kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதாகமமும் மொழிபெயர்ப்பு பிழைகளும்


Newbie

Status: Offline
Posts: 1
Date:
வேதாகமமும் மொழிபெயர்ப்பு பிழைகளும்


 கிறிஸ்தவ விசுவாசத்தில் வாழ்கின்ற எல்லாருடைய அஸ்திபாரமும் பரிசுத்த வேதாகமம் தான் என்று நமக்கு தெரியும். 66 புத்தகங்களடங்கிய வேதாகமத்தில், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பாகங்கள் உண்டு. இயேசுவுக்கு முன்னதாக உள்ள காரியங்களைக் குறித்து எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், இயேசுவுக்கு பிறகு உள்ள காரியங்களைக் குறித்து எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் உண்டு.

பழைய ஏற்பாடு என்றும் புதிய ஏற்பாடு என்றும் ஏன் வேதாகமம் எழுதப்பட்டிருக்கிறது என்று சிந்திக்கும் பொழுது, இயேசு கிறிஸ்த்துவினுடைய வரவிற்கு முன்னே தெய்வ மக்கள் பழய ஏற்பாட்டின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு வாழ்ந்தார்கள். ஆனால் நியாய பிரமாணத்தின் க்ரியைகளினால் நீதி கிடைப்பதில்லை என்று புரிந்துக்கொண்டு, அதாவது இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தால் மட்டும் தான் நாம் நீதிமாங்களாக்கப்படுகிறோம் என்று புதிய ஏற்பாடு நமக்கு புரிய வைத்திருக்கிறது. ரோமர். 3:20, கலாத்தியர்.2:16, 3:23-29 உள்ளபடி, ஆதியில் சிருஷ்ட்டிப்பு துவங்கி இயேசுகிறிஸ்த்துவினுடைய பிறப்பு வரையிலுள்ள எல்லா விவரங்களும், கர்த்தர் யார்? கர்த்தருக்கும் மனிதருக்கும் உள்ள உறவு எப்படியிருந்ததி, நம்முடைய ஆதிபிதாக்களோடு கர்த்தருடைய உறவு எப்படியிருந்தது இவைகளைக் குறித்துள்ள எல்லா விவரங்களும் இதற்கொப்பகா, தீர்க்கதரிசனங்களும் உட்கொண்ட பழய ஏற்பாடும், இயேசு கிறிஸ்த்துவினுடைய பிறப்பு முதற்கொண்டு அப்போஸ்தலருடைய நடபடிக:ள் கடைசி வரையும் உட்கொண்ட புதிய ஏற்பாடும் சேர்ந்த ஒரு புத்தகம் தான் பரிசுத்த வேதாகமம்.

இப்படியாக எழுதப்பட்ட ப்ரிசுத்த வேதாகமத்திலுள்ள மூல எழுத்துக்கள் தோல் சுருள்களில் எழுதி பாதுகாக்கப்பட்டது. பழய ஏற்பாடு எபிரேய மொழியிலும் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டிருக்கிறது. இதனுடைய மூல பதிப்புகள் வாட்டிகன் அருங்காட்சியகத்திலும், ப்ரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டிருக்கிறது எபிரேய மொழி, கிரேக்க மொழி மற்றும் ஆங்கில மொழி இம்மூன்றும் நன்றாக தெரிந்தவர்கள் தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர் New James Version, New Internation Version, New American Standard Version, New Living Translation, English Standard Version துவங்கி அனேக ஆங்கில மொழிபெயர்ப்புகளில் பரிசுத்த வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது. முதலில் எபிரேய மொழியிலிருந்தும் கிரேக்க மொழியிலிருந்தும் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. பிறகு அந்தந்த மாநில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

தோல்சுருள்களில் எபிரேய, கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்த வேதாகமம், இன்றைக்கு பரிசுத்த வேதாகமத்திலுள்ளது போலுள்ள அதிகாரங்களோ, எண்களுடைய வசனங்களாகவோ ஒன்றும் இல்லாமலிருந்தது. தோல் சுருள்களில் இருந்து மொழிபெயர்க்கும் பொழுது இன்றைக்கு நாம் கண்கின்றது போலுள்ள வேதாகமமாக மற்றினார்கள்.

மொழிபெர்யத்து வாசிக்கபடுகின்ற வேதபுத்தகமாயிருப்பதலும், வாக்கியங்களுடைய முற்றுப்புள்ளி, அரைபுள்ளி, இவைகளுடைய இடம் மாறி இருப்பாதாலும், இதனுடைய உண்மையான பொருள் புரிந்து கொள்வதில் சில சமயங்களில் நமக்கு குழப்பங்கள் நேரிடுகிறது. இதில் வேடிக்கையான ஒரு காரியம் என்னவென்றால் கடமைக்காக வேதபுத்தகம் வாசிக்கின்றவர்களுக்கு இப்படிபட்ட ஒரு சந்தேகம் உண்டாவதற்கு இடமில்லை. அதுமட்டுமல்ல, பாரம்பரியமாக வேதபுத்தகம் வாசித்தும், கேட்டும் இருக்கின்றவர்களுக்கும், இது சரியா, தவறா என்று சிந்திக்காதவர்களுக்கும், இதுதான் சரி என்று சாதிக்கின்றவர்களுக்கும் ஒரு குழப்பமும் உண்டாகாது.

வேதபுத்தகத்தை முழு மனதோடு வாசிக்கின்றவர்களுக்கும் இப்படிப்பட்ட சந்தேகம் வருவதில்லை. ஏனென்றால் இவர்கள் வேத புத்தகத்திலுள்ள மற்ற பல பாகங்களையும் வாசித்து புரிந்துக் கொள்கிறார்கள். முற்றுபுள்ளி அரைப்புள்ளி இவைகளுடைய இடம் மாறி போனதினால், வேறொரு விதத்தில் பொருள் கொண்ட ஒரு வாக்கியத்தை நாம் பரிசீலனை செய்து பார்க்கலாம்.

இயேசுவை, சிலுவையில் அறைந்த நேரத்தில், அவருடன் கூட அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவை நோக்கி, ஆண்டவரே, நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று சொன்னபோது இயேசு அவனை நோக்கி, இன்று முதல் நீ என்னுடன் பரதேசத்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்று சொன்னார். (லூக்கா-23:42,43)

இங்கே குற்றவாளி சொன்ன ராஜ்யம் என்ன என்றும், ராஜாவாக இயேசு எப்போது வருவார் என்றும் அறியாதவர்கள் இந்த வசனத்தை அப்படியே விழுங்குகிறார்கள். அதாவது அவர்களுடைய நோட்டத்தில் இயேசு மரித்தவுடன் இந்த குற்றவாளியுடன் பரலோகம் சென்றுவிட்டர் என்பதாகும். இப்படி விசுவாசத்திலிருப்பவர்களை குற்றம் சொல்ல முடியாது. காரணம், முனே சொன்ன அந்த இரண்டு கூட்டத்தாரும் வேத புத்தகத்தை கடமைக்காக வாசிப்பவர்களும், பாரம்பரியமாக கேட்டு வாசித்து, அதை கைவைடாதவர்களும் தான்.

பரிசுத்த வேதாகம்ம, முழுவதும் 100% உண்மை என்று விசுவாசிக்கிறோம் என்றால் எப்படி இந்த தவறு வரலாம் என்று சிந்திப்பீர்களாக. இந்த வசனத்தில் தவறு ஒன்றும் இல்லை. வேதாகமத்தில் தவறாக ஒன்றும் ஒருபோதும் வராது. இதில் அரைப்புள்ளி, இடம் மாறி கிடப்பதினால் இது வாசிக்கும்பொழுது இதனுடைய பொருள் மாறுகிறது. அவ்வளவுதான். தொடர்ந்துவரும் பிற வசங்களை வாசிக்கும்பொழுது இது நமக்கு விளக்கமாக புரியும்.

இந்த வசந்த்தினுடைய ஆங்கில மொழிபெயர்ப்பில், இப்படி எழுதியிருக்கிறது.

Jesus answered him,  " Truly I tell you, today you will be with me in paradise".இங்கே, I tell you, அடுத்து ஒரு அரைப்புள்ளி கொடுத்திருக்கிறது. அப்புறம் today you will be with me in paradise  என்று எழுதியிருக்கிறது. இந்த் இடத்தில் இப்படியாகத்தான் வந்திருக்கவேண்டும் Jesus, answered him, "Truly I tell you today, you will be with me in paradise".". பரிசுத்த வேதபுத்த்கத்தினுடைய மூல எழுத்துக்களில் இப்படிபட்ட அரைப்புள்ளிகள் ஒன்றும் இருந்ததில்லை. மொழிபெயர்க்கும் பொழுது இப்படிப்பட்ட சின்ன சின்னத் தவறுகள் வந்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு தவறு வந்திருக்கிறது என்று தோன்றுவதற்கு காரணம் என்னவென்று கேட்டல், இதற்கு பதில் மிகவும் எளிதாயிருக்கிறது. குற்றவாளி சொன்ன ராஜ்யம் என்ன என்றும், இயேசு ராஜாவாக வருகிறது எப்படி என்றும், வேதாகமம் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு மரித்தவுடன் பரலோகம் போகவில்லை என்று கட்டாயமாக சொல்லலாம். காரணம் யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பான் (மத்தேயு 12:40) என்று எழுதியிருக்கிறது. ஆகையால் இயேசு மரித்தவுடன், குற்றவாளியுடன் பரலோகம் சென்றார் என்று சொல்லுவது தவறாக இருக்கிறது.

அதுபோல, குற்றவாளி சொன்ன 'இராஜ்யம்' இயேசுவினுடைய வாக்குத்தத்தின் படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்ட்டகுமென்று காத்திருக்றோம்.(2 பேதுரு-3:13) கிறிஸ்த்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். பின்பு அவர் வருகையில், அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அதன் பின்பு முடிவு உண்டாகும். அப்பொழுது இயேசு சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக் கொடுப்பார். (1கொர்ரி :15:21-24) இப்படியாக யேசு, ராஜாவாக வரும்போது என்னையும் நினைத்தருளும் என்று குற்றவாளியான கள்ளன் சொன்னான்.

இந்த வசனம் ஒரு உதாரணமாக இங்கே சொல்லுவதற்கு காரணம், மொழிபெயர்ப்பில் உண்டான ஒரு அரைப்புள்ளி இடம் மாறி போட்டதினால், கருத்து மாறி போயிவிட்டது என்று காட்டுவதற்காக தான். ஆனால் பரிசுத்தவேதாகமம் கருத்தோடு கவனமாயி வாசிப்பவர்களுக்கு, இது வேறொரு அச்சு பிழை என்றும், இயேசு கள்ளனோடு, "மெய்யாகவே இன்று நான், உனக்கு சொல்லுகிறேன், நீ என்னோடு கூட பரலோகத்திலிருப்பாய் என்றும் புரிந்திருக்கிறது.
Changes made in Formatting alone!! The text remains untouched!! - Moderator


-- Edited by bereans on Sunday 19th of June 2011 08:55:46 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard