இரட்சிப்பு என்றால் என்ன!! எதிலிருந்து இரட்சிப்பு? அது சுயமாக சம்பாதிக்க முடிகிற ஒரு காரியமா!! அது பிறருக்கும் சம்பாதித்து தரும் ஒரு விஷயமா? ஏற்கனவே உயிருடன் இருக்கும் போது ஏற்படுகிற ஒரு மாற்றம் தான் இரட்சிப்பா?
இரட்சிப்பு என்றால் Salvation,
deliverance, salvation Original Word: σωτηρία, ας, ἡ Part of Speech: Noun, Feminine Transliteration: sótéria Phonetic Spelling: (so-tay-ree'-ah) Short Definition: deliverance, salvation Definition: welfare, prosperity, deliverance, preservation, salvation, safety.
Cognate: 4991 sōtēría (from 4982 /sṓzō, "to save, rescue") – salvation, i.e. God's rescue which delivers believers out of destruction and into His safety
இரட்சிப்பு என்பது ஒரு அழிவில் இருந்து மீட்டு எடுக்கப்படுவது!! இரட்சிப்பு என்பது பாதுகாப்பு, தேவனின் பாதுகாப்பு!! இரட்சிப்பு என்பது சுபீட்சை!! இரட்சிப்பு என்பது சந்தோஷம், இரட்சிப்பு என்பது விடுதலை!! இரட்சிப்பு என்பது மரணத்திலிருந்து விடுதலை!!
நல்ல மனநிலையில் இருக்கும் ஒரு மனிதன் ஒரு காட்டு வழியே செல்கிறான்!! அந்த வழியில் செல்வது அத்துனை சரியானது இல்லை என்று தெரிந்தும், செல்கிறான்!! போகிற போக்கில் ஒரு பெரிய பள்ளத்தில் விழுந்து விடுகிறான், அவனால் ஏறி வர முடியவில்லை, கத்தி கூச்சலிடுகிறான்!! அந்த வழியில் அந்த நேரத்தில் இன்னோரு மனிதர் வர நேர்கிறது!! வந்த மனிதர் செயல்ப்பட இரண்டு விதங்கள் இருக்கிறது,
1. "ஏண்டா, அறிவு இருக்கா உனக்கு, இந்த வழியில் போகக்கூடாது என்று உனக்கு தெரியாதா? இப்ப விழுந்து இருக்கியே, பார்த்தாயா, அப்படியே கிட, எத்துனை சொன்னாலும் புத்தி வராது, நல்லா இரத்தம் கொட்டுதா, கொட்டட்டும்" போன்ற வார்த்தைகளால் அர்சித்து விட்டு தன் வழியே சென்று விடுவான்!! இது தான் இன்றைய கிறிஸ்தவம் வைத்திருக்கும் பதில்!! உனக்கு தான் நான் சுவிசேஷம் சொன்னேனே, நீ கேட்கவில்லை, உனக்கு நரகம் தான், நீ அங்கே தான் போவாய், உனக்கு அது தான் இடம்!! பரலோகம் போவதை தான் இரட்சிப்பு என்று தவறாக போதிக்கிறது கிறிஸ்தவ மண்டலம்!!
2. "அச்சச்சோ, விழுந்துவிட்டாயா, சரி இரு, நான் உன்னை காப்பாற்றுகிறேன்" என்று பள்ளத்தில் இறங்கி, கை பிடித்து, தூக்கி விட்டு, காயங்களுக்கு மருந்து போட்டு, குடிக்க தண்ணீர் கொடுத்து, விழுந்தவனை ஆசுவாசப்படுத்தி, பார் உன்னை காப்பாற்றியிருக்கிறேன், ஆனால் இந்த வழியை தெரியாமல் ஏன் இந்த வழியில் வந்தாய், இனி இந்த வழியில் வராதே போன்ற விஷயங்களை புரிய வைப்பார்!! இது தான் இரட்சிப்பு, காப்பாற்றி புத்திமதி சொல்லும் போது அதை ஏற்க யாரும் தயங்க மாட்டார்கள்!! இதை தான் வேதம் சொல்லுகிறது, அழகாக ஆனால் சிலர் மாத்திரமே புரிந்துக்கொள்ளும்படியாக வசனத்தில்,
1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
குழியில் (பாவத்தினால் மரண குழியில் விழுந்த மனித குலத்தை) விழுந்த அனைவரையும் காப்பாற்றி, அதன் பின் தான் யார், தன் குமாரன் யார், தன்னுடைய வார்த்தைகள் என்ன, போன்ற அனைத்தையும் விளக்கி (சத்தியம்) நடத்தவே நம் தேவன் சித்தம் கொண்டவராக இருக்கிறார் என்கிறது வசனம்!!
சங்கீதம் 103:14 நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
முழு மனிதகுலமே ஒரு ஆழமான குழியில் விழுந்துக்கிடக்கிறது!! எல்லோரும் மரணத்தை நோக்கி பயனிக்கும் மனிதர்களாக தான் இருக்கிறோம்!! ஒருவனாவது, நான் மரிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது!! அப்படி பட்ட ஒரு அந்தகாரமான வழியில் நடந்து வந்து மரணம் என்கிற ஆழமான குழியில் விழுந்திருக்கிறோம்!! நம் நிலை, அதாவது நாம் மண்ணென்று தேவன் அறிந்திருக்கிறார்!! நமக்கு இவ்வுளவு தான் முடியும்!! பாவத்தில் தான் விழுவோம், மரணம் எனும் குழியில் விழுவோம் என்றெல்லாம் தேவனுக்கு தெரியும்!! இந்த மரணக்குழியில் இருந்து மனிதர்களை தூக்கி விட்டு, இது தான் வழி, நான் தான் உன்னை தூக்கிவிட்டேன் என்று போதித்து நடத்துவார்!! இந்த மரணக்குழியிலிருந்து தூக்கி விடுவது தான் இரட்சிப்பு!!
அப்படி என்றால் யார் தான் பரலோகம் போவார்கள்??
இதே ஆழமான குழியில் விழுந்தாலும் தன்னால் எழுதிருக்க முடியாது என்று தேவனை நோக்கி குப்பிட்டு, அவர் இதை பிடித்து ஏறு, அதை பிடித்து ஏறு, இதை பிடிக்காதே போன்று நடத்தும் நடத்துதலில் தீவிரமாக நடப்போர் செல்வார்கள்!! தன்னால் முடியாது, தன் நிலையை உண்மையாக அறிந்திருக்கிறவர்கள், தன் மேல் நம்பிக்கை வைக்காமல் தன்னை காக்கிறவர் தன்னை விடுவிக்க வல்லவராக இருக்கிறார் என்று நினைக்கிறவர்கள் பரலோகம் செல்வார்கள்!!
இரட்சிப்பு என்பது ஒரு இலவச ஈவு!! கிருபை!! கிஃப்ட்!! யாராவது கிஃப்ட்டை கேட்டு வாங்குவாங்களா!! இல்லையே!! அதிலும் தேவனிடத்திலிருந்து வரும் ஈவு என்பது, நம் தகுதியை பார்த்து அல்ல, அவரின் சுபாவத்தின்படி வருவது!! நான் என்கிற சொல்லுக்கே அங்கே இடமில்லை!!
ஜோசப்: //அது சரி அப்ப நரகம் என ஒன்று இல்லைன்னு சொல்லி எஸ்கேப் ரூட் அடிக்கும் நீங்கள் வேதத்தில் பல முறை நரகம்ன்னு இருக்குன்னு யோசிச்சீங்களா, கேட்டா மூல பாஷைன்னு ஆரம்பிச்சிடுவீங்க, அது என்ன மூல பாஷை ஸ்கிரிப்ட் உங்க கையில் இருக்கிறது, //
மத்தேயு 5:22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
Matthew 5:22 but I say unto you, that every one who is angry with his brother shall be in danger of the judgment; and whosoever shall say to his brother, Raca, shall be in danger of the council; and whosoever shall say, Thou fool, shall be in danger of the hell of fire.
II பேதுரு 2:4 பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
2 Peter 2:4 For if God spared not angels when they sinned, but cast them down to hell, and committed them to pits of darkness, to be reserved unto judgment
நாங்கள் எந்த எஸ்கேப் ரூட் அடிக்கவில்லை!! உங்கள் வஞ்சகமான போதனைகளிலிருந்து தேவனுக்கு சித்தமானால் அனைவரும் எஸ்கேப் ஆக தான் விளக்கம் தருகிறோம்!!
மேலே இரண்டு வசனங்களிலும் உங்களுக்கு பிரியமான வார்த்தை "நரகம்" வருகிறது!! அது என்ன மூல பாஷை ஸ்கிரிப்ட் உங்க கையில் இருக்கிறது என்று ஆதங்கப்பட வேண்டாம், அது எங்கள் சொந்த ப்ராபர்ட்டி கிடையாது, அது யுனிவர்சல் எழுத்து!! யாருக்கு ஆர்வம் இருக்கிறதோ, யாருக்கு விருப்பம் இருக்கிறதோ எல்லாவற்றுக்கும் மேல் தேவனின் கிருபை இருக்கிறதோ, அவர்கள் நிச்சயமாக ஆறாய்ந்து பார்ப்பார்கள்!!
சரி இரண்டு வசனங்களிலும் நரகம் என்று தமிழிலும் "ஹெல்" என்று ஆங்கிளத்தில் வார்த்தையை கொடுத்தாலும், தேவன் கொடுத்த வார்த்தைகளை அன்று எழுதப்பட்ட பாஷையில் பார்த்தோமென்றால்,
மத்தேயு 5:22ல் வரும் நரகம் Original Word: γέεννα, ης, ἡ Part of Speech: Noun, Feminine Transliteration: geenna Phonetic Spelling: (gheh'-en-nah) Short Definition: Gehenna Definition: Gehenna, and originally the name of a valley or cavity near Jerusalem, a place underneath the earth, a place of punishment for evil.
2 பேதுரு 2:4ல் வரும் நரகம்: Original Word: ταρταρόω Part of Speech: Verb Transliteration: tartaroó Phonetic Spelling: (tar-tar-o'-o) Short Definition: I thrust down to Tartarus 5020 tartaróō – properly, send to Tartarus ("Tartaros"). The NT uses 5020 (tartaróō) for the netherworld – the place of punishment fit only for demons. Later, Tartaros came to represent eternal punishment for wicked people.
"5020 (tartaróō) is a Greek name for the under-world, especially the abode of the damned – hence to cast into hell" (A-S); to send into the subterranean abyss reserved for demons and the dead.
[In Greek mythology, Tartarus was a "place of punishment under the earth, to which, for example, the Titans were sent" (Souter).]
இப்படி இரண்டு வார்த்தைகளும் வேறு, இரண்டு அர்த்தங்களும் வேறு, ஆனாலும் உங்கள் சபைகளில் "நரகம்" என்கிற ஒரே வார்த்தையில் மனமகிழ்ந்து ஜனங்களை வஞ்சித்துக்கொண்டு இருக்கிறீர்கள்!! நீங்களும் உங்கள் ஒரே மொழிப்பெயர்ப்பில் மாத்திரம் வாசித்துக்கொண்டு இது தான் தேவன் கொடுத்த வார்த்தைகள் என்கிற மமதையில் இருக்கிறீர்கள்!!
இதை தான் நீங்கள் நரகம் என்று சொல்லி போதிக்கிறீர்களே!! பரவாயில்லை செய்யுங்கள்!!
//இந்தியா சுதந்தர நாடு தான் அதுக்காக எனக்கு திருடுவதற்கு, கொலை செய்வதற்கு சுதந்தரம் இருக்கிறது என யாரும் சொல்ல முடியாது. மீட்பு இலவசம் தான் ஆனால் அதை பெற்றுக்கொள்ளவேண்டும். இயேசுவின் ரத்தம் கண்டவனும் கண்ட படி வாழ்வதற்கான கடைச்சரக்கா? ஏனய்யா இயேசுவின் விலைமதிப்பற்ற ரத்தத்தை கேலிப்பொருளாக்குகிறீர்கள்.//
ரோமர் 2:11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை.
கலாத்தியர் 2:6 அல்லாமலும் எண்ணிக்கையுள்ளவர்களாயிருந்தவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் எனக்குக் கவையில்லை (அக்கறையில்லை), தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே.
ஒரே கேள்வி!! சரியாக பதில் சொல்லுங்கள்!! நீங்கள் எல்லாவற்றிலும் சரியான மனுஷனா!! அதாவது கிறிஸ்து சொல்லியதை 100% பின்பற்றி வாழ்பவரா?? ஆமாம் கிறிஸ்து சொன்னப்படியே 100% வாழ்கிறேன் என்று சொல்லுங்கள், நான் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்!! இல்லை வாழ முயற்சிக்கிறேன் என்று சொன்னீர்களென்றால், கிறிஸ்துவை அறிந்த உங்களாலே பூர்ணராக வாழமுடியவில்லை, பிறகு ஏன் அடுத்தவரை நீங்கள் பாவிகள் என்றும் நரகத்திற்கு போவார்கள் என்றும் சொல்லுகிறீர்கள்!! கிறிஸ்து சிந்திய இரத்தத்தை யார் கேலிப்பொருளாக்குகிறார்கள்!!
கிறிஸ்துவின் இரத்தம் அவரை ஏற்றுக்கொள்வோருக்காக சிந்தப்பட்டது என்கிறீர் நீங்கள்
கிறிஸ்துவின் இரத்தம் அனைவருக்காகவும் சிந்தப்பட்டது என்கிறோம் நாங்கள் : எபிரேயர் 2:9. என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு; 1 யோவான் 2:2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார். எல்லாவ்ற்றுக்கும் மேல், 1 தீமோத்தேயு 2:6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது, நாங்கள் புரிந்துக்கொண்டோம், நீங்களும் என்றாவது ஒரு நாள் புரிந்துக்கொள்வீர்கள்!!
இப்படி எல்லாரையும், எல்லாருக்காகவும் என்று கிறிஸ்து சிந்திய இரத்தத்தை சிலருக்கு தான் என்று சொல்லி யார் கேலிப்பொருளாக்குகிறார்கள்?
இன்றைய அரசியல் கட்சிகளின் இலவசங்களுடன் "மீட்பு" என்கிற இலவசத்தை ஒப்பீடாதீர்கள்!! இது அரசியல் இலவசனக்கள், மீட்பு என்கிற இலவசம் அனைவருக்கும்!!
//ஒரேதரம் மரிப்பதும் பின் நியாயத்தீர்ப்படைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டதென்று அறியீர்களா? எல்லாருக்கும் பரலோகம் என்றால் நியாயதீர்ப்பு என்றால் என்ன, தியேட்டருக்குள் ஏ கிளாஸ், பி கிளாஸ், சி கிளாஸ் என உள்ளே விடுவதற்கா? //
இது தான் நியாயத்தீர்ப்பு!! பூச்சகரத்து குடிகள் நீதியை கற்றுக்கொள்வார்கள்!! இதற்கு ஒரு நாள் (24 மணி நேரம் அடங்கிய ஒரு நாள்) கிடையாது!! இதற்கும் வசனம் இருக்கிறது,
2 பேது 3:8. பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.
இது தான் நியாயத்தீர்ப்பின் நாட்கள் (24 மணி நேரத்தில் எல்லாரும் எழுந்து வந்து, கலர் கலராக ஸ்க்ரீனகளில் வீடியோவில் பாவங்கள் காட்டப்பட்டு பரலோகத்திற்கும், நரகத்திர்கும் தள்ளுவது கிடையாது), ஏனென்றால் அவர் நிதானமாக நியாயம்த்திர்ப்பார்!!
சங்கீதம் 96:10 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.
எல்லருக்கும் பரலோகம் என்று யார் சொன்னார்கள்!! நாங்களா!! கிடையவே கிடையாது!! மீட்பு என்றலே பரலோகம் போவது தான் என்று நினைத்துக்கொண்டு இருப்பதால் உங்களுக்கு இப்படி தான் தோன்றும்!! நாங்கள் ஒரு போதும் எல்லாரும் பரலோகம் போவார்கள் என்று சொன்னதே இல்லை!! சபை ஒன்றை தவிர யாரும் பரலோகம் செல்ல மாட்டார்கள், அதற்காக காந்தி ரேஞ்சில் இருப்பவர்கள் இந்த பூமியில் கிறிஸ்துவை தெரியாததினால் உங்கள் "நரகத்"திற்கும் போக மாட்டார்கள்!! இந்த பூமியில் இருப்பார்கள்!!
இன்றைக்கு அற்புதம் செய்கிறோம், தீர்க்கதரிசனம் சொல்லுகிறோம் என்று சொல்லுபவர்களும் அப்படியே இருப்பார்கள்,
மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
நாங்கள் தீர்க்கதரிசனம் சொன்னோம், அற்புதம் செய்தோம் என்று பரலோகத்திற்குள் போக முடியாது, அக்கிரமச் செய்கைக்காரரே, என்று நாங்கள் அல்ல, கிறிஸ்துவே சொல்லியிருக்கிறார்!!
ஆக நியாயத்தீர்ப்பின் நாட்களில் உங்கள் திரித்துவ போதகர்களும் நீதியை கற்றுக்கொள்வார்கள்!!
என்கிற ஒரு கேள்வியே இவர்களின் எண்ணங்களை சொல்லுதே!! நாம் தான் வேதம் வாசிக்கிறோம், நாம் தான் சபைக்கு போகிறோம், நாம் தான் சுவிசேஷம் (அப்படின்னா என்னவென்றே தெரியாமல் சொல்லுவது) சொல்லுகிறோம், எனக்கு தான் பாட தெரியும், எனக்கு தான் ஜெபிக்க தெரியும், என்னிடம் தான் அபிஷேகம் உண்டு என்று சொல்லும் பெரும்பாலுமான கிறிஸ்தவர்களுக்கு "எல்லாருக்கும் இரட்சிப்பா" என்பது ஆச்சரியமான நம்ப முடியாத ஒரு காரியம்!!
ஏனென்றால் இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் தான் இவர்களை இரட்சித்தது என்று நம்பி அதையே போதித்தும் வருகிறார்கள்!!
யோவான் 10:16 இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.
இவர்களுக்கு தங்களை பரிசுத்தவான்கள் என்று என்னிக்கொள்வதில் ஒரு மேட்டிமை!! தங்களை நீதிமான் என்று நினைத்துக்கொள்வதில் ஒரு மமதை!! ஆனாலும் இவர்களிடம் கேட்டு பாருங்கள், நீங்கள் 100% கிறிஸ்து சொன்னப்படியே நடக்கிறீர்களா என்றால், இழுத்து, மழுப்பி, கடைசியில் இல்லை என்று தான் சொல்லுவார்கள்!! இப்படி பரிசுத்தவான்களாக தங்களை நினைத்துக்கொண்டு இருக்கும் இந்த கூட்டத்தினாலே முழுவதுமாக கிறிஸ்துவை பின்பற்ற முடியவில்லையாம், ஆனாலும் பரலோகம் போவார்களாம்!!
இந்த கூட்டத்திற்கு இரட்சிப்பு என்றால் பரலோகம் போவது, மீட்பு என்றால் மருரூபமாகி "இயேசப்பா"விடம் போவது!!
எல்லோருக்கும் இரட்சிப்பா....? என்கிற கேள்வியே இவர்கள் தேவன் மீது நம்பிக்கை இல்லாமல், இவர்கள் சொல்லும் சுவிசேஷத்தினால் (!!) இரட்சிக்கப்படுகிற ஒரு கூட்டம் பரலோகம் போவது என்று நினைக்கிறார்கள்!! இப்படிப்பட்ட ஒரு கேள்வியே தேவனி தூஷிக்கும் ஒரு கேள்வி!! தேவன் தன் குமாரனை இந்த உலகத்திற்கு தந்ததே, இந்த உலகம் மீட்கப்படுவதற்காகவே!! அதில் எந்த பாரப்பட்சமும் இல்லை!! ஏனென்றால் கிறிஸ்து பூமியில் வருவதற்கு முன்னமே பல கோடி பேர் மரித்து போயிருந்தார்கள்!! அவர்களும் மீட்கப்படும்படியாக தான் கிறிஸ்து வந்தாரே அன்றி, மனித முயற்சியில் அவரை ஏற்றுக்கொண்டோம், ஆகையால் பரலோகம் போய்விடுவோம் என்று இல்லை!!
ஆனால் கிறிஸ்து வந்த பிறகு அவரின் சாயலில் மிகவும் சிலரை உருவாக்கி சபை என்கிற அந்தஸ்தை கொடுத்து அவர்களுடன் இந்த உலகத்தை நியாயந்தீர்க்க வந்து, இன்று இந்த உலகத்தில் சாத்தானின் ஆவி எப்படி செயல்ப்பட்டு மனிதர்களை வஞ்சித்துக்கொண்டு இருக்கிறதோ, அப்படியே தேவனின் ஆட்சியில் மீட்கப்பட்ட, இரட்சிக்கப்பட்ட (சபை என்கிற ஒரு சிறிய கூட்டத்தை தவிர) அனைவருக்கும் நீதியை கற்பிக்க, சொல்லிக்கொடுக்க, இந்த பூமி முழுவதையும் தேவனை அறிகிற அறிவினால் நிறப்பி, என்றென்றைக்கும் மனிதர்கள் இந்த பூமியில் வாழவே தேவனின் சித்தமே தவிர வேறு ஒன்றும் இல்லை!!
ஆகவே எல்லோருக்கும் இரட்சிப்பா என்கிற கேள்வியே, தங்களை மேதாவிகள், தங்களை பரிசுத்தவான்கள், தங்களை ஊழியர்கள், தங்களை வேத பண்டிதர்கள், தங்களை அபிஷேகம் பெற்றவர்கள் என்று நினைத்து மேட்டிமை பாராட்டுகிற ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே வரும் கேள்வி தான்!!
ஆனால் கிறிஸ்துவின் அன்பை தெரிந்திருக்கும் கூட்டத்தார், அனைவருக்கும் இரட்சிப்பு என்று வசனம் சொல்லுவதை எண்ணி மகிழ்ந்து தேவனை ஸ்தோத்தரிக்கும் கூட்டம்!! ஏனென்றால் தேவன் தான் சொன்னது ஒன்றையும் நிறைவேற்றாமல் போனது கிடையாதே!! அப்படி என்றால், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள், ஒரு வேலை நம் தகப்பன் வரைக்கும் உள்ளவர்களும், இரட்சிக்கப்படுவார்கள், கிறிஸ்துவின் ரத்தத்தினால் மீட்கப்படுவார்கள் என்பதே மகிழ்ச்சியான செய்தி, நற்செய்தி!!
இது தான் எல்லாருக்கும் இரட்சிப்பு என்று நாங்கள் சொல்லி வரும் கிறிஸ்துவின் அன்பும், சுவிசேஷமும், ஆனால் எல்லாருக்கும் இரட்சிப்பா என்கிற கேள்வியே அவர்கள் இருதயத்தில் எந்த அளவிற்கு அன்பு வியாபித்திருக்கிறது என்பதற்கு சான்று!! இவர்களை குறித்தே ஒரு உவமையின் முடிவில் இப்படியாக சொல்லப்பட்டது:
மத்தேயு 20:14. உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம். 15. என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
இவர்கள் "எல்லோருக்கும் இரட்சிப்பா" என்று கேட்பதற்கும் வேதம் இவர்களுக்கு கொடுக்கும் பதிலே இது!!
தேவன் இலவசமாக கொடுக்கும் இரட்சிப்பு அனைவருக்கும் என்பதில் இந்த கூட்டத்தார் மாத்திரம் ஏன் வன்கண்ணணாயிருக்கிறது!!
நரகம் பாதாளம் எல்லாம் இருக்கிறது, அது இன்று சபைகளில் பேசப்படும் நரகம் பாதாளம் அல்ல சகோதரரே. இந்த நரகம், பாதாளம், படுகுழி, எரிநரகம், அந்தகாரம் எல்லாம் வேதத்தில் இருக்கிறது, இந்த வார்த்தைகளை பிடித்துக்கொண்டு இந்த வார்த்தைகளை தியானித்து, அதினால் வரும் தரிசனங்கள் (!), தேவன் தந்தது என்று கதைகள் பறப்பி வருகிறார்கள் பல முன்னனி ஊழியர்கள் (!). இந்த தரிசனங்கள் தேவன் தந்தது என்று சொல்லுகிறர்வர்கள், அந்த தேவனின் நாமத்தை கூட அறியாமல் இருப்பவர்கள். சாத்தானை கூட தான் இந்த பிரபஞ்சத்தின் தேவன் என்று வேதம் சொல்லுகிறது. அவனும் ஒளியின் தூதனாக வந்து அவனுடைய ஊழியர்களும் உண்டு என்று வேதம் சொல்லுகிறது. கேட்பவர்களின் செவிகளுக்கு தோதாய் இருக்கிறது என்று எதை வேண்டுமென்றாலும் போதிக்கும் கள்ள உபதேசர்கள் கிறிஸ்தவ சாமராஜ்யத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். இன்னும் பல மசாலா கருத்துகளை சேர்த்து சொல்லுவது இவர்களுக்கு பொழுது போக்காக இருக்கிறது. பரிசுத்த ஆவி மூலமாக எழுதப்பட்ட வேதம் எபிரேயு மற்றும் கிரேக்கம் ஒரு சில பார்சீக வார்த்தைகளும் அராமிய வார்த்தைகளும் அதில் உண்டு. இதை நகல் எடுத்து அதே மொழியில் எழுதிய கை பிரதிகள் இன்றும் இருக்கிறது. இந்த மூல பாஷைகளை தவிர மற்ற எந்த மொழிபெயர்ப்பு ஆனாலும் சரி, அது மனித திறன், மூளைக்கொண்டு மொழிப்பெயர்க்கப்பட்ட புத்தகமே. இந்த மொழிப்பெயர்க்கப்பட்ட புத்தகத்தை நாம் பரிசுத்த ஆவியின் துனையுடன் (நம் கணவுகள் காட்சிகள், தரிசனங்கள் அல்ல) மாத்திரமே படித்து தியானிக்கனும், ஏனென்றால் அப்பொழுது தான் இயேசு கிறிஸ்து என்ன சொல்லி கொடுத்தாரோ அந்த அர்த்தக் கிடைக்கும். இதை விட்டு விட்டு. தன் சொந்த அனுபவங்கள், கனவுகள் காட்சிகள் என்று சொல்லிக்கொண்டு வேதத்தை வியாக்கியானம் செய்வதே ஒரு பாவம் தான். ஏனென்றால், சொந்த அனுபவங்களோ, கணவுகளோ, காட்சிகளோ, தரிசனங்களோ, இயேசு கிறிஸ்துவின் போதனைகள் ஆகாது.
நரகம், பாதாளம், படுகுழி, எரிநரகம், அந்தகாரம் போன்ற இந்த வார்த்தைகள் மூல பாஷையில் பார்த்தோமென்றால், எபிரேயத்தில் ஷியோல் (Sheol) என்றும், கிரேக்கத்தில் நரகம், பாதாளம், படுகுழி எல்லாம் ஹேடஸ் (Hades) என்றும் இயேசு கிறிஸ்து யூதர்களிடம் மாத்திரம் பயன் படுத்திய வார்த்தையான எரிநரகம் "கெஹென்னா" (Gehenna) என்றும், பாவம் செய்த தூதர்களை தப்பவிடாமல் அந்தகாரத்தில் வைத்திருப்பதை "டார்ட்டரு" (Tartaru or Tartarus) என்கிற பதங்கள் வேதத்தில் குறிக்கிறது. எபிரேய ஷியோல்க்கு நேரடியான கிரேக்க பதம் ஹேடஸ் ஆகும். இந்த ஷியோல் அல்லது ஹேடஸ் என்றால், மரித்த நிலை, மரித்தவர் நிலை, மறைவானது, புதைக்கப்பட்டது, கல்லறை, மறைவான இடம் போன்ற அர்த்தங்களே உள்ளது. இதில் எங்கு இருந்து தான் இந்த கள்ள தீர்க்கதரிசிகள், கள்ள அப்போஸ்தலர்கள் இங்கு தான் அக்கினி இருக்கிறது என்று, இந்த அக்கினி தான் இயேசு கிறிஸ்துவை ஏற்காத அனைவரும் போகும் இடம் ஆகும் என்று புலம்புகிறார்கள்.
அவர்கள் ஒழுங்காக வேதத்தை ஆராய்ந்து பார்த்திருந்தால், "எல்லா மனுஷர்களும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமாக இருக்கிறார் என்றும்" இதற்காகவே "இயேசு கிறிஸ்து எல்லாருக்காகவும் மீட்கும் பொருளாக தம்மை செலுத்தினார்" (1 தீமோ 2:2-6) என்றும், தேவனின் கிருபையினால் "எல்லா மனுஷர்களுக்காகவும் மரணத்தை ருசி பார்த்தார் இயேசு கிறிஸ்து" (எபி 2:9) என்றும் இருப்பதை என்னோ இந்த கிறிஸ்துவின் ஊழியர்கள் என்று தங்களை சொல்லிக்கொண்டு கபடத்தை போதிப்பவர்கள் பார்க்க மறுக்கிறாகள். கிறிஸ்துவை அறியாதவர்கள் போகும் இடம் தான் நரகம் என்று சொல்லுகிறார்களே, இவர்களே இந்த நரகத்திற்கு போக தான் வேண்டும் என்று கூட அறியாதவர்களாக போதிக்கிறார்களே என்பதின் தான் வேடிக்கை.
//இதில் எங்கு இருந்து தான் இந்த கள்ள தீர்க்கதரிசிகள், கள்ள அப்போஸ்தலர்கள் இங்கு தான் அக்கினி இருக்கிறது என்று, இந்த அக்கினி தான் இயேசு கிறிஸ்துவை ஏற்காத அனைவரும் போகும் இடம் ஆகும் என்று புலம்புகிறார்கள்.//
தேவனின் ராஜியம் பூமியில் வந்து விட்டது என்றும் அதன் தலை போப் தான் என்றும் சொன்ன கத்தோலிக்க சபை தான் இதுபோன்ற துருபதேசங்களின் தாய் சபை!!
எப்படியாவது உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரவ வேண்டும் என்பதற்காக அவர் அவர் எந்த எந்த வழிப்பாட்டு முறையை பின்பற்றிக்கொண்டு இருந்தார்களோ, என்ன என்ன நம்பிக்கை வைத்திருந்தார்களோ (எடுத்துக்காட்டு மரியாள் வணக்கம், ஈஸ்டர் பண்டிகை, தியானாள் தேவி (Diana) இன்னும் பல இருக்கிறது) அதையெல்லாம் சேர்த்துக்கொண்டு வாரிக்கொண்டு கிறிஸ்தவத்திற்குள் வந்தார்கள்!! மதமாற்றம் நடைப்பெற்றது, மனமாற்றம் அல்ல!! குழந்தை ஞானஸ்நானம் போன்ற புதிய போதனைகள் சபையில் அறிமுகமானது!! திரித்துவம், நரகம் போன்ற வேற்று மார்க்க கொள்கைகளை அப்படியே வாரி சுருட்டி கிறிஸ்தவத்திற்குள் கொண்டு வந்து, நரகம் என்று வேற்று மார்கத்தில் அன்று பிரபலமாக இருந்த "தீ"யை டாண்ட்டே என்கிற ஓவிய எழுத்தாளன் அறிமுகப்படுத்தி, கிறிஸ்தவர்கள் அதில் போகாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு கப்பம் கட்ட வேண்டும் என்று "பாப்பல் புல்" வெளியிடப்பட்டிருக்கிறது!! கிறிஸ்தவர்கள் பெறுகினார்கள், ஆனால் கிறிஸ்துவின் போதனைகள் அழிந்து போயிற்று!! எந்த அளவிற்கு என்றால், அவர் அனைவரையும் மீட்கும்படியாக தான் இரத்தம் சிந்தினார் என்பதையே மறுதலிக்க ஆரம்பித்து விட்டார்களே!!
ஒரு மித்தாலாஜியை நம்பி மதத்தை வளர்த்தவர்கள் கத்தோலிக்கர்கள். இல்லை என்று ஒரு ஆவிக்குறிய பெந்தகோஸ்தே சபைக்காரன் சொல்லட்டும், அதற்கு பதில் தருகிறேன்!! இப்ப தானே கரிஸ்மாட்டிக் மீட்டிங் என்று நாங்களும் ஆவிக்குறிய கிறிஸ்தவர்கள் என்று கத்தோலிக்கர்களும் பெந்தகோஸ்தேயினரும் கை கோர்த்திருக்கிறார்கள், ஆனாலும் கத்தோலிக்க கரிஸ்மாட்டிக் மீட்டிங்கில் மரியாள் பாடல் அவசியம் பாடப்படும்!! இப்படி புற தேவ தேவியர்களை வைத்து கத்தோலிக்கர்கள் மதத்தை வளர்த்ததில் "நரகம்" என்கிற "தீ"யும் பரவியது!!
இன்று கிறிஸ்துவின் வருகை சமீபமாக இருக்கும் போது, காலம் கடைசியாக இருக்கிற போது, நீதியின் சூரியனான கிறிஸ்துவின் வெளிச்சம் பரவ பரவ பல அந்தகாரங்கள் வெளிச்சத்திற்கு வருகிறது!! இன்னும் வரும்!!
ஆனால் இதை ஏதையுமே ஆறாயமல், வருகிறதை வைத்து லாபம், தீ என்றால் எப்படி இருக்கும் என்று அதை யோசித்துக்கொண்டு தூங்கிவிட்டு, கனவுகளை பார்த்து விட்டு தேவன் (எந்த தேவன் என்று கூட தெரியாமல், அவரின் நாமத்தை கூட அறியாமல்) தான் எங்களுக்கு காண்பித்தார் என்று வெட்கம் இல்லாமல் சொல்லுவதை கலர் கலராக புஸ்தகங்கள் போட்டு விற்று எத்துனை கோடி ஜனங்களை வஞ்சித்திருக்கிறார்கள்!!
இந்த கடைசி காலத்தில் இது போன்ற சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் சிறிய அளவில் இருப்பது, "அநேகர்"க்கு சாதகமாக இருக்கிறது, குற்றம் கண்டுபிடிப்பதில்!! அன்று சொன்னார்களே, அதை தானே பின்பற்றுகிறோம் என்பார்கள்!! சீகன்பால்க்கு தெரியாதது உனக்கு தெரிந்து விட்டதா என்பார்கள்!!
கண்டிப்பாக தெரிந்து விட்டது, காலம் நிறைவேறும் போது எல்லாம் வெளிச்சத்திற்கு வரும்!! "அநேகர்" தான் வெட்கி நானி நிற்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!!