// soulsolution: உதாரணங்களுக்கு குறைச்சலில்லை. இதுவரை மழையை நோக்கித் திருப்பப்படாத கோடா கோடி கோப்பைகளின் கதி என்ன? ஏற்கனவே 'திருப்பப்பட்ட' கோப்பைகளே லீக் ஆகி காலியாக உள்ளது. இதற்கு ஏன் பதிலே ஒரு ஆள்கூட சொல்வதே இல்லை. காது கேட்காததுபோல ஏன் எல்லாருமே நடிக்கிறீர்கள். சுவிசேஷம் ஒரு முறைகூட கேட்காதவர்கள், கேட்டும் பின்பற்ற முடியாதவர்கள் என்னதான் ஆவார்கள் என்று வசன சகிதமாக விளக்கிவிட்டு அடுத்தபடிக்குப் போகலாமே. //
ஆனாலும் அதனை முன்போல தன்மானத்தைத் தூண்டும் வண்ணமாக எழுதாமல் நாகரீகத்துடன் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது;தொடர்ந்து பேசுவோம்.//
பேசுவோம் ஆனால் பேசமாட்டோம்...
பதித்துப் பதினோரு நாளாகிறது. பிஹெச்டிக்களுக்குக் குறைவில்லை ஆனால் பேச்சைத்தான் காணோம். திரித்துவம் பற்றிக் கட்டுக்கட்டாக கட்டுரை எழுதத்தெரியும் ஆனால் மரணம் பற்றிப் பேசினால் காததூரம் ஓடிவிடும் பேடிகள் கூட்டம். எல்லாருக்கும் இரட்சிப்பு என்று வேதம் கூறும் ஆயிரம் வசனங்களுக்கு இதுவரை ஒரு விளக்கமும் காணோம்.
பாபிலோன் குழப்ப சபையின் கூறுகெட்ட அங்கத்தினர்கள்...
இந்தக் கேள்விக்குமட்டும் காதே கேட்காதமாதிரி நடிக்கும் புத்தியீனர்கள். எத்தனை முறை கேட்டாலும் டாபிக்கை மாற்றும் தாந்தோன்றிக் கூட்டம்.
படத்துக்குக் பிரேம் போட்டு பிழைக்கும் நபர் புருனைக்கு எப்படிப் போனாரோ? ரொம்பப் பெரீஈஈஈஈய படத்துக்கு பிரேம் போட்டாரோ என்னவோ? அல்லது மேடையில் மைக்கேல் ஜாக்சன் போல பாடி பிரபலமாகிவிட்டாரா?....
அந்த கூட்டம் தற்போது இன்னோரு கள்ள உபதேச திரித்துவ தளமான "தமிழ் கிறிஸ்துவ தளத்தில்" சேர்ந்து தூஷனங்களை தொடர்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்!! கிறிஸ்தவம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டம் வேத மாணவர்கள், யெகோவா சாட்சிகள் எல்லாம் ஒன்று என்று பாடிக்கொண்டு இருக்கிறார்கள்!! கள்ள உபதேச சபைக்குள் இருப்பது கூட தெரியாமல் அநேகர் இன்று தங்களை ஏற்கனவே "இரட்சிக்கப்பட்டுவிட்டோம்" என்று நினைத்துக்கொண்டு தூஷனம் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்!!
இந்த கூட்டத்திற்கு இரட்சிப்பு என்றால் என்ன, எதிலிருந்து என்கிற அடிப்படை தெரியாது, தெரிய மனதில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்!! இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மனித போதனைகளை பின்பற்றுவது!! கத்தோலிக்க சபை என்கிற ஒரு சபையில் துவங்கிய அனைத்து தூஷனங்களையும் பட்டியல் போட்டு காண்பிக்கும் இந்த திரித்துவ கூட்டம், அவர்கள் ஆரம்பித்த திரித்துவத்தை மாத்திரம் கெட்டியாக பிடித்துக்கொண்டு, அப்போ தூஷித்துக்கொண்டிருந்த "தாய் திருச்சபை" இன்று இவர்களுடன் கை கோர்த்து ஆவிக்குரிய சபையாகி விட்டதாம்!! திரித்துவம் தான் இவர்களை இனைத்த பாலம்!! மற்றபடி ஒன்றும் இல்லை!!