kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ரீல் மன்னன் சில்சாம்...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
ரீல் மன்னன் சில்சாம்...


 

ரீல் மன்னன் சில்சாம்... தன் வேத ஞானத்தை மீண்டும் வெளிப்படுத்துகிறார்...

//"அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

But if the Spirit of him that raised up Jesus from the dead dwell in you, he that raised up Christ from the dead shall also quicken your mortal bodies by his Spirit that dwelleth in you. " (ரோமர்.8:11)

இவர்களுக்கு சமமாக இறங்கி விளக்கமோ வியாக்கியானமோ தரக்கூடாது என்று இத்தனை நாள் இருந்தேன்; ஆனால் தற்போது சூழ்நிலையின் அவசியம் கருதி எனக்கு மேற்கண்ட வசனத்திலிருந்து தோன்றும் ஒரு கருத்தை வாசகர்களின் சிந்தனைக்காகத் தருகிறேன்.

மேற்கண்ட வசனமே வேதமாணவர் எனப்படும் போலிகளும் யெகோவா சாட்சிகளும் மற்றும் இஸ்லாமியரும் இயேசுவானவரின் தெய்வத்துவத்தை மறுக்க பயன்படுத்தும் வசனமாகும்;இதில் அவர்கள் தங்களுடைய வாதத்துக்கு வலுசேர்க்க எடுத்தாளும் வார்த்தை இயேசுவே தம்மை பிதா எழுப்பவேண்டிய நிலையிலிருந்தார் என்பதே;மேலும் முகமதியர்கள் சாவுக்கேதுவான சரீரத்திலிருந்தவர் (mortal body) எப்படி பரமேறிச் செல்ல இயலும் என்றும் கேட்கிறார்கள்;ஆனால் முக்கியமான ஒன்றை இவர்களெல்லாம் மறந்துவிட்டார்கள்,இயேசு இந்த பூமியில் வாழ்ந்தது சாவுக்கேதுவான (mortal body) சரீரத்தில் அல்லவே?

"அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்." (எபேசியர்.2:1)

மனிதன் மரித்த நிலையிலேயே பிறக்கிறான்;அவன் கிறிஸ்துவைப் பற்றிய விசுவாசத்தினால் பிழைக்கிறான் என்பதே வேத தத்துவமாகும்;ஆனால் நம்முடைய ஆண்டவரோ அடிமையின் ரூபமெடுத்தாரே தவிர பாவ சரீரத்தில் அதாவது சாவுக்கேதுவான (mortal body) மரண சரீரத்தில் வாழவில்லை; மரணம் சம்பவிப்பதற்கான காரணம் ஏதுமில்லாதவர் எப்படி மரிக்கமுடியும்? எனவே தம்முடைய ஜீவனை அவரே ஒப்புகொடுத்தார்; பிறந்ததே மரணமில்லாதவராக இம்மார்ட்டல் ஆக பிறந்தவ‌ர், சாவுக்கேதுவான (mortal body) மார்ட்டல் பாடியிலிருந்து எப்படி எழுந்திருப்பார்? சாவுக்கேதுவான  (mortal body) எனும் வார்த்தையிலேயே கோடி அர்த்தங்கள் இருக்கிறதே..?

// இயேசுகிறிஸ்து எங்குமிராதபடி அழிக்கப்பட்டு தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டார். //

இதற்கு வசன ஆதாரமில்லை; இயேசுவானவர் மாம்சத்தில் இல்லாத நாட்கள் இருந்ததே தவிர உலகத்தில் இல்லாத ஒரு நிமிடம் கூட இல்லை;எனவே வசனம் சிறப்பாக சொல்லுகிறது,

"அவர் மாம்சத்திலிருந்த நாட்களில்..."(எபிரெயர்.5:8) என்பதாக;

மற்றபடி அவர் இல்லாதிருந்த காலமே இல்லை;ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருக்கவுமில்லை;அவர் இயங்கிக் கொண்டே இருந்தார்,இதனை வேதம் பலமாக நிரூபிக்கிறது.ஆனாலும் இவர்களுக்கு வசனத்தைப் போட்டு உபதேசிக்க எனக்கு விருப்பமில்லை;எனது அன்புக்குரிய வாசகர்கள் கேட்கட்டும் சொல்ல ஆயத்தமாக இருக்கிறேன்.//

உன்னையும் ஒரு பொருட்டாக எண்ணி நானும் பதிலளிக்க விரும்பவில்லைதான்... ஆனாலும் சீரியஸான வாதத்தின்போது கொஞ்சம் ஹாஸ்யம் தவறில்லை என்பதால்...

மனிதன் மரித்த நிலையிலேயே பிறக்கிறான் என்று இந்த யுகத்தின் சூப்பர் காமெடி பதித்துள்ளாய். உனக்கும் உன் தளத்தாருக்கும்தான் அதன் அர்த்தம் புரியும்.

//;ஆனால் நம்முடைய ஆண்டவரோ அடிமையின் ரூபமெடுத்தாரே தவிர பாவ சரீரத்தில் அதாவது சாவுக்கேதுவான (mortal body) மரண சரீரத்தில் வாழவில்லை; மரணம் சம்பவிப்பதற்கான காரணம் ஏதுமில்லாதவர் எப்படி மரிக்கமுடியும்? //

சாவுக்கேதுவான மரண சரீரத்தில் அவர் வாழவில்லை என்ற மாபெரும் போதனை இவனைப்போன்ற அறிவாளிகளுக்குத்தான் வரும். தன் மூடத்தனத்தைக் காப்பாற்ற இவன் இந்தப் பதிவையே நீக்கினாலும் நீக்கிவிடுவான்... எங்கள் அனுபவம்.  

ஆக அவர் மனிதனாக எல்லாருக்கும் இருந்த சரீரத்தில் இல்லை. அப்ப அந்த ஸ்பெஷல் சரீரத்தில் அவருக்கு வலி, வேதனைகூட அனுபவிக்கவில்லை என்று சொன்னாலும் சொல்லுவாய், மனிதர்களைப்போல மரிக்கவில்லை என்கிறாயே...

சாவுக்கேதுவான் என்ற வார்தையில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறதாம். எங்கெ ஒரு 5 அர்ததம் மட்டும் சொல்லு பார்ப்போம்?

இயேசு கிறிஸ்து மற்ற எல்லாரையும்போல மரித்து அழிவைக்கண்டு மூன்றாம் நாள்தான் 'உயிரோடு' எழுந்தார். உயிரில்லாதவர் மரித்தவர் ஆவார். 

பிரசங்கி9:5. உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.

6. அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழேசெய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.

10. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

இயேசுகிறிஸ்துவுக்கும் அதே மரணம்தான். மரித்தேன் என்று பொய் சொல்லிவிட்டு 'மரிக்காமல்' இருந்து அவர் யாரையும் ஏமாற்றவில்லை!

/ஆனாலும் இவர்களுக்கு வசனத்தைப் போட்டு உபதேசிக்க எனக்கு விருப்பமில்லை;எனது அன்புக்குரிய வாசகர்கள் கேட்கட்டும் சொல்ல ஆயத்தமாக இருக்கிறேன்./ 

வசனம் தெரிந்தால் தானெ போட்டு உபதேசிக்க? கில்லாடிடா நீ. ஏன் வசனத்தைப்போட்டு எங்கள் முகத்திறையைக் கிழிக்கலாமே?

I பேதுரு 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; 

நம் பாவங்களை தமது சரீரத்திலே சுமந்தார்...

எபிரெயர் 2:14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,

வேதப்புரட்டனே ஓயவே மாட்டாயோ? 

அப்போஸ்தலர் 13:30 தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.

அப்போஸ்தலர் 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

ரோமர் 4:24 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.

ரோமர் 5:6 அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.

ரோமர் 5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே

ரோமர் 6:9 மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.

 

'இனி' தான் மரிப்பதில்லை. ஒரு முறை மரித்துதான் இருந்தார்

ரோமர் 6:10 அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.

 

ரோமர் 8:34 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.

ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

அவராக மீண்டும் சரீரத்தில் புகுந்து எழுந்துவந்தாரென்று விசுவாசித்தால்...

I கொரிந்தியர் 15:3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,

கலாத்தியர் 1:1 மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,

எபேசியர் 1:19 தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

கொலோசெயர் 1:18 அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

I தெசலோனிக்கேயர் 1:10 அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும்,

I தெசலோனிக்கேயர் 4:14 இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே;

I பேதுரு 1:21 உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.

வெளி 1:18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

வெளி 2:8 சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;

கிறிஸ்து மரித்தார், தேவனால் மூன்றாம் நாள் 'உயிரோடு' எழுப்பப்பட்டார் என்றுதான் வேதம் சொல்கிறது.

இன்னும் விளாசுவேன்...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//குமாரன் மரித்தேன் என்று மட்டுமா சொல்லுகிறார், உயிரோடிக்கிறேன் என்றும் சொல்லவில்லையா; மரணம் என்றாலே என்னவென்றே அறியாத ஜீவாதிபதி மரணத்தை ருசிபார்த்தார் என்று வேதம் சொல்லுகிறது; சாவாமையுள்ளவரான அவர் மரித்த காரணத்தினாலேயே நித்திய ஜீவனைக் குறித்து பேசும் அருகதை மனுக்குலத்துக்கே கிடைத்தது;அவர் மரித்தோரிலிருந்து எழுந்தவரில் முதற்பேறானவர் என்று வேதம் சொல்லுகிறது.பிதா சாவாமையுள்ளவர் எனில் குமாரனும் சாவாமையுள்ளவரே; சாவாமையுள்ள பிதாவுக்கு சாவுக்கேதுவான குமாரன் எப்படி இருக்கமுடியும்? சாவுக்கேதுவான சரீரமுள்ள மனிதனிடம் சாவாமையுள்ளவர் எப்படி பிறக்கமுடியும்? சிந்திப்பீர்களா? அவர் தேவன்,சர்வ வல்ல தேவன்,தேவாதி தேவன்.//

முட்டாளே உயிரோடு எழுந்தபிந்தான் உயிரோடு இருக்கிறேன் என்கிறார். மரணத்தை ருசிபார்த்தார் என்று வேதம் சொல்லுகிறதைத்தான் நாங்களூம் சொல்கிறோம்... 

//சாவாமையுள்ள அவர் மரித்த காரணத்தினாலேயே... //

என்ன மேன் பிதற்றுகிறாய்... சாவாமையுள்ளவர் மரித்தாராம் வடிவேலு கெட்டான்போ?

அவர் மரித்தோரிலிருந்து எழுந்தவரில் முதற்பேறானவர் என்றுதான் நாங்களூம் சொல்கிறோம் என்ன சேம் சைடு கோல் போடுகிறாய்.. பீர் மயக்கமா?

//சாவாமையுள்ள பிதாவுக்கு சாவுக்கேதுவான குமாரன் எப்படி இருக்க முடியும்?//

நல்ல கேள்விதான்.. அவர் மரித்தே ஆக வேண்டும் என்பதால்தான் ஆவி நிலையிலிருந்து மனுஷனாக அடிமை ரூபத்தில் அனுப்பப்பட்டார். பின் மரித்து, நீர் கதைகட்டுவதுபோல அதே சரீரத்தில் எழவில்லை. ஏனென்றால்

I பேதுரு 3:18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

II கொரிந்தியர் 5:16 ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.

ஏனென்றால்

I கொரிந்தியர் 15:50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.

மாம்சத்தில் கொலையுண்டு, எங்குமிராதபடி அறுப்புண்டு போய் (அதுதான் மரணம்) பின் மூன்றாம் நாள் தேவனால் ஆவிரூபியாக உயிர்ப்பிக்கப்பட்டார்... பரிசுத்தாவியின் நிறைவைப்பெறாத நிலையில் சீடர்கள் இதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதால்தான் தன்னை சரீரத்தில் காண்பித்தார். 

//இயேசப்பாவைப் பார்த்தேன்,என்று சொன்னால் சாத்தானுக்கு என்ன தவிப்பு?//

தவிப்பு இல்லப்பா விழிப்பு ஏன்னா

வசனம் எங்களுக்கு இப்படித்தான் சொல்லித்தந்திருக்கிறது

மத்தேயு 24:23 அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.

மத்தேயு 24:26 ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.

மாற்கு 13:21 அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள்.

மத்தேயு 24:5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

மாற்கு 13:6 ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

// ஆத்துமா அழியாது என்ற (சாத்தானின் நீங்கள் சாகவே சாவதில்லை)ஒரு மாபெரும் பொய்தான் இன்றைய எல்லா தப்பறைகளுக்கும் மூலகாரணம். //

ஆத்துமா அழியாது என்று சொல்லவில்லை,அழிந்துபோன நிலையிலிருப்பதாகவே வேதம் சொல்லுகிறது; பாவத்தின் மீறுதலினால் விழுந்துபோன ஆத்துமா நித்தியத்துக்கும் அழியாதிருக்கும் மீட்பின் ஏற்பாடே புதிய ஏற்பாடு..! ஆதாம் பாவத்தில் விழுந்த அன்றே மரணம் அவனை ஆட்கொண்டது என்று வேதம் சொல்லுகிறது.அது தேவனற்ற நிலையான ஆத்மிய மரணம் என்கிறது வேதம்.

//"கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு.."(யோவான்.3:16)

எது கெட்டுப்போகாமல்..? அதுதான் ஆத்துமா..! இங்கே மாம்சத்தைக் குறித்தும் மாம்ச மரணத்தைக் குறித்துமா பேசுகிறார்?// 

ஆத்துமா அழியாது என்று சொல்லவில்லையாம். அழிந்துபோன‌(?) நிலையிலிருப்பதாகவே வேதம் சொல்கிறதாம்.

"தேவனற்ற நிலையான ஆத்மிய மரணம்" எந்த வேதத்தில் உள்ளது? மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்றுதான் என் வேதத்தில் உள்ளது.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ சோல் சொல்யூஷன் அவர்களே, இந்த கள்ள போதகன் வசனம் தெரியாமலே எத்துனை பேரை வஞ்சித்து வருகிறான்!! மார்க்கம் தப்பி (அதான் மதம் மாறி மதுவை பற்றி பேசி மதுவின் மயக்கத்தில் இருக்கிறவன்) வந்தவனுக்கு இத்துனை வசனம் கொடுத்திருக்கிறீர்களே, கள்ள போதக கோமாளிக்கு பேதி போக போவுது!! இந்த இலட்சனத்தில் இவன், வசனம் போட்டு (அப்படி போடு, சரக்கு போட்டு போட்டு, இப்ப வசனத்தை போட ஆரம்பித்துவிட்டார் போல்!!) நமக்கு பதில் சொல்ல மாட்டானாம்!! என்ன அக்கிரமமடா!! அதான் கடைசி காலத்தில் இவனை போன்ற கள்ள தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள் என்று வேதம் சொல்லியிருப்பது இந்த மார்க்கம் தப்பி வந்த கள்ள போதகனை நமக்கு சாட்சியாக தேவன் காண்பித்து வருகிறார்!!

நீங்கள் கொடுத்த வசனம் எல்லாம் யெகோவா சாட்சிகளின் வேதத்தில் தான் இருக்கிறது என்று தெரு கூத்தே நடத்துவார் இந்த மார்க்கம் தப்பி வந்த கள்ள போதகர்!! ஒரே தலைப்புக்கு இத்துனை வசனங்களா!!?? நாங்களெல்லாம் ஒரே வசனத்தை வைத்தே ஒரு நாளையே ஓட்டுவோம், கொஞ்சம் சொந்த சரக்கு, கொஞ்சம் மூத்த அப்போஸ்தலர்களின் (அட கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் இல்லீங்கோ, இவர்களாகவே சிலரை மூத்த அப்போஸ்தலர், இளைய அப்போஸ்தலர் என்று வைத்திருப்பார்கள்) குப்பைகள், கொஞ்சம் பரலோக நரக விஸிட், அறைகுறையான ஆத்துமா, மரணமென்றால் பிறப்பிலிருந்து அல்லது ஆவியில் மரிப்பது போன்றதை சொல்லியே பழகியவர்களுக்கு ஒரே தலைப்பிற்கு இத்துனை வசனங்களா என்று முழி பிதுங்க வைத்திருக்கிறீர்கள்!!

