kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "யார் மேசியாவின் எதிரிகள்?"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
"யார் மேசியாவின் எதிரிகள்?"


"யார் மேசியாவின் எதிரிகள்"


In the Hebrew Bible messiahs are priests and kings, who were traditionally anointed with holy anointing oil as described in Exodus 30:22-25. In later Jewish messianic tradition and eschatology, messiah refers to a leader anointed by God, and in some cases, a future King of Israel, physically descended from the Davidic line, who will rule the united tribes of Israel[2] and herald the Messianic Age[3] of global peace. In Judaism, the Messiah is not considered to be God or a Son of God. Wikipedia.

மேசியா என்ற சொல்லுக்கு அர்த்தம்கூட தெரியாமலேயே நம்மை 'மேசியாவின் எதிரிகள்' என்றழைக்கும் முட்டாள்களுக்கு.

முதலில் மேசியா, கிறிஸ்து போன்ற பதங்களுக்கு உண்மையான அர்த்தம் என்ன என்று விளங்கிக்கொள்ளுங்கள்.

யூதர்களுக்கு கடவுளுடைய குமாரன் என்று கூட அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீங்கள் என்னவென்றால் அவரையே பிதாவாகிய தேவனாக உயர்த்துகிறீர்கள்.
அவருடைய தெய்வத்தன்மையை நாங்கள் மறுக்கவே இல்லை. தேவனுடைய குமாரன் எப்படி தெய்வத்தனமை இல்லாமல் இருக்க முடியும்? அவர் ஜீவ்னுள்ள தேவனுடைய குமாரன் என்று அப்போஸ்தலர்கள் ஏற்றுக்கொண்ட விதமாகத்தான் நாங்களும் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

மேசியாவான கிறிஸ்து உலகத்துலுள்ள அனைவருக்கும் மேசியா, அவராலே உலகிலுள்ள அனைத்து மானிடரும் நித்திய ஜீவனை சுதந்தரிப்பார்கள் என்று வேதம் கூறும் மாபெரும் சத்தியத்தைத்தான் நாம் கூறுகிறோம். ஏதோ மேசியாவை ஏற்றுக்கொண்டு பரலோகம் போகப்போகும் ஒருசிலரைத்தவிர மற்ற எல்லாரும் நரகம் என்ற நித்திய வாதைக்கு அனுப்பப்படுவர்கள் என்று மேசியாவின் இயலாததன்மையை நற்செய்தி என்று சொல்லவில்லை.
இதிலிருந்தே தெரிய்ம் யார் மேசியாவின் எதிரிகள் என்று....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சில்சாம்:
//எனது மதிப்பிற்குரிய (மேசியாவின்) எதிரிக்கு, நீங்கள் "கிறிஸ்துவினால் அனைவருக்கும் மீட்பு" என்று சொல்லுவதினால் உங்களை (மேசியாவின்) எதிரியாக பாவிக்கவில்லை; அவரைத் தொழத்தக்கவராக ஏற்க மறுக்கும் ஒரே காரணத்தினாலேயே (மேசியாவின்) எதிரி என்கிறோம்; //

கிறிஸ்துவினால் தொழுதுக்கொள்கிறோம் என்று சொல்லி விட்டு அவரால் அனைவரையும் மீட்க முடியாது என்கிற ஒரு நம்பிக்கையை வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்!! யார் கிறிஸ்துவின் எதிரி!! கிறிஸ்துவினால் செய்ய முடியாது என்று சொல்லுபவர்களா, அல்லது நாங்களா!! என்னை தொழுதுக்கொள்ளுங்கள் என்று அவரிடமிருந்து எந்த கட்டளை இல்லை!! மாறாக அவர் பிதாவிற்கு கீழ்ப்பட்டிருக்கிறார் என்கிறது வேதம்!!

சிருஷ்ட்டிகர் என்பது யெகோவா தேவனையே பொருந்தும்!! அவர் சொன்னதை, கட்டளையிட்டதை கிறிஸ்து இயேசு செய்து முடிக்கிறார்!! தேவனால், கிறிஸ்துவின் மூலம் எல்லாம் நடந்தது!! ஒன்றும்

யோபுவிடம் கேட்கபட்ட கேள்விகளே உங்கள் கூட்டத்திற்கும் பொருந்தும்:

யோபு 38:    1. அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக:  2. அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?  3. இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.  4. நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.  5. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.  6. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? 7. அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. 8. கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?  9. மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், 10. நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: 11. இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?

ஒரு கட்டிடத்தை கட்டுபவன் கொத்தனார் தொடங்கி மற்ற வேளையாட்கள் தான், ஆனால் திட்டம் போட்டவர், எது எங்கே எப்படி செய்ய வேண்டும் என்பது எல்லாம் பொறியாளரினால் வருவது தான்!!

அப்படியே தேவன் சிருஷ்டிப்பின் எல்லா திட்டத்திற்கு அதிபதியாக இருக்கிறார், அதை நிறைவேற்றியவர், அவரது குமாரனான கிறிஸ்து!! 1 கொரிந்தியர் 8ல் உள்ள வசனத்தை இதற்காக தான் மீண்டும் மீண்டும் காட்டி எழுதினோம், ஆனால் உங்கள் கூட்டத்தார் எத்துனை தடவை அதை படித்தாலும் உணர்வடையாமல் இருப்பது வேதனை தான்!!

1 கொரிந்தியர் 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது (பிதாவாகிய யெகோவா தேவனை குறிக்கும் பதம்)
அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது (கிறிஸ்து இயேசுவை குறிக்கும் பதம்)

ஏசாயா 43:12 நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே, தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 45:22 பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.

நானே அறிவித்து, இரட்சித்து, என்னால் இரட்சிப்பு என்பது எல்லாம் யெகோவா தேவனால் உண்டானது, ஆனால் அதை நிறைவேற்றியவர் மாம்சத்தில் வந்த கிறிஸ்து இயேசு!!

ஏசாயா 48:3 பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.

கிறிஸ்து சிருஷ்ட்டிக்கப்பட்டர், ஜெனிப்பிக்கப்பட்டார் என்றும் எங்கள் சுய கருத்து கிடையாது, அது வேதம் சொல்லுவதே, அதற்கும் பல முறை வசனங்களை கொடுத்தாகிவிட்டது, ஆனால் உங்கள் கூட்டத்தின் பாரம்பரிய விசுவாசம் அதை ஏற்க மறுப்பதால், சத்தியம் பொய்யாகி விடாது!! யெகோவா தேவன் ஆதிமுதல் எல்லாவற்றையும் அறிவிக்கிறார், வெளிப்படுத்துகிறார், கட்டளை தருகிறார், அதை செய்து முடிப்பவர் கிறிஸ்து இயேசுவே!!

இரட்சிப்பின் திட்டத்தை கொடுத்தவர் தேவனே, அதை நிறைவேற்றியவர் கிறிஸ்து இயேசுவே!! இரட்சிப்பை குறித்து ஆதியாகமம் 3ம் அதிகாரத்தில் ஆதாமிடமே தெரிவிக்கப்பட்டாகிவிட்டது, ஆனால் அதை நிறைவேற்றியவர் கிறிஸ்து இயேசுவே!!

//அவ்வாறு பிதாவினால் இந்த உலகுக்கு இரட்சகராக அனுப்பப்பட்டவரை ஒரு குறிப்பிட்ட உபதேசத்தினால் வஞ்சிக்கப்பட்ட நிலையில் வணங்க மறுக்கும் நீங்கள் கலகக்காரர்களே, (மேசியாவின்) எதிரிகளே..!  மேலும் உங்களில் யாரும் எனக்கு எதிரிகள் இல்லை என்பதை வலியுறுத்தவே இன்று வரையிலும் (மேசியாவின்) என்ற சொல்லை அடைப்புக்குறிக்குள் போட்டு வருகிறேன்.//

ஒன்று இல்லாமல் இருக்கும் போது தான் அதை அடைப்புக்குறிக்குள் போடுவார்கள், ஒருவன் அரைகுறையாக பட்டப்படிப்பை படித்திருந்தால் (B.Sc) என்று எழுதுவது உண்டு!! அப்படியே உங்களுக்கு மேசியா என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை, அல்லது நீங்கள் மேசியா யார் என்றும் அவரால் என்ன செய்ய முடியும் என்று தெரியாதவர்களாக இருக்கிறதினால் தான் மேசியாவை அடைப்புக்குறிக்குள் போட்டு அடைத்து வைத்திருக்கிறீர்கள்!! மேசியா என்று சொல்லி விட்டு அவராலே எல்லாரையும் மீட்க முடியாது என்று வசனம் இல்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லி, உங்கள் கூட்டத்தாருக்கு மேசியா யார் என்று தெரியவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை!! பிதாவினால் அனுப்பட்டவர் உலக இரட்சகர் என்று சொல்லி விட்டு அவரால் உலகத்தை இரட்சிக்க முடியாது என்று சொல்லுவது, பிதாவையும் அவர் அனுப்பிய கிறிஸ்துவையும் தூஷித்து உங்கள் காலின் கீழ் போட்டு மிதிப்பதாகும்!! அதை நேர்த்தியாக செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்!!

யாரை தொழுதுக்கொள்ள வேண்டும் என்று கிறிஸ்து இயேசு எங்களுக்கு சொல்லியதை நாங்கள் சரியான முறையில் பின்பற்றுகிறோம்!! கிறிஸ்துவை தேவனின் குமாரன் என்றும் உலகத்தின் இரட்சகர் என்றும் சொல்லி வருகிறோம், அவரால் உலகத்தில் உள்ள அனைவருக்கும் இரட்சிப்பு உண்டு என்று போதிக்கிறோம்!! உங்கள் கூட்டத்தாரும் இதை அறிந்துக்கொள்ளும் நாள் வருகிறது, அறிந்துக்கொள்வீர்கள், அது வரையில் நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் போதித்துக்கொள்ளுங்கள், யாரை எப்படி வேண்டுமென்றாலும் வசைப்பாடிக்கொள்ளுங்கள், ஒரு பிரயோஜனமும் இல்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அதேபோல ஒன்றான மெய்த் தேவன் என்பவர் முற்பிதாக்களால் அறியப்பட்ட யெகோவா எனும் நாமத்தையுடையவராகிய சர்வ வல்ல தேவனே; அவர்தானே மாம்சத்தில் தன்னை வெளிப்படுத்தினார்; அவரை புறக்கணிப்போர் வேதம் முழுவதையும் பொய்யாக்குகிறார்கள்..! //

இது தேவ தூஷனம்!! யெகோவா தேவன் சாவாமையுள்ளவர் என்று வேதம் கூறியும் இந்த கொலை பாதகன் தேவனை மாம்சத்தில் கொண்டு வந்து சிலுவையில் ஏற்றுவது உச்சபடியான தேவ தூஷனம்!! வேதத்தை கைகளில் வைத்து வேத மாணவன் என்று பெயர் சூட்டி கொள்வது எதற்கும் பிரயோஜனமற்றது!! வேதத்தை வாசித்து ஆறாய்ந்து கற்றுக்கொண்டு பிறகு என்ன வேண்டுமென்றாலும் பெயர் சூட்டி கொள்ளுங்கள்!!

//அவர்களால் தங்களை யெகோவா தேவனின் சாட்சி என்று சொல்லிக்கொள்ள முடியாதே; ஆனால் நான் யெகோவா தேவனின் கிரியைகளுக்கு சாட்சி; அவருடைய சாட்சி, கிறிஸ்துவில் நிறைவேறியதால் நான் கிறிஸ்துவின் சாட்சியாகவும் இருக்கிறேன்; அவரைக் குறித்து யோவான் ஸ்நானனும் சாட்சி கொடுத்தார்; பிதாவைக் குறித்து குமாரன் சாட்சி கொடுத்தார்; குமாரனைக் குறித்து பரிசுத்தாவியானவர் சாட்சி கொடுத்தார்; பிதா,குமாரன்,பரிசுத்தாவி இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்,என்ற சாட்சி மெய்யானதே இன்று மட்டும் விளங்கிவருகிறது;//

இது கோமாளித்தனமான ஒரு எஸ்கேப்பிஸம்!! நாங்கள் யெகோவா சாட்சிகள் என்கிற பிரிவை சேர்ந்தவர்கள் இல்லை என்று தான் சொல்லுகிறோமே தவிர, உங்கள் கூட்டத்தார் போல், யெகோவா தேவன் தான் மாம்சத்தில் கிறிஸ்துவாக வந்தார் என்று பிதற்றுவது கிடையாது!! பிதா குமாரனை அனுப்பினார் என்று எழுதிவிட்டு, பிதா தான் கிறிஸ்துவாக மாம்சத்தில் வந்தார் என்பதை பிதற்றல் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்லுவது!! மூவரின் சாட்சி என்று சேர்த்துக்கொள்ளப்பட்ட வசனத்தை வைத்து பல தப்பிதங்கள் சபைகளுக்குள் வந்து விட்டது!! ஏற்ற நேரத்தில் தேவையான வெளிச்சம் கிடைத்து இப்பொழுது அதை அடைப்புகுறிகுள் போடுகிறார்கள், சில வேத புத்தகங்களிலிருந்து அதை நீக்கியும் இருக்கிறார்கள்!! இருவரின் சாட்சி போதுமானது என்று சட்டமும் கிறிஸ்துவின் வார்த்தையும் இருக்கும் போது, மனித முயற்சியால் மூவரின் சாட்சி என்று கொண்டு வந்து அதை வைத்து வியாபரமும் செய்தாகிவிட்டது, இனி தெளிவுபெறும் காலம், தெளிவு பெறுங்கள்!!

//இது இறுதி எச்சரிக்கை...நான் நியாயந்தீர்க்கவில்லை..!//

பெரிய நீதிமானோ!!!!!! அந்த தகுதியே கிடையாது!!!!! தேவன் யார் என்றும் மேசியா யார் என்றும் தெரியாமலே இத்துனை கர்ஜனை செய்வது அசிங்கமாக இருக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//அவ்வாறு பிதாவினால் இந்த உலகுக்கு இரட்சகராக அனுப்பப்பட்டவரை ஒரு குறிப்பிட்ட உபதேசத்தினால் வஞ்சிக்கப்பட்ட நிலையில் வணங்க மறுக்கும் நீங்கள் கலகக்காரர்களே, (மேசியாவின்) எதிரிகளே..!  மேலும் உங்களில் யாரும் எனக்கு எதிரிகள் இல்லை என்பதை வலியுறுத்தவே இன்று வரையிலும் (மேசியாவின்) என்ற சொல்லை அடைப்புக்குறிக்குள் போட்டு வருகிறேன்.//

பிதாவை வணங்க வேண்டுமா அல்லது பிதாவினால் இந்த உலகுக்கு இரசட்சகராக அனுப்பப்பட்டவரை வணங்க வேண்டுமா? நாங்கள் மேசியாவின் எதிரிகளா இல்லையா என்று தேவனுக்கும், மேசியாவாகிய கிறிஸ்துவுக்கும் தெரியும். இரண்டு தனித்தனி நபர்கள் இருந்தால்தானே ஒருவர் மற்றவரை அனுப்ப முடியும்? பிதா அனுப்பினார் என்று பதிந்துவிட்டு (அனுப்பினாரா? வந்தாரா?) அனுப்பப்பட்டவரை வணங்கு என்றால் ஒன்றும் புரியவில்லை.

மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

லூக்கா 4:8 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

இதை எப்படி அவர் இருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று வாசிப்பீரோ. சாத்தானுக்கு விளங்கி அவன் அகன்றுபோனான். சாத்தானின் பொய் உபதேசக்காரர்களுக்குத்தான் விளங்கவில்லை.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard