1 இராஜாக்கள் 17:1. கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
யாக்கோபு 5:17 எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
இப்படி தெளிவாக தேவன் சொல்ல சொல்லுவார், அது அப்படியே நடக்கும்!!
இயேசு கிறிஸ்து சொன்னபோது கூட,
மத்தேயு 26:34 இயேசு அவனை நோக்கி: இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
அப்படியே ஆயிற்று!! இயேசு கிறிஸ்து சொன்னப்படியே அந்த இராத்திரியிலேயே, பேதுரு மறுதலிக்கும் முன், சேவல் கூவியது!!
ஆனால் ஆல்வின் தாமஸ் என்கிற இந்த நவீன தீர்க்கதரிசி சொல்லுவது,
யார் ஆட்சிக்கு வந்தாலும், அது ஆண்டவரின் ஆட்சியாக இருக்குமாம்!! (யெப்பா, எத்துனை பெரிய தீர்க்கதரிசனம்)
இந்த முறை பல இடங்களில் புதிய முதல் அமைச்சர்கள் வருவார்களாம் (இதுவும் தேவன் சொன்னதாம்)
இதை பல ஊடகங்கள் சொன்னது தானே, அப்படி என்றால் ஊடகங்களுக்கும் சரி, ஆல்வின் தாமஸுக்கும் சரி, சொன்னது ஒரே ஆண்டவர் தானே!!
என்னய்யா, விளையாடுறாங்களா!!
ஆல்வின் தாமிஸின் இந்த குறி சொல்லுதல் ஒரு வேளை அவரை பெரிய ஆளாக காண்பிக்கலாம், ஆனால் இது தேவன் சொன்ன வார்த்தைகள் அல்ல என்பது மாத்திரம் நிச்சயம்!!
ஒரு வேளை இவர் சொல்லியதில், கருணாநிதி ஆட்சி வராது, ஜெயலலிதா தான் முதன் மந்திரியாக வருவார் என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லையே என்று ஆச்சரியப்பட்டிருக்கலாம், ஆனால் இவர் என்ன சொல்லியிருக்கிறார், அதை எப்படி நாசுக்காக எந்த விதத்திலும் யாரையும் தாக்கி பேசாமல் முழு மனித சுதாரிப்போடு பேசுவது தெரியும்!!
ஆல்வின் தாமஸ் போன்ற இன்னும் பலர் எழும்பி இது போன்ற பேசி இதை தீர்க்கதரிசனம் என்று குழப்புவார்கள்!!
எச்சரிப்பின் செய்தி தான் இது!! வஞ்சிப்பவன் அநேகரை வஞ்சித்தே தீருவான்!! வசனம் சொல்லுதே!! அந்த செய்தியின் போது மக்களின் ஆராவாரத்தை கவணியுங்களேன்!! வசனம் எப்படி நிறைவேறுது என்று ஆச்சரியமாக இருக்கும்!!
நன்றி டாணி அவர்களே, உங்களின் பங்களிப்புக்கு நன்றி!!