kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மதுபானம் பண்ணுதல் பாவமா?


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
மதுபானம் பண்ணுதல் பாவமா?


மதுபானம் பண்ணுதல் பாவமா?

 

என்ற ஒரு உணர்ச்சிப்பூர்வமான ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு எதற்கு பெரிய விவாதம்? இந்தக் கேள்விக்கு எனக்கு ஒரு நண்பர் உடனே பதில் சொன்னார். எனக்கும் சரியென்றே பட்டது.

 

மது அருந்தும்முன் ஒரு சிறு ஜெபத்தை ஏறெடுக்கலாம்;

 

 "அன்பின் ஆண்டவரே இந்த பானத்தை கிருபையாய் ஆசீர்வதித்து இந்த பானம் என் ஆவி ஆத்துமா சரீரத்துக்கு பெலன் தரும்படி செய்யும். அப்படியே சைட் டிஷ்சையும் ஆசீர்வதியும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன் பிதாவே, ஆமென்" 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஆதியாகமம் நூலாசிரியர் வசந்தகுமார் என்று பதித்ததற்கு வன்மையாகக் கண்டிக்கிறார் ஒரு சகோதரர். 

அதற்கு விளக்கம் கேட்டு கேட்டு சலிக்கின்றனர் மற்றவர்கள்.

 

யாராவது சொல்லுங்களேன் ஆதியாகமம் நூலாசிரியர் யார்?

க்ளூ வேண்டுமா?

1 பரிசுத்தாவியினால் ஏவப்பட்டு மோசே எழுதினார்

2 வசந்த குமார்.

 

என்னது 1 தான் சரியா? பயங்கர ஸ்மார்ட் பிரதர் நீங்க‌....

 

ஓஓ இதுவேற ஆதியாகமமா? 

சரி சரி. சின்ன கம்யூனிகேஷன் கேப் அவ்வளவே!

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இவனுங்க ஜெபம் செய்து அதைக்கூட கிறிஸ்துவின் இரத்தமாக மாற்றி ரூம் எங்கும் தெளிப்பானுங்க‌!!

இவனுங்க பாஸ்டர்மார்கள் வீடு விடாக போய், கிளாஸில் தண்ணி (குடிக்கிற தண்ணி தான்) ஊற்றி, ஏதோ ஒரு பாஷையில் (அந்நிய பாஷையாம்) ஜெபித்து விட்டு, இதோ இந்த கிளாஸில் உள்ள தண்ணீர் இயேசுவின் இரத்தமாக மாறி விட்டது, இதை கொஞ்சம் குடித்து, கொஞ்சம் தெளித்து விடுங்கள், வீட்டில் உள்ள அசுத்த் ஆவி எல்லாம் ஓடி விடும் என்று சொல்லிவிட்டு "பை" நிறய காணிக்கை பெற்று செல்வார்கள்!! கேட்டால் வீடு சந்திப்பாம், சுவிசேஷ ஊழியமாம்!! இப்படி பட்ட பாஸ்டர்மார்கள் தேவனின் அபிஷேகம் (!!) பெற்றவர்களாம்!! தேவனின் பெயரே என்னவென்று தெரியாதவர்கள் எந்த தேவனின் அபிஷேகத்தை பெற்றவன் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!!

"இயேசுவை தொழுபவன் தான் கிறிஸ்தவன்" கூட்ட தலைவன் மதுவை குறித்த விவாதத்தை வைத்து அவனின் தராதரத்தை நிரூபித்திருக்கிறான்!!

எல்லாருக்கும் இரட்சிப்பு இல்லை என்பதற்கு ஒரு வசனம் கொடுக்க முடியாதவனுக்கு "மது" வை விவாதிக்க ஏகப்பட்ட டைம் இருக்கிறது போல்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

மது பானம் அவர்களுக்கு, ஆகாரம் நமக்கு அது என்ன ?
உபாகமத்தில் 14; 23,24,25,26, வசனம் நமக்கு என்ன சொல்கிறது, 

மது என்பது ஆல்ககால் 

நமது உணவில் ஆல்ககால் , இல்லாத ஒரு பண்டம் கூட
 கிடையாது,எல்லாவற்றிலேயும் இருப்பதால் நாம் உணவே அருந்தாமல் இருக்க முடியாது,    ஆனால் ஒரு எல்லையை தாண்டும் போது உணவே விஷமாக மாறி விடுகிறது எனவே நமக்கு எல்லையை நாமே வகுத்துக்கொள்ள திராநியில்லாதவர்கலாதளால் அதை தொடாமல் இருப்பது உத்தமம்,

அதை  விடுத்து நோவா முதல் கிறிஸ்து வரை எல்லோரும் திராட்சை ரசம் குடித்தார்கள் நானும் அப்படி செய்வேன் என்று செய்தால். நமது சிந்திக்கும் திறன் குறைந்து செயலில் பின்தங்கியவர்களாக இருப்போம் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து   
இப்படி இருந்தால் சந்தோசமா !!!!!


-- Edited by Guru on Thursday 16th of June 2011 10:04:41 AM

Attachments
__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard