மத்தேயு 11:20 அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற் போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்: 21 கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.
22 நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 23 வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும். 24 நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
நியாயத்தீர்ப்பு நாளில் கோராசினுக்கும், பெத்சாயிதாவுக்கும், கப்பர்நகூமுக்கும் நேரிடுவது, தீரு, சீதோன், சோதோம் நாட்டுக்கு நேரிட்டதைப் பார்க்கிலும் கடினமாக இருக்கும் என இவ்வசனங்களிலிருந்து நான் புரிந்து கொண்டேன்.
சோதோம் சாம்பலானது தெரியும் அதைவிடக் கடினம் என்பது இன்னும் அதிக சாம்பலா?
அல்ல...
நியாயத்தீர்ப்பு நாளில் கற்றுக்கொடுக்க என்னென்ன யுத்திகள் கையாளப்படும் என்பது தெரியவில்லை. அவரவர் தன்மைக்கேற்ப அவர்களுக்கு பாடங்கள் இருக்கலாம். அது சற்று கடினமானதாக இருக்கலாம். சீர்திருத்தப்பள்ளிகளில் அதிக சுட்டித்தனம் செய்யும் சிறார்களுக்கு அதிக 'கவனிப்பு' இருப்பதைப்போல...
வெகுஜன நம்பிக்கையின்படி எல்லாருக்கும் 'நரகம்' அல்லது நித்திய அழிவு எனும்பட்சம் இந்த வசனத்துக்கு பதிலளிக்க இயலாது. கடின நரகமோ, அல்லது அழிவில் வேறொரு 'கடின' அழிவோ இருக்க வாய்ப்பில்லை...
தள நிர்வாகியின் கருத்தையும் எதிர்பார்க்கிறேன்
-- Edited by soulsolution on Saturday 9th of July 2011 06:30:14 PM
நியாயத்தீர்ப்பின் நாட்களை குறித்தான வசனங்கள் இவை!! சோதோமில் செய்யப்படாதது அப்படி என்ன கப்பர்நகூமில் செய்யப்பட்டுவிட்டது? உலக இரட்சகரின் வாயின் வார்த்தையை நேரடியாக கேட்டும் திருந்தாத கப்பர்நகூம், இது போன்ற ஒன்றையும் கேட்காமலும் இருந்த சோதோம்!! ஒரு இடத்தில் நிறைய கொடுக்கப்பட்டது, மற்றோர் இடத்தில் ஒன்றும் கொடுக்கப்படவில்லை!!
நியாயத்தீர்ப்பின் நாட்களில் இது நினைவுப்படுத்தப்படும்!! ஒருவேளை கப்பர்நகூமில் செய்யப்பட்டதும் சொல்லப்பட்டதும் அன்று சோதோமில் சொல்லப்பட்டிருந்தாலோ, செய்யப்பட்டிருந்தாலோ, அவர்கள் உடனடியாக இரட்டுடுத்தியிருப்பார்கள் என்று கிறிஸ்துவே சொல்லியிருக்கிறார்!! சோதோமில் உள்ளவர்கள் அவர்களுக்கு தெரிந்தப்படி வாழ்ந்துக்கொண்டிருந்தவர்கள், ஆனால் கப்பர்நகூமில் உள்ளவர்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளை கேட்டும் அவர்கள் இஷ்டப்படி வாழ்ந்தார்கள்!! நியாயத்தீர்ப்பின் நாட்களில் சோதோமிலுள்ளோர்கள் கற்றுக்கொடுக்கப்படுவதை சுலபமாக கற்றுக்கொள்வார்கள், அவர்களுகு இலகுவாக இருக்குமாம்!! ஏற்கனவே கிறிஸ்துவை குறித்து கேட்டிருந்தும், பார்த்திருந்தும் மனந்திரும்பாமல் இருந்தவர்களுக்கு ராஜியத்திலும் கற்றுக்கொள்ள கடினமாகவே இருக்கும் என்கிறது வசனம்!!
லூக்கா 12:48 அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்;
அதாவது சில அடிகளே பட்டு சோதோம் கற்றுக்கொள்ளும், ஆனால் கப்பர்நகூமிற்கு கற்றுக்கொள்ள கடினமாக இருக்குமாம்!!
ஆக்கினை என்பது கொடுக்கப்படயிருக்கும் சிட்சையை தான் குறிக்கும்!! இப்பொழுது சபைக்கு தெர்ந்துக்கொள்ளப்படுபவர்கள் அந்த நிலையில் அந்த சிட்சையில் இருப்பார்கள்!! உம்முடிய நிய்யாத்தீர்ப்பின் போது பூச்சக்கரத்து குடிகள் நீதியை கற்றுக்கொள்வார்கள் என்று வசனம் சொல்லுவது சிட்சையை தான்!! இன்று இந்த பூமியில் சத்தியத்தை எல்லாம் கேட்டும் அதை உதாசீனப்படுத்தி மனித கோட்பாடுகளை மைய்யப்படுத்தி வாழ்ந்து மரிப்பவர்களுக்கும் கப்பர்நகூம் சிட்சை தான்!! அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது, அதிகமாக சிட்சிக்கப்படுவார்கள்!! இது தான் ஆக்கினை!!
தங்கம் 7 முறை தீயில் பட்டு வெளிவந்தால் தான் ஜொலிக்குமாம்!! அப்படியே பூர்ண சிட்சைக்கு பின் இந்த பூமி தேவனை அறிகிற அறிவில் நிறம்பியிருக்கும்!! தேவனின் சித்தம் நிறைவேற்றியே தீருவார்!! இன்றைய கிறிஸ்தவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, தேவனின் சித்தம் நிறைவேறியே தீரும்!!