25.விசுவாசம் வந்தபிறகு நாம் உபாத்திக்கு(நியாயப்பிரமாணத்துக்கு) கீழானவர்களல்லவே.
5:14உன்னிடத்தில் நீ அன்புகூறுவது போலப் பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக, என்ற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால் நீங்கள் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;....ஆகையால் போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது....ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
கொலோ2:14,16. எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்,
யாக்2:10 எப்படியெனில் ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைகொண்டிருந்தும் ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.
என்று வேதம் தெளிவாகச் சொல்லியிருக்கும்போதும், சுயநீதிப்போதகர்கள் தங்கள் சுயத்திலிருந்து நியாயப்பிரமாணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒருவரையும் பூரணமாக்காத துருபதேசத்துக்கு தள்ளுகிறார்கள். இவர்கள் ஒன்றிலும் தவறாதவர்கள், 100% கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களாவார்கள்.இவர்களை எக்ஸிபிஷனில்தான் கொண்டுபோய் வைக்கவேண்டும்.
இன்னும் பழைய ஏற்பாட்டிலேயே இருக்கிறார்கள், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான 'புதிய ஏற்பாடு' புது உடன்படிக்கை, இலவசமாய் அவருடைய கிருபையினால் உண்டான இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள மனதில்லை. இவர்கள் தனிப்பெருமை போய்விடுமே? பாவமே செய்யாத எனக்கும் நித்தியஜீவன், பாவியான மற்றவர்களுக்கும் நித்தியஜீவனா? என்பது இவர்கள் கேள்வி.
நீதிமான்களை அல்ல; பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்பது எல்லா அங்கீகாரத்துக்கும் பாத்திரமுள்ளது. யாருடைய 'ஸ்பெஷல்' விளக்கங்களும் இதற்குத் தேவையில்லை.