kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீதிமான்களுக்கு மட்டுமே இரட்சிப்பா?


Executive

Status: Offline
Posts: 425
Date:
நீதிமான்களுக்கு மட்டுமே இரட்சிப்பா?


2 பேதுரு 2:4-9 பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;  பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;
அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.

அவபக்தியுள்ளவர்கள், அநீதிமான்கள், தேவபக்தியுள்ளவர்கள், நீதிமான்கள் என்ற வித்தியாசமின்றி, எல்லோருக்கும் இரட்சிப்பு என்பது இத்தளத்தின் ஒரு பொதுவான விசுவாசமாக இருக்கிறது. ஆனால் மேலேயுள்ள வசனபகுதியில், நீதிமானாகிய லோத்துக்கு இரட்சிப்பு, தேவபக்தியுள்ளவர்களுக்கு இரட்சிப்பு, அக்கிரமக்காரருக்கு ஆக்கினை எனக் கூறப்பட்டுள்ளது.

சோதோம் கொமோரா பட்டணத்தின் அழிவும், லோத்தின் இரட்சிப்பும் மாம்சப்பிரகாரமானவை என்றாலும், அவை பின்னால் வரப்போகும் இரட்சிப்பு மற்றும் அழிவுக்கு திருஷ்டாந்தமாக (அதாவது உதாரணமாக) வைக்கப்பட்டுள்ளதாக அதே வசனபகுதி கூறுகிறது. இது இத்தளத்தாரின் “எல்லோருக்கும் இரட்சிப்பு” எனும் கொள்கைக்கு எதிராக உள்ளது.

எனவே மேலே உள்ள வசனபகுதியின் கருத்தை தெளிவாக விளக்கும்படி இத்தள நிர்வாகியைக் கேட்டுக்கொள்கிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இது இத்தளத்தாரின் “எல்லோருக்கும் இரட்சிப்பு” எனும் கொள்கைக்கு எதிராக உள்ளது.//

எல்லோருக்கும் இரட்சிப்பு என்பது தேவனின் சித்தம்!! அதை இந்த தளம் வெளிப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்!! ஆக்கினை என்றால் அழிவு அல்ல, தண்டனை என்பதை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்!! தண்டனைக்கும் அழிவிற்கு வித்தியாசம் இருக்கிறது!!

1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

இந்த வசனத்தில் வரும் எல்லா மனுஷரும் என்பதெல்லாம் நாங்கள் சேர்த்துக்கொள்ளவில்லை!! தேவனின் சித்தம்!! இது ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது என்று வசனம் சொல்லுகிற படி நீங்கள் விளங்கிக்கொள்ளும் காலமும் வரும்!!

நீங்கள் தந்த வசனங்களுக்கு பதில் தருகிறேன்,,,, விரைவில்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

பாவம் செய்த தூதர்களை ஒரேடியாக அழித்துவிடாமல் 'நியாயத்தீர்ப்பு' நாளுக்கென்று தேவன் ஏன் வைக்க வேண்டும்? 

 

தேவபக்தியுள்ளவர்களை சோதனையினின்று இரட்சிக்கவும்,  அக்கிரமக்காரரை 'ஆக்கினைக்'குள்ளாக நியாயத்தீர்ப்பு நாளுக்கென்று வைக்கவும்... 

 

அக்கிரமக்காரருக்குத்தான் அய்யா திருந்த வேண்டிய அவகாசமும் போதனையும் தேவைப்படுகிறது. நீதிமான்களை அல்ல பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்கிறார் கர்த்தர். ஆக்கினை, நியாயத்தீர்ப்பு என்றாலே வெகுஜனக் கிறிஸ்தவர்களுக்கு 'நரகம்' என்பது போல கண்ணுக்குத் தெரிந்தால் உங்களைப் போன்றவர்களுக்கு நித்திய அழிவு தெரிகிறது. நியாயத்தீர்ப்பில் ஒரு நியாயம் வேண்டாமா? தேவன் தீமையை அனுமதித்துவிட்டு, ஒரு மனிதன் பாவம் செய்கிறதற்கு ஏதுவான எல்லா சூழலையும் உருவாக்கிவிட்டு, அவனை அவர் சித்தப்படியே பாவமும் செய்யவைத்துவிட்டு அதற்கு தண்டனையும் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?

 

இலவசமாய் கிருபையினால் மட்டுமே இரட்சிப்பு என்பதற்கு ஏகப்பட்ட வசனங்கள் காண்பித்தாயிற்று.

 

நீதிமான் ஒருவனாகிலும் இல்லை என்பதும் தெளிவு.

 

தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்தம் யாருக்காவது உண்டா? உங்கள் கூற்றுப்படி நன்மை செய்தால் நீதிமான் என்றால் இடையில் கிறிஸ்து எதற்கு? எல்லா மதங்களும் அதைத்தானே போதிக்கிறது?

 

புதிய உலகில் உயிர்த்தெழுந்த அனைவரும் நித்தியமாய் நீதியின் ராஜ்ஜியத்தில் நீதிமான்களாக ஜீவிப்பார்கள்...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

வசன விளக்கம் பகுதியில் இத்திரியை துவக்கி, சில வசனங்களுக்கு விளக்கம் கேட்டுள்ளேன். எனவே விவாதமோ கேள்விகேட்பதோ இல்லாமல், வசனங்களுக்கான விளக்கம் மட்டும் கொடுக்கும்படி சகோ.சோல்சொல்யூஷன் மற்றும் சகோதரர்களைக் கேட்கிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

2 பேதுரு 2:4-9 பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;  பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து; 

அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.

 

மேற்கண்ட வசனம் எல்லாருக்கும் இரட்சிப்பு இல்லை என்பதை குறிக்கவில்லை. நியாயத்தீர்ப்பு நாளைப்பற்றித்தான் கூறுகிறது.  அக்கிரமம் நிறைந்த உலகில் அவர் 8பேரைக் காப்பாற்றினார், மற்றவர்களை அழித்தார். அந்த 8பேரும் கூட சிலவருடங்கள் கழித்து அழிந்துதான் போயிருப்பார்கள். இதேதான் சோதோம் கொமாராவுக்கும் அவர்களை குறிப்பிட்ட நாளில் அழித்தார் லோத்துவை மேலும் சில வருடங்கள் கழித்து அழித்தார். ஆக நீதிமான் அநீதிமான் எல்லாருக்கும் அழிவு பொதுவானது. என்ன அநீதிமான் சற்று முன்பு அழிகிறான் நீதிமான் சிலகாலம் சென்று அழிகிறான். 

அக்கிரமக்காரரை ஆக்கினக்குள்ளானவர்களாக (தண்டனை) நியாயத்தீர்ப்பு நாளான கற்றுக்கொடுக்கும் நாளுக்காக வைத்திருக்கிறார்.

அங்கே ஏசாயா26:9. ...உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள். அங்கு அவர்களுக்கு அக்கிரமத்தின் நிமித்தம் ஜலப்பிரளயம், சோதோம் கொமாரா போன்று அழியவேண்டியமனுக்குலத்தை எப்படி தேவன் கிறிஸ்து மூலமாக எல்லாருடைய பாவங்களையும் 'நிவிர்த்தி' செய்து மரணத்தை (அழிவை) பரிகரித்தார் என்பது கற்றுக்கொடுக்கப்படும்.  இவ்வண்னமாக உயிர்த்தெழும் பூச்சக்கரத்துக்குடிகள் யாவரும் நீதியைக் கற்றுக்கொண்டு எல்லாருமே நீதிமானாவார்கள். இதைத்தான் மேற்கண்ட வசனம் விளக்குகிறது. அதில் நித்திய அழிவு பற்றி ஏதுமில்லை. 

 

பாவம் செய்த தூதர்களைக்கூட அவர் உடனடியாக அழித்துவிடாமல் (ஏன்?) அவர்களையும் நியாயத்தீர்ப்பு நாளூக்கென்று வைத்திருக்கிறார்.

 

லூக்கா 10:12 அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

 

திருஷ்டாந்தமாக வைத்த சோதோமையே 'அந்த நாளில்' எழுப்பி கற்றுக்கொடுக்கப்போகிறார். அவர்களும் கற்றுக்கொண்டு நித்தியஜீவனை சுதந்தரிப்பார்கள். 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

வசனங்களுக்கு விளக்கம் கொடுத்த சகோ.சோல்சொல்யூஷனுக்கு நன்றி!

ஆனால் உங்கள் விளக்கம் முழுமையானதாக இல்லை. நியாயத்தீர்ப்பு நாளில் என்ன நடக்கும் என்பதை ஏசாயா 26:9-ன் மூலம் கூறியுள்ளீர்கள். இதற்கும் நான் காட்டின வசனங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் காட்டின வசனங்கள் மூலம் பேதுரு சொல்லவரும் செய்தி என்ன என்பதை இன்னும் சற்று தெளிவாக விளக்கும்படி வேண்டுகிறேன்.

உங்கள் விளக்கத்தின்போது பின்வரும் ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஆராயும்படி வேண்டுகிறேன்.

2 Peter 2:4 For if God did not spare angels when they sinned, but sent them to hell, putting them into gloomy dungeons to be held for judgment; 5 if he did not spare the ancient world when he brought the flood on its ungodly people, but protected Noah, a preacher of righteousness, and seven others; 6 if he condemned the cities of Sodom and Gomorrah by burning them to ashes, and made them an example of what is going to happen to the ungodly; 7 and if he rescued Lot, a righteous man, who was distressed by the filthy lives of lawless men 8(for that righteous man, living among them day after day, was tormented in his righteous soul by the lawless deeds he saw and heard)- 9 if this is so, then the Lord knows how to rescue godly men from trials and to hold the unrighteous for the day of judgment, while continuing their punishment. - NIV

இவ்வசனங்களில் குறிப்பாக கீழ்க்காணும் பகுதிக்கு விளக்கம் தரும்படி வேண்டுகிறேன்.

he condemned the cities of Sodom and Gomorrah by burning them to ashes, and made them an example of what is going to happen to the ungodly;

சோதோம் கொமோரா பட்டணத்தை எரித்து சாம்பலாக்கி, அவபக்தியுள்ளவர்களுக்கு என்ன நேரிடவிருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணமாய் வைத்திருப்பதாக இப்பகுதி கூறுகிறது. இந்த உதாரணம் மூலம் (அதாவது அவபக்தியான சோதோம் கொமோரா பட்டணத்தாரை எரித்து சாம்பலாக்கின உதாரணம் மூலம்) அவபக்தியானவர்களுக்கு பேதுரு சொல்ல வரும் செய்தி என்ன?




-- Edited by anbu57 on Saturday 9th of July 2011 02:30:28 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அதாகப்பட்டது சகோதரரே, அவபக்தியாயிருப்பவர்களுக்கு உண்மையிலேயே என்ன நேரிட வேண்டும் என்பதைக் காண்பிக்க ஒரு 'பாடம்' தேவையில்லையா அதற்காகத்தான் தேவன் அப்படி ஒரு மஹா மோசமான நடத்தையுள்ள ஜனங்களைக் கொண்ட பட்டணங்களை ஏற்படுத்தினார். உதாரணம் சொல்லி ஜனங்களைப் படிப்பிக்க, கற்றுக்கொடுக்க 'டூல்' தேவையில்லையா. அதுபோலவே ராஜ்ஜியத்தில் சோதோம், கொமாராவைக் 'திருஷ்டாந்தமாக' சகல ஜனங்களுக்கும் காண்பித்து, (ஏனென்றால் இப்போது அதைப்பற்றி அறிந்தவர் வெகு சிலரே) இப்படி அழிய வேண்டிய ஜனங்களைக்கூட தேவ அன்பின் நிமித்தமும், அளவற்ற அவருடைய கிருபை, இரக்கம், காருண்யம் நிமித்தமாகவும் உயிரோடு எழுப்பி அவர்களுக்கு 'இலகுவாக' கற்றுக்கொடுத்து நித்திய ஜீவனுக்குத் தகுதியாக்குகிறார். 

 

'அவபக்தியானவர்களுக்கு' என்பதை நீங்கள் என்ன என்ன பொருள்கொள்கிறீர்கள் என்று விளங்கவில்லை. பிற்காலத்தில் திருஷ்டாந்தமாக வைப்பதற்கு ஒரு பட்டணம் தேவை. சோதோம் கொமாராவை அதற்காவே ஏற்படுத்தி வைத்தார். சோதோம் கொமாரா அவ்வாறு இருக்க வேண்டும் என்பது தேவ சித்தம். எப்படி யூதாஸ்காரியோத் கிறிஸ்துவை காட்டிக்கொடுக்க நியமிக்கப்பட்டானோ அதே போலத்தான் சோதோம் கொமாரா.

புதிய உலகில் மனிதருக்கு நீதியைக் கற்றுக்கொடுக்கும் பாடத்தில் ஒரு 'சிலபஸ்'தான் சோதோம் கொமாரா. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தப் பட்டணத்தாரும் எழுந்து வந்து பாடம் கற்றுக்கொள்வார்கள்.

அவபக்தியாயிருப்பவர்களுக்குத்தான் இத்தகைய தண்டனை. கர்த்தரை அறிகிற அறிவால் நிறைந்திருக்கும் பூமியில், சுவாசமுள்ள யாவும் அவரைத்துதிக்கும் ராஜ்ஜியத்தில், முழங்கால்கள் யாவும் முடங்கி நாவு யாவும் அவர் நாமத்தை அறிக்கையிடும் பக்திநிறைந்த ஆட்சியில் ஒருவர் கூட இரண்டாம் மரணத்துக்குக் தகுதியாக மாட்டார்கள். மரணம் ஜெயமாக விழுங்கப்படும். அன்பு கோலோச்சும். தேவனுடைய நித்தியமான, அழிவில்லாத ராஜ்ஜியத்தில் யாருக்கும் எந்தக் குறையும் இருக்காது.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

2 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

சங்கீதம் 33:9 அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.

ஏசாயா 46:10 அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

தேவன் தனக்கு சித்தமானப்படி எல்லாரையும் இரட்சிப்பார் என்று சொல்லுவது எந்த விதத்தில் தவறாக கிறிஸ்தவர்களுக்கு படுகிறது என்று தெரியவில்லை!!

சுயநீதி என்பது தேவனின் பார்வையில் வெறும் கந்தல் தான்!! நற்கிரியை செய்வதை நீதி என்று என்னிக்கொண்டிருப்பவர்கள் அறிய வேண்டியது என்னவென்றால்,

ஏசாயா 64:6 நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.

தேவன் எல்லாரையும் இரட்சிப்பேன் என்று சொல்லியிருப்பது நிச்சயமாக நிறைவேறும்!! இது வேதம் நமக்கு தருகிற சுவிசேஷம்!! கிறிஸ்தவர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்வோருக்கு உலகத்தை குறித்து கவலையில்லை, மாறாக தான் இரட்சிக்கப்பட்டு "பரலோகம்" சென்று விட்டால் போதும் என்று  "சுயநீதிமான்"  என்கிற தோரனத்தை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்!!

வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறபடியே எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படுவார்கள்!! இது ஏதோ இந்த தளத்தின் தனிப்பட்ட கருத்து கிடையாது, இங்கே எழுதப்பட்டிருப்பது தேவனின் சித்தத்தை குறித்தான வசனங்கள்!!

நீங்கள் கொடுத்திருக்கும் வசனங்கள் சிட்சையை குறித்தான வசனங்கள்!! நியாயத்தீர்ப்பின் நாட்களில் நீதியை கற்றுக்கொள்வார்கள் (சிட்சை) என்கிறது வேதம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard