மத்தேயு 5:39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு. 40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. 41 ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. 42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
லூக்கா 6:27 எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். 28 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். 29 உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே. 31 மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். 32 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. 33 உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. 34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே. 35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. 36 ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.
இவ்வசனங்களைச் சொன்னவர் இயேசு. இவற்றைப் பார்த்தால், இவற்றின்படி நடப்பதெல்லாம் சாத்தியம் தானா எனும் கேள்வி நமக்கு எழலாம். ஆனால் நம்மால் செய்யக்கூடாத ஒன்றை செய்யும்படி நிச்சயமாக இயேசு சொல்லமாட்டார். எனவே இவ்வசனங்களிபடி நடப்பதென்பது நிச்சயம் நமக்கு சாத்தியமே.
ஆகிலும் நம்மில் சிலர் இவ்வசனங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு, இயேசு இப்படிச் சொல்கிறாரல்லவா, எனவே எனக்கு உன் வீட்டைக் கொடு, வாகனத்தைக் கொடு, 1 லட்சம் கடன் கொடு, இல்லாவிட்டால் உனக்கு அழிவுதான் என்று சொல்லி, இவ்வசனங்களின் அடிப்படையில் போதனை செய்வோரின் வாயை அடைக்கும் நோக்கத்தில் பகடியாகப் பேசுகின்றனர். எனவே இவ்வசனங்களின் கருத்தை சரியான கோணத்தில் நாம் புரிந்துகொள்வது அவசியம். எனவே இவ்வசனங்களை ஒவ்வொன்றாக எடுத்து, அவற்றின் கருத்தை ஆராய்ந்து பார்ப்போம்.
மத்தேயு 5:39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.
இப்போதனை ஏதோ இயேசு புதிதாகச் சொன்ன ஒரு கடினமான போதனையா? பழையஏற்பாட்டில் இம்மாதிரி போதனை கிடையாதா? பின்வரும் வசனத்தைப் படிப்போம்.
உபாகமம் 32:35 பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது;
உலகில் யார் என்ன தவறு செய்தாலும், அதற்கு தக்க நேரத்தில் தக்கவிதமாக பழிவாங்க தேவன் அறிந்துள்ளார். இப்படியிருக்க, நாம் நம் சுயபலத்தால் பழிவாங்குவது அவசியந்தானா?
பழிவாங்குகிறேன் என்று சொல்லி மனிதர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யுமளவிற்குப் போய்விடுகின்றனர். ஆனால் கொலை செய்தவர்கள் அதினிமித்தம் சட்டத்தின்பிடியில் சிக்கி அலைக்களிக்கப்படும்போது, ஐயோ இப்படி முட்டாள்தனமாகச் செய்துவிட்டேனே என்றுதான் நினைப்பார்கள்.
தேவனின் செயலான பழிவாங்குதலை நம் கையில் எடுக்கும்போது, அதினிமித்தம் நாம் மேலும் துன்பப்படத்தான் நேரிடுமேயொழிய, நம் மனதுக்கு நிம்மதி கிடைக்கப்போவதில்லை. நாம் ஏன் பழிவாங்கக்கூடாது என்பதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் உண்டு. அதுதான் பிறரிடம் அன்பு பாராட்டுதல்.
நம் பக்கத்துவீட்டுக்காரர் நம்மை அடித்தால், உடனே அவரைத் திருப்பி அடிக்கவோ அல்லது போலீசில் புகாரளிக்கவோ செய்யும் நாம், நம் சொந்த மகன் அல்லது நெருங்கின உறவினர் நம்மை அடித்தால் அதைப் பொறுத்துக் கொள்கிறோம். காரணமென்ன? நம் சொந்த மகன் அல்லது உறவிரிடம் சற்று விசேஷித்த விதமாக அன்பு பாராட்டுவதே.
இதே அன்பை நம் பக்கத்துவீட்டுக்காரரிடம் காட்டினால், அவரைப் பழிவாங்கும் எண்ணம் நமக்கு வராது. எனவே நாம் பிறரைப் பழிவாங்குகிறோம் என்றால் அதற்குக் காரணம், அன்பில் குறைவுள்ளவர்களாக இருப்பதே. இந்த அன்பில் நாம் வளர்ச்சியடைந்தால், பிறரை பழிவாங்காதிருப்பதென்பது மிகமிக எளிதாகிவிடும்.
இந்த மேலான நிலையை அடையும்போது, ஒரு காலகட்டத்தில் பிறர் நம்மை ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டும் மனநிலையை அடைந்துவிடுவோம்.
மத்தேயு 5:40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
பிறரோடு உண்டாகும் ஏதோவொரு பிரச்சனைக்காக நாமோ அல்லது நம் எதிராளியோ நீதிமன்றம் வரை சென்றால், அதினிமித்தம் நம் உடைமைகளை மேலும் மேலும் இழக்கத்தான் நேரிடுமேயொழிய, நம் பிரச்சனைக்கு அத்தனை எளிதில் தீர்வு கிடைத்துவிடுவதில்லை.
2000 வருடங்களுக்கு முன்னதாகவே இதைக் குறித்து இயேசு கூறியுள்ளார்.
மத்தேயு 5:23 நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், 24 அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. 25 எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து. 26 பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
நம் பிரச்சனையை வழக்கு மன்றம் மூலம் தீர்க்க நினைத்தால், அதன் காரணமாக நம் முழு உடைமைகளையும் இழக்க நேரிடும் என இயேசு சொல்கிறார்.
ஒருவேளை பிரச்சனையை வழக்கு மன்றத்திற்கு கொண்டு செல்லாமல், எதிராளியுடன் சமாதானமாகப் பேசி, சமாதானம் உண்டாவதற்காக நம் வஸ்திரம் மற்றும் அங்கியை இழக்க முன்வந்தால், அந்த வஸ்திரம் மற்றும் அங்கி இழப்போடு நம் இழப்பு முடிந்துவிடும். மாறாக, வழக்கு மன்றத்தில் பிரச்சனையை சந்திக்க நினைத்தால் ஒரு காசுகூட குறையாமல் அத்தனையையும் இழக்க நேரிடும்.
அது மாத்திரமல்ல, பிறனோடு நமக்குள்ள அன்பும் ஐக்கியமும் பாதிக்கப்பட்டு விடும். உலகப்பிரகாரமான ஒரு மனிதன் இவ்வாறு கூறியுள்ளதை நாம் அறிவோம்.
இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல். நமக்குத் தீமை செய்பவரை பழிவாங்கவேண்டுமெனில், அவர் வெட்கப்படத்தக்கதாக அவருக்கு நன்மை செய்துவிட வேண்டும் என்பதே அவர் சொல்வது.
வேதாகமத்திலுங்கூட பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே சாலொமோன் ஞானி இவ்வாறு கூறியுள்ளார்.
நீதிமொழிகள் 25:21 உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. 22 அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.
நமக்குக் கெடுதல் செய்ய நினைப்பவருக்கு நன்மையைச் செய்யும்போது, அது அவரது தலையில் அக்கினித் தழல் இருப்பதைப் போன்ற நிலையை உண்டாக்கும். மாறாக, நமக்குக் கெடுதல் செய்பவரோடு எதிர்த்து நின்று பிரச்சனை வழக்கு மன்றம் வரை செல்ல இடங்கொடுத்தால், அதன் காரணமாக நாம் அதிகமான இழப்பைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.
இவ்வுண்மையை ஆழமாகச் சிந்தித்து புரிந்துகொண்டால், நம்மோடு வழக்காடி வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள நினைப்பவருக்கு, நம் அங்கியை விட்டுக் கொடுக்க முன்வருவது மிகமிக எளிதாகிவிடும்.
இவ்வுண்மையை உணர்ந்ததால்தான் சாதாரண உலக மனிதர்கள்கூட இப்படியாகச் சொல்கின்றனர்:
மத்தேயு 5:41 ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
ஒருவன் நம்மை ஏன் இவ்வாறு பலவந்தம் பண்ணவேண்டும்? அவனோடுகூட நாம் ஒரு மைல் செல்வது அவனுக்கு ஒருவகையில் நன்மையாயிருக்கும் என்பதால்தான் அவன் அப்படி பலவந்தம் செய்வானேயொழிய, சும்மா எந்தக் காரணமும் இல்லாமல் அவன் நம்மைப் பலவந்தம் செய்யமாட்டான். எனவே பிறனுக்கு நன்மையாயிருக்கும்படி அவனோடு ஒரு மைல் மட்டுமல்ல, 2 மைல் போனாலும் அது நல்லதுதான்.
இக்கருத்தில்தான் இயேசு இவ்வசனத்தைக் கூறியுள்ளார்.
பொதுவாக நம் நண்பர்களோ உறவினர்களோ, மேலே சொன்னபிரகாரம் பலவந்தம் செய்தால், அவர்களிடமுள்ள அன்பின் காரணமாக, அவர்கள் சொல்கிறபடி நாம் செய்வோம். ஆனால் நமக்குச் சம்பந்தமில்லாத மூன்றாவது மனிதர் சொல்லும்போது மட்டும், இவன் எப்படி என்னைப் பலவந்தம் பண்ணலாம் எனக் கேள்விகேட்டு அவருக்கு மறுத்துவிடுவோம்.
நம் அன்பானது, நம் நண்பர், உறவினர், 3-ம் நபர் என பாரபட்சத்துடன் காட்டப்படுவதால்தான் நண்பருக்கு ஒரு நியாயம், உறவினருக்கு ஒரு நியாயம், 3-ம் நபருக்கு ஒரு நியாயம் என நடக்கிறோம். இப்படியில்லாமல், அனைவரையும் சமமாக நேசிக்கும் மனப்பக்குவத்திற்கு நாம் வந்துவிட்டால், 3-ம் நபரென்ன, நம் சத்துரு மேற்கூறிய விதமாகக் கேட்டால்கூட அவர் கேட்டுக்கொண்டபடி செய்வது நமக்கு எளிதாகிவிடும்.
இவ்வசனத்தை இயேசு சொல்வதன் நோக்கமென்ன? நம்மிடம் யார் என்ன கேட்டாலும் மறுப்புச் சொல்லாமல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலா இப்படிச் சொல்கிறார்? நிச்சயமாக இல்லை.
தனது நியாயமான தேவையினிமித்தம் நம்மிடம் கேட்க வருபவரிடம் இரக்கம் பாராட்டி, முகங்கோணாமல் அவர் கேட்பதைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இவ்வசனத்தை இயேசு கூறியுள்ளார்.
உதாரணமாக ஒருவன் நம்மிடம் வந்து, “நான் அவனைக் கொலை செய்யவேண்டும், எனவே உனது அரிவாளை என்னிடம் கொடு” எனக் கேட்டால், மத்தேயு 5:42-ல் “உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு” என இயேசு கூறியுள்ளாரே என நினைத்து அவனிடம் நம் அரிவாளைக் கொடுக்க வேண்டியதில்லை.
புறாவைப் போல் கபடற்றவர்களாகவும் சர்ப்பத்தைப்போல் வினாவுள்ளவர்களாகவும் இருங்கள் என இயேசு சொல்கிறார். அதாவது பிறரை கபடற்ற மனதோடு நம்பவும் வேண்டும்; அதே வேளையில் அவரது நியாயமான தகுதியை அறிவதில் வினாவுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என இயேசு சொல்கிறார்.
எனவே நம்மிடம் ஒருவர் ஏதேனும் கேட்டால், அவர் கேட்பது நியாயந்தானா, அவருக்குத் தேவை உள்ளதா என்ற கேள்விகளைக் கண்டிப்பாகக் கேட்க வேண்டும்; அதே வேளையில் தேவையின்றி அவரை சந்தேகப்படாமல், கபடற்ற மனதுடன் அவரை நம்பி, அவர் கேட்டதைக் கொடுக்கவேண்டும்.
ஆகிலும், ஒருவன் அடாவடியாக வந்து நம்மிடமுள்ளதைக் கொடுக்கும்படி வலுக்காட்டாயமாக வற்புறுத்தினால், தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம் என்ற வசனத்தின்படி அவன் கேட்டதைக் கொடுக்கலாம்.
// 33 உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. 34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே. 35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.//
இங்கு "நியாயமான" காரணங்களை ஆராய்ந்துபார்த்து நன்மை செய்யுங்கள் என்று சொல்லவில்லை. நன்றியறியாதவர்களுக்கும், துரோகிகளுக்கும், நன்மை செய்யாதவர்களுக்கும்தான் நன்மை செய்ய, கொடுக்கச் சொல்கிறார். இதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை.
இவ்வசனத்தை இயேசு சொல்வதன் நோக்கமென்ன? நம்மிடம் யார் என்ன கேட்டாலும் மறுப்புச் சொல்லாமல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலா இப்படிச் சொல்கிறார்? நிச்சயமாக இல்லை.
தனது நியாயமான தேவையினிமித்தம் நம்மிடம் கேட்க வருபவரிடம் இரக்கம் பாராட்டி, முகங்கோணாமல் அவர் கேட்பதைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இவ்வசனத்தை இயேசு கூறியுள்ளார்.//
கேட்கிறவனுக்குக் கொடு என்றால் "கொடு"தான் மற்ற கண்டிஷன்கலெல்லாம் திருவாளர் அன்பு அவர்களின் பிற்சேர்க்கையாகும். நியாயமான தேவை நியாயமில்லாத தேவை இதைப்பற்றி வேதத்தில் எதுவும் கூறப்படவில்லை. இதெல்லாம் அன்பு இட்டுக்கட்டிக் கூறியவை. அவருடைய சுயநீதியாகும். கொடுக்க மனமில்லாவிட்டால் எதை வேண்டுமானாலும் சொல்லி சமாளிக்கலாமே.
எனக்குத்தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால் இந்தச் சூழலில் இயேசு என்ன செய்வார்? என்பதுதான். யூதாஸையே சிநேகிதனே என்றவர், தன்னிடத்தில் கேட்கிறவனுடைய 'தகுதி'யை கருத்தில் கொண்டா கொடுக்கப்போகிறார். நிச்சயமாக இல்லை. இவையெல்லாம் 'அன்பு' போன்றவர்களுடைய உபதேசங்களாகும்.
//கேட்கிறவனுக்குக் கொடு என்றால் "கொடு"தான் மற்ற கண்டிஷன்கலெல்லாம் திருவாளர் அன்பு அவர்களின் பிற்சேர்க்கையாகும். நியாயமான தேவை நியாயமில்லாத தேவை இதைப்பற்றி வேதத்தில் எதுவும் கூறப்படவில்லை. இதெல்லாம் அன்பு இட்டுக்கட்டிக் கூறியவை. அவருடைய சுயநீதியாகும். கொடுக்க மனமில்லாவிட்டால் எதை வேண்டுமானாலும் சொல்லி சமாளிக்கலாமே.
எனக்குத்தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால் இந்தச் சூழலில் இயேசு என்ன செய்வார்? என்பதுதான். யூதாஸையே சிநேகிதனே என்றவர், தன்னிடத்தில் கேட்கிறவனுடைய 'தகுதி'யை கருத்தில் கொண்டா கொடுக்கப்போகிறார். நிச்சயமாக இல்லை. இவையெல்லாம் 'அன்பு' போன்றவர்களுடைய உபதேசங்களாகும்.//
மத்தேயு 5:39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.
யோவான் 18:22 இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். 23 இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு எனச் சொன்ன அதே இயேசு, தம்மை ஒருவன் அடித்தபோது, அவன் அடித்ததற்கான காரணத்தைக் கேட்டார். அப்படியானால் அவர் தாம் சொன்னதை தாமே மீறினார் எனக் கருதமுடியுமா? நிச்சயமாக இல்லை.
ஒரு கன்னத்தில் அடிப்பவனுக்கு மறு கன்னத்தைக் காட்டவும் தயாராக இருக்க வேண்டும் (புறாவைப் போல் கபடற்ற தன்மை); அதே வேளையில் அடிப்பவனிடம் அதற்கான காரணத்தைக் கேட்கவும் முன்வரவேண்டும் (சர்ப்பத்தைப் போல் வினாவுள்ளவனாய் இருக்கும் தன்மை). இப்படியாக வேதவசனங்களை balance செய்து புரிந்துகொள்ளும் அறிவு சிலருக்கு இராததால்தான், பல வசனங்களின் கருத்தையும் ஒருங்கிணைத்துப் புரிந்துகொள்ளாமல், ஒரேயொரு வசனத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, சாத்தான் இயேசுவிடம் வசனத்தைச் சொன்னதுபோல சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
சாத்தான்கூட இயேசு மற்றொரு வசனத்தைச் சொன்னதும் வசனங்களின் கருத்தை balance செய்து புரிந்துகொண்டு எதிர்கேள்வி கேட்காமல் சென்றுவிட்டான். ஆனால் என்ன சொன்னாலும் புரிந்துகொள்ள மறுக்கும் சில மனிதர்கள்தான் “தான் பிடித்த முயலுக்கு மூணே கால்” என சாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
இயேசுவின் இப்போதனைகளின்படி நடப்பது கடினமானதாகத் தோன்றலாம். ஆனால் மெய்யான அன்பு நம் உள்ளத்தில் வருகையில் இப்படியெல்லாம் செய்வது எளிதாகிவிடும்.
இவ்வுலகில் இயல்பாகவே நாம் மெய்யான அன்பைக் காட்டக்கூடியவர்கள் யாரெனக் கேட்டால், பெற்றோர், பிள்ளைகள், சகோதரர் மற்றும் சிநேகிதர் எனக் கூறிவிடுவோம்.
குறிப்பாக மற்ற எவரையும்விட நம் பிள்ளைகள்மீது விசேஷித்த அன்பை நாம் காட்டுவோம். எனவேதான் அவர்கள் நம்மைப் பகைத்தாலும் அவர்களை அத்தனை எளிதில் நாம் பகைப்பதில்லை. இவ்வளவாய் நாம் அன்புகூருகிற நம் பிள்ளைகள் நமக்கு “சத்துருவாக, பகைவராக”, நம்மைச் “சபிப்பவராக, நிந்திப்பவராக” மாறினால் நாம் என்ன செய்வோம்?
பதிலுக்கு நாமும் அவர்களைப் பகைப்போமா, அல்லது சபிப்போமா, அல்லது நிந்திப்போமா? நிச்சயம் நம்மில் அநேகர் அப்படிச் செய்யமாட்டோம் எனக் கூறலாம். இதற்குக் காரணமென்ன? மெய்யான அன்பு.
இதே மெய்யான அன்பு பிறரிடமும் உண்டானால், இயேசு சொன்னபடியே அவர்களைச் சிநேகிப்பதும் ஆசீர்வதிப்பதும் அவர்களுக்காக ஜெபிப்பதும் எளிதாகிவிடும்.
எனவேதான் “உன்னிடத்தில் அன்புகூருவதைப் போல், பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என இயேசு சொன்னார்.
நம்முடைய அன்பு பொதுவாக பாரபட்சமுடையதாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்த பாரபட்சம் கூடாது என்பதே இயேசுவின் போதனை.
பாரபட்சமான அந்த அன்பினால் தேவனிடமிருந்து நமக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. இதைத்தான் பின்வரும் வசனங்களில் இயேசு கூறினார்.
லூக்கா 6:32 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. 33 உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. 34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே.
மற்றவர்களைவிட நாம் விசேஷித்தவர்களாக இருக்கவேண்டுமெனில், மற்றவர்களின் அன்பைவிட நமது அன்பு விசேஷித்ததாக இருக்கவேண்டும். விசேஷித்த அந்த அன்புக்குத்தான் தேவனிடமிருந்து பலன் கிடைக்குமேயொழிய, சாதாரணமான அன்புக்கு தேவனிடமிருந்து பலன் கிடைப்பதில்லை.
நாம் மற்றவர்களைப் போல் பாவிகளாயிராமல், தேவனைப் போல் பரிசுத்தமாயிருக்க வேண்டுமெனில், மற்றவர்களிடம் நாம் பாரபட்சமற்ற அன்பைக் காட்டவேண்டும். அப்போது மனிதர்களிடமிருந்து அல்ல, தேவனிடமிருந்து நாம் பலனைப் பெறுவோம்.
கிரியைசெய்வதும் ஏதோ நம் கிரியை என்று வாதாடும் சகோ அன்பு அவர்களே,
எபேசியர் 2:10. ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
இப்படி கிரியை செய்ய வைப்பதும் தேவனின் செய்கையாயிருக்கிறது, இவகளை தேவன் முன்னதாக ஆயத்தம்பண்ணியிருக்கிறார்!!
அன்பு அவர்களே இதுவும் தேவனின் தயவுள்ள சித்தமே தான்!! முன்குறித்தல் தான்!!
எபேசியர் 1:12. தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.
தேவன் தான் தெரிந்துக்கொள்கிறார் என்று சொன்னாலும் எதிர்க்கிறீர்களே!!
கிரியைகளின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அன்பு அவர்களே, உன்னிடத்தில் இருப்பதை எல்லாம் விற்று விட்டு இல்லாதவனுக்கு கொடு என்று கிறிஸ்து தானே சொன்னார்!! அதை நேரடியாக ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்!! அதை எழுத்தின்படி எடுத்துக்கொள்ள கூடாதா!!?? நீதியின் கிரியை எழுத்தின்படி என்றால், பாடுகள் எழுத்தின்படி இல்லையா!!?? எல்லாவற்றையும் விட்டு விடுங்கள் என்பது எழுத்தின்படி இல்லை!!
ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு மறுகன்னத்தை காண்பி என்று சொன்ன கிறிஸ்து இயேசு அதை செய்யாதத்தற்கு நீங்கள் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்!! ஏனென்றால் உங்களை ஒருவன் அடித்தால் நீங்கள் நிச்சயமாக திருப்பு அடிக்காவிட்டாலும் திட்டுவீர்கள், இது தான் இயல்பு என்பது உங்களுக்கு தெரிந்ததால் இதை எழுதுகிறீர்கள்!! உங்கள் கிரியை யாரும் குற்றப்படுத்தக்கூடாது என்பதற்காக இதை எழுதுகிறீர்கள்!!
ஆனால் பிதா மன்னிக்க மாட்டார் என்கிற வசனம் உங்களுக்கு நித்தியத்திற்கு இருக்கும் என்கிறீர்கள்!! கிறிஸ்து இயேசுவின் ஈடுபலிக்கு பின் கிறிஸ்து நமக்க்கு பரிந்துரை செய்வதால், மத்தியஸ்தராக இருப்பதால் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்று சொன்னால் இதை சாத்தான் போல் Balance இல்லாமல் எழுதுகிறோம் என்கிறீகள்!!
ஒரே ஒரு வசனத்தை பிடித்துக்கொண்டு தான் உங்களிடம் விவாதிக்கிறோம் என்பதை பதிவுகளை முழுவதும் மீண்டும் வாசித்து விட்டு சொல்லுங்கள்!! ஒரே விஷயத்திற்காக தான் வசனங்களை எடுத்து சொல்லுகிறோம்!! எப்படி நீங்கள் மனிதர்களின் கிரியை மேன்மைப்படுத்தி சொல்லுகிறீர்களோ அதை விட ஒரு படி மேலே தேவனின் கிருபையை எண்ணி நாங்கள் மேன்மை பாராட்டுகிறோம்!! கிரியையா கிருபையா என்றால் கிருபையே என்று வேதம் சொல்லும் பல வசனங்கள் உங்களுக்கு காண்பித்து அதற்கு பல வசனங்களுக்கு அர்த்தம் சொல்லாமல் நீங்கள் தான் பிடித்த பிடிவாதத்தில் நிற்கிறீர்கள்!! ஆனால் இதுவும் தேவனின் சித்தமே என்று நான் சொல்லுவேன்!! நியாயத்தீர்ப்புக்கு முன் இரக்கம் மேன்மைப்பாராட்டும் என்கிற வசனத்தில் கூட மனிதர்களின் இரக்கம் தான் என்று சொல்லும் அளவிற்கு நீங்கள் மனித கிரியை நம்பியிருக்கிறீர்கள்!!
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமாக இருக்கிறார் என்கிற ஒரே வசனத்தை கூட தேவனால் ஆகும் என்று நினைக்காமல், அதிலும் மனிதர்களின் கிரியைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், "சித்தம் தான்.......ஆனால்" என்கிற கண்டிஷன் போடுகிறீர்கள்!! வேதத்தை இதற்கு முன் வாசிக்காத ஒருவன் அதை முதல் முறை வாசித்தால் அதில் எந்த தான்.......ஆனால் என்று எல்லாம் சொல்ல மாட்டான்!! இப்படி வசனத்துடன் "தான்.............ஆனால்" போட்டு சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்!!
மனுஷரால் கூடாதது ஆனால் தேவனால் கூடும் என்றாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்!! மாம்சமான யாவரும் (ஒருவர் விடாமல்) தேவனின் இரட்சிப்பை காண்பார்கள் என்றே வேதம் சொல்லுகிறது, இதையும் திரித்து விடுகிறீர்கள்!! நற்செய்தி என்கிற பெயரில் மனிதனின் கிரியை, 2ம் மரணம் ஆகியவற்றை போதிக்கிறீர்கள்!! இது தான் நற்செய்தியா!! "எல்லாரும் பாவம் செய்யலாம்" என்று நாங்கள் சொல்லுவதாகவும் சில இடங்களில் சொல்லியிருக்கிறீகள்!! இப்படி சொல்லாததை சொல்லுவதும், எல்லாருக்கும் இரட்சிப்பு என்று சொல்லுவதும் இதுவும் ஒன்று என்று நீங்களாகவே நினைப்பது அபத்தம்!! இலவசமாக எல்லாருக்கும் இரட்சிப்பு கிடைப்பது "நீதியின் கிரியை" நம்பியிருப்போருக்கு ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனென்றால் நான் கஷ்டப்பட்டு கிரியை செய்கிறேன், பாவியாக (கிரியை செய்வோரின் நியாயத்தீர்ப்பு) அவர்களுக்கு என்னை போலவே இரட்சிப்பா என்பது தான் அவர்கள் நினைக்கும் உண்மையான நினைப்பு!! தேவன் எல்லாருக்கும் இலவசமாக தரும் இரட்சிப்பை கண்டு இன்று தங்கள் கிரியை நம்புவோர், நற்செய்தி சொல்லுகிறோம் என்று மரணத்தை போதிப்பவர்களுக்கு "தாங்க முடியவில்லை"!! அது எப்படி எனக்கும் அவனுக்கும் ஒரே நிலை என்கிற நினைப்பு!! இது தான் உண்மையான அன்பா!! நான் அப்படி நினைக்கவில்லை, ஆனால் வசனம் தான் அப்படி சொல்லுகிறது என்று வசனத்தின் மேல் போட்டு விடுகிறீர்கள்!! உங்கள் எண்ணங்களை வசனத்தின் மேல் தினிக்கிறீகள்!! தேவனை அன்பற்றவர் போல் சித்தரிக்கிறீகளே!! இது நியாயமா!!
தேவன் அன்பானவர் என்று நாங்கள் சொல்லுகிறோம், ஏனென்றால் இலவசமான அவரின் இரட்சிப்பு எல்லாருக்கும் சென்று அடையும் என்று வசனம் சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறோம்!! மன்னிக்கமாட்டார், இரக்கமில்லா இரண்டாம் மரணத்தை தருவார் என்கிற "சுவிசேஷத்தை" சொல்லுவதாக சொல்லுகிறீர்கள்!! தேவனை இரக்கமற்றவர் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்!! கேட்டால் வசனம் அப்படி தானே சொலுகிறது என்று ஒரு சில வசனங்களின் உண்மையை கிரகித்துக்கொள்ளாமல் போதிக்கிறீர்கள்!! தேவன் அன்பாகவே இருக்கிறார் என்பதை வேதம் போதிக்கிறது!!
2 தீமோத்தேயு 1:9 வசனத்திற்கு இன்னும் நீங்கள் விளக்கம் தரவில்லை!!??