kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கள்ளச் சகோதரர்களுக்கு எச்சரிக்கையாயிருப்போம்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
கள்ளச் சகோதரர்களுக்கு எச்சரிக்கையாயிருப்போம்


கள்ளச் சகோதரர்களுக்கு எச்சரிக்கையாயிருப்போம்

நியாயப்பிரமாண போதகர்களும் கள்ளசகோதரர் என்று வசனம் சொல்கிறது... இவர்களுக்கு ஜாக்கிரதையாக இருப்போம்.

பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை (தசமபாகம் உட்பட) கைக்கொள்ளச் சொல்கிற யாருக்கும் கீழ்கண்ட வசனங்கள் சாட்டையடியாக இருக்கும். 

நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கச்சொல்லி "நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும் பொருட்டாக பக்க வழியாய் நுழைந்த கள்ள சகோதரர்".கலாத்தியர்2:4 

'நியாயப்பிரமாணத்தின் கிரியைகளால் எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லை'16 

நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.21 

'நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்'.கலா5:4 

"மாமிசத்தின்படி நல்வேஷமாய்க்காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணீக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள்.கலா6:12 

"கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்.6:15

 

கலாத்தியர் 3:1புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்துக்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்?... 

2.ஒன்றை மாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப்பெற்றீர்கள்? 

5.அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பபிக்கிறவர் அதை நியாயப்பிரமானத்தின் கிரியைகளினாலேயா, விசுவாசக் கேள்வியினாலேயா, எதினாலே செய்கிறார்? 

10.நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்துக்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன். 

11.நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகுகிறதில்லை... 

25.விசுவாசம் வந்தபிறகு நாம் உபாத்திக்கு(நியாயப்பிரமாணத்துக்கு) கீழானவர்களல்லவே. 

5:14உன்னிடத்தில் நீ அன்புகூறுவது போலப் பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக, என்ற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். 

5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால் நீங்கள் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. 

நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;....ஆகையால் போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது....ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.

கொலோ2:14,16. எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள், 

28.ஆதலால் மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளிலல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான். 

6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது.

7:4நீங்கள்.... நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.

எபி7:18 முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.

19. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை... 

 

யாக்2:10 எப்படியெனில் ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைகொண்டிருந்தும் ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.

ஒன்றிலேதவறினால்கூட எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான். இதைக் கருத்தில் கொண்டுதான் 'நீதிமான் ஒருவனாகிலும் இல்லை' என்று வசனம் கூறுகிறது. 

கிருபைக்குக் கீழ்ப்பட்டிருப்போம். அவர் சித்தப்படியே ஆகட்டும்!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
RE: கள்ளச் சகோதரர்களுக்கு எச்சரிக்கையாயிருப்போம்


யாக்2:10 எப்படியெனில் ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைகொண்டிருந்தும் ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.

என்று வேதம் தெளிவாகச் சொல்லியிருக்கும்போதும், சுயநீதிப்போதகர்கள் தங்கள் சுயத்திலிருந்து நியாயப்பிரமாணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒருவரையும் பூரணமாக்காத துருபதேசத்துக்கு தள்ளுகிறார்கள். இவர்கள் ஒன்றிலும் தவறாதவர்கள், 100% கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களாவார்கள்.இவர்களை எக்ஸிபிஷனில்தான் கொண்டுபோய் வைக்கவேண்டும்.

இன்னும் பழைய ஏற்பாட்டிலேயே இருக்கிறார்கள், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான 'புதிய ஏற்பாடு' புது உடன்படிக்கை, இலவசமாய் அவருடைய கிருபையினால் உண்டான இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள மனதில்லை. இவர்கள் தனிப்பெருமை போய்விடுமே? பாவமே செய்யாத எனக்கும் நித்தியஜீவன், பாவியான மற்றவர்களுக்கும் நித்தியஜீவனா? என்பது இவர்கள் கேள்வி.

நீதிமான்களை அல்ல; பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்பது எல்லா அங்கீகாரத்துக்கும் பாத்திரமுள்ளது. யாருடைய 'ஸ்பெஷல்' விளக்கங்களும் இதற்குத் தேவையில்லை.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard