//பின்னால் சம்பவிக்கப்போகிற எல்லாவிஷயங்களயும் தேவனால் அறியமுடியும், அதன்படிதான் வேதாகம தீர்க்கதரிசனங்கள் கூறப்பட்டுள்ள என்பதை எப்போதுமே நான் மறுக்கவில்லை.
ஆனால் பின்னால் சம்பவிக்கப்போகிற எல்லாவிஷயங்களையும் தேவன் அறிவதில்லை என்பதுதான் நான் சொல்வது.
அறிய “முடியும்” என்பதற்கும், அறிய “வில்லை” என்பதற்குமுள்ள வித்தியாசத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
God has the power to know all future things which are going to happen, but He uses that power only in certain things which he considers or wishes to know. In case of all other things, he takes decisions only after the things are happened. In particular, God doesn't use His power to know the things what a man going to do according to his free-will, unless it is absolutely necessary to know them.
உதாரணமாக, சவுலை ராஜாவாகத் தெரிந்தெடுக்கையில், அவர் தவறு செய்வாரா என்பதை அறிய தேவன் முயலவில்லை (He did not attempt). எனவே சவுல் தவறு செய்வார் என்பதை தேவன் அறியவில்லை. அதனால்தான், சவுல் தவறு செய்தபோது சாமுவேல் இவ்வாறு சொன்னார்.
சாமுவேலின் இக்கூற்றிலிருந்து என்ன அறிகிறோம்? சவுல் தேவனின் கட்டளையைக் கைக்கொண்டால், அவருடைய ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் என்பதுதான் தேவனின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும் என அறிகிறோம். இப்படியிருக்க, சவுல் தவறுசெய்யப்போவது தேவனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால், சவுலின் ராஜ்யத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் எனும் எண்ணம் தேவனுக்கு இருந்திருக்காதே!//
//யூதாஸ் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். யூதாஸ் என்ன செய்யப்போகிறான் என்பதை அறிந்த இயேசு, அவன் செய்யப்போகிற செயலுக்கு எதிராக ஏதாவது சொன்னாரா? செய்வதைச் சீக்கிரமாய் செய் என்றுதானே சொன்னார்? நடக்கப்போகிற ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டு, தேவனோ இயேசுவோ நாடகமாடுவதில்லை//
யூதாஸ் காட்டிக்கொடுத்தே ஆக வேண்டும் என்பதற்காகவே பிறப்பிக்கப்பட்டவன், அவனை மாற்ற ஏன் முயலவேண்டும்? அவன் அதைச் செய்தால்தானே தேவ சித்தம் நிறைவேறும்? கடைசி நேரத்தில் யூதாஸ் தானாக மனம் மாறி(மனித சித்தம்) ஒரு வேளை மத்தேயு காட்டிகொடுத்திருக்கலாமோ. அந்தப்பட்சம் நாம் யூதாஸ் எழுதிய சுவிசேஷம் தான் படித்திருப்போம்.
தேவனுக்கு பின்னர் நடக்கப்போகும் காரியங்கள அறிய முடியுமாம் ஆனால் ஒரு சில காரியங்களைத்தவிர மற்றவற்றில் அவர் அறிய முயலுவதில்லையாம்.... நல்ல கற்பனைத்திறன்.
எபேசியர் 1:4 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
எபிரெயர் 4:3 விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்
சங்கீதம் 139:2 என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.
சங்கீதம் 139:4 என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
ஏசாயா 66:18 நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.
மத்தேயு 6:8 அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
லூக்கா 16:15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.
அப்போஸ்தலர் 1:24 எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக,
எபிரெயர் 4:13 அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
//God has the power to know all future things which are going to happen, but He uses that power only in certain things which he considers or wishes to know. In case of all other things, he takes decisions only after the things are happened. In particular, God doesn't use His power to know the things what a man going to do according to his free-will, unless it is absolutely necessary to know them.//
தேவன் எதிர்காலத்தை அறியும் வல்லமையுள்ளவர் என்றாலும் குறிப்பிட்ட காரியங்களைத்தவிர மற்றவற்றை அறிவதற்கு அவர் எத்தனப்படுவதில்லையாம், மற்றவற்றில் அந்தக் காரியங்கள் நடந்தபிறகே அவர் அது குறித்து முடிவெடுக்கிறாராம். என்ன அருமையான கண்டுபிடிப்பு. ஆதாரமாக ஒரு வசனம் கூட இல்லை என்பதே சத்தியம். சத்தியமில்லாத எல்லாமே பொய்யே.
அவ்வாறு இருக்கும் பட்சம் தேவன் உலகில் ஒவ்வொரு மனிதன் ஒவ்வொரு வினாடியும் எடுக்கும் முடிவுகளைச் சார்ந்துதான் தன்னுடைய சித்தங்களை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.
ஆதாம் கீழ்ப்படியாமல் போகப்போவது அவருக்குத் தெரியாதாம் அதனால்தான் மீறுதல் நடந்த பின்னர் மனிதனை மீட்க 'அவர் உன் தலையை நசுக்குவார்' என்ற திட்டத்தை அறிவித்தாராம். ஆனால் வேதம் என்ன சொல்கிறது?
I பேதுரு 1:20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.
உலகத்தோற்றத்துக்கு முன்பே கிறிஸ்துவை மாத்திரமல்ல அவருடைய 'மணவாட்டி'யையும் தெரிந்து கொண்டார்
எபேசியர் 1:4 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
வேதப்புத்தகத்தில் எழுதப்பட்டவை நிறைவேறியே தீரும். கடைசிகாலத்தில் அநேகர் வஞ்சிக்கப்படுவார்கள் என்று தேவன் உத்தேசமாக எழுதவில்லை. நடக்கப்போவதை 100% உத்தரவாதத்துடன் தான் எழுதினார்.
கிட்டத்தட்ட 1900 வருடங்கள் சிதறிப்போயிருந்த இஸ்ரேலை மீண்டும் துளிர்க்கப்பண்ணியவர் தேவன். இது ஏதோ தற்செயலாக நடக்கவில்லை. அதே போலத்தான் உலகில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும். எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகையால் தேவனுடைய செயல் இல்லாமல் எதுவும் நடக்க வாய்ப்பில்லை.
பிரசங்கி3:10. மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்.
11. அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.
ஆனால் சகோ.அன்பு அதைக் கண்டுபிடித்துவிட்டார்.
பிரசங்கி5:19. தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன்பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.
2. அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும் கொடிய நோயுமானது.
10. இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது; தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் கூடாது.
ஏதோ அம்மா அப்பா பார்த்து வைப்பதல்ல பெயர்...
7:13. தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்?
11:5. ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.
நல்லவேளை நோவா 'தற்செயலாக' நீதிமானாக இருந்தபடியால் அவன் குடும்பத்தைக் காப்பாற்றி மீண்டும் மனுகுலம் வளர ஏதுவாக இருந்தது. அவனும் கெட்டுப்போயிருந்தால் கதை ஜலப்பிரளயத்தோடு முடிந்திருக்கும்.
தனிமனித முடிவுகளைச் சார்ந்து தேவன் தன் திட்டங்களை மாற்றிக்கொண்டே இருப்பாராம்.....
ரூம் போட்டு யோசிப்பார்கள் போலுள்ளது.
இது சகோதரர் அன்பு அவர்களுக்காக பதிக்கப்பட்டதல்ல. அவருடைய வாதத்துக்கு ஒரு வசனம் கூட அவரால் காண்பிக்க இயலாது. மனிதன் செய்யவேண்டியவைகளை மட்டுமே ஆராய்வதால் தேவனுடைய திட்டங்கள் குறித்து அவரால் யூகிக்க மட்டுமே இயலும்.
ஒரு நாளைக்கு 200க்கும் மேற்பட்டவர்கள் இத்தளத்துக்கு வருகைபுரிகிறார்கள். அவர்களுக்கு பிரயோஜனப்படும் என்பதால் இந்தப்பதிவு.
வெளி 22:11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
அநியாயஞ்செய்கிறவன் நீதிசெய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் பரிசுத்தமாகட்டும் என்று இன்று ஏறெடுக்கப்படுகிற தேவனுக்குச் சித்தமில்லாத போலி ஜெபங்கள் ஏன் கேட்கப்படுவதில்லை?
ஆதாம் கீழ்ப்படியாமல் போகப்போவது அவருக்குத் தெரியாதாம் அதனால்தான் மீறுதல் நடந்த பின்னர் மனிதனை மீட்க 'அவர் உன் தலையை நசுக்குவார்' என்ற திட்டத்தை அறிவித்தாராம். ஆனால் வேதம் என்ன சொல்கிறது?
I பேதுரு 1:20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.
உலகத்தோற்றத்துக்கு முன்பே கிறிஸ்துவை மாத்திரமல்ல அவருடைய 'மணவாட்டி'யையும் தெரிந்து கொண்டார்
எபேசியர் 1:4 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
வேதப்புத்தகத்தில் எழுதப்பட்டவை நிறைவேறியே தீரும். கடைசிகாலத்தில் அநேகர் வஞ்சிக்கப்படுவார்கள் என்று தேவன் உத்தேசமாக எழுதவில்லை. நடக்கப்போவதை 100% உத்தரவாதத்துடன் தான் எழுதினார்.
எவ்வளவு பெரிய அபத்தத்தை பதித்துவிட்டு மனித சித்தத்தை முக்கியப்படுத்தி தேவனை ஆச்சரியப்படுபவராகவும் அவரது வல்லமையைக் குறைகூறுவதுபோலவும் பதித்துவிட்டு விவாதத்தை வேறு திசைக்குத் திருப்பினால் போதாது. நடந்தது, நடப்பது, நடக்கப்போவது ஒவ்வொன்றும் துல்லியமாக, இம்மியளவும் பிசகாமல் தேவனுடைய சித்தப்படியே நடக்கிறது. எனவேதான் அவர் சர்வவல்லதேவன்.
சங்கீதம் 139:4 என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
நான் சொல்லுவது என்னவென்பதை கூட தேவனே நியமித்திருக்கிறார்!!
மத்தேயு 10:19 அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
நாம் பேசுவது கூட நம் சிந்தையில் கிடையாதாம், நாம் என்ன பேச வேண்டுமோ அது அப்பவே சுட சுட நமக்கு அருளப்படுகிறதாம்!!
ஆக நாம் பேசுவது கூட நம் சிந்தையில்லையாம்!! ஆனால் தேவனின் மகுத்துவத்தை தெரியாதவர்களுக்கு இவை எல்லாம் நம் யோசனைகளாம்!! அதாவது அவர்கள் பேசுவது அவர்களின் புத்திசாலித்தனமோ அல்லது அவர்களின் சிந்தையினாலே என்கிறார்கள்!!
யோவான் 12:49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
இயேசு கிறிஸ்துவே அதை அங்கிகரிக்கிறார்!! அதாவது அவர் சுயமாக உபதேசம் செய்யாமல், அவரின் பிதா என்ன கட்டளையிட்டிருக்கிறாரோ, அவைகளையே அவர் பேசுகிறாராம்!! பரலோகத்திலிருந்து இறங்கிய கிறிஸ்து இயேசுவிற்கு தானாக தன் சிந்தையில் பேச தெரியவில்லையாம்!!
ரோமர் 9:21 மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
அதிகாரம் இல்லை என்கிறார்கள் மனித சித்த கோட்பாடுடையவர்கள்!! அப்படி அதிகாரம் இல்லை என்று நினைத்து தேவனிடத்தில் கேள்வி கேட்கிறான் யோபு, அதற்கு தேவன் சொல்லியதை யோபு 38ம் அதிகாரத்தில் வாசிக்க முடியும்!! யோபுவை போலவே இன்று மனித சித்தத்தை மேன்மைப்பாராட்டுபவர்கள் வாய் அடைத்து போவார்கள்!!
மனித சித்தத்தில் தான் ஆதாம் பாவம் செய்வான் என்றும் அவன் பாவம் செய்ய போவது தேவனுக்கு தெரியாது என்பது அபத்தமான கூற்று!! உலக தோற்ற முதல் இயேசு கிறிஸ்துவை அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக வைத்திருப்பதே, ஆதாம் பாவத்தில் விழுவான் என்பதை அறிந்து தானே!! அப்படி அவர் ஒன்றும் தெரியாதவராக இருந்து, மனித சித்தத்தின் விளைவுகளை வைத்து அவர் தன் முடிவுகளை எடுக்கிறார் என்றால் ஒன்று அவர் தேவனாக இருக்க முடியாது, இரண்டு இந்த உலகமே ஒரு குழப்பத்தில் இருக்கும்!!
அவருக்கு தெரியாமல் எதாகிலும் நடக்குமா?? இல்லை. இல்லவே இல்லை!!
ஏசாயா 48:3 பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.
//பெரியன்ஸ் இத்தனை ஆச்சரியப்படுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.
நாம் பேசுவது சிந்திப்பது எதுவுமே நம் கையில் இல்லை, எல்லாமே தேவசித்தம்தான் என்கிறார் பெரியன்ஸ். அப்படியானால் நாம் ஜெபிப்பது மட்டும் நம் கையிலா உள்ளது? நம் சுயசிந்தனைப்படியா ஜெபிக்கிறோம்?
நாம் பேசவேண்டியதை அருளுகிற தேவன் தானே நாம் ஜெபிக்கவேண்டியதையும் அருளுகிறார்? பின்னர் அதை எப்படி தேவசித்தப்படியான ஜெபம், மனித சித்தப்படியான ஜெபம் என பெரியன்ஸ் பிரித்துப் பார்க்கிறார்?
ஆதாம் தேவகட்டளையை மீறுவது முதல் நாம் செய்கிற அத்தனை அட்டூழியங்களும் தேவசித்தமே என்கிறார் பெரியன்ஸ். ஆதாரம்://
பெரேயன்ஸ் ஆச்சரியப்படுவதும் தேவ சித்தம் தான், பெரேயன்ஸ் வெளிப்படுத்தும் சுய சித்தத்தின் கிரியை கிடையாது என்பதை அன்பு அவர்களுக்கு திரும்பவம் சொல்லும் நிலையில் வைத்திருக்கிறார்!!
என் வாயிலிருந்து வார்த்தை பிறக்கும் முன்னமே அதை அறிந்திருக்கிறார் என்பதே நான் என்ன ஜெபிக்கிறேனோ அது தேவனின் சித்தமே!! அன்பு அவர்கள் தேவ சித்தம் இல்லாமல் தான் இத்துனை காலம் ஜெபிக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் போல்!!
தேவ சித்தம் ஒன்று கிடையாது எல்லாம் நாம் சுயமாகவே யோசித்து, தேவனுக்கு அறியாமல் செய்து அவரை தவிக்க விட்டு, பார்க்கலாம் அவர் என்ன செய்கிறார் என்கிற அளவிற்கு அன்பு இருக்கிறார் போல்!! தேவனை விட மனிதன் மேன்மையானவன் என்கிற அவரின் இந்த சிந்தையும் தேவன் அனுமதித்ததே தான்!!
//மேலேயுள்ள வசனங்களில் சொல்லப்பட்டுள்ள அட்டூழியங்கள் அனைத்தும் தேவசித்தமே என பெரியன்ஸ் அழுத்தமாகச் சொல்கிறார். ஆனால் பெரியன்ஸ் மட்டும் தேவசித்தப்படி அட்டூழியங்கள் செய்யமாட்டாராம். அவர் அட்டூழியங்கள் செய்பவரை விட்டு விலகுவாராம், அதுவும் தேவசித்தம்தானாம்.//
நீங்கள் இப்படி என்னை நக்கல் செய்வதும் தேவனின் சித்தமே, அதினால் நான் இன்னும் வசனங்களை தேடவும் உங்களுக்கு பதில் தருவதும் தேவ சித்தமே!! நானோ, நீங்களோ, அல்லது இன்னும் ஒருத்தரோ அல்லது வேறு யாரோ, யாராகிலும் தேவனின் திட்டத்தில் உள்ளவர்கள் இதை செயதே ஆக வேண்டியது மாத்திரம் உண்மை!! பாவம் யூதாஸ், அப்போஸ்தலனாக இருந்தும் காட்டி கொடுத்தானே, அது அவனின் சித்தம் என்றே அன்பு போதிக்கிறார் போல்!!
//என்ன தலைசுற்றுகிறதா? உங்கள் தலைசுற்றுவதும் தேவசித்தம்தான். உங்கள் தலைசுற்றுக்கு என்ன நிவாரணம் என யோசித்து கலங்க வேண்டாம். நாம் என்ன பேசவேண்டும் என்பதை சுடச் சுட அருளுகிற தேவன், நம் தலை சுற்றுக்கான நிவாரணத்தையும் சுடச் சுட அருளுவார்.//
அதில் ஒரு சந்தேகமும் இல்லை!! கிறிஸ்து அப்படி சொல்லுவதை நீங்கள் நம்பகூடாது என்பதும் தேவ சித்தமே!! அதை தான் அப்போஸ்தலர்களிடத்திலும் சொல்லுகிறார்!!
யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
அதாவது அப்போஸ்தலர்களுக்கு உபத்திரவம் உண்டாம், அதை அவர்களின் சுய சித்தத்தின்படி போக்கி கொள்ள வேண்டியது தானே!! ஆனால் கிறிஸ்து இயேசு சொல்லுகிறார், உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் (இயேசு கிறிஸ்து) உலகத்தை ஜெயித்தாராம்!! மனித சித்தம் பேசுபவர்களுக்கு தலை சுற்றுகிறதா என்பதெல்லாம் எனக்கு தெரியாது, ஆனால் இது போன்ற விஷயங்கள் (தேவ சித்தம்) அன்பு அவர்களுக்கு புரியாததே தேவ சித்தம் தான்!!
//இப்படி நான் எழுதுவதால் வேதவசனத்தை நான் பரியாசம் செய்வதாக யாரும் கருதவேண்டாம். வேதவசனத்தை பெரியன்ஸ் தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவைத்தான் கூறியுள்ளேன்.//
இப்பவும் நீங்கள் உங்களை காத்துக்கொள்ள தான் முயற்சிக்கிறீர்கள்!! தேவன் அருளிய வேதவசனத்தை அவர் இன்றி அன்பு அவர்களே மிகவும் சரியாக புரிந்துக்கொண்டதாக் நினைக்கிறார்!!
ஆதாம் பாவம் செய்வானோ செய்ய மாட்டானோ என்று தேவன் காத்துக்கொண்டிருந்தார், எதுக்கும் இருக்கட்டும் என்று உலக தோற்ற முதல் இயேசு கிறிஸ்துவை தையாராக வைத்திருந்தார் என்கிற போதனை இவரை பொறுத்தவரை மிகவும் சரியானதாக இருக்கும் போல்!!
ஒரு வசனத்தை புரியச்செய்வதும் அவரே, அதே வசனத்தை வைத்து இடறச்செய்வதும் அவரே!! அன்பு அவர்கள் தன் சொந்த சித்தத்தினால் (!!) (இப்படி மனுஷ சித்தத்தம் என்கிற வார்த்தையை கொண்ட வசனம் இருக்கிறதா என்பதை இனி தான் தேடிப்பார்க்க வேண்டும்) வசனத்தை புரிந்துக்கொள்கிறார் என்று நினைக்க வேண்டாம்!!
லூக்கா 8:10 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
அன்பு அவர்களின் தெளிவான போதனையின்படி சிலர் மாத்திரம் தன் சொந்த புத்தியை கொண்டு இரகசியங்களை அறிந்துக்கொள்கிறார்கள், தேவன் அவர்களுக்க்கு அருளுகிறதாவது ஒன்னாவது!! அப்படியே மற்றவர்கள் அதை கேட்டும் வேண்டுமென்றே புரிந்துக்கொள்ளாமல் இருக்கிறார்களாம்!! இது கிரியையின் போதனைக்கு அடுத்த போதனை, அதாவது மனுஷ சித்தம் தேவ சித்தத்தை காட்டிலும் பயங்கர பவர்ஃபுலாக்கும்!!
1 பேதுரு 2:8. அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.
இப்படி திருவசனத்திற்கும் தன் சுய முற்சியிலே கீழ்ப்படியாமல் போகிறார்கள் அவ்வுளவு தான்!! தேவனாவது நியமிக்கிறதாவது!! இது அன்பு அவர்களின் மனித சித்த போதனையாக்கும்!!
அப்படியே பொய்யை விசுவாசிக்கும்படியாக தேவன் ஒன்றையும் செய்வதில்லை, அது மனிதர்களே தன் சுய சித்தத்தினாலும் சுய சிந்தையினாலுமே எல்லாவற்றையும் அறிந்துக்கொண்டு அவர்களாகவே இடறுகிறார்கள்!! இது அன்பு அவர்களின் மனித சித்த போதனையாக்கும்!!
//நடப்பது எல்லாம் தேவசித்தமே, தேவசித்தம் மட்டுந்தான் என்பது கோவைபெரியன்ஸின் இரட்டை நண்பர்களின் அசைக்கமுடியாத (?) நம்பிக்கை. பின்னர் எப்படி தேவசித்தத்திற்கு விரோதமாக சில்சாம் ஜெபிக்க முடியும்?//
அன்பு அவர்கள் இத்துனை கேவலமாக புரிந்துக்கொள்வார் என்பதை பார்த்தால் சற்று கவலையாக தான் இருக்கிறது!! ஆனாலும் நான் ஒன்றும் செய்வதற்கு இல்லை, அவர் இப்படி இருப்பதே தேவ சித்தம்!!
அய்யா அன்பு அவர்களே, தேவன் இப்படி தான் ஜெபிக்க வேண்டும் என்கிற தன் சித்தத்தை எழுதி வைத்திருக்கிறார், ஆனால் அதை சில்சாம் போன்ற கூட்டத்தாருக்கு விளங்க கூடாதபடி, அதற்கு விரோதமாக ஜெபிக்க செய்வதும் அதே தேவன் தான் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ளாததும் தேவ சித்தமே!!
தீமையின் வழியில் அனுமதிப்பதும் தேவனின் சித்தம் தான் என்பதை அன்பு புரிந்துக்கொள்ளவில்லை!! தேவன் நன்மையையும் தீமையையும் படைத்தார் என்றால் அவரின் சித்தத்தில் தீமையும் இருப்பதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்!! யூதாஸ் ஏதோ தன் சித்தத்தினால் இயேசு கிறிஸ்துவை காட்டி கொடுத்தான் என்பது அன்பு அவர்களின் போதனையாக இருக்கலாம், ஆனால் அவன் காட்டி கொடுத்தது வேதத்தில் அவன் பிறக்கும் முன்பே எழுதியிருந்ததினால் தான்!!
//ஒருவேளை வழக்கம்போல் பெரியன்ஸ் தனது கருத்தை மாற்றிக்கொண்டுள்ளாரோ?//
நீங்கள் இது வரையில் உங்களின் எந்த நம்பிக்கையிலும் மாறவில்லை என்று சொல்ல தையாரா!! அல்லது நீங்கள் மாற்றம் அடைந்தது எல்லாம் அனைவருக்கும் தெரியப்படுத்தியிருக்கிறீகளா!! நான் என் கருத்துக்களில் மாற்றம் கொள்வது தேவ சித்தமே!! அவர் என்னை எப்படி நடத்துகிறாரோ, அப்படி தான் நடப்பேன்!! அவர் எத்துனை முறை புடமிட்டு மெறுக்கேற்றினாலும் ஒவ்வொரு முறையும் புதிய ஜொலிப்பு தான் வரும்!! ஆனால் அன்பு அவர்கள் தானாகவே சுய யோசனையினாலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டதாக நினைக்கிறார்!! ஆனால் அவருக்கு இப்படி பட்ட ஒரு நினைப்பை தருவதே தேவன் தான் என்பதை அவர் அறியாதிருக்கிறார்!! அப்படி ஒவ்வொரு முறையும் புடமிட்டு மாற்றும்போது பழைய நிலையில் இருந்ததும் தெரிந்து தானே இருக்கும்!! என்னமோ அன்பு அவர்கள் அவருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தன் சுய சித்தத்தினால் ஒரே விசுவாசத்தில் இது வரை நிலைத்திருக்கிறார் போல்!!
சவுலை கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக அனுமதித்ததும் தேவனே, அவனை பவுலாக மாற்றியாவரும் அவரே ஆனால் இதை அன்பு புரிந்துக்கொள்ள கூடாது அதற்கு மாறாக சவுல் தன் சுயசித்தத்தினால் தான் பவுலாக மாறினான் என்பதே அன்பு புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதும் தேவ சித்தமே!!
அய்யா அன்பு அவர்களே, மோசேயிடம் எகிப்ப்த்தை விட்டு வெளியேற பார்வோனிடத்தில் சொல்ல சொன்னதும் தேவனே, அந்த பார்வோன் அவர்களை வெளியிடாமல் அவன் இருதயத்தை கடினப்படுத்தியதும் தேவனே!! இது எல்லாம் தேவனின் சித்தம் என்று நீங்கள் புரியக்கூடாதது என்பதும் தேவ சித்தமே!! நன்மை செய்கிறார்கள் என்பதும் தேவனின் சித்தமே, தீமை செய்கிறார்கள் என்றாலும் அது தேவன் அனுமதித்தது தான்!!
மத்தேயு 6:25 ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
மத்தேயு 6:31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.
லூக்கா 12:22 பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 12:29 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
சாபிடுகிற விஷயம், உடுத்துகிற விஷயம், இப்படி ஏதிலும் நீங்கள் கவலைப்படவேண்டாம் என்றால் என்னவென்று அன்பு அவர்களுக்கு புரியாமல் இருப்பதில் எந்த ஆச்சரியமும் கிடையாது!! நீங்கள் கவலைப்படாதீர்கள் என்றால் நீங்கள் நினைப்பதினால் அல்ல, தேவன் அருளுகிறதினால் தான் இவை எல்லாம் சாத்தியம் என்பதை தான் சீஷர்களிடத்தில் சொல்லுகிறார்!!
