பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்.
எல்லாருடைய பாவங்களையும் அவர் சிலுவையில் சுமந்து தீர்த்தார்.
ஆனால் எல்லா பாவிகளும் இரட்சிக்கப்பட மாட்டார்கள்.
இயேசுகிறிஸ்துவின் நாமம் அல்லாமல் யாரும் இரட்சிக்கப்பட மாட்டார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்ன ஆவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. தேவன் ஒரு திட்டம் வைத்திருக்கலாம்.
இப்போதும், சுவிசேஷத்தை கேட்காமலே மரிக்கிறவர்களுக்கு தேவன் ஏதாவது திட்டம் வைத்திருப்பார். ஆனால் ஒருமுறை கேட்டுவிட்டு ஏற்றுக்கொள்ளாதவனுக்கு நரகம் நிச்சயம்.
கேள்விப்பட்டும் கடைசிவரை நிலைநிற்பவன் மட்டுமே இரட்சிக்கப்படுவான். முடியாதவனுக்கு நரகமே.
ஆக மொத்தம் நரகம் 99% ஜனங்களால் நிறைந்திருக்கும். முடிவில்லா வாதையில் இருப்பார்கள்.
பிரதான மேய்ப்பரான கிறிஸ்துவிற்கு நேரடியான துனை மேய்ப்பரான பீட்டர் சாமுவேல் எஸ் ஒரு புதிய சுவிசேஷத்தையும் வைத்திருக்கிறார்!!
ஆக்கினை தீர்ப்பு அடைவது தான் வேதம் சொல்லும் சுவிசேஷம் என்கிறார் இந்த துனை மேய்ப்பர்!!
இது எப்படி இருக்கு!!
கேட்டால் இவர் துனை மேய்ப்பராம்!! இவரின் கூற்றின்படி கிறிஸ்துவின் இரத்தம் சிந்துதல், அவரின் ஈடுபலி மிக சிலருக்கே பிரயோஜனமானதாக இருக்கும் என்கிறார்!! இவர்களின் இந்த நற்செய்தியை (!!) கேட்காமல் செத்து போகிறவர்கள் நேரடியாக நரகம் தான், சாத்தானுக்கு துனையாக!!
இவரை போன்று இவரின் மற்ற துனை மேய்ப்பர்களும் இதையே தான் கலர் கலராக போதிக்கிறார்கள்!! அதாவது சாத்தானுடன் நித்த்யத்திற்கு அக்கினியில் வெந்துக்கொண்டு இருப்பர்களாம்!!
ஆனால் வேதம் சொல்லுவது என்னவென்றால் சாத்தானையே தேவன் இல்லாமல் செய்துவிடுவார் என்று!!
அப்படி என்றால் இல்லாத சாத்தானுடன் இவர்கள் சொல்லும் சுவிசேஷத்தை கேட்காமல் மரித்து போகிறவர்கள் இருப்பார்கள் என்று இவர்கள் சொல்லுவது உண்மையிலேயே ஒரு வித்தியாசமான சுவிசேஷம் தான்!!