kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீமைக்கு யார் காரணம்? தேவனா?


Executive

Status: Offline
Posts: 425
Date:
RE: தீமைக்கு யார் காரணம்? தேவனா?


எபிரெயர் 9:27 ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, ..

இவ்வசனத்தை சகோ.பெரியன்ஸ்-ம் சகோ.சோல்சொல்யூஷனும் அடிக்கடி மேற்கோள் காட்டி மனிதர்களுக்கு 2-ம் மரணம் கிடையாது என்கின்றனர்.

இவ்வசனம் 2-ம் மரணத்திற்கு எதிரானதல்ல என என்னால் விளக்கமுடியும். ஆனால் அந்த விளக்கத்தை நம் சகோதரர்கள் ஏற்கப்போவதில்லை. எனவே 2-ம் மரணம் கிடையாது என சாதிக்கும் நம் சகோதரர்களிடம் பின்வரும் வசனத்திற்கான விளக்கத்தைத் தரும்படி வேண்டுகிறேன்.

மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

சரீரத்தை மாத்திரம் கொல்லுதல் என்றால் என்ன? ஆத்துமாவைக் கொல்லுதல் என்றால் என்ன? ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழித்தல் என்றால் என்ன?

ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவர் யார்? அவருக்கு ஏன் பயப்பட வேண்டும்? எல்லோருக்கும் நித்திய ஜீவன் தானே கிடைக்கப் போகிறது (உங்கள் புரிந்துகொள்தலின்படி)? பின்னர் ஏன் ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்குப் பயப்பட வேண்டும்?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

எபிரெயர் 10:28 மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; 29 தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.

இவ்வசனங்களின்படி பார்த்தால், மோசேயின் பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் பெறுகிற ஆக்கினையான “சாவை” விட, தேவகுமாரனின் உடன்படிக்கையைத் தள்ளுகிறவனுக்கான ஆக்கினை மிகக்கொடியதாக இருக்கும் என்றாகிறதே! அப்படியானால் இதுவும் இரக்கமில்லாத ஆக்கினை தானே? மாத்திரமல்ல, அது “சாவை” விடவும் கொடிதான ஆக்கினைதானே? கொடிதான அந்த ஆக்கினை என்னவாக இருக்கும்?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//கொலோ2:14. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;

15. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.//

அதே கொலோசெயர் நிருபத்தில் பவுல் கூறியுள்ள பின்வரும் கட்டளைகள் நமக்கு எதிரிடையானவைகளா நமக்கு ஆதரவானவைகளா?

கொலோ. 3:5 ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். 6 இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.

தேவகோபாக்கினையின் விளைவு என்ன? நித்தியஜீவனா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//I யோவான் 2:2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.*

*No Conditions Apply//

No Conditions Apply என்பது தவறான தகவல். There is a condition. I think this condition is not printed in Soulsoluton's Bible.

1 யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

ஆம், நம் பாவங்களை நாம் அறிக்கையிட்டால் ... என்பதுதான் condition.

ஒருவன் எப்போது தன் பாவங்களை அறிக்கையிடுவான்? தன் பாவங்களை உணரும்போதுதான்.

பாவங்களை அறிக்கையிடுபவன் என்ன தீர்மானம் செய்வான்? மீண்டும் மீண்டும் பாவம்செய்து உணர்ந்து அறிக்கையிடுவோம் என்றா? அல்லது இனி பாவம் செய்யக்கூடாது என்றா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//நாங்கள் "பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்றுதான் இன்றுவரை கதறிக்கொண்டிருக்கிறோம்!//

ஓ, கிருபை பெருகும்படிக்குதான் பாவத்தில் நிலைநிற்கிறீர்களோ?

1 யோவான் 3:4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். (சோல்சொல்யூஷன் கேட்கிறார்: நியாயப்பிரமாணமா? நமக்கு எதிரிடையாக இருந்த அதைத்தான் இயேசு குலைத்துவிட்டாரே?)

5 அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை. 6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. (சோல்சொல்யூஷன் சொல்கிறார்: இப்படிச் சொன்னால் எப்படி யோவான்? பாவம் செய்தால்தானே கிருபை பெருகும் என பவுல் கூறுகிறார். எனக்குக் கிருபைதான் பெருகணும்; அதனால் நான் பாவியாகத்தான் இருப்பேன்.)

7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். 8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். (சோல்சொல்யூஷன் சொல்கிறார்: பிசாசினால் உண்டானால் என்ன குறைந்து போகும் யோவான்? பிசாசால் உண்டானவன் தேவனால் உண்டானவன் எல்லாருக்கும் பாரபட்சமின்றி நித்திய ஜீவன் தான் எனும் இரகசியம் உங்களுக்குத் தெரியாதா? ஒருமுறை Truth Seekers தளத்திற்கு வாங்க, எல்லா இரகசியத்தையும் தெரிஞ்சிக்கிவீங்க.)


9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். 10 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. (
சோல்சொல்யூஷன் சொல்கிறார்: எல்லாம் சரிதான் யோவான், இப்போ நாம் தேவனால் உண்டாயிருக்கோமா, பிசாசால் உண்டாயிருக்கோமா என்பதா முக்கியம்? நமக்கு நித்திய ஜீவன் உண்டா இல்லையா என்பதுதான் முக்கியம். நானும் சகோ.பெரியன்ஸ்-ம் சேர்ந்து வேதாகமத்தை முழுசா ஆராய்ச்சி பண்ணி, எல்லாருக்கும் நித்திய ஜீவன் தான்னு கண்டுபிடிச்சிட்டோம். அதனால உங்கள் மிரட்டலெல்லாம் எங்களிடம் பலிக்காது, புரியுதா?)



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

// 6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை//

ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக்கவும். நீர் பாவஞ்செய்கிறதில்லையா? 

ஆம் அல்லது இல்லை என்பதே உமது பதிலாக இருக்கவேண்டும். வீணாக எப்போதும்போல வழவழா கொழ கொழா விளக்கங்கள் தேவையில்லை.

ஆம் என்றால் உமது கிரியையைக் கொண்டு அந்தப் பாவங்களை உம்மாலேயே நிவிர்த்தி செய்ய இயலுமா? இயலும் என்றால் உமக்கு கிறிஸ்து அவசியமில்லை. கிருபையும் அவசியமில்லை. 

இந்தத்திரியின் ஆரம்பத்தில் தேவன் தீமைக்குக் காரணம் என்று தெளிவாக வசன ஆதாரங்களுடன் பதித்திருக்கிறேன். அதற்கு பதில் சொல்ல இதுவரை ஒருவருக்கும் துப்பில்லை. விதண்டாவாதம் செய்து விவாதத்தைத் திசைதிருப்ப வந்துவிட்டார்கள். பாவமன்னிப்பே அவசியமில்லாத சுயநீதிப்போதகர்கள். 

ஆக அன்பு அவர்களின் வாதங்களிலிருந்து நான் புரிந்துகொண்டது,


  • இயேசுகிறிஸ்து உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க வரவில்லை.

        ஆதாமின் பாவத்தை மட்டும் சுமந்து தீர்த்தார்.

  • மற்றவர்கள் பாவிகள்தான் என்றாலும் பாவத்தின் சம்பளம் 'மரணம்' என்ற விஷயம் அவர்களுக்கு செல்லாது. ஆதாமின் பாவத்துக்கு கிரயம் செலுத்தப்பட்டதால் இவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படாமலேயே உயிர்த்தெழுவார்கள்.
  • இப்போதே தெரிந்தும் தெரியாமலோ வேதத்தை வாசித்தும் அதை 'சரிவர' கடைபிடித்து நீதியை தங்கள் 'கிரியைகள்' மூலமாக காண்பிக்காதவர்களுக்கு கிறிஸ்துவின் ராஜ்ஜியம் கிடையாது. அவர்கள் 'இறுதி நியாயத்தீர்ப்பு'க்கு உயிர்த்தெழுவார்கள், அதன்பின் ஒரு சில நிமிடங்களில் இரண்டாம் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
  • ராஜ்ஜியத்தில் உயிர்த்தெழுந்த பாவிகளும் ராஜ்ஜியத்தில் அவனவனுடைய கிரியையைக் கொண்டு நியாயந்தீர்க்கப்படுவார்கள். அதில் தேறாதவர்களும் இரண்டாம் மரணத்துக்கு அனுப்பப்படுவார்கள்.

என்னுடைய கருத்து, இப்போது எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களாகாக் கூடுமானால், ராஜ்ஜியத்திலும் அது நடக்க வாய்ப்புள்ளது எனவே அன்பு போன்ற இரக்கமே உருவான ஒரு சில நீதிமான்கள்தவிர மற்றவர்கள் அனைவரும் இரண்டாம் மரணத்துக்குத் தள்ளப்படுவார்கள்.

"மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்" என்ற கூற்று வேதம் சொல்லும் ஒரு மாபெரும் பொய்யாகும்.




-- Edited by soulsolution on Saturday 23rd of July 2011 11:04:08 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//மத்தேயு 23:23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

இவ்வசனத்தைப் படிக்கிற சோல்சொல்யூஷன், இப்படியும் சொல்வாரோ?

//நீதி, இரக்கம், விசுவாசம் என்பவைகளெல்லாம் தேவன் வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் சோல்சொல்யூஷனாகிய எனக்கும் இயற்கையாகவே கொடுத்த சுபாவம், அதை இயேசு மூலமாக வேதபாரகருக்கோ பரிசேயருக்கோ எனக்கோ போதிக்கவேண்டும் என்ற கட்டாயம் தேவனுக்கில்லை.//

அது சரி, கிறிஸ்து போதித்து எத்தனை வேதபாரகரும், பரிசேயரும் மனந்திரும்பி அப்போஸ்தலராக மாறினார்கள்?கூடவே இருந்த யூதாஸையே திருத்தமுடியவில்லையாம், பாவம் பரிசேயன் என்ன செய்வான். யூதாஸ் ஏன் காட்டிக்கொடுத்தான் என்று விளக்க முடியுமா? ஏன் கிறிஸ்துவே தோற்றுப்போய்விட்டாரா? அவன் காட்டிக்கொடுப்பதற்கென்றே படைக்கப்பட்டானா இல்லை தற்செயலாகக் காட்டிக்கொடுத்தானா? என்னய்யா உளருகிறீர்?

சுயநீதிப் போதை தலைக்கேறி என்ன பதிக்கிறோமென்றே தெரியாத அளவு தள்ளாடுகிறார் அன்பு.

இராஜ்ஜியத்தின் நற்செய்தியென்றால் என்னவென்றே தெரியாமல் நியாயப்பிரமாணத்தை இன்னமும் போதித்துக்கொண்டிருக்கும் கள்ளசகோதரர்தான் இவர்.

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், முன்குறிக்கப்பட்டவர்கள் யாரால், எதற்காக என்று விளங்காதவரை செவிடன் காதில் ஊதும் சங்குதான். சகலமும் தேவசித்தம், சகலருக்கும் இரட்சிப்புதான். உமக்கேன் வெறுப்பு.

சொற்பகாலத்துக்கு முன் வந்த தமிழ் வேதாகம 'போதனைகளைக்' கேட்காமலேயே மரித்துப்போன கோடா கோடி தமிழர்கள் என்னவாவார்கள்? உடனே அவர்கள் மனசாட்சிப்படி நியாயம்தீர்க்கப்படுவார்கள் என்பீர்கள். அது சாத்தியமாகும் பட்சம் வேதம் எதற்கு? வேதம் வந்தபிறகு மனசாட்சி காணாமலா போய்விட்டது?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக்கவும். நீர் பாவஞ்செய்கிறதில்லையா? 

ஆம் அல்லது இல்லை என்பதே உமது பதிலாக இருக்கவேண்டும். வீணாக எப்போதும்போல வழவழா கொழ கொழா விளக்கங்கள் தேவையில்லை.//

என்ன திடீரென “நீர்” எனும் வார்த்தைப் பிரயோகம்? என்மீது வெறுப்பு வளர்கிறதா?

நீங்கள் ஓர் அநாகரீகவாதி என்பது எனக்கு முன்பே தெரியும் (பழைய விவாதங்களின்போது). எனவேதான் உங்களோடு விவாதிப்பதை நிறுத்தியிருந்தேன். சமீபகாலமாக உங்கள் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் காணப்பட்டதால் மீண்டும் உங்களோடு விவாதிக்கத் துணிந்தேன். ஆனால் தற்போது ஏனோ தெரியவில்லை, மீண்டும் கொஞ்சங்கொஞ்சமாக அநாகரீகத்தை கொட்டி வருகிறீர்கள்.

வேதாகமத்தின் அடிப்படையில் ஒருவர் ஒரு போதனையைத் தந்தால், உடனே “நீ இப்படிச் செய்கிறாயா” எனக் கேள்வி கேட்பது அநாகரீகம் நண்பரே! நான் போதிக்கிற வசனங்களுக்கு மாறாக நான் நடப்பதாக அறிந்தால், நீங்கள் தாராளமாக அதைச் சுட்டிக்காட்டலாம். அதுவும் “ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள்” என்ற வசனத்தின்படி எனக்கு புத்தி சொல்லி என்னைத் திருத்துவதுதான் உங்கள் நோக்கமாக இருக்கவேண்டுமேயொழிய, என்னைக் குற்றப்படுத்துவது உங்கள் நோக்கமாக இருக்கக்கூடாது.

நீங்களோ என்னை எப்படியாவது குற்றப்படுத்தி, அதன் அடிப்படையில் என்னை வாயடைக்க வேண்டும் என்பதில்தான் நோக்கமாக இருக்கிறீர்கள். முதலாவது “நீ உனக்குண்டானதை விற்று தரித்திரருக்குக் கொடுக்கிறாயா” என்றீர்கள். பின்னர் “நான் உங்களிடம் 1 லட்சம் கேட்டால் கொடுப்பீர்களா, உங்கள் வாகனத்தைக் கேட்டால் கொடுப்பீர்களா” என்றீர்கள். தற்போது “நீர் பாவஞ்செய்கிறதில்லையா” எனக் கேட்கிறீர்கள்.

நான் எப்படியிருந்தால் என்ன நண்பரே? அதற்கும் நம் விவாதத்திற்கும் என்ன சம்பந்தம்? நான் ஒருவன் வசனத்தின்படி நடக்காவிட்டால், வசனம் பொய்த்துப் போகுமா? நான் உங்களைப் பற்றி எதுவும் கேட்காதபோது நீங்களாகவே “நாங்கள் "பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்றுதான் இன்றுவரை கதறிக்கொண்டிருக்கிறோம்!” என்று சொல்லி, ஏதோ நானெல்லாம் “நான் பாவியல்ல, எனக்குக் கிருபை வேண்டாம்” எனக் கூறிக் கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை உண்டாக்கினீர்கள். எனவேதான் நீங்கள் உணர்வைப்பெறுவதற்காக 1 யோவான் 3:4-11 வசனங்களைப் போட்டுக் காட்டினேன். உடனே நீங்கள் அவ்வசனங்களை எனக்கு நேராகத் திருப்பி, “நீர் பாவஞ்செய்கிறதில்லையா” என்கிறீர்கள்.

நான் பாவியா இல்லையா என்பதைத் தீர்மானிக்கவேண்டியது நீங்களும் நானுமல்ல, தேவனே அதை தீர்மானிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு கணமும் என் செயல்களை நான் உய்த்து ஆராய்ந்து (செப்பனியா 2:2-ன்படி), வசனத்திற்கு விரோதமானவற்றை களைந்து கொண்டேயிருக்க வேண்டும். ஒருவேளை நான் வசனத்திற்கு விரோதமாக நடந்து பாவம் செய்திருந்தால், அதைக் குறித்த உணர்வு பெற்றதும் குறிப்பிட்ட அப்பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டி மீண்டும் அப்பாவத்தை செய்யக்கூடாதென தீர்மானிக்க வேண்டும்.

மாறாக, எந்தவொரு உணர்வுமில்லாமல் “நான் பாவி, நான் பாவி” என சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை. “நான் பாவி” எனச் சொன்னால், எந்தப் பாவத்தை நாம் செய்துள்ளோம் என்பதை உணர்ந்து, அதை அறிக்கையிட்டு, தேவனிடம் மன்னிப்பு வேண்டுவதுதான் உசிதமானதேயொழிய, சும்மா ஒப்புக்காக “நான் பாவி, நான் பாவி” எனச் சொல்வதில் பயனில்லை.

உங்களைப் பொறுத்தவரை, நான் ஏதேனும் பாவம் செய்வதை அறிந்தால், அதைத் தாராளமாகச் சுட்டிக்காட்டி என்னைக் கண்டிக்கலாம், எனக்கு புத்தியும் சொல்லலாம். அதைவிடுத்து, நீ பாவியா, நான் பாவியா எனப் போட்டிபோடுவது நாகரீகமல்ல.

பவுல் தன்னை ஒருமுறை “பிரதான பாவி” எனச் சொன்னார். அதற்காக எப்போதும் அதையே அவர் சொல்லிக்கொண்டிருக்கவில்லை. எல்லோருமே ஒரு காலகட்டத்தில் பாவம் செய்து மனந்திரும்பியவர்களாகத்தான் இருப்போம். அதனடிப்படையில்தான் தனது பழைய பாவங்களை மனதில் வைத்து பவுல் அப்படிச் சொன்னார். அதே பவுல், மற்றொரு சந்தர்ப்பத்தில் என்ன கூறினார் என்பதை சற்று படியுங்கள்.

1 கொரி. 4:4 என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.

ஆம், நம்மிடத்தில் குற்றம் உள்ளது என்ற நினைப்போடு எப்போதும் இருக்கக் கூடாது. ஒருவேளை “நம்மிடம் குற்றம் உள்ளது” என அறிந்தால், உடனே அதினிமித்தம் மனஸ்தாபப்பட்டு தேவனிடம் மன்னிப்பு வேண்டி மீண்டும் அதே குற்றத்தைச் செய்யாதபடி எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அதன்பின் அந்தக் குற்றத்தைக் குறித்த குற்ற உணர்ச்சி நம்மிடம் இருக்கக் கூடாது. இப்படியாக குற்ற உணர்ச்சி இல்லாத நாமுங்கூட பவுலைப் போல், “என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் காணேன்” எனத் தைரியமாகச் சொல்லலாம்.

ஆகிலும் இதைக் குறித்து நாம் மேன்மை பாராட்டுவது எவ்விதத்திலும் தகுதியானதல்ல. ஏனெனில் நம்மை நியாயம் விசாரிப்பவர் கர்த்தரே! எனவே “நீர் பாவஞ்செய்கிறதில்லையா” எனும் உங்கள் கேள்விக்கு எனது பதில்:

“என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே” என்பதே.

கர்த்தருக்கும் எனக்குமான காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு காலகட்டத்தில் பவுல் இப்படியும் சொன்னார்:

2 தீமோ. 4:7 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது,

பவுலைப் போல் இப்படியும் சொல்லத்தான் எனக்கு ஆசை. அதற்காகவே நான் தற்போது போராடிக்கொண்டிருக்கிறேன்; என் போராட்டத்தின் ஓட்டத்தை நான் முடித்துவிட்டேன் என்ற நம்பிக்கை எனக்கு வரும்போது, பவுல் சொன்ன விதமாகவே நானும் சொல்வேன். ஆனால் பாவத்தைக் குறித்த உணர்வில்லாதவனாக, சும்மா ஒப்புக்காக “நான் பாவி, நான் பாவி” என ஒருபோதும் ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன்.

நீங்கள் கேட்டதைப்போல் “ஆம், இல்லை” எனும் பதிலாக இல்லாமல், வழக்கம் போல் வழவழா கொழகொழா பதில்தான் இது. எனது வசதிப்படித்தான் நான் பதில் சொல்லமுடியுமேயொழிய உங்கள் வசதிப்படி என்னால் பதில் சொல்ல இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//இந்தத்திரியின் ஆரம்பத்தில் தேவன் தீமைக்குக் காரணம் என்று தெளிவாக வசன ஆதாரங்களுடன் பதித்திருக்கிறேன். அதற்கு பதில் சொல்ல இதுவரை ஒருவருக்கும் துப்பில்லை.//

ரொம்ப அலட்ட வேண்டாம் நண்பரே! நீங்கள் தந்த வசனங்கள் “தேவனே தீமைக்குக் காரணம்” என்பதற்கு ஆதாரமான வசனங்கள் அல்ல, “தேவனிடமிருந்து தீமை புறப்படுகிறது அல்லது தேவன் தீங்கைச் செய்கிறார்” என்பதற்கு மட்டுமே ஆதாரமான வசனங்கள்.

தீமைக்குக் காரணம் யாரெனக் கேட்டால், மனிதன் தான், குறிப்பாக ஆதாம் தான் தீமைக்குக் காரணம் என்பதுதான் பதில். ஆதாரம்:

ஆதியாகமம் 3:17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். 18 அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.

