kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாயங்காலமும் விடியற்காலமும்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
சாயங்காலமும் விடியற்காலமும்!!


ஆதியாகமம் 1:5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. 6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். 7. தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. 8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று. 9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 11. அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். 13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று. 14. பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். 15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.

பகலுக்கு இரவுக்கும் வித்தியசம் ஏற்படுத்தி காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காக சூரியனையும் சந்திரனையும் படைத்தது நாலாம் நாளில் என்கிறது வேதம்!!

அப்படி என்றால் 5ம் வசனம் தொடங்கி சாயங்கால‌மும் விடியற்காலமுமாகி முதலாம் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என்பதில் நாள் எது!! அது எப்படி சாயங்காலமும் விடியற்காலத்தையும் சேர்த்து நாள் என்று வேதத்திலுள்ளது!! மேலும் நாலாம் நாளில் தான் பகல் என்றும் இரவு என்றும் வித்தியாசப்படுத்த சூரியனும் சந்திரனும் படைக்கப்பட்டது, அப்படி என்றால் இவைகள் படைக்கப்படும் முன் எப்படி சாயங்காலம் என்றும் விடியற்காலமும் என்று காலங்களை குறித்த வித்தியாசத்தை வேதம் சொல்லுகிறது!!

அப்படி என்றால் சாயங்காலம் என்றும் விடியற்காலமும் என்பது உண்மையில் ஒரு சாயங்காலமும் விடியற்காலமும் தானா, அல்லது இவைகளுக்கு வேறு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா!!

இது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தால் தான் இரட்சிப்பு என்பது இல்லை, இவைகளுக்கு பதில் கிடைக்கும் போது, நாம் தேவனின் மகத்துவங்களையும் அவரின் அநாதி திட்டங்களையும் நினைத்து, அவரின் ஞானத்தையும் எண்ணி அவரை இன்னும் அதிக அதிக மகிமைப்படுத்துவோமே!!

பல வேத பண்டிதர்கள் சொல்லுவது போல், இந்த சாயங்காலமும் விடியற்காலமும் சேர்ந்து ஒரு நாளாயிற்று என்பது உண்மையிலேயே 24 மணி நேரம் கொண்ட ஒரு நாள் தானா, அதாவது ஒவ்வொரு படைப்பும் 24மணி நேரத்தில் படைக்கப்பட்டு விட்டதா!!?? விஞானத்தின்படி பார்த்தோமென்றால் இந்த பூமி பல கோடி ஆண்டுகளாக இருப்பதாக சொல்லுகிறார்கள்!! விஞானிகளுக்கு அறிவை தந்தவர் தேவனே!! இருவரின் கருத்துக்களுக்கும் இத்துனை வித்தியாசம் இருக்குமோ!!

எனக்கு தெரிந்த பதிலை பதிவு செய்கிறேன், ஆனால் அதற்கு முன், தள நண்பர்கள் இந்த தளத்திலோ, அல்லது இங்கு வந்து வாசித்து போகும் பிற நண்பர்கள் தங்களின் தளத்திலோ பதிவு செய்தால், இந்த கேள்வியை தொடரலாம்!!

சங்கீதம் 30:5 அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

இந்த வசனத்தில் வரும் சாயங்காலமும் விடியற்காலமும் நீடிய வாழ்விற்கும் ஏதாகிலும் தொடர்பு இருக்கிறதா!!??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சங்கீதம் 30:5 அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

சாயங்காலம் அழுகையும், விடியற்காலத்திலே களிப்பு!!

கோபம் ஒரு நிமிஷம், தய்வோ நீடிய வாழ்வு!!

மனிதனின் பாவத்தின் சம்பளமான மரணமே தேவனின் கோபத்தின் அந்த ஒரு நிமிடம்!!
சாயங்காலம் என்பது அந்த கோபத்தின் வெளிப்பாடு!! அதாவது சாயங்காலம் என்பது ஒரு முடிவை குறிக்கும் சொல்!! மனிதகுலம் முழுவதும் இப்பொழுது அந்த சாயங்காலத்தில் நடந்துக்கொண்டு இருக்கிறது!! மனிதனின் பாவத்தின் சம்பளமான மரணம்!! ஒரு முடிவு!! முழு மனிதக்குலமும் இந்த மரணத்தில் நடந்தே ஆக வேண்டும்!! ஒரு காலத்தின், ஒரு யுகத்தின் ஒரு சம்பவத்தின் முடிவே அந்த சாயங்காலம்!!

கிறிஸ்துவின் பலியினால் உண்டான நித்திய ஜீவனான நீடிய வாழ்வே அந்த விடியற்காலம்!!

மல்கியா 4:2. ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.

விடியற்காலத்தில் நீதியின் சூரியனான கிறிஸ்துவினால் ஆரோக்கியம் (ஜீவன்) உண்டாகும்!! களிப்புண்டாகும்!!

விடியற்காலம் என்பது மகிழ்ச்சி, ஒரு புதிய யுகத்தின், ஒரு புதிய காலத்தின் ஆரம்பம்!!

சாயங்காலம் ஒரு யுகத்தின் முடிவு, மரிக்கிற ஒவ்வொரு மனிதனும் சாயங்காலத்தில் இருக்கிறான்!! ஆனால் நீதியின் சூரியனின் பிரசன்னம் ஜீவன் என்கிற ஆரோக்கியத்தை கொண்டு வரும்!! இது தானே நற்செய்தி!!

அப்படியே ஆதியாகமத்தில் வரும் சாயங்காலமும் விடியற்காலையும் முதல் நாள் ஆயிற்று என்கிறது வேதம்!!

தொடரும்.......



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தேவனின் படைப்பின் ஒரு காலக்கட்டத்தின் முடிவையே சாயங்காலம் என்கிறது வேதம், அப்படியே மறு படைப்பின் துவக்கத்தையே விடியற்காலம் என்கிறது வேதம்!!

சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதல் நாள் ஆயிற்று!! இதை எப்படி ஒரு நாள் என்று எடுக்க முடியும்!! ஏனென்றால் நாள் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டிய சூரியனையும், சந்திரனையும் 4ம் நாளில் தான் தேவன் படைத்தார் என்கிறது வேதம், அப்படி இருக்க வெளிச்சமும் இருளும், பிரிக்கப்பட்டது தொடங்கி சூரியனும் சந்திரனும் படைக்கப்படும் வரை "நாள்" என்பதன் கணக்கு எப்படி வந்தது!! மேலும் சாயங்காலமும் விடியற்காலமும் என்று எடுத்துக்கொண்டால் அதிகப்பட்சமாக 12 மணி நேரமே!! இது எப்படி ஒரு நாள் என்றாகும்!!

ஆகவே சாயங்காலம் என்பதும் விடியற்காலம் என்பது நாள் கணக்கை அல்ல, கால கட்டங்களின் முடிவும் துவக்க‌த்தையும் குறிக்கும் வார்த்தையாகும்!!

அதை தான் சங்கீதக்காரன் சொல்லுகிறான், சாயங்காலத்தில் அழுகை!! தினம் தினம் சாயங்கால வேளை மட்டுமா ஒருவன் அழுதுக்கொண்டு இருப்பான்!! இல்லையே!! அப்படி என்றால் சாயங்காலம் என்றா எழுத்தின்படி சாயங்காலமாக இல்லாமல், சாயங்காலம் என்பது ஒரு யுகத்தின், ஒரு காலக்கட்டதின் முடிவை குறிக்கும் வார்த்தை!!

இனி அந்த யுகங்கள் எத்துனை வருடங்கள் கொண்டது என்பது ஆறாய்ச்சிக்கு உட்பட்டது!!

தொடரும்.............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard