I தீமோத்தேயு 1:15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
ரோமர் 5:9. இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. (இரட்சிக்கப்படுவது)
18. ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.
ரோமர் 5:16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.
20. மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.
21. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
II பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
ஏதோ கொஞ்சம் பாவிகளை அல்ல எல்லா பாவிகளையும் பாவத்திலிருந்தும் அதன் விளைவான மரணத்திலிருந்தும் இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார், இது உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமாயிருக்கிறது.(வேறு யாரும் அங்கீகரிக்கத்தேவையில்லை என்று அர்த்தம்)
//நாங்களோ இயேசுவை சார்ந்துகொண்டு அவர் காட்டுகிற வழியில் நடந்தால் மட்டுமே மீட்பு உண்டு என (100%) விசுவாசிப்பவர்கள். ஒருவேளை நாங்கள் சொல்லுவதுதான் சரியாயிருந்தால் தவறாய் நடப்பதால் வரும் பலனாகிய நித்திய ஆக்கினையை அடையவேண்டி வருமே.//
இதைத்தான் நாங்களூம் கேட்கிறோம் கேட்ட கேள்விக்கு பதிலில்லை. பதிலளிக்காமல் நழுவிவிடுகிறீர்களே?
இயேசுகிறிஸ்துவை சார்ந்துகொண்டு அவர் வழியில் நடப்பது என்பதை சற்று விரிவாக விளக்கினால் வசதியாக இருக்கும்.
இயேசுகிறிஸ்துவை சார்ந்துகொண்டு அவர் வழியில் 100% நடக்கும் யாராவது ஒருவரைக் காண்பிக்க முடியுமா?(சில்சாம் தவிர)
//ஒரு சிறு உதாரணம், ஒரு வெட்டவெளியில் மழை பெய்துகொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம் அப்போது ஒரு கோப்பையை தலை கீழாக கவிழ்த்து வைத்தால் அதில் ஒரு சொட்டு கூட நிறையாது, மழை பெய்வதென்னமோ உண்மை தான் அந்த கோப்பை வெளிப்புறமாக நனைவதென்னமோ உண்மைதான் ஆனால் கவிழ்க்கப்பட்ட அந்த கோப்பையானது உள்ளே உள்ள வெற்றிடமாக அப்படியே நிலைத்திருக்கும். நிரம்ப என்ன செய்யவேண்டும் அதை மழையை நோக்கி திருப்பவேண்டும், இப்போது கோப்பை நிறையும். இதே போல தான் மேசியாவின் எதிரிகள் வசனத்தால் தங்களை வெளிப்புறமாக நனைத்தாலும் உள்ளே வெறுமையோடு இருக்கின்றனர், அந்த மழை உள்ளே விழுந்து நிறைத்தால் தான் பாத்திரம் அல்லது கோப்பை நிரம்பும். ரட்சிப்பை பற்றி ஏட்டளவில் உணர்ந்துள்ள இவர்கள், இயேசுவை நோக்கி தங்களை திருப்பினால் மாத்திரமே ரட்சிப்பை உணர்வுபூர்வமாக அறிய முடியும் //
உதாரண்ங்களுக்கு குறைச்சலில்லை. இதுவரை மழையை நோக்கித் திருப்பப்படாத கோடா கோடி கோப்பைகளின் கதி என்ன? ஏற்கனவே 'திருப்பட்டட்ட' கோப்பைகளே லீக் ஆகி காலியாக உள்ளது. இதற்கு ஏன் பதிலே ஒரு ஆள்கூட சொல்வதே இல்லை. காது கேட்காததுபோல ஏன் எல்லாருமே நடிக்கிறீர்கள். சுவிசேஷம் ஒரு முறைகூட கேட்காதவர்கள், கேட்டும் பின்பற்ற முடியாதவர்கள் என்னதான் ஆவார்கள் என்று வசன சகிதமாக விளக்கிவிட்டு அடுத்தபடிக்குப் போகலாமே.
ஜோசப்: //ஆனால் மேசியாவின் எதிரிகள் சொல்வது என்ன, உலகத்தில் பிறந்த யாரும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதெல்லாம் இல்லை, அவரை விசுவாசிக்காமலே ரட்சிப்பு என்ற வேத புரட்டை எடுத்து வைக்கின்றனர்.//
இந்த திரித்துவர்கள் மேசியாவிற்கு அர்த்தம் தெரியாமலே எங்களை மேசியாவின் எதிரிகள் என்று சொல்லுகிறார்கள்!! இதை குறித்து சகோ சோல்சொல்யூஷன் எழுதியதை வாசித்தாலே புரியும்!! நாங்கள் கிறிஸ்துவினால் அனைவருக்கும் மீட்பு என்று சொல்லுவதினால் மேசியாவின் எதிரியாகிறோமாம், இவர்கள் கிறிஸ்துவினால் எல்லாரையும் மீட்க முடியாது, ஆனாலும் கிறிஸ்து தான் பிதா என்று சொல்லிக்கொண்டு மேசியாவின் நண்பர்களாம்!! நல்ல தமாஷ்!!
அவரை விசுவசிக்காமல் மரித்து போன கோடா கோடி ஜனங்களின் நிலை என்னவென்று கேட்டால், அதை தேவன் பார்த்துக்கொள்வார் என்று சப்பையான ஒரு பதிலை தருவது சுத்த எஸ்கேப்பிஸம்!! நாங்களோ வேதத்தின் படியே, எல்லா மனுஷர்களும் இரட்சிக்கப்பட்டு அதன் பின் சத்தியத்தை அறிகிற அறிவுக்கு கொண்டு வருவது தேவனின் சித்தம் என்று வசனத்துடன் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் எடுத்து சொல்லி வருகிறோம்!! இதற்கு எதிர்த்து இது வரை இவர்களுக்கு ஒரு வசனம் கிடைக்கவில்லையே!!
இரட்சிப்பு என்றாலே என்னவென்று தேரியாதவர்கள் தான் இவர்கள்!! தேவனின் சித்தத்தின்ப்படி, கிறிஸ்துவினால் அனைவருக்கும் இரட்சிப்பு தர முடியாது என்பது கிறிஸ்துவின் பலியை அவமாக்குவதாகும்!! இவர்களை கிறிஸ்துவின் எதிரிகள்!! இவர்கள் கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் விலையை அறியாமல் மக்களை மோசம்ப்போக்கிறார்கள்!! இது தான் இவர்களுக்கு தெரிந்தது!! விசுவாசிப்பவர்களுக்கு மாத்திரமே இரட்சிப்பு என்று இவர்களின் போதனையின் படி பார்த்தோமென்றால்,
1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
என்கிற வசனம் பொய்யாகிறது, அல்லது திரித்துவர்களின் வேதத்தில் இந்த வசனமே இல்லையோ!! அவரின் சித்தம் நிறைவேறாது என்று எத்துனை மூர்க்கமாக விவாதிக்கிறார்கள், ஆனால் நாங்கள் மேசியாவின் ஏதிரிகளாம்!! என்னய்யா நியாயம்!! எந்த இயேசுவை நீங்கள் விசுவசிக்கிறீர்களோ!!
நம்பாத, கேட்காத, புரிந்துக்கொள்ள முடியாத எத்துனை கோடி ஜனங்கள் நீங்கள் சொல்லும் அரை வேக்காடு சுவிசேஷம் கேட்காமல் மரித்திருக்கிறார்களே, அவர்கள் நிலை என்னவென்றால் உங்களிடத்திலிருந்து வருகிற பதில் ஒரு பெரிய பூஜ்ஜியம் தான்!!
விசுவாசிக்கிறவர்களுக்கு மாத்திரம் இல்லை, மற்ற அனைவருக்கும் இரட்சிப்பு உண்டு என்பதை வசனம் சொல்லுகிறது,
I தீமோத்தேயு 4:10 இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை, வைத்திருக்கிறோம்.
எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகர் என்று வேதம் சொல்லியும் இந்த திரித்துவர்கள் இல்லை இல்லை எல்லா மனுஷர்களையும் இரட்சிக்க தேவனுக்கு திரானியல்ல என்கிற அளவிற்கு எழுதுகிறார்கள்!!
//ரட்சிப்பை பற்றி ஏட்டளவில் உணர்ந்துள்ள இவர்கள், இயேசுவை நோக்கி தங்களை திருப்பினால் மாத்திரமே ரட்சிப்பை உணர்வுபூர்வமாக அறிய முடியும் மாறாக இயேசு அனுப்பப்பட்டவர், மிகாவேல் தூதன், அவர் தொழத்தக்கவர் அல்ல என வசனங்களை தேடிக்கொண்டிருந்தால்......//
இப்ப தான் உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்!! உங்களுக்கு வசனம் "ஏட்டெழுத்து" மாத்திரமே!! ஏனென்றால் உங்கள் விசுவாசம் பாரம்பரியத்தினாலும், பாடல்களாலும், தாத்தா பாட்டி வழியாக வந்தது!! இயேசு கிறிஸ்து அனுப்பட்டவர் என்று அவரே சொன்னாலும் உங்கள் திரித்துவ கூட்டத்தார் கேட்க மாட்டீர்கள், ஏனென்றால் வசனம் உங்களுக்கு வெறும் ஏட்டெழுத்து, உங்கள் பாரம்பரிய பாடல்கள் இயேசுகிறிஸ்துவை பிதா என்றும் "இயேசப்பா" என்று சொன்னால் அது உங்களுக்கு வேதம்!! பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் வருகிறது என்று இயேசு கிறிஸ்துவே சொன்னாலும் அதையும் கேட்க திரானியில்லாதவர்களாக இருக்கிறீர்கள்!!
யோவான் 7:18 சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
யோவான் 7:28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
யோவான் 8:42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
யோவான் 12:49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
இது எல்லாம் கிறிஸ்து இயேசு தான் அனுப்பட்டவரை காண்பிக்கும் வசனங்கள், ஒரு வேளை உங்கள் வேதங்களில் இது வெறும் ஏட்டெழுத்தாக இருக்கலாம்!! நீங்கள் உங்கள் விசுவாசத்தில் தைரியமாய் நிலைத்திருங்கள், நீங்களும் தான் இரட்சிக்கப்படுவீர்கள்!! உங்களுக்கு ஏட்டெழுத்தாக இருப்பதை நாங்கள் சத்தியம் என்று நம்புகிறோம்,
ஜோசப்: //அப்புறம் ஏன் சார் சுவிஷேஷத்தை அறிவிக்க சீடர்கள் சென்றனர், அவர்கள் பாட்டுக்கு வேலையை பார்த்துட்டு இருந்திருக்கலாமே.//
சுவிசேஷத்தை அறிவிக்க சீடர்கள் ஏன் சென்றார்கள் என்கிற கேள்வி அபத்தம், கிறிஸ்து இயேசு அவர்களுக்கு கட்டளையிட்டதை அவர்கள் செய்தார்கள்!!
மத்தேயு 28:18. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
அப்போஸ்தலர் 1:8. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
சீஷர்களுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் செய்ய சொன்னதை அவர்கள் செய்ததினால் தான் சாட்சியாக இன்று வேதம் நம் கைய்யில் இருக்கிறது!! அதில் அவர்களுக்கு சொல்லியதையே நானும் செய்வேன் என்று சொல்லிக்கொண்டு அடுத்த வீட்டுக்காரனுடன் ஜென்ம பகை கொண்டு ஆனால் இந்தியாவையே கிறிஸ்துவிற்கு ஆதாயப்படுத்த கிளம்புகிறார்கள்!! இது என்ன சாட்சி!! மேலும்,
பிரசங்கி 3:1. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
சீஷர்கள், அப்போஸ்தலர்கள் மூலமாக விதைக்கும் ஒரு காலம் இருந்தது, பிறகு அது வேதமாக வந்து, அந்த வேதமும் பல நூற்றாண்டுகள் மறைக்கப்பட்டு, இப்பொழுது எல்லார் கைய்யிலும் இருக்கிறது!! விதத்த காலம் போய், இப்பொழுது உலகத்தின் முடிவு, கிறிஸ்துவின் வருகை சமீபமாக இருக்கிறது என்று எல்லா சபைகளும் போதித்து வருகிறது, அதாவது இது உலகத்தின் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதை எந்த வித கருத்து வேறுபாட்டின்றி ஏற்றுக்கொள்கிறார்கள், அப்படி என்றால் வசனத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் அல்லவா,
மத்தேயு 13:39 அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
சீஷர்கள், அப்போஸ்தலர்கள், அவர்கள் மூலமாய் கைகளுக்கு வந்த வேதத்தின் மூலமாக விதக்கப்பட்டது, பிசாசினால் இதன் நடுவே களைகளும் விதைக்கப்பட்டது!! இப்பொழுது, நீதியின் சூரியனின் வருகையின் வெளிச்சம் வெளிப்பட, பிசாசினால் இருட்டடிப்பு செய்யப்பட்டவைகள் விளங்கி வருகிறது, அறுப்பு நடந்துக்கொண்டு இருக்கிறது!! முன்பு இல்லாதது போல், சத்தியத்தின் மேல் வாஞ்சையுள்ள சிறு சிறு கூட்டம் அங்காங்கே அடையாளம் காட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறது!! அறுப்பு நடந்துக்கொண்டு இருக்கிறது!! ஆனாலும் அறுப்பின் காலத்தில் நாங்கள் விதைப்போம் என்று களத்தில் இறங்கி வேலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள், கேட்டால் நாங்கள் சுவிசேஷத்திற்கு விரோதிகள் என்கிறார்கள்!!
ஜோசப் சார், கிறிஸ்தவம் உணர்சிகளிலினால் வளர்ந்தது கிடையாது!!
ஜோசப்: //அதுபோக ஏன் பவுல் அன்னிய நுகத்துடன் பிணைக்கப்படக்கூடாது, விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை புசிக்கவேண்டாம் என பிரித்து பேசவேண்டும், அதான் எல்லாருக்கும் ரட்சிப்பு என்றால் அன்னிய நுகத்தில் தாராளமாக பிணைக்கப்பட்டு விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை தாராளமாக புசிக்கலாமே, இவர்கள் கூற்றுப்படி பார்த்தால் நாம் எந்த வகையில் விஷேஷித்தவர்கள். கிரையத்துக்கு கொள்ளப்பட்டீர்கள் என்கிறாரே அப்படி என்றால் அது என்ன கிரையம். அனைவருக்கும் மீட்பு என்றால் கிரையம் என்னத்திற்கு? கொஞ்சம் யோசிங்க சார்!//
ஐய்யா, பவுல் இதை சொன்னதை கேட்பவர்களுக்கு இது பொறுந்தும், ஆனால் கேட்காமலே பல கோடி ஜனங்கள் மரித்து போயிருக்கிறார்களே, அவர்களுக்கு என்ன கதி என்று உங்களிடம் கேட்டால் அவர்கள் அனைவரும் நரகத்திற்கு போவார்கள் என்கிறீர்கள்!! கேளாதவர்களின் கதி என்ன என்பதற்கு பதில் இல்லை!! நீங்கள் விழுந்து விழுந்து நற்செய்தி (!!) என்று சொன்னாலும், பிதா சித்தம் கொண்டவர்கள் மாத்திரமே கிறிஸ்துவிடம் வருவார்கள் ஜோசப் சார்!! அதற்காக அவர் மற்றவர்களை கைவிடும் தேவன் கிடையாது!! அவரின் மந்தையில் சேராத பிற ஆடுகளையும் (அது தானுங்கோ, அவரின் சத்தத்தை இப்ப கேட்காத ஆடுகள்) அவர் தன் மந்தையில் கூட்டி சேர்ப்பார்!! ஆடு காணாமல் போனால் அதை தூக்கி தீயில் போட்டு அதன் காலை முறித்து ஓரமாக உட்காரவைக்கமாட்டான் நல்ல மெய்ப்பன்!! தேவ சாயலில் இருக்கும் இந்த மனித ஆடுகளும் அப்படியே காணாமல் போய் விட்டது, அதை தேடி கிறிஸ்து இயேசு வந்தது தேவனிடத்தில் சேர்க்கவே, அதை அவர் செய்வார்!! நீங்கள் ஏதோ, உங்களால் சத்தியத்தை கேட்டும் ஏற்றுக்கொள்ளாத ஆடுகள் எல்லாம் நரகத்திற்கு போவார்கள் என்று கேவலமான ஒரு நற்செய்தியை(!!) சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்!! உங்களுக்கு உங்கள் நற்செய்தி மேல் நம்பிக்கை இருக்கிறது ஆனால் கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மீது நம்பிக்கை இல்லையே!!
ஜோசப் சார், கிறிஸ்துவை கிறிஸ்துவாக ஏற்றுக்கொள்வோர், நிச்சயமாகவே பிதாவினார் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் தான், அது உலகம் முழுவதும் 2000த்திற்கும் மேலே சிதறியிருக்கும் சபை முழுவதும் கிடையாது என்பது மாத்திரம் நிச்சயமாக சொல்ல முடியும்!! அப்படி பிதாவினால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் விசேஷித்தவர்களே!! ஏனென்றால் கிறிஸ்துவோடு சேர்ந்து அவர்கள் மற்ற "ஆடுகளுக்கு" நீதியை கற்று தருவார்கள்!! உங்களுக்கு மீட்பு, இரட்சிப்பு என்பதற்கு அர்த்தம் புரியவில்லை, இன்னும்...... ஆகவே தான் இப்படி சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்!! உங்கள் கூட்டத்தாருக்கு இரட்சிப்பு, மீட்பு என்றாலே பரலோகம் போவது என்று நினைப்பு!!
இப்ப கடைசியாக அவர் கொடுத்த கிரையத்தையே கேள்வி கேட்கும் அளவிற்கு துனிந்திருப்பது நல்ல முன்னேற்றம்!! வசனத்தை நிதானமாக வாசியுங்கள்:
நம் என்றால் அவரின் சபையின் பாவங்களுக்கு மாத்திரம் இல்லை, சர்வலோகத்தின் (அவரை அறியாதவர்கள், தெரியாதவர்கள், பின்பற்றாதவர்கள், கேளாதவர்கள், கேட்டும் பின்பற்றாதவர்கள், அதற்கு வாய்ப்பே இல்லாமல் மரித்துப்போனவர்கள், கிறிஸ்துவிற்கு முன்னமே மரித்து போனவர்கள் என்று பெரிய பட்டியலே இருக்கிறது) பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்!! தயவு செய்து அவரின் பலியை உங்கள் பாணியில் அசிங்கமும் அவமாகவும் ஆக்காமல் இருங்களேன்!!
ஜோசப்: //அனைவரையும் இரட்சிப்பது தான் தேவனின் திட்டம் ஆனால் அவரை விசுவாசிப்பவனே இரட்சிக்கப்படுவான் என்பது அதன் மைய நோக்கம். அதை விடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் சும்மா அவரவ வேலையை பாத்திட்டிருந்தாலே தானாகவே ரட்சிக்கப்படுவார்கள் என்பது வேத புரட்டு.//
தேவனின் சித்தம் நிறைவேற ஒரு மனிதனின் துனை தேவையாக இருப்பது தேவனின் வல்லமையை தூஷிப்பதாகும், ஜோசப் சார்!! 2000 வருடங்களாக சுவிசேஷம் சொல்லி வந்தும் இன்னும் நீங்கள் உட்பட, அவரவர் வேலையை தான் பார்த்துக்கிட்டு இருக்காங்க!! யார் சார் இன்று பவுல் போல் பேதுரு போல் இருக்கிறார்கள்!! தங்களை அப்போஸ்தலர்கள் என்றும், ஊழியக்காரர்கள் என்றும் அழைத்துக்கொண்டால் சரியாகிவிடுமா!!
சங்கீதம் 33:9 அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
ஆதியாகமம் 18:14 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?
அனைவரையும் இரட்சிப்பது தான் தேவனின் திட்டம், அதன் பின் என்ன ஆனா, ஆவன்னா!!?? தேவனால் செய்ய முடியாது என்பது மிக பெரிய தூஷனம்!
ஜோசப் சார், தேவனுக்கு விருப்பம் தான் ஆனால் அவரால் முடியாது என்பது தான் சரியான வேத புரட்டல்!!!
ஜோசப் சார், ஒன்று, உலகத்தார் (கிறிஸ்துவை அறியாதவர்கள் தொடங்கி கிறிஸ்து வரும் முன் மரித்தவர்கள்) மரித்த பின்பு அவர்கள் நிலை என்னவென்று தெளிவுப்படுத்தும்படியாக கேட்டுக்கொள்கிறேன்!! ஏனென்றால் உங்கள் கூட்டத்தாரின் போதனையின்படி இவர்கள் யாவரும் நரகத்திற்கு தான் போவார்கள் என்று போதிக்கிறீர்கள், அப்படி என்றால்,
இந்த வசனத்தின்படி யார் எப்போ நீதியை கற்றுக்கொள்கிறார்கள்!! ஏனென்றால் உங்கள் கூட்டத்திற்கு தெரிந்த இரண்டு இடங்களில் ஒன்று பரலோகம், மற்றது நரகம்!! அப்ப நீதியை கற்றுக்கொள்வார்கள் "பூமியில்" என்பது எல்லாம் நடந்து முடிந்துவிட்டதோ, அல்லது நடந்துக்கொண்டு இருக்கிறதோ!! இப்படி நீதியை கற்றுக்கொல்வதால்,
ஏசாயா 11:9. என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
இந்த பூமி கர்த்தரை (யெகோவாவை) அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் ஒரு காலம் வருகிறது என்று வேதம் சொல்லுகிறது, ஆனால் உங்கள் கூட்டத்தாரோ, அது எப்படி, அது தான் பரலோகத்திற்கு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களும், மற்ற அனைவரும் நரகத்திற்கு போய்விடுவார்கள் என்கிறீர்கள்!! அப்படி என்றால் வசனமும் அது வெளிப்படுத்தும் தேவ சித்தமும் நடைபெறாதா!! உங்கள் போதனைகளை பார்த்தால் அப்படி தானே இருக்கிறது!!
உங்கள் கூட்டத்திற்கு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் மேல் மாத்திரம் அன்பு இருப்பதாக காண்பித்துக்கொள்கிறீர்கள்!! அதிலும், சபைக்கு சபை அந்த அன்பு எப்படி எல்லாம் மாறுபடுகிறது என்பதை நான் அறிவேன்!! ஆனால் நாங்களோ, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மேலும் அதே அன்பு தான் வைத்திருக்கிறோம், ஏனென்றால் அவர்களுக்காகவும் கிறிஸ்து இரத்தம் சிந்தியிருக்கிறார், அதன் பயனை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது!! ஆனால் உங்கள் இருதயங்களில் அப்படி பட்ட அன்பு இல்லாததினால், அது எப்படி, நான் இத்துனை கஷ்டப்பட்டு கிறிஸ்தவனாக இருக்கிறேன், அவர்கள் ஒன்றுமே இல்லாமல் பரலோகத்திற்கு போய்விடுவதா போன்றவற்றை யோசிக்கிறீர்கள், அதையே போதனையாக மாற்றுகிறீர்கள்!!
வேதம் சொல்லும் கிறிஸ்தவ லெவலில் இன்று எந்த மனிதனும் வாழ்வது கிடையாது!! அதற்கு சீஷத்துவம் வேண்டும்!! சும்மா ஊழியக்காரன் என்று சொன்னால் அந்த சீஷத்துவம் வந்து விடாது!! ஏனென்றால் ஊழியக்காரனென்று சொல்லிக்கொண்டு இன்று 2000க்கும் மேற்பட்ட சபைகள் வித்தியாசமான போதனைகளில் உள்ளது!! என் சபை தான் பரலோகம் போகும் போன்றவற்றை போதித்து திருப்தியாகிறார்கள்!! இத்துனை வித்தியாசமான போதனைகள் நிறைந்த சபைகள் அனைவரும் பரலோகம் சென்றால், கிறிஸ்துவின் சீஷத்துவத்திற்கு அர்த்தம் என்ன!!??
கிறிஸ்து சொல்லித்தந்த அனைத்தையும் கைக்கொள்ளுபவனே சீஷன் என்று வேதம் சொல்லுகிறது!! ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காண்பிக்க சொல்லி கொடுத்தவர் கிறிஸ்து இயேசு, ஆனால் நம்மால் சின்ன சின்ன கோபத்தையே அடக்க முடியவில்லை, எப்படி ஐய்யா சீஷத்துவத்தை கடைப்பிடிப்பீர்கள்!! வேதத்தை நாள்தோறும் வாசித்து, விவாதித்து வளரும் நமக்கு இந்த நிலை என்றால், கிறிஸ்துவை அறியாத கோடி ஜனங்களில் நிலை என்ன!! அவர்கள் அறியாதது அவர்கள் தவறே கிடையாது என்பதும் வேதம் தான் சொல்லுகிறது!! அறியாது அவர்கள் மரித்து போனால் தூக்கி நரகத்தில் போடுபவர்கள் நீங்களாக இருக்கிறீர்கள்!! ஆனால் அவர்களுக்கு இரட்சிப்பு என்று கிறிஸ்துவின் அன்பினால் நாங்கள் சொல்லுகிறோம்!! எல்லாருக்கும் இரட்சிப்பு என்பது உங்களுக்கு வேத புரட்டலாக இருக்கலாம், ஆனால் வேதம் கூறுவது அது தான்!! அதற்கு பல வசனங்கள் கொடுத்தாகிவிட்டது!! ஆனால் கிறிஸ்துவினால் எல்லாருக்கும் மீட்பு இல்லை என்பதற்கு ஒரு வசனமும் வரவில்லை!!
எபிரேயர் 11:39. இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். 40. அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
திரித்துவம் பற்றி எக்கச்சக்கமாக கட்டுரை எழுதித்தள்ளியிருக்கிறீர்கள். மனிதன் யார் என்றும் அவன் மரித்தால் என்ன ந்டக்கும் என்றும் வசன விளக்கத்துடன் ஆராய்ந்திருந்தீர்கள் என்றால் அதிக பிரயோஜனமுள்ளதாக இருக்கும்.
ஜோசப் சார், உங்களைப்போலத்தான் நாங்களும் துர் உபதேசத்தில் ஊறிப்போயிருந்தோம். உங்களை விட பல மடங்கு சபை வைராக்கிய்த்தில் இருந்தோம். ஆனாலும் உள்ளத்தில் நிறைய பதிலளிக்கப்படாத கேள்விகள் இருந்தன. அதை வெளிக்காட்டாமல் மாய்மாலம் செய்துகொண்டிருந்தோம். ஏனென்றால் தீர்க்கமான வசனம் சார்ந்த பதிலை எந்த ஊழியக்காரரும் தரவில்லை. முக்கியமாக மரணத்தைப்பற்றிக் கேட்டால் உங்ளைப்போன்றே நழுவிவிடுவார்கள்.
தேவனுடைய மேலான கிருபையால் வேதத்தை ஆராய்ந்தறிந்தவர்களின் ஐக்கியம் கிடைத்தது. வசனம் பேசியது. அச்சம் அகன்றது, இருள் விலகியது. தெளிவு பிறந்தது.அடிப்படை சத்தியங்களான மரணம், ஆத்துமா என்பன பற்றிய தெளிவு இல்லாவிடடால் அடுத்த படிக்கு போகவே முடியாது. ஆரம்பப்பள்ளி அது. அதை அறியாமல் திரித்துவம், ராஜ்ஜியம் பற்றி அறியவே முடியாது.
இதுவரை கற்ற உபதேசங்களை நஷ்டமும், குப்பையுமாக எண்ணாதவரை சத்தியத்தை உணர்வது கடினம். You have to unlearn before you learn.
மனிதன் சாவதில்லை என்ற சாத்தானின் மூல உபதேசம்தான் இன்றைய கிறிஸ்தவத்தின் அடிப்படை. அங்கே சத்தியம் எப்படி இருக்கும்? முதல் கோணல் முற்றிலும் கோணலே. மனிதன் மண்ணாயிருக்கிறான்; மண்ணுக்கே திரும்புவான் என்ற தெள்ளத்தெளிவான மிகச்சாதாரணமான வசனம் நம் தலையில் ஏறமாட்டேன் என்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம். அதுவும் புரியவில்லை. முதலில் இதில் தெளிவடையுங்கள். உணர்ச்சிப்பூர்வமாக இருந்தால் உண்மை அறிய முடியாது. திறந்த மனதுடன். என்னதான் சொல்கிறார்கள் என்றுதான் பார்ப்போமே என்று அணுகும் பட்சம் வெயில் வந்தால் நீங்கும் பனிமூட்டம் போல நம் சந்தேகங்கள் அகன்று அன்பும், ச்மாதானமும் பெருகும்.
உண்மையிலேயே சொல்லுங்கள் நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் 'கிறிஸ்துவை அறியாதவர்களின் நிலை' பற்றி நீங்கள் உளமாற ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உங்களுக்கோ அல்லது நீங்கள் சார்ந்திருக்கும் உபதேசக்காரர்களுகோ வசன அடிப்படையில் பதிலளிக்க முடியுமா?
இல்லாதபட்சம் மற்ற டாபிக்குகளை விவாதிப்பது நேரவிரயம். புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.