அத்துனை எதிர்ப்பிற்கும் மத்தியில் தான் எடுத்த நல்ல முடிவில் நிலைத்திருந்த கொல்வின் அவர்களை கோவை பெரேயன்ஸ் என்கிற சிறிய விசுவாச குழுவின் சார்பில் பாராட்டுகிறேன்!!
மாம்சத்தில் எதிரிகள் இல்லை, அது எந்த விதத்திலும் பிரயோஜனமானதாகவும் இருக்க முடியாது!! எங்களின் போராட்டம் மனிதர்களுடன் இல்லை, மாறாக கள்ள போதகம், வஞ்சகங்கள், நவீன சுவிசேஷங்களுக்கு விரோதமானதே!! "உமது வசனமே சத்தியம்" என்று பிதாவின் வார்த்தைகளையே சத்தியம் என்று சொன்ன கிறிஸ்து இயேசு தந்த வார்த்தைகளை தான் நாங்களும் பின்பற்றுகிறோம் என்பதை கொல்வினுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்!!
கிறிஸ்துவின் தேய்வீகத்தன்மையை மறுதலிக்கவில்லை!! நீங்கள் கிறிஸ்துவை எந்த அளவிற்கு நேசிக்கிறீர்களோ அதைவிட ஒரு படி அதிகமாகவே நாங்கள் நேசிக்கிறோம், ஏனென்றால் அவரால் எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படுவார்கள் என்கிற அன்பு எங்கள் உள்ளத்தில் இருக்கிறது!! அந்த அன்பினால் நீங்கள் கிறிஸ்துவை தொழுதுக்கொள்கிறீர்கள், ஆனால் நாங்களோ கிறிஸ்துவின் வழியாக பிதாவை தொழுதுக்கொள்கிறோம்!! கிறிஸ்துவின் எந்த ஒரு வல்லமையையும் நாங்கள் மறுதலிப்பதில்லை!! கிறிஸ்துவிற்கு நாங்கள் எதிரிகள் என்று சொல்லுபவர்கள் ஒரு விஷயத்தை ஏன் கவனிக்க மறக்கிறார்களோ, அதாவது, கிறிஸ்துவினால் எல்லா மனுஷர்களுக்கு இரட்சிப்பு உண்டு என்று போதிக்கும் நாங்கள் எப்படி கிறிஸ்துவிற்கு எதிரியாக இருக்க முடியும்!! உங்களை விட ஒரு படி அதிகமாகவே நாங்கள் கிறிஸ்துவை சொல்லுகிறோம்!!
நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிற அலவிற்கு நாங்கள் ஒரு போதும் உங்களை வெறுத்தது கிடையாது!! மன்னிப்பு கேட்கவோ, மன்னிப்பு அளிக்கவோ, இந்த பூமியில் ஒருவரும் நீதிமான் இல்லை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்!! நாம் என்ன செய்கிறோம், நம் இருதயத்தின் நினைவுகள் முதல் எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார்!!
தங்களின் மன்னிப்பு கோருதலினால் நீங்கள் எங்களுக்கு நல்ல ஒரு நண்பராகியிருக்கிறீர்கள்!! நீங்கள் மன்னிப்பு கோரியதை எந்த விதத்திலும் சிறுமையாகவும் தாழ்மையாகவும் நாங்கள் பார்க்கவில்லை, அதை எந்த விதத்திலும் கொச்சைப்படுத்தி எழுதுவதும் கிடையாது!! மேலும் நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நாங்கள் ஒரு போதும் கேட்டதும் இல்லை, நினைத்ததும் இல்லை!!
//நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிற அலவிற்கு நாங்கள் ஒரு போதும் உங்களை வெறுத்தது கிடையாது!! மன்னிப்பு கேட்கவோ, மன்னிப்பு அளிக்கவோ, இந்த பூமியில் ஒருவரும் நீதிமான் இல்லை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்!!//
இப்பூமியில் யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்கவோ, யாரும் யாரையும் மன்னிக்கவோ முடியாதெனில் பின்வரும் வசனங்களை இயேசு ஏன் கூறினார்?
மத்தேயு 6:14 14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
மத்தேயு 18:35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.
பிறர் நமக்கு விரோதமாக செய்த தவறுகளை நாம் மன்னிக்க முடியாதெனில் இயேசுவின் “பரமண்டல” ஜெபத்தின் பின்வரும் வரிகள் அர்த்தமற்றமாகிவிடுமே!
மத்தேயு 6:12 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
எனவே நாம் பிறருக்கு விரோதமாக தவறு செய்தால், தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்கவும் வேண்டும்; நமக்கு விரோதமாக தவறு செய்தவர் நம்மிடம் மன்னிப்பு கேட்டாலும் கேளாவிட்டாலும் அவரது தவறை நாம் மன்னிக்கவும் வேண்டும்.
நீண்ட நாட்களாக நம் தளங்களில் காணப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களுக்கு ஒரு முடிவு உண்டானதை வரவேற்கிறேன். தாமாக மன்னிப்பு கேட்க முன்வந்தவர்களை வாழ்த்தி பாராட்டுகிறேன். தொடர்ந்து தள நண்பர்களிடையை சமாதானமும் சந்தோஷமும் நிலவவும், ஆரோக்கியமான விவாதம் நடைபெறவும் வாழ்த்தி ஜெபிக்கிறேன்.