kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீமைக்கு யார் காரணம்? தேவனா?


Executive

Status: Offline
Posts: 425
Date:
RE: தீமைக்கு யார் காரணம்? தேவனா?


சோல்சொல்யூஷன்:

//இதென்ன அபத்தம், எந்த மனிதனுக்குக் கொடுத்தார் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்? அந்தந்தக் காலக் கட்டத்தில் ஒரு சிறு பிரிவினருக்கு மட்டுமே கட்டளைகளைக் கொடுத்தார். மனிதனுக்கு என்று  எல்லாருக்கும் என்று நீங்கள் விளங்கிக்கொண்டால் நான் பொறுப்பல்ல. என்னமோ தேவன் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியே உட்காரவைத்து இதைச் செய் அதைச்செய்யாதே என்று சொன்னதுபோல வாதாட வேண்டாம்.//

சரி, இஸ்ரவேலர் எனும் சிறு பிரிவினருக்கு மட்டுமே கட்டளை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

இப்போது எனது பழைய கூற்றை சற்று Modify செய்து சொல்கிறேன்:

//இதைச் செய், இதைச் செய்யாதே என தேவனே ஒரு சிறு பிரிவினருக்குக் கட்டளைகளைக் கொடுத்துவிட்டு, பின்னர் அவரே தமது கட்டளைகளை மீறும்படியும் செய்யவைக்கிறார் என தேவனைக் குறித்து நீங்கள் சொல்வது, தேவனுக்கு அவப்பெயரைத்தான் கொண்டுவரும்.//

இக்கூற்றுக்கு உங்கள் பதில் என்ன?

சிறு பிரிவினருக்கு மட்டுமே கட்டளை, மற்றவர்களுக்கு கட்டளை அல்ல என்கிறீர்கள்.

சரி, பாவம் என்றால் என்ன? உங்கள் பதிலைக் கூறுங்கள்.

இக்கேள்விக்கு வேதாகமம் சொல்லும் பதில், “நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம்” (1 யோவான் 3:4)

அப்படியானால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாத புறஜாதியினர் பாவிகள் இல்லையல்லவா?

அப்படியானால் எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானார்கள் என ரோமர் 3:23 கூறுவது எப்படி?

சோல்சொல்யூஷன்:

//பழைய ஏற்பாடு "என் ஜனங்கள்" என்று அவரால் முன் குறிக்கப்பட்ட சிலருக்கு எழுதப்பட்டது. அதை அவர்களாலேயே கடைபிடிக்க முடியாததால்தான்  கட்டளைகளால் செய்ய முடியாததை கிருபை செய்யும் என்ற புதிய ஏற்பாடு.//

முன்குறிக்கப்பட்ட சிலருக்குத்தான் கட்டளைகள் கொடுக்கப்பட்டன என்கிறீர்கள். அந்த சிலர் அக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டும் என்பது தேவசித்தமா? கீழ்ப்படியக்கூடாது என்பது தேவசித்தமா?

கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் என்றும், கீழ்ப்படியாவிட்டால் சாபம் என்றும் சொல்லிவிட்டு, அவர்கள் கீழ்ப்படியக்கூடாது என்பது தேவசித்தமாக இருந்தால், அது தேவனை ஒரு வேடதாரியாக அல்லவா காட்டுகிறது?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//அவரின் வழியை பின்பற்றுவோராக இருங்கள்!!//

அவரது வழியைப் பின்பற்றுவது எப்படி?

அவரது வழியை எதற்காகப் பின்பற்ற வேண்டும்?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ரோமர் 4:15 மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை.

ரோமர் 5:13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.

 

ரோமர் 5:20 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.

 

ரோமர் 8:3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

 

நியாயப்பிரமாணம் (இதைச் செய் அதைச் செய்யாதே) நம்மை 100% தண்டனைக்கு ஆளாக்கும்.

கிருபை மட்டுமே தண்டனையிலிருந்து நம்மைக் காப்பாற்றும். ஆதாலால்தான் நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு........... பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத்தீர்த்தார். 

பாவிகளை அல்ல பாவத்தை...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

தீமைக்கு யார் காரணம்? தேவனா?

வசனம் என்ன சொல்கிறது?

பார்க்கலாம்.

"ஒளியைப் படைத்து இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்." ஏசா 45:7

"உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?." புலம்பல் 3:38

"... மனுப்புத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்குத் தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்." பிர 1:13

"... ஒரு பாத்திரத்தை கனவீனமான காரியத்துக்குப் பண்ணுகிறதற்கு அவனுக்கு அதிகாரமில்லையோ?" ரோம 9:18‍‍ ‍‍‍‍‍முதல் 25

"... நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகாசங்காரத்தையும் வரப்பண்ணுவேன்." எரே 4:6

"... நான் அவர்கள் மேல் ... தீங்கை வரப்பண்ணுவேன்." எரே 6:19

" ... அப்பொழுது அது(பொய்யின் ஆவி), நான் போய் அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்(கர்த்தர்):... போய் அப்படிச் செய் என்றார்." 1இராஜா 22:22

"தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்." சங்105:25

"... இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்..." எரே18:11

"கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் ப்யப்படாதபடிக்கு கடினப்படுத்துவானேன்?..." ஏசா 63:17

"...இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்...." யோசு 23:16

"... கர்த்தருடைய செயல் இல்லமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?" ஆமோஸ் 3:6

" சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்.... இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்த்ரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும் .... கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்." 1சாமு15:2,3.

 கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.யாத்திராகமம் 10:20


தேவன் தான் தீமையைச் செய்கிறார் என்பதை வசன ஆதாராத்துடன் பதித்தாயிற்று, ஆனால் தேவனைக் இந்த அவப்பெயரிலிருந்து 'காப்பாற்றும்' நோக்கத்தில் பதிவுகள் திசை திரும்பிவிட்டது... ஆகவே மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருகிறேன். மேற்கண்ட வசனங்கள் தீமை தேவன் மூலமாகத்தான் வருகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன. கேட்பதற்கே சங்கடமாக இருக்கலாம், ஆனால் வசனம் வசனமே. 

நடக்கின்ற காரியங்களுக்கு தேவன் பொறுப்பல்ல என்று வாதிடுவதும் துருபதேசம்தான். ஆனால் தேவன் இவற்றையெல்லாம் செய்வது ஒரு உன்னத நோக்கத்துக்குத்தான் என்று அறியவேண்டும்!

எனவேதான் சகலத்துக்கும் தேவன் பொறுப்பு என்று வாதிடுகிறோம். ஒருவரும் அழிந்துபோகாமல் இரட்சிக்கப்படுவது அவருடைய சித்தம் என்பதால் இந்த தற்காலிக தீமைகள் ஒரு பொருட்டே அல்ல‌...

 

இது குறித்து அனைவரும் வாயடைத்துப்போயிருப்பது ஏனோ?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

குழப்பமே இல்லை தெளிவாக இருக்கிறேன் என்று கூறும் அன்பு அவர்களே இத்திரியைக்குறித்து ஏன் மெளனம்? தேவனைக் 'காப்பாற்ற' தாமதம் ஏனோ?

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//குழப்பமே இல்லை தெளிவாக இருக்கிறேன் என்று கூறும் அன்பு அவர்களே இத்திரியைக்குறித்து ஏன் மெளனம்? தேவனைக் 'காப்பாற்ற' தாமதம் ஏனோ?//

நீங்கள் ஒரு விஷயத்தில் பிடிவாதமாக கீறல் விழுந்த இசைத்தட்டு போல் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தால் உங்களிடம் எப்படி விவாதம் செய்யமுடியும்? ஏற்கனவே விவாதித்த பல விஷயங்களில் பல கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லாமல்தான் இருக்கிறீர்கள். அப்படியிருக்க புதிதாக அடுத்த விஷயத்தை தொடங்கி என்ன பயன்?

ஏற்கனவே நிலுவையிலுள்ள கேள்விகளுக்கு முதலில் பதில் தாருங்கள்.


//இப்போது எனது பழைய கூற்றை சற்று Modify செய்து சொல்கிறேன்:

//இதைச் செய், இதைச் செய்யாதே என தேவனே ஒரு சிறு பிரிவினருக்குக் கட்டளைகளைக் கொடுத்துவிட்டு, பின்னர் அவரே தமது கட்டளைகளை மீறும்படியும் செய்யவைக்கிறார் என தேவனைக் குறித்து நீங்கள் சொல்வது, தேவனுக்கு அவப்பெயரைத்தான் கொண்டுவரும்.//

இக்கூற்றுக்கு உங்கள் பதில் என்ன?

சிறு பிரிவினருக்கு மட்டுமே கட்டளை, மற்றவர்களுக்கு கட்டளை அல்ல என்கிறீர்கள்.

சரி, பாவம் என்றால் என்ன? உங்கள் பதிலைக் கூறுங்கள்.

இக்கேள்விக்கு வேதாகமம் சொல்லும் பதில், “நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம்” (1 யோவான் 3:4)

அப்படியானால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாத புறஜாதியினர் பாவிகள் இல்லையல்லவா?

அப்படியானால் எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானார்கள் என ரோமர் 3:23 கூறுவது எப்படி?//

 

//முன்குறிக்கப்பட்ட சிலருக்குத்தான் கட்டளைகள் கொடுக்கப்பட்டன என்கிறீர்கள். அந்த சிலர் அக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டும் என்பது தேவசித்தமா? கீழ்ப்படியக்கூடாது என்பது தேவசித்தமா?

கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் என்றும், கீழ்ப்படியாவிட்டால் சாபம் என்றும் சொல்லிவிட்டு, அவர்கள் கீழ்ப்படியக்கூடாது என்பது தேவசித்தமாக இருந்தால், அது தேவனை ஒரு வேடதாரியாக அல்லவா காட்டுகிறது? //

 

//பெரியன்ஸ்:

//அவரின் வழியை பின்பற்றுவோராக இருங்கள்!!//

அவரது வழியைப் பின்பற்றுவது எப்படி?

அவரது வழியை எதற்காகப் பின்பற்ற வேண்டும்?//

 

இன்னும் பல கேள்விகள் உள்ளன. குறிப்பாக,

ஏசாயா 65:20 நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

ஏசாயா 26:10 துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.

யாக்கோபு 2:13 இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

மத்தேயு 6:15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

மத்தேயு 12:32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

1 யோவான் 5:16  மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன். 17 அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.

மத்தேயு 25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் ... என்பார்.

எனும் இவ்வசனங்களுக்கு இன்னமும் திருப்தியான விளக்கத்தை நீங்கள் தரவில்லை.

உதாரணமாக, யாக்கோபு 2:13 வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வசனத்திற்கு உங்கள் குழுவைச் சேர்ந்த சகோ.பெரியன்ஸ் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

//இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு என்று தான் வேதம் சொல்லுகிறதே தவிர இரக்கமில்லாத தண்டனை அல்லது இரக்கமில்லாத மரணம் என்று வேதம் சொல்லுவதில்லை!! நியாயத்தீர்ப்பு என்றால் மரணம் என்று நீங்களாகவே முடிவு செய்துவிட்டு வசனத்தை அதன்படியே அர்த்தம் கொள்கிறீர்கள்!! நியாயத்தீர்ப்புக்கு ஒரு இடத்திலாவது மரணம் என்று அர்த்தம் வருகிறதா!! ஒரே தரம் மரிப்பதும் அதன் பின் நியாயத்தீர்ப்பு அடைய உயிர்த்தெழுவதும் தான் நியமிக்கப்பட்டிருக்கிறது என்கிறது வேதம், ஆனால் நீங்கள் கொண்டிருக்கும் அர்த்தத்தை படி, ஒரு தரம் மரித்து, அதன் பின் மரிக்கவே உயிர்த்தெழுதல் நடக்கிறது என்பது போல் இருக்கிறது!! இரக்கம் செய்பவர்களுக்கு பரலோக ராஜியமும், இரக்கம் செய்யாதவர்களுக்கு பரலோக ராஜியம் அல்லாமல், நீதியை கற்றுக்கொள்ள இந்த பூமியில் உயிர்த்தெழுதல் நடைபெறும்!! இரக்கம் செய்தவர்கள் கிறிஸ்ச்துவின் சாயலில் ஆவியிலும், இரக்கம் செய்யாதவர்கள் மாம்ச சரீரத்தில் இந்த பூமியில் நீதியை கற்றுக்கொள்ள எழும்புவார்கள்!! வேதம் இதை தான் சொல்லுகிறதே தவிர, திரித்துவர்கள் போதிப்பது போல், கிரியைகளை வைத்து ஒரு கூட்டம் பரலோகத்திற்கும் மறு கூட்டம் நரகத்திற்கோ போவார்கள் என்று அல்ல!! நீங்களோ ஒரு படி மேலே போய், மனிதர்களின் கிரியைகளை நியாயப்படுத்தி, அந்த கிரியைகளினால் ஒரு கூட்டம் பரலோகத்திற்கும், ஒரு கூட்டம் 1000 வருடம் அரசாட்சியில் நீதியை கற்றுக்கொள்ளவும் (அதிலும் பலர் மரித்து போவார்கள் என்றும்), இரக்கம் செய்யாதவர்கள் என்கிற விசேஷித்த கிரியை உள்ளவர்கள் இரண்டாம் மரணத்திற்கு தான் எழும்புவார்கள் என்று சொல்லுகிறீர்கள்!! 1 தீமோ 2ல் இருந்து வசனத்தை கொடுத்தால் வாதத்தை திரிக்கிறேன் என்கிறீர்கள்!! தேவனே இடற செய்கிறார், தேவனே வஞ்சிக்கும் ஆவியை அனுப்புகிறார் என்றும், இப்பிரபஞ்சத்தின் தேவனைக்கொண்டு மனக்கண்களை குறுடாக்கி வைத்து விட்டிருக்கிறார், சிலருக்கு இரக்கம் காட்டுகிறார், சிலரை இடறசெய்கிறார் என்கிற வசனங்களை காண்பித்தாலும், "இரக்கம் செய்யாதவன்" என்கிற ஒரு கூட்டத்தாருக்கு இரக்கம் இல்லாத நியாயத்தீர்ப்பு என்றால் அது மரணம் தான் என்று நீங்களாகவே ஏன் முடிவு செய்கிறீர்கள்!! //

நான்(அன்பு57) அப்படிச் சொல்கிறேன், இப்படிச் சொல்கிறேன்” எனக் கூறும் பெரியன்ஸ், “இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு” எனும் சொற்றொடருக்கான அவரது விளக்கத்தைத் தரவில்லை. நீங்களாவது சொல்லுங்கள், “இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு” என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? வேதனையானதா அல்லது வேதனையற்றதா? வேதனையானது என்றால் என்ன வேதனை?

//யாருடைய இரக்கம் நியாயத்தீர்ப்புக்கு முன்பு மேன்மைபாராட்டும்!! சகோ அன்பு அவர்களே, மனிதர்கள் நியமிக்கப்பட்டபடியே நடக்கிறார்கள், இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும் என்று சொல்லிவிட்டு, அந்த நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும் என்கிறார்!! இது யாருடைய இரக்கம்!! நிச்சயமாக மனிதர்களின் இரக்கமாக இருக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் தான் இரக்கமற்றவர்களாக இருக்கிறார்களே!! நியாயத்தீர்ப்பிலும் தேவனின் இரக்கமே மேன்மைப்பாராட்டும்!! ஆகவே நீங்கள் எழுதுவது போல் இந்த வசனத்தை கொண்டு மீண்டும் மீண்டும் இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு என்றால் இரண்டாம் மரணத்தை என்று சொல்லிவருவதை தயவு செய்து இனியும் நிறுத்துங்கள்!!//

இரக்கம் மேன்மைபாராட்டும்” எனும் சொற்றொடரிலுள்ள “இரக்கம்” எனும் வார்த்தை தேவனின் இரக்கத்தைக் குறிக்கிறதாம்; மனிதர்கள் எல்லோரும் இரக்கமற்றவர்கள்தானாம்; சிறுகுழந்தைக்குக் கூட புரிகிற ஒரு எளிமையான வசனத்திற்கு இப்படியெல்லாம் விளக்கம் சொன்னால், நான் என்ன பதில் சொல்வது?

வசனத்தின் முதல் பகுதியில் மனிதர்களின் இரக்கத்தைப் பற்றி சொல்லிவிட்டு, 2-வது பகுதியில் தேவனின் இரக்கத்தைப் பற்றி சொல்வதாகக் கூறும் பெரியன்ஸ்-ன் கற்பனை அபாரம். சற்றும் பொருத்தமில்லாத இப்படி ஒரு கற்பனா சக்தி படைத்தவர்களிடம் நான் என்ன சொல்லி என்ன புரிய வைக்கமுடியும்?

யாக்கோபு 2:13-க்கு நான் விளக்கம் தருகிறேன்; அதை உங்களால் ஏற்க முடிகிறதா எனப் பாருங்கள்.

இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு “மரணமா, இல்லையா” என்பதை அப்புறம் பார்க்கலாம். ஆனால் “இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு” என்பது நிச்சயம் வேதனையுள்ளதாக இருக்கும் என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இப்பூமியில் சகமனிதர்களுக்கு இரக்கம் செய்யாதவனுக்கு, நியாயத்தீர்ப்பின்போது தேவனிடமிருந்தும் இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புதான் கிடைக்கும். அதாவது பிறருக்கு இரக்கம் செய்யாத ஒருவன், தேவனிடமிருந்து இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது; எனவே தேவனிடமிருந்து அவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புதான் கிடைக்கும். இதுதான் யாக்கோபு 2:13-ன் முதல் பகுதிக்கான விளக்கம். இதை இன்னும் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், மத்தேயு 18:23-35 வசனங்களைப் படித்துப் பாருங்கள். அதன் இறுதி பகுதியை மட்டும் தருகிறேன்.

மத்தேயு 18:32 அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். 33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, 34 அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
 35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

இரக்கமில்லாத ஊழியக்காரனுக்கு, அவனுடைய ஆண்டவனிடமிருந்து இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைத்ததல்லவா? அதுபோலத்தான் இப்பூமியில் சகமனிதர்களுக்கு இரக்கம் செய்யாதவனுக்கு, தேவனிடமிருந்து இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்.

இவ்விளக்கம் உங்களுக்குப் புரிந்தால், தயவுசெய்து அதை சகோ.பெரியன்ஸ்க்குச் சொல்லி புரியவையுங்கள்.

அடுத்து, யாக்கோபு 2:13-ன் 2-வது பகுதிக்கு வருவோம், “நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்” என்றால், நியாயத்தீர்ப்பின்போது, மற்றெல்லா காரியங்களைவிட, “இரக்கம்” எனும் பண்புதான் மேன்மைபெற்றதாக, முக்கியத்துவமுள்ளதாக இருக்கும் என்பதே.

அதாவது ஒருவன் வேறு பல பாவங்களைச் செய்திருந்தாலும், அவன் “இரக்கமுள்ளவனாக” இருந்தால், அவனது பிற பாவங்கள் மன்னிக்கப்படும். அவன் “இரக்கமற்றவனாக” இருந்தால் அவனது மற்ற பாவங்கள் மன்னிக்கப்படாது. அதாவது அவனிடம் “இரக்கம்” எனும் பண்பு இருக்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்துதான், அவனது பிற பாவங்கள் மன்னிக்கப்படவேண்டுமா, வேண்டாமா என்பது தீர்மானிக்கப்படும். இதனால்தான் நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும் என யாக்கோபு கூறுகிறார்.

இவ்வளவாய் விளக்கிச்சொன்னாலும் உங்களுக்குப் புரியவில்லையெனில் வேறெந்த விஷயத்தையும் பேசிப் பயனில்லை.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

அன்பு57:

//அதாவது ஒருவன் வேறு பல பாவங்களைச் செய்திருந்தாலும், அவன் “இரக்கமுள்ளவனாக” இருந்தால், அவனது பிற பாவங்கள் மன்னிக்கப்படும். அவன் “இரக்கமற்றவனாக” இருந்தால் அவனது மற்ற பாவங்கள் மன்னிக்கப்படாது. அதாவது அவனிடம் “இரக்கம்” எனும் பண்பு இருக்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்துதான், அவனது பிற பாவங்கள் மன்னிக்கப்படவேண்டுமா, வேண்டாமா என்பது தீர்மானிக்கப்படும். இதனால்தான் நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும் என யாக்கோபு கூறுகிறார்.//

இப்படி நான் சொன்னதும், இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் என வசனம் சொல்கிறதே, ஆனால் நீங்களோ நாம் இரக்கம் செய்யாவிடில் நம் பாவங்கள் மன்னிக்கப்படாது என்கிறீர்களே, அப்படியானால் இயேசுவின் இரத்தம் வீண்தானோ? என சகோ.பெரியன்ஸ் கேட்பார்.

இக்கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லமுடியும்? இரக்கமில்லாதவனுக்கு இரக்கமற்ற நியாயத்தீர்ப்பு என நானா சொல்கிறேன்? அது தேவன் விதித்த விதி. தேவனிடம் நாம் கேள்வி கேட்கமுடியுமா?

இப்படியிப்படி செய்தால்தான், இன்னின்ன பாக்கியங்கள்/பலன்கள் கிடைக்கும், இதையிதைச் செய்யாவிட்டால் இன்னின்ன சாபங்கள்தான் கிடைக்கும் என்பது தேவன் வகுத்த விதி அல்லது சட்டம். அவரது சட்டப்படி நாம் நடக்கத்தான் வேண்டும். நடந்தால்தான் அதற்கான பலன் கிடைக்கும். மாறாக,

எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட உமக்கு சித்தம்தானே, உமது சித்தத்தை நீர் நிறைவேற்றத்தான் வேண்டும்; நான் உமக்குக் கீழ்ப்படிய மாட்டேன், நீர் சொல்வதைச் செய்யமாட்டேன், ஆனாலும் இயேசுவின் இரத்தத்தால் எனது அனைத்து பாவங்களையும் நீர் சுத்திகரிக்கத்தான் வேண்டும்” என நாம் சொன்னால்,

மகனே, எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது எனது சித்தம்தான், இயேசுவின் இரத்தம் எல்லா பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் என்பதும் மெய்தான்; ஆனால் நீ இரக்கமுள்ளவனாய் இரு, அப்போதுதான் இரக்கம் பெறுவாய்; நீ இரக்கமில்லாதவனாக இருந்தால் இரக்கம் பெறமாட்டாய் என்றும் வசனங்கள் கூறுகிறதல்லவா? அவ்வசனங்களை அன்பு57 போன்ற பலரும் எவ்வளவாய் எடுத்துரைத்தார்கள்? அதன் பின்னரும் நீங்கள் வசனங்களுக்கு செவிகொடாமல் போனீர்களே; எனவே வசனம் கூறுகிறபடியே, “இரக்கமில்லாத உங்களுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புதான் கிடைக்கும்”. ஆனால் இரக்கமுள்ளவர்களான ஆயக்காரரும் வேசிகளும் மத்தேயு 21:31-ன்படி உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்திற்கு செல்வதைப் பாருங்கள்” என இயேசு சொல்வார்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அன்பு அவர்களே, 

உங்கள் விசுவாசம்தான் என்ன? இரக்கமில்லாதவனுக்கு இரக்கமற்ற நியாயத்தீர்ப்பு இருக்கும். இரக்கமற்ற தண்டனை அல்ல. 

//இதைச் செய், இதைச் செய்யாதே என தேவனே ஒரு சிறு பிரிவினருக்குக் கட்டளைகளைக் கொடுத்துவிட்டு, பின்னர் அவரே தமது கட்டளைகளை மீறும்படியும் செய்யவைக்கிறார் என தேவனைக் குறித்து நீங்கள் சொல்வது, தேவனுக்கு அவப்பெயரைத்தான் கொண்டுவரும்.//

பின்வரும் வசனங்கள் எதைக்குறிக்கின்றன என்று மட்டும் சொல்லுங்கள்.

கலாத்தியர்3:11. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லை என்று நான் சொல்லவில்லை. தேவனுக்கு அவப்பெயரா? பின் எதற்காக கட்டளை?

அதைப்புரியவைக்கத்தான் 

21. அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.

22. அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.

வேதம் எல்லாரையும் ஏகமாய் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டதாம், ஏன்? எல்லாரையும் என்றால் எல்லாரையும்தான் உங்களையும் சேர்த்து...

காரணம் உண்டு,

23. ஆதலால் விசுவாசம் வருகிறதற்குமுன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல் பண்ணப்பட்டிருந்தோம்.

24. இவ்விதமாக, நாம் விசுவாசத்திலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.

25. விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.

விசுவாசம் வந்தபின்பு உபாத்தி அவசியமில்லை.

இதை அழகாக 4ம் அதிகாரத்தில் விளக்குகிறார்

4:30. அதைக்குறித்து வேதம் என்னசொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.

31. இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.

புறம்பேதள்ளு என்று வேதம் சொல்லுவதை இன்னும் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு, நியாயப்பிரமாணத்தைத்தான் உங்கள் ஸ்டைலில் போதிக்கிறீர்கள்.

5:4. நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.

18. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.

கிருபை உங்களுக்கு அவசியமில்லைபோலும். இரக்கம் செய்து நீதிமானகிறீர்களே?

எபிரெயர் 7:11 அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன?

எபிரெயர் 7:19 நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.

எபிரெயர் 10:1 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.

நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை சகோதரரே! கட்டளையை கொடுத்துவிட்டு அவரே மீறும்படி செய்விக்கிறாரா என்றால் ஆமாம்தான். 

பாவம் என்றால் என்ன என்பதற்கு ஒரே வசனத்தைக் காண்பித்துள்ளீர்கள். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம் என்று. அது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை என்று வேதம் சொல்கிறது. ஏனென்றால்

யாக்கோபு 2:10 எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.

இப்போது சொல்லுங்கள் நீங்கள் எல்லாவற்றிலும் குற்றவாளியா? இல்லையா?

//முன்குறிக்கப்பட்ட சிலருக்குத்தான் கட்டளைகள் கொடுக்கப்பட்டன என்கிறீர்கள். அந்த சிலர் அக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டும் என்பது தேவசித்தமா? கீழ்ப்படியக்கூடாது என்பது தேவசித்தமா?

கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் என்றும், கீழ்ப்படியாவிட்டால் சாபம் என்றும் சொல்லிவிட்டு, அவர்கள் கீழ்ப்படியக்கூடாது என்பது தேவசித்தமாக இருந்தால், அது தேவனை ஒரு வேடதாரியாக அல்லவா காட்டுகிறது?//

முன்குறிக்கப்பட்ட சிலருக்கு என்று நான் சொல்லவில்லை, வேதம் சொல்கிறது. நான் தெரிந்துகொண்ட என் ஜனங்கள் என்றால் என்ன அர்த்தம்? கீழ்ப்படியக்கூடாது என்பதுதான் தேவசித்தம். கீழ்ப்படியாதவர்களுக்குத்தான் கிருபை அவசியம், மன்னிப்பு அவசியம். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம் என்றீர்கள்; பாவத்தின் சம்பளம் மரணம். நியாயப்பிரமாணம் ஒருவரையும் பூரணமாக்கவில்லை என்று வேதம் சொல்கிறது. ஆகவே எல்லாரும் மரிக்கிறார்கள். மரணத்தைவிட என்ன பெரிய சாபம் வேண்டியுள்ளது. "உங்கள் சித்தப்படி" மீறுகிறவனுக்கு 'இரக்கமற்ற' நியாயத்தீர்ப்பு என்றால், 

யாக்கோபு 2:10 எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான். என்ற வசனத்தின்படி உங்களூக்கும் அதே தீர்ப்புதான். 

உங்கள் சித்தாந்தப்படி அவர் யாரையாவது தண்டித்து இரண்டாம் மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தால்தான் அது அவரை வேடதாரியாகக் காண்பிக்கும். ஆனால் தேவன் அதற்கான தீர்வையும் ஏற்படுத்தியிருக்கிறாரே?

ரோமர் 5:18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.

எல்லாமனுஷருக்கும் ஜீவன் அதுவே அவரது நீதிக்கு ஏதுவான தீர்ப்பு. வெறும் ஹாஸ்பிடல் விஸிட், ஜெயில் விஸிட் செய்தால் போதுமா? ஒன்றிலே தவறினாலும் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பீர்கள்,

கிருபைக்குக் கீழ்ப்பட்டிருந்தால் நியாயப்பிரமாணம் பூரணமாக்காததை கிருபை பூரணப்படுத்தும்.

வசதி எப்படி?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//“எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட உமக்கு சித்தம்தானே, உமது சித்தத்தை நீர் நிறைவேற்றத்தான் வேண்டும்; நான் உமக்குக் கீழ்ப்படிய மாட்டேன், நீர் சொல்வதைச் செய்யமாட்டேன், ஆனாலும் இயேசுவின் இரத்தத்தால் எனது அனைத்து பாவங்களையும் நீர் சுத்திகரிக்கத்தான் வேண்டும்” என நாம் சொன்னால்,

“மகனே, எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது எனது சித்தம்தான், இயேசுவின் இரத்தம் எல்லா பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் என்பதும் மெய்தான்; ஆனால் நீ இரக்கமுள்ளவனாய் இரு, அப்போதுதான் இரக்கம் பெறுவாய்; நீ இரக்கமில்லாதவனாக இருந்தால் இரக்கம் பெறமாட்டாய் என்றும் வசனங்கள் கூறுகிறதல்லவா? அவ்வசனங்களை அன்பு57 போன்ற பலரும் எவ்வளவாய் எடுத்துரைத்தார்கள்? அதன் பின்னரும் நீங்கள் வசனங்களுக்கு செவிகொடாமல் போனீர்களே; எனவே வசனம் கூறுகிறபடியே, “இரக்கமில்லாத உங்களுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புதான் கிடைக்கும்”. ஆனால் இரக்கமுள்ளவர்களான ஆயக்காரரும் வேசிகளும் மத்தேயு 21:31-ன்படி உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்திற்கு செல்வதைப் பாருங்கள்” என இயேசு சொல்வார்.//


சாரி, இது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்!! நியாயத்தீர்ப்பின் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தார்!! வசனத்துடன் சேர்த்து சொல்லுவது நீங்களா நானா!! அதாவது தேவனின் இரக்கத்திற்கு முன்பாகவும் சரி, கிறிஸ்துவின் ஈடுப்பலிக்கு முன்பாகவும் சரி, தேவனின் சித்தத்திற்கு முன்பாகவும் சரி, நீங்கள் செய்யும் கிரியை பெரிது என்று இன்னமும் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்!! இப்பொழுது இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பை "இரக்கம் பெறமாட்டய்" என்கிற அளவிற்கு திரித்திருக்கிறீர்கள்!! நீங்கள் நியாயாசனத்தில் உட்கார்ந்து சொல்லுவது போல் இருக்கிறது உங்கள் இந்த பகுதி!!

கிறிஸ்து இரத்தம் சிந்தினார் தான்............. எங்கே இருக்கு வசனம்!! நேரடியா சொல்லப்பட்டதை ஏன் திரிக்கிறீர்கள்!! உங்கள் கிரியை மேன்மைபாராட்ட ஏன் கிறிஸ்துவின் இரத்தத்தையும் தேவனின் கிருபையின் வல்லமையை குறைவாக எழுதுகிறீர்கள்!!

தேவனுக்கு சித்தம் தான்.........ஆனால், எங்கே இருக்கும் இது போன்ற வசனம்!!

இந்த வசனத்திற்கு இது வரையில் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை, கேட்டால் உடனே "இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு" என்கிற ஒன்றை மாத்திரமே பாடிக்கொண்டு இருக்கிறீர்கள்!! இது மட்டும் நியாயமா!!

II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

உங்கள் கிரியையின் மேன்மையினால் இந்த வசனம் எல்லாம் உங்களுக்கு புரியவில்லையா, அல்லது இதை விளக்க மறுக்கிறீர்களா!! உங்களின் கிரியை உபதேசம் தேவனின் தீர்மானமத்திற்கு முன்பாக மேன்மைபாராட்டுகிறதே!! இயேசு கிறிஸ்துவுக்குள் அழைப்பை பெற்றவரகள் நிச்சயமாகவே அவரின் கிருபையை பற்றியே மேன்மைப்பாராட்டுவார்கள்!!

நியாயத்தீர்ப்புக்குமுன் இரக்கம் மேன்மைபாராட்டும் என்பது தேவனின் கிருபையே தவிர நீங்கள் நினைப்பது போல் மனிதனின் கிரியை அல்ல!!

//அதாவது ஒருவன் வேறு பல பாவங்களைச் செய்திருந்தாலும், அவன் “இரக்கமுள்ளவனாக” இருந்தால், அவனது பிற பாவங்கள் மன்னிக்கப்படும். அவன் “இரக்கமற்றவனாக” இருந்தால் அவனது மற்ற பாவங்கள் மன்னிக்கப்படாது. அதாவது அவனிடம் “இரக்கம்” எனும் பண்பு இருக்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்துதான், அவனது பிற பாவங்கள் மன்னிக்கப்படவேண்டுமா, வேண்டாமா என்பது தீர்மானிக்கப்படும். இதனால்தான் நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும் என யாக்கோபு கூறுகிறார்.//

இதுவும் குழப்பத்தின் உச்சமான ஒரு விளக்கம்!! தேவனின் கிருபையையும் கிரிஸ்துவின் "எல்லாருக்ககவும்" இரத்தம் சிந்துதலையும் அவமாக்கும் ஒரு விளக்கம் இது!! ஒரு மனிதனின் இரக்கத்தை குறித்து சிந்தையுள்ள தேவனுக்கு இரக்கம் இல்லை என்று நீங்கள் தேவன் மீதே குற்றம் சுமத்துகிறீர்கள்!! பாவம் என்றால் பாவமே, அதில் சின்ன பாவம், பெரிய பாவம், இரக்கம் செய்யாமல் பாவம், இரக்கம் செய்து மற்ற பாவங்கள்  போன்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது!! உங்கள் பாவங்கள் என்றால் அது எல்லாவற்றையும் சேர்த்து தான்!! உங்களுக்கு கிரியை பிடிக்கும் என்பதால், "இரக்கம் செய்தல்" மாத்திரம் தனியாக நிற்கமுடியாது!!

2 தீமோத்தேயு 1:9ஐ விளக்கவும் கடமைபட்டுள்ளீர்கள்!! இது மாத்திரம் அல்ல, இன்னும் மற்ற திரியில் கேட்ட எனக்து கேள்விகளும் இருக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//இப்படியிப்படி செய்தால்தான், இன்னின்ன பாக்கியங்கள்/பலன்கள் கிடைக்கும், இதையிதைச் செய்யாவிட்டால் இன்னின்ன சாபங்கள்தான் கிடைக்கும் என்பது தேவன் வகுத்த விதி அல்லது சட்டம். அவரது சட்டப்படி நாம் நடக்கத்தான் வேண்டும். நடந்தால்தான் அதற்கான பலன் கிடைக்கும். மாறாக//

ஹலோ எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? நீங்கள் சொன்ன தேவன் வகுத்த விதி அல்லது சட்டத்தை தேவனே குலைத்துவிட்டதாகத்தான் வேதம் சொல்கிறது

கொலோ2:14. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;

15. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

2கொரி3:6. புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.

7. எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.

8. ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?

9. ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.

10. இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல.

11. அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.

12. நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம்.

நியாயப்பிரமாணம் ஒருவனைக் குற்றவாளியாக்கி ஆக்கினையைத்தான் கொண்டுவந்தது.

//“எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட உமக்கு சித்தம்தானே, உமது சித்தத்தை நீர் நிறைவேற்றத்தான் வேண்டும்; நான் உமக்குக் கீழ்ப்படிய மாட்டேன், நீர் சொல்வதைச் செய்யமாட்டேன், ஆனாலும் இயேசுவின் இரத்தத்தால் எனது அனைத்து பாவங்களையும் நீர் சுத்திகரிக்கத்தான் வேண்டும்” என நாம் சொன்னால்,

“மகனே, எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது எனது சித்தம்தான், இயேசுவின் இரத்தம் எல்லா பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் என்பதும் மெய்தான்; ஆனால் நீ இரக்கமுள்ளவனாய் இரு, அப்போதுதான் இரக்கம் பெறுவாய்; நீ இரக்கமில்லாதவனாக இருந்தால் இரக்கம் பெறமாட்டாய் என்றும் வசனங்கள் கூறுகிறதல்லவா? அவ்வசனங்களை அன்பு57 போன்ற பலரும் எவ்வளவாய் எடுத்துரைத்தார்கள்? அதன் பின்னரும் நீங்கள் வசனங்களுக்கு செவிகொடாமல் போனீர்களே; எனவே வசனம் கூறுகிறபடியே, “இரக்கமில்லாத உங்களுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புதான் கிடைக்கும்”. ஆனால் இரக்கமுள்ளவர்களான ஆயக்காரரும் வேசிகளும் மத்தேயு 21:31-ன்படி உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்திற்கு செல்வதைப் பாருங்கள்” என இயேசு சொல்வார்//.

இதெல்லாம் உங்கள் வேதத்தில் உள்ளதுபோலும். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவ்ங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும், 

I யோவான் 2:2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.*

*No Conditions Apply

எபேசியர்2:4. தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,

5. அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.

6. கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,

7. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.

8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

9. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

இரக்கம்பாராட்டவேண்டுமென்பது தேவன் மனிதனுக்கு இயற்கையாகவே கொடுத்த சுபாவம் அதை அன்பு57 போன்றவர்கள் மூலமாக போதிக்கவேண்டும் என்ற கட்டாயம் தேவனுக்கில்லை. முல்லைக்குத் தேர்தந்த பாரிக்கு எந்த அன்பு போய் போதித்தார்? வீரப்பன் கூட அநேகருக்கு இரக்கம் பாராட்டியிருப்பான்,

ஒரெ ஒரு நபருக்கு இரக்கம்பாராட்டிவிட்டு, இன்னொருவருக்கு இரக்கம் பாராட்ட முடியவில்லை என்றால் என்ன நடக்கும்?

உங்கள் முன்னே 10 பிச்சைக்காரர்கள் வந்தால் எந்த பிச்சைக்காரருக்கு 'இரக்கம்' பாராட்டுவீர்கள். எல்லாருக்கும் பாராட்டாவிட்டால் நியாயத்தீர்ப்பு எப்டி இருக்கும்? உதவும் கரங்கள் வித்யாகரைவிடவா நீங்கள் இரக்கம் பாராட்டுகிறீர்கள், அவருக்கு எந்த அன்பு57 போதித்தது. ஒன்று மட்டும் நிச்சயம் சுயமேன்மையை நாடுகிறீர்கள் நீங்கள். உங்களுக்கும் பெந்தேகொஸ்த் போதகர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை. 

"ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;"

லூக்கா18:9. அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

10. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

11. பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

13. ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

நாங்கள் "பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்றுதான் இன்றுவரை கதறிக்கொண்டிருக்கிறோம்!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//நியாயத்தீர்ப்பின் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தார்!! வசனத்துடன் சேர்த்து சொல்லுவது நீங்களா நானா!! அதாவது தேவனின் இரக்கத்திற்கு முன்பாகவும் சரி, கிறிஸ்துவின் ஈடுப்பலிக்கு முன்பாகவும் சரி, தேவனின் சித்தத்திற்கு முன்பாகவும் சரி, நீங்கள் செய்யும் கிரியை பெரிது என்று இன்னமும் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்!! இப்பொழுது இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பை "இரக்கம் பெறமாட்டய்" என்கிற அளவிற்கு திரித்திருக்கிறீர்கள்!! நீங்கள் நியாயாசனத்தில் உட்கார்ந்து சொல்லுவது போல் இருக்கிறது உங்கள் இந்த பகுதி!!//

//உங்கள் கிரியையின் மேன்மையினால் இந்த வசனம் எல்லாம் உங்களுக்கு புரியவில்லையா, அல்லது இதை விளக்க மறுக்கிறீர்களா!! உங்களின் கிரியை உபதேசம் தேவனின் தீர்மானமத்திற்கு முன்பாக மேன்மைபாராட்டுகிறதே!!//

//ஒரு மனிதனின் இரக்கத்தை குறித்து சிந்தையுள்ள தேவனுக்கு இரக்கம் இல்லை என்று நீங்கள் தேவன் மீதே குற்றம் சுமத்துகிறீர்கள்!!//

சோல்சொல்யூஷன்:

//"உங்கள் சித்தப்படி" மீறுகிறவனுக்கு 'இரக்கமற்ற' நியாயத்தீர்ப்பு என்றால், ...//

இப்படி எல்லாவற்றையும் எனது சித்தம், எனது போதனை எனச் சொன்னால் நான் எப்படி விவாதிக்க முடியும்?

இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு, மன்னியாதிருப்பார், மரணத்தில் நிலைநிற்கிறான், மரணத்திற்கேதுவான பாவம், சபிக்கப்பட்டவர்களே! பிசாசுக்கு ஆயத்தம்பண்ணப்பட்ட நித்திய அக்கினிக்குப் போங்கள் என்றெல்லாம் கூறுவது வசனம்தானே? இதைத்தானே நான் எடுத்துச் சொல்கிறேன்? அப்படிச் சொல்கையில் இது உங்கள் போதனை, உங்கள் நியாயத்தீர்ப்பு எனச் சொன்னால் நான் என்ன செய்வது?

இவ்வளவு விவாதித்த பின் நான் ஒன்றைப் புரிந்துகொண்டேன்... அதாவது நீங்கள் எந்த வசனத்தைச் சொல்கிறீர்களோ அதுதான் வசனம், அதுதான் போதனை; மற்றபடி நான் எந்த வசனத்தைச் சொன்னாலும் அது வசனமல்ல, என் சுயபோதனை என்கிறீர்கள். அதாவது வசனத்தைச் சொல்வதில் நீங்கள்தான் பெரியவர்கள், பெரியவர்களான நீங்கள் சொல்வதை நான் எதிர்கேள்வி கேளாமல் அப்படியே ஏற்கவேண்டும் என்கிறீர்கள்.

பேசாமல் உங்கள் தளத்தை “கோவை பெரியன்ஸ்” என்பதற்குப் பதிலாக, “கோவை பெரியவன்ஸ்” என மாற்றிக் கொள்ளலாம்.

உங்கள் விவாதப் போக்கை மாற்றாமல் இனி உங்களோடு என்னால் விவாதிக்க இயலாது. எனவே இப்போதைக்கு எனது விவாதத்தை நிறுத்திக் கொள்கிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//பின்வரும் வசனம் எதைக் குறிக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள்.

கலாத்தியர்3:11. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.//

அன்பு57:

பின்வரும் வசனங்கள் எதைக் குறிக்கின்றன என்று சொல்லுங்கள்.

கலாத்தியர் 5:14 உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். 15 நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

(நாம் அழிந்துபோகாதபடிக்கு கிருபைதான் இருக்கிறதே, பின்னர் ஏன் நாம் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்? நாம் எச்சரிக்கையாயிருப்பது தேவசித்தப்படி நடக்குமா? நம் சித்தப்படி நடக்குமா? தேவசித்தப்படி நடக்குமெனில், நம்மிடம் ஏன் எச்சரிக்கையாயிருக்கும்படி சொல்லவேண்டும்?)

கலாத்தியர் 5:22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23 சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

(இக்கனிகளில் எந்தக் கனிக்கு விரோதமாக நியாயப்பிரமாணம் இருந்தது, அல்லது எந்தக் கனி நியாயப்பிரமாணத்தில் இல்லை?)

கலாத்தியர் 5:19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

(இப்படிப்பட்டவைகளில் எவற்றையாவது செய்யலாம் என நியாயப்பிரமாணம் கூறியுள்ளதா, அல்லது இவற்றில் எதையாவது செய்யக்கூடாதென் நியாயப்பிரமாணம் சொல்லத் தவறியுள்ளதா?)

கலாத்தியர் 5:16 பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.

(ஆவிக்கேற்றபடி நடக்காவிட்டால் என்னாகும்? மாம்ச இச்சையை நிறைவேற்றுவோமல்லவா?)

கலாத்தியர் 6:7 மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். 8 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். 9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

(மாம்சத்திற்கென்று விதைப்பவனுக்கு கிருபை கிடையாதா? அவன் அழிவைத்தான் அறுக்க வேண்டுமா? இது எந்த அழிவு?

ஆவிக்கென்று விதைப்பவன் நித்தியஜீவனை அறுப்பானெனில், ஆவிக்கென்று விதைக்காவனால் நித்திய ஜீவனை அறுக்க முடியாதா? அப்படியானால் இவனுக்குக் கிருபை கிடையாதா?

நன்மை செய்கிறதில் தளர்ந்து போகாதிருந்தால்தான் ஏற்றகாலத்தில் நித்தியஜீவனை அறுக்கமுடியுமா? தளர்ந்துவிட்டால் நித்தியஜீவனை அறுக்கமுடியாதா?)

சோல்சொல்யூஷன்:

//பின்வரும் வசனங்கள் எதைக் குறிக்கின்றன என்று மட்டும் சொல்லுங்கள்.

கலாத்தியர் 3:21. அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.

22. அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.//

அன்பு57:

பின்வரும் வசனம் எதைக் குறிக்கிறது என்று சொல்லுங்கள்.

கலாத்தியர் 4:10  நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே. 11 நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.

(வேதம் தானே எல்லாரையும் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது; பின்னர் ஏன் just நாட்களைப் பார்ப்பதற்காக பவுல் இந்தப் பயம் பயப்படுகிறார்? அதான் எல்லாருக்கும் கிருபை இருக்கிறதே! பின்னர் எப்படி பவுலின் பிரயாசம் வீணாகப் போகும்?

பவுல் சொல்வதெல்லாம் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய சபைக்கு மட்டுமே என்கிறீர்கள்! தெரிந்துகொள்ளப்பட்டவர்களைத்தான் பிதா இழுத்துக் கொள்வாரே! பின்னர் யார் விஷயத்தில் பவுலின் பிரயாசம் வீணாகப்போகும்?)

சோல்சொலுயூஷன்:

//பின்வரும் வசனம் எதைக் குறிக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள்.

கலாத்தியர் 3:25. விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.//

அன்பு57:

இவ்வசனத்தையடுத்த வசனம் எதைக் குறிக்கிறது என்று சொல்லுங்கள்.

கலாத்தியர் 3:26 நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.

(இயேசுவோ, இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள் என மத்தேயு 5:45-ல் சொல்கிறார்; ஆனால் பவுலோ இயேசுவைப் பற்றும் விசுவாசத்தால் எல்லாரும் தேவனுடைய புத்திரராயிருப்பதாகக் கூறுகிறார். இவர்களில் யார் சொல்வது சரி?)

கலாத்தியர் 3:26-க்கு அடுத்ததாக 4-ம் அதிகாரத்தில் காணப்படும் பின்வரும் வசனங்கள் எதைக் குறிக்கின்றன என்று சொல்லுங்கள்.

கலாத்தியர் 4:9 நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? 10 நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே. 11 நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.

(தேவனுடைய புத்திரராயிருந்தவர்கள் எப்படி நாட்களையும் மாதங்களையும் பார்த்தார்கள்? தேவனுடைய புத்திரராயிருந்தவர்களுக்காக பவுல் பட்ட பிரயாசம் எப்படி வீணாய்ப் போகும்?)

சோல்சொலுயூஷன்:

//பின்வரும் வசனம் எதைக் குறிக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள்.

கலாத்தியர் 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.//

அன்பு57:

இவ்வசனத்தையடுத்த பின்வரும் வசனம் எதைக் குறிக்கிறது என்று சொல்லுங்கள்.

கலாத்தியர் 5:19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 1Cor 3:3; Jas 3:14; 20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

(நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள் அல்ல எனச் சொல்லிவிட்டு, மாம்சத்தின் கிரியைகளென இத்தனை காரியங்களைச் சொல்லி, இப்படிப்பட்டவைகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தர்ப்பதில்லை என பவுல் ஏன் கூறவேண்டும்? அப்படியானால், நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவர்களல்ல என்றாலும், பவுலின் இப்பிரமாணத்திற்கு கீழ்ப்படத்தான் வேண்டுமா?)



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இப்படி எல்லாவற்றையும் எனது சித்தம், எனது போதனை எனச் சொன்னால் நான் எப்படி விவாதிக்க முடியும்?

இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு, மன்னியாதிருப்பார், மரணத்தில் நிலைநிற்கிறான், மரணத்திற்கேதுவான பாவம், சபிக்கப்பட்டவர்களே! பிசாசுக்கு ஆயத்தம்பண்ணப்பட்ட நித்திய அக்கினிக்குப் போங்கள் என்றெல்லாம் கூறுவது வசனம்தானே? இதைத்தானே நான் எடுத்துச் சொல்கிறேன்? அப்படிச் சொல்கையில் இது உங்கள் போதனை, உங்கள் நியாயத்தீர்ப்பு எனச் சொன்னால் நான் என்ன செய்வது?//

அன்பு அவர்களே!! கிரியை என்பது தேவன் வைத்திருக்கும் சுவபாவம், அதிலும் அந்த கிரியை செய்வதற்கு கிருபையும் அவரே தருகிறார்!! ஆகையால் அதை வைத்து மேன்மைபாராட்ட வேண்டாம் என்று தான் சொல்லுகிறேன்!! மனிதனின் சித்தமே இல்லை என்கிற போது, உங்கள் சித்தம் என்று நான் ஏன் சொல்ல வேண்டும்!!??

உங்கள் பார்வை இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு (இது தண்டனை அல்ல), மன்னியாதிருப்பார் (இது நித்தியத்திற்கும் அல்ல), மரண‌த்தில் நிலைநிற்கிறான் (அதிலிருந்து விடுவிக்கவே கிறிஸ்து இயேசு வந்தார்)!! பிசாசுக்கு ஆயத்தம்பண்ணப்பட்ட ஒரு இடத்தை வேதம் முழுவதும் எங்கும் இல்லாமல் வெளிப்படுத்தின விசேஷத்தில் "அக்கினி கடல்" என்று சொல்லும் நோக்கம் என்ன? அக்கினி கடல் (ஆங்கிளத்தில் அக்கினி ஏறி) என்றால் உண்மையிலேயே அக்கினியிருக்கும் கடலா, அல்லது கடல் முழுவதும் அக்கினியாக இருக்குமா?? அக்கினி கடல் என்றால் முற்றிலும் அழிக்கப்படுவதற்கு உபயோகிப்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை!! இதை போய் "ஆயத்தம்" செய்துவைத்திருக்க முடியுமா!! அது பொருளே அல்ல, அதை எப்படி ஆயத்தப்படுத்த முடியும்!! மாறாக பிசாசுக்கு கொடுக்கப்பட்ட இந்த பூமி தான் ஆயத்தப்படுத்தப்பட்ட இடமாகும்!! இந்த இடத்தில் தான் நித்திய** அக்கினி (சிட்சை, கற்றுக்கொடுக்கப்படுவது) இருக்கும்!! இப்படி சங்கேத வார்த்தைகளில் எழுதப்பட்டதை எழுத்தின்படி எடுத்துக்கொண்டு, நேரடியான வசனங்களான, கிறிஸ்துவினால் அனைவருக்கும் இரட்சிப்பு என்று சொன்னால் அதில் ஒரு "தான்......ஆனால்" சேர்த்துக்கொள்வதை தான் உங்கள் போதனை என்றேன்!! நேரடியாக சொல்லப்பட்ட கிருபையை புரிந்துக்கொள்ள முடியவில்லை!! நீங்கள் சொல்லும் கிரியைகளை செய்யவும் கிறிஸ்துவிற்குள் முன்னமே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று வசனத்தை சொல்லி விளக்குவீர்களா என்று கேட்டால் நீங்கள் தொடர்ந்து, "இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு, மன்னியாதிருப்பார், மரணத்தில் நிலைநிற்கிறான், மரணத்திற்கேதுவான பாவம், சபிக்கப்பட்டவர்களே!" இதை தானே சொல்லி வருகிறீர்கள்!! இதற்கு உண்டான அர்த்தங்களை மேலே பதிந்திருக்கிறேன்!!

** நித்தியம் என்று தமிழில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் ஒரே வார்த்தை ஆனால் மூல பாஷையில் aión பல அர்த்தங்கள் உண்டு!! தேவனின் தன்மைக்கு தகுந்தாற்போல் தான் அதை மொழிப்பெயர்த்திருக்க வேண்டும்!! எடுத்துக்காட்டு, தேவன் அநாதியாக இருக்கிறவர் என்பதற்கும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தை சொல்லவும் இதே வார்த்தை தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது!! தேவன் அன்புள்ளவர் என்கிற தன்மையை வைத்து கிரேக்கத்தில் அதை சரியாக கொடுத்திருக்கிறார்கள், ஆனால் நம்மவர்கள் வழக்கம் போல் தங்களுக்கு உள்ள தேவ அறிவை வைத்துக்கொண்டு மொழிப்பெயர்த்து வைத்திருக்கிறார்கள்!! அதாவது ஒரு நித்திய காலத்தை சொல்லவும், ஒரு குறிப்பிட்ட யுகத்தை சொல்லவும் கிரேக்கத்தில் ஒரே வார்த்தையை தழுவியே மற்ற வார்த்தைகள் இருக்கிறது, ஆனால் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவை!!

aión என்கிற இந்த வார்த்தை தான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும், ஒரு நீண்ட காலத்திற்கும், நித்தியத்திற்கும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது!! ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே (1000 வருடங்கள் அளவிற்கு) தேவன் அக்கினியில் (சிட்சையில், கற்றுக்கொடுத்தலில்) சபிக்கப்பட்டவர்களை (என்னமோ இவர்கள் இனி காலம் முழுவதும் சபிக்கப்பட்டவர்கலாக என்று எண்ண வேண்டாம், பரலோக கேட்டகரியை இழந்தவர்கள் அவ்வளவே) பிசாசுக்காக ஆயத்தம்ப்பண்னப்பட்ட இடத்தில் (நிச்சயமாக அக்கினி கடல் இல்லை, ஏனென்றால் அக்கினி கடல் என்பது முழுமையான அழிவை குறிக்கும்) வைப்பார்!! நீதி வாசம் செய்யும் பூமியில் இவர்கல் நீதியை கற்றுக்கொண்டு நித்திய ஜீவனை பரிசாக பெறுவார்கள்!!

உங்கள் கருத்துக்களுக்கு எத்துனை விளக்கம் கொடுத்தாலும் நீங்கள் சமாதானமாக போவதில்லை, என் கேள்விக்கு என்ன பதில்?

//இவ்வளவு விவாதித்த பின் நான் ஒன்றைப் புரிந்துகொண்டேன்... அதாவது நீங்கள் எந்த வசனத்தைச் சொல்கிறீர்களோ அதுதான் வசனம், அதுதான் போதனை; மற்றபடி நான் எந்த வசனத்தைச் சொன்னாலும் அது வசனமல்ல, என் சுயபோதனை என்கிறீர்கள். அதாவது வசனத்தைச் சொல்வதில் நீங்கள்தான் பெரியவர்கள், பெரியவர்களான நீங்கள் சொல்வதை நான் எதிர்கேள்வி கேளாமல் அப்படியே ஏற்கவேண்டும் என்கிறீர்கள்.//

வசனத்தை சொல்லுவது அல்ல விஷயம், வசனம் என்ன சொல்லுகிறது என்பது தான் விஷயம்!! தேவன் அன்புள்ளவர், அவர் மனிதர்களையும் அப்படியே இருக்க விரும்புகிறார், ஆனால் அவர் அநேகரை தூக்கி "இரண்டாம் மரணம்" என்கிற அக்கினிக்கடலில் போட்டு விடுவார், அங்கே அவர்கள் அழிய மாட்டார்கள், வாதிக்கப்படுவார்கள் என்பதெல்லாம் தேவனின் அன்பை குறிப்பவைகளே கிடையாது!! நாங்கள் வசனத்தில் உள்ள வார்த்தைகளை மாத்திரம் கொடுக்காமல், அந்த வார்த்தைகள் சொல்லும் அர்த்தத்தை சொல்லுகிறோம், அதை தப்பு என்று நிரூபியுங்கள், அதை விட்டு விட்டு ஏன் எங்களை நையாண்டி செய்கிறீர்கள்!! இது எந்த விதமான "அன்பு"!! இதோ,

//பேசாமல் உங்கள் தளத்தை “கோவை பெரியன்ஸ்” என்பதற்குப் பதிலாக, “கோவை பெரியவன்ஸ்” என மாற்றிக் கொள்ளலாம்.//

இப்படி எழுதுவதால் என்ன பிரயோஜனம்!! இப்பவும் எப்பவும் ஒன்றை தான் சொல்லுகிறோம், நாங்கள் சொல்லி நீங்கள் மாறுவதோ, அல்லது நீங்கள் சொல்லி நாங்கள் மாறுவதோ என்பதெல்லாம் விஷயம் இல்லை, மாறாக தேவனின் கிருபையிருந்தாலே நமக்கு புரியும்!! விவாதம் நடக்கும் போது என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், இந்த தளத்திற்கு பெயர் மாற்ற சொல்லுவது நல்ல விவாதம் இல்லையே!!

αἰῶνα (aiōna) − 31 Occurrences

αἰῶνας (aiōnas) − 30 Occurrences

αἰῶνι (aiōni) − 8 Occurrences

αἰῶνος (aiōnos) − 25 Occurrences

αἰώνων (aiōnōn) − 27 Occurrences

αἰῶσιν (aiōsin) − 1 Occurrence

age, course, eternal, forever From the same as aei; properly, an age; by extension, perpetuity (also past); by implication, the world; specially (Jewish) a Messianic period (present or future) -- age, course, eternal, (for) ever(-more), (n-)ever, (beginning of the, while the) world (began, without end).



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//உங்கள் பார்வை இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு (இது தண்டனை அல்ல), மன்னியாதிருப்பார் (இது நித்தியத்திற்கும் அல்ல), மரண‌த்தில் நிலைநிற்கிறான்//

உங்களது இப்போங்குதான் வேண்டாம் என்கிறேன். “இரக்கமில்லா நியாயத்தீர்ப்பு, மன்னியாதிருப்பார், மரணத்தில் நிலைநிற்கிறான்” எனும் வார்த்தைகளெல்லாம் எனது பார்வையில் மட்டுமே இருப்பதாக ஏன் சொல்ல வேண்டும்? உங்கள் வேதத்தில் இவ்வார்த்தைகள் இல்லையா, அல்லது அவை உங்கள் பார்வையில் படவில்லையா?

இப்படி தேவையில்லாத ஒரு விவாதத்தை உண்டாக்கும் வண்ணம் நீங்கள் வார்த்தைகளைப் பிரயோகிப்பதால்தான், உங்களோடு விவாதம் செய்வது சலிப்படையச் செய்கிறது.

பெரியன்ஸ்:

//கிரியை என்பது தேவன் வைத்திருக்கும் சுபாவம், அதிலும் அந்த கிரியை செய்வதற்கு கிருபையும் அவரே தருகிறார்!! ஆகையால் அதை வைத்து மேன்மைபாராட்ட வேண்டாம் என்று தான் சொல்லுகிறேன்!!//

கிரியையை நான் மேன்மைபாராட்டுவதாக எங்காவது எழுதியுள்ளேனா? நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும் என வசனம் சொல்வதை நான் அப்படியே சொல்கிறேன். வசனம் சொல்வதைச் சொன்னால், “நீங்கள் கிரியையை மேன்மைபாராட்டுகிறீர்கள்” என என்னைக் குறித்து விமர்சிக்கிறீர்கள். இது அவசியந்தானா?

நான் எடுத்துச் சொல்லும் வசனங்களுக்கான உங்கள் விளக்கத்தை மட்டும் சொன்னால் போதும்.

பெரியன்ஸ்:

//அங்கே அவர்கள் அழிய மாட்டார்கள், வாதிக்கப்படுவார்கள் என்பதெல்லாம் தேவனின் அன்பை குறிப்பவைகளே கிடையாது!!//

அவர்கள் அழிய மாட்டார்கள், வாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் நான் சொல்லியுள்ளேனா? நான் என்ன சொல்லியுள்ளேனோ அதை மட்டும் சொல்லி விவாதியுங்கள். மற்றவர்கள் சொல்வதை தப்பித்தவறிக்கூட என்னுடனான விவாதத்தில் சொல்லவேண்டாம்.

பெரியன்ஸ்:

//அங்கே அவர்கள் அழிய மாட்டார்கள், வாதிக்கப்படுவார்கள் என்பதெல்லாம் தேவனின் அன்பை குறிப்பவைகளே கிடையாது!!//

இவையெல்லாம் தேவனின் அன்பை குறிப்பவைகளா இல்லையா எனும் கேள்வி அவசியமல்ல. ஏனெனில் அவற்றை நான் ஒருபோதும் சொல்லவில்லை. எவர்கள் அவற்றைச் சொன்னார்களோ அவர்களிடம் இதைச் சொல்லுங்கள்.

2-ம் மரணம் என்றால் என்னவென எனது புரிந்துகொள்தலை நான் கூறிவிடுகிறேன்; இதன் அடிப்படையில் மட்டும் இனிமேல் உங்கள் விவாதத்தை வையுங்கள்.

முதலாம் மரணமும் 2-ம் மரணமும் ஒரேவிதமான மரணங்கள்தான். முதலாம் மரணத்தில் எப்படி ஜீவன் எடுக்கப்படுகிறதோ, அதேவிதமாகத்தான் 2-ம் மரணத்திலும் ஜீவன் எடுக்கப்படும். ஆனால் ஒரேயொரு வித்தியாசம். முதலாம் மரணத்தில் மரித்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்; 2-ம் மரணத்தில் மரித்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழாமல் நித்திய நித்தியமாக மரணத்தில் இருப்பார்கள்.

இப்போது சொல்லுங்கள், முதலாம் மரணத்தில் ஜீவனை எடுப்பது தேவஅன்புதான் எனில், 2-ம் மரணத்தில் ஜீவனை எடுப்பதும் தேவஅன்புதானே? எனவே நான் புரிந்துகொண்ட 2-ம் மரணத்தைக் குறித்து தேவையற்ற விதமாக இனி விமர்சிக்கவேண்டாம். இப்படியே உங்களது ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பதில் எழுதினால், உருப்படியாக விவாதம் செய்ய இயலாது.

மீண்டும் சொல்கிறேன், இனியாவது உங்கள் விவாதப்போக்கை மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான் சலிப்பின்றி உங்களோடு விவாதிக்க முடியும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//முதலாம் மரணமும் 2-ம் மரணமும் ஒரேவிதமான மரணங்கள்தான். முதலாம் மரணத்தில் எப்படி ஜீவன் எடுக்கப்படுகிறதோ, அதேவிதமாகத்தான் 2-ம் மரணத்திலும் ஜீவன் எடுக்கப்படும். ஆனால் ஒரேயொரு வித்தியாசம். முதலாம் மரணத்தில் மரித்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்; 2-ம் மரணத்தில் மரித்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழாமல் நித்திய நித்தியமாக மரணத்தில் இருப்பார்கள்.
இப்போது சொல்லுங்கள், முதலாம் மரணத்தில் ஜீவனை எடுப்பது தேவஅன்புதான் எனில், 2-ம் மரணத்தில் ஜீவனை எடுப்பதும் தேவஅன்புதானே? எனவே நான் புரிந்துகொண்ட 2-ம் மரணத்தைக் குறித்து தேவையற்ற விதமாக இனி விமர்சிக்கவேண்டாம். இப்படியே உங்களது ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பதில் எழுதினால், உருப்படியாக விவாதம் செய்ய இயலாது.//

கேள்விகள்:
1. முதலாம் மரணம் என்கிற வார்த்தை வேதத்தில் இருக்கிறதா? வேதம் சொல்லுவது ஒரே தரம் மரிப்பது என்று தானே!!
2. இரண்டாம் மரணம் என்கிற வார்த்தை வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள ஒரு  வார்த்தை!! வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் எழுத்தின்படியே எடுத்துக்கொள்ளலாமா??
3. முதலாம் மரணத்தில் அனைவரும் உயிர்த்தெழுவார்களா அல்லது உயிர்த்தெழ முடியாதா?
4. அப்படி எல்லாரும் உயிர்த்தெழுந்தால் அதில் அநேகர் வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்டிருக்கும் 2ம் மரணத்திற்கு எப்போ செல்லுவார்கள்?
5. அப்படி முதலாம் மரணத்திலிருந்து உயிர்த்தெழாதவர்கள் (வெளி. 20:5) நித்தியத்திற்கும் மரித்தேயிருப்பார்களே, பிறகு எப்படி முதலாம் மரணம், 2ம் மரணம் என்று வகைப்படுத்துகிறீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//உங்களது இப்போங்குதான் வேண்டாம் என்கிறேன். “இரக்கமில்லா நியாயத்தீர்ப்பு, மன்னியாதிருப்பார், மரணத்தில் நிலைநிற்கிறான்” எனும் வார்த்தைகளெல்லாம் எனது பார்வையில் மட்டுமே இருப்பதாக ஏன் சொல்ல வேண்டும்? உங்கள் வேதத்தில் இவ்வார்த்தைகள் இல்லையா, அல்லது அவை உங்கள் பார்வையில் படவில்லையா?//

இதைக்கூட புரிந்துக்கொள்ளாமல் இருக்கிறீர்களே!! "இரக்கமில்லா நியாயத்தீர்ப்பு, மன்னியாதிருப்பார், மரணத்தில் நிலைநிற்கிறான்" போன்ற வார்த்தைகள் வேதத்தில் தான் இருக்கிறது, நான் இங்கே எழுதுவது நீங்கள் அதற்கு அர்த்தம் கொண்டதை வைத்து, உங்கள் பார்வையில் என்கிறேன், அதாவது நீங்கள் புரிந்துக்கொண்டது என்கிற அர்த்தத்தில் தான் எழுதுகிறேன்!! இந்த வார்த்தைகள் எல்லாம் எங்கள் வேதத்திலும் இருக்கிறது ஆனால் தேவன் அன்பை வைத்து நாங்கள் அதை புரிந்துக்கொண்டிருக்கிறோம்!! உங்கள் பார்வை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் அர்த்தம், மற்றாபடி எதோ வேதத்தில் இல்லாததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்று சொல்லவில்லை!! இது போன்ற விமர்சனங்கள் தான் விவாதத்தை திசை திருப்பும் போக்கு!! இன்னும் நான் கேட்ட வசனத்திற்கு பதில் தராமல் இது போன்ற விமர்சனங்கள் மட்டும் விவாதத்திற்கு அழகா:

II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

//நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும் என வசனம் சொல்வதை நான் அப்படியே சொல்கிறேன்.//

மன்னிக்கனும் நீங்கள் இந்த வசனத்தை சொன்னீர்கள், ஆனால் அதை விளக்கும் போது "நியாயத்தீர்ப்பின் போது" என்று மாற்றி எழுதியிருக்கிறீர்கள்!! நீங்களே உங்கள் பதிவிற்கு திரும்ப சென்று பாருங்கள்!! தேவனின் இரக்கம் மேன்மைபாராட்டுவதில் அர்த்தம் இருக்கிறது, ஆனால் நீங்களோ மனிதர்களின் இரக்கம் மேன்மை பாராட்டும் என்கிற விதத்தில் தான் விளக்கியிருக்கிறீர்கள்!! ஆகவே தான் கிரியைகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள் என்று எழுதினேன்!! இல்லை என்று நிரூபியுங்கள்!! இப்பவும் கிருபையை குறித்தான் இத்துனை வசனங்கள் கொடுத்தாலும் அதில் ஒன்றையும் நீங்கள் விளக்க மனதில்லாதவராக இருக்கிறீகளே!! நியாயத்தீர்ப்புக்கு முன் என்பதற்கும் நியாயத்தீர்ப்பின் போது என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக்கொள்ளும் நிலையில் நீங்கள் இல்லை என்று நினைக்கிறேன்!!

//பேசாமல் உங்கள் தளத்தை “கோவை பெரியன்ஸ்” என்பதற்குப் பதிலாக, “கோவை பெரியவன்ஸ்” என மாற்றிக் கொள்ளலாம்.//

இது மட்டும் விவாதத்திற்கு உகந்த விமர்சனமா!! "உங்கள் பார்வையில்" என்பதற்கு வேறு அர்த்தம் புரிந்துக்கொண்டு அதற்கு நீங்கள் எழுதியிருக்கிறீகள்!! ஆனால் நீங்கள் செய்யும் இது போன்ற விமர்சனம் சரியா!!?? விரல் நீட்டுவதற்கு முன் முதலில் நாம் நம்மையே சோதித்து பார்ப்போமே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு என்பது தண்டனை அல்ல என்கிறீர்கள். அவ்வாறெனில் அது வேறென்ன என்பதைச் சொல்லுங்கள். அது எப்படிப்பட்டதாக இருக்கும்? அதை இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு எனச் சொல்வதற்கான காரணம் என்ன? எனும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

மன்னியாதிருப்பார் என வசனம் சொன்னால், அது நித்தியத்திற்கும் அல்ல என நீங்களாகவே சொல்லிக்கொள்கிறீர்கள். வசனம் அப்படிச் சொல்லவில்லையே! மன்னியாதிருப்பார் என்பது நித்தியத்திற்கும் அல்ல என்பதற்கான வசனம் இருந்தால் சொல்லுங்கள். மற்றபடி உங்கள் கருத்தை ஏற்க இயலாது.

மரண‌த்தில் நிலைநிற்கிறான் என வசனத்தைச் சொன்னால், அதிலிருந்து விடுவிக்கவே கிறிஸ்து இயேசு வந்தார் என்கிறீர்கள். இவ்வுண்மை யோவானுக்குத் தெரியாதா? அவர் சொல்வதை முழுதாகப் படியுங்கள்.

1 யோவான் 3:14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். 15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

எவர்கள் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள் என 14-ம் வசனம் சொல்வதை கவனமாகப் படியுங்கள். எவர்கள் சகோதரரிடத்தில் அன்பு கூர்ந்தார்களோ அவர்கள்தான் ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள் என வசனம் தெளிவாகச் சொல்கிறது. எல்லோரும் கிருபையால்தான் இரட்சிக்கப்படுகிறார்கள் என்கிறீர்களே, அப்படியானால் இங்கு ஒரு பிரிவினரைக் குறித்து, அவர்கள் சகோதரரிடத்தில் அன்பு கூருகிறபடியால் ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள் என யோவான் ஏன் சொல்ல வேண்டும்?

எல்லாவற்றிற்கும் கிருபை, கிருபை, கிருபை மட்டுமே என்கிறீர்களே, அவ்வாறெனில் இங்கு ஒரு பிரிவினர் ஜீவனுக்குட்படுவதற்கு அன்பு எனும் கிரியையை ஏன் காரணமாகச் சொல்லவேண்டும்?

தன் சகோதரனிடத்தில் அன்புகூராமல், அவனைப் பகைக்கிறவன் மனுஷகொலைபாதகன் என்றும், அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது என்றும் யோவான் தெளிவாகச் சொல்கிறாரே, இதன் பின்னரும் அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்றுதான் சொல்லப்போகிறீர்களா? அப்படி நீங்கள் சொன்னால் யோவானைக் காட்டிலும் நீங்கள் பெரிய தீர்க்கதரிசியாகி விடுவீர்கள்.

சபிக்கப்பட்டவர்களான இடது பக்கப் பிரிவினரை அனுப்பும் இடமான “பிசாசுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய அக்கினி” என்பது இப்பூமியே என நீங்கள் சொன்ன விளக்கம் சற்றும் ஏற்கும்படியாக இல்லை.

இயேசு அவர்களை அனுப்புகிற இடம் நிச்சயம் இப்பூமியாக இருக்கமுடியாது. இதற்கான என் விளக்கத்தை வைக்கிறேன், ஏற்கமுடிகிறதா எனப் பாருங்கள்.

மத்தேயு 25:31-46 வசனங்களில் கூறப்பட்டுள்ள நியாயத்தீர்ப்பும் வெளி. 20:11,12-ல் கூறப்பட்டுள்ள நியாயத்தீர்ப்பும் ஒன்றுதான் என நான் கருதுகிறேன். இதற்கு ஆதாரமான குறிப்புகள்:

1. மத்தேயு 25:31-ல் மனுஷகுமாரன் வரும்போது சிங்காசனத்தில் வீற்றிருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. அதேவிதமாக, வெளி. 20:11-லும் வெள்ளை சிங்காசனம் மற்றும் அதில் வீற்றிருக்கிறவரைக் குறித்து கூறப்பட்டுள்ளது.

2. மத்தேயு 25:32-ல் சகல ஜனங்களும் 2 பிரிவாகச் சேர்க்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறே வெளி. 20:12-லும் 2 பிரிவினர் நிற்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு பிரிவினரை “சிறியோர், பெரியோர்” என தமிழ் மொழிபெயர்ப்பு கூறுகிறது. ஆனால் சரியான மொழிபெயர்ப்பு, எண்ணிக்கையின் அடிப்படையிலான சிறுகூட்டம், பெருங்கூட்டம் என்பதுதான் என ஏற்கனவே கூறியுள்ளேன்.

3. இரண்டு பிரிவினரான ஜனங்கள் இயேசுவுக்கு முன்பாக நிறுத்தப்படுவார்கள் என மத்தேயு 25:33 கூறுகிறது. அதேவிதமாக 2 பிரிவினரான ஜனங்கள் இயேசு உட்கார்ந்திருந்த சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கக் கண்டதாக வெளி. 20:12 கூறுகிறது. தமிழ் வேதாகமத்தின் “தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்” என மொழிபெயப்பு தவறானதாகும். ஏனெனில், மூலபாஷையில் தேவன் எனும் வார்த்தைக்கு இணையான வார்த்தை காணப்படவில்லை; மாறாக, சிங்காசனம் எனும் வார்த்தைக்கு இணையான வார்த்தைதான் காணப்படுகிறது. ஆங்கில வேதாகமத்தில் அவ்வசனம் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளதையும் கவனிக்கும்படி வேண்டுகிறேன்.

Rev 20:12 And I saw the dead, great and small, standing before the throne, ... - NIV
Rev 20:12 And I saw the dead, the great and the small, standing before the throne; ... ASV

கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பாளர்கள்தான் standing before God என தவறாக மொழிபெயர்த்துள்ளனர்; அவர்களைப் பின்பற்றி தமிழ் மொழிபெயர்ப்பாளர்களும் “தேவனுக்கு முன்பாக” எனத் தவறாக மொழிபெயர்த்துள்ளனர்.

கிறிஸ்து வெள்ளை சிங்காசனத்தில் வீற்றிருந்து நியாயந்தீர்க்கும் இந்த நியாயத்தீர்ப்பு, கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியெல்லாம் முடிந்த பின்னரே நடப்பதாக, வெளி. 20-ம் அதிகாரம் திட்டவட்டமாகக் கூறுகிறது. எனவே மத்தேயு 25:31-46-ல் கூறப்பட்டுள்ள நியாயத்தீர்ப்பும், கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியெல்லாம் முடிந்த பின்னர் நடப்பதாகத் தான் இருக்கவேண்டும்.

கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சிக்குப் பின் பிசாசானவன் அக்கினிக் கடலில் தள்ளப்பட்டான் என வெளி. 20:10 தெளிவாகக் கூறுகிறது. எனவே மத்தேயு 25:41 கூறுகிற இடமான “பிசாசுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய அக்கினியும்”, வெளி. 20:10 கூறுகிற அக்கினிக் கடலும் ஒன்றுதான் என நிச்சயமாக அறிகிறோம். வெளி. 20:10 கூறுகிற அக்கினிக் கடலில் தள்ளப்பட்ட பிசாசு, இரண்டாம் மரணமாகிய நித்திய அழிவைப் பெறுவான் என நீங்கள் சொல்லியுள்ளீர்கள். உங்களது இக்கூற்றை நான் ஏற்கிறேன். அதே அக்கினிக் கடலில்தான் மத்தேயு 25:41 கூறுகிற சபிக்கப்பட்டவர்களும் தள்ளப்பட்டு, இரண்டாம் மரணமாகிய நித்திய அழிவைப் பெறுவார்கள் என நான் சொல்கிறேன்.

எனது வாதத்தை தேவையற்ற விதமாக விமர்சியாமல், எனது வாதத்திற்கான எதிர் வாதத்தை தகுந்த ஆதாரத்தோடு கூறுங்கள்.

எல்லோருக்கும் இரட்சிப்பு, கிருபை என்பதையே மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டாம். எல்லோருக்கும் இரட்சிப்பு, கிருபை என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அது 1 கொரி. 15:22-ன்படி எல்லோரும் உயிர்த்தெழுவதோடு நிறைவு பெறுகிறது. அதற்குப் பின் இரட்சிப்பு, கிருபை என்பதெல்லாம் கிடையாது.

இதை நான் சொல்லவில்லை; அவனவன் கிரியைகளின்படிதான் பலன் என இயேசுதான் சொல்கிறார்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

 

//இவ்வசனத்தையடுத்த பின்வரும் வசனம் எதைக் குறிக்கிறது என்று சொல்லுங்கள்.

கலாத்தியர் 5:19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 1Cor 3:3; Jas 3:14; 20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

(நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள் அல்ல எனச் சொல்லிவிட்டு, மாம்சத்தின் கிரியைகளென இத்தனை காரியங்களைச் சொல்லி, இப்படிப்பட்டவைகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தர்ப்பதில்லை என பவுல் ஏன் கூறவேண்டும்? அப்படியானால், நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவர்களல்ல என்றாலும், பவுலின் இப்பிரமாணத்திற்கு கீழ்ப்படத்தான் வேண்டுமா?)//

இது பவுலின் ஒரு ஸ்டேட்மென்ட். இவைகளெல்லாம் செய்யக்கூடாது என்று பவுல் கூறித்தான் தெரியவேண்டுவதில்லை. ஏன் இந்த வசனத்தைப் படித்ததால்தான் நீங்கள் விபச்சாரம், வேசித்தனம் செய்யாமல் இருக்கிறீர்களா? இப்படிப்பட்டவர்களைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லைதான், சுதந்தரிக்கவும் கூடாது. ராஜ்ஜியத்தில் யாரும் இவைகளைச் செய்யவும் மாட்டார்கள், நீதியைக் கற்றுக்கொண்டு நித்தியத்துக்கும் வாழ்வார்கள். 

அய்யா கிருபையின் மேன்மையை உணர்ந்தவர்கள் மாறுவார்கள், 

ரோமர் 6:17 முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.

ரோமர் 6:19 உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.

எபேசியர் 2:13 முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.

I பேதுரு 1:14 நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,

I பேதுரு 2:10 முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.

இதில் கிரியை எங்கிருந்து வந்தத? இப்போது பாவத்துக்கு அடிமையாக இருப்பவர்கள் ராஜ்ஜியத்தில் நீதிக்கு அடிமையாவார்கள்,

முன்னே தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, ராஜ்ஜியத்தில் அவருடைய ஜனமாவார்கள், இரக்கம் பெறுவார்கள். சபைக்கு இப்போது போதித்து பூரணப்படுத்தும் காரியங்கள் 'உலகுக்கு' எதிர்காலத்தில் போதிக்கப்பட்டு பூரணப்படும்.

உலகம் இப்போது சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது

லூக்கா4:5. பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:

6. இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.

'முன்குறிக்கப்பட்ட' சபை உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது

யோவான் 17:14 நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.

யோவான் 17:16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.

இப்போது 'வார்த்தை' சபைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. உலகத்துக்கு அல்ல‌.

யோவான் 12:47 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.

உலகத்தையென்றால் உலகத்தைத்தான். இரட்சிக்க வந்தார்தான் ஆனால்...? என்பது வேதத்தில் இல்லை.

I கொரிந்தியர் 6:2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?

'பரிசுத்தவானகள்' அதாவது சபை உலகத்தை நியாயந்தீர்க்கும் (கற்றுக்கொடுக்கும்)

ரோமர்3:2. அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.

நியாயப்பிரமாணம் (பழைய ஏற்பாடு) யூதர்களுக்கு மட்டுமே.

3. சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?

4. அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.

5. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?

6. அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி?

7. அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?

8. நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.

இது எங்களுக்கு மிகவும் பொருந்தும் ஒரு வசனமாகும்.

9. ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.

10. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;

11. உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;

12. எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

19. மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.

20. இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.

21. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.

22. அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

24. இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

25. தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும்,

26. கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.

27. இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப் பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே.

28. ஆதலால் மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.

இப்போது கொடுக்காத விசுவாசத்தை ராஜ்ஜியத்தில் உலகத்துக்குக் கொடுப்பார்.

29. தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.

30. விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.

31. அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.

நீங்கள் சொல்கிற 'பவுலின்' பிரமாணம் பவுலின் பிரமாணமல்ல. உலகத்தை சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு ஜனங்கள் இவைகளையெல்லாம் செய்யக்கூடாதென்று எதிர்பார்ப்பது அறிவீனம். சேரியில் வளரும் குழந்தையின் நிலை. 

இந்த மாம்சத்தின் கிரியைகள் களையப்பட்டு ஆவியின் கனிகளால் ராஜ்ஜியத்தில் ஒவ்வொருவரும் நிறைந்திருப்பார்கள்.

ஏனென்றால் ஒரேதரம் மரிப்பதும் பின்பு கற்றுக்கொள்ளவும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. அர்த்தமே இல்லாத இரண்டாம் மரணம் மனிதனுக்கு இல்லை. முந்தினவைகள் ஒழிந்து போகும், பாவம், மரணம் என்கிற கான்செப்ட்களே இருக்காது. சாத்தான் அழிக்கப்பட்ட நிலையில் எல்லோரும் அவரது ஜனமாக இருப்பார்கள். விதி விலக்குகள் இல்லை.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//வெளி20:12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.//

வெளிப்படுத்தல் வசனங்களை உபயோகித்தால் அதிலுள்ள அனைத்து வசனங்களுக்கும் நீங்கள் 'தெளிவாகப்' புரிந்து கொண்டபடி விளக்கமளிக்க வேண்டும். என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி என்றெல்லாம் இட்டுக்கட்டக்கூடாது.

சிங்காசனம் சிங்காசனமல்ல, ஜீவபுஸ்தகம் ஒரு புஸ்தகமல்ல, சிறியோர் குழந்தைகளல்ல, பெரியோர் கிழவர்களல்ல எனும்பட்சம் மரித்தோரும் மரித்தோரல்ல‌...

பாவத்தினால் மரித்த என்றுகூடத்தான் வசனம் வருகிறது...

ஒரு உண்மைமட்டும் புரிகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜனங்களை முதல் மரணத்திலிருந்து மட்டுமே இரட்சிக்க வந்தார், இரண்டாம் மரணத்திலிருந்து அவர்களை இரட்சிக்க அன்பு57 போன்றவர்கள் வந்தார்கள்.

அன்பு வாசிக்கும் வேதத்தில்,

I தீமோத்தேயு 1:15 பாவிகளை (முதலாம் மரணத்திலிருந்து) இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

இப்படி இருக்கிறதோ என்னவோ?

உயிர்த்தெழுந்த பாவிகளை ரட்சிக்க யாரால் கூடுமோ தெரியவில்லை...?

மனுஷரால் இது கூடாதுதான், தேவனாலும் கூடாதுதான் போலும்.

ஒரேதரம் மரிப்பதும், பின்பு உயிர்த்தெழுவதும், பின்பு பாவம் செய்வதும்

பின்பு இன்னொருதரம் மரிப்பதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறதோ?

 

ஆக அன்பு அவர்களின் வாதங்களிலிருந்து நான் புரிந்துகொண்டது,


  • இயேசுகிறிஸ்து உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க வரவில்லை.

        ஆதாமின் பாவத்தை மட்டும் சுமந்து தீர்த்தார்.

  • மற்றவர்கள் பாவிகள்தான் என்றாலும் பாவத்தின் சம்பளம் 'மரணம்' என்ற விஷயம் அவர்களுக்கு செல்லாது. ஆதாமின் பாவத்துக்கு கிரயம் செலுத்தப்பட்டதால் இவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படாமலேயே உயிர்த்தெழுவார்கள்.
  • இப்போதே தெரிந்தும் தெரியாமலோ வேதத்தை வாசித்தும் அதை 'சரிவர' கடைபிடித்து நீதியை தங்கள் 'கிரியைகள்' மூலமாக காண்பிக்காதவர்களுக்கு கிறிஸ்துவின் ராஜ்ஜியம் கிடையாது. அவர்கள் 'இறுதி நியாயத்தீர்ப்பு'க்கு உயிர்த்தெழுவார்கள், அதன்பின் ஒரு சில நிமிடங்களில் இரண்டாம் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
  • ராஜ்ஜியத்தில் உயிர்த்தெழுந்த பாவிகளும் ராஜ்ஜியத்தில் அவனவனுடைய கிரியையைக் கொண்டு நியாயந்தீர்க்கப்படுவார்கள். அதில் தேறாதவர்களும் இரண்டாம் மரணத்துக்கு அனுப்பப்படுவார்கள்.

என்னுடைய கருத்து, இப்போது எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களாகாக் கூடுமானால், ராஜ்ஜியத்திலும் அது நடக்க வாய்ப்புள்ளது எனவே அன்பு போன்ற இரக்கமே உருவான ஒரு சில நீதிமான்கள்தவிர மற்றவர்கள் அனைவரும் இரண்டாம் மரணத்துக்குத் தள்ளப்படுவார்கள்.

"மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்" என்ற கூற்று வேதம் சொல்லும் ஒரு மாபெரும் பொய்யாகும்.



-- Edited by soulsolution on Saturday 23rd of July 2011 10:06:51 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//இரக்கம்பாராட்டவேண்டுமென்பது தேவன் மனிதனுக்கு இயற்கையாகவே கொடுத்த சுபாவம் அதை அன்பு57 போன்றவர்கள் மூலமாக போதிக்கவேண்டும் என்ற கட்டாயம் தேவனுக்கில்லை.//

மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். (இயேசு)

மத்தேயு 9:13 பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்

லூக்கா 6:36 ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.

லூக்கா 10:37 அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.

இவ்வசனங்களைப் படிக்கிற சோல்சொல்யூஷன், இப்படியும் சொல்வாரோ?

//இரக்கம்பாராட்டவேண்டுமென்பது தேவன் மனிதனுக்கு இயற்கையாகவே கொடுத்த சுபாவம், அதை இயேசு மூலமாக போதிக்கவேண்டும் என்ற கட்டாயம் தேவனுக்கில்லை.//

மத்தேயு 23:23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

இவ்வசனத்தைப் படிக்கிற சோல்சொல்யூஷன், இப்படியும் சொல்வாரோ?

//நீதி, இரக்கம், விசுவாசம் என்பவைகளெல்லாம் தேவன் வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் சோல்சொல்யூஷனாகிய எனக்கும் இயற்கையாகவே கொடுத்த சுபாவம், அதை இயேசு மூலமாக வேதபாரகருக்கோ பரிசேயருக்கோ எனக்கோ போதிக்கவேண்டும் என்ற கட்டாயம் தேவனுக்கில்லை.//

கொலோசெயர் 3:12 ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; 13 ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். 14 இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.

இவ்வசனங்களைப் படிக்கிற சோல்சொல்யூஷன் இப்படியும் சொல்வாரோ?

//பரிசுத்தம், இரக்கம், தயவு, மனத்தாழ்மை, சாந்தம், நீடியபொறுமை இவற்றையெல்லாம் தரிக்கவேண்டுமென்பது தேவன் மனிதனுக்கு இயற்கையாகவே கொடுத்த சுபாவம், அதை பவுல் மூலமாக போதிக்கவேண்டும் என்ற கட்டாயம் தேவனுக்கில்லை.//

1 பேதுரு 3:8 நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, 9 தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.

இவ்வசனங்களைப் படிக்கிற சோல்சொல்யூஷன் இப்படியும் சொல்வாரோ?

//இரக்கம், சகோதர சினேகம், மன உருக்கம், தீமைக்கு தீமை செய்யாமை இவைகளெல்லாம் தேவன் மனிதனுக்கு இயற்கையாகவே கொடுத்த சுபாவங்கள், இவற்றை பேதுரு மூலமாக போதிக்கவேண்டும் என்ற கட்டாயம் தேவனுக்கில்லை.//

சங்கீதம் 112:9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

இவ்வசனத்தைப் படிக்கிற சோல்சொல்யூஷன் இப்படியும் சொல்வாரோ?

//ஏழைகளுக்கு வாரியிறைத்து கொடுக்கவேண்டுமென்பது தேவன் மனிதனுக்கு இயற்கையாகவே கொடுத்த சுபாவம், அதை சங்கீதக்காரன் மூலமாக போதிக்கவேண்டும் என்ற கட்டாயம் தேவனுக்கில்லை.//

மல்கியா 6:8 மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?

இவ்வசனத்தைப் படிக்கிற சோல்சொல்யூஷன் இப்படியும் சொல்வாரோ?

//நியாயஞ்செய்து இரக்கத்தைச் சிநேகிக்கவேண்டுமென்பது தேவன் மனிதனுக்கு இயற்கையாகவே கொடுத்த சுபாவம், அதை தமது தீர்க்கதரிசியாகிய மீகா மூலமாக போதிக்கவேண்டும் என்ற கட்டாயம் தேவனுக்கில்லை. ஆனால் ஏனோ தேவன் மனிதனுக்குக் கொடுத்த சுபாவத்தை மறந்துபோய், ஞாபகமறதியில் இப்படிச் செய்துவிட்டார்//

சோல்சொல்யூஷன்:

//முல்லைக்குத் தேர்தந்த பாரிக்கு எந்த அன்பு போய் போதித்தார்?//

இப்படிச் சொன்ன சோல்சொல்யூஷன் இப்படியும் சொல்வாரோ?

//முல்லைக்குத் தேர்தந்த பாரிக்கு எந்த இயேசு, எந்த மீகா, எந்த சங்கீதக்காரன், எந்த பவுல், எந்த பேதுரு போய் போதித்தார்?//



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard