சங்கீதம் 110:4 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்றுகர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார். எபிரெயர் 5:6 அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.
எபிரெயர் 5:10மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.
எபிரெயர் 5:11 இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்.
எபிரெயர் 6:20 நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
எபிரெயர் 7:1 இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
எபிரெயர் 7:2 இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகியமெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம்.
எபிரெயர் 7:9 அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால்,
எபிரெயர் 7:11 அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன?
எபிரெயர் 7:15 அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறாரென்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது.
எபிரெயர் 7:17 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.
எபிரெயர் 7:20 அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ: நீர்மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.
மெல்கிசேதேக்கு கிறிஸ்துவுக்கு அடையாளமாகக் குறிப்பிடப்படும் ஒருவர். வம்ச வரலாறுகிடையாது. நீதியின் ராஜா என்று அர்த்தமாம் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு ராஜாவாக இருந்தாலும் உன்னதமானவருடைய ஆசாரியனாகவும் இருந்தான். இது கிறிஸ்துவுக்கு அப்படியே பொருந்தும்; அவரே நமது நித்திய பிரதான ஆசாரியரும் அதேசமயம் முடிவில்லாத ராஜ்ஜியத்துக்கு ராஜாவுமாயிருக்கிறார்.
தசம பாகம் வாங்க வேண்டியவனே ஏன் கொடுத்தானென்றால், நியாயப்பிரமாணத்தின்படி உண்டான ஆசாரியத்துவம் பூரணமானதல்லை, மேலும் நித்திய பிரதான ஆசாரியருக்கு சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளதால் புதிய ஏற்பாட்டின்படி அந்த அதிகாரத்துக்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும். யாரும் விதிவிலக்கல்ல...
தகப்பனுடைய அரையிலிருந்தான் என்பதற்கு லேவிகோத்திரம் ஆபிரகாம் வழியேதான் உருவானது லேவியின் முற்பிதா ஆபிரகாம் என்பதே அர்த்தம் என்று நினைக்கிறேன்.
நான் எழுதிய கடும்சொற்களினால் உங்கள் மனது புண்பட்டிருக்கிறது என்பதை அறிகிறேன் உங்கள் மீது சுமத்திய குற்றசாட்டு ஆதாரமற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களிடம் மன்னிப்பைக் கோரி நிற்கிறேன்.
நீங்கள் கோரும் பட்சத்தில் யௌன ஜனதளத்திலிருந்து தங்களைக் குறித்து எழுதிய அவதூறான அனைத்து பதிவுகளை நீக்கி விடுகிறேன்.
குற்றங்களாக இருக்கும்பட்சம் யாராயிருந்தாலும் அதை ஆதாரத்துடன் நிரூபிக்கும் கடமை இருக்கிறது. தவறு செய்வது மனித இயல்பு. நாம் யாவரும் மனிதர்களே. எனக்குக் குற்ற உணர்வு இல்லாத பட்சம் எனக்கும் என்னைப்படைத்தவருக்கும் என்னைப்பற்றி மற்றவர்களைக் காட்டிலும் தெரியும். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. உள்ளத்தின் ஆழத்தில் உள்ளவைகளையும் அவர் அறிவார்.
எங்களது எதிர்ப்பு துர் உபதேசங்களுக்கு எதிரானது மட்டுமே. சில சமயங்களில் துருபதேசத்துக்கு வழிகோலுபவர்களையும் விமரிசிக்கவேண்டியுள்ளது. நான் என்னை பரிசுத்தவான் என்றோ நீதிமான் என்றோ ஒருபோதும் சொன்னதில்லை. ஏனென்றால் அப்படிச் சொல்ல எனக்கு எந்த தகுதியும் அல்ல. அதே நேரம் தேவகிருபையால் வேதத்தின் சத்தியங்களில் ஏற்பட்ட தெளிவு ஒருவித வைராக்கியத்தையும் சமாதானத்தையும் கொடுத்ததால் அந்த தைரியத்தில் கள்ள உபதேசங்களை எதிர்க்கிறோம். மற்றபடி உங்களுக்கும் எனக்கும் என்ன? நாம் வரப்போகிற ராஜ்ஜியத்தில் நித்தியத்துக்கும் சகோதரர்களாக் இருக்கப்போகிறோம் என்பதில் எனக்குத் துளிகூட சந்தேகமில்லை. உங்களுக்குச் சரியாகப்படுவதைச் செய்யுங்கள்... அன்புடன் ஆத்துமா.
ஆஹா, இது அல்லவா கிறிஸ்தவம்!! இது போன்ற பதிவை வாசிப்பதில் ஒரு தனி கெத்து தான்!! கொல்வின் அவர்களின் இப்படி பட்ட ஒரு பதிவு எந்த அளவிற்கு ஆச்சரியத்தை தந்ததோ, அதை காட்டிலும் அதிக மகிழ்ச்சியே!!
ஆரோக்கியமானதை பகிர்ந்துக்கொள்வதே சுத்தம்!! தூள் கிளப்பீட்டீங்க, கொல்வின் மற்றும் சோல்சொல்யூஷன் அவர்களே!!
-- Edited by bereans on Saturday 18th of June 2011 08:19:54 AM