kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இன்னொரு தளம்....


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
இன்னொரு தளம்....


 

//ஆதியில் மனிதனை சிருஷ்டித்த தேவன், அவனை ஒரு Robot ஆகப் படைக்கவில்லை. அவன் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கத்தக்கதாக அவனுக்கு சுயாதீனத்தைக் கொடுத்தார்.

ஆனால் சில சகோதரர்களோ, “மனிதனுக்கென சுயாதீனம் கிடையாது; தேவசித்தப்படியே அவன் ஒவ்வொரு செயலையும் செய்கிறான்” எனக் கூறுகின்றனர். அவர்கள் சொல்வதற்கு ஆதாரமான எந்த வசனமும் வேதாகமத்தில் இல்லை.//

மீண்டும் எந்த வசனமுமில்லை என்று முட்டாள்தனமாக பதித்துள்ள நீங்கள் கீழ்க்கண்ட வசனங்களுக்கு என்ன பதில் தருவீர்கள்? தெரியாதமாதிரி விலகிவிடுவீர்களா? அல்லது நறுக்கென்று பதில் தருவீர்களா?

சங்கீதம் 115:3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.

மனிதனின் சித்தத்தைச் சார்ந்து அல்ல‌...

தானியேல் 4:17 உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் 

அட மனுஷன் சுயசித்தத்தினால் அதிகாரியாகுவதில்லையா?

தானியேல் 5:19 அவருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்திலே சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவருக்கு முன்பாக நடுங்கிப் பயந்திருந்தார்கள்; அவர் தமக்குச் சித்தமானவனைக் கொன்றுபோடுவார், தமக்குச் சித்தமானவனை உயிரோடே வைப்பார், தமக்குச் சித்தமானவனை உயர்த்துவார், தமக்குச் சித்தமானவனைத் தாழ்த்துவார்.

என்னய்யா இது வம்பா இருக்கு? ஒருவன் உயர்வதும் தாழ்வதும் அவன் சித்தமில்லையா?

தானியேல் 5:21 அவர் மனுஷரினின்று தள்ளப்பட்டார்; அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம்போலாயிற்று; காட்டுக்கழுதைகளோடே சஞ்சரித்தார்; உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளுமட்டும் மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தார்; அவருடைய சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.

மனுஷரின் ராஜ்ஜியத்தில் தேவனா? அட இப்ப "ஜெ" ஆட்சிக்குவந்தது ஜனங்கள் ஓட்டுப்போட்டதினால் இல்லையா?

மாற்கு 3:13 பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

ஓ, மற்றவர்கள்? மலைப்பிரசங்கம் கேட்க சுயாதீனமாய் சிந்தித்திருந்தாலும் வந்திருக்க மாட்டார்களோ?

பிரசங்கி 9:11 நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியமடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.

அட அன்பு சொல்கிறார் ஞானம் போதுமென்று என்ன பிரசங்கியாரே உளருகிறீர்?

ஏசாயா 46:10 அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

என்ன சித்தமானவைகளை செய்வீங்களா? காமெடி பண்ணாதீங்க தேவனே, 2தீமோ2:4 தான் நடக்காதே. மனுஷன் தயவு உங்களுக்கு வேண்டும்.

அப்போஸ்தலர் 13:22 பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்.

அட அவனுக்குச் சித்தமானதைத்தானே அவன் செய்வான்? போங்க ஆண்டவரே கொழப்புரீங்க‌...

யோபு37:6. அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.

7. தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார்.

8. அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.

9. தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.

10. தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோம்.

11. அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.

12. அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார்.

13. ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார்.

கிழிஞ்சு போச்சு. காற்றும் மழையும் கூட உமது கைங்கரியம்தானா? 

அப்போஸ்தலர் 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

ஒரு மனிதன் எங்கு குடியிருக்க வேண்டுமென்பது அவனது விருப்பத்தைப் பொறுத்தது. நீங்க யாரு முன்குறிக்றதுக்கு?

யாத்திராகமம் 7:3 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.

யாத்திராகமம் 9:12 ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

பார்வோன் சுயாதீனமாக கடினப்படலயா?

யாத்திராகமம் 14:17 எகிப்தியர் உங்களைப் பின் தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.

அட பார்வோன் மட்டுமில்லாம எல்லாருமேவா?

உபாகமம் 2:30 ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.

அவனையுமா?

II கொரிந்தியர் 5:5 இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே.

ஹலோ நான் தான் ஆயத்தப்படுகிறேன். என்ன உளருகிறீர்?

ரோமர் 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

என்னாத்த முன்குறித்தீரோ, அவனவன் சுயசித்தம் நடக்கும்போது இதெல்லாம் என்ன காமெடி?

எபேசியர் 1:12 தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.

எல்லாவற்றையும் நடப்பிக்கிறீரா?

யாத்திராகமம் 4:11 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

ஊமை செவிடன் குருடனெல்லாம் 'தற்செயலாக' உண்டாகவில்லையா?

யோபு 23:13 அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.

மாட்டார். மனிதனால் அவர் சித்தம் தடைப்படும்.

யோபு 38:36 அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?

உள்ளத்தில் புத்தி தானாக வரும். படிச்சா புத்தி வந்துட்டுப்போது?

ஏசாயா 43:13 நாள் உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?

மனிதன்! சந்தேகமிருந்தால் சகோ.அன்பைக் கேளுங்கள்.

ஏசாயா 44:7 பூர்வகாலத்து ஜனங்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்.

 அட நிகழ்காரியம் வருங்காரியம் எல்லாம் மனிதன் எடுக்கும் முடிவைப்பொறுத்தது. மனிதன் எடுக்கப்போகும் முடிவே உமக்குத்தெரியாதே, நீர் எப்டிவருங்காரியங்களை முன்னறிவிப்பீர். உளராதீங்க தேவனே...

ரோமர் 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

இன்னாடா இது வம்பாகீது, எலக்ஷன்ல ஜெயிச்சா அதிகாரம், படிச்சு கலெக்டர் ஆனா அதிகாரம். இவரு என்னா நியமிக்ற‌து?

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//ஆதியில் மனிதனுக்கு அநேக கட்டளைகளை/கற்பனைகளை தேவன் கூறவில்லை; ஒரேயொரு கட்டளையை மட்டும் கொடுத்தார். அக்கட்டளையை மனிதன் மீறியதையும் அதினிமித்தம் அவனும் இப்பூமியும் சபிக்கப்பட்டதையும் நாம் நன்கறிவோம்.//

ஒரு கட்டளையையே ஒழுங்காக கடைப்பிடிக்கத்துப்பில்லாதவனுக்கு ஆயிரம் கட்டளைகள் கொடுத்தாராம். அப்படியாவது அவன் திருந்தட்டும் என்றா? நல்ல லாஜிக் இப்டியே மெயின்டென் பண்ணுங்க‌...




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யோவான் 19:11 இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.

பரத்திலிருந்து யார் அதிகாரம் தருகிறார்களோ, தெரியவில்லை!! சகோ அன்பு அவர்கள் சொல்லின்படி, அதிகாரம் பிலாத்துவின் சுயசித்தத்தினால் தான் வந்திருக்க வேண்டும்!!

ரோமர் 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

சகோ அன்பு சொல்லுகிறார் மனுஷனின் சித்தத்தினால் தான் எல்லாம் நடக்கிறது, தேவன் எதையும் நியமிப்பதில்லை என்று!! நம்மை யார் ஆளுகை செய்யவேண்டும் என்கிற அதிகாரமும் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது!! ஏதோ மனித சித்தத்தினால் ஒருவன் அதிகாரியாகவும் ஒருவன் சேவகனாவும் இருப்பதில்லை, அன்பு சகோதரரே!!

கொலோசெயர் 1:13 இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

ஏதோ நம் சொந்த முயற்சியில் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, குமாரனுடைய ராஜியத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறோமாம் சகோ அன்பு அவர்களே!!

யூதா 1:25 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

இப்பவும் சொல்லுகிறோம் கிரியை என்பது தேவன் மனிதர்களுக்கு தமது கிருபையின்படி வைத்திருக்கும் சித்தம் தான்!! என்னமோ நம் சுய சித்தத்தினால் மனிதன் கிரியை செய்து அதினால் இரட்சிக்கப்படுகிறான் என்றும், தேவனின் சித்தம் நடைபெறுவதில்லை, மனிதனின் சித்தம் தான் நடக்கிறது என்று போதிப்பது புதுமையான போதனையாக இருக்கிறது!! இப்படி பல புதுமையான போதனைகளை தேவனே அனுமதிக்கிறார்!! அவரின் அனுமதியின்றி சகோ அன்பு இப்படி எழுதியிருக்க முடியாது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யோவான் 5:24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

வசனத்தை கேட்டு பிதாவை விசுவாசிப்பவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று வசனம் சொல்லுகிறது!! ஆனால் அன்பு அவர்களுக்கு கிரியை செய்தால் மாத்திரமே நித்திய ஜீவனாம்!! வேறு ஒன்றும் தேவையில்லையாம்!! பிதாவிடத்தில் விசுவாசம் கொண்டாலே இவை யாவும் நடக்கும்!! இனி விசுவாசம் உங்கள் சொந்த முயற்சியா, விசுவாசம் தேவனின் ஈவு என்கிறது வசனம்:

எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

ஆனால் சகோ அன்பு சொல்லுகிறார், இது என்னால் (அன்பு) என் கிரியையினால் உண்டானது!! விசுவாசிப்பதே ஒரு ஈவு என்று கொடுக்கப்படுகிறது, அந்த விசுவாசத்தை கொண்டு பிதாவை விசுவாசிப்பவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று வசனம் தெளிவாக சொல்லும் போது, இவருக்கு அப்படி பட்ட வசனமும், அப்படி பட்ட விளக்கமும் சாத்தானின் போதனையாக தெரிவதில் எந்த தவறும் இல்லை!! தன் கிரியை நம்பி, தேவனின் ஈவான கிருபையும் விசுவாசத்தையும் சாத்தான் ஒருவன் தான் தள்ளி வைக்க முடியும்!!


யோவான் 5:39 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

அடுத்து தேவ வாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள், அதினால் நித்தியஜீவன் உண்டென்று கிறிஸ்து இயேசு சொல்லுகிறார்!! உடனே சகோ அன்பு சொல்லுகிறார், தேவ வாக்கியங்களில் எவை எல்லாம் கிரியை குறித்து சொல்லுகிறதோ அது மாத்திரமே நித்திய ஜீவனுக்கு உண்டான வசனங்கள் மற்றவை எல்லாம் சாத்தான் (நாங்க தான்) கொண்டு வரும் முட்டாள் தனமான கருத்தும் கோட்பாடுகளாம்!! அதாவது இவருக்கு கிறிஸ்து இயேசு சொல்லியும் இவர் இவர் பிடிவாதத்தில் நிலைத்திருப்பது எதை காட்டுகிறது!!??

யோவான் 6:47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறிஸ்துவிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று மெய்யாகவே மெய்யாகவே கிறிஸ்து இயேசு சொல்லுகிறார்!! ஆனால் இதுவும் சகோ அன்புக்கு சாத்தானின் முட்டாள்த்தனமான கருத்தும் போதனையுமாம்!! இவர் கிரியை செய்வதில் தான் நித்திய ஜீவன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பதினால் இவருக்கு நித்திய ஜீவனை குறித்தான மற்ற வசனங்கள் எல்லாம் சாத்தான் கொண்டு வந்த முட்டாள்த்தனமான போதனைகளாக தெரிகிறது!!

யோவான் 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

இது அவசியம் இல்லாத கோட்பாடு என்று சகோ அன்பு ஏற்கனவே சொல்லியிருக்கிறார்!! ஒருவேளை இந்த போதனையும் சாத்தான் தான் கொண்டு வந்திருப்பானோ என்கிற அய்யம் இவருக்கு!!

யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

இந்த வசனமும் சகோ அன்புக்கு சாத்தானின் முட்டாள்த்தனமான போதனையாக தோன்றுகிறது!! ஏனென்றால் அது எப்படி கிரியை இல்லாமல் ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவையும் அவரின் குமாரனான கிறிஸ்து இயேசுவையும் அறிவது என்கிறார் சகோ அன்பு!!

ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உண்டாகும் நித்திய ஜீவன் என்பது சகோ அன்புக்கு சாத்தானின் முட்டாள்த்தனமான போதனையாக இருக்கலாம்!! அது எப்படி தேவனின் கிருபை வரம் என் அனுமதி இன்றி என்னில் செயல்ப்பட முடியும் என்றும் அவர் கேட்கலாம்!!

இத்துனை வசனங்கள் கொடுத்தாலும் சகோ அன்பு அவர் தளத்தில் சொல்லுவார், நான் (கோவை பெரேயன்ஸ் சகோதரர்கள்) ஏதோ ஒரே ஒரு வசனத்தை பிடித்துக்கொண்டு சாத்தானின் போதனையை (சகோ அன்புக்கு சில் சமயம் அவர் கருத்துக்கு முரனான வசனங்கள் எல்லாம் சாத்தானின் போதனையாக தெரிகிறது) முட்டள்த்தனமான கருத்தும் கோட்பாடுகளையும் கொண்டு தந்துக்கொண்டிருக்கிறோம் என்பார்!!

சகோ அன்பு அவர்களே, கிரியை செய்தால் தான் நித்திய ஜீவன் என்றால் ஒன்றான் மெய் தேவனாகிய பிதாவையும் அவரின் குமாரனையும் அறிவதினால் உண்டாவது என்ன‌!!??

கிரியை கிரியை என்று சொல்லிக்கொண்டு ஒரே வசனத்தை பிடித்துக்கொண்டு கிரியை செய்தால் போதும் நித்திய ஜீவன் உண்டு என்று நீங்கள் தான் ஒரே வசனத்தை பிடித்துக்கொண்டு அதில் நிலைத்திருக்கிறீர்கள் என்பது எங்களின் குற்றச்சாட்டு!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

எபேசியர் 6:11  நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். 12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 13 ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

//இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள பிசாசின் அதிகாரங்கள், துரைத்தனங்கள், பொல்லாத ஆவிகள், அந்தகார லோகாதிபதிகள் எல்லாவற்றையும் சேர்த்துதான் இருளின் அதிகாரம் என கொலோசெயர் 1:13 கூறுகிறது. அந்த அதிகாரத்திலிருந்து வெளியே வருவதற்கு நாம் தான் போராட வேண்டும். நாம் போராடுவதும் போராடாதிருப்பதும் முழுக்க முழுக்க நம் சுயசித்தத்தைத்தான் சார்ந்ததேயொழிய தேவசித்தத்தை சார்ந்தது அல்ல.//



இதை எல்லாம் நாமே செய்கிறோம், இதில் தேவ சித்தமே கிடையாதாம்!! உங்கள் சுய சித்தத்தினால் நீங்கள் செலெக்டிவாக சுலபமாக செய்ய முடிகிறதை மாத்திரமே செய்து வருகிறீர்கள்!! ஆகவே தான் இதற்கு முன் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் விற்று விட்டு, ஏழைகளுக்கு கொடுத்தீர்களா (கிரியை) என்று கேட்டத்தற்கு அது அப்படியே எடுத்துக்கொள்ள கூடாது என்று உங்களின் வழக்கமான பதிலை தந்தீர்கள்!! கிரியை செய்வதில் என்ன செலெக்டிவாக செய்ய வீண்டியிருக்கிறது!! இதையும் தானே கிறிஸ்து இயேசு அந்த இளைஞனின் மூலமாக உங்களை செய்ய சொல்லியிருக்கிறார்!! இப்பவும் இதை வாசித்து என்னை திட்டுவீர்களே தவிர இதற்கு உருபடியான ஒரு பதில் உங்களிடத்திலிருந்து வராது என்பதை அறிந்திருக்கிறேன்!!

அதே போல் தேவனும் செலெக்டிவாக தான் தன் சித்தத்தை நிறைவேற்றுவார் என்று சொல்லுவது தேவ தூஷனம்!! ஒரு விஷயத்தில் தேவ சித்தம் இல்லை என்று சொல்லுவதே தேவ தூஷனம்!! அப்படி இல்லாட்டி அவர் பாரபட்சம் பார்க்கும் தேவனாக இருப்பார்!!

கிரியை தான் செய்ய வேண்டுமென்றால் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து இயேசு சொன்ன எல்லா கிரியையும் செய்கிறீர்களா!! உங்கள் கண் பாவம் செய்தால் அதை பிடிங்கி போட்டீர்களா!! உங்கள் கை பாவம் செய்தால் அதை வெட்டி போடுவீர்களா!!?? இதுவும் உங்களுக்கு முட்டாள்த்தனமான கேள்வி என்று ஒதுக்கி விடுவீர்கள் என்று எனக்கு தெரியும்!! கிரியை போதித்தால் முழுமையாக போதியுங்கள், செலெக்டிவாக, சுலபமாக செய்யக்கூடியதை கிரியை என்றும், மற்றவைகளுக்கு ஆவிக்குறிய அர்த்தம் என்று தப்பாக போதிக்க வேண்டாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//இருளின் அதிகாரத்திற்கு எதிராக போராட முன்வருகிற நாம், நமது போராட்டதிற்கான ஆயுதங்களாக தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் நாம் தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இப்படியாக தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை எடுத்து நாம் போராடும்போது, தேவன் தமது பரிசுத்த ஆவி மூலம் நமக்கு உதவிசெய்கிறார். அப்போது நாம் இருளின் அதிகாரத்திலிருந்து விடுதலையாவோம்.//

அன்பு அவர்களுக்கு எந்த அளவுக்கு "கிரியைப்பித்து" பிடித்து ஆட்டுகிறதென்று அவருக்கே தெரியவில்லை. நற்கிரியைகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு லேட்டஸ்டாக சர்வாயுதவர்க்கத்துக்கு குதித்துவிட்டார்.

என்னவென்று பார்ப்போம்.

11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

14. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;

15. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்,

16. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.

17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

18. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

இதெல்லாம் செய்தால்தான் இருளின் அதிகாரத்திலிருந்து விடுதலையாவாராம். இரக்கம் செய்தாலே போது என்று சொல்லிக்கொண்டிருந்தார். சர்வாயுத வர்க்கம் என்ன சாதாரண விஷயமா? 

சத்தியம், நீதி, சமாதானத்துக்குரிய சுவிஷேசத்துக்கான ஆயத்தம், விசுவாசம், இரட்சணியம், தேவவசனம். 

"சபை" என்னும் ஆளப்போகிற சிறு மந்தைக்குக் கொடுக்கப்பட்ட ட்ரெயினிங் சிலபஸை உலகத்தாருக்கு என்று போதிப்பது மடத்தனம். இந்த சர்வாயுத வர்க்கத்துக்கு விளக்கமளிக்கவே அன்பு அவர்களால் முடியாது. அளிப்பாரானால் அவராலேயே இவை எல்லாவற்றையும் கடைபிடித்து

18. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

 3. "ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்." என்ற வசனத்தின்படி சகலத்தையும் செய்துமுடித்தவராய் நிற்க திராணியுள்ளவனாகிவிட்டேன் என்று சொல்வாரா, அல்லது முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் என்பாரா? 

வேதம் உலகத்துக்கு அல்ல என்பது புரியாமல், இவரே உலகத்துக்குள்ளிருந்து கொண்டு வேதம் ஓதிக்கொண்டிருக்கிறார்.

இரக்கம் செய்தாலே போதுமென்றவர் இப்ப என்னென்னவோ பேசுகிறார். அவருக்குத்தேவை ஓய்வு என்று நினைக்கிறேன். அதன் பின் எல்லாம் சரியாகிவிடும்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இவர்கள் ஏராளமான வசனங்களைச் சொல்லியுள்ளதுபோல் சாத்தானும் தனது ஒவ்வொரு சோதனையிலும் ஏராளமான தேவவல்லமைகளை/வசனங்களைக் கூறியிருக்கலாம். ஆனால் அவன் ஒரேயொரு தேவவல்லமையை/வசனத்தை மட்டுமே சொன்னான். அவன் சொன்னதை மீண்டும் ஒருமுறை படிப்போமாக.//

அதாவது சாத்தானை போல் ஒரே ஒரு வசனத்தை சொல்லி மடக்கிறீர்களோ!!?? சரி தான்!!

//ஆனால் நம் சகோதரர்களோ ஒரேவிதமான கருத்தில் ஏராளமான வசனங்களைத் தந்து, “இதற்குப் பதில்தரவில்லை, அதற்குப் பதில்தரவில்லை” எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.//

யோவான் 5:24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 5:39 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

யோவான் 6:47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

நித்திய ஜீவனை பெற கிரியை செய்ய சொல்லி தான் மேலே உள்ள வசனங்கள் சொல்லுகிறது என்று 'இரண்டு சோறு" எடுத்து எல்லாவற்றுக்கும் ஒரே கருத்து என்று சகோ அன்பு சொல்லியிருக்கிறார்!! அதற்கு எடுத்துக்காட்டாக "சாத்தானின்" "மூன்று சோற்றை" இவர் எடுத்து எழுதுகிறார்!! சாத்தானுக்கு எல்லாம் ஒரே கருத்து உள்ளதாக தெரிந்ததினால் அவன் மூன்று கேள்விகளை கேட்டு விட்டு விட்டானாம்!! இவரும்  அவனை போல் இரண்டு வசனங்களை வைத்து எல்லாவற்றுக்கு ஒரே கருத்து என்று தீர்ப்பை கொடுத்திருக்கிறார்!!

மேலே உள்ள வசனங்கள் எல்லாவற்றிலும் நித்திய ஜீவன் இருக்கிறது!! ஆனால் இவர் தீவிரமாக போதிக்கும் பிற மதத்தார் போல் உள்ள கிரியை தான் மிஸ்ஸிங்!!

எபேசியர் 1:12 தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.

இந்த வசனத்தில் அவரின் தீர்மானத்தின்படியே நடப்பிக்கிறார் அதை முன்குறித்திருக்கும் இருக்கிறார் என்று வசனம் சொல்லியிருந்தாலும் இல்லை, இல்லை, இந்த வசனமும் சொல்லுவது இவரின் கருத்தான "கிரியை" தான் என்று சகோ அன்பு சொல்லுவதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்!!

தானியேல் 5:19 அவருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்திலே சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவருக்கு முன்பாக நடுங்கிப் பயந்திருந்தார்கள்; அவர் தமக்குச் சித்தமானவனைக் கொன்றுபோடுவார், தமக்குச் சித்தமானவனை உயிரோடே வைப்பார், தமக்குச் சித்தமானவனை உயர்த்துவார், தமக்குச் சித்தமானவனைத் தாழ்த்துவார்.

தேவனுக்கு சித்தமானவனை உயர்த்துவார், தாழ்த்துவார் என்று வசனம் சொன்னாலும், "இரண்டு சோற்றில்" இவர் சொல்லும் கிரியை தான் இந்த வசனமும் சொல்லுகிறது என்று இவர் சொல்ல வருகிறார் போல்!! இந்த வசனம் தெளிவாக தேவனின் சித்தத்தின்படி என்று இருக்கிறது, ஆனால் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று இவர் சொல்லுவதினால் வசனம் மாறிவிடுமா!! தன்னை சாத்தானுக்கு ஒப்பீடுகிறாரே!! நியாயம் தான்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard