஒருவரை சொன்னதையும் அந்த அம்மையார் படித்திருப்பார்!! அவர் உண்மையிலேயே ஸ்திரி என்கிற பக்குவத்தில் இருந்து எழுதுகிறார் என்றால் இதை எல்லாம் அன்றே கேட்டிருக்க வேண்டும்!! இதை எல்லாம் அன்றே அன்பு அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்!! வலி எடுப்பதில் ஆண், பெண் எல்லாரும் சமம்!! பணிவிடை என்கிற ஒரு சாதாரன வார்த்தைக்கு சாயம் பூசி இந்த அளவிற்கு கொண்டு செல்ல உங்களுக்கு மாத்திரமே கைவந்த கலை!!