கிறிஸ்துவின் அப்போஸ்தலர் சொல்லியபடி எல்லாருக்கும் அறிவில்லை என்கிற கெட்டகரியில் தானும் இருக்கிறான் என்கிற உணர்வே இல்லாதபடிக்கு தேவன் அனுப்பிய கொடிய வஞ்சகத்தில் மாட்டிக்கொண்டு இன்னும் எத்துனை பேர்களை (அதுவும் வெளிநாடெல்லாம் சென்றதாக ஒரு வதந்தி வேறு) சாரி ஆத்துமாக்களை கெடுத்து குட்டிசுவராக்கிக்கொண்டு ஏப்பம் விடுகிறானோ!!

வேதம் கிறிஸ்துவை நம் மூத்த சகோதரர் என்கிறது, மார்க்கம் தப்பி வந்த கள்ள போதகன், இயேசுவை அப்பா முறை கொண்டாடி "இயேசப்பா" என்கிற ஒரு புதிய டைட்டில் தருகிறான்!! இயேசு கிறிஸ்து மரிக்கவே இல்லை என்றால் ஏனைய்யா அவருக்கு உயிர்த்தெழுதல்!! அட இஸ்லாமியர்களுக்கு தெரிந்தது கூட மார்க்கம் தப்பி வந்த உனக்கு தெரியவில்லையே!! உன்னை போன்ற குப்பை வண்டிகளை தான் அவர்கள் கேள்வி கேட்க்கிறார்கள்!! ரஸ்ஸலை பார்த்து அவர் கொடுத்த போதனையில் அவர்கள் இது வரை பிழை கண்டுபிடித்து வாக்குவாதம் செய்திருக்க மாட்டார்கள்!! உனக்கு தேவ அறிவோ ஞானமோ தேவ பயமோ இல்லை!! அதற்காக எல்லாரும் உன்னை போலவே இருப்பார்களா!!??

வசனம் தெரியும்............ ஆனா தெரியாது போல் இருக்கிறது மார்க்கம் தப்பி வந்த கள்ள போதகனின் பதிவுகள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

திரித்துவர்களுக்கு குறை பாட ஒரு ரஸ்ஸல், ஆனால் இவர்களின் மடியில் ஆயிரம் கள்ள போதகர்கள், தீர்க்கதரிசிகளை வைத்துக்கொண்டு என்னத்த பேச என்கிற நிலையில் இருக்கிறார்கள்!! எல்லாரும் திரித்துவம் என்கிற மாயையில் விழுந்து இருப்பவர்கள் தான்!! குட்டை ஒன்று தான் மட்டைகள் தான் விதவிதமாக இருக்கிறது!!

இதோ இவர்களின் இலட்சனத்தின் எடுத்துக்காட்டு சில:

Some Fake Pastor

The Same One

 

திரித்துவம் என்கிற ஒரே குட்டையில் மிதந்து அதில் உள்ளவர்களையும் மார்க்கம் தப்பி வந்த கள்ள போதகன் வசைப்பாடிக்கொண்டு இருப்பதையும் வாசித்திருக்கிறோம்!! மொத்தத்தில் இவர் ஒருவரும் இவரை போல் உள்ளவர்களும் "தேவ மனிதர்கள்" மற்றவர்கள் எல்லாரும் குப்பைகள்!! ராஜ்ஜியத்தில் கற்றுக்கொள்ளட்டும்!! ஒ...ஓ... மார்க்கம் தப்பி வந்தவனுக்கு ராஜ்ஜியம் என்றால் என்னவென்று இப்ப தெரியாதில்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மார்க்கம் தப்பி வந்த கள்ள போதகனுக்கு தேவனின் சித்தம் கூட நகைச்சுவை தான், அதுவும் அறுவறுப்பான நகைச்சுவை!! இது தலைப்பே நிரூபிக்கிறது

"சகலமும் தேவசித்தமே"- ஒரு நகைச்சுவை தொகுப்பு..!

இதோ இந்த தலைப்பின் கீழ் வந்த ஒரு வரி,

பாவியும் கம்மனாட்டியும் வா,என்கிறார்கள்;கேட்கிறவன் போ என்பானாக..!

மகா மட்டமான இந்த வரிக்கு ஒரு ரசிகனும் இருக்கிறார்!! அவருக்கு யார் எழுதினாலும் ஆனி அடித்தாற் போல் இருக்குமாம்!! கேவலம்!!

மார்க்கம் தப்பி வந்த கள்ள போதகனுக்கு தேவன் யார் என்றே தெரியாது, வேதம் தெரியாது என்று இந்த கள்ள போதகன் பல முறை எழுதியிருக்கிறாப்ல!! தேவன் யார் என்று தெரியாதவனுக்கு தேவனின் சித்தமும் தமாசாக தான் இருக்கும்!!

Post InfoTOPIC: "சகலமும் தேவசித்தமே"- ஒரு நகைச்சுவை தொகுப்பு..!

avatar?id=1420989&m=75&t=1305197091

Member>>>முன்னேறிச் செல்க..!
check2.gif

Status: Offline
Posts: 23
Date: yesterday
RE: "சகலமும் தேவசித்தமே"- ஒரு நகைச்சுவை தொகுப்பு..!
 


chillsam wrote:

பாவியும் கம்மனாட்டியும் வா,என்கிறார்கள்;கேட்கிறவன் போ என்பானாக..!


 smile.gif



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இது காமெடி டைம்.

மூன்று மாதகாலமாக "ஓய்வெடுக்க"ப் போயிருந்த மெகா காமெடியன் மறுபடியும் வந்துவிட்டானாம். அவனது பழைய பதிவுளிலிருந்து சில காமெடிகளை இப்பதிவில் காணலாம். வேதத்தை ஆராய்ந்துகொண்டிருக்கிறானாம்; இன்னும் பல லேட்டஸ்ட் காமெடிகள் சீக்கிரம் வரும் என எதிர்பார்க்கலாம்.

 சமீபமாக அண்ணன் மார்கள் எல்லாம் சேர்ந்து "தங்கைக்கோர் கீதம்" பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு உத்தம சாதுவுக்கு, மங்கிய குதிரை, ஜப்பான் சுனாமி, போன்ற தீர்க்க தரிசனங்களைச் சொல்லி கடைசி காலத்தில் ஏஞ்சல் டிவி மூலமாக கோடா கோடி ஜனங்களை ரட்சிப்புக்குள்ளாக நடத்தும் ஒரு தேவமனிதனுக்கு பணிவிடை செய்யச்சொன்னது தவறாம். எல்லாரும் 'மதுர' ஸ்டைல்ல முதுகிலிருந்து அருவா உருவாத குறை. ஏன் ஒரு அன்பான‌ மூத்த அண்ணனும் இதில் அடக்கம்.

 வெட்கக்கேடு என்னவென்றால் தங்கை வேதப்புத்தகத்தை கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருத்தன் எழுதியது என்று பதிந்ததை எந்த அண்ணனும் கண்டுகொள்ளவே இல்லை. தங்கைக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறார்கள். ஒரு பரிசுத்தவானுக்கு பணிவிடை செய்வதென்பது இவர்களுக்கு பாவமாய்ப்படுகிறது போலும்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வஞ்சகன் சில்சாம்:
//அடேய் மாங்கா மடையா,உனக்கு கட்டுப்படாமல் எகிறிக் கொண்டிருக்கும் சோல்சோலீஷனை சமாளிக்க முடியாத நீ நாண்டுகிட்டு சாகலாமே...அவன் எழுதியதற்கு இதைவிட நாகரீமாக யாரடா எதிர்கருத்து எழுதமுடியும்..? கடந்த மாதம் முழுவதும் நீங்களெல்லாம் எழுதியவை முத்துக்களா என்ன..?//

உன்னை போல் எல்லாரையும் உன் கட்டுப்பாட்டில் வைத்து நான் ஒன்றும் கட்சி நடத்தவில்லை!! உன் கட்டுப்பாட்டில் கொண்டு வரமுடியவில்லை என்று மூன்று மாதம் நாண்டுகிட்டு சாக போனாயோ!!?? கேடுகெட்ட ஜென்மமே!! உனக்கு இன்னும் உன் பழைய மார்க்கத்தின் புத்தி தான் இருக்கிறது என்பது உன் ஒவ்வொரு பதிவின் திமிர்த்தனமும் நிரூபிக்கிறது!! நீ கிறிஸ்தவ பெயர் வைத்துக்கொண்டதினால் கிறிஸ்தவன் என்று நினைத்துவிடாதே!! உன்னை போன்ற பன்றிக்கு முத்துக்கள் என்றால் என்னவென்றே தெரியாதுடா!!

//என்னுடைய எழுத்தை குப்பை என்று சொல்லும் நீ எழுதுவது வேதமா..? இரஸலின் மூத்திரத்தில் தினமும் வாய்க்கொப்பளிக்கும் உன்னுடைய எழுத்துக்களே டேட்டா பேஸில் (data base) இருக்கும்போது இதுவரை எந்த கொள்கையையும் அறிவிக்காமல் விமர்சனம் மாத்திரமே செய்துகொண்டிருக்கும் என்னுடைய எழுத்துக்கள் இருக்கக்கூடாதா..? //

உனக்கு மாலைகண் நோய் இருக்கும் என்று நினைக்கிறேன்!! எங்களின் விசுவாசமும் கோட்பாட்டையும் எங்கள் தளத்தில் பதிவு செய்திருக்கிறோம்!! ஆனாலும் உன்னுடைய எழுத்தை குப்பை என்று நீயே ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அது குப்பை தான்!! மூன்று மாதம் உனக்கே அந்த குப்பையின் துருநாற்றம் பிடிக்காமல் தான் திரும்ப வந்திருக்கிறாயா!!??

//கணவன் விபத்தில் சிக்கி வருமானமில்லாமல் இருக்கும்போது அவனுடைய மனைவியின் தாலியை அறுத்து அதில் வந்த வருமானத்தில் கன்வென்ஷன் நடத்தும் நீங்களா எங்களை குறைகூறுவது..? //

உன் போதகமார்களிடம் போய் கேளு அவனுங்க சுறண்டுவது எப்படி என்று!! ஏன் நீயுமே அதே கேட்டகரி ஆள் தானே!! நான் எந்த கன்வென்ஷன் நடத்துவதும் இல்லை, பங்கு பெறுவதும் இல்லை மூடனே!! உனக்கு என்னை பற்றி தெரியாது, நீ சாக்கடையில் இருப்பவன், அவ்வளவே!!

//இன்னும் எங்களை இதுபோல அவதூறாக எழுதுவதற்காகவே உங்களை மேலிடத்தில் தனியா கவனிக்கிறாங்களாமே... இதெல்லாம் ஒரு பொழப்பாடா,மானங்கெட்டவனே..!//

எனக்கு இருக்கும் ஒரே மேலிடம் கிறிஸ்து தான்!! உன்னை போல் ஏரியாக்கு ஒருத்தன் என்று, மாவட்டம் மாநிலம் என்று சுரண்டல் தாதாக்கள் எங்களுக்கு இல்லை!! கிறிஸ்து உன்னை போன்ற போதகனை பார்த்து தான் விரியன் பாம்பு குட்டிகளே என்கிறார்!! உங்கள் தகபனாகிய சாத்தான் என்கிறார்!! உன்னை போல் என்னை போதகன் என்றோ, மேய்ப்பன் என்றோ கன்வென்ஷன் என்றோ சொல்லி திரியும் கூட்டத்தில் நான் இல்லை!! அது எல்லாம் வேலைக்கு போகிறவன் மானத்தை பற்றி கவலைப்பட்டுக்கொள்ளலாம், உனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard