kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரித்துவத்தை நம்பும் கோமாளிகளுக்கு...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
திரித்துவத்தை நம்பும் கோமாளிகளுக்கு...


அப்போஸ்தலர் 13:36 தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.

தாவீதும் தன் முற்பிதாக்களைப்போலவே தானும் அழிவைக்கண்டான்.

அப்2:34. தாவீது பரலோகத்திற்கு எழுந்துபோகவில்லையே.

 

யோவான்3:13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.

 

ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி,(அழிந்து) அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்;

 

வெளி 1:18 மரித்தேன்,(அழிந்தேன்!) ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

 

அப்போஸ்தலர் 3:15 ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்(அழித்தீர்கள்); அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்(அழிந்து போனவர்களிடத்திலிருந்து); அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.

 

ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து(அழிந்தோரிடத்திலிருந்து)  எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

 

I பேதுரு 1:21 உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து(அழிந்து போனவர்களிலிருந்து) எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.

 

இயேசுகிறிஸ்து எங்குமிராதபடி அழிக்கப்பட்டு தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டார். 

முன்னோர்கள் அழிவைக் கண்டார்கள்; தாவீது அழிவைக்கண்டான்,

ஆனால் குழப்பக் கிறிஸ்தவர்கள் அழியாமல் யேசப்பாவ பாத்தேன், பவுலைப்பார்த்தென், பேதுருவைப் பார்த்தென், யோவான் ஸ்நானகனைப் பார்த்தேன். என்று எத்தனை துணிகரமாகச் சொல்கிறார்கள்?

மரித்தவுடன் உடனடியாக பரலோகம்தான் நான் ஸ்டாப் சர்வீஸ்...  

ஆத்துமா அழியாது என்ற (சாத்தானின் நீங்கள் சாகவே சாவதில்லை)ஒரு மாபெரும் பொய்தான் இன்றைய எல்லா தப்பறைகளுக்கும் மூலகாரணம்.

 

திரித்துவத்தை நம்பும் கோமாளிகளுக்கு...


I தீமோத்தேயு 6:16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். என்று பிதாவைக்குறித்து வேதம் சொல்லுகிறது.

ஆனால் குமாரனோ மரித்தேன் என்கிறார். சாவாமையுள்ள பிதாவாகிய தேவனே இவரை அழிவிலிருந்து எழுப்பினார். 

வேதம் இரண்டு வெவ்வேறு நபர்களைச் சொல்லுகிறது. பிதா வேறு, குமாரன் வேறு.

1கொரி8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

அறிவில்லாதவர்கள் என்று பவுலெ சொல்கிறார்....

விழித்துக்கொள்ள வேண்டிய நேரம்.... அறியாமை இருள் மெல்ல அகன்றுகொண்டிருக்கிறது.... அவருடைய பிரசன்னமாகுதலின் முதற்கட்டம்... 

"உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக‌"




-- Edited by soulsolution on Tuesday 12th of July 2011 12:56:50 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

கோமாளிகள் தளம்//மரித்தேன், என்றால் அழிந்தேன் என்று அர்த்தமாம், அப்போ உயிரோடிருக்கிறேன் என்றால் அழியவில்லை என்று அர்த்தமில்லையா..? "ஆனாலும்" என்று ஒன்று இருக்கிறதே அத இன்னா பண்றது'ங்க..?

அப்போஸ்தலர் 3:15 ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்(அழித்தீர்கள்); அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்(அழிந்து போனவர்களிடத்திலிருந்து); அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.

கொலை செய்வது என்றால் உயிரை எடுப்பது என்றே நினைத்திருந்தோம்; ஆனால் ஏதோ ஒன்றை அழிப்பது இப்போது தான் அறிந்துகொண்டோம்; ஞானம்'யா,ஞானம்...ஞானம் இங்கே பீர்பாட்டில் மாதிரி பொங்குது பாரு..!