ஆதாமின் மீறுதலால் இப்பூமி தேவனால் சபிக்கப்பட்டதால்தான் இத்தனை தீமைகளும் உலகில் வந்தன. ஒரு குற்றவாளிக்கு நீதிபதி தண்டனை கொடுத்தால், அந்தத் தண்டனையாகிய தீமைக்குக் காரணம் குற்றவாளிதானேயொழிய, நீதிபதியல்ல. அதுபோலத்தான் இப்பூமி சபிக்கப்பட்டதற்குக் காரணம் குற்றம் செய்த ஆதாம் தானேயொழிய, தண்டனை வழங்கி பூமியைச் சபித்த தேவன் காரணமல்ல. உங்கள் பார்வைக்கு மேலும் சில வசனங்கள்:

ஏசாயா 1:5 இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகம் அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.
6 உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. 15 நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
16 உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்; 17 நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். 19 நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். 20 மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.

2 சாமுவேல் 12:15 அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.

சங்கீதம் 38:4 என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று. 5 என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.

சங்கீதம் 39:11 அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்;

சங்கீதம் 107:17 நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.

தேவன் தான் ஆதாமை பாவம் செய்ய வைத்தார், மனுஷர்களைப் பாவம் செய்ய வைக்கிறார் எனும் உங்கள் கருத்தெல்லாம் அபத்தமானவை.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//சொற்பகாலத்துக்கு முன் வந்த தமிழ் வேதாகம 'போதனைகளைக்' கேட்காமலேயே மரித்துப்போன கோடா கோடி தமிழர்கள் என்னவாவார்கள்? உடனே அவர்கள் மனசாட்சிப்படி நியாயம்தீர்க்கப்படுவார்கள் என்பீர்கள்.//

ஆம், நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் ஒரு திருத்தம். மனச்சாட்சிப்படி நியாயந்தீர்க்கப்படுவார்கள் எனும் பதிலைச் சொன்னது நானல்ல, பவுலே!

ரோமர் 2:11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை. 12 எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள். 13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். 14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். 15 அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். 16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//எபிரெயர் 9:27 ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, ..

இவ்வசனத்தை சகோ.பெரியன்ஸ்-ம் சகோ.சோல்சொல்யூஷனும் அடிக்கடி மேற்கோள் காட்டி மனிதர்களுக்கு 2-ம் மரணம் கிடையாது என்கின்றனர்.

இவ்வசனம் 2-ம் மரணத்திற்கு எதிரானதல்ல என என்னால் விளக்கமுடியும். ஆனால் அந்த விளக்கத்தை நம் சகோதரர்கள் ஏற்கப்போவதில்லை. எனவே 2-ம் மரணம் கிடையாது என சாதிக்கும் நம் சகோதரர்களிடம் பின்வரும் வசனத்திற்கான விளக்கத்தைத் தரும்படி வேண்டுகிறேன்.//

இவ்வசனத்தின் விளக்கத்தை முதலில் கொடுங்கள், ஏற்கப்போவதில்லை என்கிறது எல்லாம் அடுத்த விஷயம்!! நீங்கள் விளக்காமலே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று விளக்கம் தராமல் இருப்பதற்கு தான்!! ஒரே தரம் மரிப்பது என்பது எப்படி இரண்டாம் மரணத்திற்கு எதிரான வசனம் கிடையாது என்பதை நீங்கள் நிச்சயமாக விளக்கியாக வேண்டும்!!

இப்படி ஒவ்வொரு வசனத்திற்கும் விளக்கம் தந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்றால் எதற்கு விவாதம்? ஆனால் 2 திமோத்தேய் 1:9ஐ எப்போ விளக்குவீர்கள்?

//“தேவனிடமிருந்து தீமை புறப்படுகிறது அல்லது தேவன் தீங்கைச் செய்கிறார்” என்பதற்கு மட்டுமே ஆதாரமான வசனங்கள்.//

தேவன் தீங்கள் செய்கிறார் என்பதற்கும் தேவன் தீமைக்கு காரணம் என்பதற்கு வித்தியாசம் இருக்கிறதா!!?? நானே தீங்கை படைத்தேன் என்று அவரே சொல்லும் போது நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள மறுகிறீர்கள்!!

//ஆதாமின் மீறுதலால் இப்பூமி தேவனால் சபிக்கப்பட்டதால்தான் இத்தனை தீமைகளும் உலகில் வந்தன. ஒரு குற்றவாளிக்கு நீதிபதி தண்டனை கொடுத்தால், அந்தத் தண்டனையாகிய தீமைக்குக் காரணம் குற்றவாளிதானேயொழிய, நீதிபதியல்ல. அதுபோலத்தான் இப்பூமி சபிக்கப்பட்டதற்குக் காரணம் குற்றம் செய்த ஆதாம் தானேயொழிய, தண்டனை வழங்கி பூமியைச் சபித்த தேவன் காரணமல்ல. உங்கள் பார்வைக்கு மேலும் சில வசனங்கள்://

ஆதாம் மீறுவதற்கு யார் காரணம் என்று தான் சொல்லுகிறோமே தவிர, ஆதாமின் மீறுதலுக்கு பிறகு நடந்தவை எல்லாருக்கும் தெரியும்!! ஆதாம் மீறுவான் என்று தான் கிறிஸ்து உலக தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக வைக்கப்பட்டாரா அல்லது "பார்க்கலாம், ஆதாம் மீறுகிறானா அல்லது மீறாமால் போகிறானா, ஒரு வேளை மீறிவிட்டால் அதன் பின் இயேசு கிறிஸ்துவை வைக்கலாமா அல்லது இப்பவே வைக்கலாமா" போன்ற குழப்பம் நிறைந்தவர் தான் தேவன் என்று உங்கள் விளக்கம் காண்பிக்கிறது!! நீங்கள் மீறுதலுக்கு பிறகு நடந்ததை விளக்கமாக எழுதுகிறீர்கள், நாங்கள் மறுக்கவில்லை!!

அன்பு அவர்களே மனுஷன் நன்மைஎன்றால் என்னவென்று அறிந்துக்கொள்ள தீமை தேவைப்படுகிறது!! பாவத்தின் விளைவு என்னவென்று புரிந்துக்கொள்ள பாவம் தேவைப்படுகிறது!! இது ஒன்றும் இல்லாத போது ஏதோ மனிதனே தீங்கை கண்டுபிடித்து கிடையாது!! மனிதன் அனுபவத்தில் கற்றுக்கொள்ளவே தேவன் நடத்தி வருகிறார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!! மனிதன் நன்மையிலே வாழ வேண்டும் என்று தேவன் நினைத்திருந்தால், கனியுள்ள மரம் வைக்க வேண்டியதோ, சாத்தான் சாத்தானை அனுமதித்திருக்க அவசியமே இருந்திருக்காது!! சாத்தானை தேவன் தான் அனுமதிக்கிறார் என்பது யோபுவின் புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் நீங்களே வாசித்திருப்பீர்கள்!!

நீதிபதிக்கும் குற்றவாலிக்கும் எந்த தொடர்பும் இல்லாத பட்சத்தில் நீங்கள் சொல்லுவது சரியே!! ஆனால இங்கே நீதிபதிக்கும் குற்றவாலிக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்!! உங்களின் பெரும்பாளுமான எடுத்துக்காட்டுகள் எல்லாம் பிதாவை இந்த பூமிக்குறிய மனிதனுடன் ஒப்பீட்டு பேசுவது!! அது தவறு!! இங்கேயும் மனிதர்கள் சட்டத்தை மாத்திரம் அறிந்த குற்றவாலிக்கு சம்பந்தமே இல்லாத ஒரு நீதிபதியை தேவனான நீதிபதியுடன் சம்பந்தமே இல்லாமால் ஒப்பீட்டிருக்கிறீர்கள்!!

சகோ சோல் சொல்யூஷன் அவர்கள் இத்துனை வசனங்கள் காண்பித்து அதற்கு அர்த்தம் கேட்டால், நீங்களோ அதற்கு விளக்கம் தருவதே கிடையாது!! அது எல்லாம் சோல் சொல்யூஷனின் வேதத்தில் மாத்திரம் இல்லை உங்கள் வேதத்திலும் தான் இருக்கிறது!!

நீதியின் கிரியை மேல் நீங்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள், இல்லை என்று சொல்லாதீர்கள்!! எங்களுக்கு அவரின் கிருபையினால் வரும் கிரியையின் மேல் தான் நம்பிக்கை!! நாங்கள் கிரியை செய்யக்கூடாது என்றோ கிரியை செய்யுங்கள் என்றோ போதிப்பது கிடையாது!! கிருபையினால் கிரியை செய்ய கிறிஸ்து இயேசுவுக்குள் ஆதி முதலே தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களாக இருந்தால் கிரியை தானாகவே வரும் ஆனால் அந்த கிரியை மேன்மைபாராட்டவோ அந்த கிரியையினால் இரட்சிப்போ என்று பிரசங்கிப்பதற்கு அல்ல!! இதை தான் 2 தீமோத்தேயு 1:9 சொல்லுகிறது, ஆனால் அதை ஒவ்வொரு பதிவில் தந்தாலும் அதை நீங்கள் இது வரையில் விளக்குவதாக இல்லை!! ஏனென்றால் நிச்சயமாக அந்த வசனம் நீங்கள் சுட்டி காண்பித்து போதித்து வரும் "கிரியைகளுக்கு" மாற்றான வசனமாக‌ இருக்கிறது!! நாங்கள் சொல்லும் எந்த ஒரு வசனத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு, நீங்கள் சொல்லும் வசனத்தின் தவறான புரிந்துக்கொள்ளுதலை நிலைநாட்ட விரும்புகிறீர்களே!! நியாயமா!!

//தேவன் தான் ஆதாமை பாவம் செய்ய வைத்தார், மனுஷர்களைப் பாவம் செய்ய வைக்கிறார் எனும் உங்கள் கருத்தெல்லாம் அபத்தமானவை.//

ஆதாமை படைக்கும் முன்னமே உலகத்தோற்றமுதல் கிறிஸ்துவை நியமிக்க என்ன காரணம் என்று சொல்ல முடியுமா!! ஒரு வேளை ஆதாம் மீறுதலில் விழாமல் போயிருந்தால் தேவனின் கணக்கு தப்பாகியிருக்குமோ!! அல்லது ஆதாம் ஒரு வேளை பாவம் செய்யாமல் போயிருந்தால் வேறு யாராவது அந்த மீறுதலை நிறைவேற்றி அதன் மூலம் கிறிஸ்துவை யூஸ் செய்தக்கலாம் என்று தேவன் நினைத்தாரோ!! இதை கேட்டால் தேவனிடத்தில் கேளுங்கள் என்று சொல்லுவீர்கள்!! ஆனால் கிறிஸ்து உலக தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக வைக்கப்பட என்ன காரணம் என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்!!

தேவன் இயேசு கிறிஸ்துவை நியமித்திருக்கிறார் என்றாலே ஆதாம் பாவம் செய்து அதினால் இந்த உலகம் தீமையின் அனுபவத்தில் நடக்க வேண்டும் என்பதே தேவனின் சித்தம்!! அது சரிவர நடந்தேறிக்கொண்டு இருக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//அது சரி, கிறிஸ்து போதித்து எத்தனை வேதபாரகரும், பரிசேயரும் மனந்திரும்பி அப்போஸ்தலராக மாறினார்கள்? கூடவே இருந்த யூதாஸையே திருத்தமுடியவில்லையாம், பாவம் பரிசேயன் என்ன செய்வான்.//

ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் கடிச்சி, கடைசியில் மனுஷனையே கடிப்பதென்பது இதுதானோ?

சாதாரண மனுஷர்களாகிய என்னைப் போன்றவர்களைச் சொல்லியவர், இப்போது இயேசுவையும் சொல்லிவிட்டார். அதாவது இயேசுவின் போதனைகூட வீண் தானாம், கோவை பெரியன்ஸ்-ன் “எல்லோருக்கும் நித்திய ஜீவன்” கொள்கை மட்டும்தான் உசத்தியாம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//சாதாரண மனுஷர்களாகிய என்னைப் போன்றவர்களைச் சொல்லியவர், இப்போது இயேசுவையும் சொல்லிவிட்டார். அதாவது இயேசுவின் போதனைகூட வீண் தானாம், கோவை பெரியன்ஸ்-ன் “எல்லோருக்கும் நித்திய ஜீவன்” கொள்கை மட்டும்தான் உசத்தியாம்.//

அன்பு அவர்களே உங்களின் இந்த பதிவு விரக்த்தியின் பதிவாக இருப்பது போல் இருக்கிறது!! சோல் சொல்யூஷனின் பதிவின் ஆழத்தை புரியாமல் அதை மேலோட்டமாக விமர்சனம் செய்யாதீர்கள்!!

மேலும் எல்லாருக்கும் இரட்சிப்பு என்றும் அதில் சிலருக்கு சாவமையும் மற்ற அனைவருக்கும் நித்திய ஜீவன் என்பதை கோவை பெரேயன்ஸின் போதனை இல்லை, மாறாக வேதத்தில் இருக்கும் போதனையே!! வேதத்தின் கருவே இலவச இரட்சிப்பு, கிருபையினால் இரட்சிப்பு என்பது தான்!! ஆதில் மிகவும் சொற்பான சிலரை தேவன் அவரின் குமாரனின் சாயலில் உருவாக்கிறார் (சவுல் போன்றவர்கள் தானாக பவுலாக மாறவில்லை), கிறிஸ்துவுடன் இந்த பூமியின் உயிர்த்தெழுந்து வருவோருக்கு நீதியை கற்றுக்கொடுக்க!!

எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதை வேதம் சொல்லுகிறது!! எல்லாருகும் இரட்சிப்பு என்பதில் உங்களுக்கு சந்தோஷம் இல்லை போல்!! இது தான் உங்களின் அன்பின் அளவுக்கோள்!! ஏனென்றால் நீதியின் கிரியையில் பிரியப்படுவோர் அதை செய்யாதவர்களும் தங்களுக்கு உண்டான இரட்சிப்பே அனைவருக்குமா என்று இருப்பதால் தான் அனைவருக்கும் இரட்சிப்பு என்கிற வேதத்தின் கோட்பாட்டை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!

அனைவருக்கும் இரட்சிப்பு என்பது நாங்கள் உருவாக்கிய போதனை என்று தவறாகவும் சொல்ல வேண்டாம், நீங்கள் அப்படி சொல்லுவது வசனத்திற்கு விரோதமானதாக இருக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//“என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே” என்பதே.

கர்த்தருக்கும் எனக்குமான காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.//

இதைத்தான் நானும் சொல்கிறேன். மற்றவர்களுக்கும் கர்த்தருக்குமான காரியத்தில் நீங்கள் ஏன் தலையிட்டு நியாயம் விசாரிக்கிறீர்கள்? அது அவர்களுக்கும் கர்த்தருக்குமான காரியம். உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? எல்லாரையும் நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே என்பதை இனியாவது புரிந்துகொண்டு நடக்கவும். நாங்களும் யாரையும் ஓடி ஓடி பாவம் செய்யுங்கள் என்று சொல்லவில்லை. ஏனென்றால் சுய முயற்சியால் பாவத்தைக் களைய முடியாது. எல்லாரும் பாவஞ்செய்து...  என்றால் எல்லாரும்தான். பாவமில்லாத ஒரே ஒருவர் கிறிஸ்து மட்டுமே. 

எசேக்கியேல் 36:33 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேற்றுவிப்பேன்; அவாந்தரமான ஸ்தலங்களும் கட்டப்படும்.

இது எந்தக் காலம்? எந்த அக்கிரமங்களை நீக்கி?

சங்103:3. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

 

4. உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,

எந்த அக்கிரமங்களை மன்னித்து, எந்த அழிவுக்கு விலக்கி மீட்டு, யாரை?

8. கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.

9. அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.

10. அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.

11. பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.

12. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.

பாவத்தை அவர் விலக்கினாலேயொழிய பாவம் மனுக்குலத்திலிருந்து போகாது. ராஜ்ஜியத்தில் மட்டுமே இது சாத்தியம். இப்போது அல்ல. நீதியைக் கற்றுக்கொள்ளூம் மனுக்குலம் நித்திய ஜீவனுக்கு தேவனால் தகுதியாக்கப்படும். அவரது சித்தம் நிறைவேறும். நிறைவேறியே தீரும். 

மத்18:11. மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.

எப்படிக் கெட்டுப்போனது?

12. உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?

13. அவன் அதைக்கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப் பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

14. இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.

லூக்கா 15:7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்கா 15:10 அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மனந்திரும்புகிற ஒரே பாவி மனிதன் மட்டுமே. மனந்திரும்ப அவசியமில்லாத மற்ற ஜீவிகளைக் குறித்து சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் என்றால் மற்ற ஜீவிகளுக்கு இந்த 'பாடம்' இல்லை. அவைகள் பாவம் செய்ய சூழலே இல்லை. எனவேதான் மனந்திரும்பவும் அவசியமுமில்லை. தேவனால் தீமைக்குட்படுத்தப்பட்டு, இருளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு மீண்டும் 'ஒளி'க்கு வரவழைக்கப்படுகிற செயல் மனிதனுக்கு மட்டுமே. இது தனிப்பட்ட மனிதனைக்குறிக்காமல் முழு மனுக்குலத்தையே குறிக்கிறது.

ரோமர்2: 16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//அது சரி, கிறிஸ்து போதித்து எத்தனை வேதபாரகரும், பரிசேயரும் மனந்திரும்பி அப்போஸ்தலராக மாறினார்கள்? கூடவே இருந்த யூதாஸையே திருத்தமுடியவில்லையாம், பாவம் பரிசேயன் என்ன செய்வான்.//

ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் கடிச்சி, கடைசியில் மனுஷனையே கடிப்பதென்பது இதுதானோ?

சாதாரண மனுஷர்களாகிய என்னைப் போன்றவர்களைச் சொல்லியவர், இப்போது இயேசுவையும் சொல்லிவிட்டார். அதாவது இயேசுவின் போதனைகூட வீண் தானாம், கோவை பெரியன்ஸ்-ன் “எல்லோருக்கும் நித்திய ஜீவன்” கொள்கை மட்டும்தான் உசத்தியாம்.//

நீங்கள் சாதாரண மனிதரே அல்ல; இயேசுவுக்கு நிகரான போதகர் என்று நீங்களே பதித்துள்ளீர்கள். இயேசுவின் போதனை வீண் என்று நான் சொன்னதாக பொய்யான ஒரு பதிவைத் தந்துள்ளீர்கள். கிறிஸ்து வந்தது பரிசேயர், வேதபாரகர்களை மனந்திரும்ப அழைக்க அல்ல. உலகத்தோற்றத்துக்கு முன்பாக தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சபையை ஸ்தாபிக்கவே வந்தார். அவரது போதனைகளனைத்தும் சீடர்களை ஆயத்தப்படுத்தவேயன்றி உலகத்தைத் திருத்த அல்ல. அதனால்தான் மூன்றரை வருட ஊழியத்தின் முடிவில் மிஞ்சியது வெறும் 120பேர் மட்டுமே. 

சபைக்கு நியாயத்தீர்ப்பு (கற்றுக்கொடுத்தல்) மட்டுமே இந்த சுவிசேஷயுகத்தில் நடைபெறுகிறது. வரும் ராஜ்ஜியத்தில் உலகத்துக்கு சபை மூலமாக நியாயத்தீர்ப்பு நடக்கும்போது உலகம் நீதியைக் கற்றுக்கொள்ளும்.

நீங்கள்தான் ஒரு சாராரை இப்போதே தயார்படுத்தி, இரக்கம் செய்யவைத்து இரண்டாம் மரணத்துக்கு தப்பவைத்து நேரடியாக நித்திய ஜீவனுக்கு ஆயத்தப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள்.

இயேசுகிறிஸ்து மனிதனை முதலாம் மரணத்திலிருந்து இரட்சிக்க உலகில் வந்தார். அன்பு போன்ற யேகோவா சாட்சிகள் ஒரு சிலரை இரண்டாம் மரணத்திலிருந்து இரட்சிக்க உலகில் வந்துள்ளனர்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

anbu57 wrote:

சோல்சொல்யூஷன்:

//I யோவான் 2:2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.*

*No Conditions Apply//

No Conditions Apply என்பது தவறான தகவல். There is a condition. I think this condition is not printed in Soulsoluton's Bible.

1 யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

ஆம், நம் பாவங்களை நாம் அறிக்கையிட்டால் ... என்பதுதான் condition.

ஒருவன் எப்போது தன் பாவங்களை அறிக்கையிடுவான்? தன் பாவங்களை உணரும்போதுதான்.

பாவங்களை அறிக்கையிடுபவன் என்ன தீர்மானம் செய்வான்? மீண்டும் மீண்டும் பாவம்செய்து உணர்ந்து அறிக்கையிடுவோம் என்றா? அல்லது இனி பாவம் செய்யக்கூடாது என்றா?


 மீண்டும் ஒரு முட்டாள்தனமான வாதம்! 

மறுபடியும் பாவம் செய்யவே மாட்டேன் என்று கியாரண்டி கொடுத்தா அறிக்கை செய்வான். மூடத்தனமான வாதம், அப்படி அறிக்கையிட்டுவிட்டு ஒருவேளை பாவம் செய்ய நேரிட்டால் என்ன ஆகும்? 

அன்பு என்ன முதல்முறை அறிக்கையிட்டுவிட்டு எல்லா அநியாயத்தையும் நீக்கி சுத்திகரிக்கப்பட்ட பிறகு பாவமே செய்யவில்லையா? இல்லை இனி ஜீவிய நாட்கள் முழுவதும் இனி நான் பாவம் செய்தால் என்னை அழித்துவிடும் என்று தேவனை சேலஞ் செய்வாரா தெரியவில்லை...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

//நீங்கள் சாதாரண மனிதரே அல்ல; இயேசுவுக்கு நிகரான போதகர் என்று நீங்களே பதித்துள்ளீர்கள். இயேசுவின் போதனை வீண் என்று நான் சொன்னதாக பொய்யான ஒரு பதிவைத் தந்துள்ளீர்கள்.//

அன்பு57:

//மத்தேயு 18:32 அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். 33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, 34 அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

இரக்கமில்லாத ஊழியக்காரனுக்கு, அவனுடைய ஆண்டவனிடமிருந்து இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைத்ததல்லவா? அதுபோலத்தான் இப்பூமியில் சகமனிதர்களுக்கு இரக்கம் செய்யாதவனுக்கு, தேவனிடமிருந்து இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்.//

சோல்சொல்யூஷன்:

//இரக்கம்பாராட்டவேண்டுமென்பது தேவன் மனிதனுக்கு இயற்கையாகவே கொடுத்த சுபாவம் அதை அன்பு57 போன்றவர்கள் மூலமாக போதிக்கவேண்டும் என்ற கட்டாயம் தேவனுக்கில்லை. முல்லைக்குத் தேர்தந்த பாரிக்கு எந்த அன்பு போய் போதித்தார்?//

அன்பு57:

//மத்தேயு 23:23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

இவ்வசனத்தைப் படிக்கிற சோல்சொல்யூஷன், இப்படியும் சொல்வாரோ?

**நீதி, இரக்கம், விசுவாசம் என்பவைகளெல்லாம் தேவன் வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் சோல்சொல்யூஷனாகிய எனக்கும் இயற்கையாகவே கொடுத்த சுபாவம், அதை இயேசு மூலமாக வேதபாரகருக்கோ பரிசேயருக்கோ எனக்கோ போதிக்கவேண்டும் என்ற கட்டாயம் தேவனுக்கில்லை.**//

சோல்சொல்யூஷன்:

//அது சரி, கிறிஸ்து போதித்து எத்தனை வேதபாரகரும், பரிசேயரும் மனந்திரும்பி அப்போஸ்தலராக மாறினார்கள்? கூடவே இருந்த யூதாஸையே திருத்தமுடியவில்லையாம், பாவம் பரிசேயன் என்ன செய்வான்.//

அன்பு57:

//ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் கடிச்சி, கடைசியில் மனுஷனையே கடிப்பதென்பது இதுதானோ?

சாதாரண மனுஷர்களாகிய என்னைப் போன்றவர்களைச் சொல்லியவர், இப்போது இயேசுவையும் சொல்லிவிட்டார். அதாவது இயேசுவின் போதனைகூட வீண் தானாம், கோவை பெரியன்ஸ்-ன் “எல்லோருக்கும் நித்திய ஜீவன்” கொள்கை மட்டும்தான் உசத்தியாம்.//

சோல்சொல்யூஷன்:

//நீங்கள் சாதாரண மனிதரே அல்ல; இயேசுவுக்கு நிகரான போதகர் என்று நீங்களே பதித்துள்ளீர்கள். இயேசுவின் போதனை வீண் என்று நான் சொன்னதாக பொய்யான ஒரு பதிவைத் தந்துள்ளீர்கள். கிறிஸ்து வந்தது பரிசேயர், வேதபாரகர்களை மனந்திரும்ப அழைக்க அல்ல.//

இத்தொகுப்பு “சோல்சொல்யூஷன்”-க்காக அல்ல; அவர் என்மேல் குற்றஞ்சாட்டின பிரகாரம், நான் பொய்யான பதிவைத் தரவில்லை என்பதை தள வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே.

கிறிஸ்து வந்தது பரிசேயர், வேதபாரகர்களை மனந்திரும்ப அழைக்க அல்ல” எனும் சோல்சொல்யூஷனின் latest கூற்று தவறு என்பதற்கு ஆதாரமாக பின்வரும் வசனத்தைத் தருகிறேன்.

மத்தேயு 23:23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:


////மத்தேயு 18:32 அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். 33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, 34 அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். 35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

இரக்கமில்லாத ஊழியக்காரனுக்கு, அவனுடைய ஆண்டவனிடமிருந்து இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைத்ததல்லவா? அதுபோலத்தான் இப்பூமியில் சகமனிதர்களுக்கு இரக்கம் செய்யாதவனுக்கு, தேவனிடமிருந்து இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்.//

ஓஹோ இது தான் இரண்டாம் மரணமா!! நியாயத்தீர்ப்பு, மரணம் இவை இரண்டும் தங்களின் பார்வையில் ஒரே அர்த்தம் கொண்ட வார்த்தைகளா!!?? நியாயத்தீர்ப்பு என்றால் மரணம் தான் என்று மேலே உள்ள உவமை சொல்லுகிறதா!!?? ஒரே தரம் மரிப்பதும் அதன் பின் மீண்டும் மரிப்பதும் மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டது என்று தானே சொல்ல வருகிறீர்கள்!! உம்முடைய நியாயத்தீர்ப்பின் நாட்களில் பூச்சகக்ரத்து குடிகள் நீதியை கற்றுக்கொள்வார்கள் என்றால் மரித்தவர்கள் எப்படிங்க நீதியை கற்றுக்கொள்ள முடியும் என்று சற்று விளக்குவீர்களா!!


//அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.//

கடனை திருப்பி கொடுக்கும்படியாக தான் அவனை உபாதிக்கிறவர்களிடத்தில் விட்டார்!! ஆனால் நீங்களோ அவனை 2ம் மரணத்திற்குள் விட்டார் என்று அல்லவா போதிக்கிறீர்கள்!! இதை தான் நீதியை கற்றுக்கொடுக்கப்படும் என்று நாங்கள் சொல்லுகிறோம்!! வசனத்தை யார் அரைகுறையாக பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை தெளிவுப்படுத்துங்கள்!!

இன்னும் நீங்கள் 2 தீமோத்தேயு 1:9க்கு விளக்கம் தரவில்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

யோவான்1:10. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.

11. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?

12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

ஏனென்றால், 

13. அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.

யோவான் 12:47 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.

உலகத்துக்குக் கற்றுக்கொடுக்க வராமல் உலகத்தை மரணத்திலிருந்து இரட்சிக்கவே வந்தார்.

பின் எப்போது உலகத்துக்கு கற்றுக்கொடுப்பார்?

அப்போஸ்தலர் 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; 

இப்போது அல்லவே அல்ல‌.

ஏதோ இயேசுகிறிஸ்து உலகத்துக்குப் போதிக்க வந்தார் என்று முட்டாள்தனமாகா வாதாடுபவர்கள் இவ்வசனங்களுக்கு விளக்கம்தரட்டும். துப்பிருந்தால்....

யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

ஏன் காணாமலும் அறியாமலும் இருக்கிறது?

மத்தேயு 13:11 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.

அவர்களுக்கோ ஏன் அருளப்படவில்லை?

II கொரிந்தியர் 4:4 தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

ஏன் குருடாக்கினான்?

இயேசுகிறிஸ்து கீழ்க்கண்ட வசனங்களில் தெளிவாக நீர்(பிதா), நான், எனக்கு(இயேசு கிறிஸ்து), அவர்கள்(சபை), உலகம் என்று பிர்த்துக் கூறுகிறார். 

 யோவான்17:6. நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு(மட்டும்) உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள்(மட்டும்) உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை(மட்டும்) எனக்குத் தந்தீர், அவர்கள்(மட்டும்)  உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

பிதா தெரிந்தெடுத்தவர்களுக்கு மட்டுமே வசனம்.

8. நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்கு(மட்டும்) க் கொடுத்தேன்; அவர்கள்(மட்டும்)  அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.

'அவர்களுக்கு' மட்டும்தான் கொடுத்தார்.

9. நான் அவர்களுக்காக(மட்டும்) வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக(மட்டும்)  வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள்(மட்டும்)  உம்முடையவர்களாயிருக்கிறார்களே.

இன்றும் முட்டாள்தனமாக் உலகத்துக்காக வேண்டிக்கொண்டிருக்கிறது மூடக்கிறிஸ்தவம், அதுவே உலகத்தில்தான் இருக்கிறது என்பது கூடத்தெரியாமல்...

14. நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்கு(மட்டும்) க் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.

16. நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.

17. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப்(மட்டும்)  பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

சத்தியம் 'அவர்களுக்கு' மட்டுமே. உலகத்துக்கு அல்ல‌...

25. நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.

உலகம் அறியவில்லை; அறியவேண்டிய அவசியமுமில்லை.

இந்த அடிப்படை விஷயத்தைக்கூட அறியாமல், இப்போதே ஜனங்களுக்கு (உலகத்துக்கு) போதித்து நீதிமான்களாக்கி, பரிசுத்தவான்களாக்கி அவர்களை 'நித்தியஜீவனுக்கு' தகுதியாக்க முயலும் அன்பு போன்றவர்ளின் பிரயாசம் வேதத்துக்கு எதிரானது. நற்கிரியை செய்து முக்தி அடைய வழி சொல்வதற்கு உலகத்தில் ஏராளமான மதங்களும், அமைப்புகளூம் உள்ளன. அந்த குரூப்பில் ஒன்றுதான் அன்பு அன் கோ.

கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசம் கூட தேவையில்லை. அவர் ஆதாமின் பாவத்துக்காகமட்டும் மரித்தார் என்ற பொய்யான போதனைகளை போதிக்கிறார். தன்னுடைய முக்கியத்துவம் போய்விடுமே என்ற கவலை. கிறிஸ்து உலகத்தைத் திருத்த வந்ததுபோலவும் அந்த முயற்சியில் அவர் கேவலமாக தோற்றுவிட்டது போலவும் கூறுவது வேடிக்கையான விஷயம். 

ஆனால் வேதம் கூறுவது

கொலோசெயர் 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

அந்த 'உலகத்தை' இரட்சிக்கவந்து, வெற்றிச்சிறந்த கிறிஸ்துவைத்தான் நாம் விசுவாசிக்கிறோம்.

தேவனுக்கே மகிமை.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//ரொம்ப அலட்ட வேண்டாம் நண்பரே! நீங்கள் தந்த வசனங்கள் “தேவனே தீமைக்குக் காரணம்” என்பதற்கு ஆதாரமான வசனங்கள் அல்ல, “தேவனிடமிருந்து தீமை புறப்படுகிறது அல்லது தேவன் தீங்கைச் செய்கிறார்” என்பதற்கு மட்டுமே ஆதாரமான வசனங்கள்.

தீமைக்குக் காரணம் யாரெனக் கேட்டால், மனிதன் தான், குறிப்பாக ஆதாம் தான் தீமைக்குக் காரணம் என்பதுதான் பதில். ஆதாரம்:

ஆதியாகமம் 3:17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். 18 அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.

 

ஆதாமின் மீறுதலால் இப்பூமி தேவனால் சபிக்கப்பட்டதால்தான் இத்தனை தீமைகளும் உலகில் வந்தன. ஒரு குற்றவாளிக்கு நீதிபதி தண்டனை கொடுத்தால், அந்தத் தண்டனையாகிய தீமைக்குக் காரணம் குற்றவாளிதானேயொழிய, நீதிபதியல்ல. அதுபோலத்தான் இப்பூமி சபிக்கப்பட்டதற்குக் காரணம் குற்றம் செய்த ஆதாம் தானேயொழிய, தண்டனை வழங்கி பூமியைச் சபித்த தேவன் காரணமல்ல.//

என்னே ஒரு தீர்க்கமான விளக்கம். தீமைக்குக் காரணம் ஆதாமாம்.  

//நீங்கள் தந்த வசனங்கள் “தேவனே தீமைக்குக் காரணம்” என்பதற்கு ஆதாரமான வசனங்கள் அல்ல, “தேவனிடமிருந்து தீமை புறப்படுகிறது அல்லது தேவன் தீங்கைச் செய்கிறார்” என்பதற்கு மட்டுமே ஆதாரமான வசனங்கள்.// 

தேவனிடமிருந்து தீமை புறப்படுகிறது, தேவன் தீங்கைச் செய்கிறார் என்கிறீர்கள். ஒரு குற்றவாளியை தண்டிப்பது எப்படி அய்யா தீமையாகும்? அது நன்மைதானே. ஆதாம் என்ற ஒரு நபர் செய்த குற்றத்துக்காக‌ முழு மனுக்குலத்தையும் சபிப்பதுதான் நீதிபதியின் அழகா?

"தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்." சங்105:25

அவரே இருதயத்தை மாற்றிவிட்டு 'தண்டனை' வேறு கொடுப்பாரோ? 

மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்  என்றுதான் மரணதண்டனை கொடுத்துவிட்டாரே, மற்ற சாபங்கள் எதற்கு? ஆதாமுடைய தண்டனை ஆதாமுக்கு மட்டும்தானே இருக்க வேண்டும் ஏன் அவனுடைய சந்ததி முழுவதற்கும் தண்டனை?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard