kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகலமும் தேவ சித்தமே.


Executive

Status: Offline
Posts: 425
Date:
RE: சகலமும் தேவ சித்தமே.


சோல்சொல்யூஷன்:

//தேவ சித்தத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு யோனாவின் புத்தகம்,

யோனா தர்ஷீசுக்கு ஓடியது, கப்பலில் 'தற்செயலாக' அவன்பேரில் சீட்டு விழுந்தது,

தற்செயலாக ஒரு மீன் அவனை விழுங்கியது,

தற்செயலாக மூன்று நாட்கள் அவன் மீன் வயிற்றில் உயிரோடிருந்தது,

தற்செயலாக அவனை கக்கிப்போட்டது எல்லாமே தற்செயல்தான்...

நினிவே பட்டணமும் தற்செயலாக மனந்திரும்பி இரட்டுடுத்தி சாம்பலில் அமர்ந்து வேண்டிக்கொண்டது...

ஆமணக்குச் செடி தற்செயலாக ஓங்கி வளர்ந்தது,

தற்செயலாக ஒரு பூச்சி அதை அரித்துப்போட்டது,

உஷ்ணமான கீழ்க்காற்று அடித்தது எல்லாம் தற்செயல்தான்...//

சகோ.சோல்சொல்யூஷன் அவர்களே!

நான் சொல்வதையும் வேதாகமம் சொல்வதையும் நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் உங்களது இப்பதிவு காட்டுகிறது. உங்கள் பாணியிலேயை வரிசையாக எது எது எப்படி நடந்தது, எது எது யாருடைய சித்தம் என்பதை வசன ஆதாரத்துடன் தருகிறேன்; அதன் பின்னராவது உங்களுக்குப் புரிகிறதா எனப் பார்ப்போம்.

1. யோனா நினிவேக்குப் போகவேண்டுமென்பது தேவசித்தம்.

யோனா 1:1 யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: 2 நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.

2. யோனா நினிவேக்குப் போகாமல் தர்ஷூசுக்குப் போனது யோனாவின் சுயசித்தம்.

1:3 அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.

3. யோனாவின் சுயசித்தம் நிறைவேறாதபடி செய்து, தமது சித்தத்தை செயல்படுத்தும்படி தேவன் எடுத்த நடவடிக்கைதான் பெருங்காற்றை வரவழைத்து, கப்பல் பிரயாணத்தைத் தடுத்தது. (1:4)

இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். யோனா தர்ஷீசுக்குப் போனது யோனாவின் சுயசித்தம் என்பதோடு மட்டுமின்றி, தேவசித்தத்துக்கு எதிரானதுங்கூட. தேவசித்தத்துக்கு எதிரான யோனாவின் சுயசித்தம் நிறைவேறக்கூடாது என தேவன் தீர்மானித்ததால், யோனாவின் பயணத்தை தடுத்து, தமது சித்தத்தை நிறைவேற்றும்படி அவனது போங்கை மாற்றினார்.

ஆனால் தேவன் எப்போதும் இவ்வாறு செய்வதில்லை. ராஜாவாகிய சவுல் தேவசித்தத்துக்கு எதிராக நடந்தபோது, சவுலின் போங்கை மாற்றி, சவுலின் மூலமாகவே தமது சித்தத்தை நிறைவேற்ற தேவன் சித்தங்கொள்ளவில்லை. மாறாக, சவுலைத் தள்ளிவிட்டு, தாவீதின் மூலம் தமது சித்தத்தை செயல்படுத்த தீர்மானித்தார்.

4. தேவன் தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்கு செவிசாய்ப்பார் என்ற நம்பிக்கையில், கப்பலில் பயணம் செய்தவர்கள் தங்கள் தேவனை நோக்கி கூப்பிட்டனர்.

1:5 அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, ...

5. பெருங்காற்றைத் தடுக்கவல்லவர் தேவன் மட்டுமே என உணர்ந்து அதினிமித்தம் தேவனை நோக்கிக் கூப்பிட்ட கப்பற்காரர், கப்பல் சுமையைக் குறைப்பதென்பது தங்கள் சுய அறிவுக்கு எட்டின காரியம் என்பதை உணர்ந்து, சுமையைக் குறைக்கவும் முற்பட்டனர்.

1:5 ... பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்;

6. தேவனும் தங்களுக்கு செவிசாய்க்கவில்லை, தங்கள் சுய அறிவின் நடவடிக்கைக்கும் பலனில்லை என்பதை உணர்ந்த கப்பற்காரர், ஏதோ ஒரு மனிதகுற்றத்தினிமித்தம்தான் தேவன் இப்படிச் செய்கிறார் என்பதை உணர்ந்து, எந்த மனிதன் குற்றம் செய்தவன் என்பதையறிய சீட்டு போட்டு பார்த்தனர்.

1:7 அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்;

7. அவர்கள் சீட்டு போட்டது அவர்களின் சுயசித்தமாக இருந்தாலும், அவ்வாறு செய்யும்படி தேவன்தான் அவர்களின் இருதயத்தை தூண்டியிருக்க வேண்டும். ஏனெனில் சீட்டுப் போட்டதன்மூலம் யோனாவே குற்றவன் செய்தவன் எனும் உண்மையை வெளிச்சத்துக்கு வந்தது. சீட்டு யோனாவின் பேரில் விழுந்ததென்பது தற்செயலாக நடந்தது அல்ல. முழுக்க முழுக்க அது தேவச்செயலே. யோனாவின் மனிதசித்தத்தைக் குலைத்து, தமது சித்தத்தை நிறைவேற்றும்படி தேவன் அதைச் செய்தார். அதே வேளையில் சீட்டுபோட வேண்டும் எனும் தமது சித்தத்தை, கப்பற்காரரின் மனதில் புகுத்தி, அச்செயல் கப்பற்காரரின் சித்தமாக நடைபெறச் செய்தார்.

8. யோனா கடலுக்குள் போடப்படவேண்டுமென்பது தேவசித்தமாக இருந்தது. அதைப் புரிந்துகொண்ட யோனா, தற்போது தேவசித்தத்துக்கு தன்னை ஒப்புக்கொடுக்கத் தயாராகிவிட்டார். எனவே தன்னைக் கடலினுள் போடும்படி கப்பற்காரரிடம் கூறினார்.

1:12 அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.

9. ஆனால் கப்பற்காரரின் சித்தமோ, அச்செயலைச் செய்ய தயங்கியது. எனவே அவர்களின் சித்தத்தை தமது சித்தத்திற்கு நேராகத் திருப்பும்படி, சூழ்நிலைகள் மூலம் தேவன் அவர்களை நிர்ப்பந்தித்தார்.

1:13 அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய்த் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று.

10. சூழ்நிலைகள் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு போனதன் மூலம் தேவசித்தம் எதுவென்பதை உணர்ந்த கப்பற்காரர், இறுதியில் தேவசித்தப்படியே செய்ய தங்களது சுயசித்தத்தை ஒப்புக்கொடுத்தனர்.

1:14 ... தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி, 15 யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்;

கப்பற்காரரின் இக்கூற்று நிதரிசனமான உண்மைதான். ஆனால் தேவசித்தம் நிறைவேறி முடிவதற்கு முன், ஆங்காங்கே மனித சித்தமும் செயல்படத்தான் செய்யும். இதற்கு யோனாவின் இச்சம்பவம் ஓர் உதாரணம். யோனா நினிவேக்குப் போகவேண்டும் எனும் தேவசித்தத்திற்கு எதிராக, யோனாவின் சுயசித்தம் ஒரு காலகட்டம் வரை நடந்ததை யாரும் மறுக்கமுடியாது. ஆகிலும் இறுதியில் யோனாவின் சித்தம் முறிக்கப்பட்டு, தேவசித்தம் உறுதிசெய்யப்பட்டது.

11. யோனாவை மீன் விழுங்கவேண்டுமென்பது தேவனின் சித்தமே. மீனின் வயிற்றில் யோனா 3 நாட்கள் இருக்கவேண்டுமென்பதும் தேவசித்தமே.

1:17  யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.

தேவசித்தத்திற்கு எதிராக தர்ஷீசுக்குப் போகவேண்டுமென யோனா சித்தம் கொள்ளாதிருந்தால், யோனாவை மீன் விழுங்கவேண்டும் எனும் தேவசித்தம் உண்டாக வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.

12. மீனின் வயிற்றிலிருந்து யோனா ஜெபித்ததென்பது யோனாவின் சுயசித்தமே. ஆகிலும் அது தேவசித்தத்திற்கு விரோதமானது அல்ல. இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டும். யோனா ஜெபித்ததால்தான் தேவன் மீனுக்குக் கட்டளையிட்டார் எனச் சொல்லமுடியாது. யோனா ஜெபிக்காவிட்டாலும் 3 நாட்களுக்குப் பின் தேவன் மீனுக்குக் கட்டளையிட்டிருக்கவும் வாய்ப்புண்டு.

13. யோனாவின் சித்தம் செயல்படாதபடி தடுத்த தேவன், மீண்டும் நினிவேயைக் குறித்ததான தமது தீர்மானத்தை நினிவேயில் பிரசங்கிக்கும்படி யோனாவிடம் சொன்னார். ஒருமுறை பட்ட அனுபவத்தில் பாடம் கற்றுக்கொண்ட யோனா, தற்போது தேவசித்தப்படியே செய்தார்.

3:3 யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்;  யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான்.

14. யோனாவின் பிரசங்கத்திற்குப்பின், நினிவே மக்களின் சித்தம் மாற்றப்பட்டது. அவர்கள் தங்கள் சுயசித்தப்படி பாவம் செய்வதை விட்டுவிட்டு, தேவசித்தப்படி நடக்க தங்களை ஒப்புக்கொடுத்தனர் (3:5-9).

15. நினிவே மக்களின் மனமாற்றத்தைப் பார்த்த தேவன், தாமுங்கூட மனம் மாறினார். ஆம், நினிவேக்கு விரோதமாக இருந்த தேவசித்தம், நினிவேக்கு சாதகமாக மாறியது.

3:10 அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.

16. தேவனின் இரக்கத்தைக் குறித்து யோனா ஏற்கனவே அறிந்திருந்தார். அதனால்தான், “தற்போது நினிவேயை அழிப்பதாகச் சொல்லும் தேவன், பின்னர் மனம்மாறி அழிக்காமல் விடுவிடுவார்” என நினைத்து, தேவசித்தத்துக்கு விரோதமாக தர்ஷீசுக்குப் போனார்.

4:1 யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு, 2 கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.

17. யோனாவைப் பொறுத்தவரை, தேவன் ஜனங்களிடம் அன்புகூர்ந்து அவர்களை மன்னித்தது தவறு என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. யோனாவின் இந்த எண்ணம் தவறு என்பதற்காகத்தான், ஆமணக்குச் செடி மூலம் யோனாவுக்கு ஒரு பாடத்தை தேவன் புகட்டினார். ஆமணக்குச் செடி முளைத்து வளருவதற்குக் கட்டளையிட்டவர் தேவனே!

4:6 யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்.

18. ஆமணக்குச் செடியை பூச்சியின் மூலம் அழிக்கக் கட்டளையிட்டவரும் தேவனே!

4:7 யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்.

19. உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டவ்ர்ம் தேவனே!

4:8  சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

20. ஆமணக்குச் செடியின் அழிவால் வெறுப்புற்று யோனா சோர்ந்திருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நினிவே மக்களை தாம் அழிக்காமல் விட்டதிலுள்ள நியாயத்தை தேவன் யோனாவுக்குப் புரியச்செய்தார்.

4:10 அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே. 11 வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

உலகம் முழுவதும் தேவசித்தமும் மனிதசித்தமும் சாத்தானின் சித்தமும் மாறி மாறி நடந்துவருகின்றன. மனிதசித்தத்தாலும் சாத்தானின் சித்தத்தாலும் தேவசித்தம் நிறைவேறுவதில் அவ்வப்போது தடைகள் நேரிட்டாலும், இறுதியில் வெற்றி பெறப்போவது தேவசித்தம் மட்டுமே.

இப்படிச் சொல்வதால், 1 தீமோ. 2:4-ஐக் காட்டி, எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட்டுவிடுவார்கள் எனக் கூறவேண்டாம்.

ஏனெனில்,

1 தீமோ. 2:4-ன்படி எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் வேண்டுமென்பதும் தேவசித்தம்தான்; அதே வேளையில்,

மத்தேயு 7:21-ன்படி பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பதும், பிதாவின் சித்தம் செய்யாமல் வெறுமனே இயேசுவை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசியாதிருப்பதும் தேவசித்தம்தான்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்பு எழுதுகிறார்:
//உலகம் முழுவதும் தேவசித்தமும் மனிதசித்தமும் சாத்தானின் சித்தமும் மாறி மாறி நடந்துவருகின்றன. மனிதசித்தத்தாலும் சாத்தானின் சித்தத்தாலும் தேவசித்தம் நிறைவேறுவதில் அவ்வப்போது தடைகள் நேரிட்டாலும், இறுதியில் வெற்றி பெறப்போவது தேவசித்தம் மட்டுமே.//

இப்படிச் சொல்வதால், 1 தீமோ. 2:4-ஐக் காட்டி, எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட்டுவிடுவார்கள் எனக் கூறவேண்டாம்.

ஏனெனில்,

1 தீமோ. 2:4-ன்படி எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் வேண்டுமென்பதும் தேவசித்தம்தான்;//

இது முறனாக தெரியவில்லையா!! இறுதியில் வெற்றி பெறப்போவது தேவசித்தம் மட்டுமே என்கிற கருத்தை கூறிவிட்டு, 1 தீமோ 2:4ன்படி எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட தேவ சித்தம் தான்........ என்று சொல்லுவது!!


//அதே வேளையில்,

மத்தேயு 7:21-ன்படி பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பதும், பிதாவின் சித்தம் செய்யாமல் வெறுமனே இயேசுவை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசியாதிருப்பதும் தேவசித்தம்தான்.//

இதை எப்பொழுது மறுத்திருக்கிறோம்!! சகோ அன்பு அவர்களே, இரட்சிப்பு என்றால் பரலோகம் போவது மாத்திரம் கிடையாது!! சபைக்கு ஒரு விஷேசித்த இரட்சிப்பு இருக்கிறது, மற்றா அனைவருக்கும் இரட்சிப்பு இருக்கிறது!! சபைக்கான இரட்சிப்பு ஆவிக்குறிய சரீரத்துடன் சாவாமையை, அழியாமையை பெற்றுக்கொள்வது அது "நித்தியத்திற்கும்"!! பூமியில் இரட்சிக்கப்பட்டு எழுந்துவருவோருக்கு நித்தியஜீவன் வாக்கு பண்ணப்பட்டிருக்கிறது, "சாவாமை" அல்லது "அழியாமை" குறித்து வேதம் சொல்லவில்லை!! தேவன் அவர்களை வைத்து வேறு என்ன திட்டம் கொண்டிருக்கிறார் என்பதை வேதம் எங்குமே விளக்கவில்லை!! வாசித்து புரிந்த மட்டும், நித்திய ஜீவன் இருக்கிறது!! நித்திய ஜீவன், சாவாமை, அழியாமை என்கிற பதங்களுக்கு வித்தியாசம் இருக்கிறது!!

ஆக 1 தீமோ 2:4ன் உள்ள தேவனின்சித்தம் நிறைவேறியே தீரும்!! அந்தபடியே மத்தேயு 7:21ல் சொல்லப்பட்டதும் நிறைவேறியே தீரும்!! பிதாவின் சித்தம் செய்வதே பிதாவின் சித்தத்தினால் தானே அன்றி சுயசித்தத்தினால் அல்ல‌!!

இரட்சிப்பு என்றவுடன் திரித்துவர்கள் சொல்லுவது போல் பரலோகம் போவது மாத்திரம் தான் என்று நீங்களும் விசுவாசிக்கிறீர்களோ!!!??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//உலகம் முழுவதும் தேவசித்தமும் மனிதசித்தமும் சாத்தானின் சித்தமும் மாறி மாறி நடந்துவருகின்றன. மனிதசித்தத்தாலும் சாத்தானின் சித்தத்தாலும் தேவசித்தம் நிறைவேறுவதில் அவ்வப்போது தடைகள் நேரிட்டாலும், இறுதியில் வெற்றி பெறப்போவது தேவசித்தம் மட்டுமே.//

உலகில் சாத்தானின் சித்தமும் நடக்கிறது என்பதைவிட பெரிய தேவதூஷணம் இருக்கமுடியாது. உலகம் பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கிறது, தேவனுக்குள் அல்ல. "உலகம் அவரை(Spirit of Truth) அறியாது அதனால் பெற்றுக்கொள்ள மாட்டாது" என்றுதான் சத்தியத்தைக் குறித்தே எழுதப்பட்டுள்ளது.

நீங்கள் என்னவென்றால் ஏதோ தேவன் எல்லாருக்கும் வேதத்தைக் கொடுத்து அதிலுள்ள கட்டளைகளை முழு மனுக்குலமும் இப்போதோ கைக்கொள்ள வேண்டும் என்ற மாய எண்ணத்தில் இருக்கிறீர்கள். மனிதனைக் காப்பாற்றும் முயற்சியில் தேவன் பரிதாபமாக தோற்றுக்கொண்டிருக்கிறார் என்கிறீர்கள் போலும். ஏனென்றால் உலகில் நீதிமான்கள் வெகு சொற்பமே. இதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆக அவர்கள் அனைவரும் நித்தியமாக அழிந்துவிடுவார்கள்.

உங்கள் வாதப்படி மனித சித்தம் மட்டும்தானே நடக்கவேண்டும்? அப்படி மனிதனுடைய சித்தத்தை தன் சித்தத்துக்கு ஏதுவாக்க தேவனும், சாத்தானும் போட்டி போடுகிறார்கள் என்றால் இன்றைய நிலவரப்படி சாத்தான் சூப்பர் மெஜாரிடி. ஏனென்றால் தேவனால் ஜனங்களை பரிசுத்தவான்களாகவோ, நீதிமான்களாகவோ அல்லது குறைந்தபட்சம் நல்லவர்களாகவோ மாற்ற முடியவில்லையே? 

மேலும், சாத்தானால் ஏறக்குறைய எல்லாரையுமே மோசம் போக்கி அநீதிமானகளாக ஆக்க முடியுமென்றால் மனிதன் என்ன செய்வான்?

இதைத்தான் நாங்கள் வரும் சாத்தானற்ற தீங்கற்ற ராஜ்ஜியத்தில் சபையின் உதவியுடன் உயிர்த்தெழும் எல்லா ஜனங்களும் நீதியைக் கற்றுக்கொண்டு நித்திய ஜீவனைப் பெறுவார்கள் என்கிறோம். ஏனென்றால் அங்கு தேவ சித்தமும், மனிதசித்தமும் மட்டுமே (உங்கள் கூற்றுப்படி) இருக்கும்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//உலகில் சாத்தானின் சித்தமும் நடக்கிறது என்பதைவிட பெரிய தேவதூஷணம் இருக்கமுடியாது.//

மாற்கு 4:15 வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.

ஒருவனின் இருதயத்தில் விதைக்கப்பட்ட வசனத்தை சாத்தான் எடுத்துப்போடுவது, சாத்தானின் சித்தமா, தேவசித்தமா?

மாற்கு 8:33 அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார்.

இயேசு கடிந்துகொண்ட பேதுருவின் சிந்தனை சாத்தானின் சித்தமா, தேவசித்தமா?

தேவசித்தமெனில், தேவசித்தப்படியான பேதுருவின் சிந்தனையை இயேசு ஏன் கடிந்துகொண்டார்?

லூக்கா 13:16 இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.

ஒரு பெண்ணை சாத்தான் 18 வருடமாய் கட்டி வைத்திருந்தது சாத்தானின் சித்தமா, தேவசித்தமா?

அப்போஸ்தலர் 5:3 பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?

அனனியாவின் இருதயத்தை சாத்தான் நிரப்பினது, அதுவும் பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லத்தக்கதாக நிரப்பியது, சாத்தானின் சித்தமா, தேவசித்தமா?

யோவான் 5:14 இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

ஒருவன் பாவம் செய்வது சாத்தானின் சித்தமா, தேவசித்தமா?

ஒருவன் பாவம் செய்வது தேவசித்தம் எனில், அதை ஏன் செய்யக்கூடாது என இயேசு கூறினார்?




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இதை நான் முன்னரே எதிர்பார்த்தேன். பரவாயில்லை. தேவன் சாத்தானை உருவாக்கி, அவனை அவர் சித்தத்துக்கு பயன்படுத்துகிறார். ஒரு வில்லன் வேண்டுமே. ஒளியையும் இருளையும் நானே உண்டாக்கினேன் என்கிறாரே? 

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இருள் இல்லாமல் 'ஒளி'யை விளக்க இயலாது. அது போலத்தான் 'தீமை' இல்லாமல் நன்மையை வரையறுக்க இயலாது. அதுபோலத்தான் ஒருவனை தீமையைச் செய்யத் தூண்டுபவன் இல்லாமல் அவனுக்கு நன்மை செய்ய பணிக்கவே முடியாது. ஏதேன் தோட்டத்தில் நன்மையை மட்டும் அறியத்தக்க மரம் இருந்திருந்தால் இந்தப் பிரச்சனையே எழுந்திருக்காது. எனவேதான் தேவனே சாத்தானையும் உருவாக்கினார் ஒரு நோக்கத்துக்காக, அவரது சித்தம் செய்யப்படுவதற்காக. எல்லாரும் போதிப்பதுபோல அவன் விழுந்துபோன தூதன் இல்லை. அவன் ஆதிமுதலே மனுஷ கொலை பாதகன். 

ஆதியாகமம்3:1. தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது.

அந்த சர்ப்பம்தான் ஏவாளை வஞ்சித்தது என்று ஏவாள் கூறுகிறாள்.

அதே தேவனால் உண்டாக்கப்பட்ட சர்ப்பம் தான் இன்றைக்கு ஒவ்வொரு மனிதனையும் விலக்கப்பட்ட கனியை புசிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. சாத்தானின் இந்த செய்கையும் தேவதிட்டத்தின் பகுதி என்பதை அறிந்துகொள்ளலாம். 

வெளி 12:9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; 

உலகமனைத்தையும் மோசம் போக்க தேவனால் உண்டாக்கப்பட்டதுதான் பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பம். 

//மாற்கு 4:15 வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.

ஒருவனின் இருதயத்தில் விதைக்கப்பட்ட வசனத்தை சாத்தான் எடுத்துப்போடுவது, சாத்தானின் சித்தமா, தேவசித்தமா?//

தேவ சித்தமே! ஏனென்றால் தேவனின் சித்தமில்லாமல் சாத்தானால் ஒன்றுமே செய்ய முடியாது. அப்படி முடியும்பட்சம் அவன் தேவனைவிட வல்லமை வாய்ந்தவனாகிறான். 

//இயேசு கடிந்துகொண்ட பேதுருவின் சிந்தனை சாத்தானின் சித்தமா, தேவசித்தமா?

தேவசித்தமெனில், தேவசித்தப்படியான பேதுருவின் சிந்தனையை இயேசு ஏன் கடிந்துகொண்டார்?//

அய்யா இயேசு பேதுருவை இவ்வண்ணமாகக் கடிந்துகொள்ள வேண்டுமென்பதே தேவ சித்தம். அந்த வாய்ப்பு சாத்தானில்லாமல் வரமுடியாது!

//லூக்கா 13:16 இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.

ஒரு பெண்ணை சாத்தான் 18 வருடமாய் கட்டி வைத்திருந்தது சாத்தானின் சித்தமா, தேவசித்தமா?//

தேவ சித்தம்தான். தேவகுமாரன் மூலமாய் ஒருவரைக் கட்டவிழ்க்க வேண்டுமானால் ஏற்கனவே யார் மூலமாகவாவது முதலில் கட்டப்பட்டிருக்க வேண்டுமே! இல்லாவிட்டால் யாரை அவிழ்ப்பது?

//அனனியாவின் இருதயத்தை சாத்தான் நிரப்பினது, அதுவும் பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லத்தக்கதாக நிரப்பியது, சாத்தானின் சித்தமா, தேவசித்தமா?//

மறுபடியும் தேவசித்தமதான். அதென்ன அதுவும் பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொல்லாத்தக்கதாய்... யாரிடம் சொன்னாலும் பொய் பொய்தான்.

//யோவான் 5:14 இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

ஒருவன் பாவம் செய்வது சாத்தானின் சித்தமா, தேவசித்தமா?

ஒருவன் பாவம் செய்வது தேவசித்தம் எனில், அதை ஏன் செய்யக்கூடாது என இயேசு கூறினார்?//

பாவம் செய்யக்கூடாது என்று இயேசு கூறியது தேவசித்தம்தான். அதன்பின் அவன் பாவம் செய்வதும் செய்யாமலிருப்பதும் தேவசித்தம்தான். 

இன்னொரு சம்பவத்தையும் பார்க்கலாம்.

யோவான் 9:2 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.

யோவான் 9:3 இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.

ஆக தன் குமாரன் மூலமாக தன்னுடைய மகிமையை வெளிப்படுத்த ஒருவனை 38 வருடமாக கட்டி வைக்கிறார், ஒருவனை பிறக்கும்போதே குருடாக பிறக்கவைக்கிறார்.

குற்றமற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்த 'பாவம்' சாத்தானின் சித்தமா? தேவசித்தமா? 

உலகில் நடக்கும் அத்தனை சம்பவங்களுக்கும் தேவன் மட்டுமே முழுப்பொறுப்பு என்று சொல்லிவிட்டோம். அதை அவர் எவ்வாறு யார் மூலம் நடப்பிக்கிறார் என்பது அவருக்கே தெரிந்த ஒன்று. 

ஏசாயா 46:10 அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

ரோமர் 11:34 கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?

சாத்தானின் தனிப்பட்ட சித்தம் நடக்க வாய்ப்பு இருந்தாலே தேவன் தோற்றுவிடுகிறார். அப்படி ஏதுமில்லை. தேவனுடைய அனுமதியில்லாமல் சாத்தானால் ஒன்றும் செய்துவிட முடியாது. மறுபடியும் அனுமதிப்பது வேறு சித்தம் வேறு என்று ஆரம்பித்துவிடாதீர்கள் சகோதரரே. 

இது இப்படித்தான் நடக்கும் என்று தேவனுக்கு பூர்வமுதலே தெரியும். ஏனென்றால் நடப்பிக்கிறவரே அவர்தான்.

மனித சித்தமும், சாத்தானின் சித்தமும் தேவசித்தத்துக்கு எதிராக இருந்தால் தேவனால் ஒன்றுமே செய்ய முடியாது. எல்லாரும் இரட்சிக்கப்பட அவர் சித்தமுளவராயிருப்பதால் அந்த சித்தத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார். அவருடைய இந்த சித்தம் நிறைவேறாது என்று வாதிடுவது மனிதர்களயும் சாத்தானையும் உயர்த்தி தேவனை இழிவுபடுத்துவதாகும்.

ஒருவன் கெட்டுப்போனாலும் அது தேவனுக்குத் தோல்வியே!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

மத்தேயு 5:37  உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

கோவை பெரியன்ஸ் சகோதரர்களுக்கு என் கேள்வி: நாம் உள்ளதை உள்ளபடி சொல்வது தேவசித்தமா, அல்லது மனம்போனபடி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வது தேவசித்தமா?

இக்கேள்விக்கு கோவை பெரியன்ஸ் சொல்லக்கூடிய பதில் (எனது கற்பனையில்): சகோ அன்பு அவர்களே! பொய் பேசக்கூடாது, உண்மைதான் பேசவேண்டும் என்பதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? வேதாகமத்தைப் படித்ததால்தானே? வேதாகமத்தைப் படிக்காதவர்களுக்கு இதெல்லாம் தெரியாதல்லவா? எனவே வேதாகமம் உங்கள் கையில் கிடைக்காவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதையே செய்வதுதான் உங்களைப் பொறுத்தவரை தேவசித்தம்.

இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்களே, உங்களால் ஒரு பொய்கூட சொல்லாமல் இருக்கமுடியுமா? அல்லது ஒரு பொய்கூட சொல்லாத ஒருவரைக் காட்டமுடியுமா? நிச்சயம் முடியாது. பிறகெதற்கு இந்தக் கேள்வியெல்லாம்?

நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள், இயேசு சொல்வதெல்லாம் சபையாகிய சிறு மந்தைக்கு மட்டுமேயொழிய, உங்களுக்கும் எனக்கும் அல்ல.

ஒருவேளை உலகத்தோற்றத்துக்கு முன்னேயே உங்களை சபையில் ஒருவராக தேவன் தெரிந்துகொண்டிருந்தால், நீங்கள் உண்மை மட்டுமே பேசும்படி தேவன் செய்துவிடுவார். ஆனால் நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர் அல்ல எனில், நீங்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும், உங்களால் பொய் பேசாமல் இருக்கவே முடியாது.

எனவே நீங்கள் ரொம்ப அலட்டிக்கொள்ள வேண்டாம். உண்மையோ பொய்யோ, எது பேசவேண்டுமென உங்களுக்குத் தோன்றுகிறதோ அதன்படியே செய்யுங்கள். உங்களுக்கு ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன், நீங்கள் எது சொன்னாலும் எப்படி நடந்தாலும் அதுதான் தேவசித்தம். உண்மை பேச நினைத்தால் அப்படியே பேசுங்கள்; உங்களைப் பொறுத்தவரை அதுதான் தேவசித்தம். அல்லது பொய் பேச நினைத்தால், அப்படியே பேசுங்கள்; உங்களைப் பொறுத்தவரை அதுவே தேவசித்தமாகிவிடும்.

நீங்கள் எப்படி நடந்தாலும் ஒரு பிரச்சனையுமில்லை; கிறிஸ்துவின் ராஜ்யத்தில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு நித்தியஜீவனைப் பெற்றுவிடுவீர்கள்.

மத்தேயு 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். 45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்;

கோவை பெரியன்ஸ் சகோதரர்களுக்கு என் கேள்வி: இயேசு இவ்வசனங்களில் சொல்கிறபடியெல்லாம் நாம் நடப்பது தேவசித்தமா, அல்லது இவ்வசனங்களுக்கு எதிராக நடப்பது தேவசித்தமா?

இக்கேள்விக்கு கோவை பெரியன்ஸ் சொல்லக்கூடிய பதில் (எனது கற்பனையில்): சகோ அன்பு அவர்களே! இவ்வசனங்களெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? வேதாகமத்தைப் படித்ததால்தானே? வேதாகமத்தைப் படிக்காதவர்களுக்கு இதெல்லாம் தெரியாதல்லவா? எனவே வேதாகமம் உங்கள் கையில் கிடைக்காவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதையே செய்வதுதான் உங்களைப் பொறுத்தவரை தேவசித்தம்.

இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்களே, உங்கள் சத்துருவை உண்மையாகவே சிநேகிக்க உங்களால் முடியுமா, அல்லது சபிப்பவர்களை ஆசீர்வதிக்க முடியுமா? அல்லது இப்படியெல்லாம் நடக்கக்கூடிய ஒருவரை உங்களால் காட்டத்தான் முடியுமா? நிச்சயம் முடியாது. பிறகெதற்கு இந்தக் கேள்வியெல்லாம்?

மீண்டும் சொல்கிறேன் கேளுங்கள், இயேசு சொல்வதெல்லாம் சபையாகிய சிறு மந்தைக்கு மட்டுமேயொழிய, உங்களுக்கும் எனக்கும் அல்ல.

ஒருவேளை உலகத்தோற்றத்துக்கு முன்னேயே உங்களை சபையில் ஒருவராக தேவன் தெரிந்துகொண்டிருந்தால், இவ்வசனங்களின்படி நீங்கள் நடக்கத்தக்கதாக தேவன் உங்களை மாற்றிவிடுவார். ஆனால் நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர் அல்ல எனில், நீங்கள் என்னதான் முயன்றாலும், உங்கள் சத்துருக்களை சிநேகிக்கவும் உங்களால் முடியாது, உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யவும் உங்களால் முடியாது.

எனவே நீங்கள் ரொம்ப அலட்டிக்கொள்ள வேண்டாம். யாரை சிநேகிக்க நினைக்கிறீர்களோ அல்லது யாரை வெறுக்க நினைக்கிறீர்களோ அப்படியே செய்யுங்கள். உங்களுக்கு ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன், நீங்கள் யாரை வெறுத்தாலும் சிநேகித்தாலும் அதுதான் தேவசித்தம். யாரையாவது சிநேகிக்க நினைத்தால் அப்படியே செய்யுங்கள்; உங்களைப் பொறுத்தவரை அதுதான் தேவசித்தம். அல்லது யாரையாவது வெறுக்க நினைத்தால், அப்படியே செய்யுங்கள்; உங்களைப் பொறுத்தவரை அதுவே தேவசித்தமாகிவிடும்.

நீங்கள் எப்படி நடந்தாலும் ஒரு பிரச்சனையுமில்லை; கிறிஸ்துவின் ராஜ்யத்தில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு நித்தியஜீவனைப் பெற்றுவிடுவீர்கள்.

மத்தேயு 7:13 இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

நாம் இடுக்கமான வழியில் செல்வது தேவசித்தமா, விரிவான வழியில் செல்வது தேவசித்தமா?

இக்கேள்விக்கு கோவை பெரியன்ஸ் சொல்லக்கூடிய பதில் (எனது கற்பனையில்): சகோ அன்பு அவர்களே! இந்தக் கேள்வியையெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்? வேதாகமம் உங்கள் கையில் கிடைத்ததால்தானே? வேதாகமம் உங்கள் கையில் கிடைக்காவிட்டால் இடுக்கமான வழி, விரிவான வழி ஆகியவற்றை கேள்விப்பட்டிருப்பீர்களா? எனவேதான் சொல்கிறேன், வேதாகமம் உங்கள் கையில் கிடைக்காவிட்டால் எந்த வழியில் செல்வீர்களோ அதே வழியில் செல்லுங்கள், அது போதும். இயேசு சொல்வதெல்லாம், சபையாகிய சிறு மந்தைக்கு மட்டுமேயொழிய, உங்களுக்கும் எனக்கும் அல்ல.

ஒருவேளை உங்களை உலகத்தோற்றத்துக்கு முன்னேயே சபையில் ஒருவராக தேவன் தெரிந்துகொண்டிருந்தால், நீங்கள் தானாகவே இடுக்கமான வழியில் சென்றுவிடுவீர்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. எனவே நீங்கள் ரொம்ப அலட்டிக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு எந்த வழியில் செல்லத் தோன்றுகிறதோ அந்த வழியில் செல்லுங்கள். நீங்கள் எந்த வழியில் சென்றாலும் அதுதான் தேவசித்தம். நீங்கள் இடுக்கமான வழியில் செல்ல நினைத்தால் அப்படியே செல்லுங்கள்; உங்களைப் பொறுத்தவரை அதுதான் தேவசித்தம். அல்லது விரிவான வாசலில் செல்ல வேண்டுமென நினைத்தால், அப்படியே செல்லுங்கள்; உங்களைப் பொறுத்தவரை அதுவே தேவசித்தமாகிவிடும்.

நீங்கள் விரிவான வாசலில் சென்றாலும் அதனால் ஒன்றும் நஷ்டமில்லை; கிறிஸ்துவின் ராஜ்யத்தில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு நித்தியஜீவனைப் பெற்றுவிடுவீர்கள்.

மத்தேயு 5:19 இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

நாம் இயேசுவின் கற்பனைகளை மீறி போதிப்பது தேவசித்தமா, அல்லது கற்பனைகளைக் கைக்கொண்டு போதிப்பது தேவசித்தமா?

இக்கேள்விக்கு கோவை பெரியன்ஸ் சொல்லக்கூடிய பதில் (எனது கற்பனையில்): சகோ அன்பு அவர்களே! நீங்கள் அதிகமாக வேதாகமத்தைப் படிப்பதால்தான் இந்த மாதிரி தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்கிறீர்கள். வேதாகமம் உங்கள் கையில் கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்களோ அதுதான் தேவசித்தம் என்பதுதான் உங்களது இக்கேள்விக்கும் எனது பதில்.

இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்களே, உங்களால் எல்லா கற்பனைகளின்படி நடக்க முடிகிறதா? அல்லது அப்படி நடப்போரில் ஒருவரைக் காட்ட முடிகிறதா? நிச்சயம் முடியாது. பிறகெதற்கு இந்தக் கேள்வியெல்லாம்?

மீண்டும் மீண்டும் சொல்கிறேன், இயேசு சொல்வதெல்லாம் சபையாகிய சிறு மந்தைக்கு மட்டுமேயொழிய, உங்களுக்கும் எனக்கும் அல்ல.

ஒருவேளை உங்களை உலகத்தோற்றத்துக்கு முன்னேயே சபையில் ஒருவராக தேவன் தெரிந்துகொண்டிருந்தால், நீங்கள் தானாகவே கற்பனைகளின்படி நடப்பீர்கள், அவற்றை இம்மி பிசகாமல் போதிப்பீர்கள். நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர் அல்ல எனில், நீங்கள் பிரம்மப்பிரயத்தனம் பண்ணினாலும், இயேசுவின் கற்பனைகளின்படி உங்களால் நடக்க முடியாது.

எனவே நீங்கள் ரொம்ப அலட்டிக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு எதைச் செய்யவேண்டுமென தோன்றுகிறதோ அதை அப்படியே செய்யுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அதுதான் தேவசித்தம். எனவே கற்பனைகளின்படி நடக்க நினைத்தால் அப்படியே செய்யுங்கள்; உங்களைப் பொறுத்தவரை அதுதான் தேவசித்தம். அல்லது கற்பனைகளின்படி நடக்க மனமில்லையெனில், அப்படியே இருந்து கொள்ளுங்கள்; உங்களைப் பொறுத்தவரை அதுவே தேவசித்தமாகிவிடும்.

நீங்கள் எப்படி நடந்தாலும் ஒரு பிரச்சனையுமில்லை; கிறிஸ்துவின் ராஜ்யத்தில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு நித்தியஜீவனைப் பெற்றுவிடுவீர்கள்.

மத்தேயு 5:48 பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.

நாம் பிதாவைப்போல் பூரணசற்குணராயிருப்பது தேவசித்தமா, அல்லது அப்படியெல்லாம் இல்லாதிருப்பது தேவசித்தமா?

இக்கேள்விக்கு கோவை பெரியன்ஸ் சொல்லக்கூடிய பதில் (எனது கற்பனையில்): சகோ அன்பு அவர்களே! இவ்வுலகில் உங்கள் சித்தமும் நடக்காது, சாத்தானின் சித்தமும் நடக்காது, தேவசித்தம் மட்டுமே நடக்கும் எனும் மாபெரும் உண்மையை முதலாவது தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த உண்மையின் அடிப்படையில் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன். இவ்வுலகில் உங்களுக்குத் தெரிந்து யாராவது பிதாவைப் போல் பூரண சற்குணராக இருக்கின்றார்களா? நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்வீர்கள்.

நாம் பிதாவைப்போல் பூரண சற்குணராகவேண்டுமென்பதுதான் தேவசித்தமெனில், நாமெல்லோரும் பிதாவைப்போல் பூரண சற்குணராகியிருப்போமே! ஆனால் அப்படி நடக்கவில்லையே! எனவே நாமெல்லோரும் பூரண சற்குணராகவேண்டும் என்பது தேவசித்தம் அல்ல.

ஆகிலும் சபையாகிய சிறுமந்தைக்கு மட்டும் இதிலிருந்து விலக்காகும். உண்மையில் அவர்களுக்குத்தான் இயேசுவின் கற்பனைகளெல்லாம். உங்களைப் பொறுத்தவரை வேதாகமம் உங்கள் கையில் கிடைத்திருக்காவிட்டால் இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்பீர்களா?

எனவே வேதாகமத்தைப் படித்து அதை இவ்வுலகத்தின் எல்லா மனிதரின் வாழ்வோடும் இணைத்துப் பார்த்து இம்மாதிரி கேள்வியெல்லாம் எழுப்பாதீர்கள்.

ஒருவேளை உங்களை உலகத்தோற்றத்துக்கு முன்னேயே சபையில் ஒருவராக தேவன் தெரிந்துகொண்டிருந்தால், நீங்கள் தானாகவே பூரண சற்குணராகிவிடுவீர்கள். நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர் அல்ல எனில், நீங்கள் என்னதான் பிரயாசம் பண்ணினாலும், சாதாரண சற்குணராகக்கூட உங்களால் நடக்க முடியாது.

எனவே நீங்கள் ரொம்ப அலட்டிக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு எதைச் செய்யவேண்டுமென தோன்றுகிறதோ அதை அப்படியே செய்யுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அதுதான் தேவசித்தம். ஒருவேளை தானாகவே நீங்கள் பூரண சற்குணராகிவிட்டால், உங்களைப் பொறுத்தவரை அதுதான் தேவசித்தம். அல்லது நீங்கள் என்னதான் பிரயாசித்தாலும் பூரண சற்குணராக முடியவில்லையெனில், உங்களைப் பொறுத்தவரை அதுவே தேவசித்தமாகிவிடும்.

நீங்கள் எப்படி நடந்தாலும் ஒரு பிரச்சனையுமில்லை; கிறிஸ்துவின் ராஜ்யத்தில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு நித்தியஜீவனைப் பெற்றுவிடுவீர்கள்.

பின்குறிப்பு: அன்பான கோவை பெரியன்ஸ் சகோதரர்களே! உங்கள் சார்பில் நான் கற்பனையாகத் தந்துள்ள இப்பதில்கள், உங்களைப் பரியாசம் பண்ணுவதற்காக அல்ல. இப்பதில்களை சற்று கூர்ந்து படித்து, ஏற்கனவே இவ்விஷயம் சம்பந்தமாக நீங்கள் பதித்த பதிவுகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள், வரிக்கு வரி உங்கள் கருத்துக்கள் இங்கு பிரதிபலிப்பதை நீங்கள் அறியமுடியும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

நீங்கள் பரிகாசம் பண்ணவில்லை என்று நிச்சயமாக அறிந்திருக்கிறோம். நீங்கள் உங்கள் கற்பனையில் அளித்த பதில்கள் மிக நன்று. அறிந்து கொண்டீர்கள். இன்னும் புரிந்துகொண்டீர்களென்றால் நலம். 

உலகத்தில் ஒன்று பூரணமாக தேவசித்தம் மட்டுமே நடக்கவேண்டும், அல்லது அவரது சித்தமில்லாமலேயே சகலமும் நடக்கவேண்டும். இதற்கு இடைப்பட்ட ஒரு நிகழ்வு இருக்க முடியாது. வேதம் சொல்வது முதலாவதைத்தான். இல்லாவிட்டால் அவர் 'சர்வ வல்லவர்' ஆக முடியாது.

 

I கொரிந்தியர் 3:7 அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//நீங்கள் பரிகாசம் பண்ணவில்லை என்று நிச்சயமாக அறிந்திருக்கிறோம். நீங்கள் உங்கள் கற்பனையில் அளித்த பதில்கள் மிக நன்று.//

எனது கற்பனை பதில்களை உங்கள் பதிலாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி சகோதரரே!

இனி உங்களிடம் சில தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கிறேன்; மனமிருந்தால் அவற்றிற்கு பதில் தாருங்கள்.

மத்தேயு 5:37  உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

நீங்கள் உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்வீர்களா? அல்லது உங்கள் மனம்போல்இல்லாததையும் பொல்லாததையும் சொல்வீர்களா?

மத்தேயு 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். 45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்;

இவ்வசனங்கள் கூறுகிற போதனைகளின்படி செய்வீர்களா? அல்லது குறைந்தபட்சம் அவற்றின்படி நடக்க பிரயாசப்படுவீர்களா? அல்லது அவற்றிற்கு எதிராகச் செயல்படுவீர்களா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,

நீங்கள் சிந்தனைக்கும் சித்ததிற்கும் நடுவே குழம்பியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!! மனுஷன் சிந்திப்பதை நீங்கள் சித்தம் என்று என்னுகிறீகள்!! அப்படி மனிதர்களின் அல்லது சாத்தானின் "சித்தம்" நடந்தது என்றால் தேவன் என்று ஒருவர் எதற்கு, அல்லது தேவனை எப்படி சர்வவல்லமையுள்ளவர் என்று சொல்லுவது!!

சிந்தனை என்கிற உணர்வை நீங்கள் சித்தம் என்று நினைக்கிறீர்கள்!! வேதத்தில் உள்ள கட்டளைகளை பவுல் சரிவர தான் பின்பற்றிக்கொண்டிருந்திருப்பான், ஆனால் தேவன் அவரின் சித்தப்படி தான் பவுலை பயன்ப்படுத்தினார்!! மனித சிந்தனை சித்தமாகிவிடாது சகோதரரே!!

அதற்காக தான் ஜெபிப்பது கூட தேவனின் சித்தத்தின்படி ஜெபியுங்கள் என்று வசனம் சொல்லுகிறது!!

ரோமர் 12:2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

இந்த பிரபஞ்சத்தின் தேவன் கொண்டு வரும் சிந்தனைகளிலி லயிக்காமல், தேவனின் சித்தம் பகுத்தறியுங்கள் என்கிறார் பவுல்!! ஆக பிசாசு கொண்டு வருவதோ, அல்லது மனிதன் நினைப்பதோ சித்தம் அல்ல, சிந்தனைகளே!! ஆனால் தேவன் செயல்ப்படுத்துவது சித்தம்!!

எபேசியர் 5:17 ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.

மதியற்றவர்கள் இது சிந்தனையே, சித்தம் அல்ல!! தேவன் எப்படி ஒரு பொழுது பேதுருவிற்கு கிறிஸ்து யார் என்று வெளிப்படுத்தினாரோ, அதே அடுத்த கனம் அவனின் சிந்தனையினால் அவன் பெயர் எடுக்கிறான், ஆனால் அது தான் தேவனின் சித்தமா? இல்லையே!! பேதுருவின் சிந்தனை (அதாவது கிறிஸ்து மரிக்க கூடாது) நிறைவேறியதா, அல்லது தேவனின் சித்தம் நிறைவேறியதா!!

சேவல் கூவும் முன் தான் கிறிஸ்துவை மறுதலிக்க கூடாது என்று நிச்சயமாக நினைத்திருப்பான் (சிந்தனை) பேதுரு, ஆனால் தேவனின் சித்தம் நிறைவேறியதே, அவன் மறுதலித்தான்!! மனிதனின் சிந்தனை சித்தம் அல்ல!! மனிதனுக்கு தீய சிந்தனை வருவதும் சாத்தானின் சிந்தனைகளால் (சித்தம் அல்ல) தான் வருகிறது, ஆனாலும் தேவன் அதை அனுமதிக்கிறார்!!

சாத்தான் தேவனின் சிங்காசனத்திற்கு மேல் ஏற "சிந்தித்தான்" அது சித்தம் அல்ல, நிறைவேறாது, இல்லாட்டி தேவன் என்று ஒருவர் அவசியமே இல்லையே!! பிசாசின் இந்த சிந்தனையும் நடக்கவில்லை!! :

ஏசாயா 14:14 நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

நம் மீட்பர், நம் கர்த்தர் இயேசு கிறிஸ்து சிலுவை ஏறுவதற்கு முன், கெத்சமனே தோட்டத்தில் இரத்த வியர்வை சிந்தியபடி சொன்னது என்ன, பிதாவே, கூடுமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கட்டும் (இது கிறிஸ்துவின் சிந்தனை, சித்தம் அல்ல) ஆனாலும் உமது சித்தமே நிறைவேறட்டும், என்றார்!!

இத்துனை சிந்தனைகளும் தேவன் அறியாமல் தானிருக்கிறார், அல்லது அறிய விரும்புவது இல்லை, அல்லது அறிய முடியாது போன்ற வாதங்கள் அர்த்தமற்றவை, அது தேவனின் சர்வவல்லமை என்கிற குனத்திற்கு விரோதமான சிந்தனையாகும்!! ஆதாம் பாவம் செய்கிறானா இல்லையா என்று தேவன் பார்த்து முடிவு செய்யவில்லை, அல்லது சாத்தான் தான் அப்படி ஒரு சிந்தனையை வைத்திருக்கிறான் என்று தேவனுக்கு தெரியாமல் இருந்ததா!!

இன்று கிறிஸ்தவத்தில் நடப்பதே இது தானே!! பாவம் தேவனால் இது முடியவில்லை, நாமாக இந்தியாவை கிறிஸ்துவிற்காக மாற்றுவோம் என்று ஊழியர்களாக, மிஷனரிகளாக, அப்போஸ்தலர்களாக, கோபுரங்கள் கட்டி, மேடை போட்டு, பிசாசு துரத்துகிறோம் என்று, இன்னும் பல விதங்களில் தேவனுக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்!! தேவன் இவை எல்லாவற்றையும் பார்த்து உண்மையில் நகைத்துக்கொண்டு இருப்பார்!! எல்லாருக்கும் இரட்சிப்பை தருவேன் என்பது தேவனின் சித்தம்!! சித்தம் தான் ஆனா, ஆவன்னா இக்கன்னா என்று பல அனாக்களுடன் நம் கிறிஸ்தவர்கள் தான் "சிந்தித்து"க்கொண்டு இருக்கிறார்கள்!! தேவன் தன் சித்தத்தை நிறைவேற்றியே முடிப்பார்!! அனைவரும் பார்க்கும்படியாக!! எல்லாரையும் இரட்சிப்பது அவரது சித்தம் தான் என்று இல்லை மாறாக அவரின் சித்தம்!!

ஆக சகோ அன்பு அவர்களே, சிந்தனைக்கும் சித்தத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது!! தேவனின் சித்தம் நிறைவேறும், அது ஆனா ஆவன்னா போட்டு தடுக்க முடியாது!! இந்த ஆனா ஆவன்னா எல்லாம் மனிதர்களின் சிந்தனை (சித்தம் அல்ல), நிறைவேறாது!!

II தெசலோனிக்கேயர் 1:12 நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.

வசனத்தின்படி சித்தத்தை நிறைவேற்றுவர் தேவனே, அதற்காக தான் பவுல் வேண்டிக்கொள்ளுகிறேன் என்கிறார்!! நாங்களும் அப்படியே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

 

//இனி உங்களிடம் சில தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கிறேன்; மனமிருந்தால் அவற்றிற்கு பதில் தாருங்கள்.

மத்தேயு 5:37  உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

நீங்கள் உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்வீர்களா? அல்லது உங்கள் மனம்போல்இல்லாததையும் பொல்லாததையும் சொல்வீர்களா?

மத்தேயு 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். 45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்;

இவ்வசனங்கள் கூறுகிற போதனைகளின்படி செய்வீர்களா? அல்லது குறைந்தபட்சம் அவற்றின்படி நடக்க பிரயாசப்படுவீர்களா? அல்லது அவற்றிற்கு எதிராகச் செயல்படுவீர்களா?//

அன்பு அவர்களே, உங்கள் ஆதங்கம் புரிகிறது. நான் என் மனம்போல் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லவில்லை. வசனம் சாராமல் நான் எதையும் பதியவில்லை என்பது தங்களுக்குத் தெரியும். கிறிஸ்து சொன்ன மேற்கண்ட வசனங்களை கிறிஸ்துவர்களல்லாத பலர் உண்மையிலேயே கடைபிடிக்கிறார்கள் என்பதை நானறிவேன். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்பது குறள்.

இத்தகைய அற்புதமான வேத வசனத்தை தேவனே கடைபிடிப்பதில்லை என்றுதான் இதுவரை நீங்கள் வாதாடி வருகிறீர்கள். சத்துருக்களை தேவன் சிநேகிப்பதில்லை தண்டிக்கிறார், தேவனுக்கு கீழ்ப்படியாத அவருடைய பகைஞர்களுக்கு அவர் நன்மை அல்ல தீமை செய்கிறார். அவரை சபிப்பவர்களை அவர் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறார், என்று நீங்கள்தான் வாதாடுகிறீர்கள். ஏன் தேவன் அவற்றிற்கு எதிராக செயல்படுகிறாரா? 

ஒரு மனிதன் பாவம் செய்கிறான் என்றால் அவன் சூழ்நிலை அப்படி..

பவுல் அண்ணாச்சி என்ன சொல்கிறார் பாருங்கள், சற்றே தியானியுங்கள்.

ரோமர்7:15. எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.

16. இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே.

17. ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.

18. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.

19. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.

20. அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.

21. ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.

பிரயாசம் என்னவோ நன்மை செய்யத்தான் சகோதரரே! நீங்கள் என்னமோ நாங்கள் எல்லாரும் முழுமூச்சுடன் பாவம் செய்யலாம் என்று போதிப்பதுபோல எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அல்ல, யார் என்ன 'பிரயாசப்' பட்டாலும் நடப்பதுதான் நடக்கும்.

மர்ஃபியின் விதி என்று ஒன்று உண்டு. அதன் சாராம்சம் "ஒரு நிகழ்வு நடப்பதற்குரிய சாத்தியக்கூறு இருக்கும்பட்சம் நிச்சயம் அது ஒரு நாள் நடந்தே தீரும்" என்பது. எத்தனை உண்மை. பாவம் செய்யும் சாத்தியக்கூறை ஏற்படுத்திவிட்டு அது நடக்கவே கூடாது என்று எதிர்பார்ப்பது அறிவுடைமை அல்ல. அது முதல் மனிதனாலேயே நடந்துவிட்டது. அப்ப தேவன் உருவாக்கிய மனிதன் டிசைன் ஃபெயிலியரா? அல்ல, மனிதனை உருவாக்க, இப்போது நடப்பது இன்னொரு ப்ராஸஸ். ஃபைனல் ப்ராடக்ட், பெர்ஃபெக்டாக ராஜ்ஜியத்தில்தான் வெளிவரும்.... புரிந்து கொள்ளுங்கள்...

நான் என் சத்துருக்களை எந்த சிநேகிக்க கண்டிப்பாக பிரயாசப்படுகிறேன். அவர்களை ஆசீர்வதிக்கிறேன். உண்மையில் இன்றைய தேதிவரை எனக்கு சத்துருக்கள் யாருமில்லை. ஏன் என்னை ஏளனம் செய்யும் எல்லா சகோதரர்களுடனும், நான் இப்போது எதிர்க்கும் எல்லா பாபிலோனிய துருபதேசக்காரர்களுடனும் வரும் ராஜ்ஜியத்தில் நித்திய காலத்துக்கு சந்தோஷமாக இருக்கப்போவதை எண்ணி பூரிப்படைகிறேன். மனுக்குலத்தின் ஒரு நபரைக்கூட அழிவுக்கு நியமிக்கப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி ஒரு நபராவது அழியும் பட்சம் ஜீவ புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்று சொல்லவும் நான் தயார், உளப்பூர்வமாக‌...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//அன்பு அவர்களே, உங்கள் ஆதங்கம் புரிகிறது.//

எந்த ஆதங்கத்திலும் உங்களிடம் கேள்வி கேட்கவில்லை சகோதரரே!

உங்கள் பதிவிலிருந்து, மத்தேயு 5:37,44,45 வசனங்கள் கூறுகிறபடியே நீங்கள் நடக்கிறீர்கள் அல்லது நடக்கப் பிரயாசப்படுகிறீர்கள் என்றும் நல்ல செயல்களையே செய்கிறீர்கள் அல்லது செய்ய பிரயாசப்படுகிறீர்கள் என்றும் தீய செயல்களை செய்வதில்லை என்றும் அறிகிறேன். நல்லது.

நீங்கள் இவ்வாறு நடக்கக் காரணமென்ன? யாராவது சொல்லி இப்படி செய்கிறீர்களா, அல்லது இயல்பாகவே இப்படி செய்கிறீர்களா, அல்லது நீங்களாகவே உங்களுக்குள் யோசித்து இப்படிச் செய்ய தீர்மானித்தீர்களா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//சகோ அன்பு அவர்களே,

நீங்கள் சிந்தனைக்கும் சித்ததிற்கும் நடுவே குழம்பியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!! மனுஷன் சிந்திப்பதை நீங்கள் சித்தம் என்று என்னுகிறீகள்!! அப்படி மனிதர்களின் அல்லது சாத்தானின் "சித்தம்" நடந்தது என்றால் தேவன் என்று ஒருவர் எதற்கு, அல்லது தேவனை எப்படி சர்வவல்லமையுள்ளவர் என்று சொல்லுவது!!

சிந்தனை என்கிற உணர்வை நீங்கள் சித்தம் என்று நினைக்கிறீர்கள்!!//

நான் தான் குழம்பியிருக்கிறேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள். சரி, நீங்களாவது சொல்லுங்கள். மனிதனின் சித்தம் என்பதற்கு என்ன Definition? சாத்தானின் சித்தம் என்பதற்கு என்ன Definition? ஓர் உதாரணத்தோடு விளக்குங்கள்.




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//சாத்தான் தேவனின் சிங்காசனத்திற்கு மேல் ஏற "சிந்தித்தான்" அது சித்தம் அல்ல, நிறைவேறாது,//

சாத்தான் ஆதாமை வஞ்சிக்க “சிந்தித்தான்”, அது நிறைவேறியது. அது சித்தமா?

1 நாளா. 21:1  1 சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.

தாவீதை சாத்தான் ஏவிவிட “சிந்தித்தான்”, அது நிறைவேறியது. அது சித்தமா?




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

கோவை பெரேயன்ஸ்!! திரியில் பெரியன்ஸ்:

//இப்பொழுது கிறிஸ்துவின் பாடுகளில் பங்குள்ளவர்கள், தேவனின் பார்வையில் அவர் சித்தத்தின்படி நடப்பவர்கள் முதலாம் தர உயிர்த்தெழுதலையும் (இரட்சிப்பு), மீதமானவர்கள் அனைவரும் இதே பூமியில் உயிர்த்தெழுவார்கள் (இரட்சிக்கப்படுவார்கள்)!!//

இக்கருத்து Dec 2010-ல் பதியப்பட்டது. இதே கருத்தில்தான் தற்போதும் இருக்கிறீர்களா? அல்லது கருத்து மாறியுள்ளதா?

இதே கருத்தில் இருந்தால், பின்வரும் எனது கேள்விக்கு பதில் தாருங்கள்.

இக்கூற்றில் முதல் பிரிவினர் தேவசித்தத்தின்படி நடப்பவர்கள் என்கிறீர்கள். அவ்வாறெனில் மீதமுள்ள 2-வது பிரிவினர் தேவசித்தத்தின்படி நடக்காதவர்களா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

anbu57 wrote:

சோல்சொல்யூஷன்:

//அன்பு அவர்களே, உங்கள் ஆதங்கம் புரிகிறது.//

எந்த ஆதங்கத்திலும் உங்களிடம் கேள்வி கேட்கவில்லை சகோதரரே!

உங்கள் பதிவிலிருந்து, மத்தேயு 5:37,44,45 வசனங்கள் கூறுகிறபடியே நீங்கள் நடக்கிறீர்கள் அல்லது நடக்கப் பிரயாசப்படுகிறீர்கள் என்றும் நல்ல செயல்களையே செய்கிறீர்கள் அல்லது செய்ய பிரயாசப்படுகிறீர்கள் என்றும் தீய செயல்களை செய்வதில்லை என்றும் அறிகிறேன். நல்லது.

நீங்கள் இவ்வாறு நடக்கக் காரணமென்ன? யாராவது சொல்லி இப்படி செய்கிறீர்களா, அல்லது இயல்பாகவே இப்படி செய்கிறீர்களா, அல்லது நீங்களாகவே உங்களுக்குள் யோசித்து இப்படிச் செய்ய தீர்மானித்தீர்களா?


 இயல்பாகவே அந்த சுபாவத்தில்தான் இருக்கிறேன். வளர்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றெண்ணுகிறேன். தேவன் எனக்கு இப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தைத் தந்திருக்கிறார் என்று நம்புகிறேன்.

எபேசியர் 2:10 ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

பிலிப்பியர் 1:5 உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,

II தெசலோனிக்கேயர் 2:17 உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.

தீத்து 2:14 அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

எபிரெயர் 13:21 இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

II கொரிந்தியர் 5:5 இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே.

யாக்கோபு 1:17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

 

இதன்றி நான் என் சுயசித்தத்தினால்தான் 'நற்கிரியை' செய்தேன் என்று சொன்னால் மேற்கண்ட வசனங்களை அவமாக்குவதாகும்...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//இயல்பாகவே அந்த சுபாவத்தில்தான் இருக்கிறேன். வளர்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றெண்ணுகிறேன். தேவன் எனக்கு இப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தைத் தந்திருக்கிறார் என்று நம்புகிறேன்.//

அதாவது இயல்பாகவே நற்கிரியை செய்கிறவராய் இருக்கிறீர்கள். ஆக, கிரியைக்குத்தக்க பலன் என்பதை நீங்கள் நம்பிகிறீர்களோ இல்லையோ, உங்களைப் பொறுத்தவரை கிரியையுள்ளவராகத்தான் இருக்கிறீர்கள். ஆக, வெளி. 20:12-ன்படியே அவரவர் கிரியைகளுக்குத் தக்க பலன் கொடுக்கப்படுகையில், நீங்கள் தப்பிவிடுவீர்கள்; உங்கள் போதனையைக் கேட்டு, கிரியை தேவையில்லை என முடிவெடுத்து, கிரியையில்லாமல் இருப்போர்தான் மாட்டிக் கொள்வார்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//அதாவது இயல்பாகவே நற்கிரியை செய்கிறவராய் இருக்கிறீர்கள். ஆக, கிரியைக்குத்தக்க பலன் என்பதை நீங்கள் நம்பிகிறீர்களோ இல்லையோ, உங்களைப் பொறுத்தவரை கிரியையுள்ளவராகத்தான் இருக்கிறீர்கள். ஆக, வெளி. 20:12-ன்படியே அவரவர் கிரியைகளுக்குத் தக்க பலன் கொடுக்கப்படுகையில், நீங்கள் தப்பிவிடுவீர்கள்; உங்கள் போதனையைக் கேட்டு, கிரியை தேவையில்லை என முடிவெடுத்து, கிரியையில்லாமல் இருப்போர்தான் மாட்டிக் கொள்வார்கள்.//

புரிந்துகொள்ளாமல் எதையும் எழுதக்கூடாது. கிரியை செய்யக்கூடாது என்று ஒருபோதும் பதித்தது கிடையாது. அறிவை உபயோகித்து பதில் தரவும். கிரியை மாத்திரம் ஒரு போதும் போதாது. கிரியையினால் மனிதன் இரட்சிக்கப்படக்கூடுமானால் கிறிஸ்து வந்தது வீண். பாவமே செய்யாமல் ஒருவன் கிரியை செய்யவே முடியாது. செய்த பாவத்தை கிரியையினால் ஒருபோதும் சரி செய்ய இயலாது. கொலைகாரனை அன்னதானம் செய்யச்சொல்லி விடுவிப்பதுபோல இருக்கிறது உங்களது சிறுபிள்ளைத்தனமான வாதம். இயல்பாக ஒருவர் நற்கிரியையோ துர்க்கிரியையோ செய்வது முழுக்க முழுக்க தேவனைச் சார்ந்தது. யூதாஸ் இயல்பாக காட்டிக்கொடுக்கவில்லை. சாத்தான் தேவைப்பட்டான். தீமைக்கு தேவனே காரணம் என்று ஏராளம் வசனங்கள் பதித்தாகிவிட்டது. மனிதன் கையில் ஒன்றுமில்லை. எனவேதான் கிருபை

அவசியமாகிறது. கிரியை ஒருபோதும் ஒருவனை பரிசுத்தமாக்காது.

நன்மை செய்யக் கூடாமல் விரும்பாத தீமையைச் செய்கிறேன் என்று பவுலே கூறும்போது நானும், நீங்களும் எம்மாத்திரம்....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

முன்குறிக்கப்படுபவர்கள் குறித்த வசனங்களே சகலமும் தேவ சித்தம் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. உலகில் நடக்கும் எல்லா சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இன்று யாரோ ஒருவருக்கு இணய தளம் மூலம் வசனங்கள் போய்ச் சேருவது தேவசித்தம் எனும் பட்சம், கணிப்பொறியும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்களும் ஏதோ தற்செயலாக உருவாகவில்லை. 

பிரசங்கி 3:11 அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.

ஆனால் ஒரு சிலர் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியைகளை கண்டுபிடித்துவிட்டார்கள்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சங்கீதம் 113:7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். 8. அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார். 9. மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.

தன் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள், தங்களின் கிரியைகளின் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இந்த வசனத்தையும் நிச்சயமாக கவணிக்க வேண்டும்!!

நாம் உயர்த்தப்படுவதும், நாம் சந்தோஷமாக இருப்பதும், நாம் நிம்மதியாக இருப்பதும் அனைத்தையும் தேவனே செய்கிறார்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard