எபிரெயர் 2:5 இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.
உலகம் என்று சொல்வது இங்கு ஒரு பெரும் காலகட்டத்தைக் குறிக்கிறது. இங்கு இனிவரும் உலகத்தை என்று வரப்போகிற ஒரு காலத்தைக் குறிக்கிறார் எபிரேயர் ஆக்கியோன்.
எனவே ஏற்கனவே ஒரு உலகம் தூதர்களுக்குக் கீழ்ப்பட்டிருந்தது என்று கூறவேண்டியதில்லை.
இதை ஆதாம் முதல் நோவாகாலம் வரை என்று வேறு வசனங்கள் மூலம் அறியலாம். நோவாவின் காலத்து ஜலப்பிரளயத்தோடு தூதர்களுக்குண்டான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுவிட்டது என்பதை
II பேதுரு 2:4 பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
யூதா 1:6 தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.
ஆவி ஜீவிகளான தூதர்களை ஆவிகள் என்றும் தூதர்கள் என்றும் அழைத்திருக்கிறார்கள். நோவாவரையிலான முதல்காலக்கட்டம்(உலகம்) அது.
இரண்டாவது இபோதிருக்கிற பொல்லாத பிரபஞ்சம் (கலாத்தியர் 1:4 அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று)
நோவாகாலமுதல் கிறிஸ்துவரையிலான காலத்தை முற்பிதாக்களின் காலமாகவும், கிறிஸ்துவின் முதலாம் வருகை தொடங்கி அவரது இரண்டாம் வருகை மட்டும் இருக்கும் காலம் சுவிசேஷ யுகம் என்றும் இவ்விரு பகுதிகளையும் உள்ளடக்கியதே இரண்டாம் உலகமாகிய நாம் வசித்துக்கொண்டிருக்கும் உலகம்.
இனிவரும் உலகமே ஆயிரவருட அரசாட்சியின் காலம்... நற்செய்தி என்னவென்றால் சுவிசேஷ யுக முடிவும் 1000 வருட அரசாட்சியின் ஆரம்பமும் கலந்த இடைப்பட்ட காலத்தில் நாமிருக்கிறோம் என்பதை தெளிவான ஆராய்ச்சி செய்பவர்கள் புரிந்துகொள்ளலாம்.
ஆயிர வருட அரசாட்சி திடீரென்று ஒரு நாள் ஏதோ மேஜிக்போல தோன்றப்போவதில்லை. எப்படி விடிகாலையில் அந்தகாரம் படிப்படியாக விலக்கப்படுகிறதோ அதேபோல இந்த பூமியும் பழையசீருக்குத் திரும்பவேண்டும், அது நடந்துகொண்டிருப்பதை