சர்ப்பத்துக்கு பதிவு இல்லாட்டி இப்படி தேவ சித்தம் கூட ஒரு தமாஷ் என்று தலைப்பு வைத்து எழுதுவதும் தேவ சித்தம் தான்!!
//“சவுலே, சவுலே, நீ இதுவரை என்னை தேவசித்தப்படியே துன்பப்படுத்தி வந்தாய்; இனிமேல் உன் விஷயத்தில் தேவசித்தம் மாறிவிட்டது. ஆம், இனி எனக்காக நீ துன்பப்படப்போகிறாய்; இதுதான் இனி உன் விஷயத்தில் தேவசித்தம்” என்றல்லவா இயேசு சொல்லியிருக்க வேண்டும்?//
சங்கீதம் 139:8 நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
தேவன் எல்லாவற்றையும் அறிந்தவர், எல்லாவற்றையும் பார்க்க குடியவர் என்பதில் அன்புக்கு வியப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்!! கேட்டால் ஆமா, எல்லாம் அறிந்தவர் தான் ஆனாலும் அறியாதவர் போல் இருக்கிறவர் என்பார் அன்பு!! ஏனென்றால் ஆதாம் எங்கே இருக்கிறானென்று தேவனுக்கு பாவம் தெரியவில்லை என்று தான் நினைக்கிறார் அன்பு!! பின்ன வசனம் அப்படி தானே சொல்லுகிறது:
ஆதியாகமம் 3:8. பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள். 9. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
ஒரு வேளை தாவீது அப்படி ஒளிந்துக்கொண்டிருந்தால் தேவன் கண்டு பிடித்திருப்பார் ஆதாம் ஒளிந்துக்கொண்டதினால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தான் அன்பு போதிக்கிறாரோ என்னமோ!!
சவுல் தேவ சித்தத்தின்படி நடவாமல் தன் சித்தத்தின்படி நடந்திருந்தால் அவன் கேட்டிருக்க வேண்டிய முதல் கேள்வியே, நான் (சவுல்) தான் ஒழுங்காக நியாயப்பிராமன "கிரியையின்" படி தானே வாழ்கிறேன், பிறகு ஏன் என்னை குருடாக்கியிருக்கீற்கள்?
சவுல் பவுலாக மாற வேண்டும் என்பது தேவனின் சித்தம் இல்லாமல் இருந்திருந்தால், தேவன் அனனியாவிடம் இப்படி சொல்லியிருக்கவும் மாட்டார்,
அப்போஸ்தலர் 9:15 அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். 16. அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.
எதை பவுலிடம் சொல்ல வேண்டும், எதை சொல்ல வேண்டியது இல்லை என்பதை கூட அன்பு அவர்களே முடிவெடுப்பார் போல்!!
பவுலிடம் சொல்லாமலே இது தேவனின் சித்தம் தான் என்பதை பவுலுக்கு புரியவைத்திருக்கிறார்!! அனனியாவிடம் சொன்னது போலவே பவுல் எத்துனை பாடுபடவேண்டுமென்பதை பவுலுக்கு காண்பித்தார்!! அன்பு அவர்களுக்கு தான் அதை புரியவைக்கவில்லை, தேவன் அன்புக்கு புரியவைக்கவில்லை!!
//எனது செயல் தேவசித்தப்படியே இருக்கையில், அதற்காக ஏன் பெரியன்ஸ் கவலைப்படுகிறார்? ஒருவேளை தேவசித்தம் இவ்வளவு கேவலமாக என்னை நடக்க வைத்துவிட்டது எனக் கவலைப்படுகிறாரா?//
நான் கவலைப்படுவதும் தேவ சித்தம் தான்!!
//எல்லாருக்கும் நித்திய ஜீவன் அல்ல. ஆதாரம்://
1 தீமோத்தேயு 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
தேவ சித்தம் ஒன்றும் இல்லை என்று போதிக்கும் உங்களுக்கு இந்த வசனமும் அப்படியே தான்!! ஏனென்றால் இந்த விஷயம் ஏற்ற காலத்தில் நீங்களும் புரிந்துக்கொள்வீர்கள், புரியவைக்கப்படுவீர்கள்!! அது வரையில் தேவன் உங்களை எப்படி நடத்துகிறாரோ, அப்படியே நீங்கள் நடந்துக்கொள்ளுங்கள்!! பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தின தேவன் உங்கள் இருதயத்தையும் அப்படியே வைத்திருக்கிறார், அவ்வளவே!!
//“அறிந்திருக்கிறார்” என வசனம் சொல்வதை “நியமித்திருக்கிறார்” என பெரியன்ஸ் புரட்டியுள்ளார். “அறிவது” வேறு, “நியமிப்பது” வேறு.//
என் வாயில் சொல் பிறக்கும் முன்னமே தேவன் நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை அறிந்திருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்!! நீங்கள் வேதத்தை உங்கள் கிரியையின் போதனையின்படி ஆறாய்ந்து பார்ப்பதினால் அப்படியே தான் உங்களுக்கு புரியும்!! அறிவது என்று இங்கே உபயோகப்படுத்தப்பட்ட எபிரேய வார்த்தைக்கு "INSTRUCTION" என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது!! உங்கள் மனித சித்தத்தினால் வேண்டுமென்றால் போய் தேடிப்பாருங்கள்!!
எல்லாரையும் இரட்சிக்க கிறிஸ்துவின் பலியினால் முடியாத காரியம் என்பதை விட ஒரு பெரிய வேத புரட்டல் இருக்க முடியுமா!! இதை சொல்லுவோருடன் கைக்கோர்த்திருப்பதும் உங்களுக்கு நியமிக்கப்பட்டதே!!
மத்தேயு 12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அன்பு மாதிரியே கேள்வி கேட்கவேண்டுமென்றால், கணக்கொப்புவிக்க வேண்டும் என்று தானே உள்ளதே தவிர அன்பு கேள்வி எழுப்பியது போல் தேவன் மனிதர்களிடத்தில் கணக்கு கேட்பதாகவா இருக்கிறது!!
அன்பு அவர்களே இங்கே கணக்கு ஒப்புவிப்பது என்கிற மொழிப்பெயர்ப்பின் மூல வார்த்தையை போய் பாருங்கள், பிறகு உங்கள் புரிந்துக்கொள்ளுதலை குறித்து என்னை வேதத்தை புரட்டுவதாக எழுதுங்கள்!! "லோகோஸ்" என்கிற வார்த்தை தான் அங்கே இருக்கிறது!! லோகோஸ் என்றால் வார்த்தை, அவ்வளவே, கணக்கொப்புவிப்பது கிடையாது, தெரியுமா!!?? கேள்விகள் கேட்டே எல்லாரையும் மடக்கி பெயர் எடுக்கும் எண்ணத்தை விட்டு உங்கள் கிரியைகளை கவணியுங்கள்!! உங்களுக்கு அப்படி இருப்பது தான் நியமிக்கப்பட்டிருக்கிறது, அவர் புரிந்துக்கொள்ளுதலை கொடுக்கும் போது புரிந்துக்கொள்ளுங்கள்!!
//ஒருவேளை “தேவனே, நீர்தானே என் வாயில் வீணான வார்த்தைகளை நியமித்து பேச வைத்தீர், எனது வார்த்தைகளுக்கு நீர்தான் பொறுப்பு” எனப் பெரியன்ஸ் சொல்வாரோ?//
வசனத்தை ஒழுங்காக படித்து பிறகு குற்றம் சுமத்தலாம்!! தேவன் நீங்கள் பேசிய வார்த்தைகளுக்கு கணக்கொப்புவிக்க சொல்லுகிறார் என்று வசனத்தில் இல்லாததை எழுதி வேதத்தை புரட்டாதீர்கள்!!
//“அறிந்திருக்கிறார்” என வசனம் சொல்வதை “நியமித்திருக்கிறார்” என பெரியன்ஸ் புரட்டியுள்ளார். “அறிவது” வேறு, “நியமிப்பது” வேறு.//
பெரிய்ய்ய கண்டுபிடிப்புதான் போங்கள்...
ஒன்றை நியமிக்காமல் எப்படி அறிய முடியும்? இப்படித்தான் என்று திட்டமும் தெளிவுமாக அறிவதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். அதுதான் நியமிப்பது.
வெறுமனே அறிவது, அதுவும் முன்கூட்டியே அறிவது என்பது தெளிவாக நிச்சயமாக நியமிக்கப்பட்டாலேயொழிய சாத்தியமில்லை. எல்லாவற்றையும் மனிதனின் சிந்தனையின் போக்கில் விட்டுவிட்டால் முன்கூட்டியே அறிவதென்பது அசாத்தியமாகிவிடும்.
அதெப்படி ஜீவனுக்குப் போகும் வாசல் குறுகியது அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் "சிலர்" என்று கூற முடியும். ஏன் அது "பலராக" இருக்க சாத்தியக்கூறே இல்லையா?