மாற்றுத்தளத்தில் ஏதோ நாம் இயேசுகிறிஸ்துவை தூஷிப்பதுபோலவுக் இவர்கள் அவரை நாம்மிடமிருந்து காப்பாற்றுவது போலவும் ஒரு மாயையை உருவாக்கிவருகிறார்கள். கிறிஸ்துவை தூஷிக்கிற ஒரு வார்த்தைகூட இத்தளத்தில் காணமுடியாது.
இவர்கள்தான் பிதாவுக்கு இணைவைத்து அவரது மகிமைக்குக் களங்கம் கற்பிக்கிறார்கள். உண்மையான தேவதூஷணம். பிதாவின் ஒரே பேறான குமாரனாகவே வேதம் நமக்குக் கற்பிக்கிறவண்ணமாகவே நாம் கிறிஸ்துவை, கிறிஸ்துவாக, மேசியாவாக, அனுப்பப்பட்டவராக ஏற்றுக்கொள்கிறோம்.
அவர் நமக்கு, சகோதரர், மணவாளன், சிநேகிதன், நமக்காக பிதாவானவரிடம் பரிந்து பேசுகிற நித்திய பிரதான ஆசாரியர், சபைக்குத் தலையாவர் என்றாலும் பிதா இவருக்குத்தலையானதான் அவருக்குக் கீழ்ப்படிந்தவர்... பிதாவால் அபிஷேகிக்கப்பட்டவர். பிதாவின் சித்தம்மாத்திரம் செய்பவர். இந்த வகையில் நாம் இயேசுகிறிஸ்துவை தேவகுமாரனாக நம்முடைய ரட்சகராக அவரை நேசிச்கிறோம். அவரில்லாமல் இரட்சிப்பு இல்லை. அவர்மூலமாக பிதாவாகிய தேவனை ஆராதிக்கிறோம்.