ஆவியானவரே !! இப்போ வாரும்!!! இறங்கி வாரும் !!!என கூப்பிடிடும் சகோதரர்கள் யாரை கூப்பிடுகிறார்கள், இயேசுவையா, அல்லது ஆவியையா ? வாரும் இறங்கிவாரும் என்றால் அவர் எப்போ மேலே போனார்? அல்லது வரவே இல்லையா ?
கேட்டால் அவர் என் உள்ளத்தில் வந்து தங்கிவிட்டார், அனுதினமும் அவர் என்னை நடத்துகிறார் என்பார்கள் ஆனாலும் கூட்டமாகக் கூடிவிட்டால் இப்போ வாரும் இறங்கி வாரும் என்று கூப்பிடுவார்கள். (வந்துவிட்டரா இல்லையா என்றும் சொல்லமாட்டார்கள், வந்தவர் எப்போது திரும்பிப்போனார் என்றும் தெரியாது)
அதாவது திரித்துவத்தின் 'மூன்றாவது நப்ர்' ஆகிய தேவாதி தேவன் (மூவரும் ஒன்றல்லவா) இவர்களுக்குள் வந்து தங்கி இவர்களை ஆட்கொண்டு தேவனோடு தேவனாக இவர்கள் எப்படி ஒரு சூப்பர் பரிசுத்த ஜீவியம் ஜீவிக்கிறார்கள் என்பதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
இவர்களோடு அளவளாவும் 'ஆவியானவர்' வசனங்களை மட்டும் சொல்லியே கொடுக்கமாட்டார் போல. அவர் உங்களை சகல சத்தியத்துக்குள்ளூம் நடத்துவார் என்று கிறிஸ்து சொன்ன ஆவி இவர்களுக்கிருந்தால் ஏன் இவர்களுக்குள்ளேயே இத்தனை குழப்பம், பிரிவினை.
அட நாம்தான் கள்ளத்தீர்க்கதரிசிகள் சரி, நம்மை எதிர்க்கட்டும். ஆனால் இவர்கள் ஏற்றுக்கொள்ளும் திரித்துவத்தைப் போதிக்கும் மற்றவர்களையும் சாடுகிறார்களே. அவனும் எனக்கும் அதே பரிசுத்தாவியிருக்குங்கறான் இவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள்,
I யோவான் 4:6 நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.
II தெசலோனிக்கேயர் 2:12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
I பேதுரு 2:8 அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றேநியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.