மரணத்தைக் குறித்து வேதம் நித்திரை என்கிறது;ஆனால் இவர்களோ அதனை அழிவு என்கிறார்கள்;மரணம் என்பதும் அழிவு என்பதும் மாம்சத்துக்கு மட்டுமே ஆத்துமாவுக்கு அல்ல,என்கிறது வேதம்;//

நமது தளத்தைப் பிரபலப்படுத்தும் மூடனின் பதிவுகள் இவை. இங்கு வசனத்தைச் சார்ந்து, அதுபற்றி கொஞ்சமாவது தெரிந்தவர்கள் விவாதித்துக்கொண்டிருக்கும்போது இடையில் காமெடி சீன் காட்ட வந்துட்டான். மரணம் பற்றி இவன் தளத்தில் இதுவரை ஒரு பதிவுகூட வந்ததில்லை, வாய்மட்டும் நீளூம்... திரித்துவக் கோமாளிகளுக்கு கிறிஸ்து மரித்தது கூட கேலியாக இருக்கிறது. மரிப்பதுபோல மரித்து அப்படியே ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வந்து மீண்டும் தன் சரீரத்தில் வந்துவிட்டாராம்.... 

//சாவாமையுள்ள ஜீவாதிபதியான இயேசுவானவர் பிதாவின் சித்தப்படி தனக்குக் கொடுக்கப்பட்ட மாம்ச தேகத்திலிருந்து வெளியேறி மீண்டும் அவருடைய பாவமில்லாத சரீரத்துக்குள் மூன்றாம் நாள் பிரவேசித்து (மனுஷருக்கான நீதியை நிறைவேற்றி.//

.காமெடியின் உச்சம்.

கொலை செய்வதென்றால் உயிரை எடுப்பது என்று நினைத்திருந்தோம் ஆனால் ஏதோ ஒன்றை அழிப்பது என்று இப்போதுதான் அறிந்துகொண்டோம் என்று 'பீர் பாட்டிலையே' யோசிக்கும் முட்டாள் எழுதுகிறான். 

மரித்தேன் என்று கிறிஸ்து திட்டவட்டமாகக் கூறியது ஜீரணிக்க முடியவில்லை. அதன் பின் தேவனால் எழுப்பப்பட்ட பின்புதான் சதாகாலமும் உயிரோடிருக்கிறார். முட்டாளே அந்த இடைப்பட்ட காலத்தில் இயேசு மரித்துப் போயிருந்தார். உன் மூடத்தனத்தை மேலும் பறைசாற்றாதே!

 இவனுடைய காமெடி தொடர்கிறது

//மரணத்தைக் குறித்து வேதம் நித்திரை என்கிறது;ஆனால் இவர்களோ அதனை அழிவு என்கிறார்கள்;மரணம் என்பதும் அழிவு என்பதும் மாம்சத்துக்கு மட்டுமே ஆத்துமாவுக்கு அல்ல,என்கிறது வேதம்;அந்த அழிவையும் குமாரனுடைய தேகம் சந்திக்கவில்லை என்பதில் சங்கீதக்காரனின் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது;ஆனால் ஆத்துமாவையே மறுக்கும் இவர்கள், மாம்ச மரணத்தை ஆத்துமாவின் அழிவு என்று வியாக்கியானம் செய்துகொண்டிருக்கிறார்கள்.//

மரணம் அழிவில்லையாம், மாம்சத்துக்கு மட்டும் அழிவாம் 'ஆத்துமாவுக்கு' (அது என்னவென்றே தெரியாது) அழிவு இல்லையாம், இதைத்தானே சாத்தானின் நீங்கள் சாகவே சாவதில்லை கூட்டம் என்கிறோம். அப்படியானால் எல்லா மனிதர்களுமே சாவாமையுள்ளவர்களா? மூடனே, யார் வேதத்தைத் திரிக்கிறார்கள். ஆத்துமா அழியாது என்றால் எல்லாருமே சாவாமையுள்ளவர்கள்தனே?

வேதம் ஏன் பிதாவாவனரை மட்டும் தாமே சாவாமையுள்ளவரும்... என்று சொல்லவேண்டும்? முட்டாள். கோவணத்தையும், பீரையும் யோசிக்கும் நேரத்தை வேதம் கற்றுக்கொள்ள செலவழி.

மீண்டும் பாவமில்லாத சரீரத்துக்குள் பிரவேசித்தாராம். ஏன் சரீரத்தை பலிகொடுப்பது போலக் கொடுத்துவிட்டு நைஸாக மீண்டும் எடுத்துக்கொண்டாரா? என்ன உளரல்... 

ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள் (உயிரை எடுத்தீர்கள்) என்றால் என்னய்யா அர்த்தம்? இயேசு கொலை செய்யப்பட்டார். ஜீவாதிபதியைத்தான் கொலை செய்தார்கள் ஜீவாதிபதியின் சரீரத்தை மட்டுமல்ல. அவரையேதான். ஆத்துமா(நீங்கள்) சாகவே சாவதில்லை என்று ஆதியில் சாத்தான் சொல்லிக்கொடுத்த மாபெரும் பொய்யை நம்பும் கூட்டத்துக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.

'மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்கேதிரும்புவாய்' என்று தேவன் சொன்னதை மட்டுமே நாம் விசுவாசிக்கிறோம். ஆவியாயிருக்கிறாய், ஆத்துமாவாயிருக்கிறாய் என்று வேதப்புரட்டர்கள், சாத்தானின் கூட்டம்தான் கண்மூடித்தனமாய் நம்பிக்கொண்டிருக்கிறது. பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும் என்று வேதம் சொல்கிறது. அப்ப ஆத்துமாவிலிருந்தும் உயிர் போய்விடுமோ? ஆத்துமாவுக்கு வடிவம் உண்டா? ஆத்துமா சிந்திக்குமா? உணர்வு உண்டா? இதெல்லாம் இருக்கும் பட்சம் சரீரமே தேவையில்லையே.... கூறுகெட்டவர்களே விளக்குங்களேன்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சங்கீதம் 52:5 தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார்.

இது எந்த அழிவு, நிர்மூலமாக்குவது என்றால் என்ன‌?

ஏசாயா 53:8 இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

கிறிஸ்து அறுப்புண்டு போனார்...

சங்கீதம் 35:8 அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.

சங்கீதம் 35:17 ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என் ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.

ஏற்கனவே அழியாத ஆத்துமாவை ஏன் அழிவிலிருந்து தப்புவிக்க வேண்டும், ஓ இந்தக் கோமாளிக்குத்தெரிந்தது தாவீதுக்குத் தெரியாதோ?

அப்போஸ்தலர் 13:34 இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம்பற்றினார்.

"இனி"அவர் அழிவுக்குட்படாதபடிக்கு என்றால் ங்கொய்யால ஏற்கனவே அவர் அழிவுக்குட்பட்டிருந்தார் என்றுதானே அர்த்தம்?

தேவையில்லாம மூக்கை நுழைத்து இப்ப முழித்து என்ன பயன்? ஏதாவது சாக்கு போக்கு சொல்லி எப்பவும் போல ஓடிவிடு.

ரோமர் 1:23 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.

பிரசங்கி3:18. மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் அறியும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்திலே எண்ணினேன்.

19. மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

20. எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.

மூடனே எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது. 

மனிதன் அழிகிறான்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தன் சுய ஊழியத்தை நம்பிக்கொண்டு கூட்டம் சேர்த்து பாராட்டு பெற விரும்புகிறவன் அதற்கென்றே நியமிக்கப்பட்டிருக்கிறான்!! மது அருந்துவது சரியா தவறா என்பதை நடத்துபவனுக்கு ஆத்துமா, மரணம் என்றால் என்னவென்று தெரிய நியாயம் இல்லை தான்!! இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று தெரு நாய்கள் வாய் வைத்து கக்குவது போல் தான் தற்போது அந்த ஊழியரில் நிலமை!! ஆகவே தான் என்னத்த எழுதுவது என்று தெரியாமல், அந்த தளத்தில் இந்த தளத்தில் எழுதியதை தன் தளத்தில் போட்டு கமர்ஷியல் டி.ஆர்.பி கூட்டிக்கொண்டு இருக்கிறாப்ல‌!!

கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பின் தான் அழிவான மரணம் "நித்திரையாக" மாறியது!! மரிக்கும் அனைவருக்கும் உயிர்த்தெழுதலின் நம்பிக்கை தருவதே கிறிஸ்துவின் ஈடுபலியும் அதை தொடர்ந்து அவரின் உயிர்த்தெழுதலும்!! ஆனால் இந்த கோமாளி கூட்டம் தான் மரித்தாலும் "ஆத்துமா" பரலோகம், பாதாளம், பரதீசு, ஆபிரகாமின் மடி என்று பலவிதமான இடங்களுக்கு போய் உட்காருதாம்!! தன் ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார் என்று வேதம் கிறிஸ்துவை குறித்து சொல்லியிருக்கிறது, அதை எல்லாம் இவர்கள் ஏதோ காமெடி என்று சொன்னாலும் சொல்லுவார்கள்!!

கொல்வின் உங்களிடம் மண்ணிப்பு கேட்டதை ஒரு பெரிய விவாதமாக எழுதி அதன் மூலம் கொல்வினிடம் சொல்லப் பட்ட விஷயம் என்னவென்றால், பன்றிகளிடம் மன்னிப்பு கேட்டாராம் கொல்வின்!! இவனுக்கு எல்லாம் என்னத்த சொல்லுவது!!

இந்த கோமாளியின் பதிவுகளால் நம் தளத்தை அழுக்கு படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன் சகோ சோல் சொல்யூஷன் அவர்களே!! கோமாளி என்று இவனே ஒப்புக்கொண்ட பிறகு இனி அவனை கோமாளி என்று அழைக்கும் சுதந்திரத்தை கொடுத்திருக்கிறான்!! நம் பதிவுகளை அவன் அங்கே போட்டால் தேவனுக்கு சித்தமானவர்களுக்கு நம் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கும்!! ஆனால் அவனின் பதிவுகள் இங்கே வேண்டாம், ஏனென்றால் அந்த குப்பைகளை வைத்து நம் தளத்தின் முத்துக்களை மூடுவது போல் இருக்கும்!! குப்பையை அவனிடம் இருக்கும் குப்பைத்தொட்டியில் இருக்க விடுங்கள்!! அவனுக்கு அங்கே வேலையில்லையாம், ஆனால் நமக்கு இங்கே நிறைய வேலையிருக்கு!!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//தம்முடைய சீடர்களுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த‌ பிறகு ஒரு சீடன் , "பிதாவை (இறைவனை) எங்களுக்கு காட்டும்" என்று கேட்டபோது:

அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? ..... நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான் 14:9-11)//

ஏன் நான் பிதாவிலும் பிதா என்னிலும் என்று சுற்றி வளைக்க வேண்டும். நான் தான் நீங்கள் வணங்க வேண்டிய பிதாவாகிய தேவன் என்று சொல்லியிருக்கலாமே. 

யோவான்17:22. நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

கே.கூ சில்சாம் வசனம் பதிக்கிறதாம். இந்த வசனத்தின்படி அவர்களும் ஒன்றயிருக்கும்படி என்றால்....  இவர்கள் எல்லாருமே பிதாவா? ஒன்றாயிருப்பது என்பது மனதால் ஒருமித்திருப்பதே தவிர ஒரே நபராக ஆகிவிடுவது அல்ல. (பிதாவாகிய) தேவனே மனிதனாக வந்தார் என்றால் இயேசு பிதா என்னை அனுப்பினார் என்று பொய் சொன்னாரா? 

கேலிக்கூத்து!

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Newbie

Status: Offline
Posts: 3
Date:

Brother, Praise the Lord.

The subject is confusing me. Do we believe Trinity God? God the Father, God the son, and God the Holy Spirit.

Please do not confuse the believers. God the Father created the heaven and earth. The same Father came as flesh(Jesus Christ) and the flesh came as Holy Spirit. No one can see God the Father. The seen God the Father is Jesus Christ. And the God the Father lives in everyones heart as the Holy Spirit.

Many blessings,

Benedict



__________________


Senior Member

Status: Offline
Posts: 147
Date:

Benedict wrote:

Brother, Praise the Lord.

The subject is confusing me. Do we believe Trinity God? God the Father, God the son, and God the Holy Spirit.

Please do not confuse the believers. God the Father created the heaven and earth. The same Father came as flesh(Jesus Christ) and the flesh came as Holy Spirit. No one can see God the Father. The seen God the Father is Jesus Christ. And the God the Father lives in everyones heart as the Holy Spirit.

Many blessings,

Benedict


 நேர்த்தியான கருத்துக்காக நன்றி ஐயா..! திரித்துவ தேவனின் தன்மைகளை இதைவிட எளிமையாக விளக்க யாராலும் முடியாது என்று நினைக்கிறேன்.



__________________
"Praying for your Success"


Senior Member

Status: Offline
Posts: 147
Date:

திரித்துவத்தை நம்புவோர் கோமாளிகள் என்றால் நம்பாதவர்களை யார் என்றும் சொல்லுவீர்களா..?



__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Br Benedict:
//Please do not confuse the believers. God the Father created the heaven and earth. The same Father came as flesh(Jesus Christ) and the flesh came as Holy Spirit. No one can see God the Father. The seen God the Father is Jesus Christ. And the God the Father lives in everyones heart as the Holy Spirit.//

Do you have verses to support your argument, dear Dr Benedict!!

Is Jesus Christ anywhere in Scriptures mentioned as God the Father?? Does the scripture say of Holy Spirit in Flesh??

God cannot be seen and that is why He send His only Son, Lord Jesus Christ, which neither the Jews nor the Christiandom believes!!!



God Bless you Br!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//திரித்துவத்தை நம்புவோர் கோமாளிகள் என்றால் நம்பாதவர்களை யார் என்றும் சொல்லுவீர்களா..?//

இல்லாததை நம்புவோர் கோமாளிகள்!! இல்லாததை நம்பாதவர்களுக்கு பெயர் வைக்க தேவையில்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:

bereans wrote:

//திரித்துவத்தை நம்புவோர் கோமாளிகள் என்றால் நம்பாதவர்களை யார் என்றும் சொல்லுவீர்களா..?//

இல்லாததை நம்புவோர் கோமாளிகள்!! இல்லாததை நம்பாதவர்களுக்கு பெயர் வைக்க தேவையில்லை!!

 Welcome Dr. Benedict!! It is nice to see your posts in the forum!! Though we may be different in Faith and understanding, but our God is the same!! He understands us and He loves us!!

http://kovaibereans.activeboard.com/t45513263/welcome-dr-benedict/


சில நிமிட இடைவெளியில் தனது சொந்த கருத்தையே ஒருவர் மறுத்து எழுதலாமா..?

இதோ டாக்டருக்கு ஒருவிதமான பதிலும் எனக்கு ஒருவிதமான பதிலும் தரப்படுகிறது;எனக்கு தரப்பட்ட பதிலின்படி டாக்டரும் கோமாளியாகிறார்; டாக்டருக்கு தரப்பட்ட பதிலின்படி நான் மாற்றுக் கருத்து அல்லது மாற்று விசுவாசம் உடையவன் அவ்வளவே.

இதில் கோமாளித்தனத்துக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது?



__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//சில நிமிட இடைவெளியில் தனது சொந்த கருத்தையே ஒருவர் மறுத்து எழுதலாமா..?//

டாக்டர் பெனிடிக்டின் வாதத்திற்கும் சில்சாமின் விவாதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது!! அவரின் வயதிற்கு நான் அவரை மதிக்க வேண்டுமே!! ஆகவே தான் இப்படி எழுதினேன்!!

Welcome Dr. Benedict!! It is nice to see your posts in the forum!! Though we may be different in Faith and understanding, but our God is the same!! He understands us and He loves us!!

 

 



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:

bereans wrote:

டாக்டர் பெனிடிக்டின் வாதத்திற்கும் சில்சாமின் விவாதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது!! அவரின் வயதிற்கு நான் அவரை மதிக்க வேண்டுமே!! ஆகவே தான் இப்படி எழுதினேன்!!


 மையக்கருத்து  என்ன, திரித்துவத்தை நம்புவோர் கோமாளிகள் என்பது தானே... அப்படியானால் டாக்டரும் கோமாளியா என்று அறிய விரும்புகிறேன்.



__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

// மையக்கருத்து  என்ன, திரித்துவத்தை நம்புவோர் கோமாளிகள் என்பது தானே... அப்படியானால் டாக்டரும் கோமாளியா என்று அறிய விரும்புகிறேன்.//

டாக்டர் அவரின் விவாதத்தை வைக்கட்டும், பிறகு பார்க்கலாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:

bereans wrote:

// மையக்கருத்து  என்ன, திரித்துவத்தை நம்புவோர் கோமாளிகள் என்பது தானே... அப்படியானால் டாக்டரும் கோமாளியா என்று அறிய விரும்புகிறேன்.//

டாக்டர் அவரின் விவாதத்தை வைக்கட்டும், பிறகு பார்க்கலாம்!!


 அப்படியானால் அவர் விரைவிலேயே கோமாளியாகிவிடுவார் என்கிறீர்கள்... உங்களுடைய கருத்தை ஏற்காதவரை கோமாளி என்று பரியாசம் செய்யும் அதிகாரத்தைக் கொடுத்தது யார்,இது தான் ஜனநாயகமா, இதுதான் கருத்து சுதந்தரமா, இதுதான் கலந்துரையாடலின் நாகரீகமா..?



__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

திரித்துவம் என்பது வேதத்தில் இல்லாத வார்த்தை, கருத்து!! அப்படி இல்லாததை போதிப்பவர்கள் கிறிஸ்து விரோதிகள்!! பொது மேடைகளில் விமர்சிப்பதும், விமர்சிக்கப்படுவதும் சகஜமே, ஆனாலும் அது தனிப்பட்ட தாக்குதலாக இல்லாதவரை!! கருத்து சுதந்திரத்தை பறித்து, கருத்துக்களை பதிவிட முடியாமல் செய்வது என் நோக்கமும் இல்லை, இந்த தளத்தில் அப்படி நடந்ததும் இல்லை!!

நான் டாக்டரிடம் கேட்ட கேள்விகளுக்கு இன்னமும் அவர் பதில் தரவில்லையே!! உங்களுக்கு ஏன் அவசரம்!! விவாதம் நடக்கட்டும்!! எல்லோருக்கும் உங்கள் புரிந்துக்கொள்ளுதல் என்று ஏன் நம்புகிறீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:

கடந்த ரெண்டு வருடமாக நாம் பேசாததையா டாக்டர் பேசப் போகிறார்? டாக்டர் நம்மைப் போல முழுநேரமும் இங்கே விவாதித்து ஒரு முடிவை நோக்கி நம்மை நடத்துவார் என்று எனக்குத் தோன்றவில்லை; நீங்கள் இதுவரை ஒரு இம்மியும் நகர்ந்து கொடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளுகிறீர்களா? அப்படியானால் உலகத்திலேயே சிறந்த உண்மையை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள் அப்படித்தானே..? கௌரவம் கருதி விலகினால் சிலர் ஓடுகாலி  என்கிறார்களே அதைக் குறித்து என்ன சொல்லுகிறீர்கள்?



__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யுதத்தில் நின்று மாண்டு போகிறவன் தான் வீரன்!! முதுகைக்காட்டி ஒடுகிறவன்......................? திரித்துவம் இங்கே புதிது கிடையாது!! இங்கே எழுதுவோர் அனைவரும் திரித்துவ விசுவாசத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான்!! கண்கள் திறக்ப்பட்ட பிறகு தான் இருளில் இருந்தது தெரியும், சிலருக்கு இருளில் தெளிவாக நடக்கும் திறமை உண்டு!!

இந்த தளத்திலும் சரி யெளவன ஜனத்திலும் சரி, திரித்துவத்தை வாதிடுவோர்...பாவம், நாங்கள் திரித்துவத்தை அவர்களை விட பிரமாதமாக சொன்னவர்கள் தான்!!

நாங்கள் இருப்பதும் செயல்ப்படுவதும் சிந்திப்பதும் அவராலே அன்றி ஏதோ எங்கள் திறமையினால் கிடையாது!! டாக்டர் எழுதுகிறாரோ இல்லையோ என்பது விஷயம் கிடையாது, விஷயம் வேதத்தில் இல்லாத திரித்துவம், அதை நிரூபிக்க வசனத்தை அல்ல, உலக பொருளை மாத்திரம் தான் பயன்ப்படுத்த முடியும்!! எல்லா மார்க்கங்களும் திரித்துவத்தை போதிக்கிறது, அப்படியே கிறிஸ்தவ மண்டலமும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:

// யுதத்தில் நின்று மாண்டு போகிறவன் தான் வீரன்!! முதுகைக்காட்டி ஒடுகிறவன்......................?  //

நான் வீரனா, கோழையா என்று எனது வாசகர்கள் சொல்லட்டும்...இங்கே நேருக்கு நேர் நின்று விமானப்படை அதிகாரிகளுடன் மோதினவன்  நான்... ஆனால் அந்த உயர் அதிகாரிகளுக்கு என்னோடு மோதும் தைரியம் இருந்ததில்லை;இன்றுவரை காப்பி பேஸ்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கொள்கையின்படி  நீங்கள் அன்பு அவர்களிடமும் ஜாண் அவர்களிடமும் தோற்றுப்போனது உண்மைதானே..? அவர்களுடைய பல கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியவில்லையே..?

"நான் சொன்னா சொன்னதுதான்...ஏற்பதற்கு இஷ்டமில்லாவிட்டால் வெளியேறு,உன்னைப் பொறுத்தவரை இந்த தளம் மூடிவிட்டது, என்று அடம்பிடிப்பதுதான் வெற்றி பெற்றதன் அடையாளமா?



__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இங்கே யாரும் விமானப்படை அதிகாரத்தை வெளிப்படுத்தவில்லை!! இதற்கும் திரித்துவத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது!!

இயேசு கிறிஸ்துவிற்கு அத்துனை வல்லமைகள் இருந்தும் சில சமயம் அவர் சில இடங்களில் மறைந்து போனார், பேசவில்லை!! அது தோல்வி கிடையாது!!

இல்லாத ஒன்றை கேட்பது எனக்கு டார்வினின் பரினாம வளர்சி கொள்கையை தான் ஞாபகப்படுத்துகிறது!! ஜானும் சரி அன்பும் சரி, அவர் அவர் புரிந்துக்கொண்டதை விட முடியவில்லை என்றால் எனக்கு மட்டும் என்ன வித்தியாசமான ஆலோசனை!!

அப்படி வெளியேற சொல்லும் தளமாக இது இருந்திருந்தால் இந்த தளத்திற்கும் இங்கே இருப்போரின் விசுவாசத்திற்கு எதிர்த்து எழுதப்பட்ட ஒரு பதிவும் இருந்திருக்காது, அப்படி எழுதுவோர் இந்த தளத்திலிருந்து நீக்கப்பட்டும் இருந்திருப்பார்கள்!! தமிழ் கிறிஸ்தவம் போன்ற ஒரு சர்வாதிகார தளத்தையும் ஆனவம் பிடித்த மாடரேட்டர்(கள்) இருக்கும் வரை கோவைபெரேயன்ஸ் போன்ற தளத்தை விமர்சிக்க யாருக்கும் தகுதி கிடையாது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard