சில்சாம் பேசுறதில்லை. கொல்வின் பேசுறதில்லை. ஜான் பேசுறதில்லை. அன்பு வெளியேறிவிட்டார்.//
ஆமா இவர்கள் எல்லாரும் புனிதர்களும் பரிசுத்தவான்களும்!! இவர்கள் பேசாவிட்டால் உலகம் இருண்டு போய் விடுமோ!! நீங்கள் எல்லாம் உலகத்தார், கூட்டம் சேர்க்க பிரிய படுவீர்கள்!! நாங்கள் அப்படியே இருந்து விட்டு போகிறோம்!! ஏஞ்சல் டிவியை தவிற எப்பவாவது வேதம் வாசித்தீர்களென்றால், இந்த வசனத்தை படித்து பாருங்கள்:
இந்த அநேகரில் தான் சில்சாம், கொல்வின், ஜான், (ஜோசப்பை விட்டு விட்டீர்களே) என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்!! இது மட்டுமில்ல,
யோவான் 16:2 அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.
எங்களை தூஷிக்கும் நீங்கள் உங்கள் கூட்டாளிகளுக்குள் பெயர் எடுப்பீர்கள்!! அது தான் இந்த காலம்!! சோஃபா போட்டு உட்கார்ந்து காவியை உடுத்தினாலும் அதை பட்டில் தான் உடுத்துவேன் என்று அடுத்தவன் காசில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து பிதற்றுவதை காட்டிலும் நாங்கள் மேல் தான்!!
////அவர் உலகத்தையே மன்னிக்க சித்தம் கொண்டிருக்கிறார், நீங்கள் தான் வன்கண்ணனாய் இருக்கிறீகள்!!//
சாமி ரெடியாதான் இருக்கார்.இளைய குமாரர்கள் திரும்பி வரணும்ல. பன்றியோடவே இரு. ஒன்றும் பிரச்சினையில்லை என்றல்லவா சொல்றீங்க!//
என்னத்தை எழுதுகிறோம் என்று புத்தி பேதலித்து விட்டது போல்!! சிஸ்டர் அவர்களே, வேதம் சொல்லுகிற எல்லாருக்கும் இரட்சிப்பு என்று தான் நாங்கள் சொல்லுகிறோம் (1 தீமோத்தேயு 2:3,4), ஆனால் அது எப்படி முடியும் என்று பேசும் உங்கள் கூட்டத்தார் தான் பன்றி கூட்டமாக இருந்துக்கிட்டு நாற்றமெடுத்த சாக்கடையைவிட்டு வெளியேற மாட்டேன் என்கிறது!! ஒருத்தர் வருகிறார், எல்லாவற்றையும் சுத்திகரித்து, தேவையான சத்தியத்தை கொடுப்பார், அப்பொழுது தெரிந்துக்கொள்ளுங்கள்!!
//சரியாக சொன்னீர்கள். என்னதான் உரலில் போட்டுக் குத்தினாலும் ஒரு சிலரின் மூடத்தனம் நீங்குவது போல் தெரியவில்லை!
நீங்கல்லாம் பேசி முடித்து விலகிட்டீங்க. நானும் கொஞ்சம் பேசி பார்த்து விலகுறேன். அவங்களுக்கும் பேச ஆள் வேணும்ல!!
கண் திறக்கப்பட்டு , திருந்தினார்கள் என்றால் மிகவும் சந்தோஷம்! //
உங்களை போல் வெட்டியாக எல்லாம் பேச நேரம் இல்லை சிஸ்டர் அவர்களே!! உங்களை போல் உளையான சேற்றில் தான் இருந்தோம், எங்களை கரம் பிடித்து தூக்கிவிட்டு, கிறிஸ்து என்கிற கன்மலையின் மீது நிறுத்தியிருக்கிறார் என் தேவன்!! நீங்கள் சொல்லுவதே ஓசி சுவிசேஷம் தானே (உபயம் ஏஞ்சல் டிவி), அதை உங்கள் தளத்திலேயே நிறைய பேர் நம்புவதில்லை, ஆனால் எங்களை எதிர்க்க ஒன்று கூடுகிறீர்கள், இது தான் சந்தர்ப்பவாத கூட்டனி!! வாழ்த்துக்கள்!!
Till someone be it a man or an animal lives with life breath inside he or it is called a SOUL!!
////முதலில் ஆத்துமா சாகுமா சாகாதா? என்ற கேள்விக்கு பதில் தேவை.//
இயேசு கிறிஸ்து மரித்த போது அவர் ஆத்துமா என்ன ஆயிற்றோ, அதுதான் பதில்.//
ரொம்ப தெளிவான பதில் என்கிற நினைப்போ!!
//பிரசங்கி யில் இருந்து பல வசனங்கள் quote பண்ணியிருக்கீங்க. பிரசங்கி “சூரியனுக்கு கீழே (under the sun)” என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து சாலாமோன் ஞானி எழுதியது தத்துவ புத்தகம். நித்தியத்திற்குரிய கண்ணோட்டத்துடன் அல்ல. கடைசியில்தான் தேவனுக்கு பயந்திரு என்று முடிக்கிறார்.//
கண்டுபிடித்துவிட்டார்!! உங்க வேதத்திலிருந்து பிரசங்கி புத்தகத்தை "தத்துவ" புத்தகம் என்று நீக்கிவிட்டீர்களோ!!
பிரசங்கி 1:13 வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன், மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.
பிரசங்கி 2:26 தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
பிரசங்கி 3:10 மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன். (இந்த வசனம் பலருக்கு பிடிக்காது, ஏனென்றால் தங்களின் சுய கிரியையினால் தான் மனிதர்கள் பாடுபடுகிறார்கள் என்று போதிப்பவர்கள் இருக்கிறார்கள்)!!
பிரசங்கி 3:11 அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.
பிரசங்கி 3:14 தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங் கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.
பிரசங்கி 3:15 முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார்.
இப்படி ஆரம்பம் முதல் தேவனின் கிரியையாக இருக்கும் ஒரு புத்தகத்தை "தத்துவ" புத்தகம் என்று சொல்லிக்கொண்டு சுவிசேஷம் சொல்லுகிறீர்களோ!! தொடருங்கள்!!
//பூமியில் வீடு கட்ட வேண்டும். கார் வாங்க வேண்டும் என்று நினைத்திருப்பான். மரித்தவுடன் அந்த பூமிக்குரிய யோசனைகள் நிறைவேற வாய்ப்பில்லாமல் போகும் என்பதுதான் அர்த்தம்.//
காமெடிக்காக எழுதியிருக்கிறீர்கள் என்றால் பரவாயில்லை, இல்லாட்டி இது போன்ற மட்டமான ஒரு விளக்கத்தை நான் கேட்டத்தே இல்லை!!
//நீங்களே சொல்லுங்க. இயேசு கிறிஸ்து இறந்தவுடன் எல்லாம் அவ்ருக்கு மறந்து போச்சா? எல்லாம் மறந்த கோமா நிலையிலா அவர் போய் காவலில் இருந்த ஆவிகளுக்கு பிரசங்கித்தார்?//
விடுங்க சகோதரியே, காவல் விஷயம் உங்களுக்கு புரியாது!!
//Language class ம் எடுக்கணுமா? கஷ்டம்தான்!!//
உங்கள் பதில்கள் பெரும்பாளும் ஏதோ மட்டமான வார இதழில் இருப்பது போல் இருக்கிறது!!
//நாங்களும் நரகம் தான் போவார்கள் என்று சொல்லவில்லை. //
எப்படி தான் இப்படி பொய் பேச மனசு இருக்குதோ!!??
//அந்த வசனத்தில் என்ன தப்பு? Explain , please!//
வெளி. 20:5. மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
ஆயிரம் வருஷம் வரையில் உயிரடையாததை எப்படி "உயிர்த்தெழுதல்" என்று சொல்ல முடியும்!! இந்த வசனத்தின் முதல் பகுதி, அதாவது, "மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை." என்பது உங்களுக்கு பிரியமான கத்தோலிக்கர்கள் வேதத்தை எழுதும் போது சேர்த்துக்கொண்டு விட்டார்கள்!! மாறாக இந்த வசனத்தை இப்படி படித்து பாருங்கள்,
வெளி 20:4. அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். 5. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
முதலாம் என்பது வரிசை அல்ல மாறாக தரம்!! உயிர்த்தெழுந்து கிறிஸ்துவுடன் ஆளுகை செய்பவர்கள் முதலாம் உயிர்த்தெழுதல் அடைந்தவர்கள் ஆவர்!!
//இப்படித்தான் சிப்பை பொருத்தி brainwash பண்ணிடுவாங்க ஒருத்தனை. படம் பாருங்க! //
அதான் ஃபிலிம் காட்டுவாரே வாராவாரம் உங்கள் அபிமான சாது!! வேதத்தை படியுங்கள் என்றால் எவனோ எழுதிய புத்தகத்தையும், எங்கேயோ எடுத்த ஒரு படத்தை வைத்து கிறிஸ்தவத்தை விவாதிக்கிறீர்கள்!!
//ஒருத்தர் வருகிறார், உங்க முதுகில் மொத்த!! கொடுத்த காசை என்ன செய்தாய் , ஏன் காசுக்காரரிடத்திலாகிலும் கொடுத்து வைக்க வில்லை என்று கேள்வி கேட்கப் போகிறார். அப்ப திரு திருன்னு முழிக்கப் போறீங்க.//
அந்த காசை தான் நாங்கள் இந்த தளத்தில் வைத்திருக்கிறோம்!! தேவனுக்கு சித்தமானவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும், உங்களை போன்ற உலக கிறிஸ்தவர்களுக்கு அது புரியவே புரியாது!!
தேவனுக்கு சித்தமானால் விலகி சென்றுவிடுவீர்கள், இதில் ஒரு சந்தேகமும் இல்லை!! அதற்கு எடுத்துக்காட்டு தான் யூதாஸ்!! அப்போஸ்தலனாக இருந்தவன் அந்த ஸ்தானத்தையே இழந்து போனான்!! அதே போல் கொலைக்காரனாக இருந்த சவுல் பவுலாக மாற்றியவர் கர்த்தரே!!
எது எப்போ யாருக்கு எந்த விதத்தில் தேவை என்று உங்கள் போக்குக்கிற்கு எடுத்துக்கொள்வது அல்ல வேதம்!! வேதத்தில் ஒரு திட்டம் வைக்கப்பட்டிருக்கிறது!! அது மனிதர்களின் இரட்சிப்பின் திட்டம்!! மனிதர்கள் என்றால் ஆதாம் தொடங்கி கடைசி வரைக்கும் உள்ள மனிதர்களின் இரட்சிப்பு!!
கிறிஸ்து வரும் முன் சுவிசேஷம் என்று ஒன்றுமே இல்லை!! அப்படி என்றால் கிறிஸ்து வந்தது தான் சுவிசேஷம், கிறிஸ்துவின் சிலுவை தான் சுவிசேஷம், அந்த சிலுவை மரணத்தினால் மனிதர்களுக்கு கிடைக்க இருக்கும் இரட்சிப்பு தான் சுவிசேஷம்!! ஆகவே தான் கிறிஸ்து பிறக்கும் போது, தேவதூதன் இப்படியாக சொல்லுகிறார்ன்,
லூக்கா 2:10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
இப்படி கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்தவர்களுக்கு என்று அல்ல மாறாக, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷம் உண்டாக்கும் நற்செய்தி என்கிறது வசனம்!! ஆனால் நீங்களோ ஏற்றுக்கொள்வோருக்கு மாத்திரமே சந்தோஷம் என்கிறீர்கள்!!
முதலில் சுவிசேஷம், நற்செய்தி என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள், பிறகு சுவிசேஷம் சொல்ல போகலாம்!!
வேறு என்ன ஞாபகம் வர முடியும்!! எதுக்கு அத்துனை வசனம் கொடுத்தேன் என்று மடத்தனமாக வியாக்கியானம் செய்து இருக்கிறீர்கள்!! ஏதோ பிரசங்கியின் புத்தகம் ஒரு தத்துவத்தின் புத்தகம் என்று எழுதுனீர்கள் என்று தான் அத்துனை வசனங்கள் எழுதினேன்!! ஆனால் உங்கள் கூட்டத்தருக்கு அது வழக்கம் போல் பன்றிகளுக்கு முன் முத்துக்கள் போட்டது மாதிரி தான்!!
//இப்படித்தான் , எல்லாம் பேசி விளக்கி கடைசியில் ஒருவழியா, ஒரு வசனத்தைச் சொன்னவுடன், பதில் தெரியாததால், உடனே அவர்கள் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் ”பிதாவின் சித்தம்” என்று வரும் 10 வசனங்களை எடுத்துப் போட்டு இதான் அது, அல்லது இதுக்கென்ன பதில் என்று கேட்கிறார்கள். அல்லது ஏதாவது சொல்லி திட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்!!
இதுதானே உங்கள் விவாத முறை! நடத்துங்க!//
ஒரு வசனத்தை அதுவும் சம்பந்தமே இல்லாத ஒரு வசனத்தை சொல்லுவதை பெரிய சாதனையாக, நினைத்துவிட்டீர்கள் போல்!! ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வேறு ஏதாவது வசனம் இருந்தால் எழுதுங்கள்!! உங்களுக்கு உரிய மரியதை கொடுத்து தான் எழுதுகிறேன், சும்மா அனுதாபத்தை தேடிக்கொள்ள வேண்டாம்!!
விவாதம் நடத்தும் முறை உங்களிடத்திலிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்!!
//மரித்துப் போனார் என்று தான் எல்லோருக்கும் தெரியுமே!!! என்னதான் சொல்றீங்கன்னு கடவுளுக்குத்தான் வெளிச்சம்!//
தேவனுக்குறிய பல காரியங்கள் உங்களுக்கு தெரிந்துக்கொள்ள கொடுத்துவைக்கவில்லை!! மரித்து போனார் என்று எல்லாருக்கும் தெரியும் என்று சொல்லுகிறீர்கள், ஆத்துமா தான் மரித்தது என்று சொன்னால் அது எப்படி என்கிறீர்கள், உங்களுக்கு புரிய வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக புரியும்!! அது வரையில் இருட்டிள் உட்கார்ந்திருங்கள்!!
//நான் வசனத்திற்குத்தான் அர்த்தம் கேட்டேன். ஆத்துமா என்றால் என்ன என்று எனக்கு நல்லா தெரியும்!//
என்னத்த நல்லா தெரியுமா!! ஒரு வட்டம் பொட்டுகிட்டு அதையே சுற்றி சுற்றி வருகிற ஒரு பெரிய கூட்டத்தில் இருப்பவர் தான் நீங்களும்!!
//////பூமியில் வீடு கட்ட வேண்டும். கார் வாங்க வேண்டும் என்று நினைத்திருப்பான். மரித்தவுடன் அந்த பூமிக்குரிய யோசனைகள் நிறைவேற வாய்ப்பில்லாமல் போகும் என்பதுதான் அர்த்தம்.//
காமெடிக்காக எழுதியிருக்கிறீர்கள் என்றால் பரவாயில்லை, இல்லாட்டி இது போன்ற மட்டமான ஒரு விளக்கத்தை நான் கேட்டத்தே இல்லை!!//
உங்களு இரட்சிப்பின் திட்டத்திற்கு ஒத்து வராததெல்லாம் மட்டமான விளக்கமாய்தான் இருக்கும்!//
இதோ சகோதரி கோல்டா அவர்கள் பூமியில் வீடு கட்ட வேண்டும் கார் வாங்க வேண்டும் என்கிறது தான் இரட்சிப்பின் திட்டம் என்கிற ஒரு பெரிய தத்துவத்தை எழுதுகிறார்!!
//பரவாயில்லை சொல்லுங்க. உங்களைப் போல தெரிந்து கொள்ளப்பட்ட சிறு மந்தை யாருக்காவது பிரயோஜனமாக இருக்கும் அல்லவா!//
ஆத்துமா என்றால் என்னவென்பதற்கே இன்னும் போட்ட வட்டத்தில் சுற்றி வந்துக்கொண்டு இருக்கும் உங்கள் கூட்டத்தார் வேதத்தை புரிந்துக்கொள்ளும் நேரத்தில் தான் புரிந்துக்கொள்வீர்கள்!! உங்களுக்கு சொல்லுவது வேஸ்ட்!! ரொம்ப ஆர்வமென்றால் எங்கள் தளத்தில் இதை குறித்து பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறோம், தேடி பார்த்துக்கொள்ளுங்கள்!! கஷ்டப்படாமல் கஞ்சி குடிப்பதினால் தான் நக்கலும் நய்யாண்டியும் ஓவராக இருக்குது!!
//மன்னிக்கவும் உங்ககிட்ட அப்படித்தான் பேச வேண்டியிருக்கு!//
அது உங்கள் சுவபாவம் என்பதையும் புறிந்துக்கொண்டேன்!!
//எனக்கு வாக்கிய அமைப்பில் எந்த தவறும் தெரியவில்லை. //
அதை வேதத்தில் ஏன் அடைப்புகுறி ()க்குள் போட்டிருக்கிறார்கள் என்று எப்பாவாவது உங்கள் போதக கூட்டத்திடம் கேட்டது உண்டா!! மழுப்புவார்கள்!! உங்களுக்கு வாக்கிய அமைப்பில் எந்த தவறும் இருப்பதாக தெரியாது, ஏனென்றால் பிசாசு அந்த அளவிற்கு உங்கள் கண்களை கட்டி வைத்திருக்கிறான்!!
செத்துகிடக்கிறவனுக்கு உயிர்த்தெழுந்தவன் என்று சொல்லுவது இவர்களுக்கு தப்பாக தெரியவில்லையாம்!! சரி தான்!!
//ஓகோ... இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? சரி மீதி ஆட்கள் 1000 வருடம் கழித்துத்தான் உயிர்தெழுவதாகப் போட்டிருக்கிறது. அப்ப இராஜ்யத்தில் யார் இருப்பார்கள்? இந்த வசனத்தை புராடஸ்டண்ட் சபையார் மாத்தி எழுதிட்டாங்கன்னு சொல்லப் போறீங்க. சரி தானே?//
1000 வருஷம் அரசாளுபவர்கள் யாரை தான் அரசாளுவார்கள்!! அதான் அந்த 1000 வருடங்கள் வரை அரசாளுகிறவர்களை தவிர எல்லாரும் செத்தவர்களாக "முதலாம் உயிர்த்தெழுதல்" என்கிற பெயரோடு இருப்பார்களே!! அதில் உங்களுக்கு தவறு ஒன்றும் இருப்பதாக இல்லை என்று சொல்லிவிட்டீர்களே!! பிறகு என்ன புராடஸ்டண்ட் சபையாரோ, இல்லை 2000 சபைகளில் ஏதோ ஒரு சபை மாற்றியிருந்தாலும் உங்களுக்கு என்ன, சாது சொன்னால் சரி என்கிறவர் தானே நீங்கள்!!
என்னை ரஸ்ஸலின் வாந்தியை குடித்தவன் என்று சொல்லுகிற ஜான் இது வரையில் எத்துனை ஊழிய பிச்சைக்காரர்களின் வாந்தியை குடித்து வாந்தி பண்ணிக்கிட்டு இருக்கிறாரோ!! அவரின் குப்பைகளுக்கு எல்லாம் பதில் தருவதை நிறுத்தியாகிவிட்டாது!! தகுதி இல்லாத ஜென்மங்கள்!!
ஜானின் பன்றி கூட்டத்திற்கு தெரியாத பல விஷயங்கள்; 1. மரணம் என்றால் என்னவென்று தெரியாது 2. ஆத்துமா சாகுமா சாகாதா என்பதில் குழப்பம் 3. கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக முடியும் என்கிற சத்தியம்!!
முதலில் உம்முடைய 2000 சொச்ச சபைகளை திருத்தும், பிறகு ரஸ்ஸலின் வாந்தியை பற்றி பேசலாம்!! உமக்கு வேறு என்ன தான் தெரியும்!! வாந்தி குடித்தே பழகிய உமக்கு வேறு என்ன தான் எழுத முடியும், வாந்தியை தவிர!! போய் சுவிசேஷம் சொல்லும் வேலையிருக்கும், போய் பாரும்!! விவாதம் செய்ய வக்கு இல்லாதவன் திரும்பி வந்துவிட்டான் தன் அழுக்கு கூடையை தூக்கிக்கொண்டு!!
-- Edited by soulsolution on Wednesday 3rd of August 2011 12:29:30 PM
//பாவம் செய்யும் ஆத்துமாவே சாகும் என்று அழுத்தி அழுத்தி சொல்றீங்க.//
ஹலோ நாங்க எங்கம்மா சொல்றோம், உங்க வேதத்தில அது இல்லையா?என்ன உளறுகிறீர்கள்?
//சரி மரணத்தின் போது ஆவி என்னாகும்? அதுவும் செத்துடுமா? அல்லது எங்கே போகும்? எங்கே இருக்கும்?//
சுவிட்சை ஆஃப் செய்து விட்டால் கரண்ட் எங்க போகும்?
//உயிர்தெழுந்தபின் பழசெல்லாம் ஞாபகம் இருக்குமா இருக்காதா? இருக்கும் என்றால் எங்கிருந்து இந்த ஞாபகங்கள் வரும்?//
உயிர்த்தெழுந்த பின்னர்தான் பழசெல்லாம் ஞாபகம் இருக்கும். ஞாபகம் இல்லாட்டி உயிர்தெழுந்தவர்களெல்லாம் லூசாக பேக் பேக்னு இப்ப நீங்க முழிக்கிறது போல முழிக்க வேண்டியதுதான்.
லாசரு உயிர்த்தெழுந்தபின் என்னவயிற்று, இயேசு கிறிஸ்து உயிரோடு எழுப்பினவர்களுக்கு எங்கிருந்து இந்த ஞாபகங்கள் வந்தது. தூங்கி எழுவதுபோல இருக்கும் என்பதால்தான், "நித்திரையடைந்தவர்கள் நிமித்தம்", "நித்திரையடைந்து" என்று வசனம் சொல்கிறது. என்னத்தத்தான் வேதத்தில் வாசிக்கிறீர்களோ? கூறு கெட்டவர்கள் என்று ஏன் கூறுகிறோம் என்பது இப்பவாவது புரிந்ததா?
//இயேசு கிறிஸ்து மரித்த போது அவர் ஆத்துமா செத்து போச்சா? ஆவி என்ன ஆச்சு?மண்ணோடு மண்ணாய் எல்லாம் போய்விட்டதென்றால், எப்படி அவர் காவலில் இருந்த ஆவிகளுக்கு பிரசங்கித்தார்?//
கிறிஸ்து 'மரித்தார்' என்றுதான் வசனங்கள் கூறுகின்றன. மரித்தால்தான் உயிரோடு எழும்ப முடியும். மரிக்காவிட்டால் எதற்கு உயிர்த்தெழுதல்?
18. ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
மூன்றாம் நாள்தான் ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார், உடனே அல்ல.
19. அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
II கொரிந்தியர் 5:16 ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.
I கொரிந்தியர் 15:50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
//இதுக்காவது சம்பந்தமில்லாத வசனங்களை quote பண்ணாமல் தெளிவான பதில் சொல்லுங்க//
அம்மணி உண்மையில் உங்களுக்கு வேதத்தைன் படியாக சத்தியம் தெரிய வேண்டுமென்றால் எங்களைப்போல பழைய மனிதன் உருவாக்கிய பேய்த்தனத்துக்கடுத்த, நரகக் கோட்பாடு முதற்கொண்டு எல்லாவற்றையும் நஷ்டமும், குப்பையுமாக எண்ணினால், தேவ கிருபை உங்களுக்கு இருந்தால் வெளிச்சத்துக்கு வருவீர்கள். இல்லாவிட்டால் சாகும்வரை சந்தேகம்தான்..
கிறிஸ்துவின் சபைக்கும் பரலோகம் செல்லத் தகுதியான ஆவிநிலையில் உயிர்த்தெழுதல் நடக்கும். மற்ற எல்லாருக்கும் மாம்ச சரீரத்தில் உயிர்தெழுதல். இது உங்கள் கேள்விகளை ஒரு பொருட்டாக எண்ணி உங்களுக்காக பதியவில்லை. உங்களைப்போல பலருக்கு இது பிரயோஜனமாக இருக்கும் என்றுதான் பதிகிறோம்.
இந்தக் கேள்விகளையெல்லாம் கூறுகெட்ட கோமாளிகளிடம் கேட்டுப்பாருங்கள்? எப்படிப்பட்ட காமெடி பதில்கள் வரும்னு தெரியும். ஏன் மரண டாபிக்கையே அவாய்டு பண்றாங்கண்ணு தெரியுதா? உங்கள் கோமாளி சாதுவிடமோ, ஆகாசப்புளுகி வி.செல்வகுமாரிடமோ கேட்டுப்பாருங்கள்.
பிரசங்கி12:9. மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப்போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.
10. இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.
11. ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.
ஒரே மேப்பனால் அளிக்கப்பட்ட செவ்வையும் சத்தியாமுமானவைகளை மனித தத்துவம் என்று சொன்னால் சத்தியமாக உருப்படவே மாட்டீர்கள்... ஜாக்கிரதை.
ஜான்//இந்த மூடர்களுக்கு ஜெபம் என்றால் என்னவென்றே தெரியாது ஏனென்றால் இவர்களுக்கு எல்லாம் தலைவிதி போல நடக்கிற காரியங்கள் . யூதாஸ் கூட நல்லவர் இந்த தேவன்தான் அவரை கெட்டது செய்ய தூண்டியது என்று சொல்லுவார்கள்.//
வந்துட்டார்யா.... என்னடா இன்னும் காணோம்னு பாத்தோம். இவரு ஜெபிச்சி ஜெபிச்சி அப்டியே சூப்பர் பரிசுத்தவான் ஆயிட்டாரு, இவர் போற சபையெல்லாம் சூப்பர் பரிசுத்தவான்கள்,
உங்களில் பாவம் செய்யாதவன் கோவை பெரேயன்கள் மேல் முதல் கல் எறியட்டும் என்றால் இவருதான் பெரிய பாராங்கல்லோட நிப்பாரு போல, போங்கடா போக்கத்த பயலுகளா,
இவுங்க எல்லாரும் ஜெபிச்சி இந்தியாவை அப்படியே கிறிஸ்தியாவாக மாத்தீட்டானுவ....
ஜெபம் பற்றி இனொரு பதிவில் உள்ளது. படித்துப்பாருங்க...
தேவனுக்கே கட்டளை கொடுத்து, புள்ளிவிவரங்கள் கொடுத்து இந்தியாவை எனக்குத் தாரும் ஆண்டவரே என்று உளருவதற்குப் பெயர் ஜெபமாம். பக்கத்து வீட்டுக்காரனுக்கு சுவிசேஷம் சொல்லத் துப்பில்லாத ஜென்மங்கள், வசிக்கிற தெருவிலேயே சொன்னால் உதைவிழும் என்று பம்மித்திரியும் கோழைகள்.
ஜெபிக்கிற மூஞ்சிகளப்பார்ரா?
இவனுக பரலோகம் போறதே சந்தேகமாம் இதுல அடுத்தவன கூட்டிட்டுப் போறாகளாம். வெக்கமாயில்லை. முதலில் உன் வீட்டில் எல்லாரும் 'இரட்சிக்கப்பட்டார்களா?'. ஏன் நேரத்தை எங்களுக்கு பதில் எழுதி வீணடிக்கிறாய் போய் முழங்கால் யுத்தம் செய்து எல்லாரையும் நரகத்திலிருந்து காப்பாற்ற வேண்டியது தானே. பிதா யார் குமாரன் யார் பரிசுத்தாவி என்ன என்றே தெரியாத கூமுட்டைகள் ஜெபிக்கிறதாம். இப்படியெல்லாம் ஜெபிக்கச்சொல்லிப் பழக்கியவன் வாந்தியைத்தான் அனுதினமும் தின்று கொண்டிருக்கிறீர்களோ?
எங்களுக்கு பொருத்தப்பட்ட ஒரே சிப் இரட்சிப்பு மட்டுமே. கிறிஸ்துவினால் பழைய எல்லா கழிசடைப் போதகங்களும் wash செய்யப்பட்டவர்கள் என்பதில் பூரிப்படைகிறோம்.
இந்த மாதிரி குப்பைத் தொடுப்புகளைப் பார்க்கும் நேரத்தில் உருப்படியாக மரணம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாமே...
துணிவிருந்து கற்றுக்கொள்ளும் ஆர்வமுமிருந்தால் இத்தொடுப்புக்குச் செல்லவும். எல்லாவற்றையும் படித்து முடிக்க ஆண்டுகள் ஆகலாம். ரஸ்ஸல் மட்டுமல்ல, அவரைப்போல அநேகர் வேதத்தை ஆராய்ந்து விளக்கமளிக்கிறார்கள். ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. குறைந்தபட்சம் மற்றவர்களிடம் ஏமாறாமலாவது இருக்கலாம்...
நீங்கள் உண்மையிலே தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக பதிவிடுகிறோம்!! ஆனால் வசனம் இல்லாமல் விளக்குங்கள் என்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது!!
//Q to SoulSolution & Bereans:
பாவம் செய்யும் ஆத்துமாவே சாகும் என்று அழுத்தி அழுத்தி சொல்றீங்க.
சரி மரணத்தின் போது ஆவி என்னாகும்? அதுவும் செத்துடுமா? அல்லது எங்கே போகும்? எங்கே இருக்கும்?//
மரணத்தின் போது ஆவி (ஜீவ சுவாசம்) சரீரத்தை விட்டு பிரிந்து விடுகிறது!! அது தேவனிடத்திற்கு போகிறது என்று பிரசங்கி சொல்லுகிறார்!! ஆவி ஆளத்துவம் கிடையாது, அது வெறும் காற்று சொல்லப்போனால் ஆக்ஸிஜன் (ஜீவ சுவாசத்தை நாசியில் ஊதினார் என்று ஆதியாகமத்தில் வாசிக்கிறீர்கள் அல்லவா, அது தான் தேவன் தந்த ஆவி, தேவனிடத்திற்கு திரும்புகிறது), அது எங்கே இருக்கும் என்றால் என்ன அர்த்தம்?? தேவனிடத்திற்கு போகிறது என்றாலே அது காற்றோடு காற்றாக கலந்துவிடுகிறது, அவ்வளவே!! தேவன் அதை ஒன்றும் தனியாக இது இன்னாருடைய ஜீவ சுவாசம் (ஆவி) என்று வைப்பதில்லை, அதற்கு வேதத்தில் எந்த வசனமும் இல்லை!!
//உயிர்தெழுந்தபின் பழசெல்லாம் ஞாபகம் இருக்குமா இருக்காதா? இருக்கும் என்றால் எங்கிருந்து இந்த ஞாபகங்கள் வரும்?//
உயிர்தெழுந்தபின் பழசெல்லாம் ஞாபகம் இருக்கும்!! ஏனென்றால் மரணத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நித்திரையாக மாற்றி விட்டார்!! ராத்திரி தூங்கிவிட்டு காலை எழுந்தவுடன் உங்களின் நினைவு எப்படி இருக்கிறதோ அப்படியே தான் எல்லாருக்கும் ஞாபகங்கள் இருக்கும்!! ஞாபகம் என்பது ஒரு திட பொருள் அல்ல, இது எங்கோ இருந்துவிட்டு மீண்டும் சரீரத்தில் பொறுந்துவதற்கு!!
//இயேசு கிறிஸ்து மரித்த போது அவர் ஆத்துமா செத்து போச்சா? ஆவி என்ன ஆச்சு?மண்ணோடு மண்ணாய் எல்லாம் போய்விட்டதென்றால், எப்படி அவர் காவலில் இருந்த ஆவிகளுக்கு பிரசங்கித்தார்?//
இயேசு கிறிஸ்து மரித்தார் என்றாலே இயேசு கிறிஸ்து என்கிற ஆத்துமா மரித்தது என்று தான் அர்த்தம்!! இயேசு கிறிஸ்து வேறு, அவருக்குள் ஆத்துமா என்கிற ஒரு உயிர் வேறு என்று தனிதனியானது ஒன்றும் இல்லை!! இயேசு கிறிஸ்து என்கிற சரீரத்திற்குள் தேவனின் ஜீவ சுவாசம் (ஆவி) இருந்தது!! பிரசங்கியில் இருக்கிறபடியே கிறிஸ்துவும் அதையே தான் சொல்லுகிறார்,
லூக்கா 23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
நீங்கள் நினைத்தும் போதித்தும் கொண்டு இருக்கிற மாதிரி ஏதோ ஆத்துமா தான் பிரிந்து போகிறது என்றால், கிறிஸ்துவும் அதையே சொல்லியிருப்பார், பிதாவே உம்முடைய கைகளில் என் "ஆத்துமா"வை ஒப்புவிக்கிறேன்!! இல்லை, ஏனென்றால் மரித்ததே ஆத்துமா தான்!!
காவலில் உள்ள ஆவிகள் நோவா காலத்தில் தவறு செய்தவர்கள் மாத்திரமே!! அவைகள் நோவா காலத்தில் மனுஷக்குமாரத்திகளுடன் திருமனம் செய்துக்கொண்ட ஆவிகள், நோவாவின் ஜல பிரலயத்தின் போது இந்த பூமியை விட்டு மீண்டும் தங்களின் ஆவிக்குரிய சரீரத்தில் தப்பிக்கும் போது தான் அவர்களை காவலில் (இனியும் அவர்கள் மாம்ச சரீரத்தில் வெளிப்படுத்தமுடியாதபடி) வைத்தார் தேவன்!! இந்த ஆவிக்குரிய ஜீவிகளுக்கு யாரும் போய் பிரசங்கிக்க வேண்டிய அவசியம் இல்லை!! இந்த ஜீவிகள் மனிதனுடன் மேலானவர்கள், ஆகவே அவர்கள் பார்த்தே அனைத்தையும் புரிந்துக்கொள்ளும் தன்மையுடையவர்களாவ்ர்!! கிறிஸ்து இயேசு மனித குலத்திற்கு தன்னை ஈடுபலியாக ஒப்புக்கொடுத்ததை அவர்கள் பார்த்து தெரிந்துக்கொண்டது தான், காவலில் உள்ள ஆவிகளுக்கு பிரசங்கம் என்பதின் சுருக்கம்!!
II பேதுரு 2:4 பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; (இவைகள் தான் காவலில் உள்ள ஆவிகள்)
1 பேதுரு 3:19. அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். 20. அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்;
இன்றைய கிறிஸ்தவம் போதிக்கிறபடி இந்த ஆவிகள் ஏதோ மரித்து போனவர்களின் ஆவிகள் அல்ல, மாறாக ஆவி ஜீவிகள், பாவம் செய்த தூதர்கள் அதுவும் நோவா காலத்தில் உள்ளவைகள் மாத்திரமே!! அவர்களின் காவலை பார்த்த மற்ற தூதர்கள் எந்த விதமான பிரசங்கமும் இன்றி, பாவம் செய்தால் இப்படி தான் காவல் என்று புரிந்து போயிருப்பார்கள்!!
இது தான் காவலில் உள்ள ஆவிகளின் சுருக்கம்!!
//இதுக்காவது சம்பந்தமில்லாத வசனங்களை quote பண்ணாமல் தெளிவான பதில் சொல்லுஙக.//
சம்பந்தமில்லாத வசனங்களை ஒரு இடத்திலும் சொல்லுவதில்லை!! புரியாத வசனங்கள் உங்களுக்கு சம்பந்தமில்லததாக போய் விடுகிறது!!
பாவம் செய்யும் ஆத்துமா சாகும் என்று வசனத்தை சொன்னால், அது உங்களின் போதனையான ஆத்துமா சாகாது என்பதற்கு ஒத்து போவாததால் உங்களுக்கு அது சம்பந்தமில்லாத வசனமாக படும்!! இப்படி தான் எல்லாம்!!
//இயேசு கிறிஸ்து மரித்த போது என்ன ஆச்சுன்னு தெரியாமல் நீங்க தான் குழம்பிப் போய் இருக்கிறீர்கள்.//
நீங்கள் தெளிவாக இருந்தால் சரி தான்!! உங்கள் தெளிவு நீங்கள் இப்படி திரும்ப திரும்ப பதிவு செய்வதிலிருந்து தெரிகிறது!! எங்களுக்கு எந்த விதமான குழப்பமும் இல்லை!! ஏனென்றால் கிறிஸ்து மரித்தார் என்றால் ஆத்துமா தான் மரித்தது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது!! மிகவும் தெளிவாக இருக்கிறோம்!!
தயவு செய்து யாரோ எழுதியதை எல்லாம் வைத்து மரணம் என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளாதீர்கள்!! வேதத்தில் மரணத்தை குறித்தும், ஆத்துமாவை குறித்தும் மிகவும் தெளிவாக சொல்லுவதை மாத்திரமே வாசியுங்கள்!!
//உங்களயும் அவர் இரட்சிக்க வல்லவர், மனந்திரும்பினால்!//
தேவனே கண்டிஷன் இல்லை என்று சொல்லி விட்டார்!! மனந்திரும்பினால் தான் இரட்சிப்பு என்று வேதம் சொல்லுகிறதா!! உங்களுக்கு இரட்சிப்பு என்றால் கிறிஸ்துவனாக மாறி பரலோகம் போவது என்று நினைத்திருப்பதினால் தான் இத்துனை குழப்பம்!! கோல்டா அவர்களே பரலோகம் செல்ல பவுல் பேதுரு கேட்டகரியில் இருக்க வேண்டும்!! மனசாட்சியுடன் சொல்லுங்கள் நீங்கள் அந்த கேட்டகரியில் இருக்கிறீர்களா, அல்லது அது போன்றவர்களை தான் பார்த்திருக்கிறீர்களா!! கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுக்குள்ளேயே இப்படி கேட்டகரியில் இல்லாத போது, உலகத்தாரை எப்படி நீங்கள் பரலோகத்திற்கு கூட்டி செல்ல போகிறீர்கள்!! பரலோகம் யார் போவார்கள் என்பதை கிறிஸ்து நிர்னயித்துக்கொள்ளட்டும்!! எல்லா மனுஷர்களும் இரட்சிக்கப்படவே கிறிஸ்து இயேசு தன்னை ஈடுபலியாக கொடுத்தார்!! நீங்களோ அதில் ஒரு கண்டிஷன் போட்டு அவரின் ஈடுபலியை துச்சப்படுத்துகிறீர்களே!! யார் தேவ தூஷனம் செய்கிறார்கள் என்பதை யோசித்து பாருங்கள்!!
1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
எங்கே இருக்கு கண்டிஷன்!!
அவருக்கு இரட்சிக்க பிரியம் தான் ஆனால் அவரால் முடியாது என்று சொல்லுவது அவர் செலுத்திய ஈடுபலியை கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது!!
//From where you are coming from, உங்க நம்பிக்கை என்ன என்று தெரிந்து கொள்ள மட்டுமே கேட்கிறேன்.யேகோவா சாட்சிகள் போல,இயேசு கிறிஸ்து தெய்வம் அல்ல என்று சொல்ற கோஷ்டி என்று தெரியும். மற்றபடி நடக்கும் விவாதங்களை சீரியஸா கவனித்ததில்லை.//
இயேசு கிறிஸ்து தேவனின் குமாரன், தேவனின் வலது கரம், தேவன் எல்லாவற்றுக்கும் மேலாக நியமித்த அவரின் நேச குமாரன், எங்களுக்கு மூத்த சகோதரன், உலகின் மீட்பர், எங்கள் எஜமானன், எங்களுக்காக பரிந்து பேசும் பரிந்துரையாளர், உலகத்துக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தர்!! இன்னும் இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம், ஆனால் உங்களின் நம்பிக்கை அல்லது விசுவாசம் போல் கிறிஸ்து பிதா அல்ல என்பதில் எங்களுக்கு எந்த வித மாற்று கருத்தே கிடையாது!! யெகோவா சாட்சிகள் கிறிஸ்துவை என்ன சொல்லுகிறார்கள் என்பதை பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை!! ஆனால் நீங்கள் சொல்லுவது போல் அவர் பிதா அல்ல!! பிதாவின் குமாரன்!! உலகத்துக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தராக இருக்கிறார் என்று வசனம் சொல்லுகிறது என்றால் பிதாவிடம் மத்தியஸ்தம் செய்யும் நீதிபதி என்று தானே அர்த்தம்!!
எங்கள் நம்பிக்கை வேதம் தருவது மாத்திரமே!! அவர் சொன்னார், இவர் பார்த்துவிட்டு வந்தார், என்னிடம் வந்து பேசினார், காரில் வந்தார், ரயிலில் அப்பர் பர்த்தில் உட்கார்ந்து பேசினார் என்பதை எல்லாம் நாங்கள் நம்புவது இல்லை!!
மத்தேயு 24:23. அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
//ஆனால், ஆவி செத்த மாதிரியோ, காற்றில் கரைவது போலவோ வசனத்தில் இல்லையே. பத்திரமா உங்க கையில் ஒப்படைக்கிறேன் என்றல்லவா சொல்கிறார். ஒரு colourless, odourless, tasteless காற்றாய் இருக்கும் ஆவியை எதற்காக பிதாவின் கையில் ஒப்புவிக்கணும்??//
தன் ஜீவனை கொடுக்கிறேன் என்று சொல்லுவதற்கு தான் அப்படி சொல்லுகிறார்!! மற்றபடி ஆவி என்பது நீங்கள் சொன்னது மாதிரியே உள்ள தன்மைகள் கொண்டது தான்!!
சிஸ்டர் கோல்டா அவர்களே, நீங்கள் குமுதம் படிப்பதற்கெல்லாம் உங்களை தேவன் ஏன் என்று கேட்கப்போவதில்லை!! நீங்கள் தாராளமாக படிக்கலாம்!! டிவியே வீட்டில் இருக்க கூடாது என்று சொல்லும் போதகர்களும் இருக்கிறார்கள், டிச்கோத்தேவில் நடனம் ஆடுவது போல் "ஆராதிக்கிறோம்" "சுதந்திரம்" போன்ற பெயர்களை வைத்து ஆபாசத்தை வெளிப்படுத்துவோரும் அதே 2000 சபைகளுக்குள் தான் இருக்கிறார்கள்!! உங்கள் அனைவரையும் இனைத்து வைத்திருக்கும் ஒரே விஷயம் "திரித்துவம்"!!!
நகை போடக்கூடாது என்று ஒரு கூட்டத்தார் போதிப்பார்கள், ஆனால் கட்டு கட்டாக பணத்தை வாங்கிக்கொள்வார்கள்!! என்ன கோட்பாடோ!! டிவியே இருக்க கூடாது என்று போதித்தவர்கள் கூட இப்பொழுது ஆசிர்வாதம், ஏஞ்சல் பார்ப்பதற்கு வைத்துக்கொள்ளலாம் என்கிற அளவிற்கு வந்திருக்கிறார்கள்!! காரணம் வேறு ஒன்றும் இல்லை, அந்த போதகர்கள் யாரோ பாடியதற்கு வாய் அசைத்து நாஙக்ளும் நடிகர்கள் தான் என்று தங்களை நிரூபித்திருப்பார்கள்!! நீங்கள் அவர்களை எல்லாம் திரையில் பார்க்க வேண்டும் என்கிற நப்பாசையில் டிவி வைத்துக்கொள்ளலாம் என்கிற போதனை!!
சிஸ்டர், பாவத்தில் சின்ன பாவம், பெரிய பாவம், குட்டி பாவம், கொஞ்சூண்டு பாவம், பயங்கரமான பாவம் என்று எல்லாம் வித்தியாசம் கிடையாது!! எல்லாமே பாவம் தான்!! பாவத்தின் சம்பளம் மரணம்!! பேதுருவின் நெகெட்டிவ் குணங்களை எல்லாம் சொல்லி அது போல் எல்லாம் இருக்கிறோம் என்கிறீர்கள், பேதுரு போல் கிறிஸ்துவிற்காக தலைகீழாக சிலுவையை ஏற்க முடியுமா!! பவுலை போல் இல்லை என்று ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்!! அவரே கிறிஸ்துவின் வருகையின் போது தான் தனக்கு கிரீடம் என்று சொல்லுகிறார்!! ஆனால் சோஃபாவில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டு உலகத்திற்காக ஜெபிக்கிறோம் என்பவர்கள், பரலோகம் போய் வந்தேன் என்பவர்கள், நரகத்தில் முப்பாட்டன்களை பார்த்து வந்தேன் என்பவர்கள், ஏன் அவர் கடுப்பாக இருக்கும் ஏதாவது ஒரு சபையின் ஊழியரையும் பார்த்ததாக கூட சொல்லுகிறவர்கள், இவர்கள் ஏத்துனை துனிச்சலாக காணததில் நுழைகிறார்கள் என்பதை பாருங்கள்!!
இவர்கள் பாவத்தின் முழு உருவமாய் இருந்துக்கொண்டு பரிசுத்தத்தை பற்றி போதிப்பது தான் நல்ல தமாசு!!
இவைகள் எங்காவது மனிதர்களின் ஆவிகள் என்று போட்டிருக்கிறதா!! ஆனால் நோவா பேழையை கட்டும் போது அதாவது ஜலபிரலயத்திற்கு முன்பு மனுஷக்குமாரிகள் அழகாக இருக்கிறார்கள் என்று தேவ குமாரர்கள் (ஆதி 6) திருமனம் செய்துக்கொண்டவர்கள்!! ஆவிகள் மாம்ச ரூபம் எடுக்கலாம் என்பதற்கு ஆபிரகாம் மற்றும் லோத் முன்பாக வந்த தூதர்கள் மாம்சத்தில் வந்தார்கள் என்பது தான் இனை வசனம்!! அவர்கள் சாப்பிடவும் குடிக்கவும் செய்தார்கள்!! இவர்கள் மூலமாக பிறந்த சந்ததி தான் இராட்சதர்கள் என்று மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை!! ஆனால் உண்மையில் அது பலசாலிகள் மற்றும் துருகுனம் உடையவர்கள் என்றே அர்த்தம் உள்ள வார்த்தை!!
அதன் பிறகு ஜலபிரலயம் வந்தவுடன் மாம்சத்தில் இருந்த தேவதூதர்கள் மீண்டும் தங்களை ஆவி ஜீவிகளாக மாற்றிகொண்டு தப்பிக்கும் போது தான் அவர்களை தப்பவிடாமல் அந்தகாரத்தில் சங்கிலியால் (ஆவியை எங்காவது சங்கிலியால் கட்ட முடியுமா என்று கேள்வி தோன்றவில்லையா??) கட்டி வைத்திருக்கிறார், நியாயத்தீர்ப்பு நாட்களுக்கு!! இதற்கு உண்டான வசனங்கள்:
II பேதுரு 2:4 பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
I கொரிந்தியர் 6:3 தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா?
இந்த தூதர்கள் யார் என்றும் இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று பேதுரு எங்கும் எழுதவில்லை!! ஆனால் வேதம் அறைகுறையானது அல்ல!! என்ன கொஞ்சம் தேடி பார்க்க வேண்டும்!! பாவஞ்செய்த தூதர்கள் மாத்திரமே அந்தகார சங்கிலிகளினால் கட்டி வைத்தார் நம் தேவன்!! அப்படி என்றால் இனி அவர்களால மீண்டும் சரீரத்தில் வராதபடிக்கு அவர்களை வைத்திருக்கிறார் என்றே தான் அர்த்தமே தவிர, எழுத்தின்படியே அவர்களை ஏதோ ஒரு பெரிய இரும்பு சங்கிலியை வைத்து கட்டி வைக்கவில்லை, ஏனென்றால் அப்படி ஆவிகளை கட்டி வைக்க முடியாது!!
நோவா காலத்து மனிதர்களின் ஆவிகள் என்று இல்லாமல், நோவா காலத்தில் கீழ்ப்படியாமல் போன ஆவிகள் என்று தான் வசனம் சொல்லியிருக்கிறது!! அந்த ஆவிகள் பாவம் செய்த தூதர்களே!!
ஏசாயா 34:16 கர்த்தருடைய புஸ்தகத்திலேதேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.
வேதம் பல விதமான பல தரப்பட்ட ஆட்களால் எழுதப்பட்டிருந்தாலும் அதில் ஒரு கோர்வை இருக்கும் எல்லாவற்றுக்கும் சம்பந்தம் இருக்கும்!! திடீர் என்று பேதுரு பாவஞ்செய்த தூதர்கள் என்றும், நோவா காலத்தில் கீழிபடியாமற் போன ஆவிகள் என்றும் எழுதுவதற்கு சம்பந்தம் இருக்கு!! அதை தான் தேவ ஆவி இனைக்கிறது!! மனிதர்களின் பார்வையில் பார்த்தால் எப்படி வேண்டுமென்றாலும் அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்!! ஆனால் வேதம் குறைவற்றது, இனை வசனங்களை வைத்து ஒரு விஷயத்தை முடிவு செய்யுங்கள்!!
//காவலில் உள்ள ஆவிகளுக்கு பிரசங்கம் பண்ணினார் என்றால் ...... காவலில் உள்ள ஆவிகள் பார்த்து தெரிந்து கொண்டார்கள் என்று அர்த்தமா? இப்படி தமிழை தமிழுக்கு மொழி பெயர்க்கும் கலையை எங்கே படித்தீர்கள்?? எந்த வாக்கியத்தையும் எப்படியும் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் ... அப்படித்தானே?. பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு!! //
ஆவிஜீவிகள் மனிதனை விட மேல் தரத்தில் உள்ளவர்கள். அவர்கள் பேசி கேட்டு தான் காரியங்களை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று இல்லை!! அவர்கள் சொந்தமாக அனுபவத்திற்குள் உட்படத்தப்பட்டால் தான் புரிந்துக்கொள்வார் என்று இல்லை, மாறாக மற்றவர்களின் அனுபவத்தில் கற்றுக்கொள்ளும் திறன் உடையவர்கள்!! அவர்கள் பார்த்தே எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள்!!
1 பேதுரு 1:12. தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது, பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.
மனிதர்களுக்கு அறிவிக்கப்படுகிறது ஆனால் தேவ தூதர்கள் உற்றுப்பார்த்தே நடப்பவைகளை புரிந்துக்கொள்ளுகிறார்கள்!!
பரலோகத்தில் இருந்து வந்த கிறிஸ்து இயேசு பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற கீழ்ப்படிதலுடன் தன்னை ஈடுபலியாக கொடுத்தத்தையும், அந்த கீழ்ப்படிதலின் நிமித்தம் மரித்து மூன்றாம் நாளில் பிதாவினால் எழுப்பப்பட்டதையும் பார்த்தே அந்த ஆவிகள் (கீழ்ப்படியாமற் போன தேவதூதர்கள்) கிறிஸ்துவினால் இந்த பூமிக்கு உண்டாகும் இரட்சிப்பை கற்றுக்கொண்டார்கள் என்று தான் அர்த்தம்!! நோவா காலத்தில் அந்த தேவதூதர்கள் பூமிக்கு மாம்சத்தில் வந்து கெட்டு போனார்கள், ஆனால் கிறிஸ்துவோ பரலோகத்திலிருந்து வந்து மாம்சத்தில் பிதாவிற்கு கீழ்ப்படிந்து ஈடுபலியாக ஒப்புக்கொடுத்தத்தை பார்த்து கற்றுக்கொண்டார்கள்!! மரித்தவர் யாரும் பிரசங்கம் செய்ய முடியாது!! இது மொழிப்பிரச்சனை அல்ல, புரிந்துக்கொள்ளுதலின் பிரச்சனம்!! வேதம் எல்லாருக்கும் (எல்லாருக்கும் என்றால் வேதத்தை வைத்திருக்கும் கிறிஸ்தவர்கள் உட்பட தான்) புரிந்துக்கொள்ளும்படியான புத்தகம் அல்ல!! அநேகர் என்றாலே அங்கே தப்பு என்று தான் அர்த்தம்!! அநேகர் இதை தப்பாக தான் புரிந்துக்கொண்டு தன் சொந்த அனுபவங்களை வைத்து யூகங்களின் பேரில், இனை வசனம் இல்லாமல் போதிக்கிறார்கள்!!
மத்தேயு 13:11 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.
இந்த வசனம் அநேகரை குறித்து அல்ல, சிலரை குறித்தே என்பதை வேதத்தை வாசித்து அறிந்துக்கொள்ளுங்கள்!!
//அப்ப நோவா காலத்தில் 8 பேரைத் தவிர உலகத்தில் இருந்த அனைவரும் தூதர்கள்?? இந்த உங்க வெளிப்பாட்டுக்கு முன்னால சாதுவும் விசெ உம் எந்த மூலைக்கு?? நோவா காலத்தில் நடந்தது போல் கடைசிக் காலத்திலும் நடக்கும் என்று ஆண்டவர் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று நினைக்கிறீர்கள்? //
நீங்களாகவே புரிந்துக்கொண்டால் எப்படி!! நாங்கள் அப்படி சொல்லவில்லையே, சொல்லவும் மாட்டோம்!! சாது வி.செ போன்ற (கள்ள)தீர்க்கதரிசிகளுக்கு முன்னால் நாங்கள் நிச்சயமாக ஒன்றும் இல்லை தான்!! இல்லாத எக்காளச்சத்தம் எல்லாம் சாது கேட்டிருக்கிறார், கானக்கூடாத தேவனை எல்லாம் விசெ பார்த்திருக்கிறார்!! நாங்கள் அவர்களுக்கு முன்னால் ஒன்றும் இல்லை தான்!!
வசனத்தை வைத்து வித்தை காண்பிக்கும் பொழப்பு இல்லை எங்களுக்கு!! சோஃபாவில் உட்கார்ந்துக்கொண்டு வசனங்களை வைத்து கலர் கலராக கதை விட்டுக்கொண்டிருக்கும் அளவிற்கு எங்களுக்கு நேரம் இல்லை!! அது எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்களின் பொழுதுபோக்கு!! சந்தடி சாக்கில் தீர்க்கதரிசிகள் என்று பெயர் வாங்கிக்கொள்கிறார்கள்!! தயவு செய்து அது போன்ற மாயாவிகளிடம் ஏமாந்து போய் விடாதீர்கள்!! கடைசி நாட்களில் வசனம் தான் நியாயம் தீர்க்குமே தவிர, சாதுவின் எக்காள சத்தமோ, விசெ யின் தீர்க்கதரிசனங்களோ அல்ல!!
நோவா காலத்தில் 8 பேர் மாத்திரமே தேவன் சொன்னதை விசுவாசித்தார்கள், மற்றவர்கள் யாரும் கேட்கவில்லை, அப்படியே தான் கடைசி நாட்களிலும் (என்றால் சுவிசேஷ யுகம் தான்) மெய்யான சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தான் அநேகராக இருப்பார்கள்!!
லூக்கா 18:8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
அன்று நோவா காலத்தில் உள்ள சுவிசேஷத்தை விசுவசியாமல் இருந்தார்கள், இன்று கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவசியாமல் இருக்கிறார்கள்!! மனுஷகுமாரன் வரும் போது (இரண்டாம் வருகை தான்) பூமியில் விசுவாசம் இருக்காது என்கிறது வசனம்!! பூமியில் என்றால் ஜனங்களிடத்தில் தான்!! ஒரு சிறு கூட்டத்தாரை தவிர உலகமே விசுவாசம் இல்லாததாக தான் இருக்கும்!! இன்று உலகத்தை ஆதாயப்படுத்துவோம் என்று சொல்லி பணம் பார்ப்பவர்கள் தான் இந்த அவிசுவாசத்தின் தலைவர்கள்!! வசனம் சொல்லியிருக்கிறது என்றால் இந்த தீர்க்கதரிசனம் நிச்சயம் நடக்கும்!! நிழலாக நோவா காலத்தில் நடந்தது, நிஜத்திலும் நடக்கும்!! இன்று 2000த்திற்கும் மேற்பட்ட சபைகள் எதை விசுவாசம் என்று சொல்லுகிறதோ அது விசுவாசமே இல்லை!! இல்லாட்டி உங்களின் சுவிசேஷத்தால் தான் பூமி நிறைந்திருக்கிறதே, பிறகு எப்படி கிரிஸ்து விசுவாசத்தை காணமாட்டேன் என்கிறார்!!
/லாசரு உயிர்த்தெழுந்தபின் என்னவயிற்று, இயேசு கிறிஸ்து உயிரோடு எழுப்பினவர்களுக்கு எங்கிருந்து இந்த ஞாபகங்கள் வந்தது. தூங்கி எழுவதுபோல இருக்கும் என்பதால்தான், "நித்திரையடைந்தவர்கள் நிமித்தம்", "நித்திரையடைந்து" என்று வசனம் சொல்கிறது. என்னத்தத்தான் வேதத்தில் வாசிக்கிறீர்களோ? //
நீங்க சொன்னது - மூளையில்தான் எல்லாம் பதிவாகுது.
நித்திரை பண்ணுகையில் மூளை உயிரோடுதான் இருக்கிறது. எனவே நித்திரை தெளிந்தவுடன் எல்லாம் திரும்ப ஞாபகம் வரும். ஆனால் மரித்து மண்ணுக்கு போனவுடன் மூளையும் இல்லாமல் போய் விடுகிறது. அதாவது ஒரு மனிதனைப் பற்றிய எல்லாம் அழிக்கப்பட்டு விடுகிறது. ஆத்துமா, ஆவி என்று எதுவும் சரீரம் மரித்தபின் இருப்பதில்லை என்றால் உயிர்தெழும்போது எங்கிருந்து ஞாபகங்கள் வரும்? மேஜிக்கா?உங்க லாஜிக்கை நீங்களாவது follow பண்ண வேண்டாமா?
லூசு மாதிரி இருக்கு உங்க பதிவு. லாசரு செத்து நாலு நாள் கழித்துதான் எழுப்பப்பட்டான். அவன் மூளை சாகவில்லையா? உயிர்த்தெழுதல் என்ற மாபெரும் அற்புதம்தான் நற்செய்தி. தேவனுடைய வல்லமையை மேஜிக் என்று கொச்சை படுத்த வேண்டாம்.
யோவான் 5:28 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
//பவுலை தேவன் சந்திக்கவில்லையா? அகாலப் பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார் என்று சொன்னாரே. பேதுருவை தேவதூதன் வந்து விடுவிக்கவில்லையா? ஸ்தேவான் இயேசுவை பார்க்க வில்லையா? யோவான் எக்காள சத்தம் கேட்க வில்லையா? ஆவியில் கேட்காமல், பூமியில் கேட்க ஆல்வின் தாமஸ் மீட்டிங் செல்லவும். அவர் எக்காளம் ஊதுகிறார்!!//
வசனத்தை காட்டியே ஏமாத்தீக்கிட்டு இருக்கானுங்க!! பவுல், பேதுரு, யோவான், ஸ்தேவான் போன்றோரின் வரிசையில் தான் நீங்கள் சாதுவையும் விசெயையும் வைத்திருப்பதை நினைத்தால்.............. என்னத்த சொல்ல!!
ஆல்வின் தாம்ஸ் நடத்துவது டிஸ்கோத்தே!! எல்லா விதமான ஆபாச நடனத்தையும் இந்த மனுஷனின் அரங்கில் (இவனுங்க அதை ஆராதனை என்பார்கள்) பார்க்கலாம்!! அந்த ஆபாச நடனத்திற்கு நடுவே "பரிசுத்த ஆவியானவர்" அசைவாடுவாராம்!! இயேசு கிறிஸ்துவை அறியாத ஜனங்கள் கூட சாமி என்கிற மரியாதை வைத்திருக்கிறார்கள்!! ஆனால் இந்த ஓ.சி. சாப்பாடு சாப்பிட்டு மேல் வலித்த ஆட்கள் இயேசு கிறிஸ்துவை விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!! எவனோ காசு கொடுக்கிறான், எனக்கு என்ன என்று சோஃபாவில் ஏ.சி அறையில் உட்கார்ந்து எக்காளச்சத்தம் கேட்டேன், மாடியில் வெள்ளையும் சொல்லையுமாக கிறிஸ்துவை பார்த்தேன் என்று சொல்லுகிறார்கள்!! பவுல் இயேசு கிறிஸ்துவை பார்த்து மூன்று நாட்கள் குருடாகியிருந்தான்!! தெரியுமா!! யோவான் செத்தவனை போல் விழுந்தான்!! யோவான் மூலமாக கடைசி தீக்கதரிசன புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் வெளி வர வேண்டும் என்பதால் அவருக்கு கிறிஸ்துவே எல்லாவற்றையும் காண்பிக்கிறார்!!
சும்மா இந்த கள்ள தீர்க்கதரிசிகளை அப்போஸ்தலர்களுடன் ஒப்பீட்டு பேச கூட நினைக்காதீர்கள்!!
உங்களுக்கு அந்தி கிறிஸ்து என்றாலே என்னவென்று தெரியாது, அந்த ஆவி என்றால் என்னவென்று தெரியாது என்று தான் சொல்ல வேண்டும்!! அந்தி கிறிஸ்துவின் ஆவியில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்று பாருங்கள்:
மத்தேயு 24:5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். 11. அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். 15. மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, (தங்களை பரிசுத்தவான்கள் என்று சொல்லிக்கொள்ளுவோர் தான், உங்கள் சாது விசெயும் இதில் அடங்குவார்கள்) 23. அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். (சொல்லுகிறார்களா இல்லையா) 24. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். (நடக்குதா இல்லையா)
இதில் ஒன்றை கூட நாங்கள் செய்வதில்லை!! நாங்கள் தீர்க்கதரிசி என்று எங்களை சொல்லிக்கொள்வதில்லை, நாங்கள் அற்புதங்களும் அடையாளங்களையும் செய்து யாரையும் வஞ்சித்தது கிடையாது, இவைகளை யார் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்!! நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சி இதற்கு போதுமான சாட்சிகளை கொடுக்கும்!! கிறிஸ்துவை பார்த்தேன், மேல் வீட்டில் பார்த்தேன், காரில் என்னுடன் வந்தார், இரயிலில் அப்பர் பர்த்தில் என்னுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு வந்தார் போன்ற புறுடாக்களை நாங்கள் விடுவதில்லை!! எங்களை அந்தி கிறிஸ்துவின் ஆவியுடையவர்கள் என்று சொல்ல ஒரு நல்ல காரணம் இருந்தால் தெரிவியுங்கள்!! ஏனென்றால் நீங்கள் இருக்கும் சபைகளே அந்த ஆவியில் நிறம்பியிருப்பதினால் உங்கள் கண்கள் கட்டப்பட்டு விட்டிருக்கிறது!! வசனத்தில் வெளிச்சம் தான் அதை திறக்க முடியும்!!
//இது சரியா தவறா என்று உங்கள் வேத பண்டிதர்கள் என்ன் சொல்கிறார்கள் என்று பார்த்து வையுங்கள். அப்பத்தான் யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியும்.//
உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் வேதத்திலிருந்து பகுத்து அறிந்துக்கொள்கிறோம்!! "எங்கள்" வேத பண்டிதர்கள் என்று யாரும் கிடையாது!! நாங்கள் விழித்திருந்து உலகத்தையும் (சாது விசே உட்பட்டோரையும் சேர்த்து தான்) வேதத்தை பார்த்து கற்றுக்கொள்ளுகிறோம்!! தேவனின் ஆவி எங்களுக்கு எல்லாவற்றையும் கற்று தருகிறது!! எங்களுக்குள் இருக்கும் அபிஷேகம் எங்களை நடத்துகிறது!! இந்த விவாத மேடையில் கேள்விகளுக்கு பதில் தானே சொல்லிக்கொண்டு இருக்கிறோம்!! கேளுங்கள்!!!!
அதாவது இப்ப ஆத்துமாவும் ஆவியும் ஒன்றாக போகும்!! எங்கே, ஒரே ஒரு வசனத்தை காட்டுங்களே!! உங்கள் சாது அலல்து விசெயிடம் கேட்டால் கூட பேந்த பேந்த தான் முழிப்பார்கள்!!
//அப்ப ஏதோ தப்பா சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன்!//
அப்போ இல்லை எப்பவுமே தப்பாக தான் சொல்லிக்கிட்டு இருக்கிறீர்கள்!!
//நாம் மாம்சத்தின்படி பிழைக்க மாம்சத்திற்கு கடனாளிகள் அல்ல. ஆவியினால் சரீரத்தை மேற்கொண்டு வாழும் வாழ்க்கை முற்றிலும் சாத்தியமே! மறுருபத்தின்மேல் மறுரூபமடைந்து அவரைப் போல் மாறிக் கொண்டே இருக்கிறோம்.//
வார்த்தை ஜாலம் செய்கிறீர்கள்!! அவ்வளவே!! நீங்கள் பாவி இல்லை என்றால் சாக மாட்டீர்கள்!! ஏனென்றால் பாவத்தின் சம்பளமே மரணம்!!
//ஆத்துமா எனும் வார்த்தை மனிதனையும் குறிக்கும்.உள்ளான மனிதனையும் குறிக்கும்.Context பார்த்து பொருள் கொள்ள வேண்டும். //
ஆத்துமா (Soul) என்பது Noun. Contextக்கு தகுந்தாப்ல எல்லாம் அர்த்தம் மாற்றிக்கொள்ள முடியாது!! மனிதன் மாத்திரம் ஆத்துமா கிடையாது, சுவாசிக்கிற எல்லா ஜீவிகளும் ஆத்துமா தான்!!
Genesis 2:7 And the LORD God formed man of the dust of the ground, and breathed into his nostrils the breath of life; and man became a living soul.
மனிதன் ஆத்துமாவானான், மனிதனுக்குள் ஆத்துமா வரவில்லை!!
//ஆணடவர் விழுந்து போன தேவ தூதர்கள் மனந்திரும்ப வேண்டும் என்று காத்திருந்தாராம்.விழுந்து போன தேவ தூதர்கள் மற்றும் பிசாசுக்கு மனந்திரும்ப சந்தர்ப்பம் உண்டா? கிடையாது என்பது சின்ன பிள்ளைக்குக் கூட தெரியும். //
II பேதுரு 2:4 பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
I கொரிந்தியர் 6:3 தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா?
சின்ன பிள்ளைகளுக்கு தான் நிறைய விஷயம் தெரியுமே!! சாது எக்காளச்சத்தம் கேட்டுச்சுன்னு சொன்னா ஆமா, விசெ மாடி வீட்டில் இயேசுவை பார்த்தேன் என்றால் ஆமா!! ஏனெறால் சின்ன பிள்ளைகளுக்கு பால் தான் ஆகாரம்!! மாம்சத்தை சப்பிடுவோருக்கும் தான் ஆழமான சத்தியம்!!
நீங்களாகவே ஒரு கேள்வியை எடுத்துக்கொண்டு அதற்கு ஒரு பதிலையும் கொடுத்துவிடுவீர்கள் போல்!! தேவ தூதர்கள் ஒன்றும் ஆவியாக நோவா காலத்தில் சுற்றி வரவில்லை, மாறாக மனுஷகுமாரிகளை திருமனம் செய்துக்கொண்டு பிள்ளைகள் பெற்றார்களாம்!! தெரியுமா!!?? இவர்கள் தான் பாவஞ்செய்த தூதர்கள்!! ஜலப்பிரலயம் வந்தவுடன் தங்களின் உண்மையான நிலைக்கு திரும்பிய தூதர்கள் தான் அந்தகாரச் சங்கிலிகளினால் கட்டி வைக்கப்பட்டிருப்பவர்கள், நியாயத்தீர்ப்புக்கென்று!! நியாயத்தீர்ப்பு என்பது ஒரு தனி சப்ஜெக்ட்!!
இந்த ஆவிகளிடம் (தேவ தூதர்களிடம்) தான் கிறிஸ்து பிரசங்கம் செய்வதாக வேதத்தில் உள்ளது!! செத்து போன மனிதர்களின் ஆவியிடம் பிரசங்கம் செய்து, அவைகள் மனந்திரும்பும் என்பதற்கு என்ன வசனம் இருக்கு!! நல்ல தமாசு!!
//மனிதர்களின் ஆவி அழிவற்றது. சரீரம் அழிந்தாலும் உயிருடன் இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ள மனமில்லாமல் அது தேவ தூதர்களின் ஆவிகள் என்று சொல்கிறீர்கள்.//
சரி தான்!! சின்ன பிள்ளை என்று நீங்கள் சொல்லுவது சரி தான்!! மனிதர்களின் ஆவி அழிவற்றது!! வசனம் எங்கே!! (அது யாருக்கு வேனும், எங்க சாதுவும் விசெயும் அன்றைக்கே சொல்லிட்டருல)!! சரீரம் அழிந்தாலும் உயிருடன் இருக்கும் என்பதை வசனம் இல்லாமல் நீங்கள் தாராளமாக ஒத்துக்கொள்ளுங்கள், யார் வேண்டாம் என்கிறார்கள்!! சாது சொல்லுவதை ஒத்துக்கொள்கிறவர், இதையா ஒத்துக்கொள்ள மாட்டீர்கள்!!
//ஆண்டவர் அவைகளுக்கு பிரசங்கித்தார் என்றால் அவைகளுக்கு இரட்சிப்பு உண்டு என்று அர்த்தம் வந்து விடுகிறது. மனிதர்களுக்குத்தான் இரட்சிப்பு, விழுந்து போன தூதர்களுக்கு இல்லை என்பதால், காவலில் இருக்கும் ஆவிகளுக்கு போய் பிரசங்கம் பண்ணினார் என்று சொல்லப்பட்டிருப்பதை அது அப்படி இல்லை, இப்படி என்று திரித்து சொல்கிறீர்கள்.
You are not honest and consistent in your interpretation.//
பிரசங்கித்தார் என்றவுடன், அவர் அங்கே போய் அவர்களுக்கு முன் நின்றோ, உட்கார்ந்தோ பேசினார் என்பது கிடையாது!! தேவ தூதர்களின் நிலையிலிருந்து பாருங்கள்!! அவைகள் மனிதர்களை விட உயர் ரகம்!! அவர்களுக்கு பேசி தான் ஒரு விஷயத்தை புரிய வைக்க வேண்டும் என்பது கிடையாது, அவர்கள் கிறிஸ்துவின் செயல்களை பார்த்தே அனைத்தையும் புரிந்துக்கொள்ளும் தன்மையுடையவைகள்!! ஆவி, ஆத்துமா, சரீரம் தெளிவாகும் வரை உங்களுக்கு உங்கள் குழப்பங்கள் நீடித்துக்கொண்டே இருக்கும்!!
My honesty is in trusting the words of God which you will never understand!! Once you don't follow the words of God you can never appreciate the consistency in my interpretation!! If you can't understand the basics of Soul, Spirit and Body, you will remain in the mainstream line Christiandom!! God Bless you!!
//சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்த நிலைமையிலும் அவர்கள் பூமியில் நடப்பதை பார்த்துக் கொண்டே இருந்தார்களாம். எப்படி ஏதாவது live telecast அங்க ஜெயிலில் பார்த்தார்களா? அல்லது , அவர்களும் ஆண்டவர் போல் சர்வ ஞானம் உடையவர்களா?//
ஆவியை சங்கிலிகளால் "கட்ட" முடியுமென்றால் அவர்கள் பூமியில் நடப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம்!! நீங்கள் மனிதர்களின் நிலையில் இருந்து யோசிப்பீர்களென்றால் இப்படி தான் கேட்க முடியும்!! ஆவிஜீவிகளை சங்கிலிகளால் கட்ட முடியுமா?? யோசிக்க வேண்டாமா!! அவர்களை கட்டி வைத்திருக்கிறார் என்றாலே அவர்களை செயல்ப்படாதப்படிக்கு தேவன் வைத்திருக்கிறார் என்று தான் அர்த்தம் கொள்ள முடியுமே தவிர நீங்கள் நினைப்பது போல் உண்மையிலேயே சங்கிலிகளால் கட்டி வைக்க முடியாது!!
அவர்கள் பூமியில் நடப்பதை பார்க்கிறார்களா?? ஆம்!!
1 பேதுரு 1:12. தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது, பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.
சாதுவின் எக்காளச்சத்தம் கேட்டதை புரிந்துக்கொண்டு வியாக்கானம் செய்ய தெரிகிறது, ஆனால் வசனத்தை சொன்னால் புரிவதில்லை!! என்ன செய்ய முடியும்!!
//அத்துடன், சம்பந்தமேயில்லாமல் சாதுவையும், வி.செல்வகுமாரையும் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. அவங்க ஒவ்வொரு வருடமும் கோயம்புத்தூர் வருகிறார்கள். அவங்க கூட்டத்திற்கு ஒரு தடவை போய்த்தான் பாருங்களேன்.//
வசனத்தை யார் திரித்து பேசினாலும் நிச்சயமாகவே எழுதுவேன்!! சாது விசெயின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் தவறாமல் பார்த்த காலம் உண்டு!! ஆனால் வசனத்திற்கு புறம்பான போதம் என்று தெரிந்தவுடன் தேவ கிருபை இது போன்ற குப்பையிலிருந்து எங்களை விளக்கியது!! இது தான் உண்மையிலேயே உளையான சேறு!! இப்படி ஆளாலுக்கு மனிதர்களை மேன்மைப்படுத்தி தான் கிறிஸ்தவம் துர்நாற்றத்தில் இருக்கிறது!! அதில் உட்கார்ந்துக்கொண்டே உங்களுக்கு அந்த துர்நாற்றம் சுகந்த வாசனையாக தெரிகிறது!! ஆகவே தான் பேதுரு பவுலின் வரிசையில் நீங்கள் சாதுவை, விசெயை பார்க்க முடிகிறது!! தன் காலில் விழவைத்து ஆசீர்வாதிக்கும் சாது எங்கே,,
அப்போஸ்தலர் 14:13. அல்லாமலும் பட்டணத்துக்குமுன்னே இருந்த யூப்பித்தருடையகோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். 14. அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய் 15. மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.