ஒருவர் கிறிஸ்துவராக மாறுகிறார்!! எப்படி மாறுகிறார் என்று கேட்டு பாருங்கள், நானே வந்து ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லுபவர் யாரும் இருக்க முடியாது!! நான் ஒரு வெளிச்சத்தை பார்த்தேன், எனக்கு அது சரியாச்சு, இது சரியாச்சு, திடிரென்று ஒரு மாற்றம் எனக்குள் ஏற்பட்டுச்சு, அந்த கூட்டத்திற்கு போனேன், என் பெயர் சொல்லி கூப்பீட்டார்கள் போன்றவற்றை தான் சொல்லுவார்களே தவிர, ஒருவர் கூட நானே கிறிஸ்துவராக மாறிவிட்டேன் என்று சொல்லுவதில்லை!!
அதாவது தேடி வந்து ஒருவன் தேவனை தேடி வருவதில்லை, மாறாக தேவன் தான் ஒருவனை தேர்ந்தெடுக்கிறார் என்பது தான் வேதம் சொல்லும் உண்மை!!
யோவான் 6:44. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; யோவான் 6:65. ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
ஆனாலும் தங்களை கிறிஸ்துவர்கள் என்று கூறி விளம்பரப்படுத்திக்கொள்ளுவோர் சொல்லுவது, அது எப்படி,
நான் விசுவசியாமல் போனால் எப்படி? நான் செய்யாவிட்டால் எப்படி? நான் முயற்சியாவிட்டால் எப்படி?
போன்ற கேள்விகளை கேட்பார்கள்!! கேட்கட்டும்!!
யோவான் 15:16. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;
அவர் நம்மை தெரிந்துக்கொண்டார் என்பது தான் உண்மை!! அவரை விசுவாசிக்கும்படியான விசுவாசமே அவர் தான் தருகிறார்!! ஒருவனை தேவன் தெரிந்துக்கொள்ளாதது வரை தானாக தேவனிடத்திற்கு வருவதில்லை!! தேவன் வெகு சிலரை அவரின் காரியமாக தேர்ந்தெடுக்கிறார், ஆனால் அனைவரையும் இரட்சிப்பதே அவரது சித்தம்!!
1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
ரோமர் 8:28. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 29. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; 30. எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
வசனத்தை வாசிக்கும் போதே, தேவனின் தீர்மானத்தின்படி தான் அவர் அநேகரை முன்னறிகிறார், அதில் பலரை முன்குறித்திருக்கிறார், அவர்களை அழைத்திருக்கிறார், அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார், என்பது நடைபெறபோகும் ஒரு காரியம், ஏனென்றால் இன்னும் அந்த மகிமையான உயிர்த்தெழுதல் நடைபெறவில்லையே!! ஆனால் அனைத்தும் தீர்மானமாகிவிட்டிருக்கிறது!! ஆனால் இதை நம்பாமல் இன்று ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்றும் இல்லை என்கிற ஒரு கள்ள உபதேசத்தை சபைகளில் உருவாக்கி, மனுஷர்களின் முயற்சியில் தான் மனமாறி கிறிஸ்தவர்களாக மாற்றுவோம், தேசத்தை சுதந்தரித்துக்கொள்வோம், தேசத்தை கிறிஸ்துவிற்காக மாற்றுவோம் என்று சொல்லுவது எப்படி!!??
எபே 2:8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
இரட்சிக்கபடுவதற்கு விசுவாசம், ஆனால் அந்த விசுவாசமும் நம் சொந்த முயற்சி அல்லது சிந்தையினால் உண்டானது அல்ல, மாறாக இந்த விசுவாசமே தேவனுடைய ஈவு என்கிறது வசனம்!!
ஆக சிலர் கால்வனிசத்தை மிகவும் அதிகமாக எதிர்ப்பார்கள், வேத மாணவர்கள் உட்பட, ஆனால் வசனம் சொல்லுவது அனைத்தும் கால்வனிசம், அதாவது, அனைத்தும் முன் தீர்மானத்தின்படியே நடக்கிறது என்பதற்கு ஆதரவாக இருப்பதை நாம் வாசித்து புரிந்துக்கொள்ள முடிகிறதே!!
இதில் இன்னொரு வாதத்தை எடுத்து வைப்பார்கள், அதாவது தேவனுக்கு நடக்கப்போகும் எல்லாமே தெரியும் ஆனால் அவைகளை அவர் நடப்பிப்பதில்லை என்று. இதில் இன்னொரு சிக்கல் இருப்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
தேவனுக்கு நடப்பவை எல்லாம் தெரியும் என்றால் யார் இரட்சிக்கப்படப்போகிறார்கள் யார் நரகத்துக்குப் போகப்போகிறார்கள் என்று அவருக்குத் தெரியும்பட்சத்தில் அவர் அந்த நிகழ்வை எப்படியாவது 'மாற்ற' முயற்சிப்பாரா?
மனிதனுக்கு 'சுயசித்தம்' இருக்கும் பட்சம் தேவனால் (அதில் அவர் தலையிடுவதில்லை என்பார்கள்) ஒருபோதும் அவனை 'இரட்சிக்கவே' முடியாதே. ஒன்றுமே செய்ய இயலாமல் தன் சாயலாக தான்படைத்த மனிதர்களில் பெரும்பாலோர் நரகம் என்ற முடிவில்லா வாதையில் யுகம் யுகமாக வேதனைப்படப்போவதைப் செய்வதறியாது பார்த்து திகைத்துக்கொண்டிருக்கும் ஒரு மாபெரும் தோல்வியாளனாகத்தான் இந்தக் கிறிஸ்தவம் காண்பிக்கிறது.
"அவனன்றி ஓர் அணுவும் அசையாது" என்று எத்தனை நிச்சயமாக ஒரு மாபெரும் சத்தியத்தைச் சொல்லியிருக்கிறார்கள் மாற்று மதத்தவர்கள்.
யோவான் 6:44. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்;
யோவான் 6:65. ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
இந்த நேரடி வசனத்துக்கெல்லாம் இவர்களிடம் துளிகூட பதில் கிடையாது. பிதா ஒருவனை இழுத்துக்கொள்வது மனித சித்தத்தைச் சார்ந்ததேயன்றி தேவனைச் சார்ந்ததல்ல. மனிதனின் முடிவுகளில் தேவன் 'தலையிடுவதில்லை'. என்று முட்டாள்தனமாக வாதாடுவார்கள். 'சிக்கலான' கேள்விகளை சாமர்த்தியமாக தவிர்ப்பதை இவர